வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Wednesday, October 12, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-16



மன்னார் உயிலங்குளம் சோதனைநிலைய கண்காணிப்பில் இருந்து சர்வதேச செஞ்சிலுவை குழு விலகிகொண்ட அதே வேளை,மறுபுறம் வவுனியா ஓமந்தை சோதனை நிலையம் உடனா அரச சார்பற்ற நிறுவனங்கள் ,அரச நிறுவனங்களின் போக்குவரத்து நடைபெற்று கொண்டிருந்ததது.எனினும் வன்னி மீதான பொருளாதார தடையினை சிறிலங்கா அரசு மேலும் இருக்குகிறது. பொருளாதார தடைய இறுக்கியபடி வன்னி மீது பரவாலக வான்வழி தாக்குதல்கள் தீவிரபடுத்த படுகிறது.மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தபட்ட அதே வேளை விடுதலை புலிகளின் வான்படையினரை அளிக்கும் நோக்கில் இரணைமடு விமானதளம் மீதும் தாக்குதல் நடத்தபடுகிறது.
வேவு விமானம் முலம் எடுக்கபட்ட தகவல்களினதும் தரைவழியாக எடுக்கபட்ட தரவுகளின் அடிப்படையிலும் இந்த தாக்குதல்களை நடத்திய சிறிலங்கா வான் படையினர்.பின்பு அதனை அண்மித்த காட்டு பகுதிகள் மீதும் குறிப்பாக விடுதலை புலிகளின் முகாம்கள்.பயிற்ச்சி முகாம்களை இனம்கட்டுபிடித்து தாக்குதல்களை நடத்துகின்றார்கள்.
இதன்போது விடுதலை புலிகளின் வான்படைத்தளம் பயிற்ச்சி தளங்கள் முதன்மையானவர்கள் கூடும் இடங்கள்.பெரும் முகாம்கள் வெடிபொருள் களஞ்சியங்கள்

ஆயுத வெடிமருந்து உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவை தாக்குதலுக்கு இலக்ககுகின்றன.இத்தாக்குதல்கள் வெற்றிபெறுவதற்கான காரணங்கள் வேவு விமானத்தின் வேவு நடவடிக்கை மட்டுமல்ல விண்வெளி உடாக பெறப்பட்ட தகவல்களும்தான் என்பது இங்கு முக்கியமானது.கிழக்கு மாகாணத்தை முழுமையாக ஆக்கிரமித்திருந்த சிறிலங்கா அடுத்து வன்னி மீது இலக்கு வைத்தது.அதுக்கு முன்னாதாக மன்னார் மாவட்டத்தை கைபற்ற திட்டமிட்டு மன்னார் மாவட்டத்தின் தென்பகுதியில் சிறிலங்கா படையினர் கடல்வழியாக தரையிறக்கம் ஒன்றை செய்து மன்னார் மாவட்டத்துக்கான தாக்குதலை ஆரம்பித்து இருந்தார்கள்.
இதன்போது குறிபிட்ட நாட்களுக்குள் மன்னாரின் முசாலி பிரதேசம் சிறிலங்கா படையினர் வசம் விழுகிறது.இதில் இருந்த விடுதலை புலிகள் மன்னாரின் வடக்கு பகுதி நோக்கி நகர்கிறார்கள்.சிறிலங்காவின் தென்பகுதிமீது விடுதலைப்புலிகள் தாக்குதல்கள் நடத்துவதுக்கு இந்த முசாலி பிரதேசம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.வன்னியில் இருந்து வெடிபொருட்கள் புத்தளம் உடாக தென்பகுதிக்கும் கடத்தும் பாதையாக முசலி பிரதேசம் காணப்பட்டது.இதனை கைவிட்ட விடுதலை புலிகள் பின்னர் ஏனைய வழிகளுடாக விடுதலைப்புலிகள் தங்கள் தொடர்புகளை மேற்கொள்கிறார்கள்.குறிப்பாக வில்பத்து சரனாளையம் உதான பாதை பயன்படுத்த பட்டது.அன்று வில்பத்து சரணாலயத்தின் வடக்கு பகுதியில் விடுதலை புலிகள் தளம் ஒன்றை அமைத்திருந்தார்கள்.

நிலைமை இவ்வாறிருக்க களத்தில் போர் நிலைமைகள் வலுவடைகின்றன.அங்கங்கே களமுனைகள் புதிது புதிதாக திறக்கபடுகின்றன.மன்னார் பகுதியில் விடுதலை புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் தாக்குதல்கள் நடந்தேறுகின்றன.இதே வேளை மணலாற்று பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் அங்குள்ள முன்னணி விடுதலைபுலிகளின் களமுனைகளுடாக மோதல்களை தொடங்குகிறார்கள்.இதனால் தாக்குதல்கள் பல பகுதிகளிலும் வலுப்பெறுகின்றன.
இதேவேளை சிறிலங்கா படையினரின் கட்டுபாட்டில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுகொண்டிருந்த போராளிகளின் சிறு சிறு அணிகள் படையினரின் கவலரங்கள் மீது கைக்குண்டு தாக்குதல்கள் துப்பாக்கி சுடு போன்றவற்றை நடத்துகிறார்கள்.இவை தொடர்ச்சியாக வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நடந்தேரிகொண்டு இருந்தன.வன்னி எங்கும் போர்கலமுனை திறக்க பட்டத்தை தொடர்ந்து விடுதலை புலிகள் தமது ஆளணி பலத்தினை பலபடுத்துகிறார்கள்.அரசியல் போராளிகள் வீதிகளுக்கு இறங்கி மக்களிடம் போராட்ட வலுவுக்கான ஆதரவினை திரட்டுகிறாகள்.தளபதிகள் பொறுப்பாளர்கள் என இதில் எல்லோரும் ஈடுபடுகிறார்கள்.இதில் குறிப்பிட்டு குரவேண்டிய விடையம் என்னவெனில் போராளிகளை இணைப்பதுக்காக தளபதி பால்ராஜ் அவர்கள் மக்களிடம் நீரடியாக இறங்கியிருந்தார்.

அவர் போராட்டத்தில் இருந்து விலகியிருந்த முன்னாள் போராளிகளையும் அணிதிரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.இதில் குடும்பமாகிவிட்ட முன்னாள் போராளிகளுக்கு அவர்களது குடும்பத்தினரை கருத்தில் கொண்டு கொடுப்பனவு கொடுக்கபடுகிறது.அதாவது அவர்களுக்கு மாதாந்த உதீயம் வழங்கபட்டது.பால்ராஜ் அன்னை போராளிகள் இணைப்பில் இறங்கியபின் முன்னாள் போராளிகளின் மனைவிமாரே தங்கள் கணவரை பால்ராஜ் அண்ணையுடன் அனுப்பிவைத்த சம்பவங்களும் நடந்தது.முல்லை மாவட்ட போராளியின் மனைவி ஒருவர் கணவனை பால்ராஜ் அன்னையுடன் அனுப்பிவிட்டு.நீங்கள் பால்ராஜ் அண்ணையுடன் போங்கள் அப்பத்தான் அவர் உங்களை மனலாத்தில் வைத்திருப்பார்.அங்கு நின்றால் வீட்டிற்று வந்துபோவது இலகு அப்போதான் களமுனையையும் வீட்டையும் பாப்பீங்கள்.என்று கூறி அனுப்பிவைத்தார்.

அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் போராளிகள் தளபதி தீபன் அவர்களின் கிழும் மன்னார் மாவட்ட போராளிகள் தளபதி பானு அவர்களின் கிழும் அணிதிரல்கிறார்கள்.இவ்வாறு முன்னாள் போராளிகள் அணிகள் ஒழுங்குபடுத்த படுகின்றன.இவர்கள் ஏற்கனவே துப்பாக்கி பிடித்து பயிற்ச்சி எடுத்தவர்கள்.என்பதால் அடிப்படை பயிற்ச்சி எடுக்க தேவையில்லை.சுட்டுபயிர்சியுடன் இவர்கள் படையணியாக மாறுகிறார்கள்.
இது ஒருபுறம் நடந்தேறுகிறது. மறுபுறத்தில் முன்னாள் அரசியல் பொறுப்பாளர்கள் மக்களிடம் அவசர அழைப்பினை விடுக்கின்றார்.(2006 ) ம் ஆண்டின் இறுதிபகுதி அது வீட்டிற்கு ஒருவர் நாட்டிற்கு என்று அழைப்பு விடுக்கிறார்.விடுதலை புலிகளின் இந்த அறைகுவலினை.அன்று இருந்த விடுதலை புலிகளின் ஊடகங்களான ஈழநாதம் புலிகளின் குரல் தமிழீழ தேசிய தொலைகாட்சி ,விடுதலைப்புலிகள் ஏடு சுகந்திர பறவைகள்,மற்றும் தெருவெளி நாடகங்கள் உடாக முரசறைய படுகின்றன.இதன்போதுதான் அங்கு புரனனுர்ரிலும் மிஞ்சிய மகிமை வன்னியில் நடந்தேறுகிறது.வீட்டிற்று ஒருவர் நாட்டிற்காக இணைகின்றார்கள்.பெற்றோர்களால் பெண்பிள்ளைகள் ஆண்பிள்ளைகள் இணைக்கபட்டு கொண்டிருக்கிறார்கள்.இந்த செய்திகளை தாங்கியபடி ஈழநாதத்தின் உடகங்கள் செய்திகளை முதன்மையாக வெளியிட்டன.ஆனாலும் ஒருசில பெற்றோர் பிள்ளைகளை இணைப்பதற்கும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தமது பிள்ளைகளை போராட்டத்தில் இணைக்காமல் பின்னடித்தார்கள் தமது பிள்ளைகளுக்கு திருமண வயது வரும் முன்னரே மனம் முடித்து வைத்தார்கள்.திருமண வயசு வராதவர்களுக்கு திருமண பதிவு செய்வதை பதிவாளர்கள் மறுத்தார்கள்.இதனால் பதிவில்லாமல் சிலர் கலாச்சார திருமணங்களை செய்துவைத்து தமது பிள்ளைகள் போராட்டத்திற்கு செல்லாமல் தடுத்தார்கள்.தாலிக்கொடி செய்து கட்டுவதற்கு கூட அவகாசம் இல்லாமல் இருந்த மஞ்சள் கயிற்றில் அவரச அவசரமாக தாலி கட்டி வைத்தவர்களும் இருந்தார்கள் என்பதுதான் உண்மை.இந்த திருமணங்கள் அப்போது மக்களால் போர்க் கலியாணம் என நகைச்சுவையாக குறிப்பிட பட்டது.பலரும் அறிந்தது.இதே வேளை இணைந்த போராளிகள் அடிப்படை பயிற்சிகளை முடித்துக்கொண்டு புதிய புதிய படையணிகளாக களமிறங்குகிறார்கள்.புதிய போராளிகளுக்காக களமுனைகள் திறக்க படுகின்றன.இவ்வாறு புதிய போராளிகள் மன்னார் களமுனையாக இருந்தாலும் முகமாலை களமுனையாக இருந்தாலும் மணலாற்று களமுனையாக இருந்தாலும் வவுனியா களமுனையாக இருந்தாலும் தமது வீரங்களை எதிரிக்கு காட்டுகின்றார்கள்.முதன்மை தளபதிகளின் வழிநடத்தலில் களமுனைகளில் சிறிலங்கா படையினருக்கு பாரிய இழப்புக்கள் இப்புதிய போராளிகளால் நிகழ்கின்றன.

இவ்வாறு போராளிகள் களமுனை அனுபவங்களை பெற்று அடுத்த கட்டத்திற்காக தங்களை தயார் படுத்துகின்றார்கள்.அதாவது அதிகாரி பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.இவ்வாறு அதிகாரி பயிற்ச்சி எடுக்கும் இடமாக முத்தையன் கட்டு பயிற்ச்சி தளங்கள் அமைகின்றன.அதாவது அதிகாரி என்பது ஒரு பதினைத்து பேரைக்கொண்ட அணியினை வழிநடத்தும் திறமை.இதற்க்கான பயிற்சிகள் நடைபெற்று கொண்டிருந்தன.இவ்வாறுதான் புதிய போராளிகளின் பதவி நிலைகள் உயர்கின்றன.இவ்வாறு அணிகள் பயிற்ச்சியில் ஈடுபட்டுகொண்டிருக்க. வேறு சில அணிகள் கிளைமோர் தாக்குதல் கட்டட தகர்ப்பு கனகரா வாகன தகர்ப்பு என வெடிமருந்து பயிர்ச்சிகளிலும் சிறப்பு தேர்ச்சி அடையும் நோக்கில் பயிர்ரபடுகின்றார்கள் ( தொடரும் )

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை