வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Friday, December 9, 2011

புலனாய்வு துறையின் துணை பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் வரலாறு பாகம்-2

முன்னைய பதிவின் கடைசி வரிகள் (***கொழும்பில் வைக்கபட்டது வெடி அவர்களுக்கு அது மரண அடி .வீழ்ந்தான் எதிரி வென்றான் சாள்ஸ் என்று இங்கு அவனது தோழர்கள் ஆளையால்  கட்டி தழுவி கொண்டாடி மகிழ்ந்தது அது தனிக் கதை)****
 
  தொடர்ச்சி>>>
 
வெற்றி தந்த மகிழ்ச்சியில் வெற்றி தந்த ஊக்கத்தில் அடுத்தடுத்த நகர்வுகள் .சாள்சின் என்னத்துக்கு ஈடுகொடுக்க வரதனின் ஏற்பாடுகளில்
புவேந்தி ,ரவி ,இந்திராக்க என்ற நல்ல பொருத்தமான உதவியாளர் வட்டம் அமைந்து விட்டது . சாள்சின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் தளத்திலிருந்த ஏற்பாடுகளும் அந்த மாதிரி அமைந்துவிட அடுத்ததும் கிடைத்தது அற்புதமான வெற்றி முதலாவது நிகழ்வைப்போல் இம்முறையும் நடவடிக்கையாளர்கள் சறுக்கி பின்வாங்கிவிட்ட நிலை முன்னைய அனுபவம் தந்த பாடத்தால் அகிலாவின் ஏற்பாட்டில் முன்கூட்டியே நகர்ந்து காத்திருந்த இரண்டாவது கரும்புலி சந்திரன் முன்வந்தான்
 
மனிதனாய் பிறந்தவனுக்கு கொஞ்சமாவது மானம் இருக்க வேண்டும் என்று சொல்லி சந்திரன் முன்வர தாமதம் இல்லாமலையே உடனடியாக நகர்ந்தது திட்டம் .வண்டி ஓட்டுனர் தேர்ச்சியை பெறாத கரும்புலி சந்திரனை அருகிருந்து வெடிமருந்து வண்டியினை ஓட்டிசென்றார் குவேந்தி .குவேந்தியை அழைத்துவர பின்தொடர்ந்து சென்றது சாள்சின் உந்துருளி .இம்முறை இவர்களது தாக்குதலினால் சிறிலங்கா கூட்டுபடை தலைமையகம் தகர்த்து அழிக்கபட்டது.கூட்டுபடை தலைமையகத்தின் வெற்றி எல்லோருக்கும் வெற்றி தந்த மகிழ்வில் திளைத்திருக்க .இம்முறை சறுக்கியது எங்களுக்கு ஆயிரம் கிலோ வெடிமருந்தோடு வெடிக்கும் வண்டியில் தடையம் எங்கே மிஞ்ச போகின்றது என்று நான் நினைப்பதற்கு மாறாக எம் கரும்புலியின் வண்டியின் இலக்கத்தகடு முழு தடையமாய் கிடைத்துவிட்டது எதிரிக்கு .
 
 
வரத்தான் தேடப்பட வந்தது சிக்கல் மறைவிடங்கள் அடையாளம் காணப்பட்டன .இந்திராக்க மட்டத்தில் கொஞ்ச பேர் கைதாக கூட்டுபடை தலைமையாக கரும்புலி நினைவாக போராளி பெயராய் சந்திரனின் பெயரை தனக்கு சூட்டி அப்போதைய குவேந்தியை தப்பி போ என்று அனுப்பிவிட்டு வரத்தான் சயிநேட்டை அருந்தி வீரச்சாவை அடைந்தான்.புலனாய்வு சக்கரத்தின் மறுபக்கம் வீரச்சாவுகள் கைதுகள் சித்திரவதைகள் என துயரமும் வழியும் கலந்த வேதனையான மறுபக்கம் குழம்பியது எமது கட்டமைப்பு இருப்பினும் நாளாக நாளாக எமது கட்டமைப்பு வலுப்பெற்றது .புலனாய்வு தளத்தில் சாள்ஸ் ஒரு பொறுப்பாளர் எமது துறையின் வெளிக்கள புலனாய்வின் ஒருபகுதி பொறுப்பாளனாய் செயற்பட தொடங்கிவிட்டான்
 
 
.கொழும்பில் பெற்ற வெற்றிகள் தந்த அனுபவமும்
தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் கொடுத்த உக்கமும் அவனது செயற்பாட்டில் துணை நின்றன உறுப்பினர்களை பயிர்ருவித்தல்கள் மற்றும் எதிரி பகுதிகளில் தங்களை உருவாக்குதல் என்ற வகையில் தொடங்கியது சாள்சின் தொடக்கால புலனாய் பணிகள் .எமது செயற்பபாடுகளை தடுப்பதற்காக அவர்களது புலனாய்வு அமைப்பும் முன்போல் இல்லாமல் விரிவடைந்து செல்ல தொடங்கிவிட்டது .எமது செயர்ப்பாடுகளுக்கு முன் போல் அல்லாது இப்போது தீவிரமான 
 
 
பயிற்ச்சியும் பெருமளவான அறிவுறுத்தல்களும் தேவைபடுகின்ற நிலைமை.பயிற்சிகள் புலனாய்வு வகுப்புக்கள் புதிய தந்திரங்கள் என்று சாள்சின் ஆளுமை விரிவடைந்து சென்றது .கரும்புலி நடவடிக்கைகளையும் உறுப்பினர்களை பயிர்ருவிற்பதிலும் பழகி உக்குவிப்பதிலும் சாள்சின் தனித்துவம் சக பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பாடமாய் அமைந்தது .
உறுப்பினர்களோடு சேர்ந்து விளையாடியும் கண்டித்தும் அறிவுறுத்தியும் அவர்களை பயிற்றுவிற்பான் ,விளையாட்டு மைதானத்திலும் உடற்பயிற்ச்சி கூடத்திலும் அவர்களோடு கூடி ஒன்றாய் பழகி அவர்களை வென்றெடுப்பான் .சாள்சின் முதன்மையாக பயிற்சி ஆசிரியர் பிறேம்நாத்தின் பயிற்சி மைய்தானங்களிலும் சூட்டு களங்களிலுமாக கழியும் .அப்பொழுதுகளில்தான் கரும்புலிகளுடனான உறவும் மதிப்பீடுமாய் அவனது வேலை நகர்ந்திருக்கும் .நீந்த தெரியாத ஒருவருக்கு இடுப்பில் கயிறு கட்டி கடலில் இறக்கி விடுவதாகட்டும் இளைய போராளிகளோடு உடல்தகமையிலும் ஆயுதத்த்தினுடனான போட்டி போடுவதுலாகட்டும் ஒன்றாய் கூடி உண்டு மகிழ்வதிலாகட்டும் அவற்களோடு பழகி அவர்களுடனையே ஒன்றிணைந்து விடுவான் சாள்ஸ் .படை திட்டமிடலிலும் கூட அவர்களது நிலையறிந்து தகமையறிந்து திட்டம் வகுப்பதிலும் ஆயுத வெடிபொருட்களை தெரிவு செய்வதிலும் மொத்தமாய் கவனமெடுப்பான் சாள்ஸ்.
 
 
குறித்த ஆயுதத்தை குறித்த முறையில் குறித்த போராளி இயக்குவான என்று பற்பானே அல்லாமல் பொதுவான ஆயுதமொன்றை எடுத்து ஆட்களிடம் கொடுத்து அனுப்பிவிட மாட்டான் அது அதனால் அவனுக்கு பொருத்தம் என்பதே அமையும் சாள்சின் திட்டமும் பொருட்களும் அதற்கேற்ப இருந்திருக்கும் போராளிகளுடனான அவனது பழக்கமும் அவர்கள் பற்றிய மதிப்பீடும் சாள்ஸ் கூட ஒன்றாய் இருந்து ஒன்றாய் பயணித்து அவனுடனே வீரச்சாவு அடைந்துவிட்ட லெப்டினன் காவலன் ,லெப்டினன் சுகந்தன் ,லெப்டினன் வீர மறவன் ஆகியோரை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை.ஆனாலும் அவர்கள் அறிவும் ஆற்றலும் கொண்ட எதிர்கால சதனையலர்கலாய் இருந்திருப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை .
 
 
ஏனெனில் அவர்கள் சாள்சின் தெரிவல்லாவா .(1997 ) ஆண்டு யாழ்பனத்திளிருந்து பின்வாங்கி வன்னியில் தளம் அமைத்திருந்த காலம் ஜெசுக்குறு படை நடவடிக்கையையும் எதிரி தொடங்கியிருந்த காலம் கொழும்பிற்கான திட்ட நகர்வுகளை செய்வதுக்கான கள சுழல் வன்னியில் தடங்கல்களை சந்தித்தது .இதே வேளை நகர்வுகளை செயற்படுத்த சாதகமான கள சுழல் மட்டகிளப்பில் உருவாகியிருந்த நேரமது எம்மில் ஒரு பொறுப்பாளர் மட்டகிளப்பிற்கு சென்று அங்கிருந்து செயற்படுவது என முடிவெடுத்தோம் .மட்டகிளப்பு களபரீட்சியம் இல்லாத சாள்சை அனுப்ப நாம் தயங்கியபோது என்னால் முடியும் என்று முன்வந்து நின்றான் .வெளியாக வேலைகளுக்காகவும் புலனாய்வு பொறுப்பாளனாகவும் சாள்ஸ் மட்டகிளப்பிர்க்கு பயணித்தான் .மட்டகிளப்பில் நிக்சனின் தொடக்க நிகழ்வுகளில் இருந்து காந்தி உருவாக்கிவைத்த புலனாய்வு கட்டமைப்பு தளத்தில் நின்று சாள்ஸ் செயற்பட தொடங்கினான்.
 
மட்டகிளப்பில் இருந்த கள நிலவரத்தை தனது ஆளுமை வீச்சுக்குள் எடுத்து கொண்டான் .விடுதலை புலிகளின் முற்றுகைக்கு உட்படுத்திய பெருமிதத்தோடு நடந்த எதிரியின் படை நடவடிக்கைகளுக்கு பதிலடியாக சிங்களத்தில் நகரங்களில் வெடித்தன குண்டுகள் .ஒன்றல்ல இரண்டல்ல தொடர்ச்சியாக வீழ்ந்தன இலக்குகள் காந்தியும் சின்னவனுமாய் கொழும்பையும் மட்டகிளப்பையும் இணைத்ததாய் உருவாக்கிய புலனாய்வு தளத்தில் சாள்சின் வெற்றி பயணம் நடந்தது .
 
 
காந்தியால் உருவாக்க பட்ட அந்த கட்டமைப்பை வெற்றி என்ற மகுடத்தி ஏற்றி ஒளிர வைத்தது சாள்சின் ஆளுமையும் படைதிட்டமிடலும் கரடியனாற்றில் இருந்து பழுகாமம் வரை நேரம் காலம் இன்றி ஓடித்திரியும் இவனது உந்துருளி இளங்கோ, மதன், அருள்ராஜ்,துயமணி மாஸ்ரர் என இவனது பொறுப்பாளர்களை உசுப்பிவிடும் சாள்சின் கேள்விகளும் கட்டளைகளும் சாள்சின் நேரடி வழிநடத்தலில் மட்டகிளப்பில் புலனாய்வு கட்டமைப்பு மெருகுபெற்று வளர்ந்தது .எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் தக்க அடி கொடுத்தான் உடுருவியும் உருவாக்கியிருந்தான் தனது கட்டமைப்பை .புலனாய்வின் கட்டமைப்புக்கள் நகர்வுகள் எந்தவிதத்தி நகர்ந்தாலும் வெற்றிகரமான நடவடிக்கையாய் அவற்றை பொருத்தி நடாத்தி முடிப்பதுதான்
மகுடம் இந்த மகுட வெற்றிமாலையை தொடுத்து முடிப்பதில் சாள்ஸ் ஒரு வெற்றியாளன்.
 
நீயுட்டனின் கட்டமைப்பு திட்ட வேவு முடிந்து பொருள்நகர்வு வழிதேடி காத்திருக்கும் பயிற்ச்சி கொடுத்து அணியை தயாராக வைத்திருப்பான் அன்பு .பொருள் நகர்வின் நோக்கமாய் அமைந்த காந்தியின் கட்டமைப்பு தமக்கான பணிமுடிக்க தயாராக காத்திருக்கும்.தடை தாண்டி கரும்புலியை இலக்கை நோக்கி நகர்த்த வழியொன்றை கைவசமாக வைத்திருப்பார் கபிலம்மான்.
 
அனைத்தையும் ஒருங்கிணைத்து நடவடிக்கையை நோக்கி நகர்த்தவேண்டும் என்ன செய்வாய என்று கேட்டால் என்னால் முடியும் என்று கூறி அந்த இடத்தில் பொறுப்பு ஏற்பான் சாள்ஸ்.வேவை பொருள் நகர்வை ஆளணி பயணத்தை ஒன்றிணைத்து ஒருங்கிணைத்து திட்டத்தின் வெற்றிவரை ஓயமாட்டான் .தாக்குதல் செயற்பாடுகளோடு தொடர்புபட்ட மற்றையோரையும் ஓயவிடமட்டான் சொன்னவர் சொன்ன பணியை செய்துதரும் வரை மென்மையாகவும் கடுமையாகவும் நின்று அவர்களை அப்பணியை செய்விக்கும் ஆற்றல் சாள்சின் தனித்துவம்.சாள்ஸ் பெற்ற வெற்றிகளும் அவனது ஆளுமை வீச்சுமாக புலனாய்வுத்துறையின் உள்ளேயே அதன் தனித்துவமாய் ஒளிர்ந்தான் அந்த ஒளியை நோக்கி ஆளணி மற்றும் பிற வளங்களும் இணைந்து கொண்டன புலனாய்வின் முதன்மை வழங்கள அனைத்தையும் தன்வசம் ஈர்த்து என்னால் முடியும் என்று கூறி வெற்றிகரமான உத்தரவாதத்தை வழங்கும் ஆற்றல் சாள்சிடம் இருந்தது. நீர்கொழும்பை சூழ கட்டமைப்பு உருவாக்கி வேவு பொருள் மற்றும் ஆளணி நகர்வு என எல்லாம் பொருந்தி வந்த வேளையிலும் கூட தளத்திலும் புலத்திலுமாக விநாயகத்தின் தோளில் அழுத்தி கொண்டிருந்தது கட்டுநாயக்க நடவடிக்கை.மன்னார் அரிப்பிற்கும்,முல்லைத்தீவு அன்புவின் பயிற்சி முகாமிற்குமாக படைவேலி தாண்டி மாறி மாறி அலைந்து திரிந்தார் 
 
 
விநாயகத்தார்.சுற்றி வளைப்புகளில் கூட சென்றோர் வீச்சாவைடைகின்ர போதும் வேலைகளை பகிர்ந்து கொள்ளாமல் தனியே தானே சுமக்கும் வினாயகத்திற்கு கடிவாளம் போட்டு நட்போடு கட்டிமேய்க்க பொருத்தமான நேரத்தில் மட்டக்கிளப்பில் இருந்து சாள்ஸ் வந்து சேர்ந்தார் .நீங்கள் ஏன் ஓடித்திரிகின்றீர்கள் நானே பார்த்து கொள்கின்றேன் அம்மான் என்று தாங்கினான் சாள்ஸ் .
 
 
சாள்சின் வேகமான திட்டமிடலும் விநாயகத்துடனான நட்புரிமையுடனான உறவும் சேர்ந்து வேலைகள் முன்னகர்ந்தன .அந்த நேரம் பார்த்து திட்டத்தின் கள பொறுப்பாளராக விநாயகம் நியமித்த செட்டி வீரசாவடைந்தபோது கூட என்னால் முடியும் அம்மான் என்று சாள்ஸ் முன்வந்தான் அவனது பொறுப்பின் கீழ் இருந்த முத்தப்பன் பொறுப்பேற்க திட்டம் தொடர்ந்தது .தலைவர் அவர்களது ஆலோசனையுடனான திட்டத்தோடு துர வீச்சுக்கான கனரக ஆயுத பயன்பாடு இரவு சுட்டிர்க்கான தந்திரோபாயம் பொருத்தமான வெடிமருந்து தெரிவுகள் என எண்கள் எண்ணங்கள் எல்லாவற்றுக்கும் செயல்வடி பொறுப்பேற்றார் சாள்ஸ் சாள்சின் கையாள்கை திறநினால் திட்டம் புதுவேகம் பெற்றது.நடவடிக்கை என்று வந்துவிட்டால் வழமையாக சொல்வது போல பொருளாதாரம் ஆவணம் தொழில நுட்பம் என எல்லா கட்டமைப்பும் எள் என்று கேட்டால் எண்ணையாக கைகொடுக்க நகர்வு வசமானது.தாக்குதல் அணி புதுமெருகு பெற்றதும் கட்டுநாயக்க உட்பட பலதளங்களில் கரும்புலி வீரர்கள் களமாடி வென்றது வரலாறு .புலனாய்வின் அடிப்படையான ரகசியம் கப்பற என புலியாய் இருப்பான் சாள்ஸ் அவன் பெற்ற வெற்றிகள் போலவே அவனது கோபமும் புகழ் பெற்றது.ரகசிய பாதுகாப்பிலோ புலனாய்வு மற்றும் படை முன்நகர்விலோ தவறுகள் விடுவோரோடு மென்மையாக நடந்துகொண்டு சமாளித்து போக நினைப்பவர்கள் சாள்சிடம் படித்துக்கொள்ள வேண்டியது ரகுத்திரம் பழகு என்பதாகும் .
 
 
 சில வேளைகளில் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டிருப்பார் அல்லது அடையலாம் காண வாய்ப்பு அங்கு இருந்திருக்கும் இந்த ரகசியங்கள் வெளியே போகாமல் இருப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பான் மிகவும் துல்லியமாக செயற்படுவான்.சமைக்கும்போது அவ்வப்போது உப்பு புளி கூடிவிடுவது போல சாள்சின் கோபமும் அவ்வப்போது கொஞ்சம் எல்லை மீறி விடுவதும் உண்டு.கரணம் இயக்க இரகசியங்கள் வெளியே போய்விட கூடாது என்பதாகும்.குறித்த திகதியில் தரப்பட வேண்டிய எதாவது ஒரு அறிக்கை தரப்பட இல்லையா தொடர்பு பட்டவர் யாரென்றும் பாராமல் முன் உள்ளவர் எவர் என்றும் நோக்காமலும் இவனது வார்த்தைகள் வெடிக்கும் கோவைகள் பறக்கும் பின்னர் இவனை சமாதனம் செய்ய பொட்டம்மான் தான் தேவைப்படுவர் .தோல்விகளை சந்திக்க மறுத்து வெற்றிகளுக்காக முயன்று முன்னகர்வது சாள்சின் குருதியில் ஊறிய இயல்பு சாதாரண நீச்சலிலோ அல்லது பந்து விளையாட்டிலோ கூட அவன் தோல்விகளை ஏற்க்க மறுத்து முயல்வான் இந்த இயல்பே அவனுக்கு பல வெற்றிகளுக்கு அடிப்படையானவை என்றாலும் நண்பர்களிடையேயும் கூட இவனது பிடிவாதம் வெளிப்பட்டு வெடித்து விடுவதும் உண்டு .
 
 
கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதற்கும் முன்கூட்டியே முடிவெடுத்து அதனை கட்டளையாக வழங்குவதுக்கும் இடையேயான தெரிவில் அவ்வப்போது சிக்கல் வரும் சாள்சிற்கு .சாள்ஸ் நல்ல அழகியல் உணர்வு கொண்டவன் பூக் கன்றுகள் வளர்பதிலும் செல்ல பிராணிகளை பராமரிப்பதிலும் ஆர்வம் கொண்டவன்.அதேபோல் இயல்பான ஆற்றலோடு முகாம்கள் வீடுகள் மற்றும் கட்டிடங்களை வடிவமைக்கும் திறமையும் பெற்றிருந்தான் .
 
 
அவனது பணிசார்ந்த இறுக்கங்கள் முன்னின்று இவற்றில் பொழுது போக்க விடாமல் வைத்திருந்த போதும் கூட கிடைக்கும்வாய்ப்புகளில் தனது அழகிய ஆர்வத்தை வெளிப்படுத்துவான்.தேர்ந்த வாசிப்பு ஆர்வத்தையும் சிறந்த எழுத்து ஆற்றலையும் கொண்டிருந்த சாள்சின் எழுத்தாக்கங்கள் எமது இணைய போராளிகளுக்கு புலனாய்வு செயற்பாட்டிலும் நிர்வாகியல் ஒழுங்கமைப்பிலும் நல்ல பாடங்களாய் அமைந்திருந்தன.எமது தேசிய தலைவர் அவர்களது ஐம்பதாவது அகவை மலரில் தலைவரது கோட்பாடு என்ற பெயரில் சாள்ஸ் எழுதிய கட்டுரையானது நினைவில் கொள்ள தக்கது .தலைவர் அவர்கள் பற்றய சாள்சின் புரிந்துணர்வின் அடிப்படையிலும் சாள்சின் காத்திரமான எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது அந்த ஆக்கம் .
 
தன்னோடு பனி புரிவோருக்கு கட்டளைகளை வழங்கும் போது குறிக்கோளை நோக்கியே மெதுவாய் வழிநடத்துவான் சாள்ஸ் .மனித உணர்வுகளுக்கு
அப்பாற்பட்டு வேறு தெரிவுகளுக்கு இடம்கொடுக்க வாய்ப்பு அளிக்காமல் கோடு போட்டதுபோல் துல்லியமாய் அமைந்திருக்கும் சாள்சின் கட்டளைகள் அவன் இன்னமும் வாழ்ந்து சாதித்திருக்க வேண்டியவன் தமிழீழத்தின் திறவுகோல்களாய் 
 
அமைந்திருக்ககூடிய படை வெற்றிகளை நோக்கிய அவனது படை புலனாய்வு செயற்பட்டு கால சிந்தனைகள் இருந்திருக்கும் அவனுக்கான அறிவும் ஆற்றலும் பட்டறிவும் அவனிடம் இருந்தது.சாள்ஸ் ஒரு இளம் செயற்பாட்டு கள வீரனாக கொழும்பில் நின்ற காலத்தில் திட்டத்திற்கு தெரிவு செய்த கரும்புலி பிசகியபோது தானே கரும்புலியாக செல்லும் தயார் நிலையில் நின்றவன் .தனது படை முடிக்க உச்ச அற்பநிப்புக்கே தயாரான நிலையில் வெடிமருந்து வண்டியில் கரும்புலியோடு தயாராக போகையில் எதிர்பாராமல் இலக்குவர வெடிக்கவை என்ற சாள்சின் கட்டளையை புறக்கணித்து அன்று அங்கு சென்ற அந்த கரும்புலி சாள்சை எம்மிடம் திருப்பி அனுப்பிவைத்தான்.
 
இந்த வேலை தொடர்ந்து நடக்க வேண்டும் அந்தக் வார்த்தையை மெய்யாக்கி அதற்காகவே வாழ்ந்தவன் சாள்ஸ்.மாவீரனாகி அவர்களோடு கலந்துவிட்டன் இவ்வாறு புலனாய்வு துறை பொறுப்பாளர் திரு போட்டு அம்மான் அவர்கள் சாள்ஸ் பற்றி குறிப்பிட்டு இருந்தார்.
இவளவு திறமை வாய்ந்த தமிழீழ விடுதலை புலிகளுக்கே கிடைத்த வரமான சாள்ஸ் எவ்வாறு வீரச்சாவை தழுவி கொண்டான்.வீரச்சாவை தழுவி கொள்ளுவதற்கு சில நாட்களுக்கு முன்னரே இவனால் செயற்படுத்தபட்ட மாபெரும் சாதனை நிகழ்ந்திருந்தது.அதுதான் அனுராதபுர வான்படை தளத்தின் மேல் மேற்கொள்ளபட்ட மாபெரும் கரும்புலித் தாக்குதல் தலைவரின் திட்டமிடலுக்கு அமைய அதனை வழி நடத்தி செயற்படுத்தி முடித்தவனும் இந்த கேணல் சாள்ஸ் .எல்லாளன் நடவடிக்கை என்று அழைக்கபட்ட அந்த தாக்குதலில் நாயகன் சாள்ஸ் (2008 ) ஆண்டு ஜனவரி திங்கள் முதல் கிழமையில் தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டு இருந்த காலம் அந்த வேளையில் எதிரியின் தாக்குதலானது மன்னாரின் வீதிகளில் விடுதலை புலிகளை நோக்கியதாக அமைந்திருந்த காலமது .
 
விடுதலை போராளிகள் மன்னாரின் முதன்மை வீதிகளால் செல்வது பாதுக்காப்பானது அல்ல என மன்னார் பயணத்திட்டத்தை தடுத்து நிறுத்திவிட்ட மறுநாள் மலை பொழுது பரபரப்பாகும் வகையில் மன்னாரில் எதிரியின் கிளைமோர் தாக்குதலொன்று நடைபெற்று விட்டது.அந்த செய்தி எம் காதை வந்து எட்டியது மன்னாரின் முதன்மை வீதிகள் பயணிப்பதற்கு பாதுக்காப்பான வீதி அல்ல அங்கெ எதிரியின் புலனாய்வு அதிகமாக இருக்கின்றன அந்த வீதிகளால் செல்கின்ற பொழுது கவனமாக இருங்கள் என்று என்ற செய்தியினை தலைவருக்கே அனுப்பிவைத்தவன் எதனாலோ அந்த வீதியலையே பயணித்து இருக்கின்றான்.
 
ஜனவரி திங்க ஐந்தாம் நாள் (2008 ) ஆண்டு எதிரியால்மேற்கொள்ள பட்ட கிளைமோர் தாக்குதலில் சாதனை புரிந்த வரலாற்று நாயகன் கேணல் சாள்ஸ் வீரச்சாவை தழுவி கொண்டான்.படைப் புலனாய்வு பொறுப்பாளர் சாள்ஸ் வீரச்சாவை தழுவி கொண்டார்.அன்றைய நாளின் பின்னிரிவில் சாள்சின் பிரிவின் வேதனையோடு தனிமையில் இருந்தார் தலைவர் சாள்சின் வித்துடலுக்கான வீர வணக்கத்திற்கு வருமாறு அழைக்க அவனை கடைசியாக கடைசியாக அவனை கண்ட அந்த முகமே நினைவில் இருக்கட்டு என்றதும் சாதித்தவன் போய் சேர்ந்துவிட்டான்.என்று அமைந்திருந்தது தலைவரின் சுருக்கமான வார்த்தைகளின் சாராம்சம் .அதிகம் பேசாமல் தலைவர் அவர்கள் தனது சட்டைப்பையில் இருந்த ஒன்றை எடுத்து கொடுத்தார் அது நாலாக மடிக்கபட்ட கணனியில் தட்டச்சு செய்யபட்ட அறிக்கையொன்றின் தாள் .முன்று நாட்களுக்கு முன்னர் சாள்ஸ் அனுப்பி வைத்திருந்த புலனாய்வு அறிக்கை அது மன்னார் களமுனையின் பின்னணியில் சாலையை குறிவைத்து உடுருவி தாக்குதல் செய்ய எதிரியின் அணிகள் நிலையெடுத்து உள்ளமையை எடுத்து வெளிப்படுத்தி வலியுறுத்தி இருந்தது அந்த அறிக்கை 
 
.
படைப் புலனாய்வின் முதன்மை மூலத்திலிருந்து கிடைத்த ஆழமான தகவல்களை குறிப்பிட்டு தயாரிக்க பட்டிருந்த தீர்மானமாய் அமைந்திருந்த அறிக்கை அது .மன்னாருக்கான முதன்மை சாலையில் எதிரியின் தாக்குதல் நடைபெறலாம் என்ற கணிப்பை முன்கூட்டியே அறிக்கையாக கொடுத்த சாள்ஸ் அதே சாலையில் எதிரியின் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளகிவிட்டான். ஆபத்து இருப்பது தெரிந்தும் அவ்விடத்தை நோக்கி அவனை பயணிக்க வைத்த சக்தி எது.அது காலத்தின் கொடிய கரமாஅல்லது துரோகத்தின் உச்சமா என்பதை (2009 ) ஆண்டு மே திங்கள் சிங்கள அரசு போர்வெற்றி கொண்ட வேளையில்தான் புரிந்துகொள்ள முடிந்தது.விடுதலை புலிகள் அளிக்கபட்டு விட்டார்கள் தமிழ் நிலம் கைப்பற்ற பட்டு விட்டது எமக்கு வெற்றி கிடைத்து விட்டது என்று சிங்களம் கொக்கரித்துக்கொண்டு இருந்த வேளையில்.இதற்கெல்லாம் காரணமாக அமைந்தவர்கள் தமிழின துரோகிகள் தான் என்பதை அடையாளம் காட்டுவதாக கேணல் சாள்ஸ் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் படைப்பிரிவில் இருந்த விடுதலை புலி போராளி வேஷம் போட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தின் படைபுலனாய்வாலனே செவ்வி ஒன்றை வழங்கியிருந்தான்.நானே தான் கேணல் சாள்ஸ் கொல்வதற்காக கிளைமோரை பொருத்தினேன் நானேதானவரை படுகொலை செய்தேன் என்று அவன் செவ்வியளித்து இருந்தான்.
 
 
சிறிலங்கா படைப்புலனாய்வு பிரிவை சேர்ந்த தமிழன் நான் தமிழன் என்பதால் விடுதலை புலிகள் இயக்கத்தில் சேருவதற்கான தகுதி எனக்கு இருந்தது.விடுதலை புலிகள் இயக்கத்தோடு சேர்ந்து கொண்ட நான் நம்பிக்கையை வளர்ப்பதுக்காக சிறிலங்கா படையினர் மீது கூட தாக்குதல் நடத்தினேன் அப்படியாக என் மீது நம்பிக்கையை வளர்த்து கொண்டேன்.சிறிது சிறிதாக புலனாய்வு பிரிவின் துணை பொறுப்பாளராக இருந்த கேணல் சாள்ஸ் அவருக்கே மெய்பதுகாவலராக ஆனேன். காலம் நேரம் பார்த்திருந்து  அன்றைய நாள் அவருக்கான கிளைமோரை பொருத்தி படுகொலை செய்தேன் என்று அவன் பின்னாளில் செய்தி கொடுத்திருந்தான்.அத்தனை தாக்குதல்களையும் எதிரியின் குகையில் மறைந்திருந்து கூட துல்லியமாக செய்தவன் தமிழ் இனத்துக்கு உள்ளேயே மறைந்திருந்த துரோகிகளினால் துரோகத்தினால் படுகொலை செய்யபட்டான்.
 
***காட்டி கொடுப்பவன் எங்கே ,அந்த கயவனை கொண்டுவா இங்கே ,கொண்டுவா துனோடு கட்டு .அந்த கொடியவனை துண்டு துண்டாய் வெட்டு****
 
தமிழீழ மண்ணின் விடிவிற்காக விதையான இன்னுமொரு வீரனாணன் .மாவீரன் கேணல் சாள்ஸ் மக்கள் மனதில் பதிந்தான் ஜனவரி ஐந்தாம் நாள் (2008 ) ஆண்டு வீரச்சாவை தழுவி கொண்ட   கேணல் சாள்ஸ் அவர்களது வித்துடல் கிளிநொச்சியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் வைக்கபட்டது .மாவீரர் கல்லறைகள் மாற்றானின் செயர்ப்படுகளால் அளித்து ஒழிக்க பட்டாலும் மக்களின் மனங்களில் என்றுமே வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து மாவீரர்களையும் போலவே கேணல் சாள்ஸ் தமிழீழம் உள்ளவரை தமிழ் இனம் உள்ளவரை வாழ்ந்துகொண்டே இருக்கின்றான்.வாழ்ந்துகொண்டே இருப்பான் 
 
 
நன்றி
 தமிழ்நதி கார்த்திகா
கனடிய தமிழ் வானொலி 
 
 
திவுகளை  படிக்கும் உறவுகளே உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை தவறாமல் பதிவுசெய்யுங்கள்  நன்றி
 

2 comments:

  1. மறப்பேனா ?
    பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
    பாழ்பட நேர்ந்தாலும் - என்றன்
    கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
    கவலை மிகுந்தாலும் - வாழ்வு
    கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
    கீழ்நில யுற்றாலும் - மன்னர்
    தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர்
    துடைக்க மறப்பேனா ?
    நோயில் இருந்து மயங்கி வளைந்து
    நுடங்கி விழுந்தாலும் - ஓலைப்
    பாயில் நெளிந்து மரண மடைந்து
    பாடையில் ஊர்ந்தாலும் - காட்டுத்
    தீயில் அவிந்து புனலில் அழந்து
    சிதைந்து முடிந்தாலும் - என்றன்
    தாயில் இனிய தமிழ்மொழியின் துயர்
    தாங்க மறப்பேனா ?
    பட்டமளித்துப் பதவி கொடுத்தொரு
    பக்கம் இழுத்தாலும் - ஆள்வோர்
    கட்டி அணைத்தொரு முத்த மளித்துக்
    கால்கை பிடித்தாலும் - என்னைத்
    தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்
    தோழமை கொண்டாலும் - அந்த
    வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை
    வீழ்த்த மறப்பேனா ?
    பொங்கு வெறியர் சிறைமதிலுள் எனைப்
    பூட்டி வதைத்தாலும் - என்றன்
    அங்கம் பிளந்து விழுந்து துடிக்க
    அடிகள் கொடுத்தாலும் - உயிர்
    தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்
    தூள்பட நேர்ந்தாலும் - ஒரு
    செங்களம் ஆடி வருகிற புகழோடு
    சிரிக்க மறப்பேனா ?
    - காசி ஆனந்தன் –

    அவன் உயிர், என் மயிர்!
    பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேராது - என்றன்
    கட்டுடல் வளையும் பயிற்சினாலே, கைகால் தளராது!

    கடமை மிகுந்திடும், கண்ணியம் மிளிர்ந்திடும் கவலை மிகாது!
    நடுத்தெரு தன்னில் மிடுக்குடன் நடக்கும் மேல்நிலை மாறாது!
    மன்னர் தொட்டு வளர்த்த தமிழ்மகள் தன்னை துயரம் சூழாது!

    பாங்கியர் தன்னில் மயங்கி இருந்து பயப்படுவது போல் நடிப்பேன்,
    அவர் தொய்வுறும் வேளை துடித்து எழுந்து குரல்வளை கவ்விடுவேன்!
    வளைந்து நெளிந்து நுடங்கி விழுந்து வலிப்பது போல் நடிப்பேன்,
    வல்லிய பெரும்படை கடந்திடும் போது அணுகுண்டென வெடிப்பேன்

    ஓலைப் பாயில் நெளிந்து ஊர்ந்திடும் பாம்பென நான் இருப்பேன்
    என் பார்வையிலும் பெரும் விஷம் இருக்கும் பகைவனை தீ வைக்க!
    புனலில் நீந்திடும் புழுவென நானும் பொறுமையுடன் இருப்பேன்.
    பொறுமையின் முடிவில் எதிரி அரசனின் இறுதிக்கதை முடிப்பேன்!
    என்றன் தாயின் இனிய தமிழ்மகளுக்கு துயரம் சூழாது!
    சூழ நினைப்பவர் உயரம் இருப்பினும் உயிரினை பறித்திடுவேன்!

    பட்டமளித்துப் பதவி கொடுத்தால் பாங்குடன் வாங்கிடுவேன்!
    ஆள்வோர் கட்டி அணைத்தொரு முத்தமளித்தால் களிப்புடன் வாங்கிடுவேன்
    அத்தனையும் ஒரு படைக்கலமாக்கி பகைவரை வீழ்த்திடுவேன்

    என்னைத் தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர் தோழமை கொண்டதெல்லாம்
    என்னை வெட்டி மனிதனாய் மண்மிசை வீழ்த்திடும் சூழ்ச்சி என்றறிந்தால்,
    பொங்கு வெறியுடன் சிறைமதிலுள் அவனைப் பூட்டி வதைத்திடுவேன்.
    அவன் அங்கம் பிளந்து விழுந்து துடிக்க அடிகள் கொடுத்திடுவேன்.
    அவன் உயிர் என் மயிர் அதனை பிடுங்கிடுவேன்!

    - ஒரு செங்கொடி இருந்தாள் என் உயிர் எனவே செருக்குடன் நான் இருப்பேன்.
    முத்துகுமரனின் மூச்சுக் காற்றாய் நானே இருந்திடுவேன்!
    அவர் இன்னுயிர் தந்த தியாகத்தை நான் எப்போதும் செய்யேன்.
    என்னுயிர் இருப்பது பிரிவதற்கல்ல எதிரியை மாய்த்திடவே!

    - நன்றி காசி ஆனந்தன்! – உங்கள் கவிதையை நான் மாற்றி விட்டேன்!

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கு நன்றி உறவே உங்களிடம் இருந்து விமர்சனங்களை எதிர்பார்கிறேன்

    ReplyDelete

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை