வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Tuesday, October 4, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-8








திருகோணமலையில் இருந்து விடுதலைப்புலிகள் வெளியேறியதும் சிறிலங்காவுக்கும் அவர்களுக்கு துணை நின்ற இந்தியாவிற்கும் மகிழ்ச்சிய ஏற்படுத்தியது.திருகோணமலையில் இருந்து விடுதலைபுலிகளை அகற்றி விட்டதாகவும் துறைமுகத்துக்கான பாதுக்கப்பு அச்சுறுத்தல் நீங்கிவிட்டாதகவும் திருமலையில் எதுவித பிரச்சனையும் இல்லை என்றும் மகிழ்ச்சியின் பூரிப்பில் சிறிலங்கா அரசாங்கம் பல அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் இருந்தது.அமைச்சர்களும் அதிகாரிகளும் இதனை பெருமைப்பட உடகங்களுக்கு கூறிக்கொண்டு இருந்தார்கள் .இதே வேலை சிறிலங்கா அரசின் போர்வெறி போக்கினை உலகநாடுகளுக்கு விடுதலைப்புலிகள் எடுத்து கூறினர்.அனால் சில உலக நாடுகள் கூறிய கருத்துக்களை பொருட்டாககுட எடுக்காமல் செவிடன் காதில் உதிய சங்குபோல.சிறிலங்கா அரசு நடந்துகொண்டது.சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கைகள் இந்த போருக்கு பின்னால் பலம் பொருந்திய கரங்கள் இருக்கின்றன என்பதை புரியவைத்தன.ஏனெனில் விடுதலைப்புலிகள் போர்நிறுத்தத்தை மீறுகின்றார்கள் குற்றம் சாட்டிய சில சர்வதேச நாடுகள் கூட சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையாக போரை நடத்தியபோது மவுனமாக இந்த போரை வேடிக்கை பார்த்தன.


தமிழர் பிரச்சனையில் எவ்வாறு உலகநாடுகள் பேச்சளவில் ஈடுபட்டனவோ அதே போன்றுதான் இன்றும் உலகநாடுகளின் செயற்பாடு பேச்சில் மட்டுமே இருக்கின்றன.திருகோணமலையில் இருந்து விடுதலைப்புலிகள் அகற்ற பட்டதாக குறப்பட்ட நிலையில் அங்கிருந்து போர்நிறுத்த கண்காணிப்பு குழு வெளியேறியது.கண்களை முடிய நிலையில் இருந்த போர்நிறுத்த கண்காணிப்பு குழு திருமலையில் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்ற நிலையில்தான் தமிழ் மக்கள் மத்தியில் அப்போது காணப்பட்டது.அத்துடன் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் செயற்பாடு ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறுதான் இருந்தது என்பது குறிப்பிட தக்கது.சிறிலங்கா படையினரின் போர்நிறுத்த மீறல்களை கண்டும் காணதது போல இருந்த போர்நிறுத்த கண்காணிப்பு குழு விடுதலை புலிகள் ஏதும் செய்துவிட்டால் அதனை துக்கி பெரிதாகி காட்டுவதும் மற்றும் மாதத்தில் எந்தனை போர்நிறுத்த மீறல்கள் நடைபெற்றுள்ளன எத்தனை தாக்குதல்கள் விடுதலைப்புலிகள் செய்தார்கள் என்று குற்றச்சாட்டை முன்வைத்தாவர்கள்.படையினர் எத்தனை தாக்குதல்கள் எத்தனை போர்நிறுத்த மீறல்களில் ஈடுபட்டார்கள் என்பதை குறைத்து காண்பித்து அவர்களுக்கு உதவி புரிந்தார்கள் சிறிலங்கா படையினரின் போர்நிறுத்த மீறல்கள் அதாவது வலிந்த போர்கள் கூட பெரிதாக கணக்கில் எடுக்கப்படவில்லை.சிறிலங்கா படையினரின் போர்நிறுத்த மீறல்களின் எண்ணிக்கைய தமது பதிவின் படி கண்காணிப்பு குழுவினர் குறைத்தே குறிவந்து அவர்களின் நடுநிலை தொடர்பான சில கேள்விகளையும் எழுப்பியிருந்தது.போர்நிறுத்த குழுவின் இவ்வாறன சில செயற்பாடுகள் ஈழ விடுதலை போரை கண்காணித்து கொண்டிருக்கும் வல்லரசு நாடுகளிடையே விடுதலை புலிகள் தொடர்பாக மேலும் தவறான எண்ணங்கள் ஏற்படுவதற்கு வழி வகுத்து கொடுத்தது.காரணம் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவில் பல நாட்டு பிரஜைகள் இருந்தார்கள்.இவர்களின் அறிக்கைகள் புள்ளிவிபர வெளியீடுகள் அனைத்தும் உண்மையாகத்தான் இருக்கும் என்பது சர்வதேச நாடுகளின் எண்ணமாக இருந்தது.விடுதலை புலிகளின் அரசியல் போக்கு குறித்து எதிர்மறையான என்ன கணிப்பீட்டினை இவர்களின் அறிக்கைகளும் புள்ளிவிபரங்களும் தோற்றுவித்தன.இதேவேளை சமாதான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த நோர்வே நாட்டின் செல்வாக்கினை பயன்படுத்தி விடுதலைப்புலிகள் பல வேலைத்திட்டங்களை செயற்படுத்துகின்றார்கள்.வேலைதிட்டங்களுக்கான நிதி வடிவிலான உதவிகள் கிடைக்கபெறுகின்றன.அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வழிகாட்டலில் அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த பிரிக்கேடியர் சு ப தமிழ்செல்வன் இந்த உதவிகளை பெரும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்.இதே வேலை அரசியல் பிரிவின் செயல்பாடு பலம் பொருந்திய செயற்பாடாக காணப்படுகின்றது.காரணம் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திட்டமிடலில் ஏனைய நாடுகளுடனான ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்திக்கொண்டு விடுதலை போராட்டத்திற்கு வலு சேர்கின்றார்கள்.இதில் சில நாடுகள் நிதி வடிவிலும் ஏனைய வடிவங்களிலும் உதவிகளை வழங்கி தமிழர் விடுதலை போராட்டத்திற்கு மறைமுகமாக உதவிகளை மேற்கொள்கின்றன.உதவிய இந்த நாடுகளால் இவ்வாறன உதவிகளை மேற்கொள்ளலாமே தவிர இலங்கையில் கால் உணர முடியாத நிலை.காரணம் பிராந்திய வல்லரசாக விளங்கும் இந்திய பக்கத்தில் கண்ணுக்குள் எண்ணைய உற்றி இலங்கைய பார்த்துகொண்டு இருக்கிறது.இந்தியாவின் மறைமுக செயற்பாடுகள் இலங்கையில் கால் உன்றி இருப்பதை இந்த நாடுகள் அறிந்திருந்தன .இதனாலையே அவை தமது தலையிட்டினை இலங்கையில் குறைத்துகொண்டன.திருமலையில் இருந்த விடுதலை புலிகள் வெளியேறிய நிலையில் அங்குள்ள தமிழ் மக்கள் மீது கெடுபுடிகள் மேற்கொள்ளபடுகின்றன குறிப்பாக திருகோணமலையில் கடற்படையினரும் தரைப்படையினரும் குவிக்கபட்டு வீதி சோதனைகள் அதிகரிக்கபடுகின்றன சந்தேகத்தின் பெயரில் மக்கள் கைய்து செய்யபடுகின்றார்கள்.இவ்வாறு நெருக்கடியான நிலையில் திருகோணமலையில் இருந்து தமிழ் மக்களின் பிரச்சனைகளை எடுத்து கூறியவர்களில் மாமனிதன் விக்கினேஸ்வரன் செயற்பட்டார்.திருமைலையில் தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக இவர் இருந்தார்.திருகோணமலையில் எங்கும் சிங்களவர்கள் சிங்கள மொழியின் செல்வாக்கே அரச நிர்வாகங்களில் (90 ) வீதத்திற்கும் மேலாக காணப்டுகின்றது.திருகோணமலை மாவட்டத்தின் அரசாங்க அதிபராக சிங்கள படையில் இருந்து ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளே நியமிக்க படுகின்றார்கள்.இந்த இராணுவ அதிகாரிகளின் திட்டங்கள் அபிவிருத்திகள் எல்லாம் எவ்வாறு இருக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை.குறிப்பாக சிங்களவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கே வளங்கள் அனைத்தும் இவரால் திருடபட்டு விடும்.அத்துடன் சிங்கள மொழியின் செல்வாக்கு இல்லாமல் திருகோணமலையில் ஒன்றுமே செய்யமுடியாத நிலை தமிழ் மக்கள் படிவம் ஒன்றை நிரப்பவேண்டும் என்றாலும் சிங்கள மொழியில்தான் நிரப்ப வேண்டும் என்ற கட்டாயம் மதம் ரீதியில் பொவுத்த மதம் பரப்பபடுகின்றது.மொழியாக சிங்களம் திணிக்கபடுகின்றது.தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் கூட பொவுத்த விகாரைகள் கட்டபடுகின்றன.என் கோனேஸ்வர ஆலயத்திற்கு ஏறும் வழியில் கூட புதிய பொவுத்த சின்னம் ஒன்று நிறுவப்பட்டு உள்ளது இவ்வாறு திருகோணமலையில் தமிழ் மக்கள் நசுக்கபட்டுகொண்டு இருக்கிறார்கள்.கடல் வலைய தடைச்சட்டம் போடபட்டு திருகோணமலை கடலில் மீன்பிடிக்க கட்டுபாடு விதிக்கபடுகின்றது.இங்கு குறிப்பாக தமிழ் மக்களே கடல் தொழிலை முதன்மையாக கொண்டு வாழ்ந்தார்கள்.அனால் தமிழ் மக்கள் மீன் பிடிக்க தடை விதிக்கபடுகின்றது.அதாவது குறிப்பிட்ட நேரம் மட்டுமே மீன் பிடிக்கலாம் அதுவும் வலு கூடிய இயந்திரங்கள் படகில் பொருத்தகுடாது.படகில் இரண்டு பேருக்கு மேல் போகக்குடாது என்று பல தடைகள் போடப்படுகின்றன.திருமலை கடலில் மீன்கள் நடமாட்டம் குடுதலக காணப்படும் சில இடங்கள் இருக்கின்றன இவ்வாறன இடங்களில் எல்லாம் மீன் பிடிக்க குடாது என்றெல்லாம் சட்டம் .இவை ஒருபுறம் இருக்க தென் பகுதியில் இருந்து பெருமளவான சிங்கள மீனவர்கள் தொழிலுக்காக திருகோணமலை வருகிறார்கள் ( சிங்களவர்களால் வரவழைக்க படுகிறார்கள் என்றே குறிப்பிடலாம்) கடலில் தொழில் செய்கிறார்கள் தமிழர்களுக்கு விதிக்கபட்ட தடைகள் சிங்கள மீனவர்களுக்கு இல்லை.துறைமுக வாயில் துறைமுகத்திற்குள் எல்லாம் சிங்கள மீனவர்கள் மீன் பிடிக்கின்றார்கள்.அதன் முலம் பெருமளவு வருமானம் ஈட்டி கொள்கிறார்கள் .தமிழ் மீனவர்கள் தமது குடும்பத்தை கொண்டு நடத்த திண்டாடுகின்றார்கள்.இவ்வாறே விவசாய ரீதியிலும் கந்தளாய் குளத்தின் கீழ் பெருமளவான நிலப்பரப்பில் சிங்கள விவசாயிகளே செய்கை பண்ணுகிறார்கள்.தமிழ் முஸ்லீம் மக்களின் விவசாய உற்பத்தி சிங்களவருடன் ஒப்பிடும் இடத்தில் குறைவாகவே காணப்படுகிறது.சிங்கள மக்களின் விவசாய உற்பத்தி பொருட்கள் கூடிய விலையிலும் தமிழ் மக்களின் விவசாய உற்பத்தி பொருட்கள் குறைந்த விலையிலும் சிங்களவர்களால் கொள்வனவு செய்யபடுகின்றது.சிங்கள விவசாயிகளுக்கு இலவசமான உள்ளேடுகள் குறைந்த விலையில் மானியங்கள் என்றெல்லாம் வழங்கபடுகின்றன.இவர்ருக்கெல்லாம் தீர்வு காணப்படவேண்டும் என்றுதான் அன்று திருகோணமலையில் தமிழ் மக்கள் பேரவை தலைவராக இருந்த விக்கினேஸ்வரன் சிறிலங்கா அரசுக்கும் பன்னாட்டு துறை சார்ந்தவர்களுக்கும் அறிக்கைகள் உடாக வாரம் ஒரு பிரச்சனை என்று தொடர்ச்சியாக வெளிப்படுத்தினார் .வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு புரியும் பல கொடுமையான உண்மைகள் இவர் அறிக்கைகள் முலம் அம்பலமாகியது.இவ்வாறு இவரின் செயல்பாடுகளை பார்த்து பொருக்கமுடியாமல்தான் சிறிலங்கா அரசின் திட்டமிடலுக்கு அமைய தமது கண்ணை தமது கையாலே குத்துவது போல் தமிழ் இனதுரோகிகளை கொண்டு தமிழர்களின் விடிவிற்காய் உழைத்த இவரை கொள்ள திட்டம் தீட்டபடுகின்றது ( தொடரும் )

உறவுகளே உங்களின் கருத்துக்கள் விமர்சனங்களை தவறாமல் பதியுங்கள் ..அத்தோடு இந்த வலைப்பூவில் இணைந்து உங்கள் ஆதரவுகளை கொடுங்கள் ..உங்கள் ஆதரவுகளோடு எமது பயணம் தொடரும்
__________________________________________________________________________________
 சிறு விளம்பரம் 
தமிழ்நாடன் தமிழீழம் என் தாகம்     


தோழர்களே!
இலெமூரியா நிறுவனம் தயாரிக்கும் “தேன்கூடு” திரைப்படம் ஈழத்துப் போராட்டங்களையும் துயரங்களையும் நிகழ்வுகளையும் கண்முன் நிறுத்தும் உணர்ச்சிப்பூர்வமான படைப்பு மாவீரர்நாளில் வெளிவருகிறது. அதன் முன்னோட்டம் இணைக்கப்பட்டுள்ளது.
காத்திருங்கள்....
நன்றி
தமிழ்நாடன்
குவைத்

--
மூன்றுயிரைக் காப்பதே முதன்மையாகக் கொள்வீர் உலகத் தமிழரே! 
தினமலர் இதழை புறக்கணிப்பதே தமிழனின் கடமையாகக் கொள்வீர்!

2 comments:

  1. உங்கள் பயணம் வெற்றிபெற எமது இணையம் சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மட்டக்களப்பு ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் 12 ஆம் திகதி, ஆகஸ்ட் மாதம் 1990 ஆம் கொலை வெறியுடன் பாய்ந்த புலி பயங்கரவாதிகள் 116 முஸ்லிம்களை சுட்டும், வெட்டியும் திட்டமிட்டு படுகொலை செய்தனர். புலிகளின் இந்த கொலைவெறி பிடித்த தாக்குதலில் 60 முஸ்லிம் குழந்தைகள் மரணத்தை சுவாசித்தனர். மானிட குலத்திற்கு எதிராக புலிப் பயங்கரவாதிகள் புரிந்த போர்க்குற்றத்திற்கு இதனையும்விட ஆதாரங்கள் வேண்டுமா..?? இதோ புலிகளின் கொலைவெறிக்கு பலியான குழந்தைகளின் பெயர் வயது மற்றும் விபரங்கள்

    1- ஏ. அப்துல் மஜீத் -(1 வாரம்)-ஆண்
    2- ஏ. எல். அன்சாரா -(1 மாதம்)- பெண்
    3- எம். ஐ. எம். சானாஸ்- (05 மாதம்)- பெண்
    4- ஏ. எஸ். பைரூஸ் -(8 மாதம்)- ஆண்
    5- எம். ஐ. பர்சான் -(01 வயது)- ஆண்
    6- எஸ். சனூஸியா- (01 வயது)-பெண்
    7- ஏ. றிபாகா -(01 வயது) -பெண்
    8- எச். எம். பஸ்மி -(03 வயது) -ஆண்
    9- எம். வை. எம். பசீர் -(03 வயது)- ஆண்
    10- யூ. லாபிர் -(03 வயது)- ஆண்
    11- எம். ஐ. பர்சானா -(02 வயது)- பெண்
    12- ஆர். எப். றம்சியா -(06 வயது)- பெண்
    13- எம். எஸ். றம்சுலா- (07 வயது)- பெண்
    14- எம். எஸ். சஹீலா- (04 வயது)- பெண்
    15- எஸ். எல் நஜீபா -(04 வயது) பெண்
    16- எஸ். எல். நஸ்ரின்- (06 வயது) பெண்
    17- எம். ஐ. சபீரா -(06 வயது)- பெண்
    18- எம். ஐ. எம். தாஹிர்-(06 வயது)- ஆண்
    19- எம். எல். எப். றிஸ்னா-(05 வயது)- பெண்
    20- எச். எம். ஹிதாயா- (08 வயது)- பெண்
    21- எம். எஸ். எம்.அக்ரம்-(6 வயது )
    22- எம். எஸ். எம். தல்ஹான்- (08 வயது)
    23- எஸ். ஏ. எம். இம்தியாஸ்- (09 வயது)
    24- ஆர். எம். சித்தீக் -(8 வயது)- ஆண்
    25- ஆர். எப். றம்சியா -(6 வயது)- பெண்
    26- எம். சீ. எம். றிஸ்வான் -(10 வயது)
    27- எம். ஐ. ஜரூன் -(10 வயது)
    28- எஸ். செய்யது அஜ்மல் -(10 வயது)
    29- எம். ஐ. அஸ்றப் -(11 வயது)
    30- எம். ஐ. எம். ஆரிப் -(12 வயது)
    31- எம். கமர்தீன் -(12 வயது)
    32- எம். ஐ. எம். அஜ்மல்- (12 வயது)
    33- ஏ. எல். மக்கீன்-(12 வயது)
    34- எம். எஸ். எம். பௌசர் -(12 வயது)
    35- ஏ. எல். அபுல்ஹசன்- (12 வயது)
    36- வை. எல். எம். ஹரீஸ்- (12 வயது)
    37- எம். எஸ். எம். ஜவாத்- (13 வயது)
    38- எம். எஸ். பைசல்-(13 வயது)
    39- எம். பீ ஜவாத்- (13 வயது)
    40- யூ. எல். எம். அனஸ்- (13 வயது)
    41- ஏ. எல் அப்துல் சமத்-(14 வயது)
    42- எச். எம். பௌசர்-(14 வயது)
    43- ஏ. ஜௌபர்- (14 வயது)
    44- எம். எஸ். எம் சகூர் -(14 வயது)
    45- ஏ. சமீம்- (14 வயது)
    46- எம். இஸ்ஸதீன்- (15 வயது)
    47- எம். எம். எம். பைசல் -(15 வயது)
    48- எம். எஸ். ஜிப்ரியா -(12 வயது) பெண்
    49- எம். எஸ். றமீஸா-(10 வயது)-பெண்
    50- எம். பீ. சரீனா-(14 வயது)- பெண்
    51- எம். பீ. ஹபீபா- (12 வயது)- பெண்
    52- எஸ். எம். அஸ்மி -(11 வயது)-ஆண்
    53- எம். எல். சமீமா-(10 வயது)- பெண்
    54- எம். எஸ். ஐதுரூஸ் -(11 வயது) ஆண்
    55- எல். நயிமுதீன் -(12 வயது)- ஆண்
    56- ஏ. எல். பாத்தும்மா-(10 வயது)-பெண்
    57- ஜே. எம். நௌபர்-(11 வயது ) -ஆண்
    58- யூ. எல். ஏ. சதார்- (13 வயது)- ஆண்
    59- ஆர். ஹிதாயா-(10 வயது)- பெண்
    60- ஏ. எல் சமீர்-(10 வயது) -ஆண்

    ReplyDelete

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை