தமிழரின் எதிர்காலம்
Tuesday, January 31, 2012
Monday, January 30, 2012
வயதுடன் வளர்ந்த இலட்சிய உறுதி கண்டேன்
தமிழரின் மண்ணை மீட்கப் புலிக்கொடி ஏற்றிப் புதுவீரம் நிலைநாட்டி, தமிழ் வீரத்தை எமது சந்ததியினருக்கு மீளவும் காட்டி, தொடர் வெற்றிகள் பலவற்றிற்கு உரமூட்டி, தமிழரின் உரிமைப் போரிற்குத் தலைமை தாங்கி, ஒரு தேசிய இனத்தின் தன்னிகரற்ற தலைவனாக மதிக்கப்பட்டு, இன்று பொன்விழா கொண்டாடிடும், எனது மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய தமிழ் தேசியத் தலைவன் தம்பி
Sunday, January 29, 2012
இறுதி நாட்களும் எனது பயணமும்-சண்டை முடிஞ்சிது தலைவர் நேற்றிரவு வெளியேறிவிட்டார். 06 ஆனதி
16.05.2009. அன்றைய பகலும் காப்பகழிக்குள்ளேயேதான் கழிந்தது. இரண்டேபேர் இருக்கக்கூடிய பதுங்குகுழிக்குள் நான்குபேர் நின்றவாறே பொழுதை நகர்த்தினோம். படையினர் நெருங்கி வந்துகொண்டிருப்பது புரிந்தது. சன்னங்கள் எங்கள் தலைகளின்மேலால் சீறிப்பாய்ந்தன. சதக் பொதக் என்று தம்முடலில் இறங்கும் சன்னங்களை பனைமரங்கள் வாங்கிக்கொண்டன.
முற்றுமுழுதுமாய் கொலை வலயத்திற்குள் நின்றோம். எங்களைச்சுற்றி ஆர்.பி.ஜி எறிகணைகள் விழத்தொடங்கின. அவை வெடித்துச்சிதறிய
ஆட்லறிக்கான ஒரு சண்டை நடவடிக்கை .பரந்தன்-ஆனையிறவு ஊடறுப்புச் சமர் தடங்கள்–3
சிறிலங்கா இராணுவத்திடமிருந்து ஆட்லறிகளைக் கைப்பற்றுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் தொடர்பாக, தடங்கள்-1 தடங்கள்-2 ஆகிய பகுதிகளில் பார்த்திருந்தோம். அதற்கு முன்பே நடத்தப்பட்ட இன்னொரு தாக்குதல் பற்றி இப்பகுதியில் பார்க்கப் போகிறோம்.
அது 1996 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. அவ்வருடத்தின் யூலை மாதத்தில் ‘ஓயாத அலைகள்’ என்ற பெயரில் புலிகள் நடத்திய தாக்குதலில் முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து சிறிலங்கா இராணுவம்
Saturday, January 28, 2012
எல்லோருக்கும் விழிகள் உண்டு ஒரு சிலருக்கே தரிசனம் உண்டு
எல்லோருக்கும் விழிகள் உண்டு, உலகினைப் பார்க்க
Friday, January 27, 2012
ஆட்லறிக்கான ஒரு சண்டை பாகம்-01
1997 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம். ஒரு நீண்ட பயிற்சித் திட்டத்துக்காக இயக்கத்தின் படையணிகளிலிருந்தும் துறைகளிலிருந்தும் நாங்கள் ஒன்று சேர்ந்திருந்தோம். மக்கள் வாழிடத்திலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக ஒரு காட்டுத் துண்டில் எமது கற்கை நெறிக்கான தளம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தளவமைப்பு வேலைகள் முடிந்து எமது கற்கைநெறி தொடங்கியபோது கூடவே சிறிலங்கா அரசாங்கத்தின் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையும்
Thursday, January 26, 2012
காவிய நட்பு
மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் போகப்போக காலம் செல்லச் செல்ல அவர் உண்மையை உணர்ந்தார்.
தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய
விடுதலைக்கான உணர்வு செயல்வடிவில்
மேற்கு நாட்டில் பிறந்து வாழ்பவர் என்ற முறையிலும், இத்தாலி (பாசிச ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது), இந்தியா (காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது), தென் ஆபிரிக்கா (இன வேறுபாட்டிலிருந்து விடுதலை பெற்றது) போன்ற பல தரப்பட்ட நாடுகளுக்கு பிரயாணம் செய்தவர் என்ற முறையிலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் திரு பிரபாகரன் அவர்களின் 50வது பிறந்த தினத்திற்கு வாழ்த்துச் செய்தி கொடுப்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.
சிங்களப் பேரினவாதி அப்துல்கலாமிடம் யாழ்ப்பாணத்தில் கேட்கப்பட்ட கேள்வி
உங்கள் யாழ்ப்பாணத்து கணக்கு வாத்தியார்தானையா எங்களுக்கும் கணக்கு வாத்தியார்….
யாழ். பல்கலைக்கழகத்தில் பேசிய அப்துல்கலாம் அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து, தன்னிடம் ஐந்து கேள்விகளை கேட்கும்படி கூறியிருந்தார். ஆனால் ஒரேயொரு கேள்வி மட்டும் அவரிடம் கேட்கப்பட்டது. அந்த ஒரு கேள்வி அப்துல்கலாம் உருவாக்கிய அணு
யாழ். பல்கலைக்கழகத்தில் பேசிய அப்துல்கலாம் அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து, தன்னிடம் ஐந்து கேள்விகளை கேட்கும்படி கூறியிருந்தார். ஆனால் ஒரேயொரு கேள்வி மட்டும் அவரிடம் கேட்கப்பட்டது. அந்த ஒரு கேள்வி அப்துல்கலாம் உருவாக்கிய அணு
இறுதி நாட்களும் எனது பயணமும் - 3
மாண்டவர்களுக்காக அழுவதற்கு எவரும் தயாரில்லை. சாவு வந்தால் வரட்டும் என்று சும்மா!
இப்போதல்லாம் மாண்டவர்களுக்காக அழுவதற்கு எவரும் தயாரில்லை. சாவு வந்தால் வரட்டும் என்று சும்மா இருந்தார்கள்… எல்லாத்தறப்பாள்களின் கீழேயும் பதுங்கு குழிகள் வெட்டப்பட்டிருந்தன. ஆயிரம் நூறாயிறமாய் காப்பகழிகள் நிலமெல்லாம் முளைத்தன. எல்லாக் குழிகளிலுமே தம் வாழ்வைத் தொலைத்த, உறவுகளை இழந்த
இப்போதல்லாம் மாண்டவர்களுக்காக அழுவதற்கு எவரும் தயாரில்லை. சாவு வந்தால் வரட்டும் என்று சும்மா இருந்தார்கள்… எல்லாத்தறப்பாள்களின் கீழேயும் பதுங்கு குழிகள் வெட்டப்பட்டிருந்தன. ஆயிரம் நூறாயிறமாய் காப்பகழிகள் நிலமெல்லாம் முளைத்தன. எல்லாக் குழிகளிலுமே தம் வாழ்வைத் தொலைத்த, உறவுகளை இழந்த
Wednesday, January 25, 2012
பேச்சுவார்த்தைகளின் தோல்வியும் புதிய வழிகளின் அவசியமும்
எமக்கிடையே நாம் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என்றால் எதிரிகளிடம் சரணடைய நேரும் தீர்வுத்திட்டம், பேச்சுவார்த்தை, சமரசம், உடன்பாடு, ஒப்பந்தம்,ஒப்பந்த மீறல், ஒப்பந்தம் கிழித்தெறியப்படல், வட்டமேசை மகாநாடு, தெரிவுக்குழு, மீண்டும் பேச்சுவார்த்தை என இலங்கை அரசியல் அகராதியில் இச்சொற்தொடர்கள் தீர்வின்றி துச்சாதனன் கையில் நீளும் பாஞ்சாலியின்
விடுதலையின் வழிகாட்டி
எம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் அவர்களது காலத்தில் வாழும் பெருமையுடன் பணி தொடர்கின்றோம். தலைவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்கு ஆக்கம் ஒன்று தாருங்கள் என்று கேட்டபோது முதலில் ஏற்பட்ட உணர்வு தலைவரைப் பற்றி நான் எழுதுவதா? என்பது தான்.
தேசியத்தினதும் மற்றும் அக்கறையுடைய அனைவரினதும் பார்வையும் அவர் மீது உன்னிப்பாகப் பதியும் இவ்வேளையில், அவரது பண்புகளைப் பகிர்ந்து கொள்வது தலைவரது விடுதலைக்கான விழுமியங்களை முழுதாய் அறியாதோருக்கு எடுத்துச் சொல்லும் பணியாகவே அமையுமென்ற கருத்து
தேசியத்தினதும் மற்றும் அக்கறையுடைய அனைவரினதும் பார்வையும் அவர் மீது உன்னிப்பாகப் பதியும் இவ்வேளையில், அவரது பண்புகளைப் பகிர்ந்து கொள்வது தலைவரது விடுதலைக்கான விழுமியங்களை முழுதாய் அறியாதோருக்கு எடுத்துச் சொல்லும் பணியாகவே அமையுமென்ற கருத்து
முள்ளிவாய்க்காலையும் நந்திக்கடலையும் மறக்க முடியாது -ஈழக் கவிஞர் தீபச்செல்வன்
முள்ளிவாய்க்கால் என்ற மரண நிலத்தையும் நந்திக்கடல் என்ற மரணக் கடலையும் ஈழத் தமிழினம் மறந்துவிட இயலாது என்று மரணத்தில் துளிர்க்கும் கனவு கவிதை புத்தகத்தின் தொகுப்பாசிரியர் ஈழக் கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.
வரலாற்றின் தொடர்ச்சியாக தொடர்ந்து வாழ்தலுக்காக நீதியையும் அநீதியையும் பதிவு செய்வதற்காக போரையும் குற்றத்தையும் எடுத்தியம்புவதற்காக
வரலாற்றின் தொடர்ச்சியாக தொடர்ந்து வாழ்தலுக்காக நீதியையும் அநீதியையும் பதிவு செய்வதற்காக போரையும் குற்றத்தையும் எடுத்தியம்புவதற்காக
Tuesday, January 24, 2012
இறுதி நாட்களும் எனது பயணமும் - பாகம்-02
உடையார்கட்டு தொடக்கம் முல்லைத்தீவின் பல பகுதிகளும் சனநெரிசலால் திக்குமுக்காடிக் கொண்டிருந்தன. மனிதர்களின் ஆக்கிரமிப்பு அனர்த்தங்கள் போதாதென்று இயற்கையும் மக்கள்மீது சீறி விழுந்தது. காற்றும் மழையும் வந்து மக்களின் தறப்பாள்களை குதறி எறிந்தன. பகலும் இரவுமாக கொட்டிய மழை பெருவெள்ளமாகி குடிசைகளை எல்லாம் அடித்து விழுத்திக்கொண்டு பாய்ந்தது.
போகிற நான் ஏன் சும்மா போகவேண்டும் என்ற குருட்டு நியாயத்துடன் வீதியோரம் ஒதுங்கிய மனிதர்களைக்கூட வாரியிழுத்து வீழ்த்தி தனக்குள் சுருட்டிக்கொண்டு பாய்ந்தது. பலபத்துப்பேர் வெள்ளத்திலும் மாண்டுபோனார்கள். பாரிய மரங்கள்கூட வேரோடு பாரி வீழ்ந்தன. அதுவும் தன் பங்குக்கு சிலரை கொன்றுபோட்டது.
Monday, January 23, 2012
Subscribe to:
Posts (Atom)