வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Wednesday, September 28, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-2


தமிழ்ழீழ விடுதலை புலிகளின் போராட்ட வரலாற்றிலே மாற்றத்தை ஏற்படுத்திய (2002 )ம் ஆண்டின் பின்னரான காலபகுதி அமைந்துள்ளது அதாவது சமாதனா காலபகுதி என்று குறிப்பிடலாம் .இந்த சமாதனா காலபகுதியில் விடுதலை புலிகளின் கட்டுபாட்டில் உள்ள நிர்வாக பகுதியான வன்னி பகுதிக்கு பல்வேறுபட்ட நாட்டு பிரமுகர்களின் வருகை வேற்றின மக்களின் வருகை என்பன அதிகரித்திருந்த வேளையில்தான் .விடுதலை போராட்டத்திற்கு எதிரானவர்களின் உடுருவல்கள் என்பனவும் அதிகரித்திருந்தன
இதனை முடியடிக்க இவ்வறனவர்களை கண்டறிந்து இந்த உடுருவல்களை தடுக்கும் நடவடிக்கையில் விடுதலை புலிகளின் புலனாய்வு பிரிவினர் வன்னி பெருநிலப்பரப்பில் தீவிரமாக ஈடுபட்டனர் .
தமிழ் மக்கள் சிலரே இவ்வாறான துரோகத்தனங்களில் ஈடுபட்டு இருந்ததால் சந்தேகத்திற்கு இடமானவர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தபட்டபோது .மக்களிடையே சில மனகசப்பும் ஏற்படத்தான் செய்தது ..எனினும் தாயகத்தின் பாதுகாப்பு என்றவகையில் இந்த நடவடிக்கைக்கு பெருமளவு மக்கள் ஆதரவு வழங்கினர் இதே வேளை விடுதலை புலிகளின் கட்டுபாட்டு பகுதிக்கான பொருளாராத தடை தளர்த்தபட்டது ..விடுதலை புலிகளும் வன்னி வாழ் மக்களும் பொருளாதார ரீதியான வளர்ச்சிய பெறுவதுக்கு சற்று வழியையும் ஏற்படுத்தி கொடுத்தது .அனால் இது மறைமுகமாக தமிழ்ழீழ விடுதலை போராட்ட வளர்ச்சிக்கு மறைமுக பாதிப்பு ஒன்றை ஏற்படுத்தி கொண்டிருந்ததையும் மறுப்பதற்கு இல்லை ..
இவ்வாறு வன்னி மக்கள் மீதான பொருளாதார தடை சிறிலங்கா அரசால் நீக்கபட்டத்தை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் உள்ள தங்கள் நிர்வாக பகுதிகளுக்கும் பொருளாதார தடைகளை முற்றுமுழுதாக நீக்குமாறு விடுதலை புலிகளால் சிறிலங்கா படையினிடம் கோரிக்கை விடப்பட்டது .இதன் பிரகாரம் எழுந்த அல்லது உருவாக்கபட்ட பிரச்சனைதான் மாவிலாற்று பிரச்சனை.இயற்கையின் எழில் நிறைந்த மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் காணப்படுகிறது .இயற்கை துறைமுகம் விமானபடைத்தளம் எண்ணெய் சேமிப்பு கிணறுகள் என்று பல நாடுகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அது காணபடுகிறது .விஞ்ஞானி ஆதார் சீ கிளாக் அவர்கள் குட ஆசிய கண்டத்தில் திருகோணமலைய முக்கிய இடமாக குறிப்பிட்டு உள்ளார் .அதாவது செய்மதி ஏவுதளம் அமைக்ககூடிய இடமாக திருகோணமலை விளங்குவதாக அவர் கணித்திருந்தார் .அதேவேளை பல்வேறு நாடுகளும் திருகோணமலைய முதன்மை இடமாக கருதுகின்றன இந்நிலையில் திருகோணமலையில் சில இடங்கள் சிறிலங்கா அரசால் வெளிநாடுகளுக்கு குத்தகைக்கு விடபட்டு இருந்தன .இவ்வாறு அமையபெற்ற இடத்தில் இருந்து கொண்டே விடுதலை புலிகள் (2003 ) ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தலைதுக்கிய துரோகத்தினை களைவதுக்கு படையெடுத்து அதில் வெற்றியும் பெற்றார்கள் .கிழக்கில் இருந்து விடுதலை போராட்டத்தின் துரோகிகள் விரட்டியடிக்கபட்டு பாதுகாப்பான நிலைக்கு கொண்டுவரப்பட்டத்தின் பின்னர் அங்கு விடுதலை புலிகளின் நிர்வாக கட்டமைப்புக்கள் மீண்டும் செயற்பட தொடங்கின .திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் தொடக்கம் வெருகல் துறைமுகத்துவாரம் வரையான ( 50 ) மீற்றர் கரையோர பகுதி விடுதலை புலிகளின் திறமைமிக்க நிர்வாக பகுதிகளில் ஒன்றாக விளங்கியது.பல கிராமங்களை உள்ளடக்கிய இந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் விவசாயத்தையும் கடல் தொழிலையும் தமது தொழிலாக கொண்டு வாழ்ந்து வந்தார்கள் .கல்வியில் சற்று குறைவான நிலையிலே இங்கு காணபட்டது இம்மக்கள் தமது அன்றாட பொருட்களை குட சிறிலங்கா படையினரின் பிரதேசங்களுக்குள் சென்றே பெற்றுகொள்ள வேண்டிய தேவை உள்ளது .சம்பூர் மக்கள் கட்டைபறிச்சான் பொலிஸ் சோதனை நிலையம் உடாகவும் ஈசிலம்ப்று வெருகல் கிராம மக்கள் சேருநுவர படை சோதனை நிலையம் உடாகவும் கதிரவெளி மக்கள் வாழைச்சேனை படை சோதனை நிலையம் உடாகவும் சென்றே பொருட்களை பெறவேண்டும் .ஒருவர் தனக்கு தேவையான பொருட்களை மட்டுமே கொண்டுசெல்லாம் பெருமளவு பொருட்கள் எடுத்துசென்றால் அவர் படையினரால் சந்தேகிக்கபட்டு விசாரிக்கபடுவார் .இவ்வாறு அங்குள்ள மக்களுக்கான பொருளாதார தடை சிறிலங்கா படையினரால் போடபட்டு இருந்தது .இவற்றின் மத்தியில்தான் விடுதலை புலிகள் தமது நிர்வாகத்தை அங்கு நடத்தினார்கள் .காட்டு வழியாகவும் கடல் வழியாகவும் பொருட்களை கொள்வனவு செய்தே விடுதலைப்புலிகள் தமது நிர்வாகத்தை நடத்தினார்கள் .அங்கு பல பயிற்சி தளங்களை நிறுவினார்கள் பலநுறு போராளிகளை உருவாக்கினார்கள் மறைமுகமாக அங்கு விடுதலைபுலிகளின் கடற்படைத்தளங்கள் நிறுவபட்டன.
இதன் பிரகாரம் புலம்பெயர்வால் தமிழ் மக்களின் நிதி உதவியில் கொள்வனவு செய்யபட்ட ஆயுத தளபாடங்கள் கப்பல் வழியாக திருகோணமலையில் ஒருதொகுதி இறக்கபடுகிறது .இவ்வாறு அங்கு கடல்புலிகளின் நிலைபடுத்தல் உயர்ந்துகொண்டு சென்றது.. இதனாலையே விடுதலைபுலிகளின் கடல்புலிகளின் ஆதிக்கம் மேலோங்கி காணப்படும் காலப்பகுதியாக (2003 ) ம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதி அமைந்தது ,கடல்புலிகளின் பலமே விடுதலைபுலிகளின் பலம் என்று குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பலமான அணியாக கடற்புலிகள் அணி செயல்பட்டது .இது சிறிலங்கா கடற்படைக்கு மட்டுமில்லை தரைப்படைக்கும் பாரிய அச்சுறுத்தலாக இருந்தது .தங்களுக்கான படையினரின் பலத்தை பெருக்கிகொண்டும் ஆயுத தளபாடங்களை கொள்வனவு செய்துகொண்டு இருந்த சிறிலங்கா படையினருக்கு விடுதலை புலிகள் தங்கள் படைபலத்தை பெருக்கிறார்கள் என்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது .இதனால் தமது இராணுவ முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மறைத்துக்கொண்ட விடுதலை புலிகள் சமாதன காலத்திலும் ஆயுத கொள்வனவிலும் புதிய போராளிகளை இணைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள் இதன் ஒரு கட்டாமாக எழுந்த அழுத்தம் காரணாமாக சமாதான தூதுவர்களாக இருந்த நோர்வையின் சமாதான அதிகாரிகள் வன்னியில் உள்ள விடுதலைபுலிகளின் கடற்படையின் படகு கட்டுமானங்களை நேரில் சென்று பார்வையிடுகிறார்கள் .
கடற்புலிகள் தமது படகுகளின் வடிவங்களையும் தாக்குதல் படகுகளையும் படகு கட்டுமானங்களையும் அவர்களுக்கு காட்டியதோடு கடலில் அதன் செயற்பாடுகளையும் செய்து காண்பித்தார்கள் .இவை தொடர்பான தகவல்கள் சிறிலங்கா படையினரை சென்றடைகின்றன இதே நீரம் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற விடுதலைபுலிகளின் உத்தியோகபூர்வ படகுசேவை உடாகவும் விடுதலைபுலிகளின் கடற்புலிகளின் பலத்தினை சிறிலங்கா படைபுலனாய்வளர்கள் ஆராய்கின்றார்கள் ,அத்துடன் சிறிய படகுகளில் சென்று எதிரிக்கு பாரிய இழப்புக்களை கொடுக்கலாம் என்றும் ஏற்கனவே கடல்புலிகள் ஏற்கனவே வெளிப்படையாக காட்டியிருந்தார்கள் .
இதன் பிரகாரம் புதிதாக சிறிலங்கா கடற்படையின் தரை இறக்கும் படகனிப் படகுகள் கடல்புலிகளின் சிறிய ரக தாக்குதல் படகு போன்ற வடிவத்தில் உருவாக்குகின்றார்கள் .அவைதான் பின்னாளில் கடற்புலிகளுடன் மோதிய அரோ வகை படகுகள் .கடல்புலிகளின் படகுகளை பார்த்தே இந்த படகுகளை சிறிலங்கா படையினர் வடிவமைத்து கொண்டார்கள் .இந்த அரோ வகை படகுகளில் சில நவீன வசதிகளை சிறிலங்கா கடற்படையினர் ஏற்படுத்தினார்கள்.இதன் நாவீன கட்டுமானத்திற்கு ஜப்பான் நாட்டின் உதவிகள் கிடைத்திருந்தது .இவ்வாறான சுமார் நுறு வரையான அரோ படகுகளை கடல்புலிகளை எதிர்பதுக்காக என்றே சிறிலங்கா படையினர் உருவாக்கி இருந்தார்கள் .
இதேநேரம் கிழக்கில் திருகோணமலையில் பல அரசியல் பணிகளில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டார்கள் சாமாதான காலத்தை பயன்படுத்தி சம்பூர் ஈசிலம்பற்று வெருகல் போன்ற பிரதேசங்களில் வீதிகள் பாலங்கள் புனரமைக்க படுகின்றன .இந்த புனரமைப்புக்கு சிறிலங்கா அரசே உதவுகின்றது .இதனுடாக படையினர் புலிகளின் நிர்வாக அலகுகளை கண்கானிக்கின்றார்கள்.இதனிடையே ஒட்டுகுழுக்களின் துரோகத்தனமும் உடுருவல்களும் தலைதுக்குகின்றன .இவற்றையும் விடுதலைப்புலிகள் முரியடிக்கின்றார்கள் இந்த முறியடிப்பில் திருகோணமலை மாவட்டத்தின் இராணுவ புலனாய்வு பொறுப்பாளராக மாவீரர் லெப் கேணல் அறிவு திறம்பட செயல்படுகிறார் .
அத்துடன் அங்குள்ள மாவீரர் குடும்பங்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கான உதவிகள் வழங்கபடுகின்றன .பாடசாலை செல்லாத வறிய மாணவர்கள் இனம்கானபட்டு கல்வி கழகம் உடாக அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு பாடசாலைக்கு அனுப்பிவைக்கபடுகின்றனர் .பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இனம்காணப்பட்டு உயர்தரம் படித்த தொண்டர் ஆசிரியர் உடாக கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுத்தபடுகின்றார்கள் .மருத்துவ பிரச்சனை இனம்காணப்பட்டு வன்னியில் இருந்து தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையினை வரவளைக்கபட்டு மருந்துபொருட்கள் வழங்கபட்டு மக்களின் நோய்கள் தீர்க்கபடுகின்றன .கடல்புலிகளின் ஏற்பாட்டில் சங்கங்கள் உடாக கடல் தொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டு தொழில் வாய்ப்பு உக்குவிக்கபடுகின்றது .சம்பூர் வெருகல் பிரதேச மக்கள் வளமான மக்களாக மற்றம் கண்டு வந்துகொண்டு இருந்தார்கள் .
அத்துடன் பொருண்மிய கட்டமைப்பு உருவாக்க படுகின்றது மக்களின் சீர்திருத்தத்தை கண்காணிக்க தமிழ்ழீழ காவல்துறை தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தியது .நீதி நிர்வாகம் அங்கு கொண்டு செல்லபடுகின்றது.மக்களிடையே ஆனா பிணக்குகளுக்கு தீர்வு காணப்படுகிறது .பிரச்சனை களையபடுகின்றது.விடுதலை புலிகளின் இந்த சீரான நிர்வாக கட்டமைப்பு அயல் பிரதேசங்களில் குடியேற்ற பட்டிருந்த சிங்கள மக்கள் மத்தியில் அவமானத்தையும் கோவத்தையும் ஏற்படுத்துகின்றது .இதனால் சில சிங்கள கிராமத்தின் முதன்மையானவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான தமிழ் மக்களுடன் விரோதத்தை ஏற்படுத்தகூடிய சூழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டார்கள் .மூதுரை பொருத்தமட்டில் முதூர் இஸ்லாம் மக்களை கொண்ட நகரமாக காணப்படுகிறது .தமிழ் முஸ்லீம் மக்களிடையேயான பிரச்சனைகள் தமிழ்ழீழ விடுதலைபுலிகளால் தீர்க்கபட்டு இரு பகுதியினருக்கும் இடையிலான உறவு அங்கு வளர்க்க படுகிறது .இவ்வாறு அங்கு விடுதலை புலிகளின் கட்டுமானங்கள் அங்கு திறம்பட செயல்படுகின்றன .
இந்நிலையில் வன்னியில் இருந்த தளபதி பால்ராஜ் தலைவர் அவர்களால் திருமலை அனுப்பிவைக்க படுகிறார்..
தொடரும்

உறவுகளே உங்களின் கருத்துக்கள் விமர்சனங்களை தவறாமல் பதியுங்கள் ..அத்தோடு இந்த வலைப்பூவில் இணைந்து உங்கள் ஆதரவுகளை கொடுங்கள் ..உங்கள் ஆதரவுகளோடு எமது பயணம் தொடரும்

1 comment:

  1. உறவுகளே உங்கள் கருத்துக்களை எதிர்பாக்கிறோம் உங்கள் விமர்சனங்களை பதியுங்கள்

    ReplyDelete
Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை