வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Saturday, January 28, 2012

எல்லோருக்கும் விழிகள் உண்டு ஒரு சிலருக்கே தரிசனம் உண்டு

 எல்லோருக்கும் விழிகள் உண்டு, உலகினைப் பார்க்க

ஆனால்
ஒரு சிலருக்கே தரிசனம் உண்டு, காலத்தைக் கடந்து  
உலகினைப்பார்க்க.
இப்படி ஒரு அறிஞன் கூறிய தரிசனநோக்கு
ஈழத்து மண்ணிலும் கனன்றது ஒருசிலரிடம்
அக்கனலின் ஒரு பொறி
விடுதலைத் தேவியின் வயிற்றில் விழுந்து
நம் தமிழ்ஈழ நாடெனப் பிறந்தாள்.
56ல் ஆரம்பித்த
பேரின ஆதிக்கம் ஓங்குதற்கு முன்னரே,

தலைப்பாகை அணிந்த நம் அரசியல் தலைமைகள்
பல்லக்கில் காவப்பட்ட உபசரணை வெறியில்
குருடராகிப்போன அக்காலத்தில்
தமிழ் ஈழமண்ணின் முழுமையின் தரிசிப்பாய்
விபுலானந்த முனிவன் எம்முன் நிற்கிறான்.
அவன் தரிசன நோக்கின் ஓர் சிறு அலகாய்
‘யாழ்நூல்’ இசைந்தது.
***********************************************************************************
இதையும் கேளுங்கள் உறவுகளே
************************************************************************************

மட்டுநகர் வாவியின் மீன்பாடும் இசையில்
தோய்ந்த அந்நூல்
தமிழ் ஈழ மண்ணின் முழுமையின் மோகிப்பாய்
தமிழர் பண்பாட்டின் தொன்மையின் விகசிப்பாய்
எங்கும் எழுகிறது.
விபுலானந்த முனிவன் விட்டதின் தொடராய்
தமிழ்ப்பெரும் ஆசான் கணபதிப்பிள்ளை
என்றொரு மனிதனின் இன்னோர் எழுச்சி! பேரின ஆதிக்கம் விசிறிய வெக்கையை
தன்னில் உணர்ந்தவன்.
தமிழின சங்காரம் நிகழப்போவதை
அவன் நெஞ்சறிந்தது.
அதன் பதில் குறியாய்
‘சங்கிலியன்’ என்றொரு நாடகம் தந்தான்.
அதில் அவன் வரைந்த முன்னுரை இன்னும்
நம் தமிழ் மண்ணின் காப்புக்கான
ஆவணமாயிற்று.
இன்னும் ‘துரோகிகள்’ என்றொரு வீரநாடகம்,
‘தவறான எண்ணம்’ மற்றோர் நாடகம்
இவைகள் அனைத்தும் பேரின ஆதிக்கத்தை ஆயுதம் கொண்டு எதிர்த்துப் போராடக் கூவியழைத்தன.
ஆனால் பழைமைபேண் நமது தமிழ்த் தலைமைகளோ
தரிசனமற்ற குருடராய் இருந்தனர்.
இதற்குப் பின்னர், சிங்கள நாட்டில் தொழில்பார்த்திருந்த
‘மு.த’ என்று பின்னர் தெரியவந்த
நம் தமிழ் இளைஞன்
56லும் 58லும் நம் தமிழ் மக்கள் பட்ட அவலம்
கண்டு கொதித்தான்.
தஞ்சம் அளிக்கும் கோயிலுக்குள்ளும் காடையர் புகுந்து
கோயில் பூசகரையும் இழுத்துவந்து
பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய கொடுமை...
பேரின வாதிகள் கையில் தமிழர்
கற்பூரம் போன்று எரிந்து சாவதா?
அவன் நெஞ்சு கொதித்தது
உடனிருந்து வாழ்தல் பொய்யெனக் கண்டான்
‘ஒரு தனி வீடு’ நமக்கினித்தேவை
என்பதை அவனது நாவல் விளக்கிற்று.
இரத்தம் சிந்தாமல் உரிமை கிடைக்காது
என்ற உண்மையை
‘இரத்தம்’ என்றொரு சிறுகதை அறைந்தது.
ஆயினும் சமஷ்டி கேட்ட எம் அரசியல் தலைமைகள்
அரைகுறைப் பார்வையால் ‘அகிம்சை’ என்றனர்
இடைக்கிடை விழித்து ‘அகிம்சை தோற்றால்
ஆயுதம் தூக்கவும் அஞ்சோம்’ என்றனர்.
எதிலும் தெளிவற்று காலத்தை ஓட்டினர்.
பேரினவாதம் இறுக்கியது எம்மை.
எங்கள் இளைஞர் நாளத்தில் ஓடிய
இரத்தம் கொதித்தது.
புதிய போராட்டத் தரிசனம் சித்தித்தது.
அதன் விளைவாக எங்கள் விடுதலைப் போர்வரலாறு
இரத்தம் தோய்ந்த பாய்ச்சல் கண்டது.
எத்தனை அழிவு! எத்தனை துன்பம்!
எங்கள் இளையவர் தற்கொடை ஆற்றலில்
எங்கள் அடையாளம் மீண்டும் உயிர்த்தது.
எங்கள் அடையாளத்தை தக்கவைக்க
எங்கள் போராட்டம் நீண்டு நீண்டு வரலாறு எழுதிற்று.
இப்போ எம்வரலாறு தன் இலக்கை அறிந்து
தரிப்பிடம் நோக்கித் தானாய் நடக்குது.
அதுவே இன்றைய எம் பெருந்தலைமையின்
தீர்க்க தரிசனம்.
மு.பொ.
கவிஞர்,
விமர்சகர், படைப்பாளி, தமிழீழம்.
 








 நன்றி வேலுப்பிள்ளை பிரபாகரன் இணையம்

உறவுகளே இந்த  பக்கத்தை உங்கள் நண்பர்கள் உறவுகளிடம் கொண்டு சென்று சேருங்கள் (SHARE   ) பகிருங்கள் என்னும் பகுதியை சொடுக்கி நண்பர்கள் அனைவரிடமும் கொண்டு செல்லுங்கள்






1 comment:

  1. அருமை ... வாழ்க ! வளர்க !! nice baby....

    ReplyDelete

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை