வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Sunday, October 9, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-13



மட்டகிளப்பில் இருந்து பின்வாங்கியிருந்த புலிகளின் அணிகள் அம்பாறை காடுகளில் நிலைகொண்டிருந்தபடி இராணுவ கட்டுபாட்டு பகுதிகளுக்குள் நுழைந்து தாக்குதல்களை மேற்கொள்கிறார்கள்.குறிப்பாக சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள இராணுவ முகாம்களும் விடுதலைபுலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி இருந்தன.இதன்போது முழுமையான சிங்கள பிரதேசமாக இருந்த புத்தல(மாவீரர் தினமான (27 ) திகதி உலங்குவானுர்தி விழுந்து நொறுங்கிய இடம்) என்ற பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் ஒன்றையும் வெற்றிகராமாக தாக்கி அழித்திருந்தார்கள்.இவ்வாறு சிறு சிறு தாக்குதல்களை தென்பகுதியில் நடத்துகின்றார்கள்.இந்நிலையில் அம்பாறை கட்டுக்குள் இருக்கும் விடுதலை புலிகளைக் தேடி அளிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா படையினர் இறங்குகிறார்கள்.
அம்பாறையில் விடுதலைபுலிகளின் நிர்வாக பகுதியாக கஞ்சிகுடிச்சாறு காணப்படுகிறது.அத்துடன் கஞ்சிகுடிச்சாரரில் படையினருக்கும் விடுதலைபுலிகளுக்கும் மோதல் என்று அடிக்கடி நீங்கள் செய்திகள் கேள்விப்படும் அளவிற்கு சிறிலங்கா படையினருடன் பல சண்டைகளை சந்தித்த மண்ணாகவும் கஞ்சி குடிச்சாறு காணப்படுகிறது.இப்பகுதியில் பெருமளாவன மக்கள் விடுதலை புலிகளின் நிர்வாக பகுதிக்குள் வாழ்ந்து வந்தார்கள்.சிறிலங்கா படையினர் கஞ்சி குடிச்சாறு பகுதி மீது பெரும் படையெடுப்பை செய்தார்கள் இதன்போது கட்டுபாட்டு பிரதேசம் இழக்கபட்டு கஞ்சிகுடிச்சாறு நுவாஸ் குளப்பகுதிகள் படையினரால் ஆக்கிரமிக்க படுகின்றன.அக்கிராமங்களில் வாழ்ந்த மக்கள் படையினரால் பிடிக்கபட்டு முகாம்களுக்கு கொண்டுசெல்ல படுகிறார்கள்.இவர்களில் பலர் பின்பு காணமல் போயிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது இரனுவத்திரனின் ஆக்கிரமிப்பின்போது மக்களில் பலர் விடுதலைப்புலிகள் நிலைகொண்டிருந்த காடுகளுக்குள்ளும் வந்தார்கள்.காடுகளுக்குள் மக்களும் இடம்பெயர்ந்து வந்ததினால் படையினருடன் பாரிய மோதல்களை எதிர்கொள்ள முடியாத நிலை எனவே தாக்குதலை குறைப்பதுக்காக அம்பாறை மட்டகிளப்பு காடுகளுக்குள் இருக்கும் விடுதலை புலிகளின் குறிப்பிட்ட தொகையினர் வன்னி நோக்கி அனுப்பபடுகின்றார்கள்.
இதன்போது வன்னியில் இருந்தும் ஒரு அணி கிழக்கிற்கு அனுப்பபடுகிறது.இது காட்டு தாக்குதல்களில் சிறப்பு பயிற்சி பெற்றிருந்த ஒரு அணியாக இருந்தது.காட்டுபகுதிகளில் குறிப்பாக அம்பாறையின் எல்லை கிராமங்களாக அமைந்திருந்த கதிர்காமம் புத்தல அம்பாந்தோட்ட பகுதிகளில் சிறு சிறு தாக்குதல்களை கிளைமோர் தாக்குதல்கள் படையினர் மீது மேற்கொள்ள படுகின்றன.படையினருக்கு இதனால் பாரிய இழப்புக்கள் ஏற்பட தொடங்கியிருந்த நிலையில் காடுகளுக்குள் விடுதலை புலிகளை தேடியழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.அம்பாறை காட்டுக்குள் விடுதலை புலிகளை தேடி புறப்பட்ட சிறப்பு அதிரடிப்படையினருக்கு கண்ணிவெடிகளும் மிதிவெடிகளும் பலத்த வரவேற்பை அளித்தன.தொடர்ச்சியாக வாங்கிய பலமான அடியால் சிறப்பு அதிரடி படையினர் அம்பாறை காடு பெரும் காடு இக்காட்டில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுவதென்பது கடினமானது என்று கூறி தொடர்ச்சியாக ஈடுபடுவதற்கு மறுக்கிறார்கள்.இந்த சிக்கலை தவிர்க்க படையினர் ருபாஸ் குளப்பகுதி உடாக படையினர் காட்டுக்குள் நுளைகின்றார்கள்.காட்டுக்குள் நுழைந்த படையினர் மீது விடுதலை புலிகள் சிறு சிறு குழுக்காளாக சென்று தாக்குதலை நடத்துகின்றார்கள்.அத்துடன் போராளிகள் காட்டுக்குள் பொருத்தி வைத்த பொறிவெடிகளில் படையினர் சிக்குகிறார்கள்.படையினரை திகப்புற வைக்கும் தாக்குதல்கள் விடுதலை புலிகளால் நடத்தபட்டன.இழப்புக்கள் அதிகமானதால் இந்த நடவடிக்கைய கைவிட்ட படையினர்.பின்பு எறிகணை தாக்குதல்களை காட்டினுள் கடுமையாக நடத்தியபின் காட்டுக்குள் நுழைகிறார்கள்.இந்த நடவடிக்கையில் சிறிலங்கா படையணியின் சிறப்பு கொமாண்டோ தாக்குதல் அணியினர் ஈடுபடுத்த படுகிறார்கள்.இந்த சண்டைகளின் போதும் விடுதலைபுலிகளுக்கும் சிறு சிறு இழப்புக்கள் ஏற்படுகின்றன.அத்துடன் காட்டினை சுற்றிய படையினரின் முற்றுகையும் இறுகுகின்றது.இருந்தும் விடுதலை புலிகள் தளரவில்லை.காட்டில் இருக்கும் விடுதலை புலிகளுக்கு உணவுத்தட்டுப்பாடும் மருந்துதட்டுபாடும் காணப்படுகிறது.இருந்தும் உணவு பொருட்களை நீண்டதுரம் மக்கள் வாழும் பகுதிகளுக்குல்லால் சென்று போராளிகள் சிலர் கொள்வனவு செய்கிறார்கள்.இவ்வாறு பாரிய இடர்களை அங்குள்ள போராளிகள் எதிர்கொண்டபடிதான் படையினருக்கு எதிராக வியூகங்களை வகுத்து தாக்குதலை நடத்திக்கொண்டு இருந்தார்கள்.கண்ணிவெடிகள் பொறிவெடிகள் கிளைமோர்கள் ஒருபக்கம் படையினருக்கு இழப்புக்களை ஏற்படுத்த நேரடி மோதல்களிலும் படையினர் கடுமையான இழப்புக்களை சந்திக்கின்றார்கள்.தொடர்ச்சியான இழப்புக்களால் படையினர் சலிப்புற்று சொவடைந்த நிலையில் அவர்களின் தாக்குதல் திட்டம் மாற்றியமைக்க படுகின்றது.போராளிகள் சிறி சிறு அணிகளாக சென்று தாக்குதல் நடத்துவது போல்.படையினர் சிறு சிறு அணிகளாக பிரிந்து காட்டினுள் தாக்குதலை நடத்த தொடங்கினார்கள்.அவர்களின் ஆள் வளமும் ஆயுத வளமும் அதிகமாக இருந்ததால் பெருமளவு சிறு சிறு அணிகளை பல முனைகளுடாக இறக்கிவிடபட்டு இருந்தனர்.குறிப்பிட்ட போராளிகளே நின்றிருந்த நிலையில் வரும் அணிகள் அனைத்தையும் சமாளிப்பது பெரும்பாடாக இருந்தது.எனினும் போராளிகள் இல்லாத இடங்களில் பொருத்தி வைக்கபட்டு இருந்த கண்ணிவெடிகளும் பொறிவெடிகளும் படையினருக்கு இழப்பை ஏற்படுத்திகொண்டிருந்தன.இதேவேளை இவ்வாறன வெடிப்பு சம்பவங்களின்போது அச்சம் காரணமாக படையினர் நடத்திய தாக்குதலில் அவர்களது சக படையினரே உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றன.இவைகள் அன்றைய காலப்பகுதியில் வெளியே வராமல் தடுக்கபட்டன.அதாவது கள முனைகளில் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களை விட அதிகமாக அம்பாறை காட்டிற்குள் இழப்புக்கள் ஏற்பட்டு இருந்தது என்பது மிகையானது அல்ல.இந்த இழப்புக்களால் ஒரு சில கரையோர காடுகளை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திய படையினர் தமது தேடியழிக்கும் நடவடிக்கைய நிறுத்திவிட்டு எல்லைப்புற கிராமங்களில் முகாம்கள் கவலரங்கள் அமைத்து பாதுகாப்பை பலபடுத்துகிறர்கள்.இதனால் அம்பாறை மாவட்டத்தில் விடுதலை புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் சற்று குறைய தொடங்கின.இந்த இறுக்கத்தை பயன்படுத்திய விடுதலை புலிகள் தாக்குதல்களை நன்றாக குறைத்து காட்டினுள் போராளிகள் குறைவடைந்து விட்டது போன்றொதொரு நிலைய ஏற்படுத்துகின்றார்கள்.அத்துடன் அதே காலப்பகுதியில் தமது இருப்பிடங்களை நிலைப்படுத்தும் நடவடிக்கை உணவு தேடும் நடவடிக்கை போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.இவ்வாறுதான் மட்டகிளப்பு காட்டினுள்ளும் போராளிகள் தாக்குதலை நிறுத்திவிட்டு தங்களை பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருந்தார்கள் எனினும் அவ்வப்போது படையினருடன் எதிர்பாராத நிலையில் மோதவேண்டிய சந்தர்பங்களும் எழுந்தன இதனால் காட்டினுள் இருந்த போராளிகள் சில சிக்கல்களுக்கு முகாம் கொடுக்கிறார்கள்.இந்த சிக்கல்களால் போராளிகள் சிலர் ஆயுதங்களை கைவிட்டுவிட்டு வீடுசெல்ல போவதாக கூறுகின்ற அளவிற்கு நிலைமை சென்றிருந்தது.(தொடரும் )


உறவுகளே உங்களின் கருத்துக்கள் விமர்சனங்களை தவறாமல் பதியுங்கள் ..அத்தோடு இந்த வலைப்பூவில் இணைந்து உங்கள் ஆதரவுகளை கொடுங்கள் ..உங்கள் ஆதரவுகளோடு எமது பயணம் தொடரும்

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை