வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Monday, November 7, 2011

தலைவரின் தீர்க்க தரிசனம்

தமிழீழ மாவீரர் நாள் கடந்த காலங்களை போலன்றி என்றுமில்லாத பலத்த எதிர்பார்ப்பை இம்முறை ஏற்படுத்தி இருக்கிறது.கடந்த காலங்களில் தமிழீழ தேசிய தலைவர் என்ன சொல்ல போகிறார் என எதிர்பார்த்திருக்கும் தமிழீழ மக்களும் சர்வதேசமும் இம்முறை உரையாற்றுவார இல்லையா என்ற கேள்வியுடன் காத்து இருக்கிறது .முள்ளிவாய்க்காலில் ஒரு முற்றுகை போரை உலகம் ஒன்றுதிரண்டு நடத்தி ஒரு பெரும் மனித பேரழிவை தமிழ் மக்கள் மீது  மேற்கொண்ட பின்னர்.எஞ்சிய மக்களை முட்கம்பி வேலிகளுக்குள்ளும் அடைத்து வைத்து சிறிலங்கா அரசு .வரலாறு காணாத துயரங்களை தமிழ் மக்கள் சந்தித்திருந்த
வேளையில் அங்க மக்களின் பாதுகவலர்கலான விடுதலை புலிகளையும் அதன் தலைமையையும் முற்றாக அழித்து விட்டதாக அது ஏகத்தாளமிட்டது.

சிறிலங்காவின் கூற்றை உறுதிப்படுத்துவதற்கு தமிழீழ தேசியத்தலைவர் வருடத்தில் ஒரு முறை தோன்றும் மாவீரர் நாளை எதிர்பார்த்து காத்திருந்த உலகம்.சிறிலங்காவின் மீதான போர் குற்றத்தை  எல்லாம் மறந்துவிட்டு தங்கள் சுட்டு விரல்களை புலிகளை நோக்கி நீட்டுவதற்காக வல்லரசுகள் சிலவும் காத்து இருந்தன.காத்திருந்தவர்களுக்கு எமாற்றம் தான் பரிசாக கிடைத்தது.தலைவர் இல்லை என்று சொன்னவர்களுக்கு அவர் வராமை மகிழ்வை ஏற்படுத்தியிருக்கலாம்.அனால் இருக்கிறார் என்று நம்பிய கோடிக்கணக்கானவர்கள் மத்தியில் இது எமரறத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி இருக்கும்.அனால் இந்த மாவீரர் நாளில் உரையர்ருவதாக இல்லை தற்போது போன்று ஒரு வெறுமை நிலையினை தொடர்வதா என்ற முடிவை தீர்க்க தரிசனத்துடன் தலைவர் எடுத்திருப்பார்.உலக நிகழ்ச்சி நிரலை கவனத்தில் எடுத்து தமிழ் மக்களை சிங்கள அடக்குமுறையளர்களிடம்  இருந்து  மீட்டெடுக்க அவர் சரியான பாதையை தேர்ந்து எடுத்திருப்பார்.என்பது தமிழ் மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

இந்த வருடம் அவர் உரையாற்றாமல் போனாலும் கடந்த மாவீரர் தின உரையில் அவர் இன்று  சொல்லவேண்டிய பலவிடயங்களை மிகத்தெளிவாக  அன்று சுட்டி காட்டியிருந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.சிறிலங்கா கட்டவிழ்த்து விட்டுள்ள போர் விடுதலை புலிகளுக்கு எதிரான போர் அல்ல என்றும் இது தமிழ் மக்களுக்கு எதிரான போர் என்று.இது ஒரு தமிழின எதிர்ப்பு போர் என்பதை சுட்டி காட்டியிருந்த தலைவர்.தமிழ் மக்களின் அழிவுக்கு சர்வதேசத்தின் தவறான ,ஒருதலைபட்சமாக மேற்கொண்ட முடிவுகளே கரணம் என்று குற்ற சட்டையும் முன்வைத்து இருந்தார்.

உலகம் ஒன்றுபட்டு நின்று தமிழர்களுக்கு எதிரான போரை தொடுத்துள்ள போதும்.தனித்து  நின்று தமிழ் மக்களின் தார்மீக பலத்தில் நின்று போராடுகின்றோம் என்று  கூறியிருந்த  தலைவர் ,எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும்,எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும்,எத்தனை சக்த்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழர்களின் சுகந்திர விடிவிற்காக தொடர்ந்து போராடுவோம் என்று உறுதியாக தெரிவித்து இருந்தார் ,வரலாறு இட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி ,சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்,இந்த வரலாற்று சூழமைவில் ,தமிழர் உலகின் எந்த முலையில் வாழ்ந்தாலும் ,எந்த கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு  உறுதியாக குரலெழுப்பி ,எமது சுகந்திர இயக்கத்தின் கரங்களை பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அன்துடன் தங்களது தாரால  உதவிகளை வழங்கி தொடர்ந்து பங்களிக்குமாறு உரிமையுடன் கேட்டு கொள்ளுகிறேன்.இந்த சந்தர்ப்பத்தில் தேச விடுதலைபணியை தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன் .சத்திய இலட்சிய தீயில் தம்மையே அழித்து சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று இலட்சியத்தை அடைவோமாக உறுதியெடுத்து கொள்வோமாக .என்று புலம்பெயர்ந்த மக்களின் கைகளில் இந்த போராட்டத்தின் அடுத்த கட்டத்தை ஒப்படைத்து விட்டு சென்ற தீர்க்க தரிசனத்தை புரிந்துகொண்ட தமிழ்மக்களை குழப்புவதற்கு என்றே அறிக்கைகளையும் ,ஆய்வுகளையும்  வெளியிடும் புல்லுருவிகளை அடையாளம் கண்டுகொண்டு,சிங்கள அடக்குமுறையில் இருந்து தமிழ் மக்களுக்கான விடுதலையை வென்றெடுக்க உழைப்பதே தேசியத்தலைவரின் சிந்தனைக்கும் ,மாவீரர்களின் கனவிற்கும் நாம் அளிக்கும் மதிப்பாக இருக்க முடியும்.
-------------------------------------------------------------------------------------------------------------------
 முப்பது வருட போராட்டங்களுக்கு தலைவரோடு நின்ற எமக்கெல்லாம் இன்று எமது தலைவர் எதை எமக்காக சொல்லிவிட்டு போனார் என்பதை எம்மால் புரிந்துகொள்ள விரும்பவில்லை என்றால் ...இதுதான் நாம் எமது தலைவருக்கு கொடுக்கும் பரிசா ..பிரிந்து ஒற்றுமையில்லாமல் வெறும் பேச்சுகளில் மட்டுமே கவனத்தை செலுத்துகின்றோமே தவிர ..செயல்களில் குறைவு ...

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை