வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Friday, December 30, 2011

வலி தந்த (2009 ) வெறுமையாய் கடந்த (2010-2011 ) வரப்போகும் (2012 )

அன்பான பாசத்துக்கு உரிய தமிழ்   மக்களே ..  நாம்
இப்போது புதிய ஆண்டில் பயணிக்க இருக்கிறோம் ..நாம் இதுவரை பயணித்த ஆண்டுகளை விட இனி நாம் பயணிக்க இருக்கு ஆண்டுதான் பல சவால்கள் நிறைந்த  ஆண்டாகவும் ..பல சோதனைகள் நிறைந்த ஆண்டாகவும்   பல இருள் சூழ்ந்த நாட்களாகவும் பல கசப்பான சம்பவங்களையும் காணப்போகும் ஆண்டாகவே அமையம் ...இதற்க்கு முன்பு அதாவது (2012 ) முன்னரான காலப்பகுது மிகுந்த அழிவுகளையும் மிகுந்த
துன்பங்களையும் எமது தமிழ் பேசும் மக்கள்
அனுபவித்து வந்த காலம் ..ஆனாலும் எமக்கு என ஒரு அரசு இயங்கிகொண்டிருந்த காலமது ..எவ்வளவு துன்பங்களையும் எவ்வளவோ கஷ்டங்களையும் நாம் அனுபவித்த காலமாக இருந்தாலும் எமது எமக்கு என ஒரு அரசாங்கம் ஒரு நிலப்பரப்பு இருந்ததை எண்ணி நாம் பெருமைகொண்ட காலமது ..எமது தேசியத்தலைவர் அவர்களின் வழிகாட்டலில் புலிச்சேனை களமாடிய காலமது ..பல வீர சாதனைகளையும் பல வெற்றி செய்திகளையும் புரிந்து தமக்கு என பெரும் படையோடு நாம் வாழ்ந்துவந்த காலம் அந்த காலம் .


 நாம் ஒரு பண்பாடு கொண்ட இனம் ஒரு பண்பாட்டு தலைவனை தலைவராக கொண்ட இனம் எம்மால் ..எமது பண்பாட்டை மீறி என்றுமே பயணிக்க முடியாது நாம் பயணிக்கும் காலம் எல்லாம் எமது தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலிலும் அவரது சிந்தனைகளையும் வழிகாட்டியாக கொண்டே எம்மால் எமது மக்களால் பயணிக்க முடியும் .நாம் பல துயரங்களுக்கு முகம்கொடுத்து வாழ்ந்தாலும் எமது தலைவரின் நிழலில் நாம் வாழ்ந்த காலம் எந்த துயரங்களையும் எதிர்த்து ..பசி பட்டினி சாவு என்பவற்றை எல்லாம் கடந்து சுகந்திரம் என்னும் வேட்கையை நோக்கி பயணித்தோம் ...மீண்டும் (2009 ) ஆண்டு எம்மை நோக்கிவந்த இனஅழிப்பு என்னும் புயல் எமது வாழ்வாதரங்களை அழித்து வீச தொடங்கியது .நாம் இதே போன்று பல இனஅழிப்பு புயல்களை கண்டிருப்பதால் இதுவும் ஒரு கட்டதோடு நின்றுவிடும் என்று நினைத்தபடி எமது இடப்பெயர்வை ஆரம்பித்தோம் ..என்று அந்த புயல் கிளிநொச்சி மண்ணை ஆக்கிரமிக்க தொடங்கியதோ அன்று அங்கு வாழ்ந்த மக்களால் இனி நட்டக்க போவதை கணிப்பிட முடிந்தது ...(2009 ) என்னும் ஆண்டு தமிழர்களை சிங்கள

ஆக்கிரமிப்பு படைகளால் இனஅழிப்பு செய்த ஆண்டாக தமிழர்கள் மனங்களில் பதியபட்ட நாள் ..இந்த ஆண்டு தமிழர்கள் வரலாற்றில் என்றுமே மறக்கப்பட முடியாத நாள் ...அதற்க்கு பின்னரான இரண்டு ஆண்டுகளும் சிங்களத்தாலும் உலக வல்லாதிக்க சக்திகளாலும் தமிழர்களுக்கு பூச்சாண்டி   காட்டபட்ட
ஆண்டுகளாகவே அமைந்தது ...

 அழிப்பதுக்கு ஆயுதங்களையும் கொடுத்து ..அதை தொழிநுட்ப கண்காளால் கண்டும் நிருபிக்க பட்டும்..அதை கவனத்தில் கொள்ளாது ..எம்மிடம் கையெழுத்தும் இன அழிப்பு சான்றுகளையும் கேட்டு எம்மை முட்டாள்கள் ஆக்கிய ஆண்டு இந்த இரண்டு ஆண்டுகளும் ..பல துரோகங்களும் பல காட்டி கொடுப்புக்களும் தமிழர் விரோத செயல்களும் தமிழர்களால் சில அருவருடிகளால் அரங்கேற்ற பட்ட ஆண்டு அதற்க்கு தமிழர்கள் பலரும் ஒத்துழைத்த ஆண்டு இந்த இரண்டு ஆண்டுகளும் ..இதற்குள் தமிழர்கள் நாம் எமது வீரத்தை எமது எழுச்சியை புதைத்த ஆண்டாகவும் இந்த இரண்டு ஆண்டுகளும் அமைகின்றன ...நாம் போராடிய முப்பது ஆண்டுகளையும் ..நாம் விரையம் செய்த இந்த இரண்டு ஆண்டுகளும் நாம் முப்பது வருடமாக போராடிய போராட்டத்துக்கு ஒரு சிறு கரும்புள்ளியாகவே அமைந்தது ..இதற்க்கு கரணம் நாம் வீழ்ந்த இடத்திலே முடங்கி இருப்பதுதான் .. நாம் இந்த இரண்டு ஆண்டுகளும் தான் வீச்சுடன் பயணிக்க வேண்டிய ஆண்டுகள் அனால் நாம் வீச்சு இல்லாமலே பயணித்தோம் ...  ( தமிழர்கள் ) நரி கூட்டத்துக்குள் அடங்கிவிட்ட ஆண்டு ..பல கச்சேரிகள் பல சுத்துமத்துகளுக்குள் தமிழர்கள் பிரிக்கபட்ட ஆண்டு ...

 இனி வரப்போகும் ஆண்டிலாவது தமிழர்கள் நாங்கள் தமிழர்கள் என்று எமது கரங்களை ஒன்றிணைத்து பயணிக்க வேண்டும் என்பதே எமது எண்ணம் ..இதுவரை நாம் பயணித்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தொடங்கும் முன்னரே எமக்கு ஒரு நல்ல செய்தொயோடு தொடங்க விருக்கின்றோம் ..அதுதான் எமது விடுதலை போராட்ட

சின்னங்களை பொறித்த முத்திரையை வெளியிட்டு பிரான்ஸ் நாடு எமது தமிழ் மக்களின் மனங்களுக்கு ஒரு நற்செய்தியை கொடுத்திருக்கிறது ..இது ஒரு சிறு துளிரே ஏனெனில் பிரான்ஸ் நாடு எமது இயக்கத்தை பயங்கர வாதிகள் பட்டியலில் சேர்க்காத நாடு ..இவர்கள் இவளது தமதமாக செயல்படுத்தி இருக்கும் திட்டம் இது ..இருந்தாலும் இது வரவேற்க வேண்டியது ...ஆனால் இவர்கள் தமிழர்கள் அடையாளங்களுக்கு கொடுத்திருக்கும் மரியாதை முழுமனதுடன் வரவேற்கலாம் ..அனால் ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவர் அவர்களின் படமும் வெளிவந்து இருந்தால் அது வரவேற்க தக்கது ..


வரப்போகும் புதிய ஆண்டில் எமது மக்களாகிய நாங்கள் போராட்டங்களை முன்னெடுத்து எமது விடுதலை இயக்கம் மீதான தடைகளை நீக்க நாம் ஒன்றிணைந்து போராடவேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும் ...வரப்போகும் ஆண்டில் சூழ்ச்சிகள் துரோகங்கள் , இவற்றை எல்லாம் எமது பலத்தின் முலம் ஒற்றுமை முலம் வெளிப்படுத்தி எமக்கான நீதிகளை பெற்று கொள்ளுவது எமது கடமையாகும் ..

அன்பான புலம்பெயர் வாழ் தமிழ் மக்களே |-


நாங்களும் சரி நீங்களும் சரி இதுவரை பட்ட கஷ்டங்களும் துன்பங்களும் நீங்கள் எமக்காக போராடிய போராட்டங்களும் செய்த உதவிகளும் இனிமேல் செய்யும் உதவிகளும் போராட்டங்களுமே ..இனிவரும் காலங்களில் ஈழத்தில் தமிழன் அனுபவித்த துன்பங்களுக்கும் அழிவுகளுக்கும் நீதி வேண்டி கொடுக்கும் என்பதில் ஐயமில்லை ...அன்றும் சரி இன்றும் சரி எமது உயிரும் எமது மண்ணுக்கான விடிவையும் மக்களுக்கான சுகந்திர வாழ்வையும் நீங்கள் செய்யும் போராட்டங்களே பெற்று கொடுக்கும் ..நீங்கள் காட்டும் அமைதி என்பது ஈழ மக்களின் அழிவையே பெற்று கொடுக்கும் என்பதை நாம் வரலாற்றில் கண்டது ...எமது அன்பிற்குரிய மக்களே இன்று நாம் எமது பல லட்சம் மக்களை இழந்துவிட்டு எமது போராட்ட விழுமியங்களையும் விழுதுகளையும் இழந்துவிட்டு புதிய ஆண்டில் கால் வைக்க போகின்றோம் ...(2009 ) ஆண்டின் பின்னரான காலப்பகுதி என்பது ஒரு மந்தமான போராட்டங்களையும் மந்தமான

உணர்வுகளையுமே கொண்டிருக்கிறது ...இந்த நிலை மாறவேண்டும் ( 2009 ) முன்னர் நீங்கள் எப்படி போரடிநீர்களோ ..அதே வீச்சுடன் மீண்டும் உங்கள் போராட்டங்களே ஈழ மக்களின் வாழ்வியலை பாதுகாக்க உலக வல்லரசுகளின் இதிய கதவுகளை திறக்கும் என்பது நம்பிக்கை ...
 

ஒரு வீழ்ச்சியில் இருந்துதான் ஒரு இனம் வீறுகொண்டு எழும் என்பது வரலாறு அதை தமிழர்கள் ஆகிய நாங்கள் செய்ய தவறிவிட்டோம் ...நாம் கையேந்தி நிற்க எமது கைகளில் சுகந்திரத்தை கொண்டுவந்து கொடுக்கும் அளவுக்கு இந்த உலகத்தில் எந்த தர்ம தேவனும் பிறக்கவில்லை..நம் போராடியே எமது சுகந்திர இலட்சிய கனவுகளை அடையவேண்டும் என்பது எமக்கு காலம் கொடுத்திருக்கும் கட்டளை ..(விடுதலைப்போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியற்ப் பாதை..). இழப்புக்கள் கொடிய வலியில்லை அந்த இழப்புக்களை கண்டும் எழாமல் இருப்பதுதான் கொடிய வலி ... எம்மை வெட்ட வெட்ட நாம் வருடம் எழ வேண்டுமே ஒழிய, வெட்ட வெட்ட குனிந்து இருந்தால்
 
வெட்டுபவன் வேட்டிகொண்டுதான் இருப்பான் ...வீழ்ந்தவர்கள் எல்லாம் யார் எம்மோடு பிறந்தவர்கள் எமது மண்ணில் வாழ்ந்தவர்கள் எமது நண்பர்கள் ..எமது அம்மா அப்பா தங்கைகள் தம்பிகள் அண்ணாக்கள் அக்காக்கள் மாமா .மாமி பாட்டி சொந்தம் பந்தம் என்று எல்லோருமே எமது உறவுகள் தானே ? எமக்காக போராடியவர்களும் மடிந்தவர்களும் வேற்று இன மக்களை இலையே ... (*மலைபோல மக்கள் சக்தி எமக்கு பின்னால் இருக்கும் வரை , எந்தப் புதிய சவாலையும் நாம் சந்திக்கத் தயார் ) ....இந்த மலைபோல் என்பவர்கள் யார்? நீங்களும் நாங்களும் உலக தமிழர்களும் தானே ..அப்படியிருக்க நாம் அமைதியாக இருப்பது எமக்கு நாமே கொடுக்கும் தண்டனையா? இல்லை இனி எதுக்கு என்ற ஆதங்கமா? ஒன்று பட்டிருங்கள் உறவுகளே உங்களுக்குள் இருக்கு போட்டி பொறாமை இவற்றைஎல்லாம் கடந்து தமிழர்கள் என்று இறுமாப்போடு ஒன்றுபட்டு போராடுவோம்


 அன்பான தமிழக தாய் உறவுகளே |-

காலம் காலமாக ஈழ தமிழினம் அடக்கு முறைக்குள் பல அழிவுகளுக்கும் முகம் கொடுத்த வேளையில் ..குரல்கொடுத்து எம்மினத்தை அழிவிலிருந்து மீட்க பல வழிகளில் உதவியிருக்கும் தாய் உறவுகளே..கடைசி நேரமான முல்லிவாய்க்களின் போதும் சரி அதன் பின்னரும் சரி பல ஆட்சிகள் மாறி மாறி வந்தாலும் ..நீங்கள் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள் என்பதையும் அதனால் ஈழ மக்களின் அழிவுக்கு நீங்களும் உடந்தை ஆனது போலவும் மவுனத்தின் முலம்  தெரியபடுத்தியிருந்த பலர் ...ஜாதி, மதம்,கட்சி ,என்றும் கொடி என்றும் பேசிக்கொண்டே இருந்தீர்கள் ...( 2009  ) ஆண்டின் பிற்பகுதி என்பது வாய் பேச்சுக்கள் தெரு பேச்சுக்கள் வீண் வாதங்கள் என்று நாட்கள் முடிவடைந்ததே ஒழிய ...தமிழின அழிப்புக்கான நீதி கிடைப்பதற்கு சிலர் மட்டுமே முயற்ச்சியில் இறங்கினார்கள் ...அரசியல் கட்சிய ..தமிழின அழிப்ப என்று வரும் போது கட்சியின் கோடியை துக்கி பிடிக்கும் உறவுகளே உங்களின் சொந்தங்கள் அழிந்து கொண்டிருக்கும் வேளையிலும் நீங்கள் கட்சியின் பின்னாலே இருந்தீர்களே ஒழிய தமிழர்கள் என்று ஒற்றுமையில் இல்லை ...சொந்த நாட்டிலிருந்து உங்களால் போராட போராட்டம் செய்ய முடியவில்லை என்றால் ..அடக்குமுறைக்குள்ளும் பயங்கர வாத பிடிக்குள்ளும் இருக்கும் ஈழ மக்கள் எப்படி வாய் திறக்க முடியும் ..இன்று அவர்களின் வாழ்கையை நீங்கள் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள்? அவர்கள் பட்ட அழிவுகளும் பாலியல் தொல்லைகளும் ..பெண்மைக்கு நிகழ்ந்த அநீதிகளும் ..கண்ணகி பிறந்த மண்ணிலிருந்து பார்த்து கொண்டுதானே இருக்குறீர்கள்.. பல தமிழ் மன்னர்கள் வாழ்ந்த மண்ணிலும் தமிழுக்காக உயிரை விட்ட தியாகிகளும் ..பல பல வீர மங்கைகளும் ...

 வாழ்ந்து மடிந்துவிட்ட அதே மண்ணில்தானே நீங்களும் வாழ்ந்துகொண்டு இருக்குறீர்கள் ...அவர்களின் வீரமும் தமிழ் மீது கொண்ட பற்றும் இனம் மீது கொண்ட அளப்பரிய பற்றும் உங்களிடம் இல்லையா? தமிழால் ஒன்று பட்டு இருக்குறீர்கள் சாதி என்று வரும்போது பிரிந்து கிடக்குரீர்கள் இதுதான் நீங்கள் தமிழ் மீது கொண்ட பற்றுதலா? தமிழின அழிப்புக்கு பின்னைய இரண்டு ஆண்டுகளும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை உங்கள் மனட்சாட்சியை கேளுங்கள் .பல பல கொடி தமிழன் பல பல நாடுகளில் வாழ்ந்தும் என்ன பயன் ? சிங்களம் என்னும் பயங்கர வாதிகளுக்கு அடிபணிந்தது போல் ஆகிவிட்டது ....எங்கே இருக்கிறான் தமிழன் எட்டுகோடி பேர்களை கொண்ட  தமிழகம்  பல பல வீர வீர புதல்வர்களையும் பல பல வீர மங்கைகளை கொண்ட தமிழகம் இன்று யாருக்கு அடிபணிந்து கிடக்கிறது ..ஆட்சியாளர்களா. ஆட்சியாளர்கள் என்று சொல்லிவிட்டு போய்விட முடியாது நீங்கள் தான் அவர்களை உருவாக்கிக்கொண்டு  இருக்குறீர்கள் ..ஈழ மக்கள் உங்கள் பிள்ளைகள் இல்லையா நாங்கள் அழியும் போது நீங்கள் வேடிக்கை பார்ப்பதா? தமிழுக்கு நிகராக நீ சினிமா நடிகனை கண்பிப்பதா ..அவர்களின் பின்னால் அணிதிரள்வதா..சுடு சுரணை அற்ற தமிழா கொஞ்சமாவது சிந்தித்து பார் அழிவது உனது இரத்தம் உனது உடன்பிறப்பு உனது சகோதர சகோதரிகள் ..சினிமாவில்  ஒரு பெண்ணை

கொடுமை படுத்தும்போது அதற்காக ஒருவன் காப்பற்ற வரும் போது கைதட்டும் நீ உனது எத்தனை ஆயிரம் சகோதரிகள் மானம் சிங்கள காடையர்களால் மாணவங்க படுத்த பட்ட போது கைகட்டி வேடிக்கை பார்ப்பாய ..

புததங்களிலும் கதைகளிலும் கேட்டு வீரம் பேசும் தமிழா ..உன் கண்களை திறந்துகொண்டு பார் நீ கூப்பிடும்  துரத்திலே  உனது உறவுகள் படுகொலை செய்யபட்டு கொண்டு இருக்கிறார்கள் ..உனது அக்காக்கள் தங்கைகள் பாலியல் வர்புனர்ச்சிக்கு ஆளாகி கொண்டு இருக்கிறார்கள் ..அவர்களின் குக்குரல்  உனது காதுகளை தட்டவில்லையா.எத்தனை காலம்தான் துங்குவது போல நடித்துகொண்டு இருப்பாய் ..தமிழா செருப்பாய் இருக்காதே ...தலைக்கு இடியாய் இரு ...தமிழ்க்கு மட்டும் நீ செருப்பாய் இரு ..எதிரிக்கு நீ இடியாய் இரு ....இலையேல் அடிமையாய் இரு ...உனக்கு நீயே விலங்கிட்டு கொள் ..தமிழ் மன்னர்கள் வீர புதல்வர்கள் வீர மங்கைகள் இவர்களின் வரலாற்றை தீயில் போட்டு கொளுத்திவிட்டு  அடிமைத் தமிழன் என்று வரலாறு எழுது...உனக்கு நீயே சாவு மணியை அடித்து கொள் வரலாறு உன்னை உங்களை என்றென்றும் பேற்றி வணங்கும் ...தமிழ் மொழி செம்மொழி  என்று வரலாறு எழுதும் தமிழா ..அந்த மொழியை சுவாசிக்கும் தமிழர்கள் அழியும் போது அதை தடுக்காத போது தமிழுக்கு செம்மொழி தேவையா ..பெயரில் மட்டும் செம்மொழி இருந்தால் போதுமா..


வந்தாரை மட்டும் வாழவைத்துகொண்டு இரு தமிழா உன் இனத்தை விட்டுவிடு அழிந்து போகட்டும் ...உணர்வுடன் பேசினால் அவனின் உணர்வை மழுங்கடிப்பது  ..எதிரி என்று சாயம் பூசுவது.. உணர்வை மழுங்கடிப்பது ...ஈழத்தை வைத்து பிச்சைக்கார அரசியல் செய்வது ...ஈழ உயிர்கள் என்ன  மரத்தில் பூக்கும் பூக்களா யார் வேண்டுமென்றாலும் பறித்து செல்வதற்கு ...பாசமிகு உறவுகளே எமது அழுகுரல் உங்கள் மனங்களில் கேட்கவில்லையா நாம் ஒட்டுமொத்தமாக அழிந்தாலும் இதை போல மவுனத்தை பதிலாக கொடுப்பீர்களா.. நாங்கள் உங்களிடம் எதிர்பார்த்தது உகளின் ஒட்டுமொத்த ஆதரவை தான் எமக்கு அநீதி இழைக்கபட்டு உள்ளது ..உங்களிடமும் நீதி வேண்டி தரும்படி கேட்கிறோம் ..நாம் என்ன அளிவதுக்கு என்று பிறந்த இனமா யார் வேண்டும் என்றாலும் அழித்துவிட்டு..எம்மை அழித்தவன் உனது வாசல் தேடி வருகிறான் ஆட்பீடம் அவர்களை வரவேற்கிறது ..எம்மை அழித்தவனை மாண்புமிகு என்கிறான் ஒரு தமிழன் இன்னுருவன் கையை தட்டி ஆமாம் என்கிறான் ...பலகோடி தமிழர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் ..தமிழை உயிராய் மதித்தவன் ஈழ இழப்புக்களை  சகிக்க முடியாமல்  உணர்வின் உச்சத்துக்கே போய் தன்னையே அழிக்கிறார்கள்...

அவர்களின் மரணம் எம்மை முள்ளிவாய்க்கால் இழப்பை விட பலமடங்கு கவலை கொள்ள வைக்கிறது ..எம்மினம் அல்லவா ...உயிரின் மதிப்பை அறிந்தவர்கள் நாங்கள் ..எமது உடன் பிறப்புக்கள் ..நீங்கள் உங்கள் உயிர்களை எமக்காக இப்படியாக மாய்த்துகொள்ள வேண்டாம் ...துணிந்து  (நீ) நீங்கள் மடியும்வரை போராடுங்கள் ..




அன்பான தாய் உறவுகளே ...( 2009 ) பின்னர் நடந்த சம்பவங்கள் எல்லாம் எம்மை கவலை கொள்ள  வைத்தே ஒழிய வேறொன்றும் இல்லை ...இனி வரப்போது (  2012  ) ஆண்டிலாவது  தமிழர்கள் என்ற ரீதியில் ஒற்றுமையுடன் பயனிப்பீர்களா ...இல்லை விட்ட பாதையிலே மீண்டும் பயனிப்பீர்களா ..உறவுகளே  நாம் ஆளுவதற்கு என்று பிறந்த இனம் நாம் பல வரலாற்றை கொண்டவர்கள் ..எமது சரித்திரம் நீளமானது ..நாம் ஒரு சிறந்த பண்பாட்டை கொண்ட இனம் ..யாரையும் அழித்து வாழ விரும்பாத இனம் ..நாம் சிறந்த பண்பாட்டை கொண்டவர்கள் ..பல பல சாதனைகளை புரிந்து உள்ளோம் ..யாருமே எட்டாத சிகரங்களை எல்லாம் நாம் தொட்டு உள்ளோம் ...இதற்க்கு மத்தியிலும் பல அழிவுகளை சந்தித்த இனமாக எமது ஈழ தமிழினம் இருக்கிறது ..இவர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியவர்கள் நீங்கள் தானே ..அவர்கள் வாழ்வையும் கல்வியையும் கட்டியெழுப்ப நீங்கள் தானே முயற்ச்சி செய்ய வேண்டும் ..அவர்கள் இன்னும் பல அழிவுகளை சந்திக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா ..நீங்கள் இப்படியே இருந்தால் கடைசியில் அதுதான் நடக்கும் ...ஈழத்தில் தமிழினம் இருந்த அடையாளம் இல்லாமல் போய்விடும் ..அதைத்தான்  இன்று சிங்கள பயங்கர வாதிகள் செய்துகொண்டு இருக்கிறார்கள் ..இதற்க்கு நீங்களும் உடந்தையாக  இருக்க போகிறீர்களா ....உனது தாய் தந்தை அக்கா தங்கை தம்பி அன்னான் இவர்களை கொன்றவனுக்கு நீ என்ன பதிலளிக்க போகிறாய் ..உனது மவுனமே ஒரு பதிலா ...காலத்தை கடத்தாதே தமிழா ..காலத்தை நீ உனது பாதையில் கொண்டு செல் ..

 வரப்போகும் (2012  ) ஆண்டிலாவது  நாம் தமிழர்களாக இருப்போம் என்று சபதம் எடுப்போமா ..இல்லை நாங்கள் இப்படியே தான் இருப்போம் என்று சபதம் எடுப்போம யார் எப்படி போனால் எமக்கு என்ன என்று இருப்போமா..எனது வீட்டில் விளக்கு எரிந்தால் சரி ..எனது அடுப்பு எரிந்தால் சரி ,மற்றவர் வீடு எரிந்தால் என்ன ..அடுப்பு எரியாவிட்டால் எனக்கு என்ன அவன் வீட்டில் இழவு விழுந்தால் என்ன என்று இருக்க போகிறாயா ....தமிழர்கள் தாய் உறவுகளே நாம் ஒரு தாய் பிள்ளைகள் நாம்..நாம் ஒற்றுமையுடன்  போராட வேண்டும் நீ நான் என்னும் போட்டி பொறாமைகளை தவிர்த்து தமிழன் என்ற ரீதியில் நாம் ஒன்றிணைய வேண்டும் ....

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ..பிறக்கபோகும் இந்த ஆண்டு தமிழர்களுக்கும்  குறிப்பாக ஈழ தமிழர்களுக்கு சுகந்திர வேட்கையை ஆதரிக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என்று நினைத்து ..வரப்போகும் ஆண்டில் நாம் எல்லோருமே ஒருதாய் பிள்ளைகள் என்ற ரீதியில் ஒன்றுபட்டு பயணிப்போம் ..நாம்  அழிவதற்கு பிறந்தவர்கள் இல்லை என்பதை நிருபித்து எமது ஒற்றுமையின் முலம் ..ஈழம் என்னும் சுகந்திர நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைந்து குரல்கொடுப்போம் ....

  என்றும் அன்புடம்  ஈழம் தேவதை

இந்த பதிவு யார் மனதையும் புன்படுத்தியோ காயபடுத்தியோ   இருக்குமானால்  மன்னிக்குபடி  வேண்டுகின்றேன்


7 comments:

  1. தமிழர்கள் என்று இறுமாப்போடு ஒன்றுபட்டு போராடுவோம்

    ReplyDelete
  2. நன்றி கார்த்திக் ராஜா ...ஒற்றுமை என்பதே எமக்கு விடிவை பெற்றுத்தரும் சிறந்த ஆயுதம்...

    ReplyDelete
  3. இனி வரப்போகும் ஆண்டிலாவது தமிழர்கள் நாங்கள் தமிழர்கள் என்று எமது கரங்களை ஒன்றிணைத்து பயணிக்க வேண்டும் என்பதே எமது எண்ணம் ..இதுவரை நாம் பயணித்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தொடங்கும் முன்னரே எமக்கு ஒரு நல்ல செய்தியோடு தொடங்க விருக்கின்றோம் ..அதுதான் எமது விடுதலை போராட்ட
    சின்னங்களை பொறித்த முத்திரையை வெளியிட்டு பிரான்ஸ் நாடு எமது தமிழ் மக்களின் மனங்களுக்கு ஒரு நற்செய்தியை கொடுத்திருக்கிறது ..இது ஒரு சிறு துளிரே

    ReplyDelete
  4. நன்றி பழனி சகோதர ..உங்கள் கருத்திற்கு ..

    ReplyDelete
  5. வரப்போகும் எதிர்காலம், நமக்கான எதிர்காலம், வீரமங்கையான தங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. த.முத்துகிருஷ்ணன்//நன்றி சகோதர உங்கள் கருத்துக்கு ..

    ReplyDelete
  7. அன்புள்ள தமிழ் உள்ளங்களுக்கு,



    தமிழ் ஈழத்தில் நடந்த கொடூரங்களை
    இந்த ஞாபக மறதி உலகம் மறக்கும் முன்பு
    மீண்டும் உலக அளவிலான
    நீதி கேட்கும் போராட்டம் இடைவிடாது
    நடைபெற வேண்டும்.

    நான் Change.org பக்கத்தில் ஒரு நீண்ட
    உண்மைக் கடிதம் பதிவு செய்துள்ளேன்.
    http://www.change.org/petitions/-president-of-the-eu-un-ukus-france-foreign-ministers-tamils-need-justice-2?share_id=BUqQMNMRxi&

    உடனே அதில் கையெழுத்திடுங்கள்.
    உங்கள் நண்பர்களையும் கையெழுத்திட வையுங்கள்.
    அதனை மேலே சொன்ன வல்லரசு நாடுகளுக்கு
    தொடர்ந்து அனுப்புங்கள்.
    மேலும், கனடா, ஆஸ்திரேலியா, மற்றும்
    பிற ஐரோப்பிய நாடுகளுக்கும்
    தொடர்ந்து அனுப்புங்கள்.

    இது நாள் வரை நான் மட்டுமே அனுப்பினேன்,
    அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
    நீங்களும் அந்த பணியைத் தொடருங்கள்.

    அந்தக் கடிதம் காண இயலாதவர்கள்
    எனக்கு Message அனுப்புங்கள்.

    அன்புடன் ,
    வே.பழனி.

    ReplyDelete

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை