வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Tuesday, September 27, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-1




2005 ஆண்டின் காலப்பகுதி அது மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று போரை துவங்கவில்லை ஆயினும் போருக்கான ஆயுத்தங்கள் படையிரனால் மேற்கொள்ளபட்டு கொண்டுதான் இருந்தன என புலனாய்வு தகவல்கள் கிடைத்து இருந்தன ..இராணுவத்துக்கான போர் பயிற்சிகளிலும் ஆயுத கொள்வனவுகளிலும் சிறிலங்கா தீவிரமாக இறங்கியிருப்பது தெளிவாக தெரிந்து இருந்தது ..மஹிந்த அரசு பாரிய போர் ஒத்திகை ஒன்றை தொடங்க போகிறது என்பது உறுதியாக தெரிந்து இருந்தது
..அதற்கான முன்னேற்பாடுகள் மட்டுமல்ல போர் நிறுத்தம் மீறும் வகையில் அங்கங்கே விடுதலைபுலிகளுக்கு எதிரான சில தாக்குதல் நடவடிக்கைகளிலும் விடுதலை புலிகளுக்கு ஆத்திரத்தை உட்டகூடிய செயல்பாடுகளிலும் சிறிலங்கா படையினர் இறங்கி இருந்தனர் ...
சிறிலங்காவின் இந்த போரை எதிர்கொள்ள தமிழீழ தேசியத்தலைவர் புதிய போர் வியூகங்களை வகுத்துக்கொண்டு இருந்தார் ..அதில் வான் புலிகளின் தாக்குதல் திட்டமும் இருந்தது என்பதை நாங்கள் பின்னாளில்தான் அறிந்துகொண்டோம்.விடுதலை புலிகளிடம் விமானங்கள் இருப்பதாக செய்திகள் பரவலாக இருந்த போதும் அதற்கான தடையமோ ஆதாரமோ எவரிடமும் இருக்கவில்லை (1998 ) ம் ஆண்டு மாவீரர் தினத்தின்போது முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் மீது தமிழ்ழீழ வான்படையினர் மலர்துவி தமது முதல் பறப்பை மேற்கொண்டு இருந்தனர் .அதன்பின்னர் வான்புலிகளின் பறப்பை (2005 )காலபகுதியிலேயே நிகழ்ந்ததை அறிய முடிந்தது வன்னி வான்பரப்பில் அந்த அற்புதம் நிகழ்ந்தது தமிழ்ழீழ தேசிய தலைவரை சுமந்துகொண்டு தமிழ்ழீழ வான்படை வன்னி வான்பரப்பில் வட்டமடித்தது
இந்த பறப்பு செய்திகள் குட விடுதலை புலிகளின் தளபதிகள் போராளிகள் மட்டத்தில் குறிப்பிட்ட சிலருக்கும் மட்டுமே தெரிந்தது
மாவிலாற்றில் மஹிந்த அரசு போரைதொடங்கி கிழக்கை ஆக்கிரமிக்க தொடங்கியபோது வன்னியில் பெரும் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை .ஆனால் வன்னிபகுதியில் ஆழ உடுருவும் படையினரின் தாக்குதல்கள் அதிகரித்து இருந்தன இதில் போராளிகள் மட்டுமில்லை மக்களும் இழப்பை சந்தித்தவண்ணம் இருந்தனர் .இந்த நிலையில்தான் (05-01-2008 ) சனிக்கிழமை மாலை மன்னார் பள்ளமடு பகுதியில் சிறிலங்கா ஆழ உடுருவும் படையினர் நடத்திய தாக்குதலில் கேணல் சாள்ஸ் வீரச்சாவை தழுவிக்கொண்டார் .கேணல் சாள்சின் வீரச்சாவு விடுதலை புலிகள் மட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது காரணம் சாள்ஸ் பொட்டு அம்மனுக்கு அடுத்த நிலையில்லிருந்த ஒரு உயர்மட்ட புலனாய்வு தாக்குதல் தளபதி .பொட்டு அம்மான் இல்லை என்றால் சாள்ஸ் என்ற நிலையில்தான் அன்றைய விடுதலைபுலிகளின் கட்டமைப்பு இருந்தது .விடுதலை புலிகளின் பல கரும்புலிதக்குதல்கள் குறிப்பாக கட்டுநாயக்க கரும்புலி தாக்குதல்வரை எந்த தாக்குதல் நடவடிக்கை என்றாலும் சாள்ஸ் அவர்களின் பங்கு முதன்மையானதாக இருக்கும் .தென்னிலங்கையில் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்த முடியுமா என்ற சந்தேகம் ஒரு காலத்தில் எழுந்தபோது முடியும் என்று பல வெற்றிகரமான தாக்குதல்களை நிகழ்த்தி காட்டியவர் கேணல் சாள்ஸ்.ஒரு தாக்குதல் திட்டத்தை தலைவருக்கே விளக்குகிற அளவுக்கு பொட்டு அம்மனுக்கு அடுத்து சாள்ஸ் அவர்களே இருந்தார் சிறிலங்காவின் தென்பகுதி நடவடிக்கை தொடக்கம் இலங்கை பிரதேசம் எங்கும் விடுதலை புலிகள் நடவடிக்கை என்றால் சாள்ஸ் அவர்கள் தான் முக்கியம் என்று சொல்லும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் இருந்தன சாள்ஸ் அவர்களுக்கு அடுத்து கபிலம்மான் என்று தொடர்ச்சியாக பல்வேறு பொறுப்பாளர்கள் இவரது நடவடிக்கைகளுக்கு பக்க துணையாக நின்று செயல்பட்டனர்..

சிறிலங்கா தென்பகுதி மீது நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதுக்காக மன்னாரில் தளம் அமைத்து சாள்ஸ் செயற்பட்டுக்கொண்டு இருந்தார் அந்த பிரதேசத்தை சாள்ஸ் தேர்ந்தெடுக்க காரணம் மன்னாரில் விடுதலை புலிகள் கட்டுபாட்டு பிரதேசம் எங்கிலும் செல்பேசிக்கான கவரேஷ் உள்ளது அத்துடன் டயலாக் ரன்கத்த மோட்டரோல என்பவற்றுடன் இந்தியாவில் இருக்கும் சில தொலைதொடர்பு நிறுவனங்களின் சிக்கனல் குட சிலவேளைகளில் கிடைக்கும் .எனும் அளவிற்கு பல தொலைதொடர்பு நிறுவனங்களின் சிக்னல் அங்கு தொடர்சியாக இருந்தது இது சாள்சின் நடவடிக்கைக்கு இலகுவாக இருந்தது .அத்துடன் தென்னிலங்கை பகுதிகளுக்கு தாக்குதல் நடத்த மன்னார் கடல் பகுதியும் கரைய ஒட்டிய காட்டு பகுதியும் இலகுவாக இருந்தது கடல் வழியாக புத்தளம் சிலபத்துக்கு வெடிபொருட்களை கொண்டுசென்று சேர்ப்பதும் அங்கிருந்து தென்னிலங்கை ஏனைய பகுதிகளுக்குக்கும் நகர்த்துவதும் இலகுவாக இருந்தது இதனால் மன்னரே சாள்சின் பிரதான தளமாக மாறியிருந்தது ஒரு காலத்தில் அந்த பாதை படையினரின் முற்றுகைக்கு உள்ளானதால் மன்னரின் கட்டையடம்பன் மடு போன்ற பகுதிகள் உடாக வில்பத்து சரணாலயம் சென்று அதனுடாக போராளிகளும் வெடிபொருட்களும் நகர்த்தபட்ட சம்பவங்களும் இடம்பெற்றன இவ்வாறு விடுதலை புலிகளின் முக்கியத்துவம் மிக்க பொறுப்பாளர்களில் ஒருவரான கேணல் சாள்ஸ் தேசிய தலைவர் அவர்களுடன் அந்த வான் பரப்பில் ஈடுபட்டார் இந்த அனுபவம் பற்றி இவரது வீரச்சாவு நிகழ்வில் கலந்து கொண்ட பொட்டு அம்மான் போராளிகளுக்கு கூறியதை கேட்டதிலையே விடுதலை போராட்டத்தில் இவரது காத்திரமான பங்கு என்ன என்பதை புரிந்துகொள்ள முடியும்.சாள்ஸ் விடுதலை புலிகளின் புலனாய்வுத்துறையின் அடுத்த நிலை தளபதியாக செயல்பட்டவர் உண்மையில் விடுதலை புலிகளின் கட்டமைப்பு வன்னிக்குள் மட்டுமல்ல தென்னிலங்கையிலும் உலகநாடுகள் எங்கும் இயங்கிகொண்டு இருப்பது சிறந்த புலனாய்வு கட்டமைப்பினரால்தான் அதற்கு முக்கிய காரணங்களில் சாள்ஸ் ம் ஒருவர் சிலவேளைகளில் தாக்குதல் நடத்த போகும் கரும்புலிகளுக்கு குட இவரின் அறிமுகம் தெரிந்திருக்காது கரும்புலிகளுக்கு ஆனா திடத்தினை வேறு தளபதிகள் தான் வழிநடத்துவார்கள் இதனால் சாள்ஸ் பற்றி சாதாரண போராளிக்குகுட தெரிந்திருக்கவில்லை இவ்வாறன செயற்பட்தலன் சாள்ஸ் கால் படாத இடமே இலங்கையில் இல்லை என்றுதான் குறவேண்டும் மட்டகிளப்பில் நின்ருகுட தனது தென்பகுதி நடவடிக்கைகளை மேற்கொண்டவர் விடுதலை புலிகளின் கொரிலா பாணியிலான நடவடிக்கைகள் மரபு வழியிலான நடவடிக்கைகள் என்று எல்லாவித தாக்குதல் நடவடிக்கையிலும் சாள்ஸ் அவர்களின் திட்டமிடல் இருக்கும் இதனால்தான் விடுதலை புலிகளுன் புலனாய்வு துறையின் இரண்டாம் நிலை பொறுப்பாளராக உயர முடிந்தது .அன்று எமது விமானபடை தளத்திற்கு தளபதிகள் அழைத்துவரபட்டு இருந்தனர் அப்போது அங்கு தலைவர் அவர்களும் நின்றிருந்தார் அதில் நானும் கலந்து கொண்டேன் எமது இயக்கத்தின் முதன்மை தளபதிகளுக்கு தலைவர் அவர்கள் விமானபடையினை அறிமுகம் செய்து வைக்கிறார்.இதில் விமானபடைப்பிரிவின் போராளிகளும் அறிமுகம் செய்து வைக்கபட்டர்கள் .அதன் பின்பு நான்கு நான்கு பேராக விமானத்தில் பரப்பில் ஈடு பட்டார்கள் .எமது பாதுகாப்பு படைப்பிரிவு விமான தளத்தின் பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தது விமானத்தின் வடிவத்தினையும் விமான ஓட்டிகளின் திறைமைகளையும் தலைவர் அவர்கள் தளபதிகளுக்கு எடுத்துரைத்தார் .அதன்பின்புதான் தளபதி அவர்களுடன் வந்தவர்கள் என்று நான்கு பேராக விமானத்தில் பறந்தார்கள் .இரண்டு விமானங்கள் மாறி மாறி பரப்பில் ஈடுபட்டன அப்போது தலைவர் அவர்களும் பறப்பதுக்காக விமானம் ஒன்றில் ஏறினார். தலைவர் அவர்கள் ஏறும்போது அவரது பாதுகாப்புக்காக நானும் அதில் இருவதுக்கு முற்பட்டேன் அப்போது என்னை ஏறவிடாமல் தடுத்த தலைவர் அவர்கள் பொட்டு நான் தனிய போறேன் பிறகு நீ போ .நான் போனால் நீ பார் என்று கூறிவிட்டு விமானத்தில் ஏறி வன்னி வான்பரப்பில் வட்டமிட்டுவிட்டு கிழே இறங்கினார் .அப்போது அங்கு நின்றவர்களுக்கு அப்போது தலைவர் சொன்னதன் அர்த்தம் என்ன என்பது புரிந்திருந்தது ..அதாவது விமானத்தில் நான் போகும்போது எதாவது நடந்தால் இயக்கத்தை நீ பார் என்பதுதான் அர்த்தம் .அதன் பின்புதான் நான் பறப்பதுக்கு சென்றேன் அப்போது தளபதி சாள்ஸ் நான் எறிய விமானத்தில் எனது பாதுகாப்புக்காக ஏறினார் ..அப்போது தலைவர் அவர்கள் சாள்சை என்னுடன் ஏறவிடாமல் தடுத்தார் .இவங்கட விமானங்களை நம்பி எல்லோரும் ஒன்றாய் பறக்க வேணாம் முதல்ல பொட்டு அம்மான் போகட்டும் பிறகு நீ போ என்று சொன்னார் .என் என்றால் பொட்டு இல்லாவிட்டால் நீதான் புலனாய்வு துறைய கொண்டுநடத்த வேணும் என்று சொன்னார் ..அந்த அளவுக்கு சாள்ஸ் திறைமையான தளபதிய இருந்தார் அதன் பின்பு எல்லா தளபதிகளும் பரப்பில் ஈடுபட்டனர் என்றார்.இவ்வாறு தளபதிகளுக்கு வான் படையினர் தொடர்பான அறிமுகம் நிகழ்ந்திருந்தது .அனால் அதன் பின்னர் (26-3-2007 ) தமிழ்ழீழ வான்படை கட்டுநாயக்க மீது முதல் தாக்குதலை நடத்தி உலகத்திற்கு அறிமுகபடுத்தி கொண்டது தமிழின வரலாற்றில் முதல் வான்படை அமைத்த தலைவன் என்னும் பெருமை தமிழ்ழீழ தேசிய தலைவருக்கு கிடைத்தது .இத் தாக்குதல் மூலம் வான் பாதுகாப்பு படையணி என்ற அமைப்புடன் இருந்த விடுதலை புலிகள் ..வான் தாக்குதல் படையணி என்ற புதிய பலத்தை பெற்று இருந்தனர் .
அனால் இத்தனை பலம் கொண்டிருந்த விடுதலை புலிகள் இரண்டு வருடங்களில் எவ்வாறு பலமிழந்து செயலிழந்து போனார்கள் ??? தொடரும்

4 comments:

  1. உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் எழுதுங்கள் உறவுகளே

    ReplyDelete
  2. தமிழின வரலாற்றில் முதல் வான்படை அமைத்த தலைவன் என்னும் பெருமை தமிழ்ழீழ தேசிய தலைவருக்கு கிடைத்தது .இத் தாக்குதல் மூலம் வான் பாதுகாப்பு படையணி என்ற அமைப்புடன் இருந்த விடுதலை புலிகள் ..வான் தாக்குதல் படையணி என்ற புதிய பலத்தை பெற்று இருந்தனர் .
    என்ற உண்மைகள் பலர் அறிய வாய்ப்பாக உள்ளன.

    உண்மையுள்ள வரலாறுகள் பதிந்த பதிவுகளை பகிர இன்று பலர் இல்லை.
    அப்படி இருக்கயில் உங்கள் மூலம் இன்று அறிந்து எங்கள் பெருமையுள்ள தடயங்களை மீட்பதில் மகிழ்வடைவதுடன் வாழ்த்துக்கின்றோம்.
    தொடரட்டும்...
    நன்றி தமிழீழத்தேவதை-

    தமிழருடை தாகம் -தமிழ் தமிழீழம் தமிழக நாடே..

    ReplyDelete
  3. நன்றி சகோதரரே முடிந்தவரை எமது அழிந்துகொண்டிருக்கும் வரலாறுகளும் பதிவுகளும் மீட்டியவன்னமே இருப்போம்

    ReplyDelete
  4. http://www.youtube.com/watch?v=84hxtFcQGg0

    ReplyDelete

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை