வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Monday, October 10, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-14


கட்டினை சுற்றி இராணுவ முற்றுகை இறுக்கத்தினால் உணவு பிரச்சனை வெடிபொருள் பற்றாக்குறை என்பன போராளிகளுக்கு நெருக்கடிய கொடுத்துக்கொண்டு இருந்தன.அத்துடன் காயமடைந்த போராளிகள் போதிய மருத்துவ வசதியின்றியும் இருந்தார்கள்.ஒரு போராட்டத்தில் இருக்கும் இந்த சாதாரண பிரச்சனைகளுக்கு கூடமுகம்கொடுக்க முடியாமல் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல் தங்கள் வீடுகளுக்கு செல்ல போவதாக புதிதாக இணைந்திருந்த போராளிகள் சிலர் குற தொடங்கினார்கள்.
இது போராளிகளுக்கு இடையில் முரணை அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.எனினும் இந்த பிரச்சனை தளபதி ராம் அவர்களுக்கு எடுத்து சொல்லபட்ட போது அப்போரளிகளுக்கு போராட்டத்தின் அவசியமும் தேவையும் எடுத்து சொல்லபட்டது.இறுதியில் போராளிகள் போராட்டத்தின் தேவையா உணர்ந்து தங்கள் எண்ணங்களை மாற்றிகொள்கிறார்கள்.
எனினும் அம்பாறையில் படையினரின் நடவடிக்கைகள் அதிகரிக்கபட்டு அதன் பின்னர் காலத்திலும் அம்பாறை கட்டினுளும் விடுதலை புலிகளின் நடவடிக்கைகள் முடக்க படுகின்றன.இத்துடன் கிழக்கில் விடுதலைபுலிகளின் நடவடிக்கை முழுமையாக முடிவிற்கு வருகிறது.கிழக்கு மாகாணம் முழுமையாக சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் செல்கிறது.கிழக்கு மீட்கப்பட்டு விட்டதாக சிறிலங்கா வெற்றி கொண்டாட்டங்களை கொண்டாடி மகிழ்ந்தது.
கிழக்கின் அபிவிருத்தி என்ற பெயரில் பிள்ளையான் போன்றவர்களை வைத்துகொண்டு சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளவும் பொவுத்த மதசின்னங்களை நிறுவுவதற்கு வழிகளை சிறிலங்கா அரசு ஏற்படுத்தி கொண்டது.இப்போதும் தொடர்ந்து அதனையே செய்துகொண்டு உள்ளது அத்துடன் மாவீரர்களின் துயிலுமில்லங்கள் அளிக்கபட்டுவிட்டன.தமிழர்களின் வீர வரலாற்று சின்னங்கள் அனைத்தும் அளிக்கபட்டு விட்டன.இவை எல்லாவற்றையும் தமிழ் ஓட்டுகுளுக்களான பிள்ளையான் கருணா குழுக்களை தமது பிரதிநிதிகளாக வைத்துக்கொண்டே சிறிலங்கா அரசு நடத்தி முடித்தது.கலையும் விழாக்களும் என களைகட்டியிருந்த கிழக்கு இன்று இருள் சுழ்ந்துபோய் கிடக்கிறது நாளை விடியும் என்ற நம்பிக்கையுடன்.
கிழக்கு மண் முழுவதும் இலக்கபட்டபோது வன்னியில் விடுதலை புலிகளின் அரசியல் பணிகள் தொடர்ந்து செயற்பட்டுக்கொண்டு இருந்தன.அதாவது போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினருடனான சந்திப்பு போன்ற செயற்பாடுகளில் விடுதலைப்புலிகள் தொடர்ச்சியாக ஈடுபட்டுகொண்டிருந்தனர்.அதே வேளை கிழக்கினை இழப்பதற்கு முன்பாகவே (26.03.2007 ) அன்று வான் புலிகள் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீதான தாக்குதல் முலம் அறிமுகபடுத்தியிருந்த விடுதலைப்புலிகள் தங்கள் வான் தாக்குதலை மேலும் அதிகரிந்து இருந்தார்கள்.அனால் சமாதன காலத்தை பயன்படுத்தி விடுதலைப்புலிகள் தங்கள் வான்படைய உருவாக்கி விட்டார்கள் என்று குச்சல் இட்டது சிறிலங்கா.சமாதன காலத்தில் விடுதலைபுலிகளின் பகுதிகளுக்கு சமாதன துதர்களையும் பேச்சுவார்த்தைக்கு சென்ற தளபதிகளையும் ஏற்றி சென்று வந்த சிறிலங்கா படையின் உலங்குவானுர்த்திகள் அந்த சந்தர்ப்பத்தை தமது புலனாய்வுக்கு பயன்படுத்திகொண்டன.விடுதலை புலிகளின் தாக்குதல் இடம்பெற மாட்டாது என்ற துணிவால் வன்னிக்கு பறப்புகளை மேற்கொண்ட சிறிலங்கா

வான்படையின் உலங்குவானுர்திகள் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி தாழ்வாக பறந்து இரணைமடு பகுதியில் உள்ள விடுதலைபுலிகளின் விமான தளத்தினை கண்காணித்து ஒளிப்படங்களையும் எடுத்திருந்தனர்.விடுதலை புலிகள் விமானத்தளம் விமானங்களை வைத்திருப்பது உறுதிபடுத்திய பின் சமாதன காலத்தை பயன்படுத்தி விடுதலை புலிகள் தங்கள் விமானபடைய கட்டியமைத்துவிட்டது போன்று அதனை பெரும் பிரச்சனைக்குரிய போர்நிறுத்த மீறலாக மாற்றி சர்வதேச ரீதியாக பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தது மஹிந்த அரசு.
அனால் உத்தியோகபுர்வமாக அறிவிக்கபடாத போதும் ( 1998 ) ம் ஆண்டு மாவேரர் தினத்தன்று முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் மீது மலர்துவியதன் உடாக தங்களிடம் விமான படையினர் இருப்பதை விடுதலை புலிகள் உருதிப்படுத்தி கொண்டிருந்தார்கள் அப்போது விடுதலை புலிகளின் விமான படைக்கு கேணல் சங்கர் அவர்கள் பொறுப்பாக இருந்தார்.முல்லைத்தீவு வற்றாப்பளை நந்திக்கடல் வெளிப்பகுதியில் விமானத்தை வைத்து வான் புலிகள் பயிற்ச்சியில் ஈடுபட்டார்கள்.பின்பு வேறுசில இடங்களிலும் விமானத்தளங்கள் விடுதலைபுலிகளால் அமைக்கபட்டன.
சமாதன காலத்திற்கு முன்னரே விடுதலைபுலிகளின் படைகட்டுமான வளர்ச்சி உயர்வடைந்தே இருந்தது.சமாதன காலத்தை பயன்படுத்திதான் புலிகள் படைவலுவை அதிகரித்தார்கள் என்பது சிறிலங்கா அரசின் பொய் பிரச்சாரமே.(1998,1999 ) ஆண்டு காலப்பகுதியிலே முல்லைத்தீவு நந்திக்கடல் வெளியில் கிளைடர் ரக விமானம் முலம் பயிற்ச்சி பெற்ற வான்புலிகள் பின்பு தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்தும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்கள்.இதற்கமைவாகவே விமானதளத்திற்கு இசைவான மத்திய நிலையமாக இரணைமடு பகுதி தேர்ந்தேடுக்கபட்டிருன்தது.அதாவது இரணைமடு குளத்தின் மேற் பகுதியை எல்லையாக கொண்டு விமான தளம் அமைக்கபட்டு இருந்தது.விமான தளத்திற்கு பாதுகாப்பாக வடக்கு பக்கமாக இருந்த இரணைமடு குளக்கட்டு பகுதிக்கருகில் விடுதலை புலிகளின் பயிற்சி தளங்கள் அமைக்கபட்டு இருந்தன.
இதனைவிட இப்பிரதேசங்களின் பாதுகாப்பிற்காக விமானதளத்திற்கு அருகிலிருந்த கிராம பகுதிகளில் விடுதலைபுலிகளால் தேர்வுசெய்யபட்ட மாவீரர் போராளி குடும்பங்கள் குடியமர்த்தபட்டு அவர்களுக்கு அப்பிரந்தியமும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் அதன் பாதுகாப்பு தொடர்பாக வலியுறுத்த பட்டிருந்தது.புதிதாக நடமாடுபவர்கள் தொடர்பாக விழிப்புணர்வுடன் செயல்படுமாறு மக்களுக்கு வலியுறுத்தபட்டு உடனுக்குடன் தகவல் அறிவிக்கும் ஏற்பாடுகளும் அவர்களுக்கு செய்துகொடுக்க பட்டிருந்தன.
சிறகு பொறுக்க காடுமரம் வெட்ட என இப்பகுதி காடுகளுக்குள் யாரும் நுழைய வேண்டாம் என்று விடுதலைபுலிகளால் மக்களுக்கு அறிவிக்க பட்டிருந்தது.அத்துடன் காட்டினும் சில இடங்களில் வட்ட தகரத்தில் எழுதப்பட்ட எச்சரிக்கைகள் மரங்களில் அடிக்கபட்டிருன்தது.இதனை கருத்தில் கொண்டு வேறுபகுதி மக்களும் குறிப்பிட்ட பகுதி காடுகளுக்குள் நுழைவதில்லை.விமான தளத்தின் கிழக்கு பக்கமாக பெரும் காடு காணப்படுகிறது.அதாவது கொய்யகுளம் முத்தையன் கட்டு பெரும் தொடர் காட்டினை மைய்யமாக கொண்டு விமானதளத்தின் பாதுகாப்புக்காக முகாம்கள் பயிற்ச்சி தளங்கள் நிறுவப்பட்டு அதன் பாதுகாப்பு உடாக சுற்று ரோந்து பணிகள் மேற்கொள்ளபட்டு நாள்தோறும் பாதுகாப்பு மணிக்கொரு தடவை உறுதிபடுத்த பட்டுக்கொண்டு இருந்தது.இதே போன்றுதான் தென்பகுதியில் அம்பகாமம் கரிப்பட்ட முறிப்பு தொடர் காட்டினை மையமாக கொண்டு ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியின் பாதுகாப்பு உறுதிபடுத்தல் உடாகவும் அம்பகாமம் காட்டில் பாரிய பயிற்சி தளங்கள் அமைக்கபட்டு முகாம்கள் உடாகவும் பாதுகாப்பு பலப்படுத்த படுகிறது.மேற்காக ஏ ,னையின் வீதிய மையமாக கொண்டு இரணைமடு முருகண்டி கொக்காவில் (18 ) ம் போர்குற்றம் போன்ற இடங்களில் காட்டு பகுதிக்குள் முகாம்கள் அமைத்து பாதுகாப்புடன் நடவடிக்கை செயற்பாடுகளும் நடைபெறுகின்றது.இதற்கிடையில் இரணைமடு குளத்தில் படகில் சென்று அடிக்கடி கண்காணிப்பும் நடைபெறும்.இவ்வாறுதான் இரணைமடு விமான தளத்தின் பாதுகாப்பு விடுதலைபுலிகளால் மேற்கொள்ளபட்டது.அம்பகாமம் முத்தையன் கட்டு வனப்பகுதி விசுவமடு வனப்பகுதி கல்மடு வனப்பகுதி இவைகள் எல்லாம் அன்று விடுதலை புலிகளின் பயிற்ச்சி தளங்கள் நிறைய பெற்ற இடமாகவும் படையணிகளின் முகாம்கள் அமையபெற்ற இடமாகவும் ஆயுத களஞ்சியங்கள் இருப்பிடமாகவும் அதாவது ,வெடிபொருள் பகுதி ,ரவை பகுதி, துப்பாக்கி பகுதி, கனரக ஆயுத, பகுதி என்று பல பகுதிகளாக செயற்பட்ட இடங்கள் இங்கு உண்டு.அதே போல விடுதலைபுலிகளின் சில வெடிபொருள் உற்பத்தி செய்யும் பட்டறைகள் கூட இங்கு காணப்பட்டன.அதாவது கைக்குண்டு உற்பத்தி எறிகணை உற்பத்தி , படகு உற்பத்தி என பல்வேறு பகுதிகள் பல்வேறு இடங்களில் கானபட்டன.இவ்வாறு குறிப்பிட்ட வனப்பகுதிகள் விடுதலைபுலிகளின் இராணுவ மயமாக்கபட்ட பகுதியாகவே காணப்பட்டது.இவற்றுள் காடுகளை குடைந்து புதிய புதிய வீதிகள் அமைக்கபட்டன நடைபாதை வாகன பாதை என பல்வேறுபட்ட வீதிகள் அமைக்க பட்டு போக்குவரத்துக்கள் நடைபெற்றது.அதாவது சாதாரணமாக சொல்லுவதனால் விசுவமடு வனத்துக்குள் நுழைந்தால் முத்தையன்கட்டு அம்பகாமம் செல்லகூடிய அளவில் பாதைகள் அமைக்கபட்டு இருந்தன.இவற்றின் உடகத்தான் இரணைமடு விமானதளத்தின் பாதுகாப்பு உறுதிபடுத்த பட்டிருந்தது.இந்த இரணைமடு தளத்தை விடுதலை புலிகள் நீண்ட விமானத்தளமாக மாற்றி ( 2006 ) ஆண்டு காலப்பகுதியில் பயிற்ச்சியில் எடுபட தொடங்கியிருந்த போதுதான் விடுதலை புலிகளின் விமானங்கள் வானில் பறப்பதை மக்கள் அறிந்துகொள்ள தொடங்குகிறார்கள்.வான் புலிகள் அணி பிறந்துவிட்ட நம்பிக்கை மக்களிடையே பரவலாக காணப்பட தொடங்கியிருந்தது ( தொடரும் )


உறவுகளே உங்களின் கருத்துக்கள் விமர்சனங்களை தவறாமல் பதியுங்கள் ..அத்தோடு இந்த வலைப்பூவில் இணைந்து உங்கள் ஆதரவுகளை கொடுங்கள் ..உங்கள் ஆதரவுகளோடு எமது பயணம் தொடரும்

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை