வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Monday, October 31, 2011

இளம் புரட்சியாளர்களே ஒரு தடைவை படியுங்கள்.

 

உலகத்தின் ஒவ்வொரு வரலாற்றையும் மாற்றியமைத்த பெருமைமிக்க துடிப்புள்ள இளைஞ்ஞர்களே வணக்கம். ஒரு வரலாற்றுப்பாதையில் எது நடக்கக்கூடாதோ அது நடந்துவிட்டது இப்பொழுதும் தொடர்கின்றது. எமது இனம் இன்று ஒவ்வொருதிசையில் ஒற்றுமையின்றி இருப்பதற்கு முக்கியகாரணம் பழைமைவாதக்கொள்கைகளுடன்கூடிய சிந்தனையாளரகளே அவர்களின் சிந்தனைஎல்லாம் தமது சுயநல வாழ்கைக்கானதாகவே அமைந்திருக்கும் அவர்களால் எதையும் செய்யமுடியாது பதிலுக்கு எல்லாவற்றையும் விமர்சிக்கும் பண்பே அவர்களிடம் இருக்கும். எமதருமை இளைஞர்களே எதையும் மாற்றும் சக்தியுள்ளவர்கள் இளஞ்ஞர்களே. உங்களால்தான் ஒருவரலாற்றையே அமைக்கமுடியும் ஒவ்வொருயுகத்திலும் வரலாற்றை மாற்றியவர்கள் எல்லோரும் இளஞ்ஞர்களாகவே இருந்தனர். எமது தேசியத்தலைவர் பிரபாகரன் கூட ஒரு இளஞ்ஞன் ஆகவே வரலாற்றை மாற்றப்புறப்பட்டார். தமிழனை நாய் என பார்த்த சிங்களவன் புலி என பயப்படவைத்தார். எனவே வரலாற்றுச் சக்கரம் வேகமாக சுழல்கின்றது ஒரு தலைமுறையை விட்டு அடுத்த தலைமுறைக்கு இன்று போராட்டம் கைமாறுகிறது. எமதருமை தமிழ் இளஞ்ஞர்களே நீங்கள் கற்பனையைவிட்டு முதலில் உண்மை என்ன என்பதை உணர்ந்து வெளியே வரவேண்டும்.

எம்மைச்சுற்றி என்ன நடக்கிறது,நாம் என்ன செய்துகொண்டு இருக்கிறோம்

 

வரலாற்றுச்சக்கரத்தில் நம்பமுடியாத பல மாற்றங்களினை தமிழீழ தேசம் கண்டுகொண்டிருக்கிறது. தொழில்நுட்பம், இராணுவ பலம் என்பதில் உச்சத்திற்கே சென்ற இதுவரை உலகமே கண்டிராத மாபெரும் விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று மாபெரும் பின்னடைவைச்சந்தித்துள்ளது. இதிலிருந்து தமிழர்கள் மீழ்வதற்கு இன்னும்  பல ஆண்டுகள்கூட ஆகலாம். ஏனெனில் இன்று தமிழ்மக்கள்  ஒரு கற்பனையான ஒரு மாயையில் இருக்கிறார்கள் இது தவறு என்பதை அவர்களால் உணரமுடியவில்லை  ஆனால் அந்த இடைவெளியில் தமிழர்களிற்கு இன்னும் அதிக இழப்புக்கள் ஏற்படப்போகிறது. என்னதான் நாங்கள் தலையில் அடித்துக்கொண்டாலும்  முழுக்க முழுக்க வியாபார நோக்கத்தை மட்டுமே நோக்காகக்கொண்ட  பெரும்பாலான இணயத்தளங்கள் மற்றும் ஊடகங்களும் சரி இன்றய உண்மை நிலைமையை சொல்லப்போவதில்லை. இன்றய தமிழர்களின் தலைமைகள் என்று, நான்தான் நீதான் என்று முண்டியடிக்கும் கோமாளித்தலைமைகளும் சரி தமிழர்களிற்கு உண்மை நிலையை விளக்கப்போவதில்லை மாறாக மீண்டும் மீண்டும் மாயாஜால மாய வார்த்தைக்குள்ளேயே வைத்திருக்க விரும்புகின்றது. எனவே இப்போது நாம் கூறும் கருத்துக்களையோ அல்லது அவர்களின் நம்பிக்கைக்கு மாறான செய்திகளையோ அவர்கள் ஏற்கக்கூடிய மனநிலையில் இப்போது இல்லை. சரியான யதார்த்த நிலையை உணர்ந்து எம்மைச்சுற்றி என்ன நடக்கிறது நாம் என்ன செய்துகொண்டிருக்கின்றோம் என்பதை ஒருதடைவை நீங்கள் எல்லோரும் நின்று  நிதானித்துக்கொள்ள வேண்டிய நேரம் இதுதான் என்பதை சொல்லவே இதை எழுதுகின்றோன்.

Saturday, October 29, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-33

ஒரு போராட்டத்தில் தகவல் தொழினுட்பம் என்பது மிகவும் முக்கியமானது .அது இல்லாவிட்டால் எந்தவொரு தாக்குதல் திட்டத்தையும் திட்டமிட்டது போன்று திறமையாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்ள முடியாது.அதே தொடர்பாடல் பல பாதகாமான அம்சங்களையும் கொண்டிருக்கும்.அதாவது எதிர் தரப்பில் உரையாடுவதை கேட்டறிந்து கொள்ளுவதற்கான தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட நவீன காலத்தில் ஒட்டு கேடு தாக்குதலை முறியடிக்கும் நிலையம் இருக்கிறது,இதனால் ஒட்டு கேட்பதை தடுப்பதிலும் பார்க்க ,ஒட்டு கேட்பதை எதிரி புரிந்துகொள்ளாமல் இருப்பதிலையே கவனம் அதிகமாக செலுத்த படுகிறது.இதனாலே களமுனைகளில் எப்போதும் பரிபாபசைகளே பயன்படுத்த படுகின்றன,விடுதலை புலிகளின் உரையாடல்களை சிறிலங்கா படையினரும்

Friday, October 28, 2011

மீண்டும் வருவார் தலைவர் "களத்திலிருந்தும் புலத்திலிருந்தும் போராளிகள் "



பிரபாகரன் கொல்லபட்டதாக தொடர்ந்து செய்தி பரப்பும் உடகங்கள் .எட்டாம் நாள் பால் உறவும் தயாராகி விட்டன .அனால் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுவதும் விரிவாயிருக்கும் முக்கியஸ்தர்கள் ."அண்ணன் மிகவும் பத்திரமாக இருக்கார் "அவருக்கு பாதுகாப்பாக முக்கிய தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள்.விரைவிலையே அண்ணனும் வீர உரையை உலகம் கேட்க்கும்.என உறுதியாக சொல்லுகிறார்கள்.மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் இருபதாயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் பிரபாகரனின் சமகால தளபதிகள் என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புக்களையும் ,ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு எம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள் அந்த பிரதிநிதிகள்.

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-32

மன்னாரை முழுமையாக ஆக்கிரமிப்பதை இலக்காக கொண்டிருந்த சிறிலங்கா படையினரின் முயற்ச்சியை தடுத்து நிறுத்தும் வகையில் விடுதலைப்புலிகள் மன்னாரில் பல வீரம் செறிந்த தாக்குதலை இராணுவத்தினர் மீது நடத்தி தக்க பதிலடி கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்,இதில் படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டு இருந்தன ,குறிப்பாக மன்னார் பாலமோட்டையில் படைடினர் முன்னேறுவதற்கு தொடர்ச்சியாக எடுத்த பல நடவடிக்கைகள் போராளிகளால் பலத்த இழப்புக்கள் ஏற்படுத்த பட்டு முறியடிக்க பட்டன ,இதன்போது பல வெற்றிகரமாக தாக்குதல்கள் விடுதலைபுலிகளால் நடத்த பட்டன ,இதனால் ,கடும் இழப்புக்களை சிறிலங்கா படையினர் இக்களமுனையில் சந்தித்து கொண்டிருந்தனர்,எனினும் இழப்புக்களையும் பொருட்படுத்தாது அவர்கள் மேலதிக படையினரை குவித்து அங்குலம் அங்குலமாகத்தான் நகர்ந்து நிலா ஆக்கிரமிப்பை செய்துகொண்டு இருந்தார்கள் ,அடம்பன் பகுதியை தனது நேரடி கட்டுபாட்டின் கீழ் கேணல் பானு

Thursday, October 27, 2011

கண்டேன் பிரபாகரனை

சீமான் - முள்வேலிக்குள் முன்று லட்சம் தமிழர்கள் பற்றி பேசும் போது  கூடியிருப்போரை    கலங்கியல வைக்கிறார்  பிரபாகரன் மீண்டும் வருவார் என்று அடித்து  சொல்லி மிரளவைக்கிறார் .என்ன பேசினாலும் எது கேட்டலும் பட பட படாது பொறிதான்,மதுரை தூத்துக்குடியில் முழங்கிவிட்டு திருப்பூர் ஆரவாரத்திற்கு தயாகிகொண்டு   இருக்கிறார் ,சீமானின் நாம் தமிழர் இயக்கம் அடுத்த மே மதம் மாநில மாநாட்டை  நடத்துவதர்க்கான முனைப்பில் இருக்கிறது

"ஈழத்தின் இன்றைய நிலவரங்கள் அறிய சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சீமானை சந்தித்தேன் "

"கொடூரமாக படுகொலைகள் நடந்திருப்பதற்க்கான"புகைப்பட "சலனப்பட "ஆதாரங்கள் இப்போது வெளியே வந்துகொண்டு இருக்கின்றன இது குறிந்து இந்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்கிறாரே முதல்வர்" ?

முள்ளிவாய்க்கால் ஒரு தோல்வியல்ல நாம் உறுதியுடன் இருக்கும் வரை

 ஐக்கிய மலையாக தமிழர்கள் கட்சி ,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி ,உட்பட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றாக இணைந்து ,சுகந்திய ,சுயநிர்ணய ,இறையன்மையுள்ள தனித் தமிழீழத்திற்கு உரிய ஆணையை முழுமையான சுகந்திரமான ஜனநாயக வாக்கெடுப்பின் முலம் (1976 ) அனைத்து தமிழர்களிடமும் இருந்து பெற்றிருந்தனர் ,இது தமிழர் ஆணைகொடுத்த வட்டுகோட்டை தீர்மானமாகும் ,இதுவே வடக்கு கிழக்கு தமிழர்கள் இணைந்து கொடுத்த தீர்மானம் ஆகும்,இது ஒரு ஜனநாயக ஆணையாகும் ,இதுவே அனைத்து தமிழர்களுக்கும் சுகந்திரமாக வாக்களித்த கடைசி தடவையாகும் ,(1985 ) முன் வைக்கபட்ட திம்பு தீர்மானம் வட்டுகோட்டை தீர்மானத்தின் ஒரு இளகிய வடிவம் ,அங்கு சுகந்திரம் இறையாண்மை போன்றவை மறைக்கபட்டு ஒரு தமிழ் தேசியம் ,தாய் நிலம் சுயநிர்ணைய உரிமை என்பதோடு நின்றுவிட்டது ,இந்த திம்பு தீர்மானம் ஆனது அனைத்து விடுதலை அமைப்புக்களாலும் கூட்டாக எடுக்கபட்ட முடிவு ,இங்கு மக்கள் ஆணை வழங்கப்படவில்லை ,ஈழத்தமிழனின் விடுதலையுரிமையை தனித் தமிழீழத்தை மறுத்து வரும் இந்தியாவே இந்த தீர்வு திட்டத்தின் பின்னணியில் இயங்கியது,( 1987 ) ன் இந்திய சிறிலங்கா ஒப்பந்தமானதும் தமிழர் தாய்நிலம் என்றதோடு மட்டுமே நின்றது ,

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-31


விடுதலை புலிகளின் நம்பிக்கைக்கும் விசுவாதத்திர்க்கும் காந்தி   மீதுதான் பொட்டு அம்மானுக்கு சந்தேகம் வலுத்திருந்தது ,தலைவரின் அன்றைய வருகையை அறிந்திருந்தவர் அவர்தான் ,எனவே உடனடியாக காந்தி புலனாய்வு துறையினரால் கையது செய்யபட்டு ,சிசாரனைக்கு உட்படுத்த படுகிறார்.இதன்போது என்ன நடந்தது என்பது வெளியில் யாருக்கும் தெரியவரவில்லை ,எனினும் காந்தியின் துரோகத்தனம் குறித்து செய்திகள் கசிய தொடக்கி ,போராளிகள் பொதுமக்கள் மத்தியில் பரவலாக அடிபட தொடங்குகிறது,இதுவரை நடந்த வான் மற்றும் கிளைமோர் தாக்குதலுக்கான காட்டிகொடுப்புக்களை மேற்கொண்டது காந்திதானம் என்று கதை பரவுகிறது ,காந்தி அம்மான் சிறிலங்காவால் விலைக்கு வாங்கபட்டிருக்கலாம் என்ற உணர்வு எல்லோர் மனங்களிலும் தோன்றுகிறது,காந்தி புலனாய்வு துறையினரால் விசாரணைக்கு உட்படுத்த பட்டு சிறைக்கைதி ஆக்கபடுகிறார் ,இவரது வீடு முகாம்கள் தொடர்பு வைத்திருந்தவர்கள் ,

Wednesday, October 26, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-30

சிறிலங்கா விமான தளங்களில் இருந்து கிபீர் மிக போன்ற போர் விமானங்கள் மேல் எழும்பும்போது விடுதலை புலிகளுக்கு தகவல் கிடைத்துவிடும் ,அவ்வாறு விமானங்கள் புறப்பட்டு விட்டால் விடுதலைபுலிகளின் முகாம்களுக்கு விழிப்புநிலை ( அலேட் )வழங்கபட்டு விடும் குறிப்பாக பொறுப்பாளர்கள் உள்ள முகாமில் அலேட் அறிவிக்க பட்டால் அவர்கள் பாதுகாப்பான பதுங்கு குழிக்குள் செல்வார்கள் ,அல்லது முகாமினை விட்டு வெளியே சென்றுவிடுவார்கள்,இவ்வாருதால் போராளிகளும் முகாமை விட்டு வெளியே சென்று அல்லது பதுங்கு குழிக்குள் பாதுகாப்பிற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுவார்கள் ,இது பின்பு பொதுமக்களுக்கும் தெரியவந்து விட்டது ,அதாவது அன்று விடுதலை புலிகளின் முதன்மை நிறுவனங்கள் மீது எதிரி தாக்குதல் நடத்துவான் என்ற அச்சத்தால் அங்கு வேலைசெய்யும் பணியாளர்கள் கப்பற படவேண்டும் என்பதற்காக அலேட் கிடைத்தவுடன் அந்த நிறுவனத்தில் பொதுவாக எல்லோருக்கும் கிடைக்ககூடிய வகையில்

Tuesday, October 25, 2011

மாவீரர் நாள் கையேடு..2011

மாவீரர் நாள் கையேடு


!***இதய கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள் ***!
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை ,அவர்கள் காலத்தை உருவாகிப்பவர்கள் ...--தழிழீழ தேசிய தலைவர்

எமது வீர விடுதலை வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதபட்டு இருக்கிறது...இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல ..இந்த வீரர்களின் சாவு எமது சரித்திரத்தையே இயக்கும் உந்துசக்தியாக ,எமது போராட்டத்தின் உயிர் மூச்சாக ,எமது போரளிகளுன் உறுதிக்கு உத்வேகம் அளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டன .இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாதவர்கள் சுகந்திரச்சிற்பிகள் எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டு சென்ற வீர மறவர்கள் .எமது இனத்துன் சுகந்திரத்துக்காக கவுரவத்துக்காக ,பாதுகப்பிற்காக தமது இன்னுயிரை ஈர்ந்துள்ள இந்த மகத்தான தற்கொடையளர்கள் ( தியாகிகள் )காலம் காலமாக எமது இதய கோவிலில் பூசிக்கபடவேண்டியவர்கள்

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-29

கார்த்திகை மாதம் என்றால் வன்னி எங்கும் மாவீரர் நாள் ஏற்பாடுகள் தொடங்கிவிடும் .மாவீரர் நாளின் முக்கிய விடையமாக தமிழீழ விடுதலைபுலிகளின் கொள்கை விளக்க உரை இடம்பெறும் .தமிழ்ழீழ தேசிய தலைவரின் உரைக்காக தமிழ் மக்கள் மட்டுமல்ல உலகெங்கும் அவர் சொல்ல போகின்ற செய்தியை கேட்பதற்கு காத்திருப்புக்கள் நிகழும்,தலைவரின் உரை ஒளிப்பதிவு செய்யும் நிகழ்வு இரகசியமான இடத்திலே நடைபெறும் .அது எந்த இடம் என்று தெரிந்துகொள்ள முடியாத படையினர் மாவீரர் நாளுக்கு முதல் நாள் தொடக்கி கடுமையான வான் மற்றும் எறிகணை தாக்குதல்களை நடத்த தொடங்கிவிடுவார்கள்,தொடர்ச்சியான தீவிரமான தாக்குதல்களாக இவை நடைபெறும்.

Monday, October 24, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-28

புலிகளின் ஒவ்வொரு தாக்குதலுக்கு பின்பும் ,சிறிலங்கா படையினரின் தாக்குதல் விமானங்கள் நாடு இரவு நேரங்களில் கூட வன்னி வந்து விடுதலை புலிகளின் விமானபடைத்தளம் இருப்பதாக கருதிய இரணைமடு பகுதி மீது வெளிச்சக்குண்டுகளை வீசி ஒளி பாச்சிவிட்டு தாக்குதலை நடத்திவிட்டு சென்றன.கொழும்பில் அமைச்சர்கள் இனிமேல் வான்புலிகள் வாலாட்ட முடியாது மேலேறினால் கிளிரங்க முடியாது என எச்சரித்து கொண்டிருந்தனர்.ஆனாலும் வான்படையினரின் தாக்குதலுக்கு மத்தியிலும் அமைச்சர்களின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் திருகோணமலை யாழ்ப்பாணம் மன்னார் ,கொழும்பு என வான் புலிகளின் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடந்துகொண்டுதான் இருந்தன .எத்தனை முறை தாக்குதல் நடத்தியும் வான்புலிகள் மேலெழுந்து வருவது சிங்கள தரப்பிற்கு மேலும் அச்சத்தை அதிகரித்தது.எங்கிருந்து வருகிறார்கள் ?

Sunday, October 23, 2011

சமாதனம் என்னும் பொய்மானின் பின்னே போனது போதுமட சாமி

நெருப்புச்சுடர்  விளங்கி ஒளிபரவ ..
நிமிர்ந்திருந்த  பரம்பரையொன்று....
இன்று இருட்குகைக்குள் இடியுண்டு போனதா ?...
புலியாய் உறுமிய தலைமுறையொன்று ..
புதைமணலில்  விழுந்து .....
முக்குவரை முடுண்டு ....
முச்சு திணறுகிறதா இப்போது  ?...
ஆலவட்டகாரரின் பின்னே அள்ளுண்டு ..
கவரி வீசும் காற்றில் மெய்மறந்து ..

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-27

விடுதலை புலிகளின் வான் படைப் பலத்தின் அறிமுகத்துடன் வான் தாக்குதல்கள் தொடர்கின்றது .தமது இரண்டாவது தாக்குதலை சரியாக ஒரு மாதத்தில் அதாவது ( 24-04-2007 ) அன்று பலாலி விமான தளத்தின் மீது வான் புலிகள் வெற்றிகரமாக நடத்தினார்கள்.இதன் பின் சிறிலங்காவின் பொருளாதார இராணுவ முக்கிய இலக்குகள் வான் புலிகளின் வேட்டைக் களமாக மாறியது .வான் புலிகள் பொருளாதார இராணுவ இலக்குகள் மீது மிக துல்லியமாக தாக்குதலை நடத்துவது அதிகரித்து சென்றது .சிறிலங்காவையும் அதற்க்கு உதவும் நாடுகளையும் கவலை கொள்ள வைத்தன. இந்நிலையில்தான் சிறிலங்கவிர்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் இன்னுரு தாக்குதல் நடைபெறுகிறது.வான் புலிகள் ஒத்துழைப்புடன் கரும்புலிகள் அணி நடத்திய மிகவும் துணிச்சல் மிக்க வெற்றிகரமான இணைப்புதக்குதல் இது.

Saturday, October 22, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-26

விடுதலை போராட்ட வரலாற்றில் முக்கிய  பாச்சல்   ஒன்று அன்றுதான் நிகழ்ந்தது .இது சாத்தியமாகும ?சாதாரண இயக்கங்களால் மட்டுமல்ல பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் செயற்பட்ட உலகின் பல இயக்கங்களாலும் சத்தியமாகத ஒன்றை எந்தவொரு நாட்டினதும் ஆதரவு இன்றி தமிழ் மக்களின் பலத்தில் மட்டும் நிற்கின்ற விடுதலை புலிகள் சாதித்து விடுவார்களா கேள்வி எழுப்பிகொண்டிருந்த நேரத்தில்தான் அந்த பேரதிர்வு நிகழ்ந்தது.வரலாற்றில் எந்தவொரு விடுதலை இயக்கமும் சாதிக்காத ஒரு சாதனைய அன்று விடுதலை புலிகள் சாதித்து இருந்தனர்.அதுதான் கட்டுநாயக்க மீதான விடுதலை புலிகளின் முதல் வான்வெளி தாக்குதல் .சரியாக

Friday, October 21, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-25

யாழ் கோட்டை முற்றுகை காலத்தில் கோட்டையில் இருந்த படையினர் அக்கோட்டைய கைவிட்டு ஓடுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பசீலன் (200 ) இந்த பசீலன் வெடித்து ஏற்படுத்தும் சேதத்தை விட அதனால் எழும் ஒலியின் அதிர்வுனால் இதயத்துடிப்பு நின்று பலியான படையினரின் எண்ணிக்கை அதிகம் .அத்துடன் செவிப்பறை வெடித்து காத்து கேளாத நிலைக்குள்ளான படையினரும் உண்டு ,கோட்டை முற்றுகையின்போது ,தங்கள் தாக்குதலை நிறுத்துகிறோம் ,நீங்கள் பசீலன் அடிப்பதை நிறுத்துங்கள் என்று படையினர் வோக்கி டாக்கியில் கெஞ்சி கேட்கின்ற அளவிற்கு அதன் தாக்கம் இருந்தது,ஆரம்ப காலத்தில் விடுதலைபுலிகளால் வடிவமைக்கபட்ட முதலாவது பாரிய எறிகணை பசீலனாகத்தான் இருந்தது.

பிடல் காஸ்ரோவுடன் ஒரு பேட்டி



கேள்வி :- உலகம் முழுவதும் புரட்சியையும் கம்யுனிச்தையும் ஏற்றுமதி செய்வதே உங்கள் இலட்சியம் என்று ஜனாதிபதி ரேகன் உறுதியாக பேசிவருகிறாரே??

பதில் :-புரட்சி என்பது ஏற்றுமதி செய்யத்தக்க ஒரு பண்டமென்று நான் கருதவில்லை அதே சமையத்தில் புரட்சிகர கியூபா பாலஸ்தீன் அமரிக்க புரட்சிகர போராளிகளுக்குதான் ஆக்கபுர்வமான ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறது என்பதையும் நான் மறைக்க விரும்பவில்லை ,சொமோச்லாவின் ஆட்சியின் கிழ நிக்கிரகுவாவை எடுத்துகொண்டால் அங்கு ஆயுதபோராட்டத்தை தவிர சகலவிதமான ஜனநாயக நடவடிக்கைகளும் பகிஸ்தரிப்புக்களும் ஈவிரக்கமற்ற பயங்கரவாதத்தின் முலம் அடக்கி ஒதுக்கபட்டது,சொமொச்லாவிர்க்கு எதிரான போராட்டத்தில் கியூபா மட்டும்தான் உதவி செய்தது என்பதில்லை.

Thursday, October 20, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-24

அப்பைய அண்ணா விடுதலைபுலிகளின் ஆரம்பகால உறுப்பினர் இவர் வரலாறு குறித்து விடுதலைபுலிகளின் பார்வை இவ்வாறு இருக்கிறது.(1982 ) ம் ஆண்டு காலபகுதியில் பொன்னானை பாலத்தில் வைத்து சிறிலங்கா படையினர் வாகனம் ஒன்றின்மீது போராளிகளால் கண்ணிவெடி தாக்குதல் ஒன்று நடத்தபட்டது.அனால் தாக்குதலுக்கு உள்ளன எதிரி வாகனம் மயிரிழையில் உயிர் தப்பியது.தப்பித்துக்கொண்ட எதிரிகள் போராளிகளை துரத்தியபடி அவ்விடத்தை சுழவும் சல்லடை போட்டனர்.தாக்குதலுக்காக பயன்படுத்தபட்ட மின்பிறப்பாக்கி எதிரியின் கையில் சிக்கிவிட்டது.

Wednesday, October 19, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-23


கடற்புலிகளின் தாக்குதல்கள் மேற்கு கடலில் அதிகரித்து சென்ற நிலையில் மன்னாரில் ஈருடக படையணியின் இன்னொரு தாக்குதலுக்கான வேவு தகவல்கள் திரட்டபட்டுகொண்டு இருந்தன.மேற்கு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் பெருமளவில் கட்டுபடுத்த பட்டிருந்தது .குறிப்பாக கிழக்கு கடற்பரப்பை விட மேற்கு கடற்பகுதியில் கடற்புலிகளை பலமாக வைத்திருந்ததன் காரணம் இருந்தது .மேற்கு கடற்பரப்பின் உடாகத்தான் விடுதலை புலிகளுக்கு தேவையான பொருட்கள் கொண்டுவந்து சேர்க்கபட்டுகொண்டு இருந்தன.

Tuesday, October 18, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-22

லீமா வீரச்சாவாம் என்ற செய்தி போராளிகளாலும் மக்களாலும் ஏற்றுகொள்ள முடியாத உண்மையாகிறது.செய்திய கேள்விபட்டு மக்கள் கண்ணீர் வடித்தார்கள்.ஊடகங்களிலும் இணையதளங்களிலும் இந்த செய்தி பின்னர் வெளியாகி உலகெங்கும் இருந்து அவரது இழப்பின் வேதனையை பகிர்ந்து கொண்டிருந்தனர் தமிழ் மக்கள்.லீமாவின் இழப்பினால் விடுதலை புலிகள் மட்டுமல்ல ஆறாத்துயரில் அன்று வன்னி மக்களும் ஆழ்ந்தார்கள்.எங்கும் சோக கீதங்கள் இசைக்கவிட பட்டன.புலிகளின் குரல் வானொலி சோகத்தை கொட்டியது.வீதிகள் எங்கும் சிகப்பு மஞ்சள் கொடிகள் கட்டபட்டு லீமா அவர்களின் படங்கள் வைக்கபட்டு வணக்க நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகி இருந்தன.விடுதலை புலிகளின் கட்டமைப்பிற்குள் அமைவாக லீமா அவர்களின் வித்துடல் தியாகசீலம் கொண்டுசெல்ல பட்டு அங்கு உடல் துய்மையக்கபட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டு தமிழீழ தேசிய தலைவரின் பார்வைக்காக வித்துடல் செல்கிறது.

Monday, October 17, 2011

ஈழம் முதலாவது கொரில்லாத் தாக்குதல்

 



தங்கதுரை, குட்டிமணி, சின்னஜோதி உள்ளிட்டவர்களுடன் பிரபாகரனும் இந்தியா தப்பி வந்தார். ஆரம்பத்தில் பிரபாகரன் வேதாரண்யத்தில் தங்கினார். யாருடனும் அதிகம் பழக்கமில்லை. செலவுக்குக்கூட பணம் இல்லை. பின்னர் சென்னைக்கு வந்து கோடம்பாக்கம் பகுதியில் தங்கியிருந்த தங்கதுரை உள்ளிட்டோருடன் தங்கினார். அப்போது ஜோதி இந்தக் குழுவிலிருந்து விலகிவிட்டார்.

பிரபாகரனுக்கு சென்னையில் இருப்புக் கொள்ளவில்லை. அவர் இலங்கை செல்ல விரும்பினார். தங்கதுரை உள்ளிட்டோர், "இலங்கைக்கு இப்போது செல்வதோ - குழுவாக வேலை செய்வதோ தற்சமயம் சாத்தியமில்லை. அதற்கான நேரம் வரவில்லை' என்று தடுத்தனர்.

குட்டிமணியைத் தஞ்சவூரில் கைது செய்து (1973 நவம்பர் 18) இலங்கை அரசிடம் தமிழக அதிகாரிகள் ஒப்படைத்த பிறகும் தலைமறைவு வாழ்க்கையை இந்தியாவில் தொடர்வது சாத்தியமில்லை என உணர்ந்த பிரபாகரன் சென்னையிலிருந்து கிளம்ப முடிவு செய்தார். அவருக்கு இன்னொரு குழுவைச் சேர்ந்த தனபாலசிங்கம் என்கிற செட்டியைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-21

தமிழ் மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வாக விடுதலை புலிகளின் சிறப்பு தளபதியான பிரிக்கேடியர் பால்ராஜ் அவர்களின் வீரச்சாவு நிகழ்வு.அன்று வன்னியில் நிகழ்ந்தது,.உண்மையில் போராளிகள் தமிழ் மக்களின் மனங்களில் மட்டுமல்ல சிங்கள படைகளினதும் படைத்தளபதிகளினதும் ஆட்சியாளர்களினதும் மனங்களில் எல்லாம் நிறைந்து இருந்தவர் தளபதி பால்ராஜ்.அதாவது எதிரிக்கு எதிரியாகவும் மக்களுக்கு மக்களாகவும் போராளிகளுக்கு போராளியாகவும் பொறுப்பாளர்களுக்கு தளபதியாகவும் அண்ணனுக்கு தம்பியாகவும் தமிழீழ விடுதலை புலிகளுக்கு வலது கரமாகவும் திகழ்ந்தவர் எங்கள் பால்ராஜ் அண்ணா.
எல்லோராலும் செல்லமாக லீமா என்று அழைக்கப்படும் பால்ராஜ் அண்ணாவின் இழப்பு செய்தி (20-05-2007 )அன்று அலம்பில் பகுதியில் நடந்தேறுகிறது பால்ராஜ் அண்ணாவின் விடுதலை போராட்ட வரலாறு சொல்ல முடியாது, எழுதமுடியாது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது

Sunday, October 16, 2011

பிரபாகரன் போராளியானது ஏன்?

 
       ஈழத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட போராளிக்குழுக்கள் ஆயுதமேந்தி, ஈழத்தை அடைவதற்காகப் போராடினர் என்பதும், அதில் தமிழீழ விடுதலைப் புலிகள், (LTTE) தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், (PLOTE) தமிழீழ விடுதலை இயக்கம், (TELO) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, (EPRLF) ஈழப்புரட்சிகர இயக்கத்தினர் (EROS) என ஐந்து அமைப்புகள் முன்னணியில் இருந்தனவென்பதும், கொள்கை, கோட்பாடுகள் குறித்தும், இவ்வியக்கங்கள் அரசின் மீது தொடுத்தத் தாக்குதல் குறித்தும் அவர்களது வெளியீடுகள் மூலம் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றன என்றும் முந்தைய பல பகுதிகளில் பார்த்தோம்.

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-20

விடுதலை புலிகளின் கடற்படை தளங்கள் வடமராட்சி கிழக்கு பகுதியிலையே அதிகளவில் செயற்பட்டு கொண்டிருந்தன.வடமராட்சி கிழக்கில் சுண்டிக்குளம் வெற்றிலைக்கேணி ,கட்டைக்காடு கோவில் ,தாளையடி ,போன்ற பகுதிகளில் கடற்புலித்தளங்கள் செயற்பட்டு கொண்டிருந்தன.இந்த பகுதிகள் மீது வேவு விமானங்கள் கண்காணிப்பை மேற்கொண்ட சிறிலங்கா,காலி துறைமுக தாக்குதலின் பின் இத் தளங்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது.அத்துடன் முல்லைத்தீவில் இயங்கிகொண்டிருந்த சாலை கடற்புலிகளின் தளங்கள் மீது தனது தாக்குதலை கடுமையாக நடத்தியிருந்தன.இதன்போது கடற்புலிகளின் கலங்கள் சிலவும் ,களஞ்சியங்கள் மற்றும் படகுகளும் சேதமடைந்தன.வடமராட்சி கிழக்கில் கடற்புலிகளின் எரிபொருள் களஞ்சியம் ஒன்றும் விமான தாக்குதலுக்கு இலக்காகி தீப்பற்றி எரிந்தது.
படையினரின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு மத்தியிலும் கடற்புலிகளின் பலம் பெருகிக்கொண்டுதான் இருந்தது.புதிதாக இணைந்த போராளிகள் சிலர் பயிற்சிகளை நிறைவுசெய்து இருந்தனர்.

Saturday, October 15, 2011

தலைவர் பிரபாகரனின் "போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்"

  
 




இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவெடுத்த வேளையில் வெற்றி, தோல்வி என்ற பிரச்சனை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர்கொள்ளும் உறுதியும், துணிவும் எம்மிடம் உண்டா என்பது பற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைகளையும் விட்டுக் கொடுக்க முடியாது.

-தமிழீழ தேசியத் தலைவர்

மேதகு.வே.பிரபாகரன் அவர்கள

இந்திய - புலிகள் போர்

‘தமிழீழ விடுதலை’ என்று சொல்லிக் கொண்டு ஆயுதம் தூக்கிப் போராடப் புறப்பட்ட தமிழ்க்குழுக்கள் எல்லாம் தமிழீழ மக்களுக்குத் துரோகம் செய்து. ‘தமிழீழவிடுதலை’ என்ற இலட்சியத்தைக் கைவிட்டு இந்திய, சிறீலங்கா அரசுகளின் கைக்கூலிகளாக மாறிச் செயற்படத் தொடங்கினர்.

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-19

யாழ்ப்பாணத்தில் நிலைமை இவ்வாறு இருக்க கிழக்கிலும் இவ்வாறன நிலைமையே ஏற்பாடு இருந்தது.அங்கும் போராளிகள் இராணுவத்திடம் பிடிபடும் போது அவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தி உயிரை அற்பணிக்கும் வகையில் குண்டு பொருத்திய ஜாக்கேற்றுடன் செயற்பட தொடங்கியிருந்தார்கள்.இராணுவ கட்டுபட்டு பகுதியில் நிலைமை இவ்வாறு இருக்க வன்னியில் புதிய போராளிகளின் அணிகள் பெருகிக்கொண்டு இருந்தன.போராளிகளாக பலர் தாமாகவும் ,பெற்றோர்களாலும் ஒப்படைக்க பட்டுக்கொண்டு இருந்தனர்.அதிகமானவர்கள் வந்து இணைந்ததால் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு பயிற்ச்சி வழங்குவதற்கு போதியளவு பயிற்ச்சி ஆசிரியர்கள் இல்லாமை ஒரு பெரும் பிரச்சனையாக மாறியிருந்தது.

Friday, October 14, 2011

மனித உரிமை' என்பதும் வல்லரசுகளின் நலன் பேணும் ஆயுதம்

 

மேலை நாடுகளிலும் சரி இந்தியாவிலும் சரி சீன பொருளாதார நிபுணத்துவம் ஆழ ஊடுருவி விட்டதாக கருதப்படுகிறது. உதாரணமாக 885 பில்லியன் டொலர் பெறுமதி மிக்க அமெரிக்க திறைசேரி தாள்களை சீன அரச நிறுவனங்கள் கொள்வனவு செய்து வைத்துள்ளன.

தற்போதய பொருளாதார நிலையில் அமெரிக்க அரசு இதனை மீளப்பெற்று கொள்ளும் வாயப்புகள் மிக அரிதாகவே காணப்படுகிறன என்றும் கூறப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள்

புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் 'தமிழீழ விடுதலைப் புலிகள்" என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். ~புதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.

Thursday, October 13, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-18

ரணில் அரசுடன் மேற்கொள்ளபட்ட சமாதன உடன்படிக்கையின் ஏற்பட்ட அமைதி காலத்தில் லெப் கேணல் தியாகராஜன் யாழ்ப்பாணத்தில் நின்று செயல்பட்டவர்.அரசியல் செயல்திட்டங்களுடன் தனது வேவு பணிகளையும் அங்கு திறம்பட செய்துகொண்டிருந்தார்.குறிப்பாக விடுதலை போராட்டத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் சிறிலங்கா துணை இராணுவ குழுக்களின் நடவடிக்கைகள் குறித்து இவர் தனது வேவு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தார்.தனது நடவடிக்கைகளுக்காக இவர் அதிகமாக கரவெட்டி நெல்லியடி பகுதிகளில்தான் நிலைகொண்டிருந்து செயற்பட்டு கொண்டிருந்தார்.இப் பிரதேசத்தின் பகுதிகள் இவருக்கு அத்துபடியாக தெரிந்திருந்தன.பின்னர் வன்னி திரும்பியிருந்த தியாகராஜன்,போர் இடம்பெர்ருகொண்டிருந்த காலப்பகுதியில் மீண்டும் படையினர் மீது தாக்குதல் நடவடிக்கைகளுக்ககவும் புலனாய்வு செயல்படுகளுக்காகவும் யாழில் தனது அணியுடன் சென்று தரையிறன்கியிருந்தார்.

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-17

இவ்வாறன பயிற்சிகளுக்கு நடுவே ஆழ உடுருவி தாக்குதல் நடத்தும் நீண்ட துர தாக்குதல் அணிகள் உருவாகின்றன.இவர்களுக்கான பயிற்ச்சிகள் பெரும் காடுகளில் நடைபெற்று கொண்டிருந்தன.இவர்கள் நீண்ட நாட்கள் காட்டுவழியாக எதிரியின் முகாம்கள் அருவிகள் ஆறுகள் என்பவற்றை கடந்து சென்று எதிரியின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் உருப்பெற்று இருந்தார்கள்.இவ்வாறு விடுதலை புலிகளின் படைகட்டுமானங்களில் ஏற்பட்ட பல வளர்ச்சிகளை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.இதில் போராளிகளின் பயிற்ச்சி தளங்கள் தொடர்பாக தொடர்ந்து வரும் தொடர்களில் தருகிறேன்.

Wednesday, October 12, 2011

பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் பற்றிய சில சம்பவங்கள்


2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.

பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.

1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது.

அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் சில தவறுகளால் எதிர்பாராத விதமாக அத்தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. அத்தாக்குதலுக்காக கிட்டத்தட்ட 30 பேர் கொண்ட பெரிய அணி ஊடுருவியிருந்தது. அச்சண்டையில் 13 பேர் வீரச்சாவடைய மிகுதிப்பேர் தளம் திரும்பினர்.

தேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-o4 சிறப்பு பார்வை



1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண்ணிலேயே நிலைகொண்டிருந்தார்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி பிரபாகரன் அவர்களுக்கு அறிவித்து அவரது ஒப்புதலையும் எப்படியாவது பெற்றுவிடுவதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி திட்டம் தீட்டினார். அந்த ஒப்பந்தம் பற்றி திரு.பிரபாகரனுடன் நேரடியாகப் பேசுவதற்காக திரு.பிரபாகரனை புதுடில்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இந்தியாவின் உதவிப் பொருட்களை யாழ்ப்பாணம் கொண்டு சென்ற ஹர்தீப் பூரி, கப்டன் குப்தா என்ற இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக இந்த அழைப்பு திரு.பிரபாகரனுக்கு விடுக்கப்பட்டிருந்தது

மாவீரர் நாளை கூறுபோட்டு விற்காதீர்கள்.. அன்போடும் எச்சரிக்கையோடும்


 மாவீரர் நாளை கூறுபோட்டு விற்காதீர்கள்   லண்டனில் வாழும் தமிழ் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களே .உங்கள் பெயரும் புகழுக்காக  அந்த உன்னத  காவல் தெய்வங்களின் தியாகங்களை .கேவலபடுத்ததீர்கள்   உங்கள் பெயர் புகழுக்கு வேறு எதாவது அரசியல் நாடகம் ஆடுங்கள் .அதை விட்டுவிட்டு எங்கள் காவல் தெய்வங்களின் தியாகங்களில் உங்கள் அரசியல் விளையாட்டை காட்டாதீர்கள்  .நீங்கள் அனைவரும் ஆடுவதன் நோக்கம் புலிகள் அழிந்து விட்டார்கள் என்ற நினைப்பில்தான் .

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-16



மன்னார் உயிலங்குளம் சோதனைநிலைய கண்காணிப்பில் இருந்து சர்வதேச செஞ்சிலுவை குழு விலகிகொண்ட அதே வேளை,மறுபுறம் வவுனியா ஓமந்தை சோதனை நிலையம் உடனா அரச சார்பற்ற நிறுவனங்கள் ,அரச நிறுவனங்களின் போக்குவரத்து நடைபெற்று கொண்டிருந்ததது.எனினும் வன்னி மீதான பொருளாதார தடையினை சிறிலங்கா அரசு மேலும் இருக்குகிறது. பொருளாதார தடைய இறுக்கியபடி வன்னி மீது பரவாலக வான்வழி தாக்குதல்கள் தீவிரபடுத்த படுகிறது.மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தபட்ட அதே வேளை விடுதலை புலிகளின் வான்படையினரை அளிக்கும் நோக்கில் இரணைமடு விமானதளம் மீதும் தாக்குதல் நடத்தபடுகிறது.

Tuesday, October 11, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-15



இரணமடு விமானதளம் பிரதானமாக இருக்கையில் ஏனைய சில இடங்களில் சிறு சிறு விமான ஓடுபாதைகள் விடுதலைபுலிகளால் அமைக்கப்பட்டு வந்தது.குறைந்த துரத்தில் பரப்பில் ஈடுபடவும் தாக்குதலின் பொது அவசர தரையிரக்கங்களுக்ககவும் மற்றும் எதிரியை திசை திருப்புவதுக்காகவும் என திட்டமிடப்பட்டு விமான ஓடுபாதைகள் மேலும் சில இடங்களில் அமைக்கபட்டு இருந்தன.விடுதலைபுலிகளின் விமான ஓடுதளம் என்பது தேவையான நீளத்திற்கு ஏற்றவகையில் நிலத்தினை பன்படுத்திவிட்டு தார் போட்டுகொள்ளுவதுதான் விமான தளமாக காணப்பட்டது.இதற்கமைவாக பூநகரி சுண்டிக்குளம் ,இருட்டுமடு. கொண்ட்டமடு,

Monday, October 10, 2011

பிரபாகரன் போராளியானது ஏன்?

 


ஈழத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட போராளிக்குழுக்கள் ஆயுதமேந்தி, ஈழத்தை அடைவதற்காகப் போராடினர் என்பதும், அதில் தமிழீழ விடுதலைப் புலிகள், (LTTE) தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், (PLOTE) தமிழீழ விடுதலை இயக்கம், (TELO) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, (EPRLF) ஈழப்புரட்சிகர இயக்கத்தினர் (EROS) என ஐந்து அமைப்புகள் முன்னணியில் இருந்தனவென்பதும், கொள்கை, கோட்பாடுகள் குறித்தும், இவ்வியக்கங்கள் அரசின் மீது தொடுத்தத் தாக்குதல் குறித்தும் அவர்களது வெளியீடுகள் மூலம் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றன என்றும் முந்தைய பல பகுதிகளில் பார்த்தோம்.

மகிந்த மற்றும் சக படை அதிகாரிகளை கூண்டில் நிறுத்த 5000கையொப்பம் இடுங்கள்

மகிந்த மற்றும் சக படை அதிகாரிகளை கூண்டில் நிறுத்த 5000கையொப்பம் இடுங்கள்

மகிந்த மற்றும் சக படை அதிகாரிகளை கூண்டில் நிறுத்த 5000கையொப்பம் இடுங்கள்

http://www.ethirinews.com/wp-content/uploads/2011/10/images2.jpg
மகிந்த மற்றும் சக படை அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி அமெரிக்கா விசாரிக்க
5000கையெழுத்துக்கள் தேவை என கூறபட்டுள்ளது .மக்களே உடன் விரைந்து இதில் கையொப்பம்
இடுங்கள் ..!

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-14


கட்டினை சுற்றி இராணுவ முற்றுகை இறுக்கத்தினால் உணவு பிரச்சனை வெடிபொருள் பற்றாக்குறை என்பன போராளிகளுக்கு நெருக்கடிய கொடுத்துக்கொண்டு இருந்தன.அத்துடன் காயமடைந்த போராளிகள் போதிய மருத்துவ வசதியின்றியும் இருந்தார்கள்.ஒரு போராட்டத்தில் இருக்கும் இந்த சாதாரண பிரச்சனைகளுக்கு கூடமுகம்கொடுக்க முடியாமல் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல் தங்கள் வீடுகளுக்கு செல்ல போவதாக புதிதாக இணைந்திருந்த போராளிகள் சிலர் குற தொடங்கினார்கள்.
இது போராளிகளுக்கு இடையில் முரணை அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.எனினும் இந்த பிரச்சனை தளபதி ராம் அவர்களுக்கு எடுத்து சொல்லபட்ட போது அப்போரளிகளுக்கு போராட்டத்தின் அவசியமும் தேவையும் எடுத்து சொல்லபட்டது.இறுதியில் போராளிகள் போராட்டத்தின் தேவையா உணர்ந்து தங்கள் எண்ணங்களை மாற்றிகொள்கிறார்கள்.

Sunday, October 9, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-13



மட்டகிளப்பில் இருந்து பின்வாங்கியிருந்த புலிகளின் அணிகள் அம்பாறை காடுகளில் நிலைகொண்டிருந்தபடி இராணுவ கட்டுபாட்டு பகுதிகளுக்குள் நுழைந்து தாக்குதல்களை மேற்கொள்கிறார்கள்.குறிப்பாக சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள இராணுவ முகாம்களும் விடுதலைபுலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி இருந்தன.இதன்போது முழுமையான சிங்கள பிரதேசமாக இருந்த புத்தல(மாவீரர் தினமான (27 ) திகதி உலங்குவானுர்தி விழுந்து நொறுங்கிய இடம்) என்ற பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் ஒன்றையும் வெற்றிகராமாக தாக்கி அழித்திருந்தார்கள்.இவ்வாறு சிறு சிறு தாக்குதல்களை தென்பகுதியில் நடத்துகின்றார்கள்.இந்நிலையில் அம்பாறை கட்டுக்குள் இருக்கும் விடுதலை புலிகளைக் தேடி அளிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா படையினர் இறங்குகிறார்கள்.

Saturday, October 8, 2011

எம்.ஜி.ஆர் க்கும் பிரபாகரன் க்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.





மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.



தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் போகப்போக காலம் செல்லச் செல்ல அவர் உண்மையை உணர்ந்தார். தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்த பெரும் படை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. இப் போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதியும், திறமையும், வீரவல்லமையும், தியாக உணர்வும்

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-12


விடுதலைபுலிகளின் வழிகாட்டி அணிகள் முன்னாலே நகர்கின்றது .எதிர்பார்த்தது போன்று கொழும்பு வீதியில் தாக்குதல் தொடங்குகிறது.இது ஒரு வழமைக்கு மாறாக கடுமையான தாக்குதலாக இருந்தது.ஒருசில அணிகள் பாதைய கடந்து விட்டன மேலும் சில அணிகள் பாதைய கடக்கவேண்டியுள்ளது.இவர்கள் கடந்து செல்வதற்கு வசதியாக ஏனைய அணிகள் எதிரி மீது கடுமையான தாக்குதலை நடத்திக்கொண்டு இருந்தார்கள்.எதிரி உக்கிர தாக்குதலை இவ்விடத்தில் நடத்திக்கொண்டு இருந்தான்.ஒரு கட்டத்தில் நேரடி சண்டைகளை தவிர்த்து அப்பகுதி எங்கும் கடுமையான எறிகணை தாக்குதலை நடத்த தொடங்கினார்கள்.

Friday, October 7, 2011

அடேல் பாலசிங்கம் பார்வையில் திரு.பிரபாகரன்

 



எமது வீட்டிற்கு திரு.பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வார். உத்தியோக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரது விஜயம் அமையும். அவர் தனியே தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் வருவார். மற்றும் சமயங்களில், தனது குடும்பத்தினருடன் வருவார்.

அப்பொழுது 1998ம் ஆண்டின் மத்திய காலம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நாயகனான திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனை அறிந்து பழகி,

Thursday, October 6, 2011

சரணடையும்போது இருந்த மனநிலையைச் சொல்ல முடியாது..!

 
இது ஒரு வேறு பட்ட நேர்காணல். கனவுகள் கலைந்துபோன நிலைமையில் ஒரு போராளி - சரணடைந்தவராகி, கைதியாகி, மன்னிப்பு வழங்கப்பட்டவராகி, புனர்வாழ்வுக்குட்பட்டவராகி (?), மறுவாழ்வு நிலைக்குள்ளானவராகி (?) இப்போது பொதுவாழ்வில் ஈடுபடும் ஒரு நிலைக்குள்ளான சந்தர்ப்பத்தில் இந்த நேர்காணல் பதிவு செய்யப்படுகிறது.



அதிகம் பேச விரும்பாத - ஏன் பேசவே விரும்பாத - பேசி என்னதான் பயன் என்ற நிலையில் - இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது.

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-11


மட்டகிளப்பின் சிறப்பான கிரமாமாக பழுகாமம் அமைந்திருக்கிறது.இங்கு உதிர்த்தவர்தான் கேணல் ரமணன் அவர்கள். இவர் பழுகாமத்தில் பிறந்து வளர்ந்து சிறு வயதில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட ஒரு சிறந்த போராளி.மட்டகிளப்பு மாவட்டத்தின் புலனாய்வு துறை பொறுப்பாளராக செயற்பட்ட இவர் மறைமுகமாக வெளியில் உள்ளவர்களுக்கு இவரை பற்றி தெரியாத அளவிற்கு இவரது செயற்பாடுகள் இருந்தது.எனினும் இவர் தனது பொறுப்பு என்று இல்லாமல் எல்லோரிடமும் சிரித்து பேசி கதைத்து கவரகூடிய தன்மைய கொண்டிருந்தார்.மட்டகிளப்பு மாவட்டத்தில் தமிழினத்துக்கு எதிராக செயற்படும் துரோகிகளை இனம் காண்பதிலும் அதாவது தமிழ் முஸ்லீம் மக்களிடையே பிரச்சனைகளை தோற்ருவிப்பவர்களை இனக்கலவரத்தை துண்டி விடுபவர்கள் விடுதலை உணர்வாளர்களை காட்டி

எப்போது மகிந்தவின் முறை வரும்?


முள்ளிவாய்க்காலின் கரையிலே நிகழ்த்தப்பட்ட மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக, இன அழிப்புக்காக, போர்க்குற்றத்துக்காக மகிந்தா கும்பல் எப்போது கூண்டில் ஏற்றப்படப்போகிறார்கள். 2009ல் வன்னியில் சிங்களம் நிகழ்த்திய காட்டுமிராண்டித்தனங்களுக்கான நீதி தாமதமாகிக்கொண்டே போகின்றது. தாமதம் என்றாலும்கூட நீதி நிச்சயமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையின் வேர்கள் காய்ந்துபோனாலும் இன்னும் பட்டுப்போய்விடவில்லை.

ஈழப்போரில் இராணுவம் பயன்படுத்திய இரசாயன ஆயுதங்களும் குண்டுகளும


மெதுவாகச் சிங்கள இராணுவம் பயன்படுத்திய விஷவாயுக்கள் குண்டுகள் நரம்புகளைச் செயலிழக்கச் செய்யும் இரசாயனங்கள் பற்றிய தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. இராணுவம் பரவலாகப் பயன்படுத்திய இந்த வகையான ஆயுதங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டிய சிங்கள ஊடகவியலாளர் காணாமற் போகச் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா நம்ப முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளின் வீரச் சாவுகள்

இந்தியா நம்ப முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளின் வீரச் சாவுகள்




இழைத்த மன்னிக்க முடியாத குற்றமாகும். புலேந்திரன் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரச்சாவு ஒரு பெரும் வல்லரசை எதிர்த்து நிற்க்கும் நெஞ்சுரத்தை எமக்கு ஏற்படுத்தியது

- தமிழீழத் தேசியத்தலைவர்
மேதகு வே .பிரபாகரன் அவர்கள் -


மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-10

Wednesday, October 5, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-9


திருகோணமலையில் இருந்துகொண்டு தமிழ் மக்களின் பிரச்சனைய நடாள மன்றத்திற்கு எடுத்துரைத்து பல செயற்பாடுகளை காண்பித்தவர் நடாள மன்ற உறுப்பினர் துரைசிங்கம்.ஒவ்வுரு நாடாளுமன்ற அமர்விலும் திருமலையின் பிரச்சனைகள் தமிழ் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளை கதைக்கும் போது சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தம் போட்டு மேசைகளில் அடித்தும் பேசவிடாமல் குழப்புவார்கள்.

Tuesday, October 4, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-8








திருகோணமலையில் இருந்து விடுதலைப்புலிகள் வெளியேறியதும் சிறிலங்காவுக்கும் அவர்களுக்கு துணை நின்ற இந்தியாவிற்கும் மகிழ்ச்சிய ஏற்படுத்தியது.திருகோணமலையில் இருந்து விடுதலைபுலிகளை அகற்றி விட்டதாகவும் துறைமுகத்துக்கான பாதுக்கப்பு அச்சுறுத்தல் நீங்கிவிட்டாதகவும் திருமலையில் எதுவித பிரச்சனையும் இல்லை என்றும் மகிழ்ச்சியின் பூரிப்பில் சிறிலங்கா அரசாங்கம் பல அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் இருந்தது.அமைச்சர்களும் அதிகாரிகளும் இதனை பெருமைப்பட உடகங்களுக்கு கூறிக்கொண்டு இருந்தார்கள் .இதே வேலை சிறிலங்கா அரசின் போர்வெறி போக்கினை உலகநாடுகளுக்கு விடுதலைப்புலிகள் எடுத்து கூறினர்.அனால் சில உலக நாடுகள் கூறிய கருத்துக்களை பொருட்டாககுட எடுக்காமல் செவிடன் காதில் உதிய சங்குபோல.சிறிலங்கா அரசு நடந்துகொண்டது.சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கைகள் இந்த போருக்கு பின்னால் பலம் பொருந்திய கரங்கள் இருக்கின்றன என்பதை புரியவைத்தன.ஏனெனில் விடுதலைப்புலிகள் போர்நிறுத்தத்தை மீறுகின்றார்கள் குற்றம் சாட்டிய சில சர்வதேச நாடுகள் கூட சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையாக போரை நடத்தியபோது மவுனமாக இந்த போரை வேடிக்கை பார்த்தன.

Monday, October 3, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-7

கண்காணிப்பு குழுவினர் மக்களை சந்திப்பதையும் அவர்களிடம் இருந்து உண்மைகளையும் அறிந்துகொள்ளுவதையும் சிறிலங்கா அரசு விரும்பவில்லை .மக்களின் கருத்துக்கள் வெளியே வந்தால் விடுதலைப்புலிகள் பொதுமக்களை பணயமாக வைத்திருக்கிறார்கள் என அரசு சர்வதேச ரீதியாக மேற்கொண்டிருந்த பிரச்சாரம் பொய்யாகி போய்விடும் என்பதை அறிந்திருந்தது.எனவே அந்த மக்களை கண்காணிப்பு குழுவினர் சந்தித்து விடாதபடி கண்காணிப்பு குழுவினரின் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் செல்லும் இடங்கள் மீது கடுமையான எறிகணை தாக்குதல்களை நடத்தினார்கள்.இதன்போது கண்காணிப்பு குழுவை சேர்ந்தவர்கள் மயிரிழையில் உயிர்தப்பினார்கள்.

Saturday, October 1, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-6


விடுதலைபுலிகளால் திருகோணமலை கைப்பற்ற பட்டு விட்டால் அங்கு தமது இருப்பு கேள்விகுரியகிவிடும் என்ற எண்ணம் இந்தியாவிடம் காணபட்டது.திருகோணமலை படைத்தளம் மீது விடுதலைபுலிகளின் எறிகணை தாக்குதல்களும் கடற்பரப்பில் கடற்புலிகளின் ஆதிக்கமும் திருகோணமலையை சிறிலங்கா இழக்க வேண்டிய நிலைக்கு கொண்டுவந்து விட்டுவிடும் என்பதை இந்திய உணர்ந்திருந்தது அதனை தக்கவைப்பதற்கான நடவடிக்கையில் இந்திய இறங்கியது.

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-5


சமாதன உடன்படிக்கைக்கு முரணாக சிறிலங்கா செயற்பட்டுக்கொண்டு இருந்தபோதுதான் விடுதலைப்புலிகள் மாவிலாறு அணையை முடுகின்றார்கள் .போரினால் மட்டுமல்ல இயற்கை அனர்த்தமான ஆளிபேரளையால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கும் உதவுவதுக்கு முனையாத சிறிலங்கா அப்பாவி மக்கள் மீது கெடுபிடிகளை ஒரு பொற்கால நிலைபோன்று ஏற்படுத்திய நிலையில்தான் அதற்கு எதிராக விடுதலைப்புலிகள் மாவிலாறு அணை விவகாரத்தை கையிலெடுத்தார்கள்.(2006 ) ம் ஆண்டு யூலை (22 ) ம் திகதி சிங்கள குடியேற்ற மக்களுக்கு செல்லும் தண்ணீருக்கான அணைகள் மூடப்பட்டன .
Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை