வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Saturday, October 22, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-26

விடுதலை போராட்ட வரலாற்றில் முக்கிய  பாச்சல்   ஒன்று அன்றுதான் நிகழ்ந்தது .இது சாத்தியமாகும ?சாதாரண இயக்கங்களால் மட்டுமல்ல பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் செயற்பட்ட உலகின் பல இயக்கங்களாலும் சத்தியமாகத ஒன்றை எந்தவொரு நாட்டினதும் ஆதரவு இன்றி தமிழ் மக்களின் பலத்தில் மட்டும் நிற்கின்ற விடுதலை புலிகள் சாதித்து விடுவார்களா கேள்வி எழுப்பிகொண்டிருந்த நேரத்தில்தான் அந்த பேரதிர்வு நிகழ்ந்தது.வரலாற்றில் எந்தவொரு விடுதலை இயக்கமும் சாதிக்காத ஒரு சாதனைய அன்று விடுதலை புலிகள் சாதித்து இருந்தனர்.அதுதான் கட்டுநாயக்க மீதான விடுதலை புலிகளின் முதல் வான்வெளி தாக்குதல் .சரியாக
முன்று வருடங்களுக்கு முன்பாக ( 26-03-2007 ) அன்று நடந்த இந்த தாக்குதலால் சிறிலங்கா மட்டும் அதிரவில்லை உலக நாடுகள் எங்கும் அதன் அதிர்ச்சியும் ஆச்சரியமும் எதிரொலித்தன.
தமிழர் தாயக நிலத்தை விழுங்கியபடி சிறிலங்கா இராணுவம் முன்னேரிகொன்டிருந்த போது விடுதலை புலிகளின் பின்வாங்கல்கள் பலவீனமாகவே பார்க்கப்பட்டன.விடுதலை புலிகளின் பலத்தையும் வளத்தையும் அழித்துவிட்டோம் என சுளுரைத்துகொண்டிருந்த மகிந்த அரசாங்கத்தின் பரப்புரைகளை விடுதலைபுலிகளின் ஒரே ஒரு வான் தாக்குதல் சுக்குனுராக அடித்துபோட்டது .தரையையும் கடலையும் பார்த்துகொண்டிருந்த சிங்கள இராணுவம் வானையும் அண்ணாந்து பார்க்கவேண்டிய நிலைக்கு தள்ளியது இந்த தாக்குதல்.

காலத்துக்கு காலம் தேவைகளுக்கு ஏற்ப போரில் பல நாவீன உத்திகளை புகுத்திய தலைவரின் இந்த தாக்குதல் திட்டம் என்பது எதேச்சையாக எடுக்கபட்ட திட்டமாக இருக்க மாட்டாது.ஏனினில் ( 1998 ) நவம்பர் மாவீரர் நாளைக்கு முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் உலங்குவானுர்தி முலம் மலர்துவிய சம்பவம் விடுதலை புலிகளிடம் வான் படை இருக்கிறது என்ற உண்மைய வெளியுலகுக்கு அம்பலமாக்கி விட்டது.எனினும் அப்போது இடம்பெற்ற ஜெயசுக்குறு சமரிலோ அல்லது அதற்க்கு எதிரான பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் சமரிலோ விடுதலைப்புலிகள் வான்தாக்குதல் எதனையும் நடத்தவில்லை.ஆனாலும் விடுதலைபுலிகளின் வான் படை குறித்து சிறிலங்கா அறிந்துகொண்டதன் பின்னர் தனது கேந்திர நிலையங்களின் பாதுகாப்பிற்கு வான் எதிர்ப்பு துப்பாக்கிகளுடன் படையினரை நிறுத்தியிருந்தது.ஆனாலும் காலத்தின் தேவை கருதி தலைவர் வான் புலிகளை வெளியில் கொண்டுவந்தார் .எதிரி எந்த வகையில் அடக்குமுறைகளை கையளுகிறனோ அதே வழியில் சென்று பதிலடி கொடுப்பது என்பது தலைவருக்கு கைவந்த கலை.அப்பாவி மக்கள் மீது வானிலிருந்து குண்டுகளை கொட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொன்றொளித்த எதிரிக்கு தானும் அவ்வாறு தக்கபடுவோம் என்று புரியவைத்த இந்த வான் தாக்குதல்.

அனால் எதிரியை போன்று பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தாது எந்தவித பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்பட குடாது என்பதை தாக்குதலுக்கு சென்ற போராளிகளிடம் தலைவர் அவர்கள் ,வலியுறுத்தி அனுப்பிவைத்து நடத்திய தாக்குதல் இது .இவ்வாறு ஒரு இலக்கு தவறாத தாக்குதலை உலகில் பல நாடுகளிடம் பயிற்ச்சி பெற்ற சிறிலங்கா வான்படை கூட நடத்தியிருக்க முடியாது.வன்னியில் இருந்து ( 25 ) ம் திகதி புறப்பட்ட விடுதலைபுலிகளின் இரு விமானங்கள் (26 ) ம் அதிகாலை ( 5.45 ) ற்கு சிறிலங்கா சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையம் மேலாக பறந்து பயணிகள் விமானதளத்திற்கு அருகாமையில் இருந்த வான்படையின் தளத்தினை இலக்குவைத்து எட்டு குண்டுகளை வீசி அத்தளத்தை பாரிய சேதங்களுக்கு உள்ளக்கிவிட்டு இலக்கு சரியானதா என்பதை அதன் மேலாக சகசமாக ஒருமுறை வட்டமிட்டு உறுதிபடுத்திகொண்டு பாதுகாப்பாக வன்னியிலுள்ள அதன் தளத்திற்கு திரும்பியது.தரையால் வந்து நடத்திய தாக்குதலா வானால் வந்து நடத்திய தாக்குதலா என சிறிலங்கா குழம்பிபோயிருன்தது ,வான் தாக்குதலை விடுதலைப்புலிகள் அறிவிக்காது போனால் அதனை ஒரு தரை வழியிலான தாக்குதலாக காண்பித்து படையினருக்கு ஏற்படகூடிய அச்சங்களை தவிற்பதுக்கும் சிறிலங்கா விரும்பியது என பின்னர் அறியமுடிந்தது.

அனால் விமானங்கள் திரும்பிய சிலமணி நேரங்களில் விடுதலை புலிகள் தங்கள் தாக்குதலை அதிகரபுர்வமாக உரிமை கோரியதுடன் விமானங்களினதும் வான்புலிகளினதும் நிழற்படங்களை வெளியிட்டு மீளும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.இந்த செய்திகள் உடனடியாக சர்வதேச உடகங்களில் தலைப்பு செய்தியாகி இருந்தது இந்திய வேண்டாத அச்சங்களை வெளியிட்டு தனது பாதுகாப்பை பலப்படுத்துவதாக கூறியது தமிழக கரையோரங்களில் கண்காணிப்பு ராடார்களை நிறுவி விடுதலைபுலிகளின் வான் பறப்புக்களை கண்காணித்து சிறிலங்கவிர்க்கு உதவுவதற்கு முனைந்தது.அதேவேளை இந்த தாக்குதலில் சேதங்கள் ஏற்படவில்லை எனக்குறி சிறிலங்கா அரசாங்கள் இழப்பை முடிமறைத்தது.அனால் கட்டுநாயக்க மீது (25 ) யூலை ( 2001 ) ஆண்டு கரும்புலிகள் நடத்திய தாக்குதலுக்கு இணையாக இந்த தாக்குதலும் சிறிலங்கா வான் படையினருக்கு பெரும் அழிவையும் தொடர் பொருளாதார இழப்புக்களையும் கொடுத்தது என்பதே உண்மை .வான் படையினர் முலம் தாக்குதல் நடத்துவது மாத்திரமல்ல தாக்கிவிட்டு திரும்பிசெல்ல முடியும் என்பதனையும் நிருபித்து காட்டியதன் முலம் போரரங்கின் போக்கை மாற்றிவிட்டனர் விடுதலைப்புலிகள் என இராணுவ ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டனர்.இந்த தாக்குதலால் பெரும் அவமானமும் அதிர்ச்சியும் அடைந்த ஸ்ரீலங்கா இரணைமடு மற்றும் விமான தளங்கள் என்று கருதிய இடங்களில் எல்லாம் குண்டுமழை பொழிந்தது .அத்துடன் விமான தளங்களையும் ஓடுபாதைகளையும் கண்டுபிடிப்பதற்காக வேவு விமானங்கள் வன்னியை வட்டமிட தொடங்கியிருந்தன.இரவு பகல் என (24 ) மணி நேரமும் வேவு விமானங்கள் வன்னியை முற்றுகையிட்டு தேடுதலை மேற்கொண்டு இருந்தன.இவ்வாறு வந்த வேவு விமானம் ஒன்று திரும்பி போகவே இல்லை. விடுதலை புலிகளின் முயற்ச்சி ஒன்றில் அந்த விமானம் வன்னி மண்ணில் விழுந்து உயிரை விட்டது .


இதன் பிற்பாடு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வேவு விமானங்கள் பரப்பில் ஈடுபட்டிருந்தன.இரவில் துல்லியமாக படம் எடுக்ககூடிய வேவு விமானம் பயன்படுத்தியது .அத்துடன் சில நாடுகளிடம் இருந்து செய்மதியுடான கண்காணிப்பு உதவியையும் சிறிலங்கா பெற்றுகொண்டு இருந்தது.அத்துடன் இந்த வான் தாக்குதலை சர்வதேச அச்சுறுத்தலாக மாற்றி உலகநாடுகளின் ஆதரவை வளைத்து போடவும் சிறிலங்கா முயன்றது .(11-2001 ) இல் அமெரிக்க இரட்டை கோபுரம் மீதான தாக்குதல் போன்று ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய விடுதலை புலிகளின் தாக்குதல் அதுவும் பொதுமக்களுக்கு எந்தவித இழப்பும் ஏற்படாமல் இராணுவ நிலைகளை இலக்குவைத்து மேற்கொள்ளபட்ட தாக்குதல் பயங்கர வாதமாக கண்பிக்கபட்டது.விடுதலை புலிகளை ஒடுக்கவேண்டும் என்று எப்போதும் சிந்தித்துகொண்டிருக்கும் இந்தியாவின் ஆதரவு சிறிலங்கவிற்கு பலமாக கிடைத்தது .இதன் வெளிப்பாடுதான் ஒட்டுமொத்த நாடுகளின் ஆதரவுடன் விடுதலைபுலிகளை அளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்க படுகிறது( தொடரும் )

**********************************************************************************
உங்கள் கருத்துக்களையும்  உங்கள் விமர்சனங்களையும்  தவறாமல் பதியுங்கள்  உறவுகளே  ..அத்தோடு  இங்கு  உள்ள >>>((((  இதை பின் தொடர்ந்து நீங்களும் எம்மோடு சங்கமித்து கொள்ளுங்கள் உறவுகளே . (Followers ))))<<< இதை  தொடர்ந்து எண்கள் குழுமத்துடன் சங்கமித்து  கொள்ளுங்கள் உறவுகளே  

**********************************************************************************

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை