வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Monday, October 3, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-7

கண்காணிப்பு குழுவினர் மக்களை சந்திப்பதையும் அவர்களிடம் இருந்து உண்மைகளையும் அறிந்துகொள்ளுவதையும் சிறிலங்கா அரசு விரும்பவில்லை .மக்களின் கருத்துக்கள் வெளியே வந்தால் விடுதலைப்புலிகள் பொதுமக்களை பணயமாக வைத்திருக்கிறார்கள் என அரசு சர்வதேச ரீதியாக மேற்கொண்டிருந்த பிரச்சாரம் பொய்யாகி போய்விடும் என்பதை அறிந்திருந்தது.எனவே அந்த மக்களை கண்காணிப்பு குழுவினர் சந்தித்து விடாதபடி கண்காணிப்பு குழுவினரின் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் செல்லும் இடங்கள் மீது கடுமையான எறிகணை தாக்குதல்களை நடத்தினார்கள்.இதன்போது கண்காணிப்பு குழுவை சேர்ந்தவர்கள் மயிரிழையில் உயிர்தப்பினார்கள்.
இதனால் மக்களிடம் இருந்து அவர்களின் மனநிலைய முழுமையாக அறிந்துகொள்ளாமலே அங்கிருந்து கண்காணிப்பு குழுவினர் விரைவாக திரும்பியும் சென்றார்கள்.
திருகோணமலையில் தமது செயற்பாடுகள் முன்னெடுத்து செல்ல முடியாத நிலை காணப்படுவதாக பின்பு போர்நிறுத்த கண்காணிப்பு குழு அறிக்கையொன்றில் வெளியிட்டது.அத்துடன் திருகோணமலையில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து பெரிதாக கண்டுகொள்ளாமல் கண்களை முடியபடி கண்காணிப்புகுழு நடந்துகொண்டது.இவர்களது நடவடிக்கை செயலற்று போனநிலையில் திருகோணமலையில் தமிழ் உணர்வாளர்கள் உரக்க குரல் எழுப்புகின்றார்கள்.எதிர்ப்பு போராட்டங்களுக்கும் எந்தவித பயனும் கிடைக்கவில்லை.இதே வேளை அகதிகள் தங்கியிருந்த வெருகல் முருகன் ஆலயம் மீது சிறிலங்கா வான் படையின் கிபீர் விமானங்கள் தாக்குதல் நடத்துகின்றன. அங்கு அடைக்கலம் தேடியிருந்த மக்கள் பலியாகியும் காயங்களுக்கும் உள்ளாகின்றார்கள்.மக்களின் நிலைமை மோசமடைகிறது.இதனால் மக்கள் அங்கிருந்து கதிரவெளி வாகரை பிரதேசத்தை நோக்கி மீண்டும் இடம்பெயர்கின்றார்கள்.இடம்பெயர்ந்த மக்களுக்கு பணியாற்றுவதில் விடுதலைபுலிகளின் மருத்துவ பிரிவு திறம்பட செயற்படுகின்றது.
வாகரை பிரதேசத்தில் அரச மருத்துவர்கள் இல்லாத நிலையில் காயமடைந்த போராளிகளுக்கும் சிகிச்சை அளித்த போராளி மருத்துவர்களே மக்களுக்கும் அறுவை சிசிச்சை முதல் அனைத்து அவசர சிகிச்சையினையும் மேற்கொள்கின்றார்கள்.மருந்து தட்டுபாடு அதிகரித்து இருந்த நிலையில் மட்டகிளப்பில் இருந்த ஐ. சி.ஆர்.சி.உடாக ஒருதொகுதி மருந்து பொருட்கள் வாழைச்சேனை வழியாக வந்தடைகின்றன..
இதனை பயன்படுத்தி மக்களுக்கும் போராளிகளுக்கும் போராளி மருத்துவர்கள் சிகிச்சை செய்கிறார்கள்.ஆனாலும் நிலைமை மேலும் மோசமடைகிறது.வாகரை மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் எறிகணை தாக்குதலை நடத்துகின்றார்கள் பொதுமக்கள் கொல்லபடுகின்றார்கள் வாகரை பிரதேசத்துக்ககான பாதைகள் ஏ பதினைந்து உட்பட மூடப்படுகின்றன.வாகரை மருத்துவமணைய பாதுகாப்பு வலையமாக்க விடுதலை புலிகளால் கேரப்படுகின்றது.இதனையும் மீறி மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகள் மீதும் சரமாரியாக அட்லேறி பல்குழல் எறிகணை தாக்குதல்கள் நடைபெறுகின்றன.காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை செய்யமுடியாத நிலையில் மருத்துவமனை சுழல் காணப்படுகிறது.இதில் ஒரு நாளில் எழுபதிர்ற்கும் மேலான மக்கள் கொல்லபட்ட சம்பவம் கூட நிறைவேறியது.சிறிலங்கா அரசு எவரது கருத்தினையும் எடுக்காது தாக்குதல்களை தொடர்ந்தது காயபட்ட மக்கள் கடல்வழியாக கொண்டுசெல்லப்படும் போது இடையில் இறக்கின்றார்கள்.ஏனைய மக்கள் சிலர் காட்டு வழியாக நடந்து படையினரின் கட்டுபட்டிலிருந்த மட்டகிளப்பு பகுதிகளை சென்றடைகின்றார்கள்.திருகோணமலையில் விடுதலைபுலிகளின் நிலை கேள்விக்குறியாகிறது.பலம் பொருந்திய பின்னணியுடன் நடக்கும் தாக்குதலை விடுதலைப்புலிகள் எதிர்கொள்ளுவதில் நெருக்கடியை சந்திக்கின்றார்கள்.இலக்கு தவறாமல் நடக்கும் தாக்குதல்கள் பொதுமக்களை கவனத்தில் எடுக்காமல் எடுக்கும் தாக்குதல்கள் பல செய்திகளை சொல்லிசென்றன.மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை விடுதலைபுலிகளை திருகோணமலையில் இருந்து அகற்றவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தது புரிந்தது.தொடர்ந்து திருகோணமலைய தக்க வைப்பது என்பது மேலும் இழப்புக்களையும் அழிவுகளையும் மட்டுமே ஏற்படுத்தும் என்பதை கணக்கில் கொண்டு.நிலத்தை இள போராளிகளை காப்பாற்று நிலத்தை இழந்து போராளிகளை காப்பரறினால் எதிர்காலத்தில் நிலத்தை மீட்க முடியும் .அனால் , போராளிகளை இழந்தால் எதிர்காலத்தில் நிலத்தையும் இழந்து போராளிகளையும் இழக்கவேண்டி ஏற்படும் .என்ற மாவோ சேதுங்கின் போரியல் தத்துவ வரிகள் போல் நிலத்தை இழந்து போராளிகளை தக்க வைக்கின்ற முடிவிற்கு விடுதலை புலிகள் வருகின்றார்கள்.இதனையடுத்து திருகோணமலையில் உள்ள போராளிகள் முழுமையாக வெளியேறும் முடிவு எடுக்கபட்டது.இந்நிலையில் அங்கிருந்த வெடிபொருட்களை விடுதலைப்புலிகள் மறைவிடங்களில் புதைத்தார்கள்.போராளிகள் காட்டு வழியாக மட்ட கிளப்பிற்கு நகர்த்தபடுகின்றார்கள்.ஒரு தொகுதி போராளிகள் வன்னி செல்லும் காட்டிற்குள் செல்கிறார்கள்.முக்கியமானவர்கள் காட்டிற்குள் சென்றுவிட்டார்கள் ஆனாலும் குறிப்பிட்ட போராளிகளும் அங்கு நிலைகொண்டு இருந்தார்கள் கைவசம் இருந்த எறிகணைகளை அட்டிலேறி பிரேங்கி முலம் படையினர் மீது கடும் தாக்குதலை நடத்தி முடிவிற்கு கொண்டுவந்தார்கள்.இறுதியில் அங்கிருந்த வாகனங்கள் கனரக ஆயுதங்கள் என்பவற்றை கொண்டுசெல்ல முடியாத முற்றுகைய படையினர் ஏற்படுத்தி விட்டனர்.இதனால் எதிரியின் கையில் வெடிபொருட்கள் கனரக ஆயுதங்கள் முழுமையாக போகக்கூடாது என்பதுக்காக மோட்டார்கள் வெடிபொருட் களஞ்சியங்கள் தகர்கபடுகின்றன.இதன்போது ஆட்டிலெறி பீரங்கியும் தகர்கபட்டது .இராணுவத்தின் கையில் எந்த ஆயுதங்களும் செல்லமுடியாத நிலைய ஏற்படுத்திவிட்டு அங்கு நின்றிருந்த ஏனைய போராளிகளும் முற்றுகைய உடைத்துக்கொண்டு காட்டுவழியாக மட்டகிளப்பை வந்தடைந்தார்கள்.இதேவேளை என்சியிருந்த மக்கள் வாளைச்சேனை உடாகவும் காட்டு வழியாகவும் கிரான் உட்பட பல பகுதிகளுக்கும் சென்று தன்சமடைந்தார்கள்.மக்கள் வெளியேறிய பின் (2007 ) பெப்பிரவரியின் நடுப்பகுதியில் வாகரை மண் சிறிலங்கா படையினரால் ஆக்கிரமிக்க படுகின்றது.ஆக்கிரமித்த வாகரையில் உள்ள மலையில் சிங்க கொடியேற்றி மகிழ்ந்தார்கள்.இதேவேளை இடம்பெயர்ந்து வந்த மக்கள் மட்டகிளப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்கவைக்க படுகின்றார்கள் இந்த நிலையில் ஒட்டுக்குழுவினர் மக்கள் மீது வலை விரிக்கிறார்கள் முகாம்களுக்குள் சென்று விடுதலைபுலிகளுக்கு ஆதரவான குடும்பங்களை இனம் காண்பது இளைய சமுதாயத்தை கையது செய்வது போன்ற நடவடிக்கையில் படையினரின் ஒத்துழைப்பில் ஒட்டுக்குழுவினர் ஈடுபடுகின்றார்கள்.பலர் கொல்லபடுகின்றார்கள் பலர் காணமல் போகின்றார்கள் அவ்வாறு காணமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் இன்றுவரை தெரியவில்லை என்பது குறிப்பிட தக்கது ..(தொடரும் )


உறவுகளே உங்களின் கருத்துக்கள் விமர்சனங்களை தவறாமல் பதியுங்கள் ..அத்தோடு இந்த வலைப்பூவில் இணைந்து உங்கள் ஆதரவுகளை கொடுங்கள் ..உங்கள் ஆதரவுகளோடு எமது பயணம் தொடரும்

4 comments:

  1. உறவுகளே உங்கள் கருத்துக்களை பதியுங்கள்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அருமையான பகிர்வுகள்
    வாழ்த்த முடியாத உயர்வான எழுத்தாக்கமுள்ள சிந்தனையைத்தாண்டி உண்மைகளை உதிர்த்து விடுவது
    தற்காலத்தில் உங்கள் கையில் இருக்கும் இருப்புக்கள் அள்ளி கொடுப்பததால் மன மகிழ்ச்சிகள்
    யாவரும் சார்பில் வாழ்த்துக்கள்
    தொடரட்டும்.

    தமிழ் தமிழீழம் தமிழக நாடே..

    ReplyDelete

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை