வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Monday, October 24, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-28

புலிகளின் ஒவ்வொரு தாக்குதலுக்கு பின்பும் ,சிறிலங்கா படையினரின் தாக்குதல் விமானங்கள் நாடு இரவு நேரங்களில் கூட வன்னி வந்து விடுதலை புலிகளின் விமானபடைத்தளம் இருப்பதாக கருதிய இரணைமடு பகுதி மீது வெளிச்சக்குண்டுகளை வீசி ஒளி பாச்சிவிட்டு தாக்குதலை நடத்திவிட்டு சென்றன.கொழும்பில் அமைச்சர்கள் இனிமேல் வான்புலிகள் வாலாட்ட முடியாது மேலேறினால் கிளிரங்க முடியாது என எச்சரித்து கொண்டிருந்தனர்.ஆனாலும் வான்படையினரின் தாக்குதலுக்கு மத்தியிலும் அமைச்சர்களின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் திருகோணமலை யாழ்ப்பாணம் மன்னார் ,கொழும்பு என வான் புலிகளின் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடந்துகொண்டுதான் இருந்தன .எத்தனை முறை தாக்குதல் நடத்தியும் வான்புலிகள் மேலெழுந்து வருவது சிங்கள தரப்பிற்கு மேலும் அச்சத்தை அதிகரித்தது.எங்கிருந்து வருகிறார்கள் ?
எங்கே சென்று மறைகிறார்கள் என்பதை கண்டறிந்துகொள்ள முடியாமல் மனமுடைந்து போகுமளவுக்கு சிறிலங்கா வான்படை திகழ்ந்தது.வானில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு குருவி பறந்தால் கூட சந்திரனைபார்த்து குரைத்த நாயைப்போல் படையினர் இலக்குகள் இன்று வேட்டுக்களை தீர்த்து தள்ளினார்கள்.

ஒரு கட்டத்தில் இரணைமடுவில் தாக்குதல் நடத்துவதை விமான படையினர் தவிர்த்துவிட்டு முல்லைத்தீவு புதுக்குடியிருக்கு என வேறு பகுதிகளில் வான் புலிகள் இருப்புக்களை தேடி வெளிச்சக்குண்டுகளை தேடி தாக்குதல்களை நடத்த தொடங்கினார்கள்.இதனால் பொதுமக்களுக்குத்தான் இழப்புக்கள் அதிகம் ஏற்பட்டன.அத்துடன் வன்னி வான்பரப்பில் சிறிலங்கா படையின் வேவு விமானங்கள் (24 ) நேரமும் விடுதலைபுலிகளின் நடமாட்டத்தை கண்காணித்து கொண்டிருந்தன.அது வழங்கும் தகவல்களை கொண்டு சிறிலங்கா வான்படை இடைவிடாத தாக்குதல்களை நடத்திக்கொண்டு இருந்தது .அத்துடன் தரை வழியாகவும் தனது புலனாய்வாளர்கள் தனக்கு தகவல் தருபவர்களை கொண்டு வன்னியின் நிலைமைகளை அறிந்துகொண்டு இருந்தது.இந்தநிலையில் தான் ( 01-11-2007 ) அன்று வான்புலிகளை கவுரவிக்கும் நிகழ்வொன்றில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் கலந்துகொண்டு வான் புலிகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்திருந்தார் ,விடுதலை புலிகளின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்த முக்கிய நிகழ்விற்கு விடுதலைபுலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களும் சென்றுவிட்டு கிளிநொச்சி தொண்டைமனகரில் உள்ள தனது முகாமிற்கு அன்றிரவே சென்று அந்த செய்தியினை உடகங்களுக்கு வழங்கிவிட்டு தனது செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்,சு ப .தமிழ்செல்வனின் இந்த முகாம் (எ ) வீதியிலிருந்து (100 ) மீற்றர் தொலைவில்தான் இருந்தது.இவரது முகாம்தான் என்பதை சிறிலங்கா ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தது ,விருதுவழங்கும் விழாவில் கலந்துகொண்டுவிட்டு வந்திருந்த இவரது முகாமில் அன்று இரவு வாகன நடமாட்டங்கள் அதிகரித்து காணப்பட்டன.இதனை வானத்தில் இருந்து வேவு விமானம் படம் எடுத்துகொண்டிருன்தது.


வாகன நடமாட்டங்களை கொண்டு அங்கு வேறும் பல முக்கிய பிரமுகர்கள் இருக்கிறார்கள் என்று சிறிலங்கா வான் படை கணித்திருக்கும்,மறுநாள் ( 02-11-2007 ) அன்று அந்த இடத்தை நோக்கி விரைந்து வந்தன சிறிலங்கா வான்படை விமானங்கள் ..வான்படை விமானங்கள் வருவதற்கு முன்பாகவே அந்த இடத்தை வேவு விமானங்கள் முற்றுகையிட்டிருந்தன.வழமைக்கு மாறான இந்த அதிகரித்த நடவடிக்கையால் அன்றைய பயிற்ச்சி நடவடிக்கையை ஒத்திவைத்துவிட்டு அருகிலிருந்த முகாமில் நாங்கள் காத்துகொண்டிருந்த போதுதான், வேகமாக வந்த விமானங்கள் தமிழ்செல்வனின் முகாமை இலக்குவைத்து காலை( 6.20 ) குண்டுகளை வீசின அந்த இடமெல்லாம் அதிர்ந்தது ஒரே புகைமண்டலமாக அந்த பிரதேசம் மாறியிருந்தது.உடனடியாகவே எல்லோருக்கும் புரிந்து விட்டது தமிழ்செல்வனின் இடத்துக்குத்தான் அடி விழுந்துவிட்டது என்பது,தாக்குதல் நடோபெர்ற இடத்திற்கு வேகமாக ஓடிச்சென்றோம் அவரது பாதுகாவலர்கள் பாதுகாப்புக்குத் தோண்டியிருந்த பதுங்குழி முற்றுமுழுதாக முடபட்டு விட்டது,அதற்குள் இருந்தவர்கள் உயிர்தப்ப வாய்பிருக்கலாம் என்று கருதி வேகமாக குழிக்குள் இருந்த மண்ணை அகற்றி மீட்க்கும் பனி தொடங்கியது,கார்த்திகை மாதம் ஈரம் படித்த மண்ணை குழிக்குள் இருந்து அகற்றுவது அவளவு இலகுவானதாக இருக்கவில்லை.இதற்கிடையில் தமிழ்செல்வனின் இடத்திற்கு அடி விழுந்துவிட்டதாம் என்ற தகவல் போராளிகள் பொறுப்பாளர்கள் மத்தியில் தகவல் பரவு உடனடியாகவே தளபதிகள் பொறுப்பாளர்கள் அவ்விடத்தை விரைந்து வந்து சேர்ந்தார்கள்,அனல் இன்னும் அவர்கள் பதுங்குகுளிக்குள் இருந்து மீட்கப்படவில்லை முடியிருந்த மண்ணை அகற்றுவது பெரும்பாடாக இருந்தது,பின்னர் இயந்திரங்கள் கொண்டுவரபட்டு காலை ( 9.00 )மணிக்குத்தான் பதுங்குழியில் இருந்த மண்ணை அகற்ற முடிந்தது,..


உலகெங்கும் சமாதனம் பேசபறந்து திரிந்த வெள்ளை புற சிறகொடிந்து அந்த குழிக்குள் விழிமுடி கிடந்தது.அதற்குள் அவருடன் இருந்த அனைவரும் சாவை தழுவியிருந்தார்கள்.செல்வம் என்ற போராளிக்கு மீதமாக இன்னும் உயிர் இருப்பது தெரிந்தது,உடனடியாக அவசரசிகிச்சை வழங்கப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துசெல்லபட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவரும் சாவை தளுவிகொள்ளுகிறார்,சமாதனத்துக்காக உலகெங்கும் திரிந்து போராடிய தமிழ்செல்வனின் இழப்பு தமிழர் மனங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது ,சமாதானத்திற்கு சிறிலங்கா வைத்த ஒரு முற்றுப் புள்ளியாகவே இது கருதபட்டது.அதுவே உண்மை என்பதை பின்னர் வந்த நாட்கள் உறுதிபடுத்தி சென்றன.சு ப தமிழ்செல்வம் மற்றும் போராளிகளின் வித்துடல் தளபதி போராளிகள் பொறுப்பாளர்கள் மக்கள் அன்சளிக்காக வைக்கபட்டு கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் விதைக்கபடுகின்றது,இவரது வீர வணக்க இறுதி நிகழ்வு கிளிநொச்சியில் பெருமெடுப்பில் நடைபெற்று கொண்டிருந்த போதே சிறிலங்கா வான்படையின் வேவு விமானம் இவரது நிகழ்வு நடக்கும் இடத்தை சுற்றி சுற்றி வேவு எடுத்துகொண்டு இருந்தது,ஆனாலும் அத்தனை தளபதிகள் போராளிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமிழ்செல்வனுக்கு இறுதிவிடை கொடுத்தனர்,கிபீர் மிக விமானங்கள் இரணைமடு பகுதிகள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டு இருந்தன,சிறிலங்கா விமானபடையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில்தான் சு ப தமிழ்செல்வனின் வித்துடல் முழுப்படைய மதிப்புடன் விதைக்கபடுகின்றது,சு ப தமிழ்செல்வனின் சாவுக்கு போரை விரும்பியது சிறிலங்கா அரசுதான் காரணம் என சொல்லபட்ட காரணங்களை ,இல்லை சர்வதேச நாடுகள்தான் காரணம் என அடுத்து வந்த நாட்கள் உடைத்து போட்டன( தொடரும் )..


**********************************************************************************
உங்கள் கருத்துக்களையும் உங்கள் விமர்சனங்களையும் தவறாமல் பதியுங்கள் உறவுகளே ..அத்தோடு இங்கு உள்ள >>>(((( இதை பின் தொடர்ந்து நீங்களும் எம்மோடு சங்கமித்து கொள்ளுங்கள் உறவுகளே . (Followers ))))<<< இதை தொடர்ந்து எண்கள் குழுமத்துடன் சங்கமித்து கொள்ளுங்கள் உறவுகளே

**********************************************************************************

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை