வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Sunday, October 23, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-27

விடுதலை புலிகளின் வான் படைப் பலத்தின் அறிமுகத்துடன் வான் தாக்குதல்கள் தொடர்கின்றது .தமது இரண்டாவது தாக்குதலை சரியாக ஒரு மாதத்தில் அதாவது ( 24-04-2007 ) அன்று பலாலி விமான தளத்தின் மீது வான் புலிகள் வெற்றிகரமாக நடத்தினார்கள்.இதன் பின் சிறிலங்காவின் பொருளாதார இராணுவ முக்கிய இலக்குகள் வான் புலிகளின் வேட்டைக் களமாக மாறியது .வான் புலிகள் பொருளாதார இராணுவ இலக்குகள் மீது மிக துல்லியமாக தாக்குதலை நடத்துவது அதிகரித்து சென்றது .சிறிலங்காவையும் அதற்க்கு உதவும் நாடுகளையும் கவலை கொள்ள வைத்தன. இந்நிலையில்தான் சிறிலங்கவிர்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் இன்னுரு தாக்குதல் நடைபெறுகிறது.வான் புலிகள் ஒத்துழைப்புடன் கரும்புலிகள் அணி நடத்திய மிகவும் துணிச்சல் மிக்க வெற்றிகரமான இணைப்புதக்குதல் இது.
தமிழர் தாயகத்தின் மீது பேரிழப்புக்களை ஏற்படுத்திய சிறிலங்கா வான்படையின் தங்குமிடமாக இருந்த அனுராதபுரம் சிறிலங்காவின் வான்படைதளம்தான் அந்த தாக்குதல் இலக்கு.அனுராதபுரம் வான்படைத்தளம் என்பது ஒரு சாதாரண வான்படைத்தளம் அல்ல வடக்கு பகுதியில் இருக்கின்ற அனைத்து இராணுவ தளங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதும்,வடபக்தியில் ஒரு இராணுவ நடவடிக்கையை செய்வதானால் அதற்க்கு இதயமாகவும் கட்டளை செயலகமாகவும் செயற்பட வேண்டிய தளமாகவும் இருந்தது.


அது மட்டுமல்ல வடக்கு பகுதியில் அனைத்து இராணுவ செயற்படுகளுக்குமான ஒரு மைய்யத்தளமாக இந்த வான்படைத்தளம் இருந்தது .இலங்கையில் உள்ள அனைத்து தளங்களினதும் இந்த தளம் மிகவும் வித்தியாசம் ஆனது.ஏனெனில் ஏனைய தளங்களில் மக்களின் போக்குவரத்திற்கும் சில பகுதிகள் ஒதுக்க பட்டுள்ளன .அனால் முற்றுமுழுதாக இராணுவத் தேவைகளுக்காகவே ஒதுக்கபட்ட தளம் அனுராதபுர தளம் .எந்த சந்தர்பத்திலும் எந்தவொரு பொதுமகனும் உள்நுழைய முடியாத அளவிற்கு மிகவும் இறுக்கமான பாதுகாப்பை பேணிவந்த தளம் இது.இந்த தளத்தின் மீது சிறிலங்கா பெரும் நம்பிக்கை கொண்டிருந்தது.அத்துடன் தளம் விரிவுபடுத்த பட்டுகொண்டிருன்தது மிகையொலி வானுர்திகளை நிறுத்துவதற்காகவும் எதிர்காலத்தில் பல தாக்குதல் வான்கலங்களை நிறுத்தி வைக்க பாதுகாப்பான தளம் என்பதையும் கருதி செயற்பாடுகள் மேற்கொள்ளபட்டு வந்தன.

இதே வேளை முற்றுமுழுதாக சிங்க கிராமங்களால் சூழப்பட்ட பகுதி என்பதால் இதற்குள் புலிகள் உடுருவது என்பது மிகவும் கடினமான விடையம் என்றே சிங்கள இராணுவம் நம்பியிருந்தது .அந்த நம்பிக்கையில் மண்ணை அள்ளிபோட்டனர் புலிகள்.இப்பெரும் தளத்தின் மீதுதான் கரும்புலிகளும் வான்புலிகளும் இணைந்து (22-10-2007 ) ஒரு இணைந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்துகிறார்கள்.

எல்லாளன் என தமிழீழ தேசிய தலைவரால் பெயரிடப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை குறித்து போராளிகளுக்கு மட்டுமல்ல பொறுப்பாளர்கள் மத்தியில் கூட அன்றைய சூழ்நிலையில் இவ்வாறான தாக்குதல் நடைபெறும் என்று எதிர்பார்கவில்லை .தாக்குதலுக்கு முதல்நாள் தளபதிகளை அழைத்த தமிழீழ தேசிய தலைவர் "உங்களுக்கு நான் எல்லாளனை காட்ட போகிறேன் "என்று கூறியபோது கூட யாருக்கும் என்ன எதுவென்று தெரியவில்லை,அத்தனை துரம் மிகவும் இரகசியமாக திட்டமிடபட்டு தலைவரால் ஒருன்கினைக்கபட்டு மேற்கொள்ளபட்ட தாக்குதல் இது .ஒரு தாக்குதல் நடவடிக்கையை தலைவரால் இத்தனை துரம் இரகசியம் பேணப்பட்டு மேற்கொள்ளபட்டது என்றால்,ஒரு பெரும் இராணுவ நடவடிக்கையை தலைவர் எவ்வாறு எதிர்கொண்டிருப்பார் என்பதை வரும்காலம்தான் பதில் சொல்லும்.அதுவரை பொறுத்திருக்கத்தான் வேண்டும் ,கடும் பயிற்ச்சி நீண்ட பயணம் என தங்களை வருத்தி இந்த வெற்றிக்காக உழைத்திருந்த கரும்புலிகள் தங்களையே கொடையாக கொடுத்து இந்த வெற்றியை தேசத்துக்கு பெற்று தந்தார்கள்.(21 ) கரும்புலிகளுக்கும் தலைமைதாங்கி தளபதியாக சென்றவர் இளங்கோ ,எத்தனையோ சமர்களங்களில் தோல்வி வந்து விடுமோ என்று எதிர்பாக்க பட்டநிலையில் அந்த களமுனையை வெற்றி களமுனையாக மாற்றிய பெருமைக்குரிய போராளி இளங்கோவிற்கு உண்டு.இந்த கரும்புலி அணியில் இரண்டாவது பொறுப்பாளராக வீமன் நியமிக்கபட்டிருந்தார் தலைவரின் மெய்பாதுகாப்பு அணியில் நம்பிக்கைக்குரிய போராளியாக இருந்த வீமநிடம்தான் ' தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தாயகத்தில் பயணிக்கும் போது அவருடைய பாதுகாப்புக்கான முழுப்பொறுப்பையும் தலைவர் ஒப்படைத்து இருந்தார்.இவ்வாறு நம்பிக்கைக்குரிய போராளிகளைத்தான் இந்த நடவடிக்கைக்கு தேர்தெடுத்து அனுப்பிவைத்திருந்தார்.தலைவரின் நம்பிக்கையை இறுதிவரை தக்கவைத்தார்கள்.

அன்றிரவு தலைவர் துக்கமின்றி தளபதிகளுடன் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு இருந்தார்.அதிகாலை ( 3.20 ) மணிக்கு இளங்கோ சண்டைய துவங்க போவதாக தலைவருக்கு அறிவிக்கிறார்.அப்போதுதான் அங்கிருந்த தளபதிகளுக்கே அனுராதபுரத்தில் பேரிடி விழப்போகும் உண்மை புரிகிறது.மிக வேகமாக தாக்குதலை நடத்தி தங்களுக்கு வழங்கபட்ட இலக்குகளை அழித்து அங்கிருந்த வானுர்திகளை தகர்த்து முடித்தார்கள்.விடுதலைபுலிகளின் வெற்றிகரமான தாக்குதல் வரிசைகளில் ஒன்றானா உலக நாடுகளை எல்லாம் விடுதலைப்புலிகள் பற்றி பேசவைத்த தாக்குதலாக இந்த தாக்குதலும் அமைந்து விட்டது.அனால் இந்திய இத்தாக்குதல் குறித்து ஆழமாக அச்சம் கொண்டது சிறிலங்கா படைகளின் வடக்கு கிழக்கிற்கான வான்படைத் தலைமையகம் அனுராதபுரத்தை மையமாக கொண்டு செயற்பட்டது.அதற்க்கு இந்த தாக்குதல் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விட்டாதாக கருதப்பட்டது.இத்தாக்குதல் முலம் சிறிலங்கா வான்படையினரின் பல வானுர்திகள் ,வான்கலங்கள் ,ஆயுதங்கள் , நவீன ராடார் கருவிகள் , அழிக்கபட்டு பலகோடி பெறுமதியான இழப்புக்கள் ஏற்படுத்த பட்டது.அந்த இழப்பினை இறுதிவரை சிறிலங்கா வெளியிடாமல் மறைத்துகொண்டது.தாக்குதலை நடத்திய விடுதலை புலிகளின் வான்படை வெற்றிகரமாக தாயகம் திரும்பின.சிறிலங்கவிற்கு பெரும் அழிவினை ஏற்படுத்திய இந்த கரும்புலிகளில் ( 21 ) கரும்புலிகள் தமது வீர வரலாற்றை எழுதினார்கள்.மறுநாள் அவர்கள் தேசிய தலைவருடன் நிற்கும் படங்கள், ஒளிப்படங்கள் ,வெளியிடபடுகின்றன வன்னி மட்டுமல்ல புலம்பெயர்ந்து தமிழ் மக்கள் வாழும் நாடுகள் எங்கும் இக்கரும்புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.


அனால் இந்த தாக்குதலால் ஏற்பட்ட தோல்வியால் அவமானமும் ஆத்திரமும் அடைந்த சிறிலங்கா மிக கேவலமாக நடந்துகொண்டது.கரும்புலிகளின் ஆடைகளை களைந்து அவமான படுத்த முனைந்தவர்கள் தங்களைத் தாங்களே கேவலமாக்கி அவமான பட்டுகொண்டார்கள்.எல்லாவற்றையும் துறந்துவிட்டு வந்த புத்தரின் மண்ணில் அவரைப்போலவே எங்கள் போராளிகளும் கிடந்தார்கள் தமிழர் மனங்களில் அவர்கள் தெய்வமாக உயர்ந்தார்கள்.இதேவேளை விடுதலை புலிகளின் வான்படையால் சிறிலங்கா படையினர் மட்டுமல்ல வேறு சிலரும் அச்சம் கொண்டிருந்தனர் என்பது அன்று உலகம் அறிந்த உண்மை.தனியாக தாக்குதல் நடத்திவந்த வான்புலிகள் தற்போது இணைந்து தாக்குதல் நடந்துவதென்பது எதிர்காலத்தில் சிறிலங்கவிற்கு மேலும் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும் என்று அச்சம் கொள்ள தொடங்கினார்கள்.இதனை கட்டுபடுத்த உலகநாடுகளின் கால்களில் வீழ்ந்தது சிறிலங்கா.வான் புலிகளை ஒடுக்க உலக நாடுகளிடம் உதவி கேரி நின்றார்கள்.இந்தியாவும் சிறிலங்கவிற்கு ஆதரவாக உலக நாடுகளின் உதவிகரன்களை பிடித்து கொடுத்தது.இந்தநிலையில் வானத்தில் இருந்து வானத்தில் தாக்குதல் நடத்தகூடிய வல்லமை பொருந்திய கு (7 ) ரக விமானத்தினை சிறிலங்கா வான் படையினர் கொள்வனவு செய்கிறார்கள்.இதில் இரவில் தாக்கும் திறன்கொண்ட தொழில்நுட்பங்களை கையாள்கிறார்கள்.இந்த நிலையில்தான் வெற்றிகராமாக தாக்குதல்களை நடத்திய வான் புலிகளுக்கு தமிழீழ தேசிய தலைவர் விருது வழங்கி கவுரவித்தார்,அந்த நிகழ்வு மிகவும் எளிச்சிகரமாக நடைபெற்றது அந்த நிகழ்வு நடைபெற்ற மறுநாள்தான் பேரிழப்பு ஒன்று வந்து சேர்ந்தது ( தொடரும் )



**********************************************************************************
உங்கள் கருத்துக்களையும்  உங்கள் விமர்சனங்களையும்  தவறாமல் பதியுங்கள்  உறவுகளே  ..அத்தோடு  இங்கு  உள்ள >>>((((  இதை பின் தொடர்ந்து நீங்களும் எம்மோடு சங்கமித்து கொள்ளுங்கள் உறவுகளே . (Followers ))))<<< இதை  தொடர்ந்து எண்கள் குழுமத்துடன் சங்கமித்து  கொள்ளுங்கள் உறவுகளே  

**********************************************************************************

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை