வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Saturday, October 1, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-6


விடுதலைபுலிகளால் திருகோணமலை கைப்பற்ற பட்டு விட்டால் அங்கு தமது இருப்பு கேள்விகுரியகிவிடும் என்ற எண்ணம் இந்தியாவிடம் காணபட்டது.திருகோணமலை படைத்தளம் மீது விடுதலைபுலிகளின் எறிகணை தாக்குதல்களும் கடற்பரப்பில் கடற்புலிகளின் ஆதிக்கமும் திருகோணமலையை சிறிலங்கா இழக்க வேண்டிய நிலைக்கு கொண்டுவந்து விட்டுவிடும் என்பதை இந்திய உணர்ந்திருந்தது அதனை தக்கவைப்பதற்கான நடவடிக்கையில் இந்திய இறங்கியது.
திருகோணமலையில் இந்தியாவிற்கு சொந்தமான என்னை குதங்கள் மட்டுமல்ல பல பொருளாதார நலன்களும் இருக்கின்றன.இவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது திருகோணமலையில் தனது இருத்தலுக்கான ஆதிக்கத்திற்கு ஆப்பு வைத்துவிடும்.என்பதே இந்தியாவின் அவசர நடவடிக்கைக்கு காரணம்.திருகோணமலைய முழுமையான கட்டுபாட்டிற்குள் கொண்டுவர அங்கிருந்து விடுதலைப்புலிகள் அகற்றப்பட வேண்டும் என்ற முடிவிற்கு இந்திய வந்திருந்தது.எனவேதான் கிழக்கில் மகிந்த எடுத்த படையெடுப்புக்கு இந்திய தனது ஆதரவுகளை வழங்கியது வெளிப்படையாக சொல்லுவதானால் திருகோணமலையில் விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை இந்தியாவே தூண்டிவிட்டது.மகிந்தவின் கிழக்கின் உதயம் என்ற கருத்துருவாக்கமும் இந்தியைடம் இருந்து வந்த கருத்துருவாக்கம் என்பது திடமானது
அத்துடன் விடுதலைபுலிகளின் கட்டுபாட்டில் இருந்த சில பிரதேசங்களையும் ஆக்கிரமித்து அங்குள்ள வளங்களையும் பயன்படுத்திகொள்ளவேண்டும் என்பது இந்தியாவின் நீண்டகால நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
திருகோணமலையில் புல்மோட்டை துடக்கம் முதூர் வரையான கடற்கரை பிரதேசங்கள் பல வளங்களை கொண்டிருக்கிறது .இதில் கனிய வளங்கள் மிகமுக்கியமானவை இதனை தனதாக்கி கொள்ளுவதில் முன்னர் யப்பான் அரசு கடுமையாக ஈடுபட்டுவந்தது.சில வருடங்களுக்கு முன் புல்மோட்டையில் யப்பான் கொண்டு செல்லுவதற்காக கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு இருந்த கப்பல் ஒன்று விடுதலைபுலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தது உங்கள் நினைவுக்கு வரலாம்.எனவே இவ்வாறன வளங்கள் நிறைந்த வசதியான இடங்களை கையகபடுத்த வேண்டும் என்ற நிலையில் இந்திய சிறிலங்கா அரசுக்கு உதவிகளை வழங்க தொடங்கியது இந்தியா அதிகாரிகளின் ஆலோசனைகள் சிறிலங்காவிற்கு வழங்கபடுகின்றன.இதில் படைத்துறை சார்ந்த உதவிகளும் வழங்கபடுகின்றன.இந்திய அதிகாரிகள் கிழக்கில் நிலைகொள்கின்றார்கள் என்பது அன்று நமக்கு தெரியவில்லை.அனால் ( 2007 ) ம் ஆண்டு வவுனியா யோசப் படைமுகாம் மீது புலிகள் நடத்திய கரும்புலித் தாக்குதலில் இந்திர (02 ) ராடார் சேதமாக்க பட்டதும் இதன்போது இந்திய அதிகாரிகள் காயமடைந்ததையும் பின்பு கானக்குடியதாக இருந்தது .எனினும் கிழக்கில் அவர்கள் இருந்ததற்கான ஆதரங்களையும் தகவல்கள் எவற்றையும் வெளிக்கொண்டுவர முடியவில்லை.
எனினும் திருகோணமலையில் இந்தியாவிடம் இருந்த எண்ணெய் குதங்கள் போன்றவற்றின் பாதுகாப்புக்காக இந்திய படைகள் அங்கு நிலைகொண்டுள்ளன என்பதையும் தொழில்நுட்ப கருவிகளையும் வைத்திருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.திருமலையில் இருந்த விடுதலைபுலிகளை அகற்றுவது என்ற நோக்கில் படைநடவடிக்கை பெரும் எடுப்பில் ஆரம்பமாகின்றது.முதூர் பகுதியில் இருந்த படையினர் விடுதலைபுலிகளின் பிரதேசங்களை ஆக்கிரமிக்க நகர்கின்றார்கள்.இதனால் சுமார் ( 80,000 ) வரையான மக்கள் வாகரை வெருகல் பிரதேசங்களில் முடக்கபடுகின்றார்கள் பொருளாதார தடைகள் விதிக்கபட்டு மக்கள் பட்டினியால் வதைக்க படுகின்றார்கள்.இதற்கிடையில் விடுதலைபுலிகளின் நிலைகள் என குறிப்பிடப்படும் இடங்கள் மீது சிறிலங்கா படையின் மிக் கிபீர் விமானங்கள் தாக்குதல் நடத்துகின்றன.இவற்றில் மக்கள் கொல்லபடுகின்றார்கள் காயமடைகிறார்கள் அனால் சமாதன காலத்தில் மேற்கொள்ளபட்ட இந்த தாக்குதலால் சர்வதேசம் அதிர்சியடைந்த நிலையில் அவர்களை திசைதிருப்பும் நோக்கத்துடன் சிறிலங்கா அரசு திட்டமிட்ட வகையில் செய்திகளை வெளியிடுகின்றது.திருமலை துறைமுகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விடுதலை புலிகளையும் அவர்களின் பீரங்கிகளையும் அளிக்கும் நடவடிக்கை தொடர்கின்றது என்றும் சிங்கள உடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.இதனையடுத்து வெருகல் ஈசிலம்பரு மீது முர்க்கதனமான தாக்குதல்களை சிறிலங்காவின் முப்படைகளும் மேற்கொள்கின்றார்கள் .வெருகல் பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற முருகன் வெருகல் முருகன் ஆலயம் அமைத்துள்ளது.திருகோணமலை என்ற பேருக்கு அமைவாக இங்கு மலைகள் அதிகம் காணப்படும்.அந்த வகையில் வெருகல் பிரதேசத்திலும் மலைகள் காணபடுகின்றன.மகாவலி கங்கையின் ஒரு கிளை ஆறாக வெருகல் ஆறு உள்ளது இந்த ஆற்றின் அருகிலே வெருகல் முருகன் ஆலயம் அமைந்துள்ளது.சிறிலங்கா படைகளின் தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் வெருகல் ஆறும் மற்றும் முருகன் ஆலையத்தை அண்டிய பகுதிகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தார்கள்.இந்த மக்களுக்கான அத்தியாவசிய உதவிகள் சிலவற்றை அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்குகின்றன.இதற்கிடையில் விடுதலைபுலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பினை படையினர் ஆக்கிரமிக்க தயாராகின்றார்கள்.இந்த முயற்சிய தடுப்பதுக்கு மட்டக்கிளப்பில் இருந்து திருகோணமலைக்கு ஒரு தொகுதி போராளிகள் நகர்த்தப்பட தயாராகின்றார்கள்.எனினும் சில காரணங்களால் இவர்களின் நகர்வு இடைநிறுத்த படுகின்றது.இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
அதேவேளை திருகோணமலையில் ஒருந்த காயமடைந்த போராளிகள் கட்டுபகுதி உடாக மட்ட கிளப்பிற்கும் ஏனைய பகுதிக்கும் நகர்த்த படுகின்றார்கள் .கிபீர் விமானங்கள் தாக்குதலில் ஈடுபடுகின்றது.தளபதி சொர்ணம் நிலைகொண்டிருந்த பகுதிகளை இலக்குவைத்து சிறிலங்கா வான்படையினர் கடுமையான தாக்குதலை நடத்தியிருந்தனர்.இலக்குகளை படையினர் அறிந்துகொண்டே தாக்குதலை நடத்தியதில் இருந்து இந்த தாக்குதல்களுக்கு பின்பலம்வாய்ந்த கரங்கள் இருக்கின்றன என்பதை உணரகுடியாதாக இருந்தது.மக்கள் வாழ்விடங்களிலும் தாக்குதல்கள் கடுமையாக இருந்தது மக்கள் பாதிக்க பட்டத்தை அடுத்து சிறிலங்கா அரசு மீது சில குற்றசாட்டுக்கள் வைக்கபடுகின்றன.இந்த குற்ற சாட்டுக்களில் இருந்து தப்பிப்பதற்காக மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு தாக்குதலை நடத்துவதுக்கு சிறிலங்கா முனைகின்றது.அங்கிருந்து மக்களை வெளியேறுமாறு சிறிலங்கா உத்தரவு இடுகிறது அனால் மக்கள் அங்கிருந்து வெளியேற மறுக்கின்றார்கள்.இதனால் விடுதலைப்புலிகள் மக்களை பயணமாக வைத்திருக்கிறார்கள் என்று இன்னுரோ பொய்யான குற்ற சாட்டையும் சர்வதேச ரீதியாக சிறிலங்கா அரசு முன்வைக்க தொடங்கியது.எனவே சிறிலங்கா அரசின் இந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்க போர்நிறுத்த கண்காணிப்பு குழுவுடன் விடுதலை புலிகளின் அரசியல் பிரிவினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றார்கள்.மக்களின் நிலைப்பாட்டினை அறிந்துகொள்ள போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரை விடுதலை புலிகளின் கட்டுபட்டு பகுதிக்கு நேரில் வந்து மக்களிடம் நிலமைய கேட்டறிந்து கொள்ளும்படி கட்டாயபடுத்துகின்றார்கள்.இதற்கமைவாக கந்தளாய் உடாக போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினர் வெருகல் பிரதேசம் செல்கின்றார்கள் அவர்கள் அங்கு சென்றிருந்த போது நிலைமை மேலும் மோசமடைகின்றது.( தொடரும் )

உறவுகளே உங்களின் கருத்துக்கள் விமர்சனங்களை தவறாமல் பதியுங்கள் ..அத்தோடு இந்த வலைப்பூவில் இணைந்து உங்கள் ஆதரவுகளை கொடுங்கள் ..உங்கள் ஆதரவுகளோடு எமது பயணம் தொடரும்

3 comments:

  1. தரமான பதிவுகள் உண்மைகளை மறைபடாமல் புதைக்கப்பட்ட வீரனின் உடலின் உதிரங்கள் தெளிவாக உணர்த்திய சகோதரி - தமிழீழத்தேவதைக்கு எனது நன்றிகளுடன் வாழ்த்துக்கள்.

    உறவுகளே நீங்களும் அறியும் பகிருங்கள்.
    வீரன் புகள் மறைவதில்லை மறுக்கப்பட முடியாது.
    எழுவோம் சரித்திர வீரன் போன்றே...

    ReplyDelete
  2. நன்றி சகோதரரே இதை எமக்கு உணர்த்திய உறவின் விபரம் வெகு விரையில் அவரது பாதுகாப்பு உறுதியானதும் வெளியிடுவோம்

    ReplyDelete
  3. யாவரும் எதிர்பார்க்கின்றோம் ..
    வீர நல்வரவு..

    ReplyDelete

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை