
இதன் முலம் தலைவர் உரையாற்ற வருவதை தடுப்பது அல்லது அதன்போது கொல்லுவது மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகளில் மக்கள் கலந்து கொள்ளாமல் தடுப்பதும் முக்கியமானதாக இருந்தது.இந்த நிலையில்தான் சிங்கள ஊடகம் ஒன்றின் தலைப்பு செய்தியாக பிரபாகரனின் இறுதி மாவீரர் நாள் இதுவாகத்தான் இருக்கும் என்று எழுதியிருந்தது.இந்த செய்தி சில தளபதிகள் பொறுப்பாளர்கள் மத்தியில் தெரிகிறது.சிறிலங்கா அரசின் நினைப்பு எவ்வாறு அமைகிறது என்றால் தலைவர் அவர்கள் நேரடியாகத்தான் மாவீரர் நாள் உரையாற்றுவார் ,இதனை புலிகளின் குரல் உடகம்தான் ஒலிபரப்பு செய்யும் எனவே இந்த நிலையம் மீது தாக்குதல் நடத்திவிட்டால் தலைவரின் மாவீரர் நாள் செய்திகளை மக்களை சென்றடையாமல் தடுக்கலாம் என்ற எண்ணம் .சிங்களத்தின் இந்த புரிதலை புரிந்திகொண்டிருந்த விடுதலைபுலிகளின் தலைமைத்துவம் புலிகளின்குரல் பொறுப்பாளருக்கு சில நடவடிக்கைகள் குறித்து முன்னேற்பாடு மேற்கொள்ளுமாறு அறிவுறுத்த படுகிறது,
எனினும் எதுவித இடையுருகளும் இன்றி அன்று மாவீரர் நாள் நிகழ்வுகளை தாங்கியவாறு புலிகளின்குரல் தொடர்ந்து ஒலித்துகொண்டே இருந்தது ,புலிகளின் குரல் இரவு ( 8.30 ) செய்தியில்தான் புலிகளின்குரல் மீது சிறிலங்கா விமானபடையினர் தாக்குதல் நடாத்திவிட்ட செய்தியே வெளிவருகிறது.புலிகளின் குரல் மீது சிறிலங்கா வான்படை நடாத்திய முதல் தாக்குதல் இதுவல்ல (13 ) வது தாக்குதல் இதுவென்பது குறிப்பிட தக்கது இதை ஊடகத்தை அழிக்கும் செயற்பாடாக சிறிலங்கா அரசு செயற்பட்டதை கானக்குடியதாக இருந்தது,இதே வேலை அன்றைய மாவீரர் நாள் நிகழ்வில் சிறிலங்காவின் போர் வெறியை சுட்டிகாட்டியிருந்த தேசிய தலைவர் "சர்வதேசத்தின் மீது குற்றசாட்டு ஒன்றை நேரடியாகவே சுமத்தினார்.அது தமிழ்செல்வனின் சாவு குறித்து தனது உரையில் "சமாதனத்துக்காக உழைத்த எமது தவப்புதல்வன் தமிழ் செல்வனை சர்வதேசம் சமாதனம் பேசியே சாகடித்திருக்கிறது"என்று குற்றம் சாட்டியிருந்தார் .அமைதி பாதையில் பயணித்த எமது விடுதலை இயக்கத்தின் இதய துடிப்பு வலுக்கட்டாயமாக இழுத்து நிறுத்தியிருக்கிறது.எமது இதயங்களில் இலட்சிய நெருப்பை மூட்டி மறைந்த மாவீரருக்கு ஆண்டுதோறும் விளக்கு ஏற்றும்போது எப்போதும் என்னருகில் இருந்த அன்பு தம்பி தமிழ்செல்வனுக்கும் சேர்த்து இம்முறை என்கையால் ஈகைசுடறேர்ரும் நிலைமையை சர்வதேசம் உருவாக்கி இருக்கிறது.உலகத் தமிழினத்தையே கண்ணீரில் கரைத்து கலங்கியல வைத்திருக்கிறது..
சிங்கள தேசத்தின் சமாதன விரோத போக்கை போர் வெறியை உறுதியோடு கண்டித்திருந்தால் தமிழ்ச்செல்வன் இன்று உயிரோடு இருந்திருப்பான் சமாதானத்திற்கு இப்படியொரு பேரிடி விழுந்திருக்காது,சமாதானத்தின் காவலர்களாக வீற்று இருக்கும் இணைத்தலைமை நாடுகளும் இந்த பெரும் பொறுப்பிலிருந்து தவறியிருக்கின்றன:"என்று சர்வதீசத்தின் மீது தமிழ்செல்வனின் சாவுக்கான குற்றசாட்டை சுமத்தியிருந்தார்.இதே வேளை வன்னியில் விடுதலைபுலிகளின் முகாம்கள் சிறிலங்கா படைகளின் வான்படை தாக்குதல்களுக்கு இலக்காகி கொண்டிருந்தன,மிக நவீன கண்காணிப்பு சாதனங்களுடன் வன்னியை கண்ணில் எண்ணையை விட்டு பார்த்துகொண்டிருந்த சிறிலங்கவிர்காக பார்த்துகொண்டிருந்த வேவு விமானங்களும் விண்வெளிக் கண்களுக்கும் மண்ணை தூவிவிட்டு அனைத்து காரியங்களையும் செய்வது சாத்தியமல்ல,சில நடவடிக்கைகள் நகர்வுகள் அவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கவே செய்யவேண்டிய நிலை ,இந்த நிலையில் தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்களின் பாதுகாப்பு கேளிவிக்குறியகிறது.பொறுப்பாளர்கள் தளபதிகள் எல்லோரும் நடவடிக்கைகளுக்கான செயற்பட்டு வசதி கருதி கிளிநொச்சியை மையபடுத்தியே தமது இருப்பிடங்களை தீர்மானிக்கிறார்கள்,
ஏன் தலைவர் அவர்கள் கூட கிளிநொச்சியில் சில இடங்களில் தனது முகாம்களை அமைத்திருந்தார் அங்கு தளபதிகள் போருப்பலர்களுடன் பல சந்திப்புக்களை நடாத்தி இருக்கின்றார்.தலைவர் அவர்களின் குடும்பமும் கனாகம்பிகை குளத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில்தான் தங்கி இருந்தார்கள்,காரணம் கடைசி மகனின் படிப்பும் ,மகளின் கணனித்துறை படிப்பும் இவர்களை இப்பகுதியில் குடியேற வைத்திருந்தது.இந்த வீட்டில் இருப்பவர்கள் முக்கியமானவர்கள் என்பதை அயலவர்களுக்கு வந்துபோகும் வாகனம் புரிய வைத்திருக்கும்.இதனை தகவலாக கொண்டு கனகாம்பிகை குளத்தில் உள்ள தலைவர் அவர்களின் துணைவி பிள்ளைகளின் வீடு மீது சிறிலங்கா படையினர் வான் தாக்குதலை நடத்துகின்றார்கள் .தாக்குதல் துல்லியமானதாக இருந்தாலும் தலைவர் அவர்களின் துணைவியார் கடைசி மகன் உள்ளிட்டோர் காயங்கள் எதுவுமின்றி தப்புகிறார்கள்,அத்துடன் இத்தாக்குதலின் பின் தங்கள் இருப்பிடங்களை மாற்றுகின்றார்கள்,இருந்தும் தலைவர் அவர்களின் பாதுகாப்பு அணிகள் உள்ள முகாம்களும் அன்று சிறிலங்கா வான் படையின் தாக்குதலுக்கு இலக்காகிறது,இவ்வாறு இருக்கும் போதுதான் அன்று கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் உருத்திரபுரம் என்னும் பகுதிக்கு இடையில் தமிழீழ தேசிய தலைவர் வந்துபோகும் இடம் ஒன்றும் இருந்தது,இது அப்பிரதேச மக்களுக்கும் சற்று தெரியும்,பிறகென்ன மக்களுக்கு தெரிந்தால் அது ஸ்ரீலங்கா அரசுக்கு தெரிந்த போலத்தான்,உருத்திரபுரம் (10 ) ஆம் வாய்க்கால் என்னும் பகுதியில் தலைவர் அவர்கள் தங்கிநிற்கும் பாரிய முகாம் ஒன்றும் இருந்தது.தளபதிகள் பொறுப்பாளர்கள் அறிந்தவிடயம் அன்று ஒரு நாள் அந்த முகாமிற்கு தலைவர் வந்துவிட்டார் ..அனால் மறுபுறத்தில் கிபீர் விமானங்களும் புறப்பட்டு வன்னி நோக்கி வந்துகொண்டு இருந்தன (தொடரும்)
**********************************************************************************
உங்கள் கருத்துக்களையும் உங்கள் விமர்சனங்களையும் தவறாமல் பதியுங்கள் உறவுகளே ..அத்தோடு இங்கு உள்ள >>>(((( இதை பின் தொடர்ந்து நீங்களும் எம்மோடு சங்கமித்து கொள்ளுங்கள் உறவுகளே . (Followers ))))<<< இதை தொடர்ந்து எண்கள் குழுமத்துடன் சங்கமித்து கொள்ளுங்கள் உறவுகளே
**********************************************************************************
No comments:
Post a Comment