வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Wednesday, October 26, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-30

சிறிலங்கா விமான தளங்களில் இருந்து கிபீர் மிக போன்ற போர் விமானங்கள் மேல் எழும்பும்போது விடுதலை புலிகளுக்கு தகவல் கிடைத்துவிடும் ,அவ்வாறு விமானங்கள் புறப்பட்டு விட்டால் விடுதலைபுலிகளின் முகாம்களுக்கு விழிப்புநிலை ( அலேட் )வழங்கபட்டு விடும் குறிப்பாக பொறுப்பாளர்கள் உள்ள முகாமில் அலேட் அறிவிக்க பட்டால் அவர்கள் பாதுகாப்பான பதுங்கு குழிக்குள் செல்வார்கள் ,அல்லது முகாமினை விட்டு வெளியே சென்றுவிடுவார்கள்,இவ்வாருதால் போராளிகளும் முகாமை விட்டு வெளியே சென்று அல்லது பதுங்கு குழிக்குள் பாதுகாப்பிற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுவார்கள் ,இது பின்பு பொதுமக்களுக்கும் தெரியவந்து விட்டது ,அதாவது அன்று விடுதலை புலிகளின் முதன்மை நிறுவனங்கள் மீது எதிரி தாக்குதல் நடத்துவான் என்ற அச்சத்தால் அங்கு வேலைசெய்யும் பணியாளர்கள் கப்பற படவேண்டும் என்பதற்காக அலேட் கிடைத்தவுடன் அந்த நிறுவனத்தில் பொதுவாக எல்லோருக்கும் கிடைக்ககூடிய வகையில்
மணியோசை எழுப்பப்படும்,இதனை தொடர்ந்து அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் பாதுகாப்பு தேடுவார்கள் ,அல்லது நிறுவனத்தை விட்டு வெளியே சென்று விடுவார்கள்,இவர்களின் செயற்பாடுகளை மக்கள் அவதானித்து பொதுமக்களும் பாதுகாப்பு தேடிகொள்ளுவார்கள்,இதில் சுவாரசியமான சம்பவம் ஒன்றை இங்கே குறலாம் என்று நினைக்குறேன் ,கிளிநொச்சியின் கரடிபோக்கு சந்திக்கு அருகாமையில் யு ,என் ,எச்,சி,ஆர்,நிறுவன பணிமனைகள் இரண்டு அமைந்திருந்தன,ஒரு நாள் அவ்வழியால் நான் செல்லும்போது அவர்களது பணிமனை மதில்களை சுற்றி ஏராளமான தமிழ் மக்கள் குழுமி நின்றார்கள் ,நான் எனது உந்துருளியினை சற்று நிறுத்தி அங்கு நின்ற ஒருவரிடம் என்ன ஏதும் ஆர்பாட்டமோ? என்று கேட்டேன் அது ஒன்றும் இல்லை கிபீர் அலேட் அறிவித்து இருக்கு அதுதான் பாதுகாப்புக்காக இங்க வந்தனாங்கள் என்றால்,

இவ்வாறுதான் கிபீர் அலேட் கிடைத்தால் அங்கு மக்கள் யு ,என் ,எச்,சி,ஆர்,அலுவலகங்கள் ,உணவுத்திட்டம் கெயார் போன்ற ,ஆரச சார்பற்ற நிறுவனங்களின் வளாகங்களை சுற்றி நிற்பார்கள்.இவ்வாறன இடங்கள் மீது சிறிலங்கா வான்படை தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்பது அவர்களின் எதிர்பாப்பு,அன்று அவ்வாறுதான் விமானங்கள் வன்னி நோக்கி வருவதாக தகவல் கிடைத்திருந்த நிலையில் முகாம்கள் அனைத்திற்கும் விழிப்பு நிலை ஏற்பனவே கொடுக்கபட்டு இருந்தது.தலைவர் நின்றிருந்த பகுதியை சுற்றியிருந்த முகாம்களுக்கு ( இது சில குறியீடுகளுடன் )முகாம்களின் பொறுப்பாளர்களுக்கு அதியுச்ச விழிப்பு நிலை வழங்க பட்டிருக்கும்,அவ்வாறு விழிப்பு நிலை வழங்கபட்டால் முகாம்கள் சிகப்பு எச்சரிக்கை நிலைக்கு வந்துவிடும் ,தகவல் கிடைத்து ( 10 ) அல்லது (20 ) நிமிடங்களில் வன்னி வான்பரப்பில் கிபீர் விமானங்கள் நுழையும் அனால் எந்த இடத்தின் மீது தாக்குதல்கள் நடக்கும் என்பது தாக்குதல் நடக்கும் வரை பெரும்பாலும் யாருக்கும் தெரியாது,அனால் ,அன்று வன்னி நோக்கிவந்த கிபீர் விமானங்கள் தலைவர் நின்றிருந்த இடத்தையே இலக்கு வைத்திருந்தன ,தலைவர் நின்றிருந்த இடத்தை துல்லியமாக இலக்கு வைத்து தாக்க தொடங்கின ,விமானத்தாக்குதல் குறித்து எச்சரிக்கை ஏற்கனவே வழங்கபட்டு இருந்ததால் தலைவர் அவர்களும் அவரது மெய்பாதுகவலர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து உயிர் தப்புகிறார்கள்,எனினும் கிபீர் விமான தாக்குதல்கள் தலைவர் தங்கிநின்ற இடத்தின் மீது தாக்குதல் துல்லியமாக நடத்தபட்டதால்,தாக்குதல் குறித்து முதன்மை தளபதிகள் மத்தியில் சந்தேகங்கள் எழ தொடங்கின ,விடுதலை புலிகளுக்குள் உடுருவியிருக்கும் கருப்பு ஆடோன்ரின் வேலைதான் என்பது உடனடியாக புரிந்து விட்டது ,யார் அந்த கருப்பு ஆடு என்பதை கண்டுபிடித்து களை புடுங்கவேண்டியது அவசியமாகிறது,இந்த சம்பவம் முக்கிய கவனத்திற்கு எடுக்கபட்டு புலனாய்வுத்துறை பொறுப்பாளர் போட்டு அம்மானின் புலனாய்விர்க்கு உட்படுத்த படுகிறது,இதன்போது சில சந்தேகங்கள் தீர்க்க படுகின்றன,

இதற்க்கு முன்பாக தமிழீழ விடுதலை உணர்வாளரும் தமிழ் தேசிய குட்டமைப்பு நாடளமன்ர உறுப்பினருமான இ .சிவநீசன் அவர்கள் நாடலமன்று அமர்வு முடிந்துவிட்டு கிளிநொச்சி சென்றுகொண்டு இருக்கையில் மாங்குளத்திற்கு அண்மையாக (2008 ) ம் ஆண்டு சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் சிக்கி மரணமடைகிறார்,இவ்வாறு மேலும் சிலர் கிளைமோர் தாக்குதல்களில் இலக்கு வைத்து கொல்லபடுகின்றனர்,அத்துடன் அன்றைய நாட்களில் விடுதலை புலிகளின் தளங்கள் மீதான துல்லியமான தாக்குதல்களை சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக நடத்தியவண்ணம் இருந்தார்கள் ,எவ்வாறு துல்லியமான தாக்குதல்கள் நடைபெறுகின்றன எவ்வாறு குறிப்பிட்ட நபர்களை இலக்குவைத்து கிளைமோர் தாக்குதலில் கொல்லபடுகிறார்கள் ,என்று பொறுப்பாளர்கள் போராளிகள் மத்தியில் பல்வேறுபட்ட கேள்விகள் எழுகின்றன சட்லைட் சாதனம் உள்ளிட்ட நாடுகள் வன்னியை கண்காணித்து கொடுக்க அதனைக்கொண்டு இலக்குகளை சரியாக தாக்குகிறார்களோ என்ற கேள்வி பலரது மனங்களில் இருந்தது,அனால் உண்மை பெரும்பாலும் அதுவல்ல ,விடுதலைபுலிகளின் புலனாய்வு துறையினை எடுத்துகொண்டால் ,புலனாய்வு துரையின் உள்ளக பாதுகாப்பு அணிக்கு பொறுப்பாளராக காந்தி அம்மான் எனப்படும் காந்தி பொறுப்பாளராக செயற்பட்டுக்கொண்டு இருந்தார்,காந்தி அம்மானின் விசாரணைக்கு ஒரு குற்ராவளி செல்வாராயின் அவர் தன்னை அறியாமலே குற்றங்களை ஒப்புகொள்ளுவார்,இவரது பெயரை சொன்னாலே பலரும் நடுங்குவார்கள்,உள்ளக பாதுகாப்பு பொறுப்பாளரான இவருக்கு தலைவர் அவர்கள் சென்றுவரும் இடங்களும் தளபதிகளின் இருப்பிடங்கள் தளபதிகள் அன்று செல்லும் இடங்கள் குறித்த விபரங்கள் அனைத்தும் தெரிந்திருந்தது,

பெரும்பாலும் தளபதிகள் பயணம் செய்யும் வீதிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுவதற்கான பணிகளை மேற்கொள்ளுவதும் இவர்தான் ,அத்துடன் எதிரியின் உடுருபவர்களை கண்டுபிடித்து தீர்வு எழுதுவதும் இவர் பணியாக இருந்தது,சமாதன காலத்தில் வன்னிபகுதி மீது எதிரியின் உடுருவல்களை தடுக்கும் முயற்ச்சியில் இவர் தீவிரமாக ஈடுபட்டவர்,( அதாவது சிவில் நிர்வாகம் உடாக )இவ்வாறு விடுதலைபுலிகளின் நம்பிக்கைக்கும் விசுவசத்திர்க்கும் உரியவராக காந்தி இருந்தார், தலைவரின் அன்றைய பயணத்திட்டத்தை தெரிந்து இருந்தது இவர்தான் இவரின் மீது பொட்டு அம்மனுக்கு சந்தேகம் அதிகமாக வலுத்தது(தொடரும் )

**********************************************************************************
உங்கள் கருத்துக்களையும் உங்கள் விமர்சனங்களையும் தவறாமல் பதியுங்கள் உறவுகளே ..அத்தோடு இங்கு உள்ள >>>(((( இதை பின் தொடர்ந்து நீங்களும் எம்மோடு சங்கமித்து கொள்ளுங்கள் உறவுகளே . (Followers ))))<<< இதை தொடர்ந்து எண்கள் குழுமத்துடன் சங்கமித்து கொள்ளுங்கள் உறவுகளே

**********************************************************************************

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை