வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, September 29, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-4

இயற்கையின் பேரனர்த்தத்தில் (சுனாமி) இருந்து மக்களை மீள் கட்டமைக்கும் செயற்பாடுகள் விடுதலை புலிகளால் கிழக்கிலும் முல்லைத்தீவிலும் யாழ்பாணத்திலும் பகுதிகளிலும் சிறப்புற மேற்கொள்ளபடுகின்றன .இதற்கான நிர்வாக அலகுகள் திறம்பட செயற்படுகின்றன .விடுதலை புலிகளை அனைத்து கட்டமைப்புகளும் மக்கள் மீள் கட்டுமான பகுதிகளில் ஈடுபடுத்தபடுகின்றன உலக நாடுகளிடமும் புலம்பெயர்ந்த மக்களிடமும் இருந்து கிடைத்த உதவிகளை பெற்று மக்களுக்கு சென்றடைய விடுதலைப்புலிகள் நிர்வாகங்களை உருவாக்குகின்றார்கள் .

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-3


சிறிலங்கா தனது இராணுவப் பலத்தை பெருக்கிகொண்டுடிருக்கும் போது மறுதரப்பான விடுதலைப்புலிகள் அமைதியாக இருந்துவிட்டால் அது அவர்களுக்கு பெரும் ஆபத்தாக முடிந்துவிடும் .சிறிலங்கா போர் ஒன்றை தொடுக்கும்போது அதனை எதிர்கொள்ளமுடியாத ஒரு நிலையை விடுதலைபுலிகளுக்கு ஏற்படுத்திவிடும் .இதனால்தான் சமாதனத்துக்கான சரியான வழி எப்போதும் போருக்கு தயாராக இருப்பதுதான் .என்று அமரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஸ் தெரிவித்தாரே .

Wednesday, September 28, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-2


தமிழ்ழீழ விடுதலை புலிகளின் போராட்ட வரலாற்றிலே மாற்றத்தை ஏற்படுத்திய (2002 )ம் ஆண்டின் பின்னரான காலபகுதி அமைந்துள்ளது அதாவது சமாதனா காலபகுதி என்று குறிப்பிடலாம் .இந்த சமாதனா காலபகுதியில் விடுதலை புலிகளின் கட்டுபாட்டில் உள்ள நிர்வாக பகுதியான வன்னி பகுதிக்கு பல்வேறுபட்ட நாட்டு பிரமுகர்களின் வருகை வேற்றின மக்களின் வருகை என்பன அதிகரித்திருந்த வேளையில்தான் .விடுதலை போராட்டத்திற்கு எதிரானவர்களின் உடுருவல்கள் என்பனவும் அதிகரித்திருந்தன
இதனை முடியடிக்க இவ்வறனவர்களை கண்டறிந்து இந்த உடுருவல்களை தடுக்கும் நடவடிக்கையில் விடுதலை புலிகளின் புலனாய்வு பிரிவினர் வன்னி பெருநிலப்பரப்பில் தீவிரமாக ஈடுபட்டனர் .

Tuesday, September 27, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-1




2005 ஆண்டின் காலப்பகுதி அது மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று போரை துவங்கவில்லை ஆயினும் போருக்கான ஆயுத்தங்கள் படையிரனால் மேற்கொள்ளபட்டு கொண்டுதான் இருந்தன என புலனாய்வு தகவல்கள் கிடைத்து இருந்தன ..இராணுவத்துக்கான போர் பயிற்சிகளிலும் ஆயுத கொள்வனவுகளிலும் சிறிலங்கா தீவிரமாக இறங்கியிருப்பது தெளிவாக தெரிந்து இருந்தது ..மஹிந்த அரசு பாரிய போர் ஒத்திகை ஒன்றை தொடங்க போகிறது என்பது உறுதியாக தெரிந்து இருந்தது

Monday, September 26, 2011

வீரச்சாவுக்கு முன் தியாகதீபம் திலீபனின் இறுதிஉரை


வீரச்சாவுக்கு முன் தியாகதீபம் திலீபனின் இறுதிஉரை


தியாக தீபம் திலீபன் ,இராசையா பாத்தீபன் தோற்றம் - 27.11.1963 மறைவு - 26.09.1987 வீரச்சாவுக்குமுன் தியாகி திலீபன் ஆற்றிய இறுதி உரையிலிருந்து...

திலீபனுடன் பன்னிரண்டாம் நாள்


திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் - 26.09. 1987 தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப் படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீரச் சாவடைந்தவர். அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாள் போராளி கவிஞர் மு.வே. யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து

Sunday, September 25, 2011

திலீபனுடன் பதினோராம் நாள்


திலீபனுடன் பதினோராம் நாள் - 25.09. 1987 இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்

Saturday, September 24, 2011

திலீபனுடன் பத்தாம் நாள்


திலீபனுடன் பத்தாம் நாள் -24-09-1987 பெற்றோர் – பிள்ளைகள் - சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முண்ணாயே முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது: கண்கள் கண்ணீர்ரை சொரிகின்றது. ஆனால், இவர்களின் ஒருவர் அணுஅணுவாகச் செத்துக் கொண்டிருப்பைப் பார்க்கும்போது

Friday, September 23, 2011

திலீபனுடன் ஒன்பதாம் நாள்

திலீபனுடன் ஒன்பதாம் நாள் -23-09-1987 அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. "கூ.......கூ.....குக்….கூ......" அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், தலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன்.

Thursday, September 22, 2011

திலீபனுடன் எட்டாம்ம் நாள்

திலீபனுடன் எட்டாம் நாள் -22-09-1987 இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன

துணை தளபதி கேணல். ரமணன்

கந்தையா உலகநாதன்

திருப்பளுகாமம் மட்டக்களப்பு

பிறப்பு - 14.10.1965

வீரச்சாவு - 21.05.2006

பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக் கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. காவலாளியும் காணப் படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பாடசாலை, மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர. பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணி போல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும் போதும் சிவக்கும் வானமுமாக கண்களுக்கு எப்போதுமே விருந்து வைக்கும் பழுகாமம், நாட்டுக் கலைகளுக்கும் நாவன்மை மிக்க பேச்சாற்றலுக்கும் நாவூறவைக்கும் மீன்கறி வகைகளுக்கும் பேர்போனது.

மேஜர். சோதியா

மைக்கேல் வசந்தி
கரவெட்டி, யாழ்பாணம்.
மகளீர் படையணின் முதற் தாக்குதற் தளபதி

பச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது. அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற... தலைக்கிரீடம் ஒருபுறம்.. நிச்சயமாக... நிச்சயமாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன.

இந்திய இராணுவக் காலப்பகுதி, ஓ! அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம்.

ராத நினைவு சுமந்து

கனகசபாபதி ஹரிச்சந்திரா - வண்ணார்பண்ணை யாழ்
வீரஜனனம: 22-12-1958 - வீரமரணம் 20-05-1987

யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப்பயணத்தில் தளபதி ராதா ஆகினார்.

லெப். கேணல். பொன்னம்மான்

தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா....

என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது.

எமது இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய சோகத்தை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும்.

தமிழீழ தேசிய கொடி பயன்பாட்டுகோவை 2

தொடர்ச்சி.... 11. கொடிப்பீடம் கொடிப்பீடம் நிலமட்டத்திலிருந்து ஓர் அடி உயரங் கொண்டதாகவும் 2 அடி நீளம் 2 அடி அகலம் கொண்டதாகவும் இருக்கவேண்டும். பீடத்தின் முன்புறம் பீடத்தோடு இணைந்து 2 அடி நீண்டு நிலத்திலிருந்து அரை அடி உயரமுடையதாக இருக்கவேண்டும். 12. கொடியேற்றும் முறை தேசியக்கொடியை ஏற்றும்போது கொடியேற்றப்படும் வளாகத்திலோ வீட்டிலோ இருக்கும் அனைவரும் (நோயாளர் நீங்கலாக) கொடியேற்றும் நிகழ்விற் பங்கேற்கவேண்டும். கொடிக்கம்பத்திற்கு இடது பக்கத்தில் நின்று கொடியையேற்றவேண்டும். கொடியை மிடுக்கோடும் சீரான வேகத்தோடும் ஏற்றவேண்டும். கூடுதலான வேகத்துடனோ மிக மெதுவாகவோ ஏற்றக்கூடாது.

கரும்புலிகள் வரலாறு <ஜுலை.05>


ஒப்பிரேசன் லிபரேசன்" எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப்போர் ஓயாது என்றார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது. இன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றார்.

தியாகதீபம் திலீபன் <முழுமையான தொகுப்பு

Share
    தமிழ் மக்களினதும், தமிழர் தாயகத்தினதும் உரிமைகளைக் காப்பாற்றும் வகையில், இந்திய அரசாங்கத்தினதும், இந்திய மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் (15.09. 1987) தொடங்கினார். அவரது ஐந்து கோரிக்கைகள்தான் என்ன? 1. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறையில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும். 2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களவர் குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை " புனர்வாழ்வு' என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும். 4. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் போலீஸ் நிலையங்கள் திறப்பதை உடனே நிறுத்தவேண்டும். 5. இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோர்க்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் திரும்பப்பெற்று, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள ராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும். ஆகிய கோரிக்கைகளை உண்ணாவிரத மேடையில் பிரசாத் படிக்க, இதே கோரிக்கைகளை 13-08-1987 அன்று இந்தியத் தூதர் அலுவலகத்திற்கு அனுப்பி 24 மணிநேரம் ஆன நிலையில், தகுந்த தீர்வு கிடைக்காத காரணத்தால், சாகும்வரை உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த விடுதலைப் புலிகள் பிரதேசப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ( 13-08-1987) தீர்மானிக்கப்பட்டது. பிரபாகரனும் நிலைமையை விளக்கி தீட்சித்துக்குக் கடிதம் எழுதினார். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயிலையொட்டி உண்ணாவிரத மேடை அமைக்கப்பட்டிருந்தது. தாயற்ற திலீபனுக்கு நடுங்கும் கரத்துடன் வந்த ஒரு தாய், திருநீற்றைப் பூசினார். மாத்தையா திலீபனை உண்ணாவிரத மேடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார். அவர் அருகே மு.வ.யோ.வாஞ்சிநாதன், ராஜன், பிரசாத், சிறீ ஆகியோர் அமர்ந்தனர். திலீபனின் இயற்பெயர் இராசையா பார்த்திபன் ஆகும். யாழ் மாவட்டத்திலுள்ள ஊரெழு என்னும் பனைமரங்கள் நிறைந்த கிராமத்தில், ஆசிரியர் இராசையா தம்பதியினருக்கு நாலாவது கடைக்குட்டி மகனாகப் பிறந்தார். மருத்துவ மாணவனாக இருக்கையில் பிரபாகரனைத் தலைவராக ஏற்று இயக்கத்தில் சேர்ந்தார். இவரது பணியில் திருப்தியுற்ற தளபதி கிட்டு பல்வேறு உயர்வுகளை அளித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக, கிட்டுவின் பரிந்துரையின்படி பிரபாகரன் நியமித்தார். திலீபனின் முயற்சியால் விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் துணை அமைப்புகளாக (1) தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் இயக்கம் (SOLT) , (2) தமிழீழ மகளிர் அமைப்பு, (3) சுதந்திரப் பறவைகள் அமைப்பு. (4) தமிழீழ தேசபக்தர் அமைப்பு, (5) தமிழீழ விழிப்புக் குழுக்கள், (6) தமிழீழக் கிராமிய நீதிமன்றங்கள், (7) சுதேச உற்பத்திக் குழுக்கள், (8) தமிழீழ ஒலி-ஒளி சேவைக் கட்டுப்பாட்டுச் சபை, (9) தமிழர் கலாசார சபை மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு பெரும் பாராட்டைப் பெற்றன. அண்ணல் காந்தி, ஐரிஷ் நாட்டுப் போராட்ட வீரன் பாபி சாண்ட்ஸ், பொட்டி ஸ்ரீராமலு போன்றோர் நீராகாரம் அருந்தித்தான் உண்ணாவிரதம் இருந்ததாகப் படித்திருக்கிறோம். ஆனால் திலீபன் ஒரு சொட்டு நீர்கூட அருந்தாத உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன், தகவல் தொடர்பு சாதனங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் உண்ணாவிரதம் இருந்தபோது ஒரு சொட்டு நீர்கூட அருந்தாத உண்ணாவிரதத்தையே மேற்கொண்டார். அவர் வழியில் திலீபன். பக்கத்தில் இருந்த மேடையில் பிரசாத் தலைமை ஏற்க, உண்ணாவிரதத்துக்கான காரணங்களை நடேசன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் விளக்கினார்கள். மேடையில் ஓர் இளைஞன், "திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல - தமிழ்மக்களின் ஒட்டுமொத்தமான கோரிக்கை இது. தமிழீழம் தாருங்கள் என்றுகூடக் கேட்கவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என்றுதான் அவர் கேட்கிறார்' என்று பேசினார். அன்று இரவு பதினோரு மணியளவில் பிரபாகரன், திலீபனைப் பார்ப்பதற்காக வந்தார். அவருடன், சொர்ணம், இம்ரான், அஜீத், சங்கர், மாத்தையா, ஜானி என்று பலரும் வந்திருந்தனர். முதல் நாள்: இரவு நாடித் துடிப்பு 88, சுவாசத் துடிப்பு 20. இரண்டாம் நாள்: முகம் கழுவிக்கொண்டார்; தலைவாரிக் கொண்டார்; சிறுநீர் கழித்தார்; மலம் போகவில்லை. மேடையில் கவிதைகள் முழங்கிக்கொண்டிருந்ததைக் கேட்ட திலீபன், "பேசவேண்டும் போலிருக்கிறது. மைக் தாருங்கள்' என்றார். இரண்டு நிமிடத்துக்கு மேல் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு மைக் வழங்கப்பட்டது. ""அன்பார்ந்த மக்களே! என்னால் அதிகம் பேசமுடியாது. ஆனாலும் உங்களுடன் பேசவேண்டும் போல் இருக்கிறது. உங்களைப் பார்க்கும்போது, நீங்கள் தரும் ஆதரவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறேன். எனது ஐந்து கோரிக்கைகளும் நிறைவேறும் மட்டும் ஒரு சொட்டு நீர்கூட அருந்த மாட்டேன். இது உறுதி. இதையே தலைவர் பிரபாகரனிடமும் வலியுறுத்திக் கூறிவிட்டேன். இறக்க நேரிட்டால், அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். நான் இறந்ததும் விண்ணில் இருந்து அங்கேயுள்ள என் நண்பர்களுடன் சேர்ந்து தமிழீழம் மலரப்போகும் அந்தநாளை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன். என்னால் அதிகம் பேசமுடியவில்லை. என் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆர்வமுடன் கலந்துகொள்ளும் உங்களுக்கு என் நன்றிகள். வணக்கம்'' அவரது பேச்சைக் கேட்ட மக்கள் கண்ணீர் சிந்தினர். அன்று இரவும் பிரபாகரன் வந்தார். மூன்றாம் நாள்: "மலம் போகவேணும் போலதான் இருக்கு' என்றார் திலீபன். "இறங்கி வாருங்கள்' - உதவுகிறார் டாக்டர் வாஞ்சிநாதன். " வேண்டாம் விடுங்க... நானே வருகிறேன்.' சிறுநீர் கழியவில்லை...சிரமப்படுகிறார். "தண்ணீர்-குளுக்கோஸ் ஏதும் குடித்தால்தான் சிறுநீர் வரும்' என்கிறார் டாக்டர். "என்ன பகிடியா பண்ணுறீங்க - சொட்டுத் தண்ணீர்கூட குடிக்கமாட்டேன்' என்றார் திலீபன் உறுதியோடு. ஒலிபெருக்கியில் காசி ஆனந்தன் கவிதைகள் முழக்கமிட்டுக் கொண்டிருந்தது. 3- ஆம் நாள் நாடித்துடிப்பு 110. சுவாசத் துடிப்பு 24.
நான்காம் நாள்: நாடித்துடிப்பு 120. சுவாசத் துடிப்பு 24. நாடித்துடிப்பு சாதாரணமாக 72-80-ம், சுவாசத் துடிப்பு 16-22- ம் இருக்கவேண்டும். அதே நாள் இரவில் நாடித்துடிப்பு 114. சுவாசத்துடிப்பு 25. 1986- இல் நடைபெற்ற ஒரு மோதலில் எதிரியின் குண்டை வயிற்றில் தாங்கியதால் திலீபனின் 14 அங்குலக் குடலை அகற்றிவிட்டார்கள். அப்போது மூன்று மாதம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அந்தக் காரணமும் இப்போது சேர்ந்து அவருக்கு வயிற்றில் வலி எழுந்தது. ஐந்தாம் நாள் - ஆறாம் நாள்: கொழும்பிலிருந்து இந்தியத் தூதுவர் அலுவலகத்தில் இருந்து முக்கிய நபர் வரப்போவதாகச் செய்தி கசிந்தது. கிட்டுவின் தாயார் ராஜலட்சுமி அம்மாள் உண்ணாவிரத மேடைக்கு வந்து, திலீபனை அணைத்து வாழ்த்தும் வேளையில், அவரது அழுகை நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அன்று மாலை யாழ்க்கோட்டை ராணுவ முகாம் பொறுப்பாளர் ஜெனரல் பாரா, திலீபனைப் பார்க்க வந்தார். பிரிகேடியர் ஃபெர்னான்டோ உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து சிங்களக் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தினார். ஆறாம் நாள்: தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜானி ஆகியோர் வந்து திலீபனின் தலையை வருடி கண்கலங்கிச் சென்றனர். "கிட்டு அண்ணனைப் பார்க்கவேண்டும்' திலீபன் கோரிக்கை வைத்தார். அவர் அப்போது சென்னையில் இருந்தார். மாலை, ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்காராவும் அவரது கட்சியினரும் வந்து பார்த்தனர். யாழ்ப்பாணம் வந்த இந்திய உதவித் தூதுவர் நிருபம் சென், முகாமில் புலிகளின் பிரதிநிதிகளிடம், "உண்ணாவிரதப் போராட்டங்களால் இந்தியாவை நிர்ப்பந்திக்க முடியாது' என்று எச்சரித்துவிட்டுச் சென்றார். ஏழாம் நாள்: சென்னையிலிருந்து இந்தியா டுடே பத்திரிகையாளர் மற்றும் சென்னைத் தொலைக்காட்சிக் குழுவினர் வந்தனர்; படம் பிடித்தனர். எட்டாம் நாள்: கூட்டம் லட்சக்கணக்கில் சேர்ந்துவிட்டதால் வெயிலைத் தாக்குப்பிடிக்க கொட்டகை போடும் வேலை நடந்தது. வடக்கு-கிழக்குப் பகுதிகளில் பல இடங்களில் திலீபனின் உண்ணாவிரதத்தை ஆதரித்து, அடையாள உண்ணாவிரதங்கள் மேற்கொள்ளப்பட்டன. ரத்த அழுத்தம் 80/50. நாடித் துடிப்பு 140. சுவாசம் 24. இந்திய அமைதிப்படையினர் விடுதலைப் புலிகளைச் சந்தித்தனர். இவர்கள் சிங்களப் போலீசாருக்குப் பதில் இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படையைக் கொண்டு வருவது குறித்து பேசிச் சென்றார்கள். உண்ணாவிரதம் குறித்து எதுவும் பேசவில்லை. ஒன்பதாம் நாள்: இந்திய அமைதிப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் ஹெலிகாப்டரில் யாழ் பல்கலை மைதானம் வந்தார். பிரபாகரனைச் சந்தித்தார். இருவரும் தனித்தனி வாகனங்களில் புறப்பட்டு யாழ்கோட்டை ராணுவ முகாம் சென்றனர். பேச்சுவார்த்தையில் பலன் எதுவுமில்லை. தொடர்ந்து அதே நாளில் பிற்பகல் 1.30 மணிக்கு, இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் பிரபாகரன் சந்திப்பு நடந்தது. பேச்சுவார்த்தையில் தீபிந்தர் சிங், ஹர்கிரத் சிங், பிரிகேடியர் ஃபெர்னாண்டஸ், கேப்டன் குப்தா மற்றும் புலிகள் தரப்பில் மாத்தையா, செ. கோடீஸ்வரன் (வழக்கறிஞர்), அன்டன் பாலசிங்கம், சிவானந்த சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் தூதர் உறுதிமொழி மட்டுமே அளித்தார். உண்ணாவிரதம் நிறுத்தப்படுவது குறித்து ஏதும் பேசவில்லை. பத்தாம் நாள்: திலீபனின் கை, கால்கள் அசைவின்றி சோர்ந்து கிடந்தன. நாடித்துடிப்பு 52. ரத்த அழுத்தம் 80/50. சராசரி மனிதனின் அளவுகளைவிட அனைத்தும் குறைந்துவிட்டன. இனி, திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நேரலாம். நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாட்டுத் தூதுவர்கள் வந்து திலீபனைப் பார்த்துச் சென்றார்கள். பதினோராம் நாள்: கோமாவுக்கு முந்தைய நிலையில் உடல் அங்குமிங்கும் அசைவது போல திலீபனின் உடல் அவரையறியாமலே புரளத் தொடங்கியது. யாழ் மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்தன. "நிதர்சனம் டிவி' கடந்த பத்து நாட்களாக உண்ணாவிரதச் செய்தியைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தது. பன்னிரண்டாம் நாளில், திலீபனின் உடல்நிலை மோசமாகிவிட்டது என்ற செய்தி யாழ் பகுதி முழுவதும் பரவியது. 265 மணி நேரம், நீரின்றி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி, தனது சுயநினைவு தப்பினாலும் குளுக்கோஸ், நீர் தந்துவிடாதீர்கள் என்று கூடியிருந்தோரிடம் சத்தியவாக்கு வாங்கிக்கொண்டு புழுவாய்த் துடித்த திலீபனின் உயிர் 26-09-1987 காலை 10. 48 மணிக்குப் பிரிந்தது. எங்கும் அழுகை.. . விம்மல்... இலங்கை இந்தியா எதிர்ப்புக் குரல் எழுந்தது. எம்பார்ம் செய்ய மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட உடல், பிற்பகல் 4.15 மணியளவில் மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஈரோஸ் தலைவர் பாலகுமார், பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதனர். பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மனிதநேயம் தழைக்கும் இடத்தில்தான் அகிம்சை வெல்லும் என்பது திலீபன் மரணம் மூலம் உலகுக்கு உணர்த்தப்பட்டது

விடுதலைப்பயணத்தில் {சு.ப தமிழ்ச்செல்வன்


பிரிகேடியரின் இருபத்துமூன்றாண்டு கால விடுதலைப் பணியை எதிர்காலத்தில் ஆய்வு செய்கின்ற எந்தவொரு வரலாற்றாசிரியரும் அவருடைய விடுதலைப் பணியை பல்துறைகளினூடாகவும் ஆய்வு செய்யவேண்டியிருக்கும். ஏனெனில் அவருடைய விடுதலைப் பணியானது இரு கூறுகளாக நோக்கத் தக்கதாகவுள்ளது. 1. அரசியல் ரீதியிலானது. 2. படைத்துறை ரீதியிலானது. 1984 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக இணைந்து கொண்ட அவர் அமைப்பின் ஆரம்பகால வளர்ச்சியில் முழுமையாக ஈடுபட்டுள்ளார். ஆரம்பத்தில் போராட்டத்தின் பின் தளமாக தமிழ்நாடு இருந்தபோது தமிழ்நாட்டில் ஒரு மருத்துவப் போராளியாக செயற்பட்ட அவர் பின்னர் களத்திற்கும், தளத்திற்குமிடையே தேசியத் தலைவர் அவர்களுக்கான இணைப்புச் செயற்பாட்டாளராக செயற்பட்டதன் மூலமாக அவரது ஆளுமை அன்றே தேசியத் தலைவர் அவர்களால் இனங்காணப்பட்டுள்ளதுடன் முதன்மை யானதாகவுமிருந்துள்ளது. பிரிகேடியரின் விடுதலைப் பணியை ஒருகால ஒழுங்கில் நோக்கும்போது அமைப்பில் இணைந்து அரசியல்துறைப் பொறுப்பாளராக பொறுப்பேற்ற 1984 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையிலான அவரது முதன்மையான படைத்துறை ரீதியிலான செயற்பாட்டையும் 1993 இலிருந்து அவர் வீரச்சாவடைந்த 2007 வரையான காலத்தையும் இரு கூறுகளாக நோக்கலாம். ஏனெனில் 1984 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு வரையான காலத்தில் படைத்துறை ரீதியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் செயற்பட்டுள்ளார். இக்காலப்பகுதியிலேயே தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க இந்திய ஆக்கிரமிப்புக் கெதிரான இந்திய - புலிகள் போர் நடைபெற்றது. இந்திய - புலிகள் போரில் அவர் தென்மராட்சி கோட்டத்தின் தளபதியாக நின்று இந்திய இராணுவம் வெளியேறும் வரை சமராடியுள்ளார். இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக அக்காலத்தில் அவர் ஒரு வீரம் செறிந்த போரை நடாத்தியுள்ளதுடன் இன்று அவரோடு கூடவே நின்று களத்தில் போராடிய போராளிகள், தளபதிகள் நினைவு கூருகின்ற வகையில் தலைமையோடு அவருக்கான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையிலும் எந்தவித சிக்கலுமின்றி போராளிகளை வழி நடாத்தியமை எந்தவொரு சூழ்நிலையிலும் திறமையாக படை நடத்தும் அவரது திறனை வெளிப்படுத்துகின்றது. அத்தோடு இக்காலப்பகுதியில் குறைந்தளவு போராளிகளையும், குறைந்தளவு ஆயுத தளவாடங்களையும் கொண்டு இந்தியப் படைகளுக்கு எதிராகப் பல்வேறு தாக்குதல்களை வெற்றிகரமாக மேற்கொண்டதுடன் பின்னர் தலைமையோடு தொடர்பினை ஏற்படுத்தியதன் மூலம் ஒரு வரலாற்று நெருக்கடிமிக்க காலத்தில் சிறப்பாகச் செயற்பட்டுள்ளார். உண்மையில் ஒரு சிகரெட்டைப் புகைத்து முடிப்பதற்குள் புலிகளை அழித்து விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்ற இந்திய அரசின் எண்ணத்திற்கு யாழ்ப்பாணத்திற்குள் நின்றபடி இந்தியப் படை வெளியேறும் வரை புலிகள் குறித்த இந்திய அரசின் கணிப்பீடுகளையும் அனுமானங்களையும் பொய்த்துப்போக வைத்த புலிகள் இயக்கத்தின் திறனில் பிரிகேடியரின் பங்கு அளப்பரியது. இதேவேளை பிரிகேடியரின் இரண்டாவது கட்ட ( படைத்துறை ரீதியிலான) செயற்பாட்டில் 1991 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்றுச் செயற்பட்ட காலம் முதன்மை பெறுகிறது இக்காலப்பகுதி மிக முக்கியமான ஒரு காலப்பகுதியாகும். இக்காலப் பகுதியிலேயே, முதலில் ஒரு கெரில்லா இயக்கமாக இனங்காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மெதுவாக மரபு வழிப்படையாகத் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றனர். இக்காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் படையணிகள் ரீதியாகவும் போர் முறைகளிலும் மாற்றங்களைச் சந்தித்ததுடன் ஒரு அரை மரபு வழிப்படையாக மாற்றம் கண்டு வந்தது. அதாவது ஒரு மரபு வழிப்படைக்கு இருக்க வேண்டிய படைக்கட்டுமானங்கள் முழுமை பெறாத நிலையில் ஒரு நவீன மரபு வழிப்படைகளை எதிர்த்துக் களமாட வேண்டிய சூழலில் யாழ். மாவட்டச் சிறப்புத் தளபதியாக பிரிகேடியர் செயற்பட்டார். அதாவது போராட்டத்தின் பிரதான தளத்தினைப் பாதுகாக்கும் தளபதியாக செயற்பட்டார். அத்தோடு அவர் யாழ். மாவட்டத் தளபதியாக பணியாற்றிய அக்காலப் பகுதியில் வட போர்முனையின் கட்டளைப்பீடமாகத் திகழும் பலாலி முக்கூட்டுப் படைத்தளத்தின் அச்சுறுத்தலிலிருந்து போராட்டத்தின் மையத்தளமாக திகழ்ந்த யாழ்ப்பாணத்தை பாதுகாப்பதற்கான ஒரு தற்காப்புச் சமருக்கு முகங்கொடுத்த அதேவேளை இவரது தலைமையில் பல வலிந்த தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக 1. மன்னார் சிலாவத்துறை சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதல். 2. ஆகாயக் கடல் வெளிச்சமரில் கடல்வழியிலான படைஇறக்கத்துக்கு எதிரான சமர். என்பன பிரிகேடியரின் படைத்துறை ரீதியிலான செயற்பாட்டை வெளிப்படுத்தக் கூடியன. ஆகாயக்கடல் வெளிச்சமரைப் பொறுத்த வரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னெடுத்த முதலாவது மிகப்பெரும் மரபுவழிச்சமராக அது அமைந்ததோடு அனைத்துலக ஊடகங்களினதும், படை ஆய்வாளர்களினதும் கவனத்தை ஈர்த்த ஒரு சமராகவும் அது திகழ்ந்தது. இந்தச் சமரில் கடல் வழியிலான படை இறக்கத்துக்கு எதிரான சமருக்கு பிரிகேடியரே பொறுப்பாகச் செயற்பட்டார். இந்தச் சமரில் விழுப்புண்ணடையும் வரை அவர் களத்தை வழிநடத்தினார். இக்காலப் பகுதியில் கடற்புலிகளின் உருவாக்கமோ அல்லது கிட்டுப் பீரங்கிப் படையணி மற்றும் குட்டிசிறி மோட்டார் படைப்பிரிவின் உருவாக்கமோ ஏதும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் 1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளார்ந்த ரீதியாக ஒரு மிகப்பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்த நிலையில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக பிரிகேடியர் நியமிக்கப்பட்டார். படைத்துறை ரீதியாக களங்களை வழிநடத்திய ஒருவர் ஒரு விடுதலை இயக்கத்தின் கடினம் மிக்க அரசியற் பணியை ஆற்றும் பொறுப்பையேற்றார். இவரது அரசியற்பணியானது இவர் அரசியல்துறைப் பொறுப்பாளராக பொறுப்பேற்ற 1993 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி பல்வேறு வகையிலும் முதன்மை பெற்றதாகவுள்ளது. ஏனெனில் உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமும் சந்தித்திராத மிகப்பெரும் நெருக்கடிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முகங்கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் அரசியற்பணியை முன்னெடுக்க வேண்டிய சூழமைவு அவருக்குக் காணப்பட்டது. இந்த நிலையிலும் அவர் நெருக்கடிமிக்க பல செயற்றிட்டங்களைச் சீர்செய்யும் வகையிலான வேலைத்திட்டங்களுக்கு தலைமை தாங்க வேண்டியிருந்ததுடன் அதனை வெற்றிகரமாகவும் செயற்படுத்தினார். இப்பணியை நாம் இரண்டு வகையில் நோக்கலாம். 1. இராஜதந்திரத் தளத்தில் 2. மக்களின் தளத்தில். ஒரு விடுதலை இயக்கத்தின் இலட்சியம், கொள்கை என்பவற்றை செவ்வனே மக்கள் மத்தியில் கொண்டு சென்று மக்கள் ஆதரவுத் தளத்தைக் கட்டியெழுப்பும் பணியை ஆற்றுவது மிகக் கடினமான ஒரு பணியாகும். தொடர்ச்சியான போர் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் மக்களிடையே இப் பணியை ஆற்றுவதென்பது மிகப் பெரும் சிரமத்தைக் கொண்டது. ஆயினும் இப்பணியை பல்வேறு நெருக்குவாரங்களுக்குமிடையே அவர் முன்கொண்டு சென்றார். விடுதலை அமைப்பின் கொள்கையை முன்னெடுப்பது, மக்களை அணிதிரட்டுவது, விடுதலை இயக்கத்திற்கு எதிரான அனைத் துலகத்தின் இராஜதந்திர சமர்களுக்கு முகம் கொடுக்கின்ற அதேவேளை இலட்சியத்தின் மீது மக்களைத் தொடர்ந்து உறுதி கொள்ளச் செய்வது என்பவற்றோடு ஒரு நடைமுறை அரசிற்கான கட்டுமானங்களை உருவாக்கும் தலைமையின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பது எனப் பரந்துபட்ட வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுக்க வேண்டியிருந்தது. ஆயினும் இக்காலப்பகுதியில் இவர் ஒரு மிகப் பெரும் போர் இடப்பெயர்வு நெருக்கடிக்கும், இயற்கை அழிவுகளுக்கும் முகம் கொடுத்த மக்களின் புனர்வாழ்வு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்ற வாழ்வியல் நெருக்கடிகளையும் வெற்றிகரமாகக் கையாண்டார். 2. யாழ்ப்பாண இடப்பெயர்வு. 4. சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம். யாழ்ப்பாண இடப்பெயர்வைப் பொறுத்த வரையில் சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இரவில் இடம்பெயர்ந்த சூழ்நிலையில் அதற்கு முகம் கொடுத்து வன்னியை நோக்கி இடம்பெயர்ந்த மக்களின் இருப்புக்கு வழிகோலியது அவரது அரசியற்பணிக் காலத்தில் ஈட்டிய மிகப்பெரும் சாதனையாக நோக்கத்தக்கது. இத்தகையதொரு நிலையிலும் அரசியல்துறைக்கான சிவில் கட்டமைப்புக்கள் குலையாது அவற்றின் மீள் எழுச்சிக்கு பாடுபட்டமையானது முதன்மை மிக்க செயற்பாடாகும்.இதேபோன்றுதான் 2004 ஆம் ஆண்டு தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தோனேசியாவின் சுமாத்திரா ஜாவா கடற்பரப்பில் ஏற்பட்ட நிலவதிர்வு காரணமாக கரையோரப் பிரதேசங்களில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அழிவிலிருந்து மக்களை துரிதகதியில் மீள்நிலைக்குக் கொண்டுவரும் செயற்றிட்டம் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டபோது அதனை வெற்றிகரமாக செயற்படுத்தி அனைத்துலக சமூகத்தின் பாராட்டு தலையும், கவனத்தையும் தாயகத்தை நோக்கி ஈர்த்தமையானது இவரது திறனிற்குச் சான்றாகும். அனைத்துலகத்தின் உதவிகள் முழுமையாக தமிழ் மக்களுக்கு வந்தடைவதை சிறிலங்கா அரசு தடுத்துக் கொண்டிருந்த நிலையில் எட்டக்கூடிய அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி சிறிலங்காவை விஞ்சும் அளவுக்கு செயல்பூர்வமாக அதனை எதிர்கொண்டமையானது அனைத் துலக சமூகத்தின் கவனத்தை ஈர்த்தமைக்குக் காரணமாக இருந்தது. இச்செயற்றிட்டமானது பாதிக்கப்பட்ட மக்களை துரிதகதியில் இயல்பு நிலைக்கு கொண்டுவர மிகவும் பயனுடையதாக அமைந்திருந்தது. இது பிரிகேடியரின் அரசியற்பணியில் மக்களின் தளத்தில் அவர் ஆற்றிய மகத்தான பணியாக அமைந்தது என்றால் மிகையாகாது. இதேவேளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இவரது இராஜதந்திரப் பணி வித்தியாசமானதாகும். அரசுகளுக்கிடையான இறுக்கமான பிணைப்பினூடாக முன்னெடுக்கப்பட்டு வரும் இராஜீக உறவுகளுக்கு நடுவே விடுதலை அமைப்பொன்றின் புரட்சிகர அரசியலை அனைத்துலக நாடுகளின் ஒத்திசைவுப் போக்கின் நடுவே முன்கொண்டு செல்லுதல் என்பது ஒரு கடினமான பணியாகும். விட்டுக் கொடுப்புக்கள் என்ற பேரிலும் இணைந்து செயற்படுதல் என்ற கோதாவிலும் ஒரு விடுதலை அமைப்பை அரசியல் நீரோட்டத்துக்குள் கொண்டுவருதல் என்ற புனிதம் கெட்ட இராஜதந்திர வலைப் பொறிக்குள் வீழ்த்திவிட முயலும் அனைத்துலக இராஜதந்திர முயற்சிகளுக்கு ஈடு கொடுத்து இலட்சியத்தையும், தலைமையின் முடிவுகளையும் பாதுகாக்கின்ற இராஜதந்திரப் பாத்திரத்தை பிரிகேடியர் ஏற்றிருந்தார். இன்றைய அனைத்துலக சமூகமானது அனைத்துலக ரீதியாக குருட்டுத்தனப் பார்வையூடாக எல்லா இனங்களின் போராட்டங்கள் மற்றும் முன்னெடுப்புக்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்த முனைந்து வரும் இன்றைய உலக யதார்த்ததில் ஒரு புரட்சிகர இராஜதந்திரப் பணியை பிரிகேடியர் மேற்கொண்டிருந்தார். சமாதானம் அடிமைகளை உருவாக்கு கிறதென்றால் அதற்குச் சுதந்திரத்தை சாகடிக்கும் வல்லமை இருப்பதானாலேயேயாகும். அந்தச் சாகடிக்கும் வல்லமைக்குச் சவாலாக தமிழினத்தின் அரசியல் பணியை முன்னெடுத்து விடுதலைப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியான காப்பை பெறுவதென்பது மிகக் கடினமான பணியாகும். அதிலும் பல்வேறு நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட ஒரு விடுதலை அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவராக நின்று சர்வதேச சமூகத்தின் எதிர் முகத்தை எதிர்கொள்வது இலகுவான காரியமல்ல. பேச்சு என்ற சாக்கில் சர்வதேச சாசனங்களின் பொறிக்குள் வீழ்த்தி தமிழினத்தின் விடுதலைக் கனவை கலைத்துவிட முயலும் சூழ்ச்சிக்கு பலியாகாது சுதந்திர இயக்கத்தின் இலட்சியத்தை முன்கொண்டு செல்வதில் பிரிகேடியர் ஆற்றலோடு பணியாற்றினார். இதன்போது அனைத்துலக சமூகத்தின் அத்தனை இராஜதந்திரப் பிரயோக வடிவங்களுக்கும் அவர் முகங்கொடுக்க வேண்டியேற்பட்டபோதும் அவர் இலட்சியத்தை எந்தவொரு கட்டத்திலும் சிக்கலுக்கோ, சிரமத்துக்கோ உள்ளாக்க நேரிடும் வகையில் செயற்படவில்லை என்பது நோக்கத்தக்கது. பிரிகேடியர் அவர்களின் பதின் மூன்றாண்டு கால அரசியற் செயற்பாடுகளின்போது இரண்டு சமாதான பேச்சுக்களை எதிர்கொண்டுள்ளார். 5. யாழ்ப்பாணப் பேச்சுவார்த்தை. (முன்னாள் சிறிலங்கா சனாதிபதி சந்திரிகா காலம்) 6. நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானப் பேச்சுவார்த்தை. இவ்விரு சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போதும் பலகட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் பிரிகேடியரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன

கேணல் கிட்டு வரலாற்றுத் தொகுப்பு

கேணல் கிட்டு கேணல் கிட்டு (சதாசிவம் கிருஷ்ண‌குமார், வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், 02 /01 / 1960 - 16 /01 /1993) யாழ். மாவட்டம் வடமராட்சியின் கடற்கரைப் பிரதேசமான வல்வெட்டித்துறையில் சதாசிவம் ராஜலக்ஷ்மி தம்பதிகளின் இரண்டாவது மகனான கிருஷ்ண‌குமார் பிறந்தது 1960 ஜனவரி 2 ல். இவருடைய அப்பாவான சதாசிவம் நெல்லியடியில் பத்திரிகை அச்சகம் ஒன்று வைத்திருந்து அச்சுத்தொழிலில் ஈடுபட்டிருந்தார். அரசியலில் ஈடுபாடு கொண்ட அவருடைய அம்மா ராஜலக்ஷ்மி தந்தை செல்வா தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சியின் தீவிர ஆதரவாளர் ஆவார். கிட்டு குழந்தையாக இருந்த சமயம் 1961 ல் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்திலும் கலந்துகொன்டவர். கிருஷ்ண‌குமார்  தனது கல்வியை வல்வெட்டித்துறையில் அமைந்திருந்த சிதம்பரா கல்லூரியில் பயின்றார். இதே கல்லூரியில்தான் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் முன்னால் பிரதி தலைவர் கோபாலசாமி மகேந்திரராஜா( மாத்தையா)வும் கல்வி கற்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.ஒரே பள்ளியில் பயின்றதால் தலைவரின் நண்பனான‌ கிருஷ்ண‌குமார் ஏற்கனவே தலைவரின் உறவினருமாவார். கிருஷ்ண‌குமார் 18 வயது இளைஞனாக இருந்தபோது புலிகளுடன் இணைந்துகொண்டார். அவரை புலிகள் இயக்கத்தில் இணைத்தது சாட்சாத் வேலுப்பிள்ளை பிரபாகரனேதான். கிருஷ்ண‌குமார் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். கிட்டுவும், இன்னும் சில தோழர்களும் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இராணுவப் பயிற்சி பெற்றனர். கிட்டுவின் துடிப்பும் வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது. எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற வேகமும் எந்த விடயத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டுவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களை, சிந்தனைகளை, மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தை, தலைவரின் அருகில் இருந்த கிட்டு அறிந்துகொள்கிறார். அளவு கடந்த திறமையுடன் வேகமும் விவேகமும் நிறைந்த அவரது செயற்பாடுகள் அவர் மீதான தனி நம்பிக்கை வளரக் காரணமாகின்றன. தன் மீது தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் காலம் கனிந்துவரும் வரை கிட்டு காத்திருக்கிறார். 1983 மார்ச் 04 இல் அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக சென்ற விடுதலைப் புலிகளின் அணியில் கிட்டுவும் ஒருவர். வீதியில் நிலக் கண்ணிவெடிகளை பொருத்திவிட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணிவெடிகளை கையாளும் போதியளவு செயற்திறன் போராளிகளுக்கு இல்லாத காலம் அது. இராணுவ வாகனங்கள் இலக்காக அண்மிக்கும் நேரத்தில் துரதிஸ்டவசமாக வாகனங்களைக் கண்டு மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் கால்கள் பட்டு கண்ணிவெடிகள் வெடிக்க போராளிகள் நிலை குலைந்து போகிறார்கள். துப்பாக்கி ரவைகளைக் கக்கியவாறு இரு இராணுவ கவச வாகனங்கள் போராளிகளை நெருங்கிவர பின்வாங்கிச் செல்வதைத்தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் கிட்டு மட்டும் எதிரியை எதிர்கொள்ளும் சாதகமற்ற களநிலையைக் கருத்திற்கொள்ளாது துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜுத்திறி (g-3) துப்பாக்கியால் இராணுவ கவசவாக னத்தை நோக்கிச் சுடுகிறார். இலக்குத் தவறவில்லை. சாரதி காயப்பட வாகனம் செயலற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கையை மெய்ப்பித்த மகிழ்ச்சியோடு கிட்டு களம் விட்டு அகன்றார். அவரின் முதல் களமே தனி மனித சாதனையாக ஆரம்பமாகிறது. 1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் சிறீலங்கா அரசால் திணிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல், ஜுலை 23ல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலி கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொள்கின்றார். 1983 இன் இறுதிக் காலத்தில் இந்தியாவுக்குப் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவில் கிட்டு இடம்பெற்றார். முதலாவது பயிற்சி பாச‌றையின் பொறுப்பாளராக‌ பொன்னம்மானும் இரண்டாவது பொறுப்பாளராக கிட்டுவும் நியமிக்கப்பட்டனர். விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா,பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் 100 போராளிகளுடன் பயிற்சி எடுத்துக்கொண்டார் கிட்டுவுக்கு வழங்கப்பட்ட தொடர்பாடல் குறிப்பு பெயர் கிலோ டெல்டா. பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 02இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்துகின்றார். அதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 09இல் எதிரியுடனான மோதலில் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். யாழ். மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் அவனுடைய முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது. யாழ். கோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா இராணுவம் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. யாழ். மண்ணில் எதிரிப்படையை மட்டும் அவர் வெற்றிகொள்ளவில்லை. மாறாக, மக்களின் மனங்களையும் அவர் வெற்றிகொண்டார். மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தொழில் நிலையங்கள், நூலகங்கள், மலிவுவிலைக் கடைகள், பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினார். இவவாறாகக் கிட்டுவின் சமூகப்பணிகள் விரிவடைய, அவர் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஒப்பற்ற போராளியாக மக்களால் உணரப்பட்டார். தமிழீழ மக்கள் மனங்களில் மாத்திரமல்ல, எல்லைகடந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவருமே கிட்டுவின் வீரசாதனைகளை அறிந்து பெருமிதம் அடைந்தார்கள். விடுதலைப் புலிகளால் மன்னாரில் வைத்துச் சிறைப்பிடிக்கப்பட்ட இரு சிங்களச் சிப்பாய்களின் விடுவிப்பு தொடர்பாக 1986 நவம்பர் 10இல் சிங்கள இராணுவத் தளபதியான கேணல் ஆனந்த வீரசேகரா, கப்டன் ஜெயனாத் கொத்தலாவை ஆகியோரை தனது இடத்திற்கு அழைத்துச் சந்தித்ததன் மூலம் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்தது. அதே போன்று ஒக்டோபர் 1986ல் சந்திரிக்கா அம்மையாரின் கணவரான விஜய குமாரதுங்காவை யாழ்ப்பாணத்தில் சந்தித்தார். அத்துடன் டெசம்பரில் இலங்கை அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அரசாங்கக் குழுவை வரவேற்றதும் கிட்டுதான். 1987 மார்ச் 13 அன்று தேசத்துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இரு கால்களிலும் காயம்பட்ட‌ கிட்டுவின் வலது கால் அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது. காலை இழந்த போதும் தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும், திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார். இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில், இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலைப்பாட்டை வெளிக் கொணர பெரிதும் பாடுபட்டார். இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களர், கலைஞர்கள், பேராசிரியர்கள் எனப் பலரையும் சந்தித்து, எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைத்தார். எமது தியாக வரலாறுகளை பல வெளியீடுகள் மூலம் இந்திய மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார். இவவாறான நிலையில் கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. சிறைக்குள் இருந்தபடியே அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தேவி இதழுக்கு போராட்டம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரையை எழுதினார். சிறையிலிருக்கும் தன்னை விடுவிக்கும்படி கிட்டு நடாத்திய அகிம்சைப் போருக்கு அஞ்சிய இந்திய அரசு அவரை விடுதலை செய்தது. விடுதலை பெற்ற கிட்டு வன்னிக் காட்டில் தலைவரைச் சந்தித்து இந்திய இராணுவத்திற்கு எதிரான போருக்கு இறுதிவரை முகங் கொடுத்தார். இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989 இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்கு ஒக்டோபர் இறுதியில் பயணமானார். கிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார். களத்தில், எரிமலை` எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு,விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம், எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார். விடுதலை உணர்வையும், தாய் மண்ணின் பற்றுறுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது. அவர் தலைவரை, தாயகத்தை, தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார். 1993 ல் கிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள். யாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பா, புலேந்திரன், திலீபன், ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாது, 1993 ஜனவரி 16ல் தமிழீழத்தை, தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள். கிட்டுவின் இழப்பு தலைவனின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழினத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடித்தனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு கிட்டுவின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப்புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக்கிக் கொள்ளும் தலைவர், கிட்டுவின் இழப்பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றார். "கிட்டு நீ சாகவில்லை, ஒரு புதிய மூச்சாக பிறந்திருக்கிறாய்" எனக்கூறி தனக்குள் ஒரு வீரசபதம் எடுத்துக்கொள்கிறார். இன்றைய உலகில், தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் கிட்டுவின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறிவாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் கிட்டு வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும். அந்தநிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் - புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது. சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில் கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்களென்றால் அது கிட்டுவால் அன்று விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன

பிரிகேடியர் தீபன்

பிரிகேடியர் தீபன் - 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணிதான் தீபனின் பூர்வீகமாகும்.

சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.

தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் - கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.

தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த 14-02௧987 அன்று கைதடியிலே இடம்பெற்ற வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.

1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் "தாங்கோ பாப்பா" ஆகும்.

இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.

1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.

1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.

இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.

பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.

1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.

தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.

தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது.

இந்த இரண்டு ரி 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.

1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.

1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.

1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பிரிகேடியர் பால்ராஜ் பிரிகேடியர் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.

யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல் மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.

தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122ம்ம் ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.

ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.

இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.

இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார்.

1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள் 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.

1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.

ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம்.

இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.

குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன்.

2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.

அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18க்ம் நீளமான 'ள்' வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன்.

கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக் குண்டுத் தாக்குதலில் வீரகாவியமானார்.

25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 5ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.

சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்கப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை "என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்."

தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள்

பிரிகேடியர் துர்க்கா

பிரிகேடியர் துர்க்கா
அன்பான முகம். சாந்தமான தோற்றம். எவரையும் பணிவுடன் அணுகும் அவரின் பண்பு. பல ஆயிரக்கணக்கான பெண்களை வழிநடத்தும் தலைமைத்துவப் பாங்கு. அனைத்தும் நிச்சயமாய் அவருக்கே உரித்தானது. ஆனந்தபுரத்தில் 20,000 சிங்களச் சிப்பாய்கள் வெறும் 700 விடுதலைப் புலிகளை மட்டும் பெட்டிச் சண்டையிட்டு 500 மீற்றருக்குள் வைத்து கொலைக்களமாக இரசாயனக் குண்டடித்து கொன்ற களத்தில் அவரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை சோதியா படையணியில் மாத்திரமல்ல, எந்த ஒரு போராளியாலும், குறிப்பாக எந்த ஒரு பெண் போராளியாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

இரண்டாம் திகதி வரை சுற்றிவளைக்கப்பட்ட பெட்டிக்குள் இருந்த தேசியத் தலைவரை அண்ணா! தயவுசெய்து இங்கிருந்து புறப்படுங்கள் என பணிவாகக் கட்டளைக் கடிதம் எழுதியது கூட எங்களின் பிரிகேடியர் துர்க்கா அக்கா என்றும் சிலர் அக்காவின் வீரச்சாவின் பின்னர் கூறினர். வடபோர்முனைக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன், கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி பிரிகேடியர் மணிவண்ணன், மகளிர் பொறுப்பாளரும் மாலதி படையணியின் சிறப்புத் தளபதியுமான பிரிகேடியர் விதுசா ஆகியோருடன் பிரிகேடியர் துர்க்காவும் வீரச்சாவு என்ற செய்தி அங்கு இருந்த எங்களின் இதயங்களைக் கிழித்தது. மனம் அதை நம்ப மறுத்தது. அனைத்துப் பெண் போராளிகளும் கண்ணீர்விட்டு ஓலமிட்டு அழுதனர். பெண் போராளிகளுக்கு இனி ஒரு தலைமை கிடைக்குமா என அனைத்து உள்ளங்களும் ஏங்கியது.

1971ம் ஆண்டு பங்குனி மாதம் 24ம் திகதி கலைச்செல்வி பொன்னுத்துரை என்னும் பெயர் சூட்டி நான்கு பிள்ளைகளில் மூன்றாவதாகப் பிறந்த பெண் பிள்ளை தான் எங்களின் பிரிகேடியர் துர்க்கா அக்கா. யாழ்ப்பாணத்தில் வலிகாமத்தைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் விடுதலைப் புலிகளின் நான்காவது மகளிர் பயிற்சிப் பாசறையில் 1989ம் ஆண்டு தனது அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். தலைவனின் நிழலில் மணலாற்றுக் காட்டில் தலைவரே நேரடியாக பயிற்சியை வழிநடத்திய காலத்தில் வளர்ந்தவர்தான் இவர். கடற்புலி லெப்.கேணல் மாதவி, கடற்கரும்புலி லெப்.கேணல் நளாயினி, கப்டன் வானதி, மேஜர் கஸ்தூரி, கப்டன் பாரதி போன்ற ஒப்பற்ற பெண் போராளிகளும் இதே பாசறையில்தான் தங்களின் பயிற்சியை ஆரம்பித்திருந்தனர்.

இவரது போராட்டப் பற்றையும், துணிவான கள ஆற்றலையும் கண்ட தேசியத் தலைவர் 1991ம் ஆண்டு மருத்துவப் பிரிவின் பொறுப்பாளராக செயற்பட வைத்தார். இவர் அடிக்கடி மகளிர் பிரிவின் முதல் படைத் தளபதியாக இருந்த மேஜர் சோதியா அக்கா அவர்களை நினைவு கூறுவதோடு அவரில் மிகுந்த பற்றும் பாசமும் வைத்திருந்தார். அவர் காட்டிய அன்பும், இறுக்கமான பண்புமே தங்களை தலைவனை அறிந்து கொள்ளவும் போராட்டத்தின்பால் பற்று மிக்கவராக மாற்றவும் உந்து கோலாக இருந்தது என்றும் அவர் அடிக்கடி கூறுவார்.

உருவத்தில் மிகவும் சிறிய தோற்றம் கொண்டவராக இவர் இருந்தாலும் சிறப்புத் தளபதியாகத் தனது ஆயுத உறையில் கைச்சுடுகலனைக் கட்டிக் கொண்டு வலம் வரும்போது மிகவும் கம்பீரமாகவே இருக்கும். 1996 க்கு முன்னர் பல சிறிய களமுனைகளைச் சந்தித்து இருந்தாலும் 1996ம் ஆண்டு ஜுன் மாதம் மேஜர் சோதியா படையணியின் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டு 450 வரையிலான போராளிகளுடன் மூன்று கம்பனிகளுக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓயாத அலைகள் 1, 2, 3 ஆகிய நடவடிக்கைகளுடன் ஜெயசுக்குறு எதிர்ச்சமர் மற்றும் தீச்சுவாலை நடவடிக்கை ஆகியவற்றில் சிறப்பாக செயற்பட்டு அணிகளை வழிநடத்தி வந்தார் பிரிகேடியர் துர்க்கா. தீச்சுவாலை நடவடிக்கையின் போது வயிற்றில் விழுப்புண் அடைந்த நிலையில் களத்தில் எதிரியின் முற்றுகையில் நின்றபடி �எங்களைப் பாக்காதீங்க..எங்கட இடத்துக்கு செல்லை அடியுங்க� என்று மிகவும் துணிச்சலாக அவர் கூறிய பாங்கை பல வருடங்களுக்குப் பின்னரும் இயக்கத்தில் பலரும் பெருமையாகக் கூறுவதைக் கேட்கக் கூடியதாக இருக்கும்.

எப்பொழுதும் சிரித்த முகம். எந்த ஒரு தரத்தில் உள்ள போராளியையும் எழுந்து நின்று வரவேற்று அமர வைக்கும் பணிவான குணம். அந்த முகத்தை நாங்கள் இனிக் காண மாட்டோம் என்பது இன்னமும் எங்களால் நம்ப இயலாத ஒன்று. வீரர்கள் நிச்சயமாக வீழ்வதில்லை. அவரின் உணர்வும் உருவமும் அப்படித்தான் இன்னமும் எங்களை ஆக்கிரமிக்கின்றது. காலை எழுந்தவுடன் ஒரு மணி நேரம் யோகா செய்வார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. பயங்கரவாதி என்று எங்களை வர்ணிக்கும் பாதகர்கள் துர்க்கா அக்காவுடன் ஒருநாள் அமர்ந்து கதைத்திருக்க வேண்டும் என நாங்கள் எண்ணிய நாட்கள் பல உண்டு. 2006ம் அண்டு சமரில் கம்பனியை வழிநடத்திச் சென்ற லெப். கேணல் ஆர்த்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டது துர்க்கா அக்காவின் மனதை வெகுவாகப் பாதித்தது. எதையும் இலகுவில் வெளிக்காட்ட மாட்டார்.

ஆனால் உள்மனத்தில் அவர் எவ்வளவு கண்ணீர் விட்டார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். ஒரு சிறந்த புகைப்படவியலாளர், அமைப்புக்குத் தேவையான ஆங்கிலப் படங்களை விரும்பிப் பார்க்கும் ஒருவர், கராத்தே மற்றும் யோகாக் கலையை விரும்பிப் பயின்ற ஒரு அன்பான உள்ளம்.

தனக்கென தலைவன் கொடுத்த படையணியை அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்தவர்களாக, அனைத்துக் கலைகளிலும் சிறந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை நோக்கியே பிரிகேடியர் துர்க்கா அக்கா அவர்களின் செயற்பாடுகள் இருக்கும். போர்களில் பெண்கள் என்னென்ன வழிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை அதிகம் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டு பல ஆங்கில புத்தகங்கள் மற்றும் ஒளிநாடாக்களை தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பார். 2001ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் துர்க்கா அக்காவுக்கு கேணல் தரத்தை வழங்கியிருந்தார். விழுப்புண் அடைந்த நிலையிலும் அவரது வேலைகள் அனைத்தையும் அவரே செய்ய வேண்டும் என்பதில் மிகவும் அழுத்தமாக இருப்பார். அவருடன் நிற்கும் போராளிகள், அக்கா பாவம் என்று சொல்லிவிட்டு அவருக்கு கிணற்றில் இருந்து நீர் எடுப்பதற்கு உதவினால் கூட �ஏன் எனக்கு எடுக்க இயலாதா� நீங்கள் போய் உங்கட கடமைகளைச் செய்யுங்கள்� என அன்பாகக் கடிந்து கொள்வார்.

விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் கீழ் இயங்கி வந்த போர்ப்பயிற்சி, தொலைத்தொடர்புப் பிரிவு, கணினிப் பிரிவு, படையப் புலனாய்வுப் பிரிவு, அரசியல்துறை, புலனாய்வுத்துறை, படையத்தொடக்கப் பயிற்சிக் கல்லூரி, படையறிவியல் கல்லூரி, புகைப்படப் பிரிவு, திரைப்படப் பிரிவு, காவல்துறை, நீதித்துறை, ஆகியவற்றினதும் மகளிர் பொறுப்பாளர்களுக்கான மகளிர் பேரவைக் கூட்டம் மாதம் ஒருமுறை நடைபெறும். பெயர் வெளியிடப்படாத இடத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்று பெண் புலிகள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் எட்டப்படும். இதற்கு பிரிகேடியர் விதுசா மற்றும் பிரிகேடியர் துர்க்கா ஆகியோரே தலைமை வகித்தனர். பெண்கள் தொடர்பில் எந்த ஒரு முடிவையும் தாமாகவே எடுக்கும் அதிகாரத்தை தமிழீழத் தேசியத் தலைவர் இவர்களுக்கு வழங்கியிருந்தார்.

காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருக்கும் பிரிகேடியர் துர்க்கா அக்கா அவர்கள் ஒரு மணி நேரம் யோகா செய்ததன் பின்னர் மேஜர் சோதியா அவர்களின் படத்துக்கு மெழுகுதிரி கொழுத்தி கைகூப்பி வணங்குவார். அதன்பின்னர் தனது கடமைக்குத் தயாராகி விடுவார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தளமாகச் சென்று போராளிகளுடன் அவர்களின் இன்ப துன்பங்களைக் கதைத்து அறிந்து கொள்வார். 2008ம் ஆண்டு மே மாதம் சோதிய படையணிப் போராளிகள் ஓமந்தைப் பகுதியில் லெப்.கேணல் வரதா தலைமையிலும் மன்னாரில் லெப்.கேணல் செல்வி தலைமையிலும், மணலாற்றில் லெப்.கேணல் தர்மா தலைமையிலும் முகமாலையில் மணிமொழி தலைமையிலும் களத்தில் நின்றிருந்தனர். பிரிகேடியர் துர்க்கா அவர்கள் ஒவ்வொரு களமுனையாக மாறி மாறிச் சென்று அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து களமுனைக்கு அவர்களைத் தயார் படுத்தி விட்டு வருவார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள பலரும் அவருக்கு இட்ட பெயர் �காட்டுக் கோழி�. காடுகளில் தனி பிரியத்தோடு வாழும் அவர் தனது முக்கியமான முகாமை காட்டின் நடுவே வைத்திருந்தார். 1996ம் ஆண்டு வரை தலைவனின் பாசறையாக இருந்த அந்த முகாமை அதற்குப் பின்னர் சோதியா படையணிப் போராளிகள் நிர்வாகம் செய்து வந்தனர். 50 அடி ஆளமான கிணற்றில் தண்ணீர் அள்ளி நூற்றுக்கும் மேற்பட்ட பெண் போராளிகள் குளித்து. காட்டுப் பயிற்சி பெற்று, காட்டுப் பாதுகாப்பை உறுதி செய்ய காட்டு நகர்வுகளுக்குச் சென்று களைப்புடன் திரும்புவார்கள். அங்கே ஒரு சிறிய அறையில் தனக்குத் தேவையான அரசியல், விஞ்ஞானப் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார் துர்க்கா அக்கா. போராளிகளின் கதைத்து, பயிற்சி அளிக்கும் நேரம் போக மிகுதி இருக்கும் நேரங்களில் அந்தப் புத்தகங்களும் அவரின் உடன் பிறந்த சகோதரன் அவருக்குக் கொடுத்த கணினியும்தான் அவரின் நண்பர்கள். காட்டுக்குள் சென்று அங்குள் மரங்கள், இலைகள், பூக்கள், விலங்குகள், பழங்கள், போராளிகள் அனைத்தையும் படமெடுத்து தனது கணினித் திரையை அலங்கரிப்பார்.

அங்குள்ள காடுகளின் தன்மையை அறிந்து கொள்வதிலும் அதை ஏனைய போராளிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் மிகவும் அக்கறை கொண்டு செயற்படுவார். சமாதான காலத்தில் இங்கு வந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் இந்தக் காடுகள் மிகவும் வேறுபட்ட தன்மை உடையதாகவும் மிகவும் குறுகிய தூரத்திற்கும் இவற்றின் தன்மை வேறுபடுவதாகவும் கூறியிருந்தது இவருக்கும் மிகவும் ஆர்வமான விடயமாக இருந்தது. உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இப்படியான காடுகளைக் காண்பது அரிது என்றும் தமிழீழத்தில் மூன்றில் இரண்டு பகுதி காடாக இருப்பது நாட்டின் சூழலுக்கு நன்மை தரும் என்றும் அடிக்கடி குறிப்பிடுவார். இரவு நேரங்களில் பெண் பிள்ளைகள் வெளியில் செல்லக் கூடாது என்று வளர்ந்த சமூகங்களில் இருந்து வந்த பெண்புலிகள் காட்டைப் பாதுகாக்க இரவு நேரக் காவற்கடமைகளில் துணிச்சலாக நின்று பல எதிரியின் வேவுக் காரர்களைப் பிடித்து அடைத்தார்கள் என்பது பல சமயங்களில் வெளியில் தெரிய வராமல் போன உண்மை. களமுனையில் நிற்கும் போராளிகளுக்கு சிற்றுண்டிகள் தொடர்ச்சியாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல முறைகள் தானே வேறு போராளிகளுடன் சேர்ந்து நின்று சிற்றுண்டி வகைகள் செய்து கொண்டு செல்வார்.

களமுனையில் நிற்கும் ஆண்போராளிகள் கூட �அக்கா வந்து போனவா..கட்டாயம் ஏதாவது கொண்டு வந்திருப்பா� மறைக்காமல் எடுங்கோ..� என்று உரிமையோடு கேட்கும் அளவுக்கு அனைவரின் மனதிலும் இடம்பிடித்திருந்தார் அவர். கராத்தே கலையில் மிகுந்த ஈடுபாட்டுடனும் அதை பெண் போராளிகளுக்குக் கற்றுக் கொடுப்பதில் முனைப்புடனும் இருந்த அவர் மேஜர் சோதியா அவர்களின் நினைவாக ஒவ்வொரு வருடமும் மேஜர் சோதியா அவர்களின் நினைவு தினத்தன்று பெண்களுக்கான கராத்தே சுற்றுப் போட்டியைத் தனது நண்பரும். கராத்தேயில் கருப்புப் பட்டை பெற்று கடற்புலிகளில் தளபதியாக இருந்த கெங்கா அக்காவுடன் இணைந்து நடத்தி வந்தார். கரும்புலிப் பயிற்சி பெற்றிருந்த கெங்கா அக்கா அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி நாட்களில் நடந்த கடற்சமரில் கரும்புலியாகச் சென்று எதிரிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

பிரிகேடியர் துர்க்கா அக்காவுக்கு குழந்தைகளில் அதிகப் பிரியம். செஞ்சோலை நிகழ்வுகளுக்குச் சென்று அந்தக் குழந்தைகளுடன் அளவளாவிக் கொள்வதிலும் அவர்களை விதம் விதமாகப் புகைப்படங்கள் எடுப்பதிலும் எப்போதுமே தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். திருமணமான பெண் போராளிகளின் குழந்தைகளை விதம் விதமாகப் படங்கள் எடுத்துத் தனது கணினியில் அவர்களை அலங்கரித்துக் கொள்வார்.

வீரச்சாவைத் தழுவிக் கொள்வதற்கு முன்னர் இறுதியாக களமுனைக்கு வெளியில் நின்ற போராளிகளை அவர் சந்தித்தது மார்ச் மாதம் 21ம் திகதி. புதிதாக போராட்டத்தில் இணைந்த போராளிகளுக்கு எதிரியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் எழ வேண்டிய கட்டாயத்தை அன்று அவர் அன்போடு கூறி விளங்க வைத்தார். களமுனையில் எறிகணைகள் மழை போல் பொழியும் நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு அடிப்படைப் பயிற்சி முகாமை வந்து சேர்ந்தார். மிகவும் களைப்புடன் இருந்தார். எங்கும் எறிகணைகள் மழை போல் பொழிந்த வண்ணம் இருந்தன. முள்ளிவாய்க்கால் கடலில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு பெண்களுக்கான அடிப்படைப் பயிற்சிப் பாசறையில் இருந்த பனங்கூடலுக்கு இடையில் ஒரு கொட்டகைக்குள் படுத்திருந்தார். களமுனையில் நித்திரையின்றி அவர் உழைத்தது அவரின் உடலில்தான் தெரிந்தது. உணர்வும் உத்வேகமும் இன்னமும் எந்த மாற்றமும் அடையவில்லை.

�என்னக்கா? அண்ணா என்ன சொல்கிறார்?� ஒரு இராணுவ வீரன் என்றவன் கடைசி வரைக்கும் எதிரிக்கு எதிராகப் போராடி வீரச்சாவை அடைய வேணும். அதுதான் அவனுக்கு அழகு அப்படித்தான் அண்ணா நினைக்கிறார். எவனிடமும் பணிந்து போயோ அல்லது கைப் பொம்மைகளாகவோ அண்ணா இருக்க விரும்ப மாட்டார்� என்று கூறிவிட்டு நாங்கள் அனைவருமே இரண்டு மாதங்களாகக் குடித்துக் கொண்டிருந்த அதே அரிசிக் கஞ்சியைக் குடித்துவிட்டு எறிகணைகள் ஓலமிட்டுக் கொண்டிருக்க சற்று நேரம் பாயை விரித்து சாய்ந்து கொண்டார். களமுனையில் பல மணிநேரங்கள் நித்திரை கொள்ளாமல் எதிரியின் எறிகணைக்குள் மாட்டியிருந்து கண்விழித்து எங்களைக் காத்த அந்த உயிர் உறங்குவதை அன்றுதான் நாங்கள் கடைசியாகக் காணப் போகின்றோம் என்பது எங்களுக்கு நிச்சயம் தெரியாது.

குறிசூட்டுத் திறனில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டுத் தளபதிகளுக்கு இடையிலான போட்டிகளில் அடிக்கடி தேசியத் தலைவரிடம் இருந்து பரிசைப் பெற்றுக் கொண்டு வந்தார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. தனக்குக் கீழுள்ள போராளிகள் வேவுத் திறன், மறைந்திருந்து தாக்கும் பயிற்சி, வலிந்த தாக்குதல், ஆழ ஊடுருவும் தாக்குதல், பாதுகாப்புச் சமர் ஆகிய அனைத்திலும் ஆண் போராளிகளுக்கு சமமாக தங்களால் எல்லா விதத்திலும் களமுனையில் காட்ட முடியும் என உறுதியோடு நின்று நிரூபித்துச் சென்று விட்டுள்ளார் பிரிகேடியர் துர்க்கா. தலைவனின் ஆணையை அப்படியே ஏற்று நடத்தி வந்த அவரைப் பற்றி அவரின் வீரச்சாவின் பின்னர் ஒரு தனிப்பட்ட சந்திப்பில் தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிடும்போது

�எனக்கு விசுவாசமான தளபதிகளை நான் இழந்திட்டன்� என்று குறிப்பிட்டிருந்தார். எங்கள் தலைவனின் தங்கையாக, பெண்புலிகளின் தளபதியாக, தன்னிகரற்ற ஒரு தலைவியாக விளங்கிய எங்களின் துர்க்கா அக்கா பிரிகேடியர் துர்க்காவாக 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி அதிகாலை வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

அவரின் வழிகாட்டுதலை ஏற்றுநின்று இறுதிச் சமரின் நான்கு மாதங்களில் களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஏனைய சோதியா படையணிப் போராளிகளான லெப். கேணல் அகநிலா, லெப்.கேணல் மோகனா, லெப்.கேணல் செங்கையாழினி, லெப்.கேணல் அரசலா, லெப்.கேணல் அறிவு, லெப்.கேணல் சோழநிலா, லெப். கேணல் வரதா, லெப்.கேணல் மொழி, மேஜர் அகல்மதி, மேஜர் விதுரா, மேஜர் செஞ்சுரபி, மேஜர் ஈழக்கனி, மேஜர் இசைபாடினி, மேஜர் இசையறிவு, மேஜர் கலைமகள், மேஜர் ஈழநிலா, கப்டன் அலையரசி ஆகியோருக்கும் புதிதாக இணைந்து மிகவும் தீர்க்கமாகத் துணிவுடன் செயற்பட்டு இறுதியாக பிரிகேடியர் துர்க்கா அவர்களினால் 2ம் லெப் தரம் வழங்கப்பட்டு வீரச்சாவடைந்த 2ம் லெப் தர்சினி மற்றும் மே மாதம் 15ம் திகதி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மூத்த போராளிகளான நயவாணி, கௌசலா மற்றும் இன்னமும் பெயர் குறிப்பிடப்படாத பல நூறு மாவீரர்களதும் கனவும் எங்கள் ஆன்மாவில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாடு விடுதலை அடையும் நாளில் அவர்களின் துயிலறைகளை அழகுபடுத்தி அலங்கரிக்கும் அந்த நாட்களே எங்களுக்கு வரக்கூடிய பொன்னான நாட்கள். 

பிரிகேடியர் கடாபி/ ஆதவன்

சாதாரண போராளியாக இயக்கத்தில் தனது பணிகளைத் தொடங்கிய இத்தளபதி, தனக்கான தகைமைகளை வளர்த்துக்கொண்டு ஓர் உயரிய இராணுவத் தளபதியாக எப்படி உருவானார்? அல்லது எப்படி உருவாக்கப்பட்டார்? தலைவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே அவரது போராட்டப் பணிகள் ஆரம்பகாலம் தொடக்கம் இருந்ததுவே அதற்கான காரணமாகவிருக்கக் கூடும்.

வாகனக் கண்ணாடியில் பார்த்தே வானில் பறக்கும் பறவைகளைக் குறிபார்த்துச்சுட்டுவிடும்திறமை அவருக்கு இருந்ததாக நான் நண்பர்கள் மூலம் அறிந்திருந்தேன். உண்மையோ பொய்யோ, ஆனால் நிச்சயம் அவர் அதற்கு முயற்சி செய்திருப்பார்.

'முன்னேறிப் பாய்தல்' என்ற பெயரில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கெதிராக புலிகள் நடத்திய 'புலிப்பாய்ச்சல்' நடவடிக்கையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் படைக்கட்டுமானத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் கூட்டுப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக கடாபி அண்ணை நியமிக்கப்பட்டார்.

1995 ஆம் ஆண்டு யூலை மாதத்திலிருந்து 2002 தொடக்கம் வரை - அதாவது விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடைகளுக்குமிடையில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டது வரை - கடாபி என அழைக்கப்படும் ஆதவன் அண்ணை தான் இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாகப் பணியாற்றினார்.

உண்மையில் இம்ரான்-பாண்டியன் படையணியென்பது பல சிறப்பு அணிகளின் கூட்டமைப்பாகவே இருந்தது. கடாபி அண்ணா பல சிறப்பு அணிகளை அப்படையணியின் கீழ் உருவாக்கி விடுதலைப் பயணத்தில் பல்வேறு சாதனைகளை ஏற்படுத்தியிருந்தார்.

கரும்புலிகள் அணி, லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி, மயூரன் பதுங்கிச்சுடும் அணி, செம்பியன் வேவு அணி, கேணல் சங்கர் ஆழ ஊடுருவித் தாக்கும் அணி, லெப்.கேணல் ராதா வான்காப்பு அணி, விடுதலைப் புலிகளின் கவசப் படையணி போன்ற சிறப்புப் படையணிகளையும் படையப்பயிற்சிக் கல்லூரிகள் போன்ற படைக்கட்டுமானங்களையும் தலைவரின் எண்ணங்களுக்கு ஏற்ப உருவாக்கி, வளர்த்து வழிநடத்தியதில் கடாபி அண்ணையின் தலைமைத்துவப் பண்பின் சிறப்புக்களைக் காணக்கூடியதாகவிருந்தது.

இப்பணிகளுக்கு மேலதிகமாக தலைவரின் பாதுகாப்பு சார்ந்த பணிகளையும் நேரடியாகக் கண்காணித்துவந்த கடாபி அண்ணை இருபத்தி நான்கு மணிநேரமும் விடுதலைப் பணிக்காகவே ஓயாது இயங்கிக் கொண்டிருந்தார்.

ஒரு பயிற்சிப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு வேவுப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு தாக்குதல் பணியாகவிருந்தாலும் சரி, நேரம் எடுத்து திட்டமிடலுக்கே, கூடிய நேரத்தை ஒதுக்கி, ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றும் பாங்கு கடாபி அண்ணையின் குறிப்பிடவேண்டிய விடயமாகும்.

பயிற்சித்திட்டமிடல் பற்றிக் குறிப்பிடவேண்டும் என்றால் ஒரு காலத்தில் குறிப்பிட்ட பயிற்சிக்கு மூன்று மாதங்கள் என திட்டமிடப்பட்டிருக்கும். ஆனால் எதிரியின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது இப்பயிற்சிக்காலத்தைக் குறுக்கவேண்டிவரும். அப்போதுகூட குறுகிய காலப் பயிற்சிதிட்டமிடல் ஒன்றை தயார் செய்துவிட்டே பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்பதில் கவனமாகவிருப்பார்.

அதேபோல தாக்குதல் நடவடிக்கை ஒன்றை பூர்த்தி செய்தாலும், அத்தாக்குதலின் வெற்றி தோல்வி என்பதைவிட அத்தாக்குதல் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்துமாறே தாக்குதலணி பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.அத்தாக்குதல் வெற்றியடைந்ததற்கான காரணங்கள் அல்லது தோல்வியடைந்ததற்கான காரணங்கள், எதிர்காலத்தில் என்ன விடயங்கள் மேம்படுத்தப்படலாம் என்பன போன்ற விபரங்களை உள்ளடக்கியதாக அவ்ஆவணங்கள் தயாரிக்கப்படும்.

இவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் பயிற்சி ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கேற்ற திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் பயிற்சிகளில் செய்யப்படும். இவ்வாறு இறுக்கமான காலகட்டங்களின்போதும் மரபு வழி இராணுவங்களுக்கு ஒப்பான திட்டமிடல்களையும் செயற்பாடுகளையும் பேணிவருவதில் கவனம் எடுத்துவந்தவர்தான் கடாபி அண்ணை.

பலாலி விமானத்தளம் மீதான தாக்குதல் நடவடிக்கை ஒன்றைப் பற்றிய அறிக்கை தயாரிக்கப்பட வேண்டியிருந்தது. அந்தத் தாக்குதலில் பங்குகொண்டவர்களின் அறிக்கைகள், ஒலிப்பதிவு செய்யப்பட்ட தொலைத்தொடர்பு உரையாடல்கள் என்பவற்றை கொண்டு விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அந்த அறிக்கையின் ஒரு பகுதி இவ்வாறு இருந்தது. ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது”. அதனைத் திருத்தம் செய்த கடாபி அண்ணை சொன்னார். ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அது கவசவாகனத்தில் பட்டு அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது” என்று தெளிவாக எழுதப்படவேண்டும் என்று சொன்னார். இப்படியான துல்லியமான தரவுகள் இணைக்கப்படுவதே விசாரணைகள் முழுமைபெற உதவுமென்பது அவரின் இறுக்கமான நிலைப்பாடாகவிருந்தது.

மேற்குறிப்பிட்ட சம்பவம் ஒரு சிறிய விடயம்தான். ஆனால் அந்த சிறிய விடயத்திற்குள் புதைந்திருக்கும் ஆழமான இராணுவசார் முக்கியத்துவம் என்பது சாதாரண பொதுமகனுக்குப் புரியக்கூடியதன்று. ஆனால் அவற்றின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளமுடியும். இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நிறைவுசெய்வதில் கவனமாகவிருப்பார்.

பிரிகேடியர் கடாபி அவர்கள் சார்ல்ஸ் அன்ரனி படையணி பற்றி காணொளி


கடாபி அண்ணையைப் பொறுத்தவரையில் தாக்குதல்களோடு சம்பந்தப்பட்ட தாக்குதலணிகளை மட்டுமன்றி பயிற்சிகள், விசாரணைகள், புலனாய்வு போன்ற நிர்வாக ரீதியிலான அணிகளையும் நிர்வகிக்கவேண்டிய பொறுப்பிலேதான் இருந்தார். ஒரு சாதாரண மரபுவழி இராணுவத்தில் உள்ள போர்வீரர்களுக்கு சண்டைக்கான மனநிலையைப் பேணுவதற்கான அறிவூட்டல்கள் செய்யவேண்டியிருக்கும். ஆனால் போராளிகளைப் பொறுத்தவரையில் அதற்கான அவசியம் இல்லை. அதேவேளையில் நிர்வாக ரீதியிலான அணிகளிலுள்ள போராளிகள் குறிப்பிட்ட சில காலங்களுக்குப் பின்னர் தாங்களும் சண்டைக்குச் செல்லவேண்டும் எனக் கேட்டு கடிதம் அனுப்புவார்கள் அல்லது நேரில் சந்தித்துக் கேட்பார்கள்.

நிர்வாக வேலைத்திட்டங்களிலுள்ள போராளிகளை, குறிப்பிட்ட சில வேலைத்திட்டங்களின் முக்கியத்துவம் கருதி, அவர்களை உடனடியான இன்னொருவரைக் கொண்டு மாற்றீடு செய்வது என்பது கடினமாகவிருக்கும். அவர்களுக்கு பல்வேறு உதாரணங்களை எடுத்துகாட்டி, சண்டையைப் போலவே மற்றைய பணிகளும் முக்கியமானதென பொறுமையாக அறிவுறுத்தி, தொடர்ந்தும் அவர்களை அப்பணியின் முக்கியத்துவம் கருதி வேலையில் மீண்டும் அமர்த்திவிடுவார். இவ்வாறு வெவ்வேறு பணிகளிலுள்ள போராளிகளை, ஒரே படையணியின் கீழ் நிர்வகித்து தனது திறமையின் மூலம் வழிநடத்திவந்தார் என்றே சொல்லவேண்டும்.

இவரது தாக்குதல் நடவடிக்கைகளை பொறுத்தவரை சிறப்பு இராணுவ நடவடிக்கைகளிலேதான் இவர் நேரடியாக பங்குபற்றியிருப்பார் என்றே எண்ணுகின்றேன். குறிப்பாக 1995 ஆம் ஆண்டில் பலாலி விமானதளத்திற்கு அருகே இரண்டு அவ்ரோ விமானங்களை சுட்டுவீழ்த்தியிருந்தார். கடாபி அண்ணையின் குறிபார்த்துசுடும் திறமையை தலைவர் அவர்கள் ஏற்கனவே இனங்கண்டிருந்ததால், அதற்கான பணி, தலைவர் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் அவ்விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய இராணுவ காலப்பகுதியில் தலைவரின் பாதுகாப்பு அணி வீரனாக இருந்த கடாபி அண்ணை, படிப்படியாக பல்வேறு கடமைகளை தலைவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செய்துவந்தார். தமிழீழ தாயகத்திலிருந்த இராணுவதளங்கள் மீதான பெரும்பாலான கரும்புலி நடவடிக்கைகள் அனைத்தும் இவரது வழிநடத்தலின் கீழேயே நடாத்தப்பட்டது. அத்துடன் ஆழ ஊடுருவி சென்று நடத்தும் பல தாக்குதல் நடவடிக்கைகளும், இவரது வழிகாட்டலில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல்வேறு விடுதலைப்பணிகளை முன்னெடுத்துவந்த பிரிகேடியர் கடாபி அவர்கள் ஈழப்போரின் நான்காம் கட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரம் பகுதியில் மார்ச் மாதத்தின் இறுதிபகுதியில் பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை எடுக்கவேண்டிய ஆயத்தப்பணிகளில் மற்றைய தளபதிகளுடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

எதிர்பாராத விதத்தில் எதிரிகளின் இராணுவ வலு பல மறைமுக சக்திகளின் ஒத்துழைப்போடு அதிகரித்த நிலையில், பெருமளவிலான இறுதிக்கட்ட முறியடிப்புத் தாக்குதல் ஒன்றைச் செய்வதற்கு அணிகள் தயாராகவிருந்தன. ஆனால் இவ்வாறான படைநடவடிக்கைக்கான ஆயத்தப்படுத்தலை அறிந்துகொண்ட எதிரிகள், விடுதலைப்புலிகள் தங்கியிருந்த ஆனந்தபுரம் பகுதி மீது, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட வெடிபொருட்களைப் பயன்படுத்தி முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


இறுதிவரை உறுதியோடு போரிட்ட கடாபி அண்ணை ஆனந்தபுரக் களத்தில் படுகாயமடைந்தார். அவரைக் காப்பாற்றி வெளியே கொண்டுவருவதற்காக முயற்சிகள் நடந்தபோதும், களத்தின் இறுக்கமான நிலையை உணர்ந்து, அக்களத்திலேயே சயனைற் உட்கொண்டு, தன்னோடு இணைந்து நின்ற பிரிகேடியர் தீபன் அண்ணை பிரிகேடியர் விதுசா அக்கா பிரிகேடியர் துர்க்கா அக்கா, பிரிகேடியர் மணிவண்ணன் ஆகியோருடன், இன்னும் பல வீரர்களுடன் ஆனந்தபுரம் மண்ணில் வித்தாகிபோனார்.

சமர்க்களங்களின் சரித்திர நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்

 
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்குப் போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.
தமிழீழத்தின் இதயபூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார்.
இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.
இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களைத் துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
1990 ஆம் ஆண்டில் கொக்காவில் - மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்கள் இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.
முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் "கடற்காற்று" எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.
வவுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட "வன்னிவிக்கிரம" நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.
1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான "ஆகாய- கடல்வெளி"ச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.
மணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட "மின்னல்" நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார்.
இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட "யாழ்தேவி" நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.
1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட "முன்னேறிப்பாய்தல்" முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்தி அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.
யாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த "சூரியக்கதிர்" நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவுப் படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் - 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாகச் செயற்பட்டார்.
வன்னியைச் சிறிலங்காப் படையினர் வல்வளைத்த "ஜெயசிக்குறு" நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்கக் காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட "ஓயாத அலைகள் - 02" நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.
தொடர்ந்து "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்குத் தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.
அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.
2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட "தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.
போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டுத் தப்பினார்.
பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெறச் சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.

பிரிகேடியர் சொர்ணம் வாழ்வு ஓர் வரலாறு

தமிழீழத் தலைநகர் திருகோணமலை தந்த எங்கள் தானைத் தளபதி. தமிழ்த் தாயின் தமிழ்ப் பாலைப் பருகியவன். தமிழர்கள் உயிர்களுக்காக உள்ளம் துடித்தவன். தாய்மண்ணின் விடுதலைக் காற்றை மட் டுமே சுவாசிக்க நேசித்தவன். தமிழர்கள் படும் வதைகளில் விதையாகி வெடித்து வெளிவந்த வேங்கை.

எங்கள் விலங்குகளைச் சிதறடிக்க விடுதலைப் புலியாகியவன். எங்கள் அன்னை பூமிக்காக அனைத்தையும் துறந்தவன். நெஞ்சில் விடுதலையெனும் நெருப்பேந்தியவன். அவன் வாழ்வில் அவன் உதடுகள் அண்ணன் என்ற சொல்லைத்தான் அதிகபங்கு உச்சரித்தது. தலைவனைத் தன் கண்ணுள் வைத்ததால் அவன் தலைவனின் கண்ணாகியவன். தானைத் தலைவனின் எண்ணக் கருவுக்கு உருவமைத்தவன்.

அவன்தான் புலிகளின் மூத்த தளபதி புகழ் பூத்த தளபதி சொர்ணம்.

தம்பியை வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர்தான் தயாளன். தந்தை யோசப் தாய் திரேசம்மா (பரிபூரணம்) என்ன தவம் செய்தனரோ? ஒரு உலகம் போற்றும் மாவீரனை மகனாகப் பெற. தாய் திரேசம்மாவின் மடி அது ஓர் புலியுறங்கிய குகை.

திருகோணமலை அது எப்பொழுதும் அலையெழுந்து ஆர்ப்பரிக்கும் ஓர் அழகிய நகரம். கடல் ©த்த ©மி. எங்கள் தமிழீழத்தின் தலைநகர் எனும் சிறப்பைப் பெற்றது. அந்தத் தலைநகர் தன் பங்கிற்காக தானைத் தளபதியைத் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உவந்தளித்தது. திருகோணமலை அரசடி அது அன்று திருமலை வாழ் சிங்களவரின் வயிற்றில் புளியைக் கரைக்குமிடம். சிங்களவரைப் பயத்தில் சிறுநீர் போகவைக்குமிடம். திருமலை அரசடி வாழைத்தோட்டம் அதுதான் தயாளனைப் பச்சிளம் குழந்தையாக பாலருந்தும் பாலகனாக பள்ளிச் சிறுவனாக பாடசாலை மாணவனாக தன் மடியில் சுமந்த மண். மலையென எழும் கடலலைகளை அன்றாடம் எதிர்த்து வாழ்ந்த குடும்பத்தில் பிறந்ததால் அலையையும் புயலையும் எதிர்த்து வளர்ந்தது அவர் வீரம்.

சிறுவயதிலேயே அவன் குறும்புகளுக்குக் குறைவில்லை. அது மட்டுமன்றி உடற்பயிற்சியிலும் தற்காப்புக் கலைகளிலும் சிறப்புப் பயிற்சிகள் பெற்றவர். அவர் நண்பர்கள் கூட்டத்தில் என்றும் அவர் தலை உயர்ந்து நிற்கும் கலகங்கள் வந்துவிட்டாலோ அவர் கரம் ஓங்கிநிற்கும்.

திருகோணமலை மாவட்டம் அன்று 80வீதம் தமிழ் மக்கள் வாழ்ந்த மண். அதைச் சிங்கள பூமியாக்க சிங்களவர் மும்மரமாகச் செயற்பட்டகாலம். தயாளன் சிறுவயதிலேயே துவேசம் கொண்ட சிங்களவர் முப்படைகள் பொலீசாலும் தமிழ் மக்கள் படும் வேதனைகளையும் கொடுமைகளையும் கொலைகளையும் கண்டு கொதித்தெழும்பியவன். இதனால் வெறிகொண்ட சிங்களத்தின் கண்கள் தயாளனைக் குறிவைக்கத் தொடங்கியது.

உண்மையாகவே எங்கள் தமிழ் மண்ணை எங்கள் தமிழீழ எல்லைகளைக் காக்கவேண்டுமென்றால் அது எங்கள் தலைவனால் அமைக்கப்பட்ட புலிகள் அமைப்பில்தான் இணையவேண்டும் என்பதை தம்பி தயாளன் தூரநோக்கோடு நன்கு அறிந்துகொண்டார். அவர் தன் விடுதலை வேட்கையை வீச்சாக்க திருகோணமலை அர்ச் சூசையப்பர் கல்லூரியில் பயின்ற உயர்தரக் கல்வியை இடைநிறுத்திக்கொண்டு 12.09.1983ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டார்.

தானைத் தலைவனின் வழிநடத்தலில் புடம்போட்ட தங்கமாகப் புதுப் பொலிவு பெற்று புதுப் புலியாகி எங்கள் தேசத்தின் எல்லைகளுக்கு தன்னுயிரை வேலியாக்கினான். அவன் கரங்களில் சுமந்த கருவிகள் பகைவனின் பகைமுறித்தது. அவன் மனங்களில் தோன்றிய பேராற்றல் பகைவனின் சதிமுறித்தது. தலைவன் கூறும் தத்துவங்களை எல்லாம் களத்திலே காரியமாக்கிக் காட்டிய கட்டளைத் தளபதி. கயமைத்தனங்களைக் கட்டவிழ்த்துவிட்ட சிங்கள இராணுவத்திற்கோர் சிம்மசொற்பனம்.

களத்திலே இவன் இறங்கிவிட்டால் இவன் கைகளில் வீரம் விளையாடும். புடைத்து நிற்கும் இவன் தோள்களிலே வெற்றிகள் புன்னகை பூக்கும். இவன் வெறுங்கையோடு வீதியில் வந்தாலும் எதிர்கொள்ளும் எதிரிகள் தலைதெறிக்க விழுந்தடித்து ஓடுவர். இவன் தலைவன் காட்டிய நெறியில் தவறியதில்லை இவன் வைத்த குறியும் தப்பியதில்லை.

அழகிய புன்முறவலும் அடங்காத புரட்சியுணர்வும் கொண்டவன் . பட்டத்து யானைபோன்று நெடிய கம்பீரத் தோற்றம். புது யுகத்தின் அத்தியாயத்தை எழுதத் துடித்துநின்ற தானைத் தளபதி.

தமிழனின் விடிவிற்காய் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆக்ரோசமான போர் வியூகங்களைக் கண்டு அகமகிழ்ந்த அன்னைத் தமிழும் அரியணை ஏற ஆயத்தமானாள். ஆனாலும் உலகத்தின் துரோகக் கரம்ஒன்று பின்னால் தொடர்ந்ததை யாரறிவார்?. இருபதற்கும் மேற்பட்ட உலகில் சக்திவாய்ந்த நாடுகள் முண்டுகொடுக்க இனவெறிகொண்ட சிங்களம் கூன் நிமிர்ந்து எமது சொந்தங்களை வெறித்தனமாய் வேட்டையாடி எங்கள் தேசத்தைச் சுடுகாடாக்கியது.

அன்று உன்னதமான தமிழீழத் தலைமைத் தளபதி வீழ்ந்துவிட்டான். ஆம் வீழ்ந்துவிட்டான். ஆளரவமற்ற இருட்புலத்திலே புதைக்கப்பட்டான். அவனுக்காக யாரும் கண்ணீர் சிந்தினார்களா?

தெரியவில்லை. யாரோ அவனைக் கல்லறைக்கு எடுத்துச் சென்றனரே. அவனின் புகழ்வாய்ந்த பெயர் கூறிட அங்கே சிலுவையோ சமாதியோ மண்டபமோ ஏது மில்லையே. அங்கு தலை சாய்ந்திருந்த புல்லிதழ்கள் அவனின் மரணத்தை அறிந்திருக்கும். முள்ளிவாய்க்கால் கரையை மோதிச் சீறியடிக்கும் அலைகளே அவன் மரணத்திற்குச் சாட்சி.

வல்லமை வாய்ந்த அவ் அலைகளால் கூட தொலை தூரத்திற்கு அந்தச் செய்தியை எம்மிடம் கொண்டுவர முடியாமற் போய்விட்டதே. இன்று ஆண்டு ஒன்று ஆனபின்பும் நீ இறுமாப்போடு எழுந்து வருவாயென்று நான் எதிர்பார்த்தேனே. என் கனவுகள் பொடியானதே.

புறநானூற்றின் வீரத்தை புதிதாகப் பிறப்பித்த மாவீரன் விடுதலை தேடி வேகத்தோடு உயர்ந்து வீசியடித்த பேரலை இருபத்தாறு வருடங்களாக ஓயாது சுழன்றடித்த சூறாவளி ஓய்ந்துபோனது. மரணித்துவிட்ட எங்கள் விடியலே பலவீனமான எம் இனத்தின் பலமான உயிராயுதமே எமது திமிரின் அடையாளமே எங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட் டாயோ?

யேர்மன் திருமலைச்செல்வன்.

Wednesday, September 21, 2011

திலீபனுடன் ஏழாம் நாள்

திலீபனுடன் ஏழாம் நாள் -21-09-1987 இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின. நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு என்னவாக இருக்கும்….? இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக் கொண்டிருந்தது. காலை 10 மணிவரை எவ்வளவோ முயன்றும் அவர்கள் இருவரும் என் கண்களில் படவேயில்லை. ஆனால், திடீரென்று "இந்தியா ருடே" (India Tiday) பத்திரிகை நிருபரும் இந்திய துரதஷனின் (இந்தியத் தொலைக்காட்சி ஸ்தாகனம்) வீடியோப் படப் பிடிப்பாளரும், யோகியுடன் வந்து திலீபனைப் படம்பிடிக்கத் தொடங்கினர். "இந்தியா ருடே" நிருவர் என்னிடம் திலீபனின் உடல் நிலையைப்பற்றித் துருவித் துருவித் கேட்டுத் தெரிந்துகொண்டார். என்னால் முடிந்தவரை முதல் நாள் உண்ணாவிரத்திலிருந்து இன்றுவரை அவரின் உடலின் நிகழ்ந்த மாற்றங்கள் அனைத்தையும் விரிவாக எடுத்துக் கூறினேன். அவர்கள் சென்ற பின் யோகியை அழைத்து, என் மனதுக்குள் குடைந்துகொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டேவிட்டேன். அதற்கு யோகி கூறிய பதில் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. 'இந்திய அமைதி காக்கும் படையின் மூத்த தளபதி ஒருவரும் பிரிகேடியர் ராகவன், எயர் கொமாண்டர்ஜெயக்ககுமார், கடற்படைத் தளபதி அபயசுந்தர் ஆகியோரும் வந்து பேசியதாகவும், உதவித்தூதுவர் வரவில்லை என்றும், திலீபனின் பிரச்சினையில் அவர்கள் ஓரு தீர்க்கமான முடிவை இதுவரை எடுக்கவில்லை" என்றும் யோகி கூறினார். அந்தப் பதிலைக் கேட்டால் அதை ஜீரணிக்க என் மனத்துக்கு வெகுநேரம் பிடித்தது. அந்தப் பேச்சுவார்த்தை பற்றிய முழு விபரத்தைம் யோகியும் யோகி திலீபனிடம் விளக்கிக் கூறி, என்ன செய்யலாம்…..? என்று கேட்டார். பேசச் சத்தியற்று, நடக்கச் சத்தியற்று துவண்டு கிடந்த அந்தக் கொடி, தன் விழிகளைத் திறந்து பார்த்துவிட்டு வழக்கம் போன்றுதன் புன்னகையை உதிர்த்தது. "எந்த முடிவும்…. நல்ல முடிவாக இருக்க வேணும். ஜந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தர வேணும்…. இல்லையெண்டால்…. நான் உண்ணாவிரதத்தைக் கடைசி வரைக்கும் … கைவிடமாட்டன்." ஓவ்வொரு வார்தையாக கரகரத்த குரலில் வெளிவந்தது திலீபனின் பதில். படபடவென்று நடுங்கிய நடுங்கிய குரலில் மெதுவாகத் திடமாகத் திலீபன் கூறிமுடித்த போது யோகி மேடையில் இருக்கவில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் 1985 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வந்த பின்னர் அரசியல்ப் பிரிவுப் பொறுப்பாளராக திலீபன் இருந்து மிகச் சிக்கலான பிரச்சனைகளையெல்லாம் பொதுமக்கள் மத்தியில் தீர்த்து வைத்திருக்கின்றார். 1986 ஆம் ஆண்டு அச்சுவேலியில் ஏற்பட்ட ஒருசிறு பூசல் காரணமாக மினிபஸ்களின் சொந்தக்காரர்கள் ஒருவாரகாலமாக பஸ்களை ஓடவிடாமல் வழிமறிப்புப் போராட்டம் நடத்தியதால் மக்கள் மிகுந்ந துன்பப்பட்டனர். திலீபன் தனக்கேயுரிய புன்முறுவலுடன் அவர்களை அணுகி மிகவும் எளிமையாக அவர்களுடன் பேசி இரண்டு மணித்தியாலத்தில் பஸ்களை ஓடச் செய்தனர்.யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களுக்கு இடையே நடைபெறும் பூசல்கள் கடல் எல்லையிலே ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்படும் சில சிக்கலான பிரச்சினைகள் பல்கலைக்கழகத்தில் ஏற்படும் சிக்களான பிரச்சினைகள், கடை முதலாளிகள் - தொழிலாளர்களின் பிரச்சினைகள், மூட்டை தூக்குவோர், வண்டி ஓட்டுவோர் - ரச்சிக்கரர்கள், மாநகரசபை ஊழியர்கள், ஆசிரியர்கள், எழுதுவினைஞர்கள், டாக்ரர்கள், தாதிமார், வைத்தியசாலை சிற்றூழியர்கள், வழக்கறிஞர்கள், லொறிச் சொந்தக்காரர்கள் இப்படிப் பலரகமானவர்களின் பிரச்சினைகளையெல்லாம் உடனுக்குடன் பேசிச் சமரசமாகத் தீர்த்து வைத்தவர் திலீபன். யாழ்ப்பாணக் கரையோரக் கிராமமான நாவாந்துறையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பலமான இனக்கலவரம் ஏற்பட்டது. கத்தகள், பொல்லுகள் கைக்குண்டுகள், துப்பாக்கிகள் எல்லாம் தாராளமாகப் பாவிக்கப்பட்டன. ஒரே நாளில் பலர் இருபக்கத்திலும் மாண்டனர். பலர் படுகாயமுற்றனர். திலீபன் தன்னந்தனியாக இரு சமூகத்தவர்களையும் இரவிரவாகச் சென்று சந்தித்தார். முடிவு? அடுத்த நாள் பெருமழை பெய்து ஓய்ந்தது போல் கலவரம் நின்றுவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தமிழீழ மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்கு இருப்பதற்குக் காரணம் இவர்கள் சிங்கள இராணுவத்தின் அட்டூலியங்களிலிருந்து தம் உயிரையே அர்ப்பணித்து மக்களைக் காப்பாற்றுவது மட்டுமல்ல எந்தச் சிக்கலான சமூகப் பொருளாதாரப் பிரச்சினையானாலும் புலிகளின் அரசியல்ப் பிரிவுத் தலைவர் திலீபனால் அவை நிச்சியமாகத் தீர்க்கப்படும். என்ற உயர்ந்த நம்பிக்கையாலும் ஏற்பட்ட செல்வாக்குத்தான். அது. மற்றவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இரவு பகலாக உறங்காது வேளா வேளைக்கு உணவின்றி அயராது உழைப்பதில் திலீபனுக்கு நிகர் திலீபன் தான். ஆவர் சுயமாக எப்போதாவது மினுக்கிய மடிப்புக் கலையாத ஆடைகள் அணிந்ததையும் நான் பார்த்ததில்லை. அவரிடம் இருப்பதெல்லாம் ஒரேயொரு நீளக்காற்சட்டை (ட்ரவுசர்) ஒரேயொரு சேர்ட் தான். அரசியல் விசயமாக ஊரெல்லாம் சுற்றி பல பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு காய்ந்த வயிற்றுடன் இரவு 12.00, 1.00 மணிக்கு தலைமை அலுவலகத்திற்கு வருவார். ஆந்த நள்ளிரவில் அழுக்கேறிய தன் உடைகளைக் களைந்து தோய்த்து காயப் போட்டுவிட்டே படுக்கச் செல்வார். பின்னர் அந்த இயந்திரம் அதிகாலையிலேயே தன் இயக்கத்தை மீண்டும் ஆரம்பித்து விடும். இப்படிப்பட்ட திலீபன் இன்று வாடி, வதங்கி தமிழினத்துக்காக தன்னையே அழித்துக் கொண்டிருக்கின்றாரே? ஏத்தனையே பேரின் பிரசிசினைகளைத் தீர்த்து வைத்த இவரின் பிரச்சினையை, தமிழினத்தின் பிரச்சினையை யார் தீர்க்கப் போகின்றார்கள். சீலமுறு தமிழன் சிறப்பினை இழப்பதோ? சிங்கள இனத்தவர் நம்மை மிதிப்பதோ? கோலமுறு திரு நாடினிக் கொள்ளையர்…. வுpரித்த வலையினில் வீழ்ந்து அழிவதோ? காலனெனும் கொடும் கயவனின் கையினால்.. கண்ணை இழந்து நாம் கவலையில் நலிவதோ? நீலமணிக்கடல் நித்தமும் அழுவதோ..? நாடு பெறும்வரை நம்மினம் தூங்குமோ…? "ஈழமுரசு" பத்திரிகையில் வெளிவந்த இந்தக் கவிதையை ஒருநாள் திலீபன் வாசித்துவிட்டு என் தோள்களைத் தட்டிப் பாராட்டியதை இன்று எண்ணிப் பார்க்கின்றேன். வாரா வாரம் பத்திர்கைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் எனது கவிதைகளை ஒரு தொகுப்பாக்கி வெளிவிட வேண்டும். என்ற திலீபனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்ற வாரம் தான் அவைகளை ஒன்று சேர்த்து பிரதிகள் எடுத்து ஒருபிரதியை ராஜனிடமும் மறு பிரதியை யோகியிடமும் கொடுத்திருந்தேன். தலைவர் பிரபாகரன் "முன்னுரை" எழுதவேண்டும் என்ற என் விருப்பத்தை திலீபனிடம் வெளியிட்ட போது அவரும் அதற்குச் சம்மதித்தார். உண்ணாவிரதம் முடிந்த பின் முதல் வேலையாகத் தலைவரிடம் சகல கவிதைகளையும் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். தலைவர் பிரபா ஒர் "இலக்கிய ரசிகன்" என்பது பலருக்குத் தெரியாது. அந்த நெஞ்சுக் கூட்டிற்குள் நிறைந்து கிடக்கும் இராணுவத்திட்டங்களும், அரசியல்ப் புரட்சிக் கருத்துக்களும் - இலக்கியக் குவியல்களும் - மலை போன்ற தமிழுணர்வும்…. அப்பப்பா! ஏராளம் ஏராளம். ! அப்படிப்பட்ட ஒரு தலைவனின் வழிவந்த திலீபனின் ஏழாம் நாள் தியாகப் பயணம் தொடர்கின்றது. பயணம் தொடரும்

Tuesday, September 20, 2011

திலீபனுடன் ஆறாம் நாள்

திலீபனுடன் ஆறாம் நாள் -20-09-1987 அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன். ஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சுகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன். நூலைந்த நாட்களாகப் படுக்கையிலே கிடப்பதாலும் நீர் அருந்தாமல் இருப்பதாலும் அவரது சலப்பை பாதிக்கப்பட்டிருக்கலாம்….. இதை அவரிடம் எப்படிக் கூறுவது? தூன் மறைவிடம் சென்று சிறுநீர் இகழிக்கப் போவதாகக் கூறினார். ஆவரின் விருப்பத்துடன், அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து இறக்கி மேடையின் பின்பக்கம் கொண்டு சென்றோம் பதினைந்து நிமிடங்களாக வயிற்றைப் பொத்திக் கொண்டு மிகுந்த கஷ்டப்பட்டார்;. அதன்பின் ஆச்சரியப்படுமளவிற்கு சுமார் அரை லீற்றர் அளவு சலம் போனது. ஏனக்கு அது மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. ஐந்து நாட்களாக எதுவும் குடிக்காமல் இருக்கும் ஒருவரால் இது எப்படிச் சாத்தியமாக முடியும்? அன்று வைத்திய நிபுணர் சிவகுமார் அவர்களிடம் இதுபற்றி மறக்காமல் கேட்டேன். ஆவர் எந்தப் பதிலுமே கூறாமல் மௌனமாக சிரிப்பை உதிர்த்துவிட்டுச் சென்றார். அன்று மத்தியானம் எமது இதயத்துக்கு மகிழ்ச்சியைத்தரும் ஒர் இனிய செய்தி எனது செவிகளில் விழுந்தபோது இனந்தெரியாத நிம்மதி என்னிடம் குடிவந்தது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரகத்திலிருந்து ஓர் முக்கிய நபர் இன்று வரப்போகிறாராம். ஆவர் நமது அரசியல் பிரிவினருடன் திலீபனைப் பற்றிப் பேசப் போகிறாராம்….. என் பிரார்த்தனை வீண்போகாது திலீபனின் உயிர் காப்பாற்றப்படப்போகின்றது…… இந்தியத் தூதுவரகத்திலிருந்து யாராவது வருவதானால் நிச்சயமாக பிரதமர் ராஐPவ் காந்தியின் ஆலோசனைப்படிதான் வருவார்கள்….. அப்படி வருபவர்கள் உணர்ச்சி பொங்கும் தாய்க்குலத்தின் கண்ணீரைக் கண்டாவது இரங்கமாட்டார்களா? திலீபனை எண்ணித் துடிதுடித்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் மனங்களிற்கு அந்த ஆறுதல் செய்தி நிச்சயம் சாந்தியளிக்கத்தான் செய்யும். திலீபா ! நீ ஆரம்பித்து வைத்த அகிம்சைப் போர் எங்களது ஆயுதங்களுக்கு மதிப்பில்லாமல் செய்யப்போகிறது. போலும்? உன் அகிம்சைப் போரினால் அப்படி ஒரு நிலை எமக்கு வருமானால் அதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம். ஏமக்கு மட்டும் ஆயுதங்களை தூக்கி கண்டபடி சுட்டுத்தள்ள வேண்டும் என்று ஆசையா என்ன? முப்பது வருடங்களாக எமது மூத்த அரசியல் தலைவர்கள் தந்தை "செல்வா" தலைமையில் முயன்று முடியாத நிலையில்…… எமது தமிழ்ச் சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றத்தானே வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தினோம். நாம் அகிம்சைக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் நம் எதிரி அகிம்சையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன்…. அவனுக்கு அது புரியாதது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் கத்தியும், துப்பாக்கியும்தான்…. ஒருவன் கத்தியையும், துப்பாக்கியையும் தன் பலமாக எண்ணும்போது அவனெதிரில் நிற்பவனால் என்ன செய்ய முடியும். நீண்ட கசப்பான அனுபவங்கள் தான் எமது கரங்களில் துப்பாக்கிகளைத் தந்தன. 1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் நாளில் இருந்து, சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் காலத்துக்குக் காலம் அழிக்கப்பட்டு வருகின்ற கொடுமை எப்பொழுது முடியும்? தங்கத் தமிழர்கள் வாழ்வில் பொங்கும் மகிழ்வும் - பூரிப்பும் எப்பொழுது மலரும்? அண்ணல் காந்தி அகிம்சைப் போரிலே வெற்றி கண்டார் என்றால் அதற்கு அவர் கையாண்ட அகிம்சைப் போராட்டங்கள் மட்டும் காரணமல்ல. காந்தியின் போராட்டத் தளம் இந்திய மண்ணிலே இருந்தது… காந்தியின் போராட்டத் தளத்திலே மனிதநேயம் மிக்க ஆங்கிலேயர்கள் இருந்தார்கள்… ஆகவே அகிம்சையைப் புரிந்து கொள்வதற்கு அந்த வெள்ளைக்காரர்களால் முடிந்தது. ஆனால் நமது மண்ணில் அப்படியா? எத்தனை சந்தர்ப்பங்களில் நமது தலைவர்கள் குண்டாந்தடிகளால் தாக்கப்பட்டிருப்பார்கள்? எத்தனை இனக்கலவரங்களில் நமது இனத்தவர்களின் தலைகள் வெட்டப்பட்டு தாhப் பீப்பாக்களுக்குள் போடப்பட்டிருக்கும்? எத்தனை பெண்கள் தம் உயிரினும் மேலான கற்பை இழந்திருப்பர்? அப்போதெல்லாம் நாம் ஆயுதங்களையா தூக்கினோம்? அகிம்சை ! அகிம்சை ! அகிம்சை ! இந்த வார்த்தைகள் தான் எங்கள் தாரக மந்திரமாக இருந்தது. இந்தக் தாரக மந்திரத்தைத் தூக்கி எறிந்து விட்டு எமது கைகளிலே ஆயுதங்களைத் தந்தவர்கள் யார்? நாமாகப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்டகளாகத்தான் தந்தார்கள்….. மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் தான் தந்தன….. தலைவர் பிரபாகரனின் பின்னே ஆயிரமாயிரம் வேங்கைகள் அணிதிரண்டு நிற்பதற்குக் காரணம் யதார்? சிங்களப் பேரினவாதம்தான் ! இன்று காலையிலிருந்து நல்லூர்க் கந்தசாமி கோவிலில் திலீபன் பெயரில் நூற்றுக் கணக்கான அர்ச்சனைகள் செய்யப்பட்டு அவை பொதுமக்கள் மூலம் மேடைக்கு வந்தவண்ணமிருந்தன. பிற்பகல் மூன்று மணியிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியிலிருந்து சனங்கள் பஸ்களில் வந்து குவியத் தொடங்கினர். எங்கே பார்த்தாலும் மக்கள் அலைகள் தான் ! தளபதி கிட்டு அண்ணாவின் தாய், திலீபனை வாரி அணைத்து உச்சி முகர்ந்து அழுத காட்சி என் நெஞ்சை தொட்டது. துரோகிகளினால் வீசப்பட்ட வெடிகுண்டினால் தன் மகன் ஒரு காலை இழந்த போது அந்தத் தாய் கூறிய வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. "ஒரு கால் போனால் என்ன? இன்னும் ஒரு கால் இருக்கு…. இரண்டு கையிருக்கு…. அவன் கடைசி சரையும் போராடுவான்…" போர் முனையில் தன் மகனின் மார்பில் வேல் பாய்ந்திருப்பதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்ட வீரத் தமிழ்த்தாயின் கதையை இது எனக்கு நினைவூட்டியது. உதவி இந்தியத் தூதுவர் திரு.கென் அவர்கள் விமான மூலம் பலாலிக்கு வந்து விட்டாராம்…. அவருடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக திரு அன்ரன் பாலசிங்கமும், மாத்தயாவும் போயிருக்கின்றனர்…. ஏன்ற செய்தியை 'சிறி' வந்து சொன்னபோது மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தேன். திலீபனுக்கும் அதைத் தெரிவித்தேன். காலையில் சிறுநீர் கழித்ததால் திலீபன் சற்றுத் தெம்பாக இருந்தார். பேச்சுவார்த்தை முடிந்து அதில் சாதகமாக முடிவு கிடைக்குமானால்…… உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு திலீபனை யாழ். பேரியாஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும்… அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்குவேண்டிய சிகிச்சைகளை உடனடியாக அளிக்கத் தொடங்கினால்… இரண்டு மூன்று நாள்களில் திலீபன் வழக்கம்போல் எழும்பி நடக்கத் தொடங்கிவிடுவார். இப்படி எனக்குள்ளேயே கணக்குப் போட்டுக்கொண்டேன். இயக்க உறுப்பினர்கள் திலீபனுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவரை சந்திக்க வந்த மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், தம்மைக் கட்டுப்படுத்த முடியாமால் விம்மி விம்மி அழுத என் நெஞ்சைத் தொட்டது. தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜொனி போன்றோர் கண்கலங்கி திலீபனின் தலையை வருடி…. பேசி விட்டுச் சென்றனர். அவர்கள் போனதும் திலீபன் என்னை அழைத்தார். " கிட்டண்ணையைப் பார்க்க வேணும்போல இருக்கு…." என்று மெதுவாகக் கூறும்போது அவர் முகத்திலே 'ஏக்கம் படர்திருந்தது. ஓரு கணம் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கிட்டண்ணா, குட்டிசிறி ஜயர்…. இவர்கள் எல்லாரும் இந்தியாவில் இருக்கபின்றனர். திலீபனுக்கு என்ன பதில் சொல்லதென்று தெரியாமால் தவித்தேன்….. கிட்டு அண்ணர் இந்தியாவில் தெரியும்… ஆனால் இந்த நிலையில், அவர் கிட்டு அண்ணாவைக் காண விரும்பியது நியாயம்தான். இரவு வெகுநேரம்வரை போச்சுவார்த்தையின் முடிவு வரும் வருமென்று பார்த்துக்கொண்டிருந்தோம்… ஆனால், அது வரவேயில்லை இன்று மாலை சிறிலங்கா நவ சமமாசக் கட்சித் தலைவர் திரு. வாசுதேவ நாணயக்கார, மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வந்து திலீபனைப் பார்த்துவிட்டுச் சென்றனர். இரவு வெகுநேரம் வரை எனக்குத் தூக்கமே வரவில்லை.. ஆனால், திலீபன் தன்னை மறந்து நன்றாக உறங்கினார். அவரின் இரத்த அழுத்தம் 85 . 60 நாடித்துடிப்பு- 120 சுவாசம் -22 பயணம் தொடரும்.
Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை