வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Saturday, October 1, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-5


சமாதன உடன்படிக்கைக்கு முரணாக சிறிலங்கா செயற்பட்டுக்கொண்டு இருந்தபோதுதான் விடுதலைப்புலிகள் மாவிலாறு அணையை முடுகின்றார்கள் .போரினால் மட்டுமல்ல இயற்கை அனர்த்தமான ஆளிபேரளையால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கும் உதவுவதுக்கு முனையாத சிறிலங்கா அப்பாவி மக்கள் மீது கெடுபிடிகளை ஒரு பொற்கால நிலைபோன்று ஏற்படுத்திய நிலையில்தான் அதற்கு எதிராக விடுதலைப்புலிகள் மாவிலாறு அணை விவகாரத்தை கையிலெடுத்தார்கள்.(2006 ) ம் ஆண்டு யூலை (22 ) ம் திகதி சிங்கள குடியேற்ற மக்களுக்கு செல்லும் தண்ணீருக்கான அணைகள் மூடப்பட்டன .
இது மூடப்பட்டதும் இரு தரப்பினரும் சிலகாலம் சமரச நடவடிக்கையில் ஈடுபட்டனர்.அனால் மக்களின் அடிப்படை பிரச்சனைய தீர்பதுக்கு குட சிறிலங்கா இறங்கியோ இணங்கியோ வராத நிலையில் பிரச்சனை போர்நிறுத்த கண்காணிப்பு குழுவிற்கு செல்கிறது .இதன்போது ஏற்பட்ட இணக்கப்பாடுகளை அடுத்து மனிதாபிமான அடிப்படையில் அணையை திறந்து விடுவதுக்கு விடுதலைப்புலிகள் சம்மதிக்கின்றார்கள்.அனால் பேச்சுக்கள் முலம் அணையை திறப்பதுக்கு மறுத்த படையினர் தாக்குதல் முலம் அணையை திறப்பதாக அறிவித்து விட்டு கடுமையான முன்னேற்ற தாக்குதல்களை நடத்த தொடங்கினர்.இந்நிலையில்தான் படையினரின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் திருகோணமலையில் விடுதலைப்புலிகள் பலத்தினை காட்டும் முகமாகவும் ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஒரு வழிந்த தாக்குதலை முதூர் பகுதியை இலக்கு வைத்து மேற்கொள்கிறார்கள்.திருகோணமலையில் விடுதலைபுலிகளின் பலத்தினை கட்டும் முகமான தாக்குதலாக இருக்க வேண்டும் எனக் கருதிய விடுதலைப்புலிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த தாக்குதலை நடத்துவதுக்கு திட்டமிடுகிறார்கள்.புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் இதற்கான தாக்குதல் திட்டத்தினை தளபதி சொர்ணம் வகுத்து கொடுத்தார் .தாக்குதல் தரை வழியாகவும் கடல் வழியாகவும் நடத்துவதுக்கு திட்டமிடப்பட்டது.தரைபகுதியில் வெளிகளினுடாக கடந்து சென்று கட்டடைபறிச்சான் ஜி.பி.எஸ்.படைமுகாமினை தாக்கி அழித்து அங்கிருந்து (45 ) ம் கட்டைபறிச்சான் படைமுகாம் சென்று தாக்குதல் நடத்துவது.கடல்வழியாக முதூர் இறங்குதுறை மீது தாக்குதல் நடத்தி முதூர் நகரத்தை மீட்பது பின்பு அங்கிருந்துகொண்டு தம்பலகாமம் ஆலங்கேணி பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி முதுரின் பிரதேசத்தை முற்றுமுழுதாக விடுதலைபுலிகளின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவதுக்கான திட்டம் தீட்டபட்டு இருந்தது .புலனாய்வு தகவல்களை கொண்டு இழப்புக்களை குறைத்து படையினருக்கு பெரும் அழிவை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் திட்டம் மிக கவனமாக வகுக்கபட்டு இருந்தது.எனினும் முதூர் பிரதேசம் பெரிய பிரதேசம் தமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து வாழுகின்ற பிரதேசமாக காணபடுகிறது.இதில் முஸ்லீம் மக்கள் தாக்குதல் நடத்தும் இடங்களில் அதிகம் வசித்து வந்தார்கள்.எனவே ஒரு வழிந்த தாக்குதல் திட்டமாக வடிவமைக்க பட்ட இந்த தாக்குதல் திட்டம் இறுதியில் ஒரு முறியடிப்பு தாக்குதல் திட்டமாக மாற்றபட்டது.அனால் எதிர்பார்த்ததுக்கு மாறாக தாக்குதல் தொடன்குவதுக்கு முன்னர் முதூர் பிரதேசத்தில் உள்ள படைமுகாம்களில் இருந்து படையினர் எல்லோரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்கள்.அருகில் குடியேற்ற பட்டிருந்த மக்கள் கூட தாக்குதல் அச்சத்தால் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்கள்.எனினும் முதூரில் குறிப்பிட்டு சொல்லகூடிய படைமுகாம்கள் விடுதலைபுலிகளால் தாக்கியளிக்கபட்டு படையினரின் இராணுவ தளபாட பொருட்கள் பெருமளவில் கைப்பற்றபட்டு இருந்தன.முதூர் பிரதேசம் விடுதலைபுலிகளின் கைகளில் முழுமையாக வந்தடைந்தது.எனினும் மீட்கப்பட்ட இடங்களை தக்கவைப்பது என்பது கேள்விக்குரிய விடையமாகிறது .அதாவது விடுதலைபுலிகளின் கைகளுக்குள் இலகுவாக விழுந்த பரந்த பிரதேசத்தில் அரண் அமைத்து தக்கவைப்பதுக்கு காலம் மட்டுமல்ல போராளிகளும் போதாமல் இருந்தனர்.அதிக இழப்புக்களும் அழிவுகளும் இன்றி மிக இலகுவாக வெற்றி கொள்ளபட்ட பிரதேசத்தை தக்கவைக்க முடியாமல் போராளிகள் தங்கள் பழைய நிலைகளுக்கு திரும்பவேண்டிய ஒரு இக்கட்டான நிலை எழுந்தது.அதேவேளை இராணுவ முன்னேற்றங்களுக்கு கருத்து கூறாத சர்வதேச நாடுகள்.விடுதலைப்புலிகள் ஒப்பந்தத்தை மதித்து தமது பழைய நிலைகளுக்கு திரும்பவேண்டும் என வலியுறுத்த தொடங்கியிருந்தார்கள்.இந்த நிலையில் போராளிகள் மீண்டும் பழைய நிலைகளுக்கு திரும்பினர்.மீண்டும் அந்த பிரதேசங்களை ஆக்கிரமித்தது சிறிலங்கா இராணுவம் இந்த ஆக்கிரமிப்பின்போது அங்கு தங்கியிருந்த மக்கள் பலரை படுகொலை செய்தது.இதில் குறிப்பாக பிரான்சின் பட்டினிக்கு எதிரான அமைப்பின் பணியாளர்கள் (17 ) பேர் மிககொடுராமாக படுகொலை செய்யபட்ட கொடுமை அரங்கேறியது.இதற்கிடையில் மாவிலாற்றை திறப்பதற்கு பொதுமக்கள் மீதான பொருளாதார தடைகளை நீக்குமாறு போர்நிறுத்த கண்காணிப்புகுழு உடாக சில தமிழ் தலைவர்கள் சமரச முயற்சியில் ஈடுபடுகின்றார்கள்.இதில் திருகோணமலை மாவட்ட மக்கள் பேரவை தலைவராக இருந்து பின்பு சிறிலங்கா துணை இராணுவ ஓட்டுகுளுவினரால் சுட்டுகொல்லபட்ட மாமனிதர் விக்கினேஸ்வரன் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் ஆகியோர் சிங்கள அதிகாரிகளுடனும் சிங்கள தலைவர்களுடனும் கதைத்து இணக்கப்பாட்டை ஏற்படுத்த முனைகின்றார்கள்.அதிலும் எதுவித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை இதேவேளை மாவிலாற்று அணை விவகாரம் தொடர்பாக விடுதலைபுலிகளுக்கும் சர்வதேச போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினருக்கும் இடையிலான பேச்சுகளின் முடிவில் மனிதாபிமான அடிப்படையில் நீரை திறந்து விடுவதற்கு விடுதலைப்புலிகள் முடிவு செய்கின்றார்கள்.இதனடிப்படையில் (06.08.2006 ) அன்று அணையை திறப்பதற்காக சென்ற திருகோணமலை மாவட்டத்தின் அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனும் சர்வதேச கண்காணிப்பு குழுவினரும் சிறிலங்கா படையினரின் கடுமையான எறிகணை தாக்குதலுக்குள் இலக்காகின்றார்கள்.எழிலனும் கண்காணிப்பு குழுவினரும் மயிரிழையில் உயிர்தப்புகின்றனர்.

பின்னர் (08.08.2006 ) மாலை ஐந்து மணிக்கு அணை திறந்துவிடப்பட்டது.
எனினும் தமது போர் நடவடிக்கைய கைவிடாத சிறிலங்கா அரசாங்கம் அணையை ஆக்கிரமிப்பு நோக்குடன் மாவிலாறு நோக்கி மறுநாள் ஒன்பதாம் திகதி நகர்வை மேற்கொண்டனர்.அந்த நகர்வு விடுதலை புலிகளால் கடும் தாக்குதல் முலம் முறியடிக்கபட்டதையடுத்து மறுநாள் பத்தாம் திகதியும் பெரும் எடுப்பில் படை நடவடிக்கைய மேற்கொண்டனர்.இதன்போது நாற்பதுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லபட்டதுடன் மேலும் பல மதியினர் படுகாயங்களுக்கு உள்ளாகினார்கள்.இந்த முயற்சி தோல்வியடைந்ததையடுத்து கடுமையான விமானதக்குதல்களை தொடங்கிய படையினர் அணைக்கட்டை தாக்கியழிக்கும் நோக்குடன் அதனை இலக்கு வைத்தும் கடுமையான விமானத்தக்குதலை நடத்தினர்.இதற்கு பதிலடியாக ( 12 ) ம் திகதி விடுதலைபுலிகளின் கிட்டு பீரங்கி படையினர் திருகோணமலை துறைமுகம் மீது கடுமையான ஆட்டிலெறி தாக்குதலை நடத்தியது எனினும் தரைவழியாக முன்னேற படையினர் முனைந்தனர்.இவர்கள் மீது விடுதலைபுலிகளின் அணிகள் சிறப்பாக தாக்குதல் நடத்துகின்றார்கள்.காட்டு பகுதியில் பொறிவெடி மிதிவெடி என்பனவற்றில் படைகள் சிக்கி பெரும் இழப்புக்களை சந்திக்கின்றார்கள்.திருகோணமலையில் படையினருக்கு ஏற்பட்டுவந்த தொடர்சியான பேரிழப்பு விடுதலைபுலிகளின் பலம் குறித்து அச்சத்தை இராணுவத்தினர் மத்தியில் ஏற்படுத்துகின்றது.சில குறுகிய காலத்தில் பல படைமுகாம்களை தாக்கியளித்து விடுதலைப்புலிகள் மிகவேகமாக முன்னேறியது எதிர்காலத்தில் படையினருக்கு எதிர்காலத்தில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் என்பதை சிங்கள தரப்பிற்கு உணர்த்தியது.கருணாவின் பிரிவும் சமாதன காலமும் விடுதலை புலிகளின் பலத்தை பெருமளவு குறைவடைய வைத்திருக்கும் என்று நம்பிய படையினருக்கு மட்டுமல்ல சிங்கள அரச தலைமைக்கும் பெரும் அதிர்சிய ஏற்படுத்தியது.இதுவே திருகோணமலையில் இருந்து விடுதலைபுலிகளை அகற்றவேண்டும் என்ற என்னத்தை சிங்கள தலைமையான மகிந்தவின் ஆழ மனதில் உருவாக்கியது.எனலாம் .இத்தாக்குதலை தொடர்ந்து திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையின் முதக்கும் மினிமுகாம் எனப்படும் அரசின் டோரா கலங்கள் விடுதலைபுலிகளின் கடற்புலிகளால் தாக்கியழிக்க படுகின்றன .திருகோணமலை துறைமுகத்தின் நிலை கேள்விக்குள்ளாகின்றது .இது பன்னாட்டு வணிக நடவடிக்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
அதாவது திருகோணமலைக்கு வரும் வணிக கப்பல்கள் அங்குவர மறுக்கின்றன.இது சிறிலங்கா அரசிற்கு பெரும் சிக்கலை உண்டாக்கியது.குறிப்பிட்டு கூறுவதானால் துறைமுகம் சிறிலங்கா இராணுவத்தின் கைகளில் இருந்தாலும் திருகோணமலையின் கடல் கடற்புலிகளின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்பது உறுதியாகிறது.இது சிறிலங்கவினை விட அருகில் உள்ள இந்தியாவிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.(தொடரும் )


உறவுகளே உங்களின் கருத்துக்கள் விமர்சனங்களை தவறாமல் பதியுங்கள் ..அத்தோடு இந்த வலைப்பூவில் இணைந்து உங்கள் ஆதரவுகளை கொடுங்கள் ..உங்கள் ஆதரவுகளோடு எமது பயணம் தொடரும்.

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை