வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, October 27, 2011

கண்டேன் பிரபாகரனை

சீமான் - முள்வேலிக்குள் முன்று லட்சம் தமிழர்கள் பற்றி பேசும் போது  கூடியிருப்போரை    கலங்கியல வைக்கிறார்  பிரபாகரன் மீண்டும் வருவார் என்று அடித்து  சொல்லி மிரளவைக்கிறார் .என்ன பேசினாலும் எது கேட்டலும் பட பட படாது பொறிதான்,மதுரை தூத்துக்குடியில் முழங்கிவிட்டு திருப்பூர் ஆரவாரத்திற்கு தயாகிகொண்டு   இருக்கிறார் ,சீமானின் நாம் தமிழர் இயக்கம் அடுத்த மே மதம் மாநில மாநாட்டை  நடத்துவதர்க்கான முனைப்பில் இருக்கிறது

"ஈழத்தின் இன்றைய நிலவரங்கள் அறிய சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சீமானை சந்தித்தேன் "

"கொடூரமாக படுகொலைகள் நடந்திருப்பதற்க்கான"புகைப்பட "சலனப்பட "ஆதாரங்கள் இப்போது வெளியே வந்துகொண்டு இருக்கின்றன இது குறிந்து இந்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்கிறாரே முதல்வர்" ?


"தமிழ் இளைன்சனை கண்ணை கட்டி நிர்வாண படுத்தி சுட்டுகொன்ற கொடூரத்தை இந்திய அரசு இன்னும் கண்டிக்கவில்லை "என் என்பதற்கான உண்மையான அர்த்தம் அவர்களுக்குதான் தெரியும் "

"தமிழர்கள் தங்களுக்கு தேவையான உரிமைகளை  வாங்கி கொள்ளாம்  ,தனி நாடு கேட்பதால்தான் இலங்கை அரசு பயப்பிடுகிறது என்கிறார்களே "?
"இதெல்லாம் வரலாறு அறியாத அம மண்ணின் துயர் புரியாதவர்களின் பேச்சு ,தமிழீழ மக்களுக்கு அந்த தேசத்தில் பங்கு பாத்தியதை இருக்குதானே ?அப்படிஎன்றால் அம் மக்கள் கொடுமைபட்டது ஏன்?சிங்களவன் வைத்திருக்கும் துப்பாக்கி தமிழனை மட்டும் சுட்டது ஏன் ?அவன் பேசிய தமிழ் மட்டும் புறக்கணிக்க பட்டது ஏன் ?தமிழ் பெண்ணை விரட்டி  விரட்டி சுரையடியது ஏன் ?இதெல்லாம் இனவாத நோக்கம்தான் .இந்த வெறுப்பும் வக்கிரமும் ஆரம்பம் தொட்டே இருந்ததால் தான் ,தமிழனால் அவர்களுடன் ஐக்கியமாக வாழ முடியவில்லை ,தனி நாடு கேட்டான் .
தமிழனாக இருந்துகொண்டு இதை  கூறவே நாக்கு குசுகின்றது ,ஆனாலும்,அதுதான் உண்மை .தற்கால தமிழன் இனத்தை விட பணத்தை மதிப்பவன் .அதை கொடுத்து வாக்குகள் வாங்கிவிடலாம் என்பதால்தான்.இந்த துரோகம் நடந்தது .அனால் ,கேட்ட நேரத்திலும் ஒரு நல்ல சங்கதியாக இன்றைய இளம் தலைமுறை அதை புரிந்து வைத்துள்ளது .அதை ஆக்க சக்த்தியாக மற்றும் வேலையைக் கட்டளையாக பனித்துத்தான் தலைவர் பிரபாகரன் என்னை அனுப்பியிருக்கிறார்.

"பிரபாகரனை நீங்கள் சந்தித்தீர்கள் என்று முன்பு செய்தி உலவியது அது பற்றி நீங்கள் இப்போதாவது பேசலாமே"
"இந்திய இராணுவ உதவியோடு சிங்களம் தொடுத்த தந்திர போர் உக்கிரமடைவதற்கு சில நாட்களுக்கு முன் தலைவர் பிரபாகரனை நான் சந்தித்தேன் .முழுக்க முழுக்க நள்ளிரவு பயணமாகவே இருந்தது. நானும் நடேசன் அண்ணாவும் பின்னல் உட்காந்து இருக்க ஜீப் எங்களை அழைத்து சென்றது .திடீர் என்று நின்ற வண்டியில் இருந்து அதுவரை ஒட்டி வந்தவர் இறங்கி கொண்டார்.தொடர்ந்து நடேசன் ஓட்ட ஆரம்பித்தார் சில கிலோமீற்றர்கள் போனதும் ஜீப்பின் விளக்குகள் அனைக்கபட்டன.
இருட்டுக்குள் ஜீப் தனக்கு மட்டும் தெரிந்த திசையில் பயணமானது.ஒரு மணி நேரம் கழித்து நான் இறங்கிய இடம் ஒரு குடிசை.உள்ளே தலைவர் இருக்கிறார் என்று ஆசையுடன் போனேன் அவர் இல்லை ."அரை மணி நேரத்தில் பயங்கர சத்தத்துடன் ஒரு வாகனம் வந்து நின்றது.புலி உறுமிக்கொண்டு வருகிறது என்றார் நடேசன் சிரித்தபடி .நான் தங்கியிருந்த குடிசைக்கு பின்னால் அழைத்து போனார்கள்.அங்கு இன்னுரு குடிசை இருந்தது .வாசலில் நின்றிருந்தார் ஏன் தலைவர் பிரபாகரன் .பார்த்ததும் உருகிபோனேன்.பாய்ந்து சென்று கட்டியணைத்தேன் .வணக்கம் வைத்து சின்ன சிரிப்புடன் என்னை அழைத்து சென்றார்.உள்ளே பொட்டு அம்மான் தமிழேந்தி இருவரும் இருந்தார்கள்.வெகுநேரம் வரையில் என்ன பேசுவது என்று தெரியவில்லை .அவரேதான் நாத்தீகம் கடவுள் நம்பிக்கை  குறித்து பேச ஆரம்பித்தார்.ஏன் இதையெல்லாம் என்னிடம் சொலுகிறார் என்று முதலில் புரியவில்லை .அப்புறமாகத்தான் எனக்கு முளையில் உறைத்தது. பிரபாகரனை பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாக முனார் ஒரு வார காலம் அங்குள்ள போராளிகள் மத்தியில் நான் பேசிக்கொண்டு இருந்தேன் .அங்கு காசிக் கயிறு கட்டியிருந்தால் ஒரு பெண் போராளி .நொடியில் "சாகும் சயினேட் கழுத்தில் மாட்டிகொண்டு "ஆயுளை காப்பற்றும் என்று இந்த காசிக் கயிற்றை எந்த நம்பிக்கையுடன் கட்டியிருக்கிறாய் தங்கச்சி ?என்று நான் கேட்டது அப்படியே பிரபாகரன் காதுக்கு போயிருக்கிறது. அதனால்தான் கடவுள் நம்பிக்கை குறித்து தன எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.
"சின்ன வயசுல இருந்தே எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது ஏனுன்னு தெரியல்லை .தமிழர்களுக்கு துரோகம் செய்த துரையப்பாவை .சுட முதன்முதலா ஆயுதம் துக்கி போனப்போ அவர் கிஸ்னர் கோவிலில் சாமி கும்பிட்டுடு  இருந்தார் .குரிப்பாக்கும் போது கிஸ்னர் முகம்தான் தெரிஞ்சுது ."அநியாயத்தை அழிக்க யுகம்தோறும் அவதாரமாய் வருவேன் "அப்படிஎன்னு நீதானே சொன்னாய் என்று நினைத்துக்கொண்டே சுட்டேன் .துரையப்பா செத்துட்டார் என்று பிறகு தகவல் வந்து சேர்ந்த போது .கிஸ்னர் என பக்கம் என்று நினைத்தேன்.
எண்கள் போராட்டத்துக்கு தமிழக முதல்வர் எம் ஜி  ஆர் பணம் கொடுத்தார் .அதை எப்படியாவது இங்க கொண்டு வரணும் என்று கவலைபட்டபோது.எனக்கு திரும்பவும் கடவுள் நினைவு வந்திச்சு .பழனிக்கு போய் முருகனுக்கு நேர்ந்து மொட்டை போட்டேன் .கிட்டு இறந்ததிற்கு பிறகுதான் எந்த கணத்திலும் கடவுள் எண்ணம் தோன்றாத முழு நாத்தேகனாக மாறிட்டேன் என்றார் .தமிழோடு பல வார்த்தைகளை ஆங்கிலத்தில் இருந்து எடுத்து  பயன்படுத்துவது குறித்து நான் போராளிகளிடம் சற்றே கேலியாக பேசியிருந்தேன் .அதை பற்றியும் அடுத்து விளக்கினார் பிரபாகரன்.தமிங்கிலீஸ்ல பேசுவதாக சொன்னீங்களாமே.அது உங்க நாட்டுல இருந்து இங்கு இறக்குமதி ஆனதுதான் .ரெம்ப நாள் வரை அப்படி இங்கே இல்லை .சமாதன காலத்துல உங்க நாட்டு டிவியை இங்க திறந்து விட்டதன் விளைவு அது .தமிழீழம் மலரும்போது தமிழ் தமிழாக மட்டுமே இருக்கும் என்றார்.
அடுத்து பேச்சு திரைப்படங்கள் குறித்து திரும்பியது .கோபம்" னு ஒரு படம் செய்யபோவதாக சொன்னேன் .அது சம்ஸ்கிருத வார்த்தை சினம் அல்லது சீற்றம்  என்று பெயர் வையுங்களேன்  என்றார் தமிழேந்தி .உடனே " தலைவர் கோபம் "னு  இருக்கிற வார்த்தைக்கு இருக்கிற உணர்ச்சி அதுல இல்லை கோபம் :னே இருக்கட்டும் என்றார் !"மேலும் தம்பி மாதிரியான படங்கள் தொடர்ந்து பண்ணுங்கள் , வாழ்த்தக்கள் மாதிரி தேவையில்லை  என்பது அவரின் எண்ணம் .பூக்கள் பறவைகள் என்று மென்மையான விடயங்கள் எதற்கு நமக்கு .படத்துலயும் அடிக்கணும் நியத்துலையும் அடிக்கணும்.அதுதான் அடிமை விலங்கை உடைக்கும் என்றார் ,தமிழ் சினிமாவில் ஒவ்வொருவரையும் பற்றி விசாரித்தார் நம்ம போராட்டத்தை புரிஞ்சுகிட்டு முழுமையாக ஆதரிக்கின்ற நடிகர் சத்தியராஜ் என்று சொன்னேன் .சந்தோசபட்டார்.விஜய் பற்றி பேசிட்டு இருந்தப்போ யாழ்பனத்துகாரரின் பெண்ணைத்தானே அவர் திருமணம் செய்திருக்கின்றார் .என்று நினைவுபடுத்திகொண்டார் .பாலாவும் சேரனும் நம் போராட்டத்தின் நியாயத்தை ஆதரிப்பவர்கள் தானே?என்று என்னிடம் கேட்டு உறுதிபடுத்தி கொண்டார் .அமீர் பற்றி என்னிடம் விசாரித்தார்.அவருக்கு ஷின்ட்லார்ஸ் லிஸ்ட் .மாதிரி ஈழ போராட்டத்தை ஒரு படமாக செய்யவேண்டும் என்ற ஆசை இருந்தது .எத்தனையோ பரிசோதனை முயற்ச்சிகள் செய்து பார்த்தும் முடியாமல் போனதை சொல்லி வருத்தபட்டார்.பாலுமகேந்திராவை மட்டும் இங்கே கொண்டு வந்து சேர்த்திடுங்கள் .அவரை நான் பத்திரமாய் பார்த்து கொள்ளுவேன்"னு .மெய்சிலிர்த்தார் .திடீர் என்று என்ன நினைத்தாரோ .சிவாஜிக்கு பிறகு வடிவேலுவைக் கொண்டாடுறீங்கள்.எனக்கும் வடிவேலுதான் தமிழ் கலாச்சாரத்தின் உண்மையான கலைன்சன் மாதிரி இருக்கு .நடக்கட்டும் நடக்கடும் என்றார்.
சிங்கள அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது பற்றி அடுத்து பேசினார் .வன்முறைக்கு அதை விஞ்சும் வன்முறைதான் பதிலடியாக இருக்க முடியும்.சுமாரான வன்முறையை வைத்து வெற்றிபெற முடியாது .வலிமை உள்ளவன் வெல்வான் எனக்கு பிறகும் இந்த போராட்டம் நடக்கும்.என்னுடைய கவலை இளைய  தலைமுறை இந்த போராட்டத்தின் நியாயத்தை புரிந்துகொள்ள வேண்டும் .அதை புரியவைக்க நீங்கள் உங்களது பேச்சை பயன்படுத்த வேண்டும் என்றார் .பேசிப் பேசித்தான் காலங்கள் கரைந்துவிட்டன .இனிமேல் பேசுவதில் எனக்கு நம்பிக்கை எல்லை என்றேன் ."இல்லை தம்பி பேச்சும் ஒரு படையணிதான் என துப்பாக்கியில் இருந்து வெடிக்கும் வார்த்தைக்கும் .உன் வார்த்தைக்கும் ஒரே அளவு வலிமை உண்டு .அதேபோல சினிமாவும் ஒரு படையணிதான் தமிழனுக்கு தலைவனாக வருபவன் சாக துனித்தவனாக இருக்கணும் .சாக பயந்தவன் தரித்திரம் ..சாக துணிந்தவன் சரித்திரம் 'இந்த  இருக்காரே என்று ஒருவரை சுட்டி காட்டினார் பிரபாகரன் ..இவர்தான் கடாபி என பாதுகாவலர் சாதாரண துப்பாக்கியை வைத்துகொண்டு இரண்டு வேமானன்களை சுட்டு வீழ்த்தியவர்.உங்கள் நாட்டில் இப்படியொருவர் இருந்தால் அனைத்து உச்ச விருதும் கொடுத்து இருப்பீர்கள்.எல்லாவற்றுக்கும் பயிற்சிதான் கரணம் .கடுமையான பயிற்ச்சி . எளிதான   சண்டை . இதுதான் இங்குள்ள தத்துவம் என்றார்.அவரது உடம்பு கனமாக இருப்பதாக எனக்கு தோன்றியது அதை கேட்டேன் ..குண்டாக இருக்கிறேனே தவிர எனக்கு எந்த நோயும் இல்லை என்றார் .நன்றாக சாப்பிடுகிறேன் .இங்கு நடக்கும் சமையலுக்கும் நான் தான் .டைரக்.ன்  என்றார் .இராணுவம் சம்மந்தமான ஆயிரக்கணக்கான ஆங்கில புத்தகங்கள் அங்கு இருந்தன.முக்கியமானவை அனைத்தையும் தமிழில் மொழி பெயர்த்து வைத்திருக்கிறார்.
எம் ஜி ஆர் பற்றி பேசும்போதெல்லாம் அவரது முகம் மலர்கிறது .அவர் அமைப்புக்கு செய்த உதவி பற்றி எல்லாம் விபரித்து சொன்னார் .அமைதிப்படையுடன் புலிகள் சண்டை போட்டுகொண்டு இருந்த காலத்தில் .திடீர் என்று ஒரு நாள் கிட்டுவை அளித்த எம் ஜி  ஆர் ஒரு பெட்டியில் (  ) ரூபாய் பணத்தை வைத்து கொடுத்தாராம் .உங்களது நாட்டை எதிர்த்து போரிடும்போது எம் ஜி ஆர் கொடுத்தார் அது தேச துரோகமா?என்றெல்லாம் அவர் ஜோசிக்கவில்லை.எங்களது நோக்கத்தை மட்டும்தார் பார்த்தார்.  என்று வார்த்தைகளை அத்தனை நன்றி தொனிக்க பேசிக்கொண்டு  இருந்தார் .அவரை சந்தித்துவிட்டு வந்த பிறகு .என்னுடன் இருந்த சேர லாதனிடம் அதை பற்றி பெருமையாக பேசிக்கொண்டு இருந்தேன்.அதில் அவர் ஆர்வம் காட்டவில்லை .ஏன் என்று கேட்டேன் .அது உங்களுக்கும் தலைவருக்குமான தனிபட்ட  சந்திப்பு .அது பற்றி எனக்கு சொல்லவேண்டியதில்லை என்று சொன்னவர்."இங்கு தலைவர் மட்டுமே நம்பிக்கைக்கு உரியவர் மற்றவரில் யாரும் துரோகியாகலாம்.நான் உட்பட .என்று கூறி நிறுத்தினார் .ஏன் இதயம் அதிர்ந்து அடங்கியது.மயூரி என்ற காயம்பட்ட பெண் போராளிகளின் காப்பகத்திற்கு சென்றேன் .கண்டேன் பிரபாகரனை என்று அங்கிருந்த தங்கையிடம் சொன்னேன்.யாருக்கும் கிடைக்காத பாக்கியம் அது.நீங்கள் இந்த இனத்திற்கு உண்மையாக இருங்கள் என்றால் அவள் ..உண்மையாக இருக்கவே போராடி வருகிறேன் ..

"இனியும் காண்பீர்கள பிரபாகரனை "

ஆம் " காண்பேன் (20 ) முறை அவரை கொலை செய்திருக்கிறார்கள்.அவர் மீண்டு வந்திருக்கிறார் அமைதிப்படை கொன்றதாக சொன்னார்கள் .வந்தார் .சுனாமியில் அடித்து போய்விட்டார் என்றார்கள் மீண்டும் வந்தார் ,ஒரு கால் கருகிபோய் ஒரு காலை எடுத்து விட்டதாக சொன்னார்கள் அதுவும் பொய் .அவரது கால் நன்றாகத்தான் இருந்தது .இப்போதும் அவர்களின் ஆசைப்படி இறந்திருக்கிறார் .பார்க்கலாம் அவரது வருகைக்காக நாங்கள் வழக்கம் போல காத்திருக்கின்றோம் .

"""நம்பிக்கையும் உறுதியுமான வார்த்தைகள் """

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை