
அன்றைய பயிற்ச்சி முகாம்களை எடுத்துகொண்டால் (200 ) பேர்கள் பயிற்ச்சி பெறுவதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்டு இருந்தன.காட்டுக்குள் அமைக்கபட்ட முகாமிற்கு கிணறு வசதி கழிப்பிட வசதி பயிற்ச்சி இடைவேளையின் போது பொழுது போக்கு வசதிகளென அனைத்தும் நிறைந்து காணபடுகிறது.அத்துடன் அவர்களுக்கு பயிற்ச்சிக்கு தேவையான சத்தான உணவுகளும் வழங்கபட்டன.அனைத்து கல்வியறிவு பொது அறிவு வகுப்புக்கள் எல்லாம் இந்த முகாம்களில் அடிக்கடி நடைபெறும்.ஒவ்வொரு போராளிக்கும் சுட்டு பயிர்ச்சிகென (30 ) ரவைகள் வழங்கபட்டன.ஆண் பெண் இருபாலருக்கும் ஏற்றவகையில் இது நடைமுறை படுத்தபட்டது.இந்த அடிப்படை பயிற்ச்சி தளங்கள் கேணல் கடாபி அவர்களின் பொறுப்பில் நேரடிய நடைபெற்றன.இவ்வாறன பயிற்ச்சி தளங்களை சிறிலங்காவின் வேவு விமானகள் கண்டறிந்து தகவல்களை கொடுத்தும் இருந்தன.
பயிற்ச்சி தளங்களின் மீது தாக்குதல் நடத்திய அதே வேளை விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை கொல்லுவதற்காக ஆழ உடுருவும் படையணிய களத்தில் இறக்கியது சிறிலங்கா.நீண்ட துரம் உடுருவி காத்திருந்து விடுதலை புலிகளின் தளபதிகள் பொறுப்பாளர்களை இலக்குவைத்து தாக்கும் நடவடிக்கைக்காக பெருமளவான ஆளுடுருவும் படையினர் களத்தில் இறக்கபட்டு இருந்தனர்.சிறிலங்காவின் இந்த நடவடிக்கையானது அடுத்தகட்ட தாக்குதலை முன்னெடுப்பதற்கு ஒரு தடைக்கல்லாக்கியது.விடுதலைப்புலிகள் தமது படையணியை இன்னுரு பக்கத்திற்கு திசை திருப்பவேண்டிய நிலைய இது ஏற்படுத்தியது.தளபதிகளின் பாதுகாப்பிற்காக பெருமளவு போராளிகள் ஒதுக்க பட்டனர்.
விடுதலை புலிகளின் பின் தளங்களுக்குள் இந்த ஆழ உடுருவும் படையணியினை உடுருவவிடாமல் தடுப்பதற்கு பெருமளவான போராளிகளை நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.போராளிகள் நிறுத்தபட்டு பின்தளங்கள் பாதுகாக்க படுகின்றன.அதே வேளைகளில் முதன்மை வீதிகளில் (100 ) மீற்றருக்கு ஒரு காவலரண் அமைக்கபட்டு பொதுமக்களை கொண்ட உள்ளக பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்க பட்டது.அதன் முலம் வீதி பாதுகாப்பு நடைமுறை படுத்த படுகிறது.அதாவது வன்னியில் உள்ள திருமணம் செய்தவர்கள் தொழில் புரிபவர்கள் மக்கள் படைக்கட்டுமானம் மூலம் பயிற்ச்சி கொடுக்கபட்டு ஒரு மாதத்திற்கு ஏழு நாட்கள் என்ற வகையில் கட்டாய பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு பணிக்க படுகின்றார்கள்.இந்த கட்டமைப்பில் ஈடுபட மறுப்பவர்களுக்கு தண்ட பணம் அறவிட பட்டது.
வன்னிய பொறுத்தமட்டில் பெரும்பாலான இடங்கள் காடுகளால் நிறைந்துள்ளது.காடுகளுக்கு உடாகத்தான் பல வீதிகள் செல்கின்றன.இவ்வாறு இந்த வீதியின் பாதுகாப்புக்காகவே இவர்கள் கட்டாயத்தின் பெயரில் அழைக்க படுகிறார்கள்.அனால் புறநகர் வீதிகள் காவல்துறை உறுப்பினர்களை கொண்டு பாதுகாக்க படுகின்றது.ஒரு கிலோமீற்றருக்கு ஒரு காவலரண் அமைக்கபட்டு காலை மலை ரோந்து செய்யபட்டு புறநகர் வீதிகள் பாதுகாக்க படுகின்றன.இவ்வாறு உள்ளக பாதுகாப்பிற்கென ஏராளமான ஆயுதங்கள்,அணிகள் ஒதுக்க படுகின்றன.இதனால் நிர்வாக தேவை அதிகரிக்கிறது.ஆயுத பற்ற குறை நிலவுகின்றது.பழுதடைந்த ஆயுதங்கள் திருத்தி பாவிக்கும் அளவிற்கு நிலைமை ஏற்படுகிறது.உதாரணமாக கூறுவதானால் வீதி பாதுகாப்பில் உள்ள உள்ளக பாதுகாப்பு படையினருக்கு ஆயுதம் போதாமை காணப்படுகிறது.
( 500 ) மீற்றர் துரத்திற்கு ஒரு காவலரண் அமைக்க படுகின்றது.அதில் முன்று நான்கு பேர்கள் காவலில் ஈடுபடுத்த படுகின்றார்கள்.இவர்களில் இருவருக்குதான் ஆயுதம் வளங்கபட்டிருக்கும்.வன்னியில் உள்ள வீதிகளின் நீளத்தை கணக்கெடுத்து பார்த்தால் தெரியும் எத்தனை காவலரண்கள் அமைக்கபட்டு இருக்கும்,அதற்க்கு எத்தனை பேர்கள் தேவைபடுவார்கள் என்பது.விடுதலை புலிகளின் தளபதிகள் நடமாடும் அனைத்து வீதிகளும் இவ்வாறுதான் பாதுகாக்கப்படும்.இதேவேளை பாதுகாப்பு கடமைக்கு ஆட்கள் போதாமை இருக்கையில் பணவசதி படைத்தவர்கள் காவல் கடமைக்கு செல்லாமல் தண்ட பணத்தினை செலுத்தினார்கள்.இதனால் உள்ளக பதுகப்பிர்று ஆளணி பர்ரகுறை மேலும் அதிகரித்தது.இதனால் சில வீதிகள் பாதுகாப்பில் இருந்து நீக்கபடுகின்றன அத்துடன் ஒரு கட்டத்தில் சுற்றி சுற்றி உள்ள பாதுகாப்பு பணிக்காக ஒரு சில பொதுமக்களே போகவேண்டிய நிலைமையும் ஏற்படுகிறது.இதனால் அவர்களிடையே ஒரு கசப்புணர்வு தோன்றியது.
இது பாதுகாப்பில் பலவீனத்தை ஏற்படுத்தியது.இவை அன்று நடந்த உண்மைகள் மக்களின் இவ்வாறன செயற்பட்டிர்ற்கு அன்று சில பொறுப்புகளில் இருந்த பொறுப்பாளர்களும் கரணம் என்பதில் மறுப்பதற்கு இல்லை.வன்னியில் நிலைமை இவ்வாறிருக்க விடுதலை புலிகளின் தென்னிலங்கை மீது தாக்குதல்கள் தொடர்கின்றன.காலிதுறைமுகம் மீதான தாக்குதல் இதில் முக்கியமானவை.(2006 ) ஒக்டோபர் ( 18 ) ம் திகதி அதிகாலை நடந்த தாக்குதலில் ஐந்து படகுகளில் வந்த பதினைந்து வரையான கரும்புலிகள் தாக்குதலில் ஈடுபட்டிருந்ததாக சிறிலங்கா அரசு தெருவித்திருந்த போதிலும்,அவர்கள் தாக்குதலை நடத்திவிட்டு எவ்வாறு போனார்கள் என்பது தெரிவிக்கவில்லை.இதில் கடற்படையினருக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டன.பலம் பொருந்தியதாக கருதப்பட்ட காலி துறைமுகத்தில் நுழைந்து தாக்கிவிட்டு தப்பியும் சென்றது சிறிலங்காவிற்கு பெரும் அவமனத்தையிம் ஏற்படுத்தி இருந்தது.இந்த தாக்குதலால் அதிர்சியடைந்த சிறிலங்கா காலியில் உள்ள தமிழர்களின் வர்த்தக நிலையங்களை தக்கியளித்தது தனது ஆத்திரத்தை தீர்த்துகொண்டது.
அத்துடன் கடற்படையினருக்கு ஏற்பட்ட இழப்பினை ஈடுகட்ட கடற்புலிகளின் மீது தாக்குதல் நடத்தவும் சிறிலங்கா திட்டமிட்டது.அப்போது விடுதலைபுலிகளின் கடற்புலி தளங்கள் வடமராட்ச்சி கிழக்கு பகுதியிலையே அதிகளவில் செயற்பட்டு கொண்டிருந்தன.( தொடரும்)
No comments:
Post a Comment