வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Monday, December 12, 2011

ஈழத்தில் இருந்து இன்று தமிழகம் நோக்கி நகரும் இந்தியாவின் சூழ்ச்சி வலைகள்

தானம் செய்வதுக்கு இனம் மொழி சாதி தேவையில்லை ..அதே போலத்தான் எமது உரிமைகளுக்காக போராடும் போது எமக்கு இவைகள் எல்லாம் இரண்டாம் படியே ..நாம் இன்று அடக்க பட்டு கொண்டு இருக்கோமா ? இல்லை அடங்கி இருக்கோமா? இல்லை அடிமைகளாய் இருக்கோமா? இந்த முன்றில் அதை தொட்டாலும் நாம் அழிக்கபடுகிறோம் என்னும் வட்டத்துக்குள் தான் வந்து நிற்போம் ..எதற்காக நாம் அழிக்க படுகின்றோம் ? ஏன் அழிக்கபட்டு கொண்டு இருக்கின்றோம்.நாம் அரசர்கள் என்னும் வட்டத்தில் இருந்து பார்க்காமல் நாம் வாழும் காலம் என்னும் வட்டத்தில் இருந்து பார்ப்போம் ... ஈழம் இது ஒரு குட்டி தீவுக்குள் இருக்கும் ஒரு வீர பரம்பரையும் பாரம்பரிய காலாச்சரத்தையும் பல
சாதனைகளையும் படைத்த மண்ணாக இன்று ஆக்கிரமிப்பு படைகளாலும் உலக வல்லாதிக்க கழுகுகளாலும் ஒன்றிணைத்து அழிக்கபட்ட இனமாக இன்று உலகெங்கும் நீதி வேண்டி அனாதைகளாக உலகெங்கும் அலைந்து திரிகின்றோம் ...


 தமிழ் ஈழம் ..இந்த பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மனங்களில் அன்று சந்தோஷ அலைகளை நாம் காண முடிந்தது ..காரணம் இங்குதான் வீரத்தின் தலைமகனை உலகத் தமிழர்களின் உன்னத தலைவன் பிறந்த வாழ்ந்த மண் .எந்தவொரு அந்நிய சக்த்திகும் அடிமையாகாமல் எந்த நாட்டு இராணுவம் என்றாலும் எதிர்த்து நின்று போராடி வரலாறு படைத்த மண் ..இன்று இதே தமிழ் ஈழம் என்று மக்களால் உச்சரிக்கும் போதெல்லாம் முள்ளிவாய்க்கால் மட்டுமே நினைவுக்கு வரும் ..எந்த அளவுக்கு இதெல்லாம் நினைவுக்கும் வருதோ அதை விட பல மடங்கு எம்மை அழித்தவனை எம்மை சீரழித்தவனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோரு மனங்களிலும் ஓடும் என்பது மறுக்கமுடியாத உண்மை ...


 இந்த பழிவாங்கல் எப்படி இருக்க வேண்டும்? இப்போது நாம் அழிக்கபட்டு விட்டோம் நாம் இன்று எமது போராட்டத்தை இழந்து நிற்கின்றோம் இதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டு ? கத்தியை எடுத்துகொண்டு எதிரியை தாக்குவதற்கு முன்பு அதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுதல் வேண்டும் ..இன்று எதிரி பெரும் விருட்சமாக வளர்ந்து வேர்விட்டு பரந்து விரிந்து கிடக்கின்றான் ..இன்று இப்போது நாம் அவனை தாக்குவோமே ஆனால் மீண்டும் ஒரு அழிவுகளை நாம் சந்திப்போம் ...நாம் இப்போது கத்தியை எடுப்பதை விட எமது புத்தியை தீட்டுவது சிறந்த ஆயுதமாக இருக்கும் ..எமது ஈழ போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து ஆயுத மவுநிப்பு காலம் வரை ..எமது போராட்டத்தை அழிக்க இந்திய என்னும் அரசு கங்கணம் கட்டிக்கொண்டு நின்றதையும் அதை முப்பது வருடங்கள் கழித்து நிறைவேற்றியதையும் நாம் அறித்திருக்கின்றோம் ...ஏன் இந்திய அரசு எமது போராட்டத்தை முளையிளையே அழித்துவிட முடியவில்லை ? ஏன் முப்பது வருடங்கள் கழித்து அழிக்க முடிந்தது இதற்கு உலக நாடுகள் கரணம் என்று சொன்னால் இதை ஏற்றுகொள்ள முடியாது ..உலக நாடுகள் எமது போராட்டத்தை அழிக்க ஆதரவு கொடுத்தது என்னவோ உண்மைதான் ..அனால் நேரடியாக களமிறங்கி போராடியது இந்திய அரசு மட்டுமே ...




ஏன் எமது போராட்டத்தை இந்திய அரசு முப்பது வருடங்களுக்கு முன்பு அழித்துவிட முடியவில்லை ? முப்பது வருடங்களுக்கு முன்பு எமது போராட்டம் பல்லாயிரம் வீரர்களை கொண்டிருக்கவில்லை ..பலமான கட்டமைப்பை கொண்டிருக்கவில்லை ..கனரக ஆயுதங்கள் இருந்திருக்கவில்லை ... ஏன் இன்னும் ஒரு படி மேலே போனால் சாப்பாட்டுக்கு கூட வசதில்லாத நிலைமை ...அப்போது அழிக்கமுடியாத போராட்டத்தை முப்பது வருடங்கள் கழித்து இந்தியாவால் அழிக்க முடிந்தது என்றால் ..முப்பது வருடங்களுக்கு முன்னர் நாமெல்லாம் தமிழர்களாய் தமிழகம் ஈழம் இரண்டுமே ஒன்றாய் கூடியிருந்த காலம் எமக்குள் வேற்றுமைகள் இல்லை முரண்பாடுகள் இல்லை நாமெல்லாம் ஒரே தலைவர் ஒரே விடுதலை இயக்கம் என்று ஒரே அணியாக இருந்தோம்..போராட்டங்கள் பல செய்தீர்கள் உதவிகள் பல புரிந்தீர்கள் ..உணர்வோடு இருந்தீர்கள் ...எம்மை தொடும்போதெல்லாம் அங்கெ எமக்காக பல களங்களை உருவாக்கினீர்கள் ..சிறு எறும்பாக இருந்த எமது போராட்டத்தை அன்று எதிர்கவே இந்திய பேரசு ஜோசித்தது


மக்கள் சக்தி ஒன்றிணைந்து இருக்கும் வரை ஈழ போராட்டத்தை நெருங்க முடியாது என்பதை ..அறிந்துகொண்ட பேரசு மக்கள் சக்தியை அழிக்கவென கங்கணம் கட்டியது ..அதில் முதல் கட்டமாக தமிழக தமிழர்களையும் ஈழ தமிழர்களையும் பிரிக்கவென முடிவு செய்த இந்திய பேரசு ..முதலில் பெரும்படை கொண்ட தமிழகத்தை ஈழத்தில் இருந்த பிரிக்க வழிதேடிய இந்திய அரசு ..தமிழக மக்கள் ராஜீவ் காந்தி மீது நம்பிக்கையும் ஆதரவும் கொண்டிருந்த காலமது ...தமிழக மக்கள் ஆதரவை கொன்ன்டிருந்த ராஜீவ் காந்தியை தமிழகத்தில் வைத்து கொலை செய்து அதை விடுதலை  புலிகள்   செய்ததாக நம்பவைத்து ..புலிகளை தமிழகத்தில் இருந்து அன்னியபடுத்த நினைந்த இந்திய அதில் வெற்றியும் கண்டது .அன்று நடந்த அந்த கசப்பான சம்பவம்,, ஈழ ? தமிழகம் ? இடையே பாரிய இடைவெளியை உண்டுபண்ணியது ... அறியாமையின் காரணமாக இந்திய அரசின் சூழ்ச்சியை நம்பிய மக்கள் அதன் பின்பு தமிழகம் எங்கும் எதிர்ப்பு அணிகளை உருவாக்கியது ..இதற்கும் காரணமாக இந்திய என்ற அரசே பின்புலத்தில் இருந்தது ..


ஒரு போராட்டத்தை அழிக்க வேண்டும் என்றால் ..முதலில் போராட்டத்தின் அரண்களாக இருக்கும் மக்கள் சக்தியை பல பிரிவுகளாகவும் பல குழுக்களாகவும் பிரிக்க வேண்டும் ..ஒரு போராட்டத்தின் வலிமையே மக்கள் என்னும் சக்தியில் இருந்தே பிறக்கிறதுஅந்த மக்கள் சக்தியை ...இந்த மக்கள் சக்தியை சூழ்சி வலைகொண்டு பிரிக்க நினைந்தது இந்திய ..அதில் முதல் கட்டமாக தமிழக மக்களிடையே வெற்றி கண்ட இந்திய அரசு ..அடுத்த கட்டமாக ஈழம் பக்கம் தன பார்வையை திருப்பிய இந்தியா ..ஈழ மக்களுக்குள் பல எதிரிகளை துரோகிகளை உருவாக்கி எமது போராட்ட ஆயுள் வரை உடுருவ வைத்து ..விடுதலை போராட்டத்தை சிதைக்க முடிவு செய்த அரசு.. அதற்க்கு முப்பது வருடங்கள் காத்திருந்தது ...அதற்க்கு துரோகி கருணாவும் நம்பிக்கை துரோகமும் கைகொடுக்க ..கருணாவை தன பக்கம் இழுத்த இந்தியா சிறிலங்கா அரசுகள் ..துரோகியை வைத்தும் பிரதேச வாதம் என்னும் கருக்கலைப்பை செய்து போராட்டத்தை சற்று பலமிழக்க வைத்தது...இதனால் எமக்குள் கரையான் போல பிரிவினை அதிகமானதே ஒழிய ஒற்றுமை எம்மை விடு வெகு துரம் சென்றுவிட்டது ...


 அன்று செய்து முடிக்காததை இன்று இந்திய என்னும் பேரசு செய்து முடித்துள்ளது ..என்றால் நாம் வளரவில்லைய? நாமும் பலமாகத்தான் இருந்தோம் ...இந்த உலகத்திற்கு ஏற்ப எமது போராட்டமும் வளர்ச்சி அடைந்தது ..பல சாதனைகளை படைத்தது உலக அரங்கில் எமக்கு என்று ஒரு தனி இராணுவம் உள் கட்டுமானங்கள் ..ஒரு நாட்டுக்கு தேவையான எல்லாம் இருந்தும் நாம் இன்று வாழ்விழந்து நிற்கின்றோம் ....  வியட்நாமில் அமெரிக்க படைகள் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய வியட்நாமிய மக்கள் பல அழிவுகளையும் சந்தித்தார்கள் ..அனால் அங்கு மக்கள் சாதி மதம் இல்லாமல் ஒற்றுமையாக போராடினார்கள்.அமெரிக்க வியட்நாமை விட்டு வெளி ஏறுவதுக்கு முக்கிய காரணமாக கருதபட்ட ஒன்று ..வியட்நாமில் அமெரிக்க படைகள் நடத்திய ஒரு விமான குண்டு வீச்சில் பல்லாயிரம் மக்கள் கொல்லபட்ட போது ..அந்த குண்டு வீச்சுக்குள் இருந்து ஒரு சிறுமி நிர்வாணமாக அழுதபடி ஓடிவரும் காட்சி அதை எல்லா வியட்நாமிய ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் ஒலிபரப்பு செய்தன ..அதைபார்த்த அமெரிக்க மக்கள் அமெரிக்க அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து தீவிரமாக போராடினார்கள் இதனால் அமெரிக்காவுக்கு அழுத்தங்கள் அதிகமாக அமெரிக்க வியட்நாமை விட்டு வெளியேற வேண்டிய சுழல் ஏற்பட்டது ...


 எமது இனத்தில் எந்த இன அழிப்பும் நடக்கவில்லையா? எந்த சிறுமியும் படுகொலை செய்யப்படவில்லைய ? யாருமே பாலியல் வர்புனர்ச்சிக்கு உட்படுத்த படவில்லையா? எல்லாமே நடந்தது அனால் எம்மிடம் உடகங்கள் இல்லையா ? தொலைக்காட்சிகள் இல்லையா? எவ்வளவோ இருக்கின்றன ? அனால் எதுவுமே தமிழர்களுக்கு உரிமைகளை காப்பதுக்காக இல்லை..முக்கியமாக ஈழ போராட்டம் ஈழ மக்கள் அழிக்கபட்டதுக்கு முக்கிய காரணம் இந்திய ..அனால் இந்தியாவில் ஈழ படுகொலைகளை எதிர்த்து எத்த ஊடகமும் எந்த தொலைக்காட்சியும் போராடவில்லை ? ஏன் தன இனம் அழியும் போது எமது தாய் உறவுகள் வேடிக்கைதான் பார்த்தார்கள் ..தாய் உறவுகள் போராடினார்கள் மறுப்பதுக்கு இல்லை ஆனால்? பல பிரிவுகளாக அந்த போராட்டதுக்குள்ளும் சாதி மதம் கட்சி வேறுபாடுகள் பதவி ஆசைகள் நடிப்புகள் இப்படி பல நாடகங்கள் ..ஒரு லட்சத்திற்கும் மேலாக ஈழ மக்கள் படுகொலை செய்யப்படும் போது ..போராடியவர்கள் ஒரு லட்சம் வருமோ என்று தெரியவில்லை இதுதான் ஒரு தாய் பிள்ளைக்கு கொடுக்கும் ஆரவனைப்பா? இன்று உலகத்தை சாட்டு போக்கு சொல்லிக்கொண்டு காலத்தை கடத்துகின்றோம் ..மனசாட்சி ஒன்று இருக்குமேயானால் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் நாம் செய்தது தவற சரியா என்று ?


இந்த   தொலைக்காட்சிகள் எம்மின அழிப்புக்கு துணை போனவையோ அவைதான் இன்று எங்களின் கதாநாயகர்கள் ? யார் எம் இனத்தை அழித்தார்களோ அவர்களே இன்று உறவுகள் ..தமிழனின் மானம் மரியாதை வீரம் எல்லாவற்றையும் வாடகைக்கு விட்டு விட்டீர்களா ? இல்லை மழுங்கி விட்டதா ? உறவுகளே கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் நீங்கள் எங்கள் இடத்தில் இருந்து சிந்தியுங்கள் நாம் படும் வேதனைகளை நீங்கள் அறிவீர்கள் ..எமது வேதனைகளையும் நாம் படும் துன்பங்களையும் வார்த்தைகளால் நாம் சொல்லிவிட முடியாது ..நீங்கள் உடகங்களில் பார்த்தது எல்லாமே பத்து சதவீதம் கூட இல்லை ..இன்னும் தொண்ணுறு சதவீதம் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சுக்குள் சொல்லமுடிய துயரங்களாக மறைந்து கிடக்கின்றன ..நீங்கள் கண்ணீர் வடிப்பதால் எமக்காக கவலைகள் கொள்ளுவதால் நாம் நின்மதியாக வாழ்ந்துவிடுவோம் என்று நினைக்காதீர்கள் ..நாம் வாழவேண்டுமாயின் நீங்கள் போராடியே ஆகவேண்டும் நாம் அழிய வேண்டுமாயின் நீங்க ஒன்றுமே பண்ணவேண்டியது இல்லை இதே மவுனத்தை கலைக்காமல் இருந்தால் ஈழம் என்று ஒன்று இருந்தாக வரலாறு இருக்கும் ஈழ மக்கள் இருக்க மாட்டார்கள் ..அன்று எம்மை தாக்கிய வஞ்சக புயல் இன்று உங்களை தொடர்கிறது ..இன்று எமக்காக தாய் உறவுகள் நீங்கள் நாங்கள் கிளர்ந்து எழும் போது எம்மை சூழ்சிகள் பலகொண்டு அழித்த அதே இந்திய அரசுதான் இன்று உங்களை வேறு தளத்திற்கு திசை திருப்பிக்கொண்டு இருக்கிறது ..


 அதுதான் கேரளாவில் இன்று நடக்கும் முல்லைபெரியார் ஆணை பிரச்சனை ..இது உங்களுக்கு வெறும் தண்ணீர் பிரச்சனையாகவோ இல்லை ஆணை பிரச்சனையாகவோ இருக்கலாம் ..அனால் இதன் உள்நோக்கம் வேறு மீண்டும் ஒரு முறை இந்திய அரசு ஈழம் தமிழகம் என்று பிரித்ததும் சூழ்சி ஒன்றை கையாள தொடங்கியுள்ளது ..இன்று தமிழக மக்களும் உணர்வாளர்களும் கேரளா பக்கம் திசைதிருப்பிய இந்திய அரசு எதோ ஒன்றை சாதிக்க நினைக்கிறது.என்பது மட்டும்  உண்மை அதை காலம் தான் சொல்லும் ஏனெனின் இந்திய அரசின் சூழ்சிகள் காலம் காலமாக நடைபெற்ற ஒன்று . ..அது தமிழர்கள் நலன்களில் இல்லை என்பது மட்டும் தெளிவனது..நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ஈழ பிரச்சனை இன்று தமிழகத்தில் உணர்வுகளாக திரும்புகின்ற நேரத்தில் மீண்டும் ஒரு முறை ஈழ தேசம் மீது தாய் உறவுகள் பார்வை விழ விட   கூடாது என்பதுக்காக திசைதிருப்பும் நோக்கில் இன்று கேரளா பிரச்சனையை இதற்குள் தள்ளி உங்களை திசைதிருப்ப முயல்கிறது ..இதில் தன் மக்களை பலிகொடுத்து சிறிலங்காவை  காப்பாற்றும் திட்டமாக இருக்கலாம் ..இன்னு ஒன்று பேரறிவாளன் ,சாந்தன் , முருகன் ..இவர்களுக்கான தண்டனைகளை நிறை வேற்ருவதுக்காக இருக்கலாம் ..இது நாம் கடந்து வந்த பாதைகளின் அனுபவம் ..எது எப்படியாயினும் தமிழக மக்கள் தன் இனத்துக்காக எதுவரினும் ஒன்றுபட்டு செயற்பட்டால் ஒழிய தமிழ் மக்களை எவராலும்  காப்பற்ற முடியாது ...


 நாம் இந்த உலகத்தில் வாழ வேண்டுமாயின் ..விழுந்தும் எழும்பியும் போராடியும் ஆகவேண்டும் என்பது இந்த உலகத்தின் நியதி ..அலையலையாக எழவேண்டும்.... தமிழரின் மானமும் வீரமும் பண்பாடும் காப்பதற்கு

 ""மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுகந்திர தமிழீழம் தமிழகம் மலரட்டும்"""

 "ஈழ மைந்தன் யாழ்"

4 comments:

  1. நல்லதொரு விழிப்புணர்வுப்பதிவு

    ReplyDelete
  2. பெரும் படைபலம் இல்லாத போது விடுதலை வீரர்களை நெருங்க முடியாத இந்திய அரசு பெரும் ஆயுத படை பலம் இருக்கின்ற வேலையில் நெருங்கியதெனில் சூழ்ச்சிதான் காரணம்,, மஹாபாரதத்தில் சகுனியின் சூழ்ச்சியை போன்றது,,, இலங்கை இந்திய அரசின் இந்த வெற்றி நிரந்தரமற்றது,, குறிப்பாக சொல்லபோனால் இது அவர்களின் வெற்றியே அல்ல, இலங்கை இந்திய அரசின் கோழைத்தனத்தின் வெளிப்பாடு!!!

    ReplyDelete
  3. உண்மைதான் ஆதித்தியா சகோதர ..அதர்ம வெற்றி என்றுமே நிலைக்காது

    ReplyDelete

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை