வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, October 13, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-17

இவ்வாறன பயிற்சிகளுக்கு நடுவே ஆழ உடுருவி தாக்குதல் நடத்தும் நீண்ட துர தாக்குதல் அணிகள் உருவாகின்றன.இவர்களுக்கான பயிற்ச்சிகள் பெரும் காடுகளில் நடைபெற்று கொண்டிருந்தன.இவர்கள் நீண்ட நாட்கள் காட்டுவழியாக எதிரியின் முகாம்கள் அருவிகள் ஆறுகள் என்பவற்றை கடந்து சென்று எதிரியின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் உருப்பெற்று இருந்தார்கள்.இவ்வாறு விடுதலை புலிகளின் படைகட்டுமானங்களில் ஏற்பட்ட பல வளர்ச்சிகளை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.இதில் போராளிகளின் பயிற்ச்சி தளங்கள் தொடர்பாக தொடர்ந்து வரும் தொடர்களில் தருகிறேன்.
புதிய புதிய போராளிகளின் உள்வாங்களால் விடுதலை புலிகளின் படையணிகளின் சிறந்த தலமையலார்கள் சிறந்த குறி சுட்டாளர்கள் என ஒரு பக்கம் சிற்ப கலைன்சர்கள் சிறந்த கணணி இயக்குனர்கள் .கணக்காளர்கள் என அறிவுத்திறன் சார்ந்த இன்னொரு பக்கமும் வளச்சியடைந்து இருந்தது.மறுபக்கத்தில் கடற்புலிகளின் அணிகளும் புதிய போராளிகளை உள்வாங்கி பெரும் வளர்ச்சி கண்டுகொண்டு இருந்தது.வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கட்டைக்காடு தொடக்கம் பொக்கனை முல்லிவாய்கள் முல்லைத்தீவு அலம்பில் செம்மலை நாயாறு வரையான நீண்ட கரையோர பகுதிகளில் வாழ்ந்த மக்களில் பலர் தங்களது பிள்ளைகளை கடற்புலிகளின் அணியில் இணைத்திருந்தார்கள்.கடலோடு வாழ்ந்து பழகியதால் அவர்களுக்கு கடலில் பயணிப்பதும் நீச்சலடிப்பதும் அத்துபடியாக தெரிந்திருந்ததால் பெற்றோர்கள் இவர்களை விரும்பி கடற்புலிகளின் இணைத்தார்கள்.அத்துடன் கடலில் சிறிலங்கா படையினரின் தாக்குதலில் தமது உறவுகளை இழந்திருந்த பலரும் தமது பிள்ளைகளை இணைக்க முன்வந்தார்கள்.இவர்களில் பலர் கடற்புலிகளின் அணியில் உள்வாங்க பட்டார்கள்.இவ்வாறு உள்வாங்க பட்டவர்கள் தளபதி சூசை அவர்களின் கிழ வளர்க பட்டர்கள்.இதே வேலை புதிய போராளிகளின் பயிற்ச்சிகளின் நிறைவில் பெற்றோர் முன்னிலையில் பிள்ளைகளை காண்பிக்கும் நடவடிக்கை பெரும் நிகழ்வாக நடந்தன.அதாவது அணிவகுப்பு மரியாதைகளுடன் புதிய போராளிகள் தமது பெற்றோர்களை காண்கிறார்கள்.சந்திக்கிறார்கள் ..பயிற்சிகளின் காரணமாக பெற்றோர்களை நீண்ட நாட்களாக காணாத போராளிகளுக்கு பெற்றோர்களை அழைத்து வந்து பிள்ளைகளுக்கு கண்பிக்க பட்டார்கள்.
புதிய போராளிகள் தமது திறைமைகளை தாய் தந்தை உறவுகளுக்கு சொல்லி மகிழ்ந்தனர்.இதனால் பெற்றோர்கள் பூரிப்பு அடைந்தார்கள்.தன பிள்ளை பெரும் திறமைசாலி படை நடத்துபவன் பொறுப்பாளன் கனரக துப்பாக்கி இயக்குபவன் என்று அவர்கள் பெருமிதம் அடைந்து பிள்ளைக்கு பலத்தினை உட்டியது.இவ்வாறுதான் அன்று அனைத்து புதிய போராளிகளுக்கும் பெற்றோர் சந்திப்புக்கள் நடந்தேறின.புதிய போராளிகளின் நிறைவினால் விடுதலைபுலிகளின் பலம் அதிகரித்து சென்றது கடற்புலிகளின் அதிகரிப்பால் புதிய படையணிகள் உருவாக்க படுகின்றன.தாக்குதல் அணிகளை விட கரையோர காவல்படை என புதிய அணி உருப்பெறுகின்றது.நிலைமை இவ்வாறு இருக்கையில் எதிரியின் ஆக்கிரமிப்பில் இருந்த யாழ் குடாநாட்டில் கைக்குண்டு வீச்சும் காவலரண் தகர்ப்பும் அங்குள்ள விடுதலை புலிகளால் நடத்த படுகின்றன.இதில் விடுதலை புலிகளின் ஆதரவளர்களும் பங்கேற்று எதிரிக்கு அழிவுகளை ஏற்படுத்தி கொண்டிருந்தார்கள்.இவை யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படையினருக்கு ஆத்திரம் உட்டும் செயாலகல மேற்கொள்ள படுகின்றன.அத்துடம் எதிரி யாழ்குடாவை விட்டு களமுனைக்கு நகர்த்த முடியாத நிலையினை ஏற்படுத்துவதற்காகவும் இவ்வாறன தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டன.இவற்றை விடுதலை புலிகளின் புலனாய்வலர்களான பொது மக்களும் ( இவ்வாறான தாக்குதலுக்கு என பயிர்ரபட்டிருந்தவர்கள்) இணைந்தே மேற்கொண்டார்கள் என்பது இங்கு குறிப்பிட தக்கது.இந்த நிலையில்தான் யாழ்குடா நாட்டில் மேலும் சில தாக்குதல்களை நடத்துவத்தற்கு என கரும்புலிகளை உள்ளடக்கிய புலனாய்வு துறை அணி ஒன்று வன்னியில் இருந்து கடல் வழியாக கொண்டு செல்லப்பட்டு தரையிரக்குகிறார்கள்.யாழ்ப்பாணத்தில் உடுருவி சிறலங்கா படையினருக்கு பின்தள இழப்புக்களை ஏற்படுத்தும் முகமாகவும் சிறிலங்கா படையினரின் கனரக நீண்ட துர தாக்குதல்களுக்கு பயன்படும் பிரங்கி நிலைகளை கண்டறிந்து avarrinai தகர்த்தெறியும் முகமாகவும் அதாவது சிறிலங்கா படையினரின் பின்தளங்களில் ஆட்டிலறி மற்றும் மல்ரிபெரல் எறிகணைகளை இயங்க விடாமல் செய்வதன் முலம் படையினருக்கு வழங்கல் பகுதியினை தடைசெய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக தரைவழியாகவும் கடல்வழியாகவும் யாழ் குடாவிற்கு அனுப்பிவைக்க படுகிறார்கள்.யாழ் குடாவிற்கான கடல்வழி பதியாக இருவழி பாதைகள் இருந்தன.ஒன்று வடமராட்சி கிழக்கில் இருந்து கடல்வழியாக சென்று கற்கோவளம் பகுதியில் தரை இறங்குதல்.இதற்காக பயிற்றபட்ட அணிகள் செல்வார்கள்.அதாவது கடலில் ஒரு மைல் துரத்திற்கு மேலாக நீந்த kudiyavarkal தான் இந்த வழியினுடாக செல்வார்கள்.வடமராட்சிகிழக்கு கடல் மற்றும்

நாகர்கோவில் கடற் பகுதிகளில் சிறிய படகுகள் விரைந்து சென்று கற் கோவளத்தை அண்டிய கடற்பகுதியில் இவர்களை இறக்கி விடுவார்கள் இவர்கள் கடலில் நீந்தியவாறு படையினரின் நடமாட்டங்களை அவதானித்து கரையேற வேண்டும்.மற்றையது யாழ்ப்பாணத்தில் அடுத்த பகுதியாக உள்ள கிளாலி கடல் பகுதியாக உள்ள குருநகர் பாசையூர் பகுதிகளில் சென்று தரை இறங்குதல் அங்கு வரும் கடற்தொழிலாளர்கள் சிலர் இதற்க்கு ஒத்துழைப்பு வழங்கினாலேயே இதற்கு இலகுவாக இருக்கும்.என்பதால் அவர்களுடனான தொடர்புகள் பேணப்பட்டு கடல் வழியிலான பயணம் இடம்பெறும் கடலில் இடையில் வரும் அவர்களிடம் போராளிகள் ஒப்படைக்கபட்டு அவர்கள் தரையில் இறக்கிவிட்ட நிகழ்வுகளும் நடந்தேறின.இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு சென்று தமிழ் மக்கள் நடமாட தடைவிதிக்க பட்டுள்ள படையினரின் உயர் பாதுகாப்பு வளையத்தினுள் உள்ள இடங்களுக்கு எல்லாம் சென்று அங்கு தகவல்களை திரட்டியது மட்டுமல்ல படையினரின் உணவினையே உண்டு படை நிலைகளுக்குள்ளே பதுங்கி வாழ்ந்த மாபெரும் வரலாற்று வீரன்தான் கரும்புலி லேப் கேணல் புட்டோ .ஆனாலும் கரும்புலி புட்டோ உண்பதற்கு உணவின்றியும் முகாம்களுக்குள் நடமாடி இலக்குகளை சரியாக இனம்கண்டு சொல்லியிருக்கிறான்.இதே வேலை யாழ்குடா சென்றிருந்த போராளிகளை மக்கள் பராமரிக்கிறார்கள் அவ்வாறன மக்கள் அன்றைய நாளில் இருந்தார்கள்.என்றால் அது பெருமிதம்தான்.ஏனென்றால் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் மக்கள் கைய்துசெய்ய பட்டார்கள் .அவர்களில் விடுதலை புலி ஆதரவாளர்களும் இருந்தார்கள்.ஆவார்கள் உடக மீளும் பல ஆதரவாளர்களும் கைதாகிறார்கள்.அன்று யாழ்ப்பாணத்தில் வீடுகளில் நின்ற புலிகளை எவ்வாறு என்றாலும் கையது செய்துவிட படையினர் முற்படுகின்ற வேலை தன்னைதானே சுட்டும் விடுதலை புலிகளின் கொள்கை மரபுக்கு அமைய நஞ்சினை கடித்தும் வீரச்சாவு அடையும் நிகழ்வுகளும் நடந்தேறின.இவ்வாறுதான் லெப் கேணல் புட்டோ வீடு ஒன்றில் தங்கியிருந்த வேளை அந்த வீட்டை சிறிலங்கா படையினர் சுற்றிவளைத்து முற்றுகை இட்டனர் படையினரின் முருகையா உடைக்க முடியாது என்பதை அந்த கரும்புலி போராளி உணர்ந்து கொண்டிருந்தான் தான் உயிருடன் பிடிபட்டால் யாழ் குடாவில் செயற்படும் போராளிகள் பலருக்கு ஆபத்து நேரும் என்பதை பூட்டோ அறிந்திருந்தான் .எனவே தனது உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டினை வெடிக்கவைத்து தன்னைத்தானே அழித்து விடுதலைக்கு வித்தானான் .அந்த கரும்புலி இவ்வாறன தெய்வ பிறவிகள்தான் அன்று யாழ்ப்பாணத்தில் நின்ற கரும்புலி அணிகள் பூட்டோவின் இழப்பினை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் கரும்புலி அணிகளின் வேவு நடவடிக்கை சற்று மந்தமடைந்தது.இதனால் நகர் கோவில் கண்டால் பகுதிகள் உடாக விடுதலைபுலிகளின் மேலும் சில வேவு அணிகள் சிறிலங்கா படையின் கட்டுபாட்டுக்குள் நுளைகின்றார்கள்.இதில் தளபதி தீபன் அவர்களின் வேவு அணிகள் சிறப்புற அவர்களது நடவடிக்கையில் ஈடுபடுகிறது.இந்த நிலையில்தான் லெப் கேணல் தியகாராயண் தலைமையில் ஓர் அணி அதாவது புலனாய்வுத்துறை அணி அங்கு களமிறங்கு கிறார்கள் (தொடரும் )

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அந்த வீரன் இறந்ததுக்கு காரணம். கண்ட கண்டவனிட்டம் எல்லாம் காசுக்கு ஒரு குண்டு எறியக்கொடுத்து.அவங்கள் சும்மா எல்லாம் கொள்ளை அடித்து பேந்து இராணுவத்திலும் சேர்ந்து கொண்டார்கள்.இது ஒரு படு மோசமான அணுகுமுறை.

    ReplyDelete
  3. உண்மையும் சகோதர உங்கள் புனைபெயருடன் கருத்துக்கள் விமர்சனங்கள் பதிந்தால் சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
  4. உங்கள் கருத்துக்களை விமர்சனங்களையும் எதிர்பாக்குறேன் சகோதர

    ReplyDelete

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை