வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Sunday, October 16, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-20

விடுதலை புலிகளின் கடற்படை தளங்கள் வடமராட்சி கிழக்கு பகுதியிலையே அதிகளவில் செயற்பட்டு கொண்டிருந்தன.வடமராட்சி கிழக்கில் சுண்டிக்குளம் வெற்றிலைக்கேணி ,கட்டைக்காடு கோவில் ,தாளையடி ,போன்ற பகுதிகளில் கடற்புலித்தளங்கள் செயற்பட்டு கொண்டிருந்தன.இந்த பகுதிகள் மீது வேவு விமானங்கள் கண்காணிப்பை மேற்கொண்ட சிறிலங்கா,காலி துறைமுக தாக்குதலின் பின் இத் தளங்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது.அத்துடன் முல்லைத்தீவில் இயங்கிகொண்டிருந்த சாலை கடற்புலிகளின் தளங்கள் மீது தனது தாக்குதலை கடுமையாக நடத்தியிருந்தன.இதன்போது கடற்புலிகளின் கலங்கள் சிலவும் ,களஞ்சியங்கள் மற்றும் படகுகளும் சேதமடைந்தன.வடமராட்சி கிழக்கில் கடற்புலிகளின் எரிபொருள் களஞ்சியம் ஒன்றும் விமான தாக்குதலுக்கு இலக்காகி தீப்பற்றி எரிந்தது.
படையினரின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு மத்தியிலும் கடற்புலிகளின் பலம் பெருகிக்கொண்டுதான் இருந்தது.புதிதாக இணைந்த போராளிகள் சிலர் பயிற்சிகளை நிறைவுசெய்து இருந்தனர்.
அதிகரித்திருந்த பலத்தினை கொண்டு புதிய படையணிகள் உருவாக்க பட்டன.அதில் முக்கியமானது கடற்புலிகளின் ஈருடக படையணி.கடற்புலிகளின் சிறப்பு தளபதி சூசை அவர்களின் மேற்பார்வையில் கடலிலும் தரையிலும் சென்று தாக்க கூடிய வல்லமை படைத்த சகல ஆயுதங்களையும் கையாளத்தக்க வகையில் ஈருடக படையணி உருவாக்கம் பெற்றிருந்தது.இந்த அணியின் பரீச்சித்த களமாகவும்முதல் களமாகவும் மண்டைதீவு அமைந்திருந்தது.(2006 ) ம் ஆண்டின் இறுதி காலப்பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்று இருந்தது.இதன் பின்னர் ( 2007 ) ம் ஆண்டு மே மாதம் (27 ) ம் திகதி மேற்கொள்ளபட்ட நெடுந்தீவு கடற்படை தளம் மீதான தாக்குதல் இவர்களின் முதல் வெற்றிகரமான தாக்குதலாக கொள்ளமுடியும்.

ஆழ கடற்பகுதியில் கடற்படையினருக்கு மிகவும் சாதகமாக இருந்த நெடுந்தீவின் இரு பெரும் கடற்தளங்களில் ஒன்றான தென்பகுதி தளமான குயின்ரக் தளத்தை விடுதலைபுலிகளின் ஈருடக படையணியினர் முற்றாக தாக்கியளித்து இருந்தனர்.ஆதாவது புநகரி கடற்கரை பகுதியை தளமாக கொண்டு சுமார் முப்பது கிலோ மீற்றர் தொலைவிற்கு அப்பால் நெடுந்தீவு கடற்படை தளத்திற்கு சென்று தாக்குதல் நடத்திவிட்டு மீள திரும்பி வருவதென்பது ஆச்சரியத்துக்குரிய விடையம் ,சாதனைக்குரிய விடையமாகவும் இருந்தது.எனினும் அவ்வளவு துரத்திற்கு சென்று தாக்குதலை நடத்தியதுடன்.சுமார் இரண்டு மணிநேர கடும் சமரின் பின்னர் முகாமை தமது முழுமையான கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து அதனை முழுமையாக அழித்திவிட்டு திரும்பியிருந்தனர்.
இத்தாக்குதலை முறியடிப்பதற்காக காங்கேசன்துறை மற்றும் காரைநகர் கடற்படை தளங்களிருந்து டோரா மற்றும் நீருந்து விசைப்படகுகளில் சிறிலங்கா கடற்படையினர் பெருமளவில் உதவிக்கு வந்தபோதும் கடலில் இவர்கள் மீது மேற்கொள்ளபட்ட வழிமறிப்பு தாக்குதலால்.டோரா ஒன்றும் நீருந்து இரண்டு விசைப்படகுகளும் சேதமடைய தமது இலக்கினை அடையமுடியாமல் கடற்படையினர் திரும்பி சென்றனர்.சுமார் நாற்பது வரையான கடற்படையினர் கொல்லபட்ட இத் தாக்குதலில் விடுதலை புலிகள் தரப்பில் நான்கு போராளிகள் வீரச்சாவை தழுவிக்கொண்டனர்.அத்துடன் பெருமளவு ஆயுத தளபாடங்கள் பெருமளவில் கைப்பற்ற பட்டன.இந்த தாக்குதலின் பின்னர் ஈருடக படையினரின் முக்கிய தாக்குதலாக சிறுத்தீவு தாக்குதலை கொள்ள முடியும்.நெடுந்தீவு கடற்படை தளம் அழிக்கபட்டு சரியாக ஓராண்டில் இத்தாக்குதல் நடத்தபட்டு இருந்தது.யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுத்தீவு யாழ்குடாவில் மக்கள் வசிக்காத தீவுகளில் ஒன்றாக இருக்கின்றது.
எப்போதும் குறிப்பிட்டளவு கடல்நீர் நிற்கும் இத்தீவில் கடல் கண்காணிப்புக்காக சிறிலங்கா படையினர் பலமான முகாம் ஒன்றை அமைத்திருந்தனர்.யாழ்ப்பாணத்துக்கான கடல்வழியான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தளமாக இருந்த இத்தீவினை சுற்றி பலத்த கண்காணிப்பு போடபட்டு இருந்தது.


இத்தீவை சுற்றி முள்கம்பி வேலிகள் அமைக்கபட்டு இருந்ததுடன் ராடர் அவதானிப்புக்களும் காவல் நிலைகளும் அமைக்கபட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டு இருந்தது.அத்துடன் இதற்க்கு மிக அருகாமையில் இருந்த மண்டைதீவில் சிறிலங்கா படையினரின் பாரிய வேலுசுமண தளம் அமைந்திருந்தது.இதிலும் ராடர் தளமும் கடற்கலங்களின் தளமும் அமைந்திருந்தது.யாழ் கடல் நீரேரியின் முழுமையான பாதுகாப்பை இந்த இரு தளங்களும் தான் உறுதிப்படுத்து வந்தன.எனவே சிறுத்தீவு மீது தாக்குதல் நடத்தினால் மண்டைதீவில் இருந்து படையணிகள் உதவிக்கு வருவது மிக இலகுவாக இருந்தது.அத்துடன் யாழ்குடாவில் நிலைகொண்டிருக்கும் படையினரும் எறிகணை தாக்குதல் முலம் நடவடிக்கைய மேற்கொள்ளவும்.உதவிக்கு விரைந்து வரவும் இந்த முகாமிற்கு வசதியும் இருந்தது.இதனால் இம் முகாம் மீது தாக்குதல் என்பது நெடுந்தீவு மீதான தாக்குதலை விடவும் ஆபத்து நிறைந்ததாக கருதப்பட்டது.எனினும் துணிவு .தந்திரம் ,வேகம் ,.என்னும் தலைவரின் தாரக மந்திரத்தின் அடிப்படையில் (2008 ) ம் ஆண்டு மே மாதம் (29 ) ம் திகதி அதிகாலை கடற்படை தளம் மீது தாக்குதல் தொடுக்க பட்டது.நெடுந்தீவு சிறுத்தீவு மீதான தாக்குதலுக்கான திட்டங்களை கடற்புலிகளின் சிறப்பு தளபதி சூசை அவர்களே நேரடியாக நெறிப்படுத்தினார்.
விடுதலை புலிகளின் ஈருடக படையணியின் சிறப்பு கொமாண்டோ அணியினர் அதிவேக தாக்குதல் ஒன்றை தொடுத்து முகாமின் தடைகளை உடைத்து கொண்டு வேகமாக உள்நுளைந்தனர்.சுமார் அரை மணி நேரத்தில் படையினருக்கு இழப்புக்களை ஏற்படுத்தி தளத்தை முழுமையான கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

இதன்போது ( 13 ) சிறிலங்கா கடற்படையினர் கொல்லபட்டனர் பலர் காயங்களுடன் தப்பியோடி இருந்தனர்.சில மணி நேரங்கள் முகாமை கட்டுபாட்டுக்குள் வைத்திருந்ததுடன் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த ராடர் மற்றும் ஆயுத தளபாடங்களுடன்.முன்று கடற்படையினரின் உடலங்களையும் கைப்பற்றி கொண்டு முகாமை தகர்த்துவிட்டு சிறப்பு அணியினர் தளம் திரும்பினர்.இத்தாக்குதலின் போது விடுதலை புலிகளுக்கு எந்தவித இழப்புக்களும் ஏற்படவில்லை.என்பது இங்கு குறிப்பிட தக்கது.
எனினும் சிறுத்தீவு மீதான தாக்குதலால் ஆத்திரமடைந்த படையினர் தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகள் அங்கிருந்து வெளியேறி யாழ் குடாவிற்கு சென்றிருக்கலாம் என்ற அச்சமும் காரணமாக தமது கட்டுபாட்டு பகுதிகளில் உள்ள குருநகர் பாசையூர் பகுதிகளை இலக்குவைத்து கடும் எறிகணை தாக்குதல்களை நடத்தினார்கள்.இதன்போதும் ஐந்து பொதுமக்கள் கொல்லபட்டும் ( 13 ) பேர் படுகாய பட்டனர்.மண்டைதீவு நெடுந்தீவு சிறுத்தீவு என கடற்புலிகளின் ஈருடக படையணியின் வெற்றிகர தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டு இருந்தன.குறைந்த அளவு போராளிகளுடன் பெரும் வெற்றிகளை தேடித்தரும் தாக்குதல்களாக ஈருடக தாக்குதல்கள் அமைந்திருந்தன.இது கடற்புலிகளின் பலத்தை நீருபிக்கின்றதும் சிறலங்கா கடற்படையினருக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றதுமான தாக்குதல்களாக தொடர்ந்துகொண்டு இருந்தன.இதேவேளை சிறுத்தீவு தாக்குதலுக்கு ஒருசில தினங்களுக்கு முன்பாகத்தான் விடுதலைப்புலிகள் வரலாற்றில் பெரும் இழப்பொன்ரை சந்தித்து இருந்தார்கள்.அது குறித்து அடுத்த வாரம் பார்ப்போம் (தொடரும் )

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை