வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, September 29, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-3


சிறிலங்கா தனது இராணுவப் பலத்தை பெருக்கிகொண்டுடிருக்கும் போது மறுதரப்பான விடுதலைப்புலிகள் அமைதியாக இருந்துவிட்டால் அது அவர்களுக்கு பெரும் ஆபத்தாக முடிந்துவிடும் .சிறிலங்கா போர் ஒன்றை தொடுக்கும்போது அதனை எதிர்கொள்ளமுடியாத ஒரு நிலையை விடுதலைபுலிகளுக்கு ஏற்படுத்திவிடும் .இதனால்தான் சமாதனத்துக்கான சரியான வழி எப்போதும் போருக்கு தயாராக இருப்பதுதான் .என்று அமரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஸ் தெரிவித்தாரே .

எனவே சிறிலங்கா பலத்தை பெருக்கிக்கொண்டு இருக்கும்போது விடுதலைப்புலிகள் மவுனமாக இருந்துவிட முடியாது .அவர்களும் தமது படைவலுவை கட்டியெழுப்ப வேண்டியது சமாதன காலத்திலும் அவசியமாயிருந்தது .இந்த நிலையில்தான் தலைவர் அவர்களால் பால்ராஜ் தலைநகர் திருமலைக்கு அனுப்பிவைக்க படுகிறார் .( 2004 )ம் ஆண்டின் ஆரம்பத்தில் திருகோணமலையில் தளபதி பிரிக்கேடியர் பால்ராஜ் கால் பதிக்கின்றார் வாகரையில் புதிய பயிற்சி தளங்களை அவர் நிறுவுகிறார் போராளிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கபடுகின்றன .கிழக்குக்கு தேவையான ஆயுத தளபாடங்களை தரை வழியாக கொண்டுசென்று சேர்ப்பதைவிட கடல்வழியாக இறக்குவதே சுலோபமாக இருந்தது .எனவே அந்த மாவட்டத்துக்கு தேவையான ஆயுதங்கள் கடல் வழியாக இறக்கபடுகின்றன .பெருமளவு மோட்டார்கள் இறக்கப்பட்டு அதனை இலக்குநோக்கி வீசுவதுக்கான பயிற்ச்சிகள் போராளிகளுக்கு வழங்கபடுகின்றது.புதிய குறிசூட்டு (சினைப்பர் )அணியினர் உருவக்கபடுகின்றார்கள் குறிப்பிட்டு கூறுவதனால் பால்ராஜ் அவர்களின் வருகைக்கு பின்னர் விடுதலைப்புலிகள் படையணிகள் அங்கு பலம்பெறத் தொடங்கியிருந்தன .
இதேவேளை சமாதன காலமான இக் காலத்தில் பிரிக்கேடியர் சு ப தமிழ்செல்வன் கிழக்கு மாகாணத்தை பார்வையிட சிறிலங்கா படைப் உலங்குவானுர்தியில் திருகோணமலை சேனையூரில் வந்திறங்குகிறார் .அவர் சம்பூர் தொடக்கம் வாகரை வரை சென்று பார்வையிட்டு பொறுப்பாளர் தளபதிகள் ஆகியோரை சந்தித்து மக்களுடன் கலந்துரையடுகிறார் .இதேநேரம் சர்வதேச போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் வழித்துணையுடன் போராளிகள் கடல்வழியாக பயணங்களை கிழக்கிற்கு மேற்கொண்டனர்.இதற்கிடையில் தமிழீழ விடுதலைப்புலிகள் புலனாய்வு பொறுப்பாளர் ச போட்டு அவர்களும் வன்னியில் இருந்து காடு மற்றும் கடல் வழிகளுடாக இரகசிய பயணம் ஒன்றை திருமலைக்கு மேற்கொண்டார்.அங்கு சொர்ணம் அவர்களுடன் இணைந்து அங்குள்ள கள நிலைமைகளை அராய்கின்றார்.அங்கு மக்களை சந்தித்து உரையாடிவிட்டு வன்னி திரும்புகின்றார் அன்று இது ஒரு இரகசிய பயணமாகவே இருந்தது.இதன்பின்னர் விடுதலைபுலிகளின் நீண்டகால திட்டமிடலின் அடிப்படையில் வெருகல் பிரதேசத்தில் கல்லடி என்னும் கிராமத்தில் வானொலி ஒலிபரப்பு சேவை என்ற பெயரில் தொலைத்தொடர்பு வான்படை கடல்வழி அவதானிப்பு கருவிகளை இணைப்பதுக்காக இரண்டு கோபுரங்கள் (ரவர்கள்)அமைக்கபடுகின்றன .கடற்கரைய அண்மித்ததாக மலையில் ( 120 ) அடி உயரம் ( 200 ) அடி உயரம் உடையதுமான இரண்டு கோபுரங்கள் அமைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன .இதனை அறிந்த சிறிலங்கா படைபுலனாய்வளர்கள் இது குறித்து ஆராய்கின்றார்கள் பின்பு சிறிலங்கா வானொலியொன்றில் இது செய்தியாக வெளியிடபடுகின்றது.திருமலையில் விடுதலைபுலிகளின் விமானதளம் அமைப்பதுக்கான கண்காணிப்பு கோபுரம் வெருகல் பிரதேசத்தில் அமைக்கபட்டு வருகின்றது என்ற செய்தி அங்கு பரபரப்பை ஏற்படுத்துகின்றது .இந்த கோபுரம் அருகில் உள்ள சிங்கள கிராமங்களுக்கும் தெரிவதால் அங்குள்ள சிங்கள மக்களுக்கும் ஊர்காவல் படையினரின் மனங்களிலும் சிறு அச்சம் ஏற்படுகின்றது .
இவ்வாறு இருக்கையில் ( 2004) ம் ஆண்டு நடுப்பகுதியில் மட்டகிளப்பு மாவட்டத்திற்கு ஒரு தொகுதி ஆயுத தளபாடங்கள் கடல்வழியாக இறக்கபடுகின்றன .கடல்புலிகளால் ஆயுதங்கள் பாதுகாப்பாக இறக்கபட்டு மட்டகிளப்பு மாவட்ட தளபதி பானுவிடம் ஒப்படைக்க படுகின்றன
வன்னியில் இருந்த ஆயுத பயிற்சி ஆசிரியர்கள் நிர்வாக திறன்மிக்க போராளிகள் தாக்குதல் வியூகங்களை வகுக்கும் தளபதிகள் இரகசியமாக திருகோணமலை மாவட்டத்திற்கு மட்டகிளப்பு மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கபட்டு பயிற்சி வகுப்புங்கள் நிர்வாகம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள்.அங்குள்ள போராளிகளுக்கு கற்பிக்கின்றார்கள் மரபுவழி படையணிகள் கட்டி வளர்கபடுகின்றன.குறிப்பாக ஜெயந்தன் படையணி அன்பரசி படையணி .மோட்டார் படையணி என்பன சிறப்புற கட்டியமைக்க படுகின்றன.இவற்றுக்கு மத்தியில் சிறிலங்கா படையின் கட்டுபாட்டு பகுதியில் இருந்துகொண்டு செயற்படும் துரோகிகள் களையப்பட வேண்டிய அவசியம் எழுகின்றது.விடுதலைக்கு ஆதரவாக செயற்படுபவர்களை படைப் புலனாய்வாளர்களும் படுகொலை செய்துகொண்டு இருந்தமையால் இதனை தடுத்து நிறுத்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய ஒரு இறுக்கமான நிலை ஏற்படுகிறது .இதனால் இதற்காக விசேட அணியொன்று பிஸ்டல் குருப் என்ற பெயரில் இரகசியமாக உருவாக்கபடுகின்றது .தமிழ்ழீழ விடுதலைக்காக துரோகத்தனங்களில் ஈடுபட்ட துரோகிகள் படைப்புலனாய்வளர்கள் இக்குழுவின் இலக்கிற்குள் அகப்பட்டுகொள்கின்றார்கள்.இரு பகுதிக்கும் இடையே ஒரு மறைமுக மோதலாக இது இடம்பெற்று கொண்டிருக்கிறது.இந்த நிலையில்தான் ( 2004)ம் ஆண்டு (12)ம் மாதம் ( 26 ) ம் நாள் சுனாமி தமிழீழ கரையெங்கும் தாக்குகின்றது.திருகோணமலையில் விடுதலைபகுதியில் நிர்வாக பகுதியான சம்பூரதொடக்கம் வாகரை மாங்கேணி கடற்கரை வரை தாக்கிய சுனாமியால் ஆயிர கணக்கான மக்கள் காவுகொள்ளபடுகின்றனர்.மக்களின் உடைமைகள் அளிக்கபடுகின்றன இதன்போதும் வாகரையில் விடுதலைபுலிகளின் சிலதளங்கள் பாதிப்படைகின்றன.குறிப்பாக அங்கிருந்த மோட்டார் தளங்களில் கடல் தாக்கம் ஏற்படுகின்றது.இந்த பாதிப்பிற்குள் தளபதி பால்ராஜ் உள்ளகின்றார் .
இதனை தொடர்ந்து திருமலையில் மக்களை மீள்கட்டுமானம் செய்யும் பணிகளில் விடுதலை புலிகளின் நிர்வாக கட்டமைப்புகள் செயற்படுகின்றன.கொல்லபட்ட மக்களின் உடலங்களை எடுத்து அடக்கம் செய்யும் மக்களுக்கான இருப்பிட வசதிகள் உணவு வசதிகள் என்பனவற்றை ஏற்படுத்திகொள்ளும் பணிகளில் ஈடுபடுகின்றார்கள்.இதே வேலை இந்த சுனாமியால் படையினரின் வளங்களும் பாதிக்கபட்டு அவர்களின் போர் முனைப்புக்கள் தமதம்மடைகின்றன .போர் ஒன்றை சிறிலங்கா இராணுவம் ஆரம்பிக்க முடியாத நிலையை இந்த சுனாமி ஏற்படுத்தியது .(தொடரும்)


உறவுகளே உங்களின் கருத்துக்கள் விமர்சனங்களை தவறாமல் பதியுங்கள் ..அத்தோடு இந்த வலைப்பூவில் இணைந்து உங்கள் ஆதரவுகளை கொடுங்கள் ..உங்கள் ஆதரவுகளோடு எமது பயணம் தொடரும்

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை