வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, October 6, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-10





திருகோணமலைய ஆக்கிரமித்து கொண்ட சிறிலங்கா அரசு அடுத்த கட்டாமாக மட்டகிளப்பு மண்ணை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் இறங்கியது.( 2006 ) ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கிழக்கின் உதயம் என்ற பெயரில் மட்டகிளப்பு மண்ணை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா தொடங்கியிருந்தது.தமிழர் தாயகத்தில் மட்டகிளப்பு மண் இயற்கையின் எழில் கொஞ்சும் ஒரு மாவட்டமாக காணப்படுகிறது. அங்கு எழுவான்கரை படுவான்கரை என இரண்டு பிரிவுகள் உள்ளன.இவற்றை பிரித்து நிற்கும் நீரேரிய வாவி என்று சொல்லுவார்கள்.இதனை நீண்ட அகலமுடைய அற்று பகுதியெனவும் குறிப்பிடலாம்.எழுவான்கரை மட்டகிளப்பின் நகர் பகுதியாகவும்.சிறிலங்கா அரசின் நிர்வாகங்கள் இயங்கும் பகுதியாகவும் அதாவது சிறிலங்கா ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகவும் காணப்படுகிறது

.படுவான்கரை விடுதலைபுலிகளின் நிர்வாக பகுதியாகவும் கிராமத்து வாழ்க்கை வாழும் நடுத்தர மக்களை கொண்ட பிரதேசமாக காணப்படுகிறது.படுவான்கரை வயலும் வயல் சந்ர்ந்த இடமாக கொண்டதால் மக்கள் விவசாய தொழிலையும் கால் நடை வளர்ப்பு தொழிலையும் பிரதான தொழிலாக கொண்டு வாழ்கிறார்கள்.அத்துடன் நன்னீர் மீன்பிடிப்பு தொழிலையும் அங்கு செய்கிறார்கள்.படுவான்கரை பகுதியில் மேற்கு பக்கமாக பொலநறுவை மற்றும் சிங்கள கிராமங்களின் காட்டு பகுதியை எல்லை பகுதியாகவும்.தெற்கே அம்பாறை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளை எல்லை பகுதியாகவும் கிழக்கே வாவியையும் கொண்டு சூழ்ந்திருந்தது.இந்த பிரதேசத்தில்தான் விடுதலைபுலிகளின் நிர்வாகம் அன்று தலைதுக்கி நின்றது.சமாதன காலத்துக்கு பின்னரான காலப்பகுதியில் விடுதலை புலிகளின் படையணிகளின் வளர்ச்சியும்.மக்கள் மீதான நிர்வாக கட்டமைப்பின் வளர்ச்சியும்.இங்கு அதிகரித்து காணப்பட்டது.அங்கு படையணிகள் சிறப்புமிக்க படையணிகளாக மாற்றபட்டு இருந்தன.அத்துடன் விடுதலை புலிகள் அங்கு ஒரு இராணுவ கட்டமைப்புக்குள் அங்கு வளர்க்கப்பட்டு இருந்தார்கள்.
அதே போல் மக்கள் மீதும் விடுதலை புலிகளின் அரசியல் நிர்வாக அலகுகள் திறம்பட செயற்பட்டன.அனால் ( 2003 ) ஆம் ஆண்டு மார்ச் மாதம் கருணா துரோக தனத்தால் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்ற பட்டத்தை தொடர்ந்து.மட்டகிளப்பில் மீள் கட்டுமான பணிகள் படையணிகள் எல்லாம் மீண்டும் தொடக்கத்தில் இருந்தே புதுப்பிக்க வேண்டிய தேவை வன்னி தலைமைக்கு எழுந்திருந்தது.இதன் படி வன்னியில் இருந்து தளபதிகள் போராளிகள் மட்டகிளப்பிற்கு மரரபடுகின்றார்கள்.அங்கு கருணாவின் பிரச்சனை காரணமாக அமைப்பில் இருந்து விலகி வீடு சென்ற போராளிகள் மீள் இணைக்க படுகிறார்கள்.இப் போராளிகளுக்கு இரண்டுபக்க அச்சுறுத்தல் காரணமாக ( கருணாவினதும் சிறிலங்கா இராணுவத்தினரதும்) விடுதலை புலிகளுடன் இணைந்து கொள்கிறார்கள்.கருணாவின் பிரச்சனை வரும்போது வன்னி தலைமைக்கு எதிராக நின்று செயற்பட்ட போராளிகளே இவர்கள் .இவ்வாறு இணைக்கபட்ட போராளிகளில் பொறுப்பானவர்களும் அடங்குவார்கள்.இதில் கருணாவுடன் சேர்ந்து தமிழீழ தேசிய தலைமைக்கு எதிராக தீவிரமாக செயற்பட்ட போராளிகள் பொறுப்பாளர்கள் இனம் காணப்படுகிறார்கள்.அவர்களிடம் அறிக்கை பின்பு விசாரணை என்று தொடர்ந்தது.அத்துடன் கருணாவுடன் விலகி சென்றவர்கள் சிலர் இராணுவத்துடன் இணைந்துகொண்டு விடுதலைபுலி போராளிகள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியதன் பின்னர் அவர்கள் மீது களையெடுப்பு தாக்குதலை விடுதலை புலிகள் மட்டகிளப்பில் மேற்கொள்ள தொடங்குகிறார்கள்.இதன் காரணமாக கருணாவுடன் நின்று செயற்பட்ட சிலர் மட்டகிளப்பினை விட்டு வேறு மாவட்டங்களுக்கும் எதுவித பிரச்சனையும் கொடுக்காமல் வீட்டிற்கும் சென்று வெளிநாடுகளுக்கும் செல்கிறார்கள்.மட்டகிளப்பில் புலிகளின் ஆதிக்கம் மேலோங்குகிறது இவ்வாறு மட்டகிளப்பில் போராளிகள் இணைக்க படுகின்றார்கள்.அவர்களுக்கான அடிப்படை பயிற்சி முடிந்ததும் வன்னிக்கு அழைத்துசெல்ல படுகிறார்கள்.அங்கு தலைமையுடனான சந்திப்புக்கள் நடைபெறுகின்றன.மட்டகிளப்பில் நிலைகொண்டிருந்த ஜெஜந்தன் படையணியின் கட்டுமானம் வன்னியில் கொண்டுவர படுகின்றது.இவ்வாறு மட்டகிளப்பில் அரசியல் பணிகளும் விஸ்தரிக்க படுகின்றன.நகர்ப்புறங்களில் அரசியல் அலுவலகமும் இயங்குகின்றன மக்களின் பல பிரச்சனைகள் விடுதலைபுலிகளால் தீர்க்க படுகின்றது.இவ்வாறு பல வேலைகளை செய்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மாவீரன் லெப்.கேணல் கவுசெல்யன் இவரின் அரசியல் பணி விசித்திரமானது.அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.இவரது செயற்பாடுகள் முலம் மட்டகிளப்பில் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையேயான பிரச்சனைகள் தீர்க்கபட்டு சுமுகமான நிலை காணப்படுகிறது.தமிழ் முஸ்லீம் மக்களிடையே ஆனா நல்லுறவு வளர்க்கபடுகிறது இதன் போதுதான் மட்டகிளப்பு போராளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற தலைமையின் என்னத்திற்கு அமைவாக அன்று மட்டகிளப்பு அரசியல்துறை பொறுப்பாளராக செயற்பட்ட இளந்திரையன் வன்னிக்கு வரவழைக்க பட்டு பின்னர் விடுதலை புலிகளின் படைத்துறை பேச்சாளராக நியமிக்க படுகிறார்.கவுசெல்யனின் செயற்பாடுகள் முலமும் வன்னி மட்டகிளப்பு என்ற வேறுபாடின்றி போராளிகள் செயற்படுகின்றார்கள்.படுவான்கரையில் கரடியனாறு குடும்பிமலை போன்ற பிரதேசங்கள் விடுதலை புலிகளின் இராணுவ வலையமாக காணப்படுகின்றது.படுவான்கரையில் மக்களுக்கான ஊடகமாக விடுதலைபுலிகளின் ஈழநாதம் பத்திரிகை காணப்படுகின்றது.கொக்கட்டிசோலை பகுதியில் ஈழநாதம் தனது கிளையினை செயற்படுத்தி மக்களுக்கு போராட்ட கருத்திற்கமைய நாளாந்தம் செய்திகளை செல்கிறது.இவ்வாறு விடுதலை புலிகளின் அரசியல் நிர்வாக அலகுகள் சிறப்புற செயற்படுகின்றன.இதனிடையே தமிழ்ழீழ இசைக்குழு உருவாக்க படுகிறது.மேஜர் கருவேந்தன் தலைமையில் இந்த இசைக்குழு செயற்படுகிறது.அங்குள்ள போராளி கலைன்சர்களையும் விடுதலை ஆதரவு கலைன்சர்களையும் இணைத்து தமிழ்ழீழ இசைக்குழு செயற்படுகிறது.பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றது.வன்னி கலைன்சர்களால் செயற்படுத்திகொண்டிருந்த தெருவழி நாடகங்கள் மட்டகிளப்பிற்கு கொண்டுசெல்லபட்டு மக்களிடையே அரங்கேற்ற படுகின்றன.சிறப்பு மிக்க கோவிலாக காணப்படும் கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் அலைய திருவிழா உள்ளிட்ட ஆலயங்களின் நிகழ்வுகளில் தமிழீழ இசைக்குழு அரங்கேற்ற படுகின்றன.காவல்துறை நிர்வாகம் அங்கு பலப்படுகின்றது மக்களிடையே காணப்படும் பிரச்சனைகள் தீர்க்கபடுகின்றன.பெற்றோரை இழந்த சிறுவர்களுக்காக மிக வறிய சிறுவர்களுக்காகவும் அறிவுச சோலைகள் உள்ளிட்ட சிறுவர் இல்லங்கள் உருவாக்கபட்டு சிறுவர்கள் பராமரிக்க படுகின்றார்கள்.படுவான்கரையில் பொருண்மிய கட்டமைப்பு சிறப்புற செயற்படுகிறது.படுவான்கரையில் பெருமளவான கால்நடைகள்.( ஆடு மாடுகள்)உள்ளன இவற்றின் உரிமையாளர்களுக்கு பொருண்மிய கட்டமைப்பு உடாக மானிய அடிப்படையில் நிதி உதவிகள் வழங்க படுகின்றன.பால் உற்பத்தி பெருக்கிறது இதுபோன்றுதான் விவசாய உற்பத்திக்கும் செயற்பாடுகள் நடைபெறுகின்றன.நெல் உற்பத்தி பெருகுகின்றது.இது போன்ற நன்னீர் மீன்பிடிக்கும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கபடுகின்றன.மீன்பிடி தொழிலாளர்களின் வருமானம் அதிகரிக்கின்றது.விடுதலை புலிகளின் அரசியல் செயற்பாடுகளால் படுவான்கரை பகுதி மக்களின் வாழ்க்கைதரம் சற்று உயர்வடைகிறது.இங்கு குறிப்பிட கூடிய விடையம் ஒன்று உள்ளது.சிறிலங்கா அரசின் பேருந்துகள் விடுதலை புலிகளின் கட்டுபாட்டுக்கு சென்றுவர கூடிய நிலை காணப்பட்டது.அதே போன்று சிறிலங்கா அரசின் மின்சாரத்தை படுவான்கரை மக்கள் பெறக்கூடிய வகையில் இருந்தது.வேலை இல்லாமல் இருந்த இளைன்சர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க படுகிறது.இதன் முலம் மக்களின் வாழ்க்கைதரம் உயர்த்தபடுகிறது.அத்துடன் படுவான்கரையில் மாவீரர் துயிலும் இல்லம் சிறப்புற கட்டபடுகிறது.அங்குள்ள வீதிகளில் மாவீரர் நினைவு சின்னங்கள் பொறிக்கபடுகின்றன.இவ்வாறு அங்குள்ள மக்கள் இயல்பான வாழ்க்கைக்குள் செல்வதற்கு சமாதான காலத்தை விடுதலை புலிகள் சரியாக பயன்படுத்தி கொண்டிருந்த போதுதான் சிறிலங்காவின் போர் மட்டகிளப்பு மண்ணை சூழ தொடங்கியது ( தொடரும் )


உறவுகளே உங்களின் கருத்துக்கள் விமர்சனங்களை தவறாமல் பதியுங்கள் ..அத்தோடு இந்த வலைப்பூவில் இணைந்து உங்கள் ஆதரவுகளை கொடுங்கள் ..உங்கள் ஆதரவுகளோடு எமது பயணம் தொடரும்

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை