வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, September 29, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-4

இயற்கையின் பேரனர்த்தத்தில் (சுனாமி) இருந்து மக்களை மீள் கட்டமைக்கும் செயற்பாடுகள் விடுதலை புலிகளால் கிழக்கிலும் முல்லைத்தீவிலும் யாழ்பாணத்திலும் பகுதிகளிலும் சிறப்புற மேற்கொள்ளபடுகின்றன .இதற்கான நிர்வாக அலகுகள் திறம்பட செயற்படுகின்றன .விடுதலை புலிகளை அனைத்து கட்டமைப்புகளும் மக்கள் மீள் கட்டுமான பகுதிகளில் ஈடுபடுத்தபடுகின்றன உலக நாடுகளிடமும் புலம்பெயர்ந்த மக்களிடமும் இருந்து கிடைத்த உதவிகளை பெற்று மக்களுக்கு சென்றடைய விடுதலைப்புலிகள் நிர்வாகங்களை உருவாக்குகின்றார்கள் .

இதே வேளை சமாதன செயலகத்தால் சுனாமி மீள்கட்டுமான செயற்குழு உருவாக்க படுகின்றது .இதனுடாக உலகநாடுகளில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்க படுகின்றன .இந்த சுனாமியால் கிடைத்த வாய்பை பயன்படுத்தி மக்களுக்கு தேவையான பொருட்கள் வன்னிக்கு எடுத்துவரபட்ட அதே வேளை விடுதலைபுலிகளுக்கு தேவையான பொருட்களும் இறக்குமதி செய்யபடுகின்றன .குறிப்பாக பெறுமதி மிக்க இலத்திரனியல் பொருட்கள் தொலைத்தொடர்பு பொருட்கள் ஏன் விமான உதிரிப்பாகங்கள் கூட கொள்வனவு செய்து இறக்கும் போது பிடிபட்டு இருந்த செய்தியும் நீங்கள் அன்று அறிந்திருப்பீர்கள் .இவ்வாறு திருகோணமலை மாவட்டத்திற்கும் விடுதலைப்புலிகள் தமக்கு தேவையான பொருட்களையும் தருவித்து கொள்கின்றார்கள் .இவற்றுள் நீண்டகாலம் வைத்திருக்ககூடிய மருந்து பொருட்கள் முதன்மையாக அடங்குகின்றன .அதற்கான இடங்கள் இனம்கனபட்டு மருத்துவ பிரிவு மருத்துவமனைகளை அங்கு அமைக்கிறார்கள் .இதனிடையே திருகோணமலையில் வெளிநாட்டு மருத்துவ அணிகள் வந்து விடுதலைபுலிகளின் கட்டுபட்டு பகுதிக்குள் சென்று மக்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் .இது ஒரு புலனாய்வு நடவடிக்கை என்று தெரிந்திருந்த போதும் மக்களுக்கு மருந்து சேவை அவசியமாக தேவைபட்டாதால் விடுதலைப்புலிகள் இது தொடர்பான அவதானத்துடன் அவர்களின் சேவைக்கு அனுமதி வழங்கியிருந்தார்கள் ,எனினும் ஒரு சில தமிழ்மக்கள் முலமே தங்களுக்கு தேவையான புலனாய்வு தகவல்களை அவர்கள் திரட்டிக்கொண்டு இருந்தார்கள் என்பதை பின்னர் அறியமுடிந்தது.இவர்களது நடவடிக்கை இவ்வாறு இருக்கையில் விடுதலைபுலிகளும் திருமலை மாவட்டத்தில் இருந்துகொண்டு இலங்கையின் தென்பகுதிக்கான நடவடிக்கைகள் விடுதலைப்புலிகள் புலனாய்வு பிரிவினரால் திட்டமிட படுகின்றன.இலங்கையின் தலைநகரான கொழும்பு மற்றும் சுற்றுப்புற இடங்களில் தாக்குதல் நடத்துவது இராணுவ அரசியலில் முதன்மையனவர்களை இனம்கண்டு அவர்களின் இருப்பிடங்களை கண்டறியும் ஒரு பிரிவும் ,இவ்வாறு தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கும் முதன்மையானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுக்கான ஒரு பிரிவு .அதிலும் கரும்புலி அணிகள் இவற்றுக்கு எல்லாம் திருகோணமலை உடாகவே வெடிபொருட்களை கடத்தும் அணிகளின் செயற்பாடுகள் நடைபெறுகின்றன .
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
இதற்கிடையில் வன்னியில் விடுதலைபுலிகளின் கட்டுபாட்டு பகுதிகளிலும் கிழக்கிலும் பல்வேறு இராணுவ நடவடிக்கைகளை அதாவது உடுருவல் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதில் படையினருக்கும் பல்வேறு தகவல்களை வழங்கி வந்தவரும் விடுதலை போராட்டத்திற்கு பெரும் தடைகற்கள இருந்தவருமான புளட் மோகன் என்று அழைக்கப்படும் கந்தையா யோகராச என்பவர் கொழும்பில் வைத்து பிஸ்ரல் குழுவினரால் ஏற்கனவே சுட்டு கொல்லபட்டு இருந்தார் .சிறிலங்காவில் வன்னி மற்றும் மட்டகிளப்பு திருகோணமலையில் மேற்கொள்ளபட்ட பல உடுருவி தாக்குதல்களுக்கும் விடுதலை போராட்டத்திற்கு ஆதரவானவர்கள் சுட்டுகொல்ல படுவதற்கு பின்னால் மட்டுமல்ல கருணா விடுதலை போராட்டத்திற்கு துரோகம் இழைத்து இயக்கத்தை விட்டு வெளியேறியபோது கருணாவிற்கு பாதுகாப்பு அழிப்பது உட்பட கருணாவின் பல நடவடிக்கைகளுக்கு பின்னே இந்த பிளாட் மோகன் இருந்ததால் கொழும்பின் உச்ச பாதுகாப்பு பகுதியில் வைத்து (31-07-2004 ) அன்று பிஸ்ரல் குழுவினர் அவரை சுட்டு கொன்றிருந்தனர்.எனினும் அதன் பின்னரும் விடுதலை போராட்டத்திற்கு ஆதரவானவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் சில மாதங்களில் ஏற்பட்ட சுனாமி காரணமாக சற்று ஓய்ந்திருந்தது .எனினும் அது அதிக காலம் நீடிக்கவில்லை மீண்டும் சிறிலங்கா படை புலனாய்வாளர்களால் ஒட்டு குழுக்களினதும் நடவடிக்கை தொடர தொடங்கியதும் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் மீண்டும் பிஸ்ரல் குழுவினர் இறங்கினார்கள் .இதன் ஒரு கட்டத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்மன் கதிர்காமரும் (2005 ) ஓகஸ்ட் (12 ) ல் சுட்டுகொல்லபட்டார்.இவ்வாறன களையெடுப்பு நடவடிக்கைகளுக்கு தளமாக கட்டளை பிடமாக திருகோணமலையே விளங்கியது .இதே வேளை கடலிலும் கடற்புலிகளுக்கும் சிறிலங்கா கடற்படைக்கும் இடையில் சில மோதல்கள் இடம்பெற்றன.எச்சரிக்கை அறிவிப்பாக போராளிகளால் டோற படகுகள் முழ்கடிக்க பட்டன .இதனை தொடர்ந்து மீண்டும் சிறிலங்கா கடற்படையினரால் கடலில் மீன்பிடிக்க கடுமையான தடைச்சட்டம் கொண்டுவர பட்டது.திருகோணமலையிலும் ஆழ்கடலிலும் சென்று தொழில்செய்யமுடியாத நிலைக்கு கடல்தொளிலாளர்கள் தள்ளபட்டனர் .இத்துடன் பொருளாதார thaday மக்கள் மீது திணிக்கபடுகின்றது.பொருட்களுக்கு மீண்டும் கட்டுபாடு விதிக்கபடுகின்றன இவ்வாறன பிரச்சனைகளை தளர்த்துமாறு சிறிலங்கா படையினரிடம் விடுதலை புலிகளால் கேட்கபடுகின்றது.இதற்கு சம்மதிக்காத சிறிலங்கா அரசு மக்கள் மீது பல்வேறு கெடுபிடிகளை மேற்கொள்கின்றார்கள்.சிறிலங்கா மீண்டும் போர் ஒன்றை முன்னேடுப்பதுக்கு முனைப்புடன் செயற்படுகின்றது என்பதை சமாதன உடன்படிக்கைக்கு எதிரான இந்த செயற்பாடுகள் புரியவைத்தன .சிறிலங்காவின் இந்த போர் முனைப்பை பிரகாரம் தொடங்குகிறது .மாவிலாற்று பிரச்சனை சம்பூர் சேனையூர் ஈச்சிலம்பற்று புன்னையடி போன்ற விவசாயிகளின் இணக்கத்துடன் விடுதலை புலிகளால் சிங்கள கிராமத்துக்கு செல்லும் அணைமீது இடைக்கட்டு கட்டபட்டு ஆற்று நீர் சிங்கள் மக்களுக்கு செல்லாமல் தடுக்கபட்டு முற்றிலுமாக தமிழ் மக்களின் செயற்பாட்டுக்கு விடப்படுகிறது >>>> தொடரும்

உறவுகளே உங்களின் கருத்துக்கள் விமர்சனங்களை தவறாமல் பதியுங்கள் ..அத்தோடு இந்த வலைப்பூவில் இணைந்து உங்கள் ஆதரவுகளை கொடுங்கள் ..உங்கள் ஆதரவுகளோடு எமது பயணம் தொடரும்.

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை