வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, October 20, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-24

அப்பைய அண்ணா விடுதலைபுலிகளின் ஆரம்பகால உறுப்பினர் இவர் வரலாறு குறித்து விடுதலைபுலிகளின் பார்வை இவ்வாறு இருக்கிறது.(1982 ) ம் ஆண்டு காலபகுதியில் பொன்னானை பாலத்தில் வைத்து சிறிலங்கா படையினர் வாகனம் ஒன்றின்மீது போராளிகளால் கண்ணிவெடி தாக்குதல் ஒன்று நடத்தபட்டது.அனால் தாக்குதலுக்கு உள்ளன எதிரி வாகனம் மயிரிழையில் உயிர் தப்பியது.தப்பித்துக்கொண்ட எதிரிகள் போராளிகளை துரத்தியபடி அவ்விடத்தை சுழவும் சல்லடை போட்டனர்.தாக்குதலுக்காக பயன்படுத்தபட்ட மின்பிறப்பாக்கி எதிரியின் கையில் சிக்கிவிட்டது.
அதை வல்வெட்டி துறையிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்துள்ள இராசையா என்ற அப்பையா அண்ணா அன்றிலிருந்து யாழ்ப்பாணம் எங்கும் பிரபல்யமாக தேடபட்ட ஒருவரானார்.(1983 ) ம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல் வேலி தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அன்னையும் ஒருவர்.தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்த கண்ணிவெடியின் பொறிமுறைகளை சரி பார்த்து செல்லக்கிளி அம்மான் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான் .

அந்த வரலாற்று தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் ,களத்தில் ,என்னும் ஏட்டில் எழுதியவற்றை மீட்டிபற்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.(1983 ) ம் ஆண்டு யூலை மாதம் (21 ) ம் நாள் இரவு (11.00 ) மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறிலங்கா படையினர் மீது ஒரு கண்ணிவெடி தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட வாகனமொன்றில் தேசியத்தலைவர் அவர்களும் அவருடன் செல்லக்கிளி அம்மான் ,விக்ரர் ,பொன்னம்மான் ,சந்தோசம் மாஸ்டர்,புலேந்தியம்மான் ,கருணாஸ்,ரஞ்சன் ,லிங்கம் பசீர்காக்க,நான் மற்றும் சில தோழர்களும் அடங்கிய எமது தாக்குதல் குழுவில் ஒருவராக ஐம்பது வயதை அடைந்துவிட்ட அப்பையா அண்ணரும் அங்கம் வகித்தார்.நாம் திட்டமிட்டபடி தாக்குதலுக்கான இடத்தை அடைந்ததும் எல்லோரும் வாகனத்தை விட்டு கிழே இறங்குகிறோம்,அடுத்ததாக அங்குள்ள ஒரு இடத்தில் கண்ணிவெடி தொகுதியை புதைக்கவேண்டும் அப்பையா அண்ணரும் ,செல்லக்கிளி அம்மானும் ,விக்ரரும்,கண்ணிவெடிகளை புதைக்க ஆரம்பிக்கின்றனர்

கண்ணிவெடியை புதைப்பதென்பது ஒரு பெரிய வேலை அதாவது கரடுமுரடான தார் ரோட்டில் பிக்கானால் கிடங்கு வெட்டுவது என்பது மிகவும் கடினமான வேலை .அதிலும் கண்ணிவெடி தொகுதிகளுக்கான மருந்தை அடைப்பதென்பது அதைவிட பெரிய வேலை.ஏனெனில் வெடிமருந்துகள் ஆபத்தானவை.எல்லோருக்கும் அந்த வேலை ஒத்துவர மாட்டாது.எனவே வெடிமருந்துடன் நன்கு பழக்கபட்ட அம்மைய அண்ணன் அந்த வேலைய திட்டத்திற்கு ஏற்ப மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானமாகவும் திறம்பட செய்து முடித்தார்.இவைக்கப்பால் அப்பையா அன்னார் எமது இயக்கத்திலையே வயது முதிர்ந்த உறுப்பினர் ஆவர்.இருந்தபோதிலும் அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் விவேகத்துடனும் சதா இயங்கிக்கொண்டு இருப்பார்.அத்தோடு எமது உள்ளூர் தயாரிப்புகளில் முக்கிய வெடிமருந்து நிபுணராகவும் அவர் விளங்கினார்.என மூத்த தளபதி கிட்டு அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார்.அதன் பின்னரான காலங்களில் இந்தியாவிற்கு பயிற்ச்சிக்கு சென்ற போராளிகளுடன் அப்பையா அண்ணையும் ஒருவராக இணைந்திருந்தார்.எப்படியாவது தானும் ஒரு இராணுவ பயிற்சிபெற்ற ஒரு வீரனாக உருவாக வேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார் .அனால் இவரது வயதை கருத்தில் கொண்ட இந்திய பயிற்சி அதிகாரிகள் அவரை ஏற்றுகொள்ள மறுத்து விட்டனர்.இருந்தபோதும் நாடுதிரும்பிய அப்பையா அண்ணார் போராளியாகவே தொடர்ந்து பணியாற்றினார்.அவரது விடுதலை பணிக்கு இராணுவ பயிற்சி என்றுமே ஒரு தடையாக இருந்தது இல்லை.ஆரம்பகாலங்களில் தாக்குதலில் பங்கெடுத்த கண்ணிவெடிகள் பல அப்பையா அண்ணையின் கரங்கள் தழுவ பெற்றவை.


வன்னி பகுதியில் நடந்த தாக்குதல்களிலும் அவர் பங்கெடுத்தார்.அப்பையா அண்ணையின் கண்டுபிடிப்பு முயற்ச்சிகள் இயக்கத்தில் பிரபலமாக பேசப்படுபவை.அவற்றில் பல களத்தில் பயன்படுத்த பட்டவையாக இருந்தும் போதும் கூட இளம்போரளிகலிடையே இத்தகைய முயற்ச்சிகளை உக்குவித்து இயக்கத்தில் அத்தகைய ஒரு மரபை வளர்த்தெடுக்கும் தலைவர் அவர்களின் என்னத்திற்கு அப்பையா அண்ணையின் அத்தகைய முயற்ச்சிகள் வாய்ப்பாக அமைந்தன.அது பின்னைய காலங்களின் இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.பிற்காலங்களில் அந்த முதிய போராளி மிகவும் இளைத்து போயிருந்தார்.எந்த பணியாற்றவும் அவரால் முடியாதிருந்தது .எமது வரலாற்றில் பெருமைக்குரியவாராக இருந்த அவர் (24-12-1997 )மல்லாவி பகுதியில் காணமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதி என்னெவென்று தெரியவில்லை.ஜெயசுக்குறு நடவடிக்கையின் மூலம் சிங்கள படைகள் வன்னியில் அகல கால் பதித்திருந்த நேரம் .வயாதால் முதிர்ந்த நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறிலங்கா படைகளின் கைகுளிகள் கடத்தி சென்றுவிட்டனர்.அன்றிலிருந்து அவரை தேடி விடுதலைப்புலிகள் வலைவிரித்திருன்தனர்.அவரது சாவை உறுதிபடுத்தி மக்களுக்கு அறிவிப்பதற்கு விடுதலை புலிகளுக்கு முன்று ஆண்டுகளுக்கு மேல் சென்றது.அனால் சாவு அறிவித்தலை ஒவ்வுருவரும் எந்த ஆதாரமும் இல்லாமல் தங்கள் எண்ணம்போல் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

அப்பையா அண்ணா எமது ஆரம்பகால செயற்பாடுகளில் சாட்சியாக இருந்தவர் .மக்களோடு மக்களாக தலைமறைவு வாழ்வில் இயக்கம் இருந்த காலங்களில் போராளிகளுக்கு பெரும் பலமாக இருந்து செயல்பட்டவர்.அன்றைய காலங்களில் கண்ணிவெடி வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று செயற்பட்டவர் .அதனாலையே அவரது பெயரில் வெடிபொருள் பயிற்சி கல்லூரிகள் ஆரம்பிக்க பட்டது.இதன்போது இந்திய இராணுவத்தால் சமாதான பேச்சுக்காக அழைத்து வரபட்டு கொல்லபட்ட லெப் கேணல் ஜொனி நினைவாக உருவாக்கபட்ட ஜொனி மிதிவெடிகள் ,தொழிற்சாலை அமைக்கபட்டு அங்கு உற்பத்தியக்கபட்டு கொண்டிருந்தன.ஏனைய நாடுகளின் மிதிவெடிகளின் வடிவமைப்புக்கு அமைவாக தாக்குதிறன் கூடிய மிதிவெடிகள் தயாரிக்கபட்டு அன்றைய முன்னணி களமுனைகள் எங்கும் விதைக்கபட்டன.விடுதலை புலிகளின் இந்த மிதிவெடிகளால் படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுகின்றன.என்று சிறிலங்கா இராணுவ தரப்பு கூறிவந்தது உங்கள் நினைவுக்கு வரலாம்.இவ்வாறுதான் மிதிவெடிகளுடன் பொறிவெடிகளும் தயாரிக்க படுகின்றன.இவை படையினர் ஏவிய செடிக்காத எறிகணைகளில் இருந்தே பெருமளவில் தாயரிக்க பட்டன.வேட்டைகாரர்களால் பயன்படுத்தப்படும் கட்டுக்குழாய் என்ற பொறிவெடி வன்னி காடுகளில் வாழ்ந்த பலரும் அறிந்தது.இதற்கமைவாக படையினர் ஏவி வெடிக்காத (60 ) மி , மீ (81 ) மி ,மீ எறிகணைகள் பொறி வெடிகளாக மற்ற படுகின்றன .அதாவது இவற்றின் முன் வெடிப்பிகளின் பொறிவெடி முறை மாற்றி அமைக்கபட்டு காடுகளுக்குள் மறைத்து வைக்கபட்டு நுல் அல்லது கம்பி கட்டபட்டு அது தட்டப்படும்போது வெடிக்கும் வகையில் எதிரியின் உள்நுளைவுகளுக்கு தடைகள் ஏற்படுத்த படுகின்றன.( தொடரும் )
**********************************************************************************
உங்கள் கருத்துக்களையும்  உங்கள் விமர்சனங்களையும்  தவறாமல் பதியுங்கள்  உறவுகளே  ..அத்தோடு  இங்கு  உள்ள >>>((((  இதை பின் தொடர்ந்து நீங்களும் எம்மோடு சங்கமித்து கொள்ளுங்கள் உறவுகளே . (Followers ))))<<< இதை  தொடர்ந்து எண்கள் குழுமத்துடன் சங்கமித்து  கொள்ளுங்கள் உறவுகளே  

**********************************************************************************

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை