வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Wednesday, December 7, 2011

புலனாய்வு துறையின் துணை பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் வரலாறு பாகம்-1

  புலனாய்வு துறையின் துணை பொறுப்பாளர்  கேணல் சாள்ஸ்

கருத்திலே தமிழ்கொண்டு  களத்திடை பகைவென்ற புலிப்படை மாவீரரின் .கரும்புலியாய் வாழ்ந்து கரும்புலியால்  வாழ்ந்து  கரும்புலிகளோடு வாழ்ந்து கரும்புலிகளுக்காக வாழ்ந்து இறுதிவரை கரும்புலிகளோடு கலந்திருந்த கரும்புலிகள் கண்ட தமிழீழ தேசத்தின் விடுதலை கனவை நினைவாக்க களம்பல அமைத்து வழிநடத்திய தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வு துறையின் துணை பொறுப்பாளர் இணைபொருப்பாளர் கேணல் சாள்ஸ்

*** கவனம் கவனம் தமிழர் தேசம் விடியல் காணும் பொழுதில் கவனம் .பகை உளவு பாக்க அதிக வழியில் தினமும் வருவான் கவனம் ***


 ஒரு நாடு கட்டுகோப்போடு இருக்க நிழலாக நின்று அதையும் கடந்து அவர்களையும் வழிநடத்துபவர்களாக வேவு படையாக மொத்தத்தில் அனைத்துமாக திகழ்வதே புலனாய்வு துறையினர் .புலனாய்வு துறையே ஒரு நாட்டின் முதுகெலும்பாகும்.புலனாய்வு துரையின் அவசியம் எவ்வளவோ ஆபத்தும் அவ்ளவே மக்களோடு மக்களாய் கலந்து உறவாடும் ஒரு முகமும்,கரணம் தப்பினால் மரணம் என்றநிலையில் கண்காணிப்பு வேலையில் இம்மியளவும் பிசகிவிட கூடாது என்பதில் கவனமும் மறுமுகமும் என உலாவும் பயங்கரமானது

இவர்களது போரியல் வாழ்வு .புலனாய்வாளர்களும் தற்கொடை போராளிகளே தற்கொடை போராளிகளும் புலனாய்வாளர்களே .தமிழீழ நாட்டின் புலனாய்வு துறைக்கு புதுப்பொலிவு உட்டியவர்கள் வேவு புலி என்ற கரும்பிலி மாவீரர்கள் எதிரியின் குகைக்குள் எமக்காய் சென்றவர்கள் எத்தனை பேர் கணப்பொழுதில் வெடியாய் வெடித்தவர் எத்தனை பேர் எதிரியின் கைகளில் அகப்பட்டு அடித்து கொல்லபட்டவர் எத்தனை பேர். நம் நாடு விடிந்தாலும் நாம் மறப்போம அவர்களை அந்த சிற்பிகளை செதுக்கி செதுக்கி சிற்பங்கள் ஆக்கிய மாபெரும் சிற்பமே இந்த கேணல் சாள்ஸ்

 ஆயிரம் புதினம் அறியலாம் அப்பு ,அதை சந்தியில் நின்று சொல்லுவதே தப்பு ,தாயக மண்ணே எங்களின் சொத்து,அதை தொடுபவன் எவனோ விழவேண்டும் செத்து,

அதிகம் அறியபடதவரும் அதிக அறியப்பட வேண்டியவரும் அந்நியரால் அதிகமாய் அடையாளம் காணப்பட்டவன் உலகறிய செய்த விடுதலை புலிகளின் சாதனை தாக்குதல் பலவற்றை வழிநடத்திய சிறந்த வீரன் இறந்துவிட்டான் என்பது கூட இன்றைய எமது நிலைக்கு ஒரு காரணம்.நிலையில்லா வாழ்வில் நிலையான செயற்பாடுகளை நிகழ்த்திய வீரனின் வீர வரலாறு

 ரவிசங்கர் என இயற்பெயரை கொண்ட கேணல் சாள்ஸ் ,செந்தூரன் அருள்வேந்தன் என்ரும்கூட இயக்கத்தில் அழைக்கபட்டார்.திரு,திருமதி சண்முகநாதன் இணையருக்கு ஐந்தாவது மகனாக கடைக்குட்டியாக யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்தார்.இவனும் எம்மை போன்று உடன்பிறப்புக்கள் நால்வரோடும் உறவாடி விளையாடி வந்தவன்தான் .ஓரளவு வளர்ந்து பெரியவனாகும் வரையிலும் அம்மாவின் உடையை பற்றிகொண்டு பின்தொடர்ந்து செல்லும் செல்லப்பிள்ளை .குடும்பத்தில் மற்றவர்களை போலவே இவனும் படிப்பில் படு சுட்டித்தனமாக இருந்தான்.அனால் மற்றவர்களை போல படிப்புக்கு என அதிகளவு நேரத்தை ஒதுக்கிக்கொள்ள மாட்டான் .செல்லமகன் படிப்பில் பின்தங்கி விடுவனோ என்று அம்மாவிற்கு பயம் வயது ஏற ஏற எல்லாவற்றையும் அம்மாவிடம் கேட்டு செய்வது சற்று குறைவடைந்தது. அந்த காலகட்டத்தில் இவனது சொந்த இடமான பருத்தித்துறை படைமுகாம் வடபகுதியில் பெரிய படைமுகாம்களில் ஒன்றாக இருந்தது .முற்றுகைக்கு உள்ளான நிலையில் முகாமை சுற்றி புலிகளோடு காவலில் நின்றனர் ஊரிலுள்ள இளையவர்கள் .தனது பாடசாலை பருவத்தில் இளைய காலத்திலையே படைமுகாம் காவல் இளையவர் அணியோடு இவன் தொடர்புகளை ஏற்படுத்திகொள்ளவே இவனது படிப்பு பாளகின்றதே என்று அவனது அம்மாவிற்கு படபடப்பு ஏற்பட்டு விட்டது ..


படிப்பதுக்கு என்று அதிகளவு நேரம் ஒதுக்கிகொள்ளாத இவன் இப்பொழுது படிப்பதற்கு என்று கொஞ்ச நேரம்கூட ஒதுக்குவது இல்லை.கிட்டதட்ட அது நின்றே போய்விட்டது நீ இப்படியே படிக்காமல் இருந்தால் படித்த உனது அக்காமார் வேலைக்கு செல்ல நீ அவர்களுக்கு வண்டி ஓட்டுனராகத்தான் வருகின்ற வேலையை செய்ய போகின்றாய் அம்மா செல்லமும் கண்டிப்புமாய் இவனை சீண்டுவாளாம். இருப்பினும் இவனது க.போ .தா சாதாரண பரீட்சையில் நல்ல பெறுபேறு வந்தபோதும் குடும்பத்தில் எல்லோருக்கும் பெருமைதான்.அனால் அம்மாவுக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் நீ கவனமெடுத்திருந்தால் என்ற வழமையான ஆதங்கம்.க .போ .தா .சாதாரண பரீட்ச்சை முடிவானது ஒருகிழமை கூட ஆகவில்லை இந்த குஞ்சு கூட்டைவிட்டு பறந்து போனது .

ரவிசங்கர் என்ற இந்த குஞ்சு கூட்டைவிட்டு பறந்துசென்று விடுதலை புலிகள் என்ற குடும்பத்தோடு தன்னை இணைத்து கொண்டு சாள்ஸ் என்ற பெயரில் சிறகடிக்க தொடங்கியது.சாள்சின் அண்ணன் ஒருவர் ( 1980 ) ஆண்டுகளில் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணையவென பாடசாலை நண்பரான போராளி ஜொனி அவர்களோடு பெயர் கொடுத்திருந்தாலும் அம்மாவுக்கு சொல்லாமல் போக மனமில்லாமல் கடைசியாய் ஒருதரம் அம்மாவிடம் சொல்லவந்த வேளை அம்மா அலுத்து மன்றாடி மகனை மறித்ததுமான நிலை சாள்சுக்கு ஏற்படவில்லை.காலத்தின் தேவை அறிந்து தானாகவே முடிவெடுத்து தன பாதையை அமைத்து கொண்டவன் சாள்ஸ்.குடும்பத்தினருடனான இவனுக்கான உறவு அபூர்வமான உறவுநிலை பிணைப்பு தந்தை தாய் மகன் என்கின்ற உறவுநிலைக்கு அப்பால் குடும்பத்திலுள்ள அனைவரும் சாள்சின் ஆளுமைவீச்சுக்குள் கட்டுபட்டு இருந்தனர்.இன்னும் சொல்லுவதானால் சாள்ஸ் ஒரு பெரிய பொறுப்பாளன் ஆகவும் இவனது அம்மா அப்பா மற்றும் இவனது முத்த சகோதரர்கள் அனைவரும் விடுதலை புலிகள் இயக்கத்தில் அப்போதுதான் சேர்ந்த போராளிகள் போலும் ஒடுக்கபட்டும் கட்டுபட்டும் நடப்பதை பார்க்க தமக்கே வியப்பாக இருக்கும் சிரிப்பாகவும் இருக்கும் என்று இவனை நன்கு அறிந்த போராளிகள் கூறுகின்றனர் .

வளர்ந்து பெரியவனாகி இயக்க முதுர்ச்சியும் சேர்ந்துவிட சாள்ஸ் அவர்களின் குடும்பத்தில் தலைமகனாகவே ஆகிவிட்டான் .குடும்பத்தினர் எல்லோரும் எதற்காகவும் இவனது ஆலோசனையை பெறுவது என்ற நிலை வந்துவிட்டது.சாள்ஸ் தனது பெற்றோர் உறவினர்களோடும் பழகுவதை பார்க்க அலாதியாக இருக்குமாம் பெற்றோர் சகோதரர் உறவு என்ற நிலையல்லாது நல்ல நண்பனை போன்று ஒன்றாய் கூடியிருந்து மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பார்.சாள்சின் பணிகளில் இணைந்தும் சேர்ந்தும் அவனது பெற்றோரும் குடும்பத்தினரும் ஆற்றிய விடுதலை பணியும் பங்களிப்பும் இன்னொரு பக்க வரலாறாய் விரியும் சாள்சின் நண்பர்களை அனைவரையும் பிள்ளைகளாய் சகோதராய் கொண்டாடி இன்பத்திலும் துன்பத்திலும் கூடி வாழ்ந்திருந்த குடும்பம் சாள்ஸ் அவர்களின் குடும்பம் .தமிழீழ விடியலுக்காக தமிழ் மக்களின் விடியலுக்காக தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஒப்படைத்த தோழர்கள் நினைவாக நாம் அமைதியாய் உணர்வின் மவுனமாய் இருக்கும் நாள் சாள்சின் பிறந்த நாளாகவும் அமைந்தது.கார்த்திகை திங்கள் இருபத்து ஏழாம் நாள் கார்த்திகை பூக்களுக்கான நாளான அந்த நாளிலேதான் இந்த கார்த்திகை பூவும் பிறந்தது.விடுதலை போராட்ட பற்றுணர்வை எந்தவொரு கட்டத்திலும் எதற்காகவும் விட்டுகொடுக்காமல் வாழ்ந்தவன் சாள்ஸ்.அவனது இல வயது காதலி உறவுமுறை சொந்தகாறியும் தான் .இயக்க முகாமில் போராளிகளுக்கிடையே சாதாரண விவாதமொன்றில் போராளிகள் போராளிகளையே திருமணம் செய்தல் சிறந்தாக இருக்கும் என்ற கருத்து முன்வைக்க பட அக் கருத்தின் தாக்கத்தோடு சாள்ஸ் தன காதலியிடம் சென்றான் ..>>>

***தென்னம் கீற்று தென்றல் வந்து மோதும் .எம் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும் .கன்னிமனம் மெல்ல மெல்ல மாறும் ,அவள் கையில் கூட  ஆயுதங்கள் ஏறும் ,****

அப்பெண்ணை போராளியாக்கும் முயற்சியில் சாள்சும் சாள்சை போராட்டத்தில் இருந்து விலக்கும் முயற்சியில் அப் பெண்ணுமாக உரையாடல் நடந்தது.அங்கு காதல் தோற்றது .இல்லை இல்லை சாள்சின் போராட்ட பற்று வென்றது.காதல் பயணம் நின்றது ,சாள்சின் விடுதலை பயணம் வென்றது .

****தங்க மேனி நொந்து ஈழ தாயளுகின்றாள் ,எம் தலைவன் இந்த நிலையை பார்த்து தானுருகின்றான் ,எண்கள் மேனி சாகும் இல்லை எதிரி ஆவி போகும் .எதிரி ஆவி போகும்  ஈழம் வந்து சேரும் ****

அதன் பின் அவன் கடமைக்குள்ளே ஆழமாய் முழ்கி விட்டான்.குறித்த காலம் வரை தனிப்பட்ட தன வாழ்க்கை பற்றி கவலைப்படவோ காதலிக்கவோ நேரமில்லை அவனுக்கு மட்டகிளப்பு சென்றுவந்து வெற்றிகரமான நடவடிக்கையாளன் என்ற வகையில் அவனது பரிமாணம் வளர்ந்திருந்த வேளையில் அவனது திருமணம் கனிந்தது.முன்னைய அனுபவத்தாலோ அல்லது தொடர்ச்சியான பணிசார்ந்த அவனுள் உருவாகியிருந்த இயல்பினாலோ என்னவோ பேச்சுத்திருமணம் என்றே நின்றுகொண்டான் .மருத்துவ போராளி ஒருவரை மனைவியாக கொண்டு இனிதான வாழ்கையில் அழகான முன்று பிள்ளைகளை பெற்றான்.தன துணியை சமமாய் மதித்து வாழ்வையும் பொறுப்பையும் பகிர்ந்துகொள்ளும் நல்ல குடும்ப தலைவனாக இருந்தான்.வாழ்க்கை துணை மருத்துவ கல்விக்காக துர இடம் சென்றிருந்த வேளையில் பலமாதங்களாக குழந்தைகளை பராமரிக்கும் நல்ல தந்தையாக மிக நல்ல கணவனாக விளங்கினான் ..

   பணியாளின்   வாழ்விற்கும் வாழ்வினால் பணிக்கும் இடையுறு இன்றி இனிதாய் நகர்ந்தது இவனது வாழ்வு இவன் போராளியாய் களத்திடை சாதித்தவை ,களத்திடை செயற்படுத்தியவை ,களத்திடை நாயகனாக திகழ்ந்தமை .களத்திடை செயற்பட்டு தலைவனாக திகழ்ந்தமை குறித்து தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வு துறை பொறுப்பாளர் திரு பொட்டு அம்மான் அவர்கள் கேணல் சாள்ஸ் பற்றி குறிப்பிடு இருந்தார் .இந்திய இராணுவம் எம் மண்ணைவிட்டு அகன்று அமைதி நிலவிய காலம் அந்த காலம் பிரேமதாச அரசும் விடுதலை புலிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நேரமது .எமது மக்களுக்கு எதோ ஒரு நன்மையை செய்ய பிரேமதாச அரசு முன்வருமா என்று எண்ணத்தில் அனைவருமே ஆழ்ந்திருந்தனர் .இந்திய இராணுவத்தினரின் நெருக்கடி மிக்க சுற்றிவளைப்பு காலத்தில் பிரிந்திருந்த தலைவர் அவர்களின் குடும்பம் ஒன்றாக சேர்ந்திருந்த காலமும் அதுவேதான் .அந்த வேளையில்தான் முதன்மையான ஒரு அறிக்கை கிடைத்தது .எம்மவர்களால் புறக்கணிக்க முடியாத முதன்மையான அறிக்கையாக அது அமைந்தது .அப்போதைய சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்னமும் பலாலியில் இருந்த சிறிலங்கா புலனாய்வு பிரிவின் பொறுப்பு அதிகாரியும் இணைந்து செயற்படுத்தும் திட்டத்தின் விபரங்கள் கிடைத்தன.

 அக் காலபகுதில் தலைவர் அவர்களது துணைவியார் மதிவதனி அவர்கள் நல்லூர் கோவிலுக்கு சென்றிருந்த செய்தியை உதயன் பத்திரிகை சிறு செய்தியாக வெளியிட்டு இருந்தது.அச செய்தியை அடிப்படையாக வைத்து அமைந்திருந்தது சிறிலங்காவின் திட்டம்.மதிவதனி அவர்களை பின்தொடர்ந்து கண்கானிப்பதுக்கான ஏற்பாடுகளும் அதனை தொடர்ந்து தலைவர் அவர்களின் இடத்தை கண்டறிவதும் ,தலைவரை கொலைசெய்வதுமான திட்டங்களை உள்ளடக்கி இருந்தது அந்த அறிக்கை.தென்னிலங்கையில் எழுந்த ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்கியதன் முலம் சிறிலங்காவின் அரச இயந்திரம் புதுப்பொலிவு பெற்றிருந்த காலமது எமது விடுதலை போரையும் அதே வழியில் சென்று முடக்கிவிடலாம் என்ற நம்பிக்கையோடு நகர்வுகளில் இறங்கியிருந்தனர். ஜேவிபியை நேரடியாக முன்னின்று செயற்பட்ட பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ணாவின் மிக நேரடியான வார்த்தைகளில் அமைந்திருந்தது .அந்த திட்டம் ,அறிக்கை துல்லியமானதாக தெளிவானதாக இருக்கமானதாக இருந்தது .மதி வதனி அவர்களை பின்தொடர்ந்து தலைவர் அவர்களது இருப்பிடத்தை கண்டறிந்து தலைவர் அவர்களை கொன்றுவிட வேண்டும் என்ற நேரடியான கட்டளை என்பதாக அந்த அறிக்கையில் அமைந்திருந்தது.

நிலைமை தெளிவாக தெரிந்தது சிங்களம் உண்மையோடு பேச்சுவார்த்தை நடத்தவில்லை ,வஞ்சகத்தின் வழியில் பேசுகின்றது என்பது தெளிவாகிவிட்டது கொல்லும்வரை பேசுவோம் கொல்ல வாய்ப்பு கிடைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றதாக அமைந்திருந்தது சிங்களத்தின் வியுகம்.

எமக்கு அதுவொரு சவாலாக இருந்தது .சிறிலங்காவின் திட்டம் எமக்கு தெரியும் என்பது ரகசியமாகவே வைக்கபட்டு இருந்தது.என்ன செய்யவேண்டும் என்று தெரிந்தது ஆம் அவர்களின் வழியிலையே அவர்களுக்கு பதில் அடி கொடுக்கவேண்டும் அதனை எப்படி செய்வது யார் செய்வது அவர்களது தலைநகரத்தில் அவர்களது அவர்கள் முடக்கப்பட வேண்டும் .அவர்களது செயற்பாடுகளை கொழும்பிலும் முடக்க எம்மால் முடியும் என்பது நிருபிக்க பட வேண்டும் இந்த காலகட்டத்தில்தான் தலைவர் அவர்கள் சிந்தனை துளிகளில் இருந்து சில வார்த்தைகளை கூறினார் .அவை என்ன தெரியுமா?நாம் பேரளவில் மட்டும்தான் புலனாய்வு என்ற பெயர் தரித்து இருக்கின்றோம் அனால் எமக்கு என்று ஒரு ஆற்றல் மிக்க புலனாய்வு அமைப்பு அமையவேண்டும் என்று கூறினார்.இதற்க்கு காரணம்

அந்த காலப்பகுதியில் நம் புலனாய்வு சார்ந்து எந்தவொரு அடிப்படையுமே உருவாக்கி இருக்கவில்லை .சொல்லபோனால் புலனாய்வு என்ற எண்ணக்கருவை மனதில் கொண்டிருந்தோம் என்பதுக்கு மேலாக புலனாய்வு சார்ந்து நாம் எந்தவொரு கட்டமைப்பையோ அல்லது அதற்க்கான ஆளணிகளையோ கூட கொண்டிருக்காத காலமது .அந்த வேளையில்தான் சாள்ஸ் என் நினைவுக்கு வந்தார் (1988 ) ஆண்டு யாழ் மாவட்ட பணிக்காக மணலாற்றில் இருந்து யாழ் நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தேன் .விஸ்வமடுவில் உள்ள கிராமமொன்றில் ஓய்விற்காக நாம் அனைவரும் அமர்ந்து இருந்தோம் எமது உதவியாளர்களில் ஒருவராய் இருந்த கிளி என்பவர் சாள்சை எனக்கு அறிமுக படுத்தினார் அப்போது சாள்ஸ் கிளிநொச்சி மாவட்டத்திற்க்குரிய சண்டையணி போராளிகளில் ஒருவர் முதலாவது அறிமுகத்திலையே சாள்சின் ஆற்றலை முழுமையாக அடையாளம் கண்டுவிட்டதாக கூறினால் அது மிகைபடுத்தபட்ட பொய்யாக அமைந்துவிடும் .கொழும்பிற்கு சென்று வரக்கூடிய துணிவும் அதற்க்கு பொருத்தமான சிறிலங்கா அரசால் வழங்கபட்ட தேசிய அடையாள அட்டையும் கைவசம் வைத்திருக்கும் ஒரு போராளி அது மட்டுமே அவனைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருந்தவை .கொழும்பில் சில வேலைகள் செய்யவேண்டி வரலாம் தலைவர் அவர்கள் கூறிவிட்டது நினைவுக்கு வர அன்றே சாள்ஸ் என்வசம் ஆனான் .ஆயுதங்கள் களைந்து பொதுமக்களின் உடைதரித்த போராளியானான் ,இந்திய இராணுவன் தமிழீழத்தில் இருந்த காலத்திலையே வேறு வேலையாக சென்று கொழும்போடு ஓரளவு பரீட்சியத்தை ஏற்படுத்தியிருந்த சாள்ஸ் இந்த செயற்பாட்டுக்கு முன்வந்தான் .

நான் செய்கின்றேன் என்னால் முடியும் அம்மான் என்று முன்வந்தான் இருபது வயதே நிரம்பிய இவன் வஞ்சினம் பொங்கும் நெஞ்சினனாய் கொழும்பு நோக்கி பயணிக்கின்றான் .இன்றும் மனதில் மறக்காத அன்றைய நாள் அதன் பின் யாழ்ப்பாணத்திற்கு வரமலையே நின்றுவிட்ட அந்த தொடருந்து யாழ் தேவி தொடருந்து .சாவகச்சேரி நிலையத்தில் இருந்து சாள்சையும் ஏற்றி கொழும்பு நோக்கி போகின்றது .தொடருந்து திரும்பி வரவில்லை அனால் சாள்ஸ் மீண்டும் வந்தான் .வெற்றி வீரனாக தேசத்தை நோக்கி உலகை திரும்பி பார்க்க வைத்த சாதனையாளனாக திரும்பி வந்தான் .( 1990 ) ஆண்டு கொழும்பு நகரில் சாள்ஸ் அவனோ மிகவும் இளைய வயது கொழும்பிலோ சரியான தொடர்புகள் இல்லை இலக்கற்ற வகையில் அலைச்சல் கொழும்பு சிங்கள கொழும்பாக இருந்த கொழும்புக்குள் கால்பதிக்க முடியாமல் தனி ஆளாக அலைந்து திரிந்தான் தொடக்க நாட்களில் அவனது கொழும்பு பயணமும் கூட எல்லாம் நல்லபடியாக அமைந்துவிடவில்லை .அவனது தொடக்க பயனத்திலையே வழித்துணையாக தொடருந்து ஏறி சென்ற மனிதன் ,கொழும்பு தொடருந்து நிலையத்திலையே தனியாக இறங்கி மெதுவாக கழன்றுவிட தனித்து நின்று பின்னர் தன்னை ஆசுவாச படுத்திகொண்டு தெரிந்த ஓர் இடத்தில் நிலைபெற்று தொடங்கியதுதான் இவனது செயற்பாடு .

கொழும்பில் அவன் தங்கியிருந்த வேளையில் உள் உரிலையே முன்னர் இவனுக்கு அறிமுகம் ஆகியிருந்த தேச துரோகியோருவன் நல்ல வேளையாக துரோகி என்று முன்னரே அடையாளம் தெரிந்த துரோகி கண்டுவிட்டு இவனை பின்தொடர சுளித்து தப்பியோடினான் சாள்ஸ் .துரோகியானவன் தொடர்ந்து முயற்சித்தும் முடியாமல் போகும்வரை சுழித்துவிட்டு ஓடி தப்பி மூச்சுவிட்டு முன்னேறி தப்பியிருந்தான் சாள்ஸ் .சூழ்நிலை இப்படி இருக்கையிலும் கொழும்பை விட்டுவிட்டு வரமுடியாத கடமை முதன்மையாக இருந்தது .புலனாய்வு போராளியாக இவன் செயற்பட்ட காலத்தில் இவன் பார்க்காதவை அல்ல ,இவன் பார்க்காத சிரமங்கள் அல்ல ,இந்திய படை இருந்த காலத்தில் பயணத்தில் கட்டாய ஆள்சேர்ப்பு என்று கூறி ஈ என் ரி எல் எப், ஆள் ஒருமுறையும் பின்னர் கொழும்புக்கு போகையில் வவுனியாவில் வைத்து புளட்டால் இன்னுரு தடவையும் கொழும்பு வானுர்தி மையத்தில் சிறிலங்கா புலனாய்வு படையால் மீண்டும் ஒரு தடவையுமாக கைதாகி போன அனுபவமும் கூட இவன் பெற்று இருந்தான்.இவனது உரையாடல் திறனும் இவன் சொன்ன மறைப்பு கதைகளும் இவன் விடுதலைக்கு காரணமாக அமைந்தன .இதே வேளை இவனது உதவியாளர்கள் எல்லோரும் உத்தமர்களகவும் அமைந்துவிடவில்லை .முதலாளி ஒருவர் யாழ்ப்பாணத்தில் பெருமளவு வாக்குறுதிகள் தந்து சென்றார் .முதலாளி இங்கு நிற்கும் போது அவரை சந்திக்க இரவிரவாக இரகசியமாக தொண்டமனாறு மற்றும் அச்சுவேலி நோக்கி போவோம் .கொழும்பில் எல்லாம் செய்யலாம் வெல்லாம் என்று பெருமளவில் வாக்குறுதி வழங்கினார் அந்த மனிதன் .

நடவடிக்கைக்கு தேவையான தவிர்க்க முடியாத உதவியை கேட்டு அவரது கடை வாசலில் தவமிருந்தான் சாள்ஸ் சந்திக்கும் வேளைகளில் நாளை வாருங்கள் என்று சொன்னவர் நாளாக நாளாக சந்திப்பதையே தவிர்த்து காய்வெட்டி திரிய தொடங்கினார் .நம்பிக்கை இழந்தாலும் வேறுவழியில்லாமல் கடைவாசலில் போய் குந்தியிருப்பார் சாள்ஸ் தினமும் இவன் காத்திருப்பதை கண்ட பக்கத்து கடை முஸ்லீம் அய்யா இவனை நம்பி மிக கெடாதீர்கள் அவன் சரியான சுத்துமாத்து பேர்வழி என்று சொல்ல இறுதியாக நம்பிக்கை இழந்து சோர்ந்து போய் நின்றான் சாள்ஸ் .பணம் பறிப்பதிலையே குறியாக இருக்கும் இன்னும் சில உதவியாளர்கள் முன்னுறு ரூபாய் பொருட்களை எல்லாம் மூவாயிரம் ரூபாய் விலைசொல்லி பண கேட்க்கும் போதெல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் பணத்தை எடுத்து கொடுப்பான் .இவனிடம் பணம் கேட்பவர்களுக்கு சிங்கள காவல்துறை படையினரோடு தொடர்பு உள்ளது இவனுக்கு தெரியும் .தனது பாதுகாப்பான செயற்பாட்டுக்கு தேவை அவர்களது நட்பு என்பதை அவன் உணர்ந்து கொண்டான் .அதற்க்கு கொடுக்கும் விலை அந்த பணம் என்பது இவனுக்கு தெரியும் அனால் அந்த உதவியலரோ உதவி எதுவும் செய்யாமல் முகவும் கெட்டித்தனமாக சாள்சை ஏமாற்றி அந்த பணத்தை பெற்று கொள்ளுவதுதான் அவரது நினைப்பாக இருந்தது .

 கொஞ்சம் கொஞ்சமாக சாள்சுக்கு இடமும் ஆட்களும் பிடிபட ரகசிய செயற்பாட்டில் முதிர்ந்தவன் ஆகிவிட்டான் .யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் இருந்த இவனது தோழர்கள் தொடர்புகளை தொட்டெடுத்து கொடுக்க இடங்களும் ஆட்களும் நெளிவு சுளிவுகளும் கொஞ்சம் கொஞ்சமாக பிடிபட கொழும்பில் அகல சிறகுவிரிக்க தொடங்கிவிட்டான் சாள்ஸ் கொழும்பு தெருவெங்கும் அங்குள்ள ஒவ்வொரு ஒழுங்கை எங்கும் சிங்களத்து சேரி புறமெங்கும் சட சடத்து சீறிபறக்கும் அவனது உந்துருளி வீதி காவலர் மறிக்க நின்று கதை சொல்லுவதும் நிற்காமல் இழுத்து ஓடி மறைவதும் மாறி மாறி நடக்கும் இவனது பயணம் கொழும்பில் நின்ற சாள்சுக்கான முகவர் ஒழுங்கு பொருள் வழங்கல் என பின்னணி பணிகளை கவனித்தான் சுருளி தாக்குதலுக்கான வெடிமருந்து இணைப்பை பரிசீலிக்கும் வேளையில் தவறு நடந்துவிடவே வெடி விபத்தில் சுருளி வீரச்சாவு அடைந்தான் .மேயர் சுருளியின் வீரச்சாவால் சோர்ந்து போனாலும் பனி சோராமல் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார் மாதவன் மாஸ்ரர் .கீதனின் அறிமுகத்தில் மாதவன் மாஸ்ரர் நகர்த்திய நற்குணத்தாரும் ,விடுதலை புலி ரவி அறிமுகபடுத்திய வரதனும் ,சாள்ஸ் ஓடு இணைந்து கொள்ள இருள் விலகிய நம்பிக்கை ஒளிக்கீற்று தென்பட தொடங்கியது .


வரத்தான் சாள்ஸ் இவருக்கு கிடைத்த அரிய துணை, நடவடிக்கை நகர்வுகளை புரட்டி ஓரம் தள்ளி பாதை அமைத்து கொடுத்த துனையாளன் ,முன்பு வேறொரு பின்னணியில் கொழும்பு பரீட்சியமும் ஆளணி அறிமுகமும் கொண்ட வரதனின் புதிய வேகத்தோடு காரியங்கள் முன்னகர்ந்தன அதைவிட சாள்சின் தனித்த முயற்சியாலும் கணிசமான வெற்றி இலக்கு அடையாளம் காணப்பட்டு விட்டது .அதுவும் துல்லியமாய் திட்டமிட வேண்டியதும் செயற்படுத்த வேண்டியதும்தான் மிச்சம் என்கின்ற அளவில் செயற்பட தொடங்கினர் .திட்டமிடல்கள் நகர்வுகள் கரும்புலிகள் பயிற்ச்சிகள் என புலனாய்வு சக்கரமும் செயர்த்திட்டத்துக்கான சக்கரமும் முன்னோக்கி நகர்ந்தன

நடவடிக்கையாலர்களும் கரும்புலிகளும் சென்றனர் இருப்பினும் எங்களுக்கு அந்த காலம் பட்டறிவு குறைவான காலம் .நடவடிக்கைக்கு என தெரிவு செய்யபட்ட ஆள் சறுக்கி பின்வாங்கிவிட குழப்பமான நிலைமை ஏற்பட்டு விட்டது முன்னோக்கிய நகர்வு கிழிறங்கி விட்ட நிலவரம் தோன்றிவிட்டது .புதிய கரும்புலிக்கு அவசர அவசரமாக பயிற்ச்சியும் தேவையான நகர்வுகளுக்கான திட்டமும் முன்னகர்ந்தது .புதிய ஏற்பாடுகளோடு விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கிய முயற்ச்சியில் கிடைத்தது வெற்றி அந்த அறிய வெற்றி கொழும்பை உலகமே திரும்பி பார்க்க மகிழ்ச்சி கடலில் மிதந்தது தமிழர் தேசம் .விடுதலை போராட்டத்துக்கு ஆப்பு வைக்க முற்பட்ட சிங்களத்தின் கொழும்பில் அவர்களது தலைநகர் கொழும்பில் வைக்கபட்டது வெடி அவர்களுக்கு அது மரண அடி .வீழ்ந்தான் எதிரி வென்றான் சாள்ஸ் என்று இங்கு அவனது தோழர்கள் ஆளையால்  கட்டி தழுவி கொண்டாடி மகிழ்ந்தது அது தனிக் கதை ..

 தொடரும்......

  
மன்னார் களமுனை உடாகத்தான் விடுதலைபுலிகளின் தென்பகுதி நடவடிக்கை நடைபெற்று கொண்டிருந்தன , இதற்கான சில நடவடிக்கைகளை

அன்று தளபதி கேணல் சாள்ஸ் மன்னாரில் இருந்து மேற்கொண்டிருந்தார் ,இவ்வாறுதான் (05-01-2008 ) மாலை முன்று மணியளவில் தளபதி சாள்ஸ் அவர்கள் மன்னாரில் இருந்து கிளிநொச்சி நோக்கி தனது வாகனத்தில் புறப்படுகின்றார் ,மன்னார் புநகரி வீதியில் ,முழங்காவில் பகுதிக்கு அண்மையாக ,பள்ளமடுவின் ஒரு காட்டுபகுதியில் சிறிலங்கா படையின் ஆழ உடுருவும் படையினர் ,கிளைமோர் தாக்குதலை நடத்துகிறார்கள் ,இதில் இவரது வாகனம் சிக்கி கொள்ளுகிறது ,சம்பவ இடத்திலையே கேணல் சாள்ஸ் வீரச்சாவை தளுவிகொண்டார் எம்மிடம் அறிமுகம் இல்லாத வீரன் பல சாதனைகளுக்கு சொந்த காரன் ..அன்று தான் மண்ணை முத்தமிட்டு தன கடமையை முடித்து உறங்குகின்றான்

நன்றி
 தமிழ்நதி கார்த்திகா
கனடிய தமிழ் வானொலி

சிறிலங்கா கட்டுநாயக்க வான்படை தாக்குதலை முன்னின்று செயல்படுத்திய வீரன் சாள்ஸ் ..
இது மட்டுமல்ல ஈழத்திலும் ஈழத்துக்கு வெளியிலும் நடந்த பல கரும்புலி தாக்குதல்கள் இவர்க்குக்கு சாள்ஸ் பங்கு முக்கியமானதாகும் ..


திவுகளை  படிக்கும் உறவுகளே உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை தவறாமல் பதிவுசெய்யுங்கள்  நன்றி


No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை