வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Wednesday, November 30, 2011

தமிழன் எனும் கோமாளி!

ஒரு வழியாக தமிழ் செம்மொழி மாநாடு நிறைவடைந்து விட்டது
ஆதரித்தும் எதிர்த்தும் விமர்சித்தும்.அனைத்து தளங்களிலும் விவாதங்கள்
நடந்து முடிந்து விட்டன.இவற்றை எல்லாம் பார்க்கும் போது இன்று தமிழ் பரப்பை
ஒரு மோசமான நோய் பீடித்துகொண்டுள்ளதை  அறிய முடிகிறது .
அது மிகப்பெரிய கருத்து பிறழ்வு நோய்.அதாவது எந்த ஒரு பொருள் குறித்தும்
ஒருவர் வெளியிடும் கருத்தை அதற்கென்று ஒரு அரசியல் சாயம் பூசியே பார்க்கும் நோய்

Tuesday, November 29, 2011

நேற்றுபோல் இருக்கிறது நெஞ்சகலா அந்த நினைவு

 
நேற்றுபோல் இருக்கிறது 
 நெஞ்சகலா அந்த நினைவு
பச்சிளம் பாலகரை
பத்துமாத தாய் வயிற்றை
பிய்த்தெறிந்த
பிசாசுகளின்
கொத்துகுண்டின்
கொடூர ஒலி
நித்தம் நித்தம் ஒலிக்கிறது-என்
நெஞ்சம் இன்னும் பதைக்கிறது
எத்தனை மரணங்களை

Monday, November 28, 2011

தமிழக தாய் உறவுகளே கொஞ்சம் நில்லுங்கள் கவனியுங்கள் ..

""மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுகந்திர தமிழீழம் மலரட்டும்"""
 
 
 எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தாய் உறவுகளே .உங்கள் உணர்வுகளும் தியாகங்களும் ஈழ மக்கள் ஆகிய நாங்கள் என்றுமே மறப்பதில்லை ..அனால் இன்று நீங்கள் என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள்? சிந்தியுங்கள் உறவுகளே நீங்கள் சரியான பாதையில் போகவில்லை என்பது எமது குற்றசாட்டு இல்லை அனால்.தெளிவானது இல்லை என்பதே எமது கருத்து .நீங்கள் எமது தலைவர் போராளிகள் மீதும் ஈழ மக்கள் மீதும் வைத்திருக்கும்

Sunday, November 27, 2011

2011-மாவீரர் தினத்தையொட்டி தமிழ் உணர்வாளர்களின் கருத்துக்கள்

திரு.வைகோ அய்யா .திரு. நெடுமாறன் அய்யா . உள்ளிட்ட அனைவரின் மாவீரர் தின கருத்துக்கள் ஒரே பிளேயரில் கேளுங்கள்

ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்தாலன்றி தமிழீழத் தாகத்தை யாராலும் அழித்துவிட முடியாது! -

தமிழீழ மக்களின் இனப்பிரச்சனையையும் அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தையும் புரிந்துகொண்டு அழிக்கப்படும் ஓர் இனத்தின் விடுதலைக்காகப் போராடிவரும் எமதியக்கத்தின் மீது போடப்பட்டுள்ள தடைச்சட்டங்களை நீக்கி எமது மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உலகநாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.


இனப்படுகொலையைப் புரிந்துவரும் சிங்கள ஆட்சியாளர்களின் பொய்ப்

Saturday, November 26, 2011

மாவீரர் நினைவு சுமந்த (2011 ) பாடல்




சாவற்ற சந்நிதியின் பாடல்! ஈழத்தில் இருந்து...!- பொன்.காந்தன்


சாவற்ற சந்நிதியின் பாடல்! ஈழத்தில் இருந்து...!- பொன்.காந்தன்

கார்த்திகை எங்கள் இனத்துக்கும் மனத்துக்கும் எழுதுகிற கதையை சொல்லத்தவித்து துவழும் உள்ளங்களில் இருந்து ஓங்குகிற உருவம் இது.

புல்லரிக்கிற ஒரு கவிதையை பொழிவதற்கு புதுவை இல்லையென்றும் புனிதர்களை பல்லக்கில் ஏற்றிவைத்து பாடுதற்கு ஒரு பாவலனும் இல்லையென்றான ஏக்கவெளியில் நின்றுகொண்டு கல்லறைத்துண்டுகளை கவியாக்கி காலக்கடமையை அந்தக் காவல்தெய்வங்களின் நித்திய கடனை நிறைவேற்ற நெஞ்சம் பதறிடுமாம்.

Friday, November 25, 2011

நாமும் வாழ்த்துவோம் வாருங்கள் எமது தலைவரை







தாகம் தாகம் கடல் சூழ்ந்த இடமெல்லாமே தாகம்
தமிழன் ஆண்டது சொந்த மண்ணை
கதைகளிலும் காவியங்களிலும் கேட்டது மட்டுமே
சுவடுகளும் வரலாறுகளும் உண்மை கூறின
கல் தோன்றி மண் தோன்றா காலங்களில் தமிழ் அன்றாம்
ஒரு பிடி மண் இல்லை தமிழனுக்கு இன்றாம்
தமிழன் உணரவில்லை அன்றும் உண்மையை
வெகுளியாய் நம்பியதால்

Wednesday, November 23, 2011

கொசோவோ தமிழீழம் தொடர்பில் ...


 --மேற்குலகத்தின் நகர்வுகளில் உள்ள ஒற்றுமைகள் --

அனைத்துலக ரீதியில் சிறிலங்கா தொடர்பான செய்திகள் அண்மைய காலங்களாக தலைப்பு செய்திகளாக மாற்றம் பெற்றுவருகின்றன.  சிறிலங்கா அரசு மேற்கொண்ட போர் குற்றங்களும் ,அது தொடர்பில் மேற்குலகம் கொண்டுள்ள போக்கும் தான் அதற்க்கான பிரதான காரணம்.சிறிலங்கா அரசு மீதான மேற்குலகத்தின் நடவடிக்கைகள் என்பது போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை அடிப்படையாகவே கொண்டது.இந்த இரு காரணிகளையும் முன்னிறுத்தியே மேற்குலகமும் சரி ஐநாவும் சரி சிறிலங்கா விடையத்தில் தலையை நுழைக்க போகின்றன.மேற்குலகத்தை பொறுத்தவரையில் சிறிலங்கா விடையத்தில் உள்நுளையவேண்டிய

Tuesday, November 22, 2011

தேசியத்தலைவர் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு


தேசியத்தலைவர் சகோதரர் மனோகரன் அவர்களை முன்பு அலைகள் இணையதளம் பேட்டிகண்டிருன்தது ..அந்த பகிர்வை மீண்டும் காலத்தின் தேவை கருதி எமது வாசகர்களுக்காக பிரசுரிக்கிறோம்

கேள்வி :-
நீங்கள் பிரபாகரனின் அண்ணன்.உங்களுக்கு ஒரு உரிமை இருக்கிறது .அதிகாரத்தில் சகோதரர் இருந்தால் அண்ணனுக்கு இயல்பாகவே அதிகாரம் வந்துவிடும்.
அதோ பாடுங்கள் சிங்கள ஆட்சியை கோத்தபாய ராஜபட்ச ,பசில் ராஜபட்ச ,
போன்றவர்களுக்கு எங்கிருந்து அதிகாரம் வந்தது.அதே போல் நீங்களும் ஏன் அதிகாரத்தை பெற முயற்ச்சிக்கவில்லை?

Saturday, November 19, 2011

யாரை காப்பற்ற முனைகிறார் ஐநா செயலாளர் நாயகம்?

சிறிலங்காவில் நடைபெற்ற இனப்போரின் இறுதி நாட்கள் உலகில் எங்கும் நடைபெறாத மிகப் பெரும் அழிவுகளுடன் (2009 ) மே மாதம் நிறைவடைந்திருந்தது.அதிக தொழில் நுட்ப வளர்ச்சியை கண்டிருந்த உலகம் அங்கு நடைபெற்ற சம்பவங்களை செய்மதி ஊடாக நேரடியாக பார்த்துக்கொண்டுதான் இருந்தன.இறுதிக்கட்ட சமரில் சிறிலங்கா இராணுவம் தன்னால் பிரகரடனப் படுத்தபட்ட பாதுகாப்பு வலையங்கள் மீதும்,இடம்பெயர்ந்து தாக்குதலில் காயமடைந்த மக்கள் சிகிச்சை பெற்றுவந்த வைத்தியசாலைகள் மீதும் வெளிப்படையாகவே தாக்குதல்களை நடத்தியிருந்தது.அதற்க்கான செய்மதி ஒளிப்படங்களும் உள்ளன.

Friday, November 18, 2011

எமது உயிரோடு கலந்திவிட்ட மக்களே .உங்களோடு ஒரு நிமிடம் பேசலாமா?

 
 
நாம் யார் எதற்க்காக மடிந்தோம் .நாமும் உங்களைபோல சாதாரண பிறவிகள் தானே எமது இனம் அடக்கபட்டதும் ஒடுக்கபட்டதும் ..எமது உறவுகள் அழிக்க பட்டதும் .எமது சகோதரிகள் மாணவங்க படுத்த பட்டது எமது கண்களால் கண்ணுற்று.எமது மக்களாகிய நீங்கள் கொவுரமகவும் சுகந்திரமாகவும் வாழவேண்டும் என்பதற்காக எமது தேசியத் தலைவர் அவர்களின் வழி தொடர்ந்து களமாடி இன்று நாம் மண்ணில் விதைக்கபட்டோம் .நாம் களமாடி வீழும் கடைசி நிமிடம் வரை எமது

சுகந்திர தமிழீழ தனியரசு என்ற அச்சைவிட்டு விலகியோடும் தேர்கள் இடைவழியில் தெருவிலையே நின்றுவிடும்

தமிழர்களின் அரசியல் ஒழுங்கமைப்புக்கள் தமிழர் நலன்களுக்காகவும் தமிழரின் சுய அரசியலுக்காகவும் தமிழர்களின் சமுக கலாச்சார காவலர்களால் மட்டுமே ஏற்படுத்தபாடல் வேண்டும்.அந்த அரசியல் அமைப்புக்கலானது தமிழர்களுக்காக தனித் தேசத்தை உருவாக்கும் போராட்டத்திலையே தம்மை ஈடுபடுத்தல் வேண்டும்.எந்த போராட்ட பின்னடைவுகளாலும் தயங்கி நிற்காது தடைகள் தாண்டி முன்னேற வேண்டும்.முள்ளிவாய்க்கால் இராஜதந்திரங்களை முட்டுகட்டைகளாக நினைப்பவர்களின் சதிவலைகளை முறியடித்து இன்றைய தமிழர் அரசியல் முன்னேற வேண்டும்.எமது அரசியல் சமுக பொருளாதார அமைப்புக்கள் அனைத்துமே ஜெனநாயக வழிமுறைகளை அதன் வெளிக்கட்டமைப்பிலும்,தேசிய விடுதலையை அதன் ஆணி வேரிலும் மிக அழுத்தமாய் உறுதியாய் கொண்டிருத்தல் வேண்டும்.

Thursday, November 17, 2011

இராஜதந்திர முச்சந்தியில் தீ முட்டியவன்

இராஜதந்திர முச்சந்தியில் அவன் தீ மூட்டி எரிந்த
பொழுதில் பெரிதாக எதுவும் நடந்து விடவில்லை.
எரிந்து கருகிய அவன் உடல் கடந்தே உலக சமாதானம் தன நுனிநாக்கு
உச்சரிப்புக்களை சொல்லி சப்புகொட்டி நின்றது.
தாய் நிலம் மீதான தணியாத தாகமும் பக்கத்து மனிதன் மீதான பற்றுதலால்
,அவன் நெருப்பை மூட்டி அவிந்த பொழுதினில்.
நாகரீக பெருமான்கள் அவமான தீக் கோழிகளாய்
ஜெனீவ மன்றத்தில் முகம் புதைத்து நின்றனர் .
புதுமாத்தலான் கடந்து இனஅழிப்பு தொடர்கையில் எரிந்தபடி
முருகதாசன் உலகம் இதை நிறுத்தவேண்டும் என்றான் .
ஒரு கால் முறிந்த கதிரை மட்டுமே அவனின்
சுயதகனம் பார்த்து விக்கித்து நின்றது .

சிறிலங்காவின் சர்வதேச முள்ளிவாய்க்கால் நடவடிக்கை எப்போது?

கடந்த ஆறு சதாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணைய உரிமை போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு லட்சம் தமிழ் மக்கள் கொல்லபட்டும் நாற்பது ஆயிரத்துக்கும் மேலான மக்கள் காணமல் போயும்,ஐம்பதினாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஊனமுற்றும் ,ஆயிர கணக்கில் தமிழ் பெண்கள் சிங்கள அரச படையால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்க பட்டும்,பலகோடி பெறுமதியான சொத்துக்கள் நசமாக்கபட்டும் உள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டு உள்ளன.இதேவேளை முன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்நாட்டிலும்,ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வெளிநாடுகளிலும் தஞ்சம் கோரியுள்ளனர் .இதே வேளை பல நாடுகளின்

Tuesday, November 15, 2011

தேசிய தலைவரை புரிந்து கொள்ளுதல் -பாகம்-2

அந்த ஒற்றை மனிதனே இந்த விடுதலை போராட்டத்தை துக்கி நிறுத்தி அதனை தாங்கி நிற்கும் தோள்களுக்கு உரியவர்.உன்னதமான இந்த போராட்டத்தை வெறும் சாகசமாகவே வீர விளையாட்டாகவே அவர் ஆரம்பிக்கவில்லை.உரிமை மறுத்தலுக்கு எதிராகவும் எழுச்சியாகவும் சுகந்திரமாக வாழும்,மானிட எத்தனமாகவும்,ஆயுதம் மூலமான ஒடுக்குதலுக்கு இயல்பாக வெடிக்கும் எதிர்வினையாகவே அவரின் போராட்டம் ஆரம்பித்தது.இந்த போராட்டத்தினை அவர் ஆரம்பித்த நாளிலிருந்து அதன் இயங்கு திசையை தீர்மானிக்கும்

Thursday, November 10, 2011

வீழ்ந்த ஈழம் எழும் !காலம் அதை சொல்லும்!

( 2009 ) ஆம் ஆண்டு மே மாதம் ( 17 ) ஆம் திகதி நான்காம் கட்ட ஈழ போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் ,விடுதலை புலிகள் முற்றாக அழிக்கபட்டு விட்டதாகவும் இலங்கை அரசு பெருமிதத்துடன் அறிவித்தது.போரின் கடைசி கட்டத்தில் (30 ) ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யபட்டனர்.இந்த போரில் மொத்தம் ஒருலட்சம் மக்கள் உயிரிழந்தார்கள்.( 3 ) லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிறை பிடிக்கப்பட்டு முள் வேலி முகாம்களில் அடைக்கபட்டார்கள்.தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் குறித்தும் அவரது முக்கிய தளபதிகள் குறித்தும் பல்வேறுபட்ட செய்திகள் மாறி மாறி வெளியிடப்பட்டு உலகெங்கிலும் உள்ள தமிழர்களை சோர்வடைய வைத்தது.( 30 ) மேற்பட்ட மாவீரர்களும்

Wednesday, November 9, 2011

தேசிய தலைவரை புரிந்து கொள்ளுதல்

இந்த கட்டுரையை நீங்கள் படிக்கும் போது தேசிய தலைவரின் பிறந்ததினம் அண்மித்து இருக்கலாம்.அல்லது கடந்து போயிருக்கலாம்.எது எப்படியாயினும்  அவர் என்றென்றும் இந்த ஈழத் தமிழினத்தால் நன்றியுடனும் உணர்வுடனும் உள்ளத்து ஆழத்திலிருந்து.நினைக்கப்பட வேண்டியவர் அவரை புரிந்துகொள்ள வேண்டுமானால் ,தேசிய தலைவரை முழுமையாக தரிசிக்க வேண்டுமானால் அதற்க்கு உரிய குறைந்தபட்ச தகுதி அல்லது தேவை என்னவென்றால் விடுதலையும்  தேவையும் ,சுகந்திரத்தின் அருமையும் உணர்ந்துகொள்ளகுடிய ஒருவராக இருந்தால் மட்டுமே. மானுட விடுதலையை யாசிக்கும் எவரும் வாழும் அவரின் வரலாற்றறி நேர்மையாகவும் உண்மையாகவும்

Tuesday, November 8, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-35

தொடர்பாடல் கருவியில் தளபதி சொர்ணம் பேச்சினை தொடர்ந்துகொண்டிருக்க அலைவரிசைகளை வைத்து எதிரி இருக்கும் இலக்கை அடையாளம் கண்டு அந்த இலக்கின் மீது ஆட்லெறி தாக்குதலுக்கான உத்தரவை வழங்கிவிட்டு உன் தலைக்கு மேல் பார் செல்வரும் என்று அந்த சிங்கள சிப்பாயிடம் கூறியதுதான் தாமதம் அந்த தொடர்பு துண்டிக்கபட்டு விட்டது.அதன் பின்பு சிப்பாயின் குழப்பும் அழைப்புக்கள் வரவேயில்லை.இதே வேளை அவர்கள் இவர்களின் தொடர்ப்பாடல் முலம் இலக்கை கண்டு பிடித்தார்களோ,அதேபோல் இவர்களின் தொடர்பாடல்களை வைத்தும் எதிரி இவர்கள்

Monday, November 7, 2011

தலைவரின் தீர்க்க தரிசனம்

தமிழீழ மாவீரர் நாள் கடந்த காலங்களை போலன்றி என்றுமில்லாத பலத்த எதிர்பார்ப்பை இம்முறை ஏற்படுத்தி இருக்கிறது.கடந்த காலங்களில் தமிழீழ தேசிய தலைவர் என்ன சொல்ல போகிறார் என எதிர்பார்த்திருக்கும் தமிழீழ மக்களும் சர்வதேசமும் இம்முறை உரையாற்றுவார இல்லையா என்ற கேள்வியுடன் காத்து இருக்கிறது .முள்ளிவாய்க்காலில் ஒரு முற்றுகை போரை உலகம் ஒன்றுதிரண்டு நடத்தி ஒரு பெரும் மனித பேரழிவை தமிழ் மக்கள் மீது  மேற்கொண்ட பின்னர்.எஞ்சிய மக்களை முட்கம்பி வேலிகளுக்குள்ளும் அடைத்து வைத்து சிறிலங்கா அரசு .வரலாறு காணாத துயரங்களை தமிழ் மக்கள் சந்தித்திருந்த

Sunday, November 6, 2011

ஈழம் விடுதலைக்கான இறுதி கணக்கீடுகள்

மனிதர்கள் இதுவரை படைத்துள்ள அகிம்சை தத்துவங்கள்,புரட்சிகர தத்துவங்கள் ,மனிதநேய கோட்பாடுகள் ,உரிமை சாசனங்கள் இவை எவையலுமே இதுவரை ஈழமக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.சிங்களத்தின் முன்னே காந்தியின் அகிம்சை தோற்றுள்ளது.மார்க்கசியத்தின் மக்கள் வன்முறை தோற்றுள்ளது.சர்வதேச நெறிமுறை சட்டங்கள் அமைதியாகி உள்ளன,இந்நிலைமைகள் இதவரை நாம் பின்பற்றிவந்த அனைத்து சமுக கோட்பாடுகளையும் மீள் பரிசீலனை செய்ய கோருகின்றது.அவற்றில் நம் தோல்விக்கு காரணமானவற்றை உடனடியாக கைவிட

மாவீரர்களுக்கு மரணமேது

பூர்வீக தமிழ் தேசிய இனத்தின் விடுதலை வேட்கையை அணையாமல் கடந்த ( 33 ) வருடங்களாகப் பாதுகாத்து சென்ற மாவீரர்களுக்கு ,ஈழதமிழ் மக்கள் வீரவணக்கம் செலுத்தும் மாதமிது.இவர்கள் விதைக்கபட்டாலும்,ஏற்றிவைத்த விடுதலைப் பெரும்  நெருப்பு தாயக புலம்பெயர் தமிழர்கள் நெஞ்சில்  சுடராய் ஒளி வீசிக்கொன்று இருக்கிறது.முப்பதினாயிரம் உயிர் பூக்களை உதிர்த்து முல்லிவாய்க்களில் அமைதிகொண்ட விடுதலை போர் வேரடி மண்ணோடு கலந்து விட்டதாக பேரினவாதம் பெருமை கொள்கிறது.பன்னாட்டு படைக்கலங்கலென்ன ,பிராந்திய வல்லுருகளின் வல்லாதிக்க சக்திகள் என்ன,ஏது வந்தாலும் ,தாயாக கனவினை சிதைத்து சின்னபின்னமாக்க

Saturday, November 5, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-34


மன்னார் நடவடிக்கை ஆரம்பிக்க பட்ட பின்னர்தான் மக்களின் இடம்பெயர்வும் அதிகரிக்க தொடங்கியிருந்தது .சாதாரமாக ஒரு குடும்பம் பல தடவைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் இடம்பெயர்கிறார்கள்.இடம்பெயர்ந்தே இடம்பெயர்ந்தே இவர்களின் நகைகள் சொத்துக்கள் எல்லாம் அழிந்து போனது .சிறிலங்கா அரசின் பொருளாதார தடையினால் எரிபொருள் தட்டுப்பாடு-இதனால் உளவு இயந்திரத்தையோ ,லண்மஸ்ரரையோ வாடகைக்கு பிடிப்பது என்றால் குறைந்த பட்சம் ( 5000 ) ரூபாய் என்றாலும் வேண்டும் .( 20 ) கிலோமீற்றர் செல்வதுக்குள் வைத்திருந்த நகைகள் எல்லாம் வித்து சாப்பாட்டிற்கும்இடம் மாறுவதற்கும் பல சிலவளித்து விட்டார்கள்.கையில் பணம் இல்லாதவர்கள் நிலை கஞ்சிதான் இதே வேலை படையினரின் தொடர்ச்சியான இடைவிடாத தாக்குதலினால் விடுதலை புலிகள் நிலங்களை இழக்கவேண்டிய சூழ்நிலை

Friday, November 4, 2011

2009-மாவீரர் நாள் உரை ஒரு மீள் பார்வை



ஒலித்துகொண்டிருக்கும் பாடலை நிறுத்தி ...இதை பிளே பண்ணி பார்க்கவும் ...

வரவிருக்கும் நவம்பர் 27தரவிருக்கும் தகவல் எதிர்பார்ப்புக்கள் என்னவாகும்

 ஒவ்வொரு வருடமும் நவம்பர் (27  ) ஆம் நாள் மாவீரர் வாரத்தின் இறுதி நாள் தாயாக விடுதலைக்காக தம்முயிரினை ஈந்த மாவீரர்களின் புனித கல்லறைகளில் .சிரம் தாழ்த்தி ,மலர்துவி ,ஒளியேற்றும் உன்னத நாள் ,நம் தாயக விடுதலைக்காக இதுவரை நாம் இழந்தவற்றை மீள் நினைத்து இழந்த மாவீரர்களின் இலட்சிய கனவினை ஈடேற்ற அவர்கள் வழிச்சுவட்டினை தொடர்வோம்.என உறுதியெடுத்து கொள்ளும் வீர நாள் ,ஈழ தமிழர்கள் அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பினை கொடுக்கும் நாள்.? அன்றுதான் நம் தேசியத்தலைவர் அவர்களின் கருத்துக்களை அவரின் உரையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் அறிய நாள் .அன்நாளில் ஒட்டுமொத்த உலகமே தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் என்ன சொல்ல போகிறார் என ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும்.அனால் இந்த வருடன் தேசியத்தலைவரின்
Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை