வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Monday, October 17, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-21

தமிழ் மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வாக விடுதலை புலிகளின் சிறப்பு தளபதியான பிரிக்கேடியர் பால்ராஜ் அவர்களின் வீரச்சாவு நிகழ்வு.அன்று வன்னியில் நிகழ்ந்தது,.உண்மையில் போராளிகள் தமிழ் மக்களின் மனங்களில் மட்டுமல்ல சிங்கள படைகளினதும் படைத்தளபதிகளினதும் ஆட்சியாளர்களினதும் மனங்களில் எல்லாம் நிறைந்து இருந்தவர் தளபதி பால்ராஜ்.அதாவது எதிரிக்கு எதிரியாகவும் மக்களுக்கு மக்களாகவும் போராளிகளுக்கு போராளியாகவும் பொறுப்பாளர்களுக்கு தளபதியாகவும் அண்ணனுக்கு தம்பியாகவும் தமிழீழ விடுதலை புலிகளுக்கு வலது கரமாகவும் திகழ்ந்தவர் எங்கள் பால்ராஜ் அண்ணா.
எல்லோராலும் செல்லமாக லீமா என்று அழைக்கப்படும் பால்ராஜ் அண்ணாவின் இழப்பு செய்தி (20-05-2007 )அன்று அலம்பில் பகுதியில் நடந்தேறுகிறது பால்ராஜ் அண்ணாவின் விடுதலை போராட்ட வரலாறு சொல்ல முடியாது, எழுதமுடியாது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது
.தமிழீழ விடுதலையின் முதுகெலும்பாக திகழ்ந்தவர்.தமிழர்களின் வரலாற்றில் முதல் மரபுவழி படையணியாக திகழ்வதுதான் சாள்ஸ் அன்ரனி படையணிவிடுதலை போராட்டத்தின் தொடக்க காலத்தில் போராட்டம் பல்வேறு நெருக்கடி நெருக்குவாராங்களை சந்தித்த போதெல்லாம் அதில் இருந்து விடுபட வழி எடுத்து கொடுத்தவரும் தமிழீழ தேசிய தலைவரின் தோழருமான சாள்ஸ் அன்ரனி அவர்களின் நினைவை தாங்கி தொடங்க பட்டதுதான் சாள்ஸ் அன்ரனி படையணி இந்த படையணியின் வரலாறு தமிழீழ மண் எங்கிலும் உண்டு .சாள்ஸ் அன்ரனி படையணி களத்தில் என்றால் அதற்க்கு ஒரு பெருமை ,காரணம் களம் வெற்றி களமாக மாறும் என்பதுதான்.
( 1983 ) யூலை ( 15 ) நாள் என்னை சுட்டுபோட்டு துப்பாக்கியை எடுத்துகொண்டு போ என்று கட்டளை இட்ட வீரன்தான் லெப்.சீலன் என்று அழைக்கப்படும் சாள்ஸ் அன்ரனி ,அவரது நாமம் தரித்து ( 1-04-1994 ) அன்று உருவாக்கம் பெற்ற படையணியாக சாள்ஸ் அன்ரனி திகழ்கிறது.இந்தியாவின் ( 9 ) பயிற்சி பாசறையில் பயிற்சி பெற்ற பால்ராஜ் அவர்களின் விடுதலை போராட்ட தொடக்க காலமே போர்கலை வல்லவன் பசீலனுடன் தான் ஆரம்பிக்கிறது.முன்னைய வன்னி மாவட்ட தளபதி மேஜர் பசீலனின் வலது கரமாக திகழ்ந்தவர் லீமா அவர்கள்,பசீலனின் கரத்திற்கு வலுச்சேர்க்கும் கரமாக அன்று திகழ்ந்தார்.பசீலனின் தாக்குதல் என்று இருந்தாலும் அல்லது பசீலனின் உணவிலிருந்து என்றாலும் அதில் லீமாவின் பங்கு இருக்கும்.சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் முதல் தளபதியாகவும் விடுதலைபுலிகளின் படைபிரிவின் துனைத்தளபதியகவும் விளங்கியவர் லீமா.களத்தில் தொலைத்தொடர்பு கருவிகளில் லீமாவின் கண்ணீர் என்ற குரல் கேட்டால் போராளிகள் மத்தியில் உத்வேகம் பிறந்துவிடும்.அதேவேளை சிங்கள படைக்கு அது பயப்பீதியை கொடுக்கும்.களமுனைகளில் சண்டைகள் என்றால் லீமாவின் குரல்கள் தொலைத்தொடர்பில் ஓங்கி ஒலிக்கும் .தனது கட்டளைகளால் ஏராளமான எதிரியின் படைமுகாம்களை தகர்த்து படைத் தளபாடங்களை அள்ளிவந்த சாதனைக்கு சொந்தகாரர்.விடுதலை புலிகளின் பலத்தை அதிகரிக்க பெருமளவு வெடிபொருட்கள் ,படைய பொருட்கள் தேவைப்பட்டன.தனிமனிதனாக செயல்பட்ட லீமா அவர்கள் பல்வேறு தாக்குதல்களில் விடுதலைபுலிகளின் ஆயுத பலத்தினை அதிகரிக்க செய்தார்.


துணிவு, தந்திரம் வேகம் ,இம் மூன்றின் உருவம்தான் பாராஜ் அவர்கள். எதிரி களம் திறப்பதற்கு முன்னர் ,எதிரிக்கும் களம் திறப்பதில் வல்லவர் புதிய புதிய திட்டங்கள் போர் நுட்பங்களுடன் போராளிகளை வழிநடத்துவதில் வல்லவர்எங்கள் அண்ணன் லீமா.இப்படிபட்ட லீமதான் அன்று சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதியாக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.களமுனையில் எதிரியுடன் நேரடியாக சண்டையிட்டு உடலெங்கும் பல விழுப்புண்களை வாங்கிகொண்டு களமுனைகளில் வீறுநடை போடுவார் எங்கள் லீமா .விடுதலை புலிகளின் போராட்ட வரலாற்றில் என்றும் நிகழ்ந்திராத சாதனைய நிகழ்த்திய வரலாற்று தாக்குதலாக ஓயாத அலைகள் தாக்குதல்கள் நிகழ்ந்தன.இதில் ஓயாத அலைகள் மூன்றில் இத்தாவில் தரை இறக்கத்திற்காக அனைத்து படையணிகளின் பகுதிகளுடனும் லீமா கடல் மார்க்கமாக இத்தாவில் பகுதியில் தரையிறங்கி (34 ) நாட்கள் தொடர் தாக்குதலினை தொடுக்கிறார்.லீமா எங்களுடன் நிற்கிறார் என்ற உறுதியுடன் போராளிகள் களமுனையில் தாக்குதலை தொடுக்கிறார்கள்.இவ்வாறுதான் தீச்சுவாலை முறியடிப்பு சமர் என்றாலும் அதிலும் லீமா முழுமையாக தனது படையணிகளுடன் களமிறங்கி எதிரிக்கு தகுந்த பாடம் புகட்டினார் அன்று .

இதன்பின்புதான் சமாதனம் என்ற மாயை உருப்பெறுகிறது இதிலும் லீமா தன் உடலினை பொருட்படுத்தாமல் பயிற்ச்சி திட்டங்களில் ஈடுபடுகிறார் ஏன் அவரது உடல்நோயினை சீர்செய்ய பன்னாடு ஒன்றிற்கு லீமா அனுப்ப படுகின்றார்.இதன்போது ஒரு அதிசியம் நிகழ்கின்றது மருத்துவத்தினை முடித்து சிறிலங்காவின் கட்டுநாயக்க விமான நிலையம் வந்து இறங்குகின்றார் லீமா .அப்போது சிறிலங்கா படையின் தளபதிகள் எல்லோரும் பால்ராஜ் அவர்களை ஓர் அதிசியம் போல பார்கிறார்கள்.அப்போது மட்டும்தான் எதிரியால் லீமாவை நேரடியாக பார்க்க முடிந்தது.அந்த அளவிற்கு எதிரிக்கு கலக்கம் கொடுக்கும் வல்லவனாக திகழ்ந்தவர் லீமா அவர்கள்.சிகிச்சை பெற்று திரும்பிய பின் சமாதன காலத்திலும் அவர் சும்மாய் இருக்கவில்லை .தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் கட்டளைக்கு அமைவாக கிழக்கு மாகாணம் செல்கிறார்.அங்கு படையணிகளை பயிற்ச்சியில் ஈடுபடுத்துகிறார் .அடிப்படை பயிற்ச்சி தொடக்கம் மோட்டார் படை அணிவரை லீமாவின் நெறிப்படுத்தலில் நடைபெறுகிறது.இதன்போதுதான் (2004 ) வாகரையில் ஆழிப் பேரலையிலும் லீமா அவர்களும் பாதிக்கபடுகிறார்.எனினும் அதிலிருந்து மீண்டவர் பின்பு வன்னியில் படைகட்டுமானங்களின் மீள் பயிற்ச்சி தொடக்கம் அதிகாரிகளின் பயிற்ச்சி திட்டங்களில் முனைப்புடன் செயற்பட்டு பல மேல்நிலை அதிகாரிகளை உருவாக்குகின்றார்.இங்கு படை அணிகளில் உள்ள லெப் கேணல் நிலையுடைய கட்டளை அதிகாரிகளுக்கு படை தந்திரோபாயங்கள் யுத்திகள் என்பன லீமா அவர்களால் நேரடியாக பயிர்றபடுகின்றது.கனரக ஆயுதம் இயக்குதல் டாங்கி இயக்குதல் ,டாங்கிக்கு எதிர்தாக்குதல் செய்தல் போன்ற கனரக ஆயுதங்களை எல்லாம் அவர் திறம்பட கற்று வைத்துள்ளார்.

என்பது அப்போதுதான் அந்த மேல்நிலை அதிகாரிகள் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு கூட தெரியவருகிறது.லீமா அவர்களால் உருவாக்க பட்ட போர் வீரர்கள் எத்தனையோ பேர்கள் களத்தில் சாதனைகளை படைத்து இருக்கிறார்கள்.பயிற்ச்சி தளங்களில் பயிற்சிகளை வழங்கிக்கொண்டு இருந்தநிலையில்தான் லீமா அவர்களக்கு களமுனை ஒன்றை சீர்படுத்த வேண்டிய உத்தரவு வருகின்றது.அது மன்னார் களமுனை குறுகிய காலத்துக்குள் மன்னார் களமுனையினை சீர்செய்துவிட்டார்.அப்போதுதான் லீமா அவர்களின் உடல்நிலை சற்று மோசமடைகிறது.இதனால் ஓய்விற்காக விடப்படுகிறார்,அனால் அவர் ஒய்வெடுக்கவில்லை போராளிகளுக்கு வகுப்பெடுக்கிறார் அங்கும் லீமா அவர்களின் திறமையான நுட்பங்கள் பயிர்றபடுகின்றது.போர் உச்சமாகிகொண்டிருந்த நிலையில்,தமிழீழ துணைப்படை கட்டுமானத்தினை லீமா அவர்கள் மேற்கொள்கிறார்.விடுதலை போராட்டத்திற்கு ஆட்பலம் சேர்க்கும் பணிகளில் அவர் தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் நேரடியாக களம் இறங்குகின்றார்.கிராமங்களில் வீட்டுடன் நிற்கும் முன்னாள் போராளிகளை ஒன்றுதிரட்டி அமைப்பில் இணையுமாறு கதைக்கிறார்.இதில் போராளிகள் பலர் இணைகிறார்கள்.இணைந்தவர்களின் குடும்ப பராமரிப்பு செலவுகள் தொடர்ச்சியாக லீமா அவர்களினால் கவனிக்க படுகின்றது.வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டுவித்து கொடுக்கிறார் .இவ்வாறு இயலுமான உதவிகளை மேற்கொண்டு போராட்டத்துக்குள் முன்னைய போராளிகளை புதிய வடிவத்தில் இணைக்கும் பணிகளில் மக்களிடம் சென்று நேரடியாக கதைக்கின்றார்.இவ்வாறு இருக்கையில் தான் அன்று அலம்பில் பகுதியில் இவரது சோகமான செய்தி வந்து சேருகின்றது ( தொடரும் )

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை