
என அனைத்தும் புலனாய்வு துறையால் அலசி ஆராயபடுகிறது,இதற்க்கு சிறிது காலம் எடுக்கிறது ,அதற்குள் போர் தீவிராமக்கபட்டு இருந்தது .இந்த நிலையில் போராட்டத்தின் இறுதி பகுதியில் முல்லிவாய்கால் பகுதியில் காந்தி தனிமைபடுத்தபட்டு வெறுமையாக விடபட்டு இருந்தார் ,தற்போது இவர் சிறிலங்கா இராணுவத்திடம் இருப்பதாக அறியப்படுகிறது,
அத்துடன் சிறிலங்கா படையினரின் கால் தடங்களை வைத்து ,சாப்பிட்ட உணவு வகைகளை வைத்தும் ,எத்தனை பேர்கள் சென்றார்கள் ,எந்த திசையில் சென்றார்கள் ,முடிவுகளை பொறுப்பாளர்கள் எடுப்பார்கள்,முகாம்கள் அனைத்திற்கும் விழிப்புடன் செயல்படுமாறு ..வீதி கண்காணிப்புகள் அனைத்தையும் சரிவர மேற்கொள்ளுமாறும் அறிவிக்க படும் ,சில வேளைகளில் இவ்வாறன தடையங்கள் கானபட்டு அடுத்த நாளே களமுனைக்கு பின்னான வீதிகளில் சிறிலங்கா படையினரின் ஆழ உடுருவும் படையினர் கிளைமோர் தாக்குதலை நடத்தினார்கள் ,இவர்கள் கிளைமோர் தாக்குதலை நடத்திவிட்டு குறுகிய நேரத்துக்குள் விடுதலை புலிகளின் எல்லையை தாண்டிவிடுவார்கள் ,இவ்வாறு பயிற்ச்சி பெற்றவர்கள் சில நேரங்களில் இவ்வாறன தடயங்கள் காணப்பட்டு அறிவிக்கபட்டும் ஐந்து ஆறு நாட்களின் பின்பும் மக்கள் மீதும் ,விடுதலை புலிகளின் வாகனங்கள் மீதும் ,தாக்குதலை நடத்திய சம்பவங்களும் இடம்பெற்றன ,இதன்போது மக்கள் பலர் பலியானார்கள் ,விடுதலை புலிகளின் தளபதிகளின் வாகனங்கள் கூட தாக்குதலில் சிக்கி அவர்கள் சாவை தழுவியது உண்டு ,இதில் கேணல் சாள்சின் சாவு விடுதலை புலிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவமாக அமைந்தது ,மானார் களமுனை உடாகத்தான் விடுதலைபுலிகளின் தென்பகுதி நடவடிக்கை நடைபெற்று கொண்டிருந்தன , இதற்கான சில நடவடிக்கைகளை
அன்று தளபதி கேணல் சாள்ஸ் மன்னாரில் இருந்து மேற்கொண்டிருந்தார் ,இவ்வாறுதான் (05-01-2008 ) மாலை முன்று மணியளவில் தளபதி சாள்ஸ் அவர்கள் மன்னாரில் இருந்து கிளிநொச்சி நோக்கி தனது வாகனத்தில் புறப்படுகின்றார் ,மன்னார் புநகரி வீதியில் ,முழங்காவில் பகுதிக்கு அண்மையாக ,பள்ளமடுவின் ஒரு காட்டுபகுதியில் சிறிலங்கா படையின் ஆழ உடுருவும் படையினர் ,கிளைமோர் தாக்குதலை நடத்துகிறார்கள் ,இதில் இவரது வாகனம் சிக்கி கொள்ளுகிறது ,சம்பவ இடத்திலையே கேணல் சாள்சுடன் ,மாதிரி கிராமம் ஜெயபுரத்தை சேர்ந்த லெப்,சுகந்தன் ,( 176 ) யோகபுரம் மல்லாவியை சேர்ந்த லெப் வீரமாறன் ,(பரராஜசிங்கம் சுதன்) ஆறுமுகம் வீதி வட்டக்கச்சியை சேர்ந்த லெப் ,காவலன் ( சின்னதம்பி கங்காதரன் ,திரு ,க .முருகவேல் ) ஆகிய முன்று போராளிகளும் வீரச்சாவை தழுவி கொண்டார்கள் ,
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான ஆழ உடுருவும் படையினரால் கிளைமோர் தாக்குதல்கள் நடத்தபட்டு விடுதலை புலிகளின் நடமாட்டங்கள் முடக்க படுகின்றன,எனினும் இவற்றுக்கு மத்தியிலும் அன்று களமுனைகளுக்கு தேவையான ஆயுத தளபாடங்கள் ,உணவு பொருட்கள் ,காயம் அடைந்த போராளிகளை நகர்த்துதல் ,பொறுப்பாளர்களின் நகர்வு என்பன நடைபெற்று கொண்டிருந்தன ,மன்னார் மடு பகுதி தளபதி ஜெயம் அவர்களின் கிழ தளபதி பல்லவன் ,தளபதி கோபித் ,மற்றும் மாலதி படையணி போராளிகளும் ,அடம்பன் பகுதியின் தளபதி பானுவின் கீழ் இடைநிலை தளபதிகளான லக்மன் .கயன் , தளபதி கீதன் ,தளபதி மங்களேஸ்,ஆகியோர் கட்டளை தளபதிகளாக இருந்து செயற்பட்டார்கள்,இதேவேளை மன்னார் மாவட்டத்தின் கட்டளை பகுதி ஒன்றினை புநகரி படைப்பிரிவு பொறுப்பெடுத்து இருந்தது ,இதற்க்கான சிறப்பு தளபதியாக கேணல் ஈழபிரியன் செயல்பட்டுக்கொண்டு இருக்கையில் தளபதியாக லெப் கேணல் கீதன் செயற்படுகிறார்,(தொடரும் )
**********************************************************************************
உங்கள் கருத்துக்களையும் உங்கள் விமர்சனங்களையும் தவறாமல் பதியுங்கள் உறவுகளே ..அத்தோடு இங்கு உள்ள >>>(((( இதை பின் தொடர்ந்து நீங்களும் எம்மோடு சங்கமித்து கொள்ளுங்கள் உறவுகளே . (Followers ))))<<< இதை தொடர்ந்து எண்கள் குழுமத்துடன் சங்கமித்து கொள்ளுங்கள் உறவுகளே
**********************************************************************************
No comments:
Post a Comment