வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Tuesday, October 11, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-15



இரணமடு விமானதளம் பிரதானமாக இருக்கையில் ஏனைய சில இடங்களில் சிறு சிறு விமான ஓடுபாதைகள் விடுதலைபுலிகளால் அமைக்கப்பட்டு வந்தது.குறைந்த துரத்தில் பரப்பில் ஈடுபடவும் தாக்குதலின் பொது அவசர தரையிரக்கங்களுக்ககவும் மற்றும் எதிரியை திசை திருப்புவதுக்காகவும் என திட்டமிடப்பட்டு விமான ஓடுபாதைகள் மேலும் சில இடங்களில் அமைக்கபட்டு இருந்தன.விடுதலைபுலிகளின் விமான ஓடுதளம் என்பது தேவையான நீளத்திற்கு ஏற்றவகையில் நிலத்தினை பன்படுத்திவிட்டு தார் போட்டுகொள்ளுவதுதான் விமான தளமாக காணப்பட்டது.இதற்கமைவாக பூநகரி சுண்டிக்குளம் ,இருட்டுமடு. கொண்ட்டமடு,

சுதுபுரம்,இருட்டுமடு என்பது உடையார்கட்டு காட்டுபகுதியில் உள்ளது.கொண்டமடு என்பது புதுக்குடியிருப்பு அடுத்தாதாக உள்ள மன்னாகண்டல் பகுதிக்கு அண்மையாக உள்ள இடம்.சுதுபுரம் என்பது கோப்பபுளவு எனப்படும் இடத்தில் உள்ளது.இவ்வாறு விடுதலை புலிகளின் விமான தளங்கள் இரகசியமாக அமைக்கபட்டிருந்தன.
இதன்போதுதான் ஒரு நாள் விடுதலை புலிகளின் முத்த தளபதிகளுக்கு புலிகளின் வான்படை அணியினை தலைவர் அறிமுகம் செய்துவைத்தார் (இதனை முதல் தொடரில் விரிவாக பார்த்திருந்தோம்)இதன்போது இரண்டுபேர் விகிதம் விமானத்தில் ஏறி விமானத்தை ஓட்டிகாட்டி மக்களின் இடங்களையும் காண்பிக்கிறார்.தலைவர் விமானபடையின் பலம் தொடர்பாக தளபதிகள் அறிந்திருக்க வேண்டும் என்பதுக்கு அமைவாக இந்த அறிமுகம் நடைபெற்றது.இந்த பறப்பிற்கு பின்னால்தான் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த சு ப தமிழ்ச்செல்வன் அவர்களால் விடுதலைபுலிகளிடம் விமானபடை உள்ளதென்று அறிக்கை வெளியிடபட்டு இருந்தது.இந்த அறிவிப்பு சிறிலங்கா அரசை ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது இது அயல் நாட்டை கூட வியக்கவைத்தது.விடுதலை புலிகளின் விமான படையினை முடக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிலங்கா அரசின் எண்ணத்தில் மட்டுமல்ல அயல்நாட்டிலும் உருவாகிறது.சிறிலங்கா அரசின் புலனாய்வாளர்கள் பல தரைவழி தகவலை திரட்டுகிறார்கள் அதாவது வன்னியில் இருந்து வவுனியா செல்லும் மக்களை விசாரித்து தகவல்களை புடுங்கி எடுக்கிறார்கள்.இதன்போது விடுதலை புலிகளின் பயிற்ச்சி தளங்கள் வெளிப்படையாகின்றது.வன்னியில் இறுக்காமான சூழ்நிலை காணப்படும்போது சிறிலங்கா அரசின் வேவு விமானம் வன்னி மண்ணை வேவு எடுக்கிறது.இதில் வாகன போக்குவரத்து பாதைகள் ஆள் நடமாட்டங்கள் போன்றவற்றை வைத்து சில இடங்களை இனம்கண்டு தரைவழி தகவல் உடாக விடுதலை புலிகளின் இடங்களை உறுதிபடுத்துகின்றார்கள்.இது ஒருபுறம் இருக்க சிங்கள அரசிடமிருந்து நியாயமான தீர்வு கிடைக்காது என்பதையும் போரையே அது மீண்டும் முன்னெடுக்கும் என்பதையும் தெரிந்திருந்த விடுதலைபுலிகளின் தலைமை வரப்போகும் போரை எதிர்கொள்ளுவதர்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டு இருந்தார்கள்.

இதற்கான தயார் படுத்தல்கள் வன்னியில் பரவலாக நடைபெற்றது.மக்கள் படை உள்ளக பாதுகாப்பு படை எல்லை படை என மக்கள் கட்டுமானங்கள் கொண்டுவர பட்டு அடையாள அட்டைகள் வழங்கபட்டு பயிற்சி நடைபெற்றது.இதில் ஒரு பகுதியாக உதியம் வழங்கபட்டு பணிசெய்யும் விடுதலைபுலிகளின் தேசிய இராணுவ படையொன்றும் உருவாக்க பட்டிருந்தது.இந்த படையணியில் இளைன்சர்கள் யுவதிகள் பலர் முன்வந்து இணைந்தார்கள்.முதல் கட்டமாக யாழ் குடாநாட்டில் இருந்து ஒருசில இளைன்சர்கள் பயிற்சிக்காக பளைக்கு எடுக்கபட்டு சூட்டு பயிற்சிகள் வழங்கபட்டு யாழ்ப்பாணத்திற்கு சென்று இளன்சர்களை திரட்டும் பணியில் ஈடுபடுத்த படுகிறார்கள்.அதாவது குடாநாட்டை எதிரிகளிடம் இருந்து மீட்டு எடுக்க அங்குள்ள இளைன்சர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்பதற்கு ஒருசில இடங்களிலிருந்து முச்சக்க வண்டி சாரதிகள், பல்கலை கழக மாணவர்கள் ,பாடசாலை மாணவர்கள் என விடுதலை உணர்வுள்ளவர்களை கட்டம் கட்டமாக பளைக்கு அழைத்து சில முக்கியத்தவர்கள் கதைத்து பயிற்சி கொடுக்கபடுகிறது.பளையில் உள்ள எரிமலை என்னும் பயிற்சி தளத்தில் ஜி (12 ) என்னும் பயிற்சி தளத்திலும் சுட்டுபயிர்சிஅவசர அவசரமாக மேற்கொள்ள படுகிறது.
யாழ்ப்பான மக்கள் மத்தியிலும் வன்னி மக்கள் மத்தியிலும் கதை பரவலாக அடிபடுகிறது.விடுதலை புலிகள் வழிந்த தாக்குதலை செய்யபோகிறார்கள்.முதல் யாழ்ப்பாணத்தை தான் பிடிப்பார்கள் யாழ்ப்பாணம் பிடித்தால் சிறிலங்கா அரசு விடுதலை புலிகளின் கால்களில் விழுந்துவிடும் என்றெல்லாம் பல கதைகள் மக்கள் மத்தியில் உருவாகிறது.இவற்றை எல்லாம் இராணுவ புலனாய்வாளர்கள் அறிகிறார்கள் .அன்று யாழ் மாவட்ட இராணுவ பொறுப்பாளராக இருந்த ஜி எ சந்திரசிறி இத்தகவலை அறிந்து தனது தலைமைக்கு தெரியபடுத்தி இதனுடாக கிளாலி தொடக்கம் நாவுருகொவில் வரையான படை முன்னணி அரண்கள் பலபடுத்துகிரார்கள்.பாகிஸ்தான் நாட்டு இராணுவ அதிகாரிகள் இந்த முன்னணி காவல் அரண்களை பார்த்து ஆலோசனைகள் வழங்கியிருந்தார்கள்.என்பது குறிப்பிட தக்கது.யாழ்ப்பான முன்னணி காவலரண்களில் உள்ள படையினர் உசார் படுத்தபட்டு இரகசியமான சில படை செயற்பாடுகளில் சிறிலங்கா படையினர் ஈடுபடுகிறார்கள்.ஏராளமான எறிகணைகள் யாழ் குடாநாட்டில் குவிக்க படுகிறது.மேலதிக படையினர் குவிக்க படுகிறார்கள்.

கவச வாகனங்கள் களமுனையில் நகர்த்த படுகின்றன இவ்வாறு படை நகர்த்தல்களை சிறிலங்கா படையினர் இரகசியமாக மேற்கொள்கிறார்கள்.இவ்வாறு இருக்கையில் (2006 ) ஆண்டு ( 08 ) ம் மாதம் (11 ) திகதி மாலை (5 ) மணியளவில் ஏ ( 9 ) வீதி முகமாலை பாதையில் விடுதலை புலிகள் வழிந்த தாக்குதலை தொடுக்கிறார்கள்.விடுதலை புலிகளின் வலிந்த தாக்குதல் உடாக வன்னி களமுனை போர்கால முனையாக மாறுகிறது,இத்தாக்குதலில் விடுதலை புலிகள் சிறிலங்கா படையினரின் கவரன்களை தகர்த்து அழித்து சென்றாலும் இரண்டாம் நிலையான காவலரண்களை தாண்டி செல்ல முடியவில்லை.சிறிலங்கா படையினர் பின்வாங்கி தமது நிலைகளை இலக்குவைத்து கடுமையாக தாக்குகிறார்கள்.இதனால் பிடித்த நிலைகளில் நிலைகொள்ள முடியாத அளவிற்கு கடும் எதிர்பை விடுதலை புலிகள் எதிர்கொள்ளுகிறார்கள்.இதனால் அன்றைய தாக்குதல்கள் இடைநிறுத்த படுகிறது.இதனால் வன்னிக்கும் யாழ் குடவிற்குமான தரைவழி பதைய சிறிலங்கா மூடுகிறது வன்னியிலிருந்து யாழ்பாணம் சென்றவர்கள் யாழ்ப்பாணத்திலும் யாழில் இருந்து வன்னி சென்றவர்கள் வன்னியிலும் முடக்க படுகிறார்கள்.உறவுகளை பிரிந்து வாழும் மக்கள் வன்னியில் இருந்து வெளியேற முடியாத சுழல் காணப்படுகிறது.இந்த நிலையில் மன்னார் உயிலங்குளம் சோதனை சாவடி வவுனியா ஓமந்தை சோதனை சாவடி உடகவும் சென்ற அதே வேளை ஒருசில இளைன்சர்கள் காட்டு வழியாக மன்னார் சென்று படையினரின் கட்டுப்பாட்டுக்கும் கடல்வழியாக படகில் யாழ்ப்பாணம் சென்றடைகிறார்கள்.இவ்வாறு இருக்கையில் மன்னார் உயிலங்குளம் சோதனை நிலையத்தில் இறுக்கமான கட்டுபாடுகளை படையினர் மேற்கொள்கிறார்கள்.ஓமந்தை சோதனை நிலையத்தில் சிறிலங்கா படையினர் பொருட்களுக்கு கட்டுபட்டு தடை விதிக்கிறார்கள்.உயிலங்குளம் பாதை கண்காணிப்பில் இருந்து சர்வதேச செஞ்சிலுவை குழு வெளியேறுகிறது.இதன்போது விடுதலை புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் துப்பாக்கி முனையில் தொடங்கிய தாக்குதல் கடுமையான தாக்குதலாக மாறுகிறது( தொடரும்)

1 comment:

  1. அனைத்து பதிவுகளும் வாசித்தேன். நிறைய எழுத்து பிழைகள் உள்ளன. திருத்தி கொள்ளுங்கள்.

    ReplyDelete

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை