வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Wednesday, October 5, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-9


திருகோணமலையில் இருந்துகொண்டு தமிழ் மக்களின் பிரச்சனைய நடாள மன்றத்திற்கு எடுத்துரைத்து பல செயற்பாடுகளை காண்பித்தவர் நடாள மன்ற உறுப்பினர் துரைசிங்கம்.ஒவ்வுரு நாடாளுமன்ற அமர்விலும் திருமலையின் பிரச்சனைகள் தமிழ் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளை கதைக்கும் போது சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தம் போட்டு மேசைகளில் அடித்தும் பேசவிடாமல் குழப்புவார்கள்.


ஆனாலும் தமிழ் உணர்வாளர்கள் சிங்களத்தின் இந்த கெடுபிடிகளுக்குள்ளும் இருந்துகொண்டு தமிழ் பிரச்சனைக்கு குரல் கொடுத்தார்கள்.அனால் எல்லாம் செவிடன் காதில் உதிய சங்குதான் .இவ்வாறுதான் தமிழ் மக்கள் பேரவை தலைவர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழ் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் திருகோணமலையில் சிறிலங்கா படையினரின் கடல் வளைய தடைச்சட்டம் தொடர்பாகவும் வன்னியில் உள்ள ஊடகம் ஒன்றிற்கு (06-04-2006 ) அன்று இரவு செவ்வியளித்திருந்தார்.செவ்வியளித்த மறுநாள் காலை திருமலை சிரிலங்கள் காவல் நிலையத்திற்கும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் இடையில் உட் துறைமுக வீதியில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் மத்திய கிளையுனுள் விக்கினேஸ்வரன் துளையும் போது ஒட்டு குழுவினரால் சுட்டு கொல்லபடுகின்றார்.

அவரின் இழப்பு திருகோணமலையில் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய இழப்பாக கருதப்பட்டது இந்த படுகொலையானது ஜெனீவ பேச்சுகளிருந்து விடுதலை புலிகளை விலக செய்யும் முயற்சியென தமிழ் தேசிய குட்டமைப்பினர் கண்டனம் வெளியிட்டு இருந்தனர்.இவரது தமிழ் உணர்வு செயற்பாட்டினை கவுரவித்து தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் மாமனிதர் என்ற உயர் விருதை வழங்கி கவுரவித்தார்.இவரது வாழ்வு திருகோணமலை மக்களோடும் மண்ணோடும் ஒன்றியதகவே இருந்தது.இவர் திருமலை மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தார்.அங்கு தலைவிரித்தாடும் இராணுவ அடக்குமுறையையும் நில ஆக்கிரமிப்பையும் முழு மூச்சாக எதிர்த்து நின்றார்.எமது மண் எமக்கே சொந்தம் என்று உரிமை குரலை ஆக்கிரமிப்பு இராணுவத்திற்குள் இருந்துகொண்டே உலகிற்கு உரத்து கூறினார்.என தமிழீழ தேசிய தலைவர் இவரது தேசத்துக்கான பங்களிப்பையும் அதற்காக துணிந்து செயற்பட்ட அவரது வீரத்தையும் தனது அறிக்கையில் எடுத்து கூறியிருந்தார்.இவரது உடலம் வன்னிக்கு எடுத்துவரபட்டு பல இடங்களில் பெருமளவான மக்களினதும் போராளிகளினதும் அன்சளிக்காக வைக்கபட்டு பின்பு திருகோணமலையில் அடக்கம் செய்யபடுகின்றது.இவரது படுகொலை தொடர்பிலான அறிக்கையை திருமலை கண்காணிப்பு குழுவினர் கொழும்பு தலைமையகத்துக்கு அனுப்பி வைத்து படுகொலை செய்யபட்டதிற்கு முதல் நாள் கடல்வலைய தடைசட்டத்தை நீக்குவது தொடர்பாக கடற்தொழிலாளர்கள் அமைப்புடன் கண்காணிப்பு குழுவினரை சந்தித்து நீண்ட நேரம் விவாதித்து இருந்தார்.இப்படுகொலை தொடர்பில் பலரிடம் விசாரணை நடத்திய கண்காணிப்பு குழுவினர் சம்பவம் நடைபெற்ற இடத்தின் நிழற்படங்களையும் இணைத்து அறிக்கை தயாரித்து கொழும்பிற்கு அனுப்பிவைத்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கண்காணிப்பு குழுவிடம் விக்னேஸ்வரன் பலமுறை முறைப்பாடு செய்திருந்ததையும் அந்த அறிக்கையில் சுட்டி கட்டியிருந்தது .இவரது படுகொலையின் தொடர்சியாக திருமலையில் சில வன்முறை சம்வங்கள் வெடிக்கின்றன சிங்கள காடையர்களால் தமிழ் மக்கள் மீது துப்பாக்கி சுடு கைக்குண்டு தாக்குதல்கள் என தாக்குதல்கள் நடத்தபடுகின்றன.பாடசாலை மாணவர்கள் குட சுட்டு படுகொலைசெய்யபடுகின்ரர்கள்.படையினரால் வல்வளைக்கபட்ட சம்பூர் பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு வளையமாக படையினரால் அறிவிக்க படுகிறது.இதன் பின்பு முதூர் கிழக்கு பிரதேசத்தில் சிங்கள கடற்தொளிலளர்கள் தொழிலில் ஈடுபடுகின்றார்கள்.இன்னுரு பக்கம் பொவுத்த மதத்தை கட்டிஎளுப்புவதில் சிறிலங்கா இராணுவம் எடுபடுகிறது.வெருகல் (45 ) ம் கட்டை வாழைத்தோட்டம் கட்டடி புன்னையடி இலங்கை துறைமுகத்துவாரம் போன்ற பகுதிகளில் பொவுத்த மதம் வளர்ந்த வரலாற்று சின்னங்கள் இருப்பதாக சிறிலங்கா படையினரால் அறிவிக்க படுகின்றது.(இக்கிராமங்கள் வெருகல் (18 ) பிரதேச சபைக்குள் அடங்குபவை) (45 ) ம் கட்டை எனப்படும் இடத்தில் பெரிய பெரிய மலைகள் பாறைகள் கற்கள் உள்ளன இவற்றில் கோவில்களும் உள்ளன.அவ்வாறன சில பாறைகளின் உச்சியில் புத்தர் சிலை நாட்டபடுகின்றது.கல்லடி எனப்படும் இடத்தில் (120 ) அடி உயரம் கொண்ட மலை காணப்படுகிறது அதன் உச்சியில் முருகன் அலையும் உள்ளது.சில விசித்திரமான எழுத்துக்கள் அந்த மலையில் பொறிக்கபட்டுள்ளன .இதனை சிங்கள முததையர்களை கொண்டு சிறிலங்கா அரசு ஆய்வு செய்து தொன்மையான பொவுத்த மதம் இருந்தற்கான சான்றுகள் கண்டுபிடிக்க பட்டுள்ளது என்று அறிக்கை வெளியிடுகின்றது.இதன் பின்பும் அங்கும் பொவுத்த விகாரை அமைக்கபடுகின்றது.அதேபோல் இலங்கை துறைமுகத்துவரத்தில் (70 ) அடி உயரம் கொண்ட கடற்கரை அருகில் கல்லுமலை ஒன்றும் உள்ளதாக இதன் உச்சியில் வேளாங்கண்ணி மாதா கோவில் உள்ளது.அருகில் பெரிய ஆற்று தொடுவாய் உள்ளது.இதனை எல்லாம் அரய்ந்துவிட்டு பொவுத்த மதம் சிங்கள மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உண்டு என தெருவிக்கின்றார்கள்.இவ்வாறு சம்பூர் பிரதேசத்தில் மலைகளும் ஆற்று மரங்களின் கிழும் புத்த விகாரைகள் கட்டபட்டு பொவுத்த மதம் பரப்பபடுகின்றது.தமிழர்கள் வாழ்ந்ததற்கான அதரங்கள் அளிக்கபடுகின்றன.இது ஒருபுறம் இருக்க இந்தியாவுடன் அனல்மின்நிலையம் அமைப்பதற்கு ஒப்பந்தம் எழுதப்படுகின்றது தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடம் சம்பூர் சொந்த வீடுகள் விவசாய காணிகள் இங்குள்ளன. தமிழ் மக்களின் பூமியை அயல் நாட்டிற்கு தாரை வருகிறது சிறிலங்கா தமிழர்கள் நிலத்தையும் இழந்து சுழல் பாதிப்பையும் சுகாதார சீர்கேட்டை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இதன் முலம் சிங்கள மக்கள் பெருமளவு பயனடைய இருக்கிறார்கள்.அதாவது இந்தியாவின் அனல்மின்நிலையம் நிறுவப்பட்டால் அங்கு வேலை செய்பவர்கள் சிங்களவர்கள் பின்பு அவர்களின் குடும்பங்கள் அருகில் உள்ள தமிழ் கிராமங்களில் குடியேற்ற படுவார்கள்.இவ்வாறு ஒட்டுமொத்த தமிழின அழிப்பை சிறிலங்கா அரசு நீண்டகால திட்டமிடலின் அடிப்படையில் மேற்கொள்கின்றது.இதன் முதற்கட்டமே திருகோணமலையில் இருந்து விடுதலைப்புலிகள் வெளியேற்ற பட்டு.தமிழின உணர்வாளர்கள் அளிக்கபட்டு. தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கபட்டு தமிழர்கள் ஆனதை ஆக்கபட்டர்கள்.
(தொடரும்)


உறவுகளே உங்களின் கருத்துக்கள் விமர்சனங்களை தவறாமல் பதியுங்கள் ..அத்தோடு இந்த வலைப்பூவில் இணைந்து உங்கள் ஆதரவுகளை கொடுங்கள் ..உங்கள் ஆதரவுகளோடு எமது பயணம் தொடரும்

3 comments:

  1. தங்கை இரு நாள் இங்கு வர முடியல வேறு வேலை பளு காரணமாக

    ReplyDelete
  2. பரவாயில்லை சகோதர நீரம் இருக்கும் போது உங்கள் நண்பர்களிடம் முடிந்தவரை கொண்டுசெல்லுங்கள் அண்ணா //

    ReplyDelete
  3. How about evicting all the Muslims from the Northern province by the LTTE? Where does this fall into?

    ReplyDelete

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை