
""பண்பாட்டுக்கு இசைவாக பண்பாடு தமிழிசை பண்பாடு.தமிழன் வரலாற்று வரிகளையே நீ பாடு வீர வரலாற்று வரிகளையே நீ பாடு"""
பேரளவில் பலரும் இவரை அறிந்திருந்தாலும் இவர் ஆற்றிய பணிகள் பலருக்கும் தெரியாதவை .எந்நேரமும் விடுதலை என்ற லட்சியத்தை மூச்சாக சுவாசித்தவன் போராளிகளின் அன்புக்கும்
பத்திரத்துக்குமாக விளங்கியவன் இன்று எல்லாம்குளம் துயிலும் இல்லத்தில் காற்றோடு காற்றாகி மண்ணோடு மண்ணாகி துயிலுகின்றான்.ஈழத்தாயின் இனிய புதல்வரின் ஒருவரான இவர் தமிழ் ஈழத்தின் கம்பர் மலையென்னும் இடத்தில் டிசம்பர் திங்கள் (25 ) ஆம் நாள் (1959 ) ஆம் ஆண்டு சின்னதம்பி மகேஸ்வரி இணையருக்கு முன்றாவது மகனாக பிறந்தான்.ரவீந்திரன் என இவனுக்கு பெயரிடபட்டது .ஞானம் மற்றும் சின்னவர் என இவனுக்கு மூத்த சகோதரர்கள் உள்ளனர்.முன்று ஆண்பிள்ளைகளோடு மகிழ்வாக சின்னதம்பி மகேஸ்வரி இணையரின் வாழ்வு நகர்ந்தது.ரவீந்திரனுக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கையில் தந்தை சின்னதம்பி அவர்கள் இறந்துவிட்டார். தந்தையவர்கள் இறந்துவிடவே மூத்த அண்ணன் ஞானத்தின் உழைப்பாலும் ஒன்றுவிட்ட சகோதரன் சுந்தரம் அவர்களின் உதவியோடும் ,பட்டன் பட்டியின் உதவியோடும்,இவர்களது வாழ்வு நகர்ந்தது.
ரவீந்திரன் தனது தொடக்க கல்வியினை கம்பர்மலையிலுள்ள விராட்சி அரசினர் கலவன் பாடசாலையில் கற்றார்.தொடர்ந்து மேற்படிப்புக்காக வல்வெட்டி துறையிலுள்ள சிதம்பரா கல்லூரிக்கு சென்றார் .இக்கல்லூரியில் இவர் கல்விபயின்ற காலத்தில் தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் அங்குதான் கல்வி கற்றார்.இதனால் இவர்கள் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது.தமிழ் மொழி மீதும் பண்பாட்டின் மீதும் இருந்த ஆர்வத்தினால் மொழி தொடர்பான பல நிகழ்வுகளுக்கும் சென்றுவருவார் ரவீந்திரன் .வளம் மிக்க கம்பர் மலையின் வழியெங்கும் இவன் தடமிருக்கும்.கம்பர் மலையானது வல்வெட்டித்துறை வல்வெட்டி ,உடுப்பிட்டியை எல்லைகளாக கொண்டதோடு தன்னகத்தே வடக்கே தீருவில் குளத்தையும்,மேற்கே நெற்கொழு குளத்தையும் .தெற்கே விராட்சி குளத்தையும் உள்ளடக்கிய நீர்வளம் நிறைந்த பசுமையான மண் .தமிழீழ மண்ணை காத்த மண்ணின் மைந்தர் பலரும் இம்மண்ணையே தாய் மண்ணாக கொண்டவர்கள்.
அதில் ரவீந்திரன் என்ற கப்டன் பண்டிதரும் முதன்மையானவர்.தமிழ் மொழி மீதும் மக்கள் மீதும் கொண்ட அளவுகடந்த பற்றினால் தமிழர்கள் ஒடுக்கபடுவதை கண்டு மனதுக்குள்ளையே புழுங்கினார்.விடுதலை பாடல்களை தன பாட நுல்களில் எழுதி அப்படல்களிலுள்ள பொருளை ஆழமாக உணருவான்.வீட்டில் இருந்தபடியே பல விடுதலை செயற்ப்பாடுகளை செய்துவந்த ரவீந்திரன். (1977 ) ஆம் ஆண்டில் தமிழினத்தின் விடுதலைக்காக போராடும் ஒழுக்கத்தில் சிறந்த விடுதலைப்ப்புலிகள் இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொள்ள விருப்பம் தெருவித்தார்.இதன் காரணமாக தமிழீழ தேசிய தலைவர் அவர்களை சந்தித்தார்.இருப்பினும் இயக்கத்தின் தொடக்ககாலம் அந்த காலம் என்பதினால் இவரை உடனடியாக இயக்கத்தில் சேர்த்துக்கொள்ள முடியவில்லை.
உறுதியான இயக்கத்தை கட்டியெழுப்ப லட்சிய உறுதியில் இரும்பு மனிதர்களாக இருப்பவர்களையே தேசிய தலைவர் அவர்கள் வடிகட்டி சேர்த்து கொள்வார்.அப்படியான வடிகட்டுதலுக்கும் அடையாளம் காணுதளுக்குமான கால அவகாசம் தேவைப்பட்டது.இதன் காரணமாக ரவீந்திரனை சிறிது காலம் வீட்டிற்கு சென்று இருக்கும்படி காலம் வரும்போது சேர்த்து கொள்வதாக தலைவர் அவர்கள் கூறினார்.ஆஸ்மா நோயின் கொடிய பிடியில் சிக்கியதால் மிகவும் மெலிந்து காணப்பட்ட ரவீந்திரனின் உள்ளத்தில் விடுதலை உணர்வு வின்னைதொட்டு நின்றதை அடையாளம் கண்டுகொண்ட தலைவர் அவர்கள்(1978 ) ஆம் ஆண்டில் இயக்கத்தில் அவரை இணைத்து கொண்டார்.ரவீந்திரனாக இயக்கத்தில் இணைந்து கொண்டவனுக்கு பண்டிதர் என்று இயக்கபெயர் சூட்ட பட்டது.இவனை மற்றைய போராளிகள் இளங்கோ என்று அழைத்தார்கள்.விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்ட பண்டிதன் அவ்வமைப்பின் நிதி ,ஆயுதங்களுக்கு பொறுப்பாளனாக முதலாவது யாழ் மாவட்ட பொறுப்பாளனாக மத்திய குழு உறுப்பினராக செயற்பட்டு வந்தார்.
தமிழீழ தேசிய தலைவரிடம் இருந்து நிறையவே கற்று கொண்டார்.அவரிடம் இருந்து எளிமை ,ரகசியம் பேணும் தன்மை ,மக்களை ஆழமாக நீசிக்கும் பண்பு என்பவற்றை நன்றாகவே கற்றுகொண்டார் பண்டிதர்.எல்லாவற்றிலும் பார்க்க தலைவரிடத்தில் இருந்த நேர்மைதான் இவனுள் ஆழமாக புகுந்து கொண்டது.இதனை அவதானித்த தலைவர் அவர்கள் இவன் இணைந்துகொண்ட சில நாட்களிலையே இவனிடம் இயக்கத்தின் முழு நிதி பொறுப்பையும் கொடுத்துவிட்டார் .எல்லோருக்கும் மாதம் முதல் நாளில் அந்த மாதத்திற்கான கொடுப்பனவு பண்டிதரால் கொடுக்கபட்டுவிடும்.நாள்தோறும் சாப்பாட்டு சிலவு ,பத்துருபாய் வீதம் கணக்கு பார்த்து கொடுக்கப்படும் .இந்த பணத்துக்கான சிலவுகணக்கு மாதம் முடிவில் பண்டிதரிடம் கொடுக்கபட்டால்தான் அடுத்த மாதத்திற்கான பணத்தினை அவர்கள் பெற்றுகொள்ள முடியும்.தலைவர் உட்பட அனைவருக்கும் இதே வரையறையைத்தான் பண்டிதர் வகுத்து வைத்திருந்தார்.
ஒவ்வொருவரின் கணக்கு துண்டுகளையும் பார்த்து அதிலிருக்கும் அதிகளவான செலவுகளை குறைப்பது தொடர்பாக அவர்களோடு அவன் கதைக்கும் பாங்கு மிகவும் சிறந்தது.பகல் முழுவதும் அங்கும் இங்கும் என்று இயக்க வேலைகளுக்காகவும் மக்களை சந்திப்பதற்க்ககவும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஓடிக்கொண்டே இருப்பான்.இரவு இவன் தங்குமிடத்தில் அனைவரும் துங்கிய பின்னரும் இவன் தனித்து குப்பிவிளக்கின் மெல்லிய வெளிச்சத்திலையே அன்றைய கணக்குகளை எழுதிக்கொண்டு இருப்பான்.மிக வேகமாகவே பண்டிதர் அனைவரது தேவைகளையும் அனைவரது கோரிக்கைகளையும் உள்வாங்கி இயக்கத்தை நிர்வகிக்கும் ஒருவனாக மாறிப்போனார்.நிதியை திறம்பட கையாண்ட அவனிடம் மீண்டும் ஒரு பொறுப்பை தலைவர் அவர்கள் எண்பதுகளின் தொடக்கத்தில் வழங்கினார்.அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தினதும் பொறுப்பாளன் ஆகினர் கப்டன் பண்டிதர்.
நிதி பொறுப்பு என்பதயும் விட ஆயிரம் மடங்கு சிரமானது ஆயுத பொறுப்பு .அந்த நேரம் இவர்களிடம் இருந்த ஆயுதங்களின் ஒரு பகுதி என்னேரமும் நிலத்துக்கு கிழாக மறைத்து வைக்கபட்டிருக்கும்.அப்படி புதைத்து வைக்கபட்டிருக்கும் ஆயுதங்களின் விபரங்கள் அவை வைக்கபட்ட திகதி மீண்டும் எடுத்து மீளாய்வு சரிபாக்கபட்டு வைக்கபட்ட திகதி என்று அனைத்தும் இவனால் அழகான முறையில் எழுதப்பட்டு ஆவணபடுத்தபட்டிருக்கும்.அனால் என்ன அதை வேறு யாருமே பார்க்க முடியாது .இத்தகைய ஆவணம் எதிரியின் கையில் கிடைத்தால் அனைத்து ஆயுதங்களும் பிடிபட்டுவிடும் என்பதால் பண்டிதர் ஒரு ரகசிய எழுத்துமுறையினை கண்டுபிடித்தார்.அந்த முறையில்தான் அவற்றை எழுதி வைத்திருப்பார் .இவரேளுதும் இந்த ரகசிய எழுத்துக்களை இயக்கத்தில் படிக்க குடியவர்களாக இருந்தவர்கள் தலைவர் அவர்களும் லெப்டினன் சங்கர் அவர்களும் ரஞ்சன் லாலா ஆகியோர் மட்டுமே.
விடுதலை அமைப்பு தொடர்ப்பான செய்திகள் தமிழர்கள் மீதான சிங்கள பேரினவாத தாக்குதல் செய்திகள் என்று அனைத்தையும் வெட்டி எடுத்து ஒட்டி தொகுத்து அழகாக வைத்திருந்தான். (1983 ) ஆம் ஆண்டு இனப்படுகொலை நிகழ்வின் பின்னர் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெரும் ஆதரவால் அங்கு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதன்மை கட்டமைப்பு நகர்ந்தபோது விடுதலைப்போராட்டம் பற்றிய பழைய செய்திகளை ஆர்வத்தோடு கேட்ட பத்திரிகையளர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் கொடுப்பதற்கு பண்டிதர் சேகரித்து வைத்திருந்த ஆவணங்கள் தான் மிகவும் உதவியாக இருந்தனவாம்.ஒரு பெரும் விடுதலை அமைப்பை கட்டி வளர்ப்பதில் தலைவருக்கு மிகவும் நெருக்கமாக நின்று உழைத்தவர் கப்டன் பண்டிதர்.பல்வேறுபட்ட திறமைகளை தன்னகத்தே கொண்ட பண்டிதர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கு மிகவும் வேண்டியவராக அவரது வலது கையாக திகழ்ந்தார்.இயக்க நிர்வாக பொறுப்புகளை சுமந்து வந்ததோடு மட்டுமல்லாது பல கெரில்லா தாக்குதல் நடவடிக்கைகளிலும் இவர் பங்குபற்றினார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் பல்வேறு துறைகளிலும் திறம்பட செயற்பட்டார் கப்டன் பண்டிதர்.அன்று ஜனவரி திங்கள் ஒன்பதாம் நாள் (1985 ) ஆம் ஆண்டு கப்டன் பண்டிதர் உட்பட தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மை உறுப்பினர்கள் பத்துபேர் வரை அச்சுவேலி பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் சுற்றிவளைப்புக்குள் மாட்டி கொண்டனர்.முற்றுகையை உடைத்துக்கொண்டு அனைவரும் வெளியேறிய வேளை முற்றுகைக்குள் விட்டுவந்த ஆவணங்களை எடுக்கசென்றபோது சிறிலங்கா இராணுவத்தினர் இவர்கள் அனைவரையும் நெருங்கி விட்டனர்.தமிழீழ விடுதலை போருக்கு உங்கள் அனைவரின் பங்கு மிகவும் முதன்மையானது நீங்கள் அனைவரும் தப்பித்து சென்றுவிடுங்கள் நான் இவர்களோடு இறுதிவரை போராடுகின்றேன் என்று தன்னுடைய துப்பக்கிரை எடுத்து நீட்டியவன் சிறிலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலில் வீரச்சாவை தழுவி கொண்டான் ..ஜனவரி திங்கள் (9 ) நாள் ( 1985 ) ஆம் ஆண்டு வீரச்சாவை தழுவிக்கொண்டான் கப்டன் பண்டிதர் ..துக்கம் சோர்வு உணவு என்று எல்லாம் மறந்து என்னேரமும் இயங்கிவந்த இவன் தமிழீழ மண்ணை முத்தமிட்டான்.
"""மானம் ஒன்றே வாழ்வென கூறி வழியில் நடந்தான் மாவீரன் .அவன் போன வழியில் புயலென எழுந்து போரில் வந்தான் புலிவீரர்..உலக படைகள் ஒன்றாக வரினும் உரிமை தன்னை இழப்போமா .அந்த நிலவும் கடலும் சான்றாக எங்கள் நிலத்தில் ஆட்சி எடுப்போமா"""
கடலால் வந்திறங்கும் பொருட்களை இறக்கி சரியான இடத்தில் வைக்கவேண்டுமா அங்கும் பண்டிதந்தான் .தென் தமிழீழத்தில் இருந்துவரும் ஒரு நிதி தொடர்பான அல்லது ஆயுதம் தொடர்பான செய்தியாக இருந்தாலும் அவற்றை கவனித்து கொள்ளுவதும் பண்டிதந்தான் .போராளிகளின் காலணிகள் கிழிந்து விட்டனவா கூப்பிடுங்கள் பண்டிதனை ..ஒரு சிறு முகாம் அமைக்க வேண்டுமா அதுவும் பண்டிதரே போய் பார்த்து சரிசெய்ய வேண்டும் . தமிழகத்தில் இருந்து அமைப்புக்கு ஒரு பெரும்தொகை வருகின்றதா பண்டிதர்தான் அங்குசென்று அதனையும் கணக்கில் வைக்கவேண்டும் .இத்தனையும் செய்துகொண்டு ஒரு பழைய சாறத்துடனும் சில வேளைகளில் கசங்கிய கர்சட்டையுடனும் திரியும் எளிமையான தோற்றம் இவனுடையது .மிகவும் எளிமையானவன் அனால் இவனுக்குள் இருந்த விடுதலை நெருப்பு எரிமலை போன்றது .அது என்றுமே சாகாது இவனின் நினைவுகள் போலவே என்றென்றும் வாழ்ந்திருக்கும் இவன் நினைவுகளை சுமந்தபடி யாழ்ப்பாணம் கந்தர் மடத்தில் தமிழீழ விடுதலை புலிகளால் பண்டிதர் சரணாலையம் என்ற பெயரில் விலங்ககம் அமைக்கபட்டு நுழைவாயிலில் பண்டிதரின் உருவப்படம் வைரையபட்டு பண்டிதர் சரணாலையம் என்று அருகில் குறிப்பிட பட்டிருக்கும் .
அங்கு பல்வேறு வகையான விலங்குகளும் பறைவைகளும் கட்சிக்கு வைக்கபட்டு இருந்தன .அது மட்டுமல்லாமல் அங்கெ சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏற்றவகையில் ராட்டினங்களும் அமைக்கபட்டு இருந்தன.பண்டிதர் சரனாளையம் என்ற பெயரில் சிறுவர்களுக்கான மகிழ்வாளையமாக அது அமைந்தது .இது மட்டுமல்லாமல் வன்னியிலும் வெளிநாடுகளில் இருந்து வருகின்ற விடுதலை உணர்வாளர்கள் தங்கிசெல்வதர்க்காகவும் அமைக்கபடிருந்த இல்லத்திற்கும் கப்டன் பண்டிதரின் நினைவாக பண்டிதர் இல்லம் என்றும் பெயரிடபட்டு இருந்தது.தமிழீழ விடுதலைப்புலிகளின் துனைத்தளைவனாக செயற்பட்டவனே கப்டன் பண்டிதனே உனது வாழ்க்கை ஈகைச்சுடர் தாயகத்தின் சுகந்திர வானில் உனது தியாகம் அழியாச்சுடர்.காலம் உள்ளவரை தமிழீழம் உள்ளவரை தமிழ் மக்கள் மனங்களில் என்றுமே நீங்காது வாழ்ந்திருப்பாய் ..கம்பர் மலையில் பிறந்து அச்சுவேலியில் மடிந்து விடுதலை காத்தவனே நீ செய்த அர்பணிப்பு அத்தனைக்கும் நாங்கள் சொல்லுவது எல்லாம் நிச்சயம் தமிழீழம் மலரும் அந்த நாளில் உன் மற்றைய மாவீரர் தோழர்களோடு வானிலிருந்து பூ சொரிவாய் ..விடி வெள்ளியாக கார்த்திகை பூவாக உன்னை நாங்கள் எந்நாளும் கண்டுகொள்வோம் .நன்றி உணர்வோடு உன்னை வணங்கி கொள்ளுவோம் ...
""எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டு செல்கின்றோம் ..இவர்கள் சிந்திய குருதி ஈழம் மீட்பது உறுதி ..""
**ஒலிவடிவில் கொடுத்தவர்
கனேடிய தமிழ் வானொலி
தமிழ்நதி கார்த்திகா**
***எழுத்து வடிவில் ஈழம் தேவதை***
.**.இந்த வரலாற்று பதிவை எமக்கு ஒலிவடிவில் வழங்கியவர் கனேடிய தமிழ் வானொலி .தமிழ்நதி கார்த்திகா ..அவருக்கு நாம் எமது நன்றியை கூறி கொள்கின்றோம்**...
No comments:
Post a Comment