வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, October 6, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-11


மட்டகிளப்பின் சிறப்பான கிரமாமாக பழுகாமம் அமைந்திருக்கிறது.இங்கு உதிர்த்தவர்தான் கேணல் ரமணன் அவர்கள். இவர் பழுகாமத்தில் பிறந்து வளர்ந்து சிறு வயதில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட ஒரு சிறந்த போராளி.மட்டகிளப்பு மாவட்டத்தின் புலனாய்வு துறை பொறுப்பாளராக செயற்பட்ட இவர் மறைமுகமாக வெளியில் உள்ளவர்களுக்கு இவரை பற்றி தெரியாத அளவிற்கு இவரது செயற்பாடுகள் இருந்தது.எனினும் இவர் தனது பொறுப்பு என்று இல்லாமல் எல்லோரிடமும் சிரித்து பேசி கதைத்து கவரகூடிய தன்மைய கொண்டிருந்தார்.மட்டகிளப்பு மாவட்டத்தில் தமிழினத்துக்கு எதிராக செயற்படும் துரோகிகளை இனம் காண்பதிலும் அதாவது தமிழ் முஸ்லீம் மக்களிடையே பிரச்சனைகளை தோற்ருவிப்பவர்களை இனக்கலவரத்தை துண்டி விடுபவர்கள் விடுதலை உணர்வாளர்களை காட்டி
கொடுப்பவர்கள்.ஒட்டு குழுக்களுடன் இணைத்து செயற்படுபவர்கள் உட்பட தமிழ் துரோகிகளை இனம்கண்டு அவர்களை களையும் நடவடிக்கையுடன் விடுதலை புலிகளின் படையணிகளில் புலனாய்வு கட்டமைப்பின் செயற்பாடுகளை வளர்த்து எடுப்பதிலும் தீவிரமாக செயற்பட்டவர்.இவருக்கு என்று மட்டகிளப்பு மண்ணில் நீண்ட வரலாறு உண்டு. இவர் தனது களமுனை செயற்பாடுகளை களமுனைக்கு சென்று பார்வையிடுவார்.இவ்வாறுதான் (21.05.2006 ) அன்று முன்னணி காவலரண் பகுதியை பர்வையிடுவதுக்காக இவர் சென்றிருந்த போது எதிரியின் சினைப்பர் தாக்குதலுக்கு இலக்காகி வீரச்சாவை தழுவிக்கொண்டார்.மட்டகிளப்பு மண்ணில் உதிர்த்த ரமணன்

மட்டகிளப்பு மண்ணில் முதல் கேணல் என்ற பெருமையுடன் விதைக்கபடுகிறார்.இவ்வாறன வீரம் செறிந்த போராளிகளால் நிறைந்த மண்தான் மட்டகிளப்பு.அனால் இந்த மண்ணில் பிறந்தும் கோடாரிக்காம்பாக மாறியிருந்தார் கருணா.விடுதலை புலிகளின் செயற்பாடுகளை சீர்குலைக்க ஒட்டுக்குழுவினர் குறிப்பாக கருணா குழுவினர் படுவான்கரை மண்மீது தமது எதிர் செயற்பாடுகளை காண்பிக்கிறார்கள்.விடுதலை புலிகளின் காவலரண் மீது கருணாகுழு தாக்குதல் செய்வதும் பின்பு கருணா குழுவினரை விடுதலைப்புலிகள் விரட்டியடித்து களைவதுமாக சில காலங்களாக காணப்படுகிறது.
கருணா குழுவினை வைத்து சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகள் மீது போர் துடுத்து பார்த்தார்கள்.முட்டி முட்டி மோதி கருணா குழுவால் இயலாத நிலையில் அவர்களுடன் சிறிலங்கா படையினரும் இணைந்து விடுதலை புலிகள் மீது போர் தொடுக்கிறார்கள்.இவ்வாறு படையினரின் போர் செயற்பாடு உக்கிரமடைகிறது.சாதாரண இயந்திர துப்பாக்கி சண்டையாக காணப்பட்ட தாக்குதல்.பின்பு பீரங்கி தாக்குதலகாக விரிவடைகிறது இதனால் அங்கு வாழ்ந்த மக்கள் நகர் பகுதி நோக்கி நகர்கிறார்கள்.இதனிடையே பொலநறுவை காட்டினுள் கருணா குழுவின் முகாங்கள் விடுதலை புலிகளால் தாக்கி அளிக்கபட்டு அப்புறபடுத்த படுகிறார்கள்.இதன்போது அங்கு மக்களுக்கு தொண்டுசெய்த தமிழர் புனர்வாழ்வு பணியாளர்கள் கருணா குழுவினரால் வாகனத்துடன் கடத்தபட்டு படுகொலை செய்யபட்ட கொடூர சம்பவம்குட விடுதலை புலிகளால் அம்பலபடுத்த படுகிறது.இத்தனையும் நடந்துகொண்டு இருந்தும் சமாதானத்தை குழப்பும் வகையில் ஆயுததாரிகளின் நடவடிக்கைய உக்குவிக்கும் சிறிலங்கா அரசு உலகநாடுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.வேடிக்கை பர்த்துகொண்டிருந்தன மட்டகிளப்பில் உள்ள போர்நிறுத்த கண்காணிப்பு குழு தனது செயற்பாடுகளை செய்யவே இல்லை போர்நிறுத்த கண்காணிப்பு குழு பேரளவில்தான் அங்கு இருந்தது.இவ்வாறு படுவான்கரையில் கிழக்கின் இதயம் என்ற பெயரில் சிறிலங்கா அரசு போரினை தீவிரபடுத்தியது.முதற்கட்டமாக படுவான்கரையின் எல்லை கிராமங்களை பீரங்கி தாக்குதல் விமான தாக்குதல்கள் முலம் நீர்முலம் ஆக்கியது.இதில் குறிப்பிட்டு குறவேண்டிய விடயம் என்னவெனில் சிறிலங்கா வான் படையினர் கரடியன்று பகுதியில்தான் முதன் முதல் வெளிச்ச குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தினார்கள்.அதாவது அன்று மழைக் காலம் கரடியன்று பிரதேசத்தில் மழைமேகம் சூழ்ந்திருந்தது.இருள் சூழ்ந்த நேரம் அது அப்போது தாக்குதல் நடத்த வந்த மிக் விமானங்கள் வெளிச்ச குண்டுகளை வீசின நிலம் பகல் போல காட்சி அளித்தது.இதனை பயன்படுத்தி தாக்குதலை நடத்தின அங்கிருந்த மக்களுக்கு இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.இரவில் இவ்வாறன தாக்குதல்கள் தொடர்த்தால் அழிவுகள் அதிகமாகும் என மக்கள் அன்சினார்கள்.இவ்வாறன மழை வெய்யில் இரவு பகல் பாராது விமானங்கள் தாக்குதலை நடத்தின அத்துடன் வாழைச்சேனை படை முகாமிலிருந்து அட்லேறி பீரங்கிகள் ரொக்கட் எறிகணைகள் ஏவப்படுகின்றன படையினரின் தீவிரம் அடைகின்றன.படுவான்கரையில் ஒருசில இடங்களை பிடித்து விட்டாதாக படையினர் அறிவிக்கின்றார்கள்.இருந்தும் விடுதலைப்புலிகள் படையினர் மீதும் தீவிர எதிர்தாக்குதலை நடத்தி படையினருக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்திக்கொண்டு இருந்தார்கள்.காடுகளில் பொறிவெடிகள் மிதிவெடிகளால் படையினர் பெரும் இழப்பை சந்திக்கின்றார்கள்.இவ்வாறு படையினரின் இழப்பு படைத்தளபதிகளுக்கு வெறுப்பை ஏற்படுத்துகின்ற அளவுக்கு இருந்ததை புலனாய்வு தகவல்கள் முலம் அறியக்குடியதாக இருந்தது.இந்த நிலையில் டாங்கிகள் மல்டிபெரல் எறிகணைகள் பல இடங்களில் இருந்தும் ஒரு பகுதியை இலக்குவைத்து கடுமையான தாக்குதலை நடத்தின.ஒரு முற்றுகைக்கு உட்பட்ட பிரதேசமாக படுவான்கரை மாறுகின்றது.சிறிலங்கா பாரிய ஆயுத தளபாட பின் உதவிகளுடன் போரை தொடக்கி இருக்கிறது என்பது புரிந்தது.அதன் எறிகணை மலைகள் இதை புரியவைத்தன தாக்குதல் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க விடுதலை புலிகள் அடுத்த கட்ட திட்டமிடல்களில் ஈடுபட்டார்கள்.படுவான்கரையில் இருந்து பின்வாங்குவதே சரியென முடிவெடுக்க பட்டு அங்கிருந்து கரடியனாறு குடிம்பிமலையில் உள்ள காடுகளை நோக்கி விடுதலை புலிகள் படையணிகளை நகர்த்தினார்கள்.படுவான்கரையில் இருந்த வெடிபொருட்கள் பாரிய ஆயுதங்கள் அன்றைய காலகட்டத்தில் நகர்த்த முடியாத சுழல் காணப்படுகிறது.இவற்றை புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.சிலவற்றை தகர்கின்றார்கள் அன்று மட்டகிளப்பு மாவட்ட தளபதியாக இருந்த கேணல் பானு அவர்களின் பணிப்பின் பெயரில் விடுதலை புலிகளின் சொத்துக்கள் படையினர் கையாக படுத்தாத வண்ணம் எரிக்க பட்டும் புதைக்க பட்டும் மறைக்கபடுகின்றன.தாக்குதல் தீவிரமடைந்த நிலையில் போராளிகள் காயம் அடைவதும் அதிகரிக்கிறது அவர்களை வன்னி கொண்டு செல்ல ஒரு பெரும் அணி தயாராகிறது.அதில் பொறுப்பானவர்கள் சிலரும் அடங்கியிருந்தார்கள்.காட்டு வழியாக வன்னிக்கு மிக நீண்ட பயணம் அது காட்டில் நீண்டதுரம் நடக்க வேண்டும் தமக்கு தேவையான உணவு வெடிபொருட்கள் என்பவற்றுடன் காட்டில் அணி நகர்கிறது.மட்டகிளப்பில் இருந்து வன்னிக்கு செல்லும் போராளிகள் மட்டகிளப்பு கொழும்பு பிரதான வீதிய கடக்க வேண்டும் இதன்போது படையினருடன் கடுமையாக மோதவேண்டி வரும் இதனால் பாதை வழிகாட்டிகள் முன் செல்கிறார்கள்.விடுதலை புலிகள் செல்லும் வழி என்று படையினருக்கு ஏற்கனவே தெரியும்.ஏனெனில் வன்னியில் இருந்து மட்டகிளப்பிற்கும் மட்டகிளப்பில் இருந்து வன்னிக்கும் செல்லும் படையணிகள்.கொழும்பு வீதியில் படையினருடன் சண்டை பிடித்தே பாதைய கடக்க வேண்டும்.தாக்குதல் உச்சம் அடையும் போது விடுதலை புலிகள் வன்னிக்கு செல்வார்கள் என்று தெரிந்திருந்த சிறிலங்கா இராணுவ தலைமை கொழும்பு வீதியில் மேலதிக படையினரை குவித்திருந்ததுடன் சண்டைகள் இன்றி போராளிகளுக்கு கடும் இழப்புக்களை ஏற்படுத்தும் வகையில் எறிகணை வீச்சு தாக்குதலுக்கான இலக்குகளை தீர்மானித்து காத்திருந்தார்கள்.ஒரு பெரும் அழிப்பு தாக்குதலை படையினர் நடத்த போகிறார்கள் என்ற புலனாய்வு தகவல்கள் எதுவும் கிடைத்திராத நிலையில் போராளிகள் வன்னி நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறார்கள்( தொடரும்)

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை