வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Sunday, December 11, 2011

வான் படைத் தளபதி கேணல் சங்கர் வரலாறு

வான்படை தளபதி கேணல் சங்கர் ..

காலத்தின் தேவை கருதி வீட்டுக்கு ஒரு மைந்தனே விரைந்து வா அடிமை விலங்குடைக்க போராடுவோம் என்று அழைக்கபட்ட வேளையில் வீட்டில் இருந்த அனைத்து மைந்தருமே விடுதலைக்காக சென்ற வரலாறு கேணல் சங்கர் அவர்களின் குடும்பத்தில் நிகழ்ந்துள்ளது .தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களோடு உறுதுணையாக நின்று இருபது ஆண்டுகளுக்கு மேலாக தளராத உறுதியோடும் தமிழீழ விடிவே குறியாக கொண்டு செயற்பட்டுவந்த கேணல் சங்கர் அவர்கள் .தமிழீழ விடுதலை புலிகளின் பெரும் விருட்சமாக வருணிக்க பட்டார்.ஈழ விடுதலைக்காய் கொடுத்த விலைகளில் கேணல் சங்கர் அவர்களின் இழப்பும் ஒன்று .


செப்டம்பர் திங்கள் இருபத்துஆறாம் நாள் இரண்டாயிரத்து ஓராம் ஆண்டு காலை (10.45 ) மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில் சிறிலங்கா படையின் உடுருவல் பிரிவினால் மேற்கொள்ளபட்ட கிளைமோர் கண்ணிவெடி தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவை தழுவிக்கொண்டார்.அன்றைய நாளில் தியாகி திலீபன் அவர்களின் நினைவு எழுச்சி நிகழ்வுகளில் தமிழீழ மக்களும் போராளிகளும் உணர்வு புர்வமாக சங்கமித்திருந்த அந்த வேளையில் சிறிலங்கா அரசு மேற்கொண்ட அநாகரீக செயலானது சிறிலங்கா அரசின் போர்மீது உள்ள விருப்பை காட்டுவதோடு தமிழீழ மக்களினதும் போராளிகளினதும் நெஞ்சங்களில் அனலை முட்டி விட்டு இருக்கின்றது.இதே போன்று (1987 ) ஆண்டு இதே நாளில் தமிழீழம் ஒருமுறை நெஞ்சில் அனல் சுமந்து பொங்கி பிரகாசித்தது .சிறிலங்கா அரசின் அடக்குமுறைகளுக்குள் சிக்கி சின்னாபின்ன பட்ட தமிழீழ மக்களுக்கு வசந்தத்தின் வாசலை திறந்துவிடுவதாக கூறி அமைதிப்புற வேடமணிந்து எம்மண்ணில் காலுன்றியது இந்திய படை

ஆனால் காக்க வந்தவர்கள் நம்மை தாக்க தயாரானபோது ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தண்ணீரும் இன்றி உண்ணாநோன்பு இருந்து உயிர் தியாகம் செய்து பாரத அரசின் உண்மை முகத்தை உலகிற்கு அறிய செய்து காவியம் ஆகியவர் தியாகி திலீபன் அவர்கள் .அவரது உயிர் பிரிந்தபோது வரலாற்றில் என்றுமில்லாதவாறு நெஞ்சில் அனல் பற்றி எழ போன்கிஎளுன்தது ஈழ தமிழினம்.அங்கெ ஒளிர தொடங்கியது மக்கள் புரட்சி என்னும் புதிய விடுதலை ஒளி.பதினான்கு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே நாளில் தான் மேற்கொண்ட அநாகரீக செயலால் தமக்கு எதிராக போராடும் ஈழ மக்களது உணர்வுகளையும் போரிடும் வீரியத்தையும் இன்னும் இன்னும் அதிகரிக்க செய்கின்ற செயற்பாடுகளையே சிங்கள படைகள் செய்து காட்டுகின்றன என்பதை கேணல் சங்கள் அண்ணா படுகொலை காட்டி நிற்கின்றது.

 தமிழீழ தேசியத் தலைவனுக்கு உற்ற தோழனாய் போராளிகளுக்கு நல்ல ஆசானாய் பழகுவதுக்கு பண்பானவனாய் எதிரிக்கு ஒரு சவால் என இருபது ஆண்டுகளுக்கு மேலாக நன்கு செழித்து வேர்விட்டு விழுதுகளை பரப்பிய ஆலமரம் கேணல் சங்கர்.வல்வட்டி துறை தந்த வீர புதலவ்களின் வரிசையில் வழிவந்தவர்தான் கேணல் சங்கர் .சொர்ணலிங்கம் என்ற இயற்பெயரை கொண்ட கேணல் சங்கர் அவர்கள் செப்டம்பர் திங்கள் பதின் எட்டாம் நாள் (1948 ) ஆண்டு வைத்திலிங்கம் மனோன்மணி இணையருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார் .ஆறு மகன்களில் இரண்டாவதாக பிறந்த கேணல் சங்கர் அவர்கள் தனது தொடக்க கல்வியினை வன்னியில் உள்ள தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார் .அதனை தொடர்ந்து பருத்தி துறையிலுள்ள கட்லிக் காலேச்சில் தனது மேற்படிப்பை தொடர்ந்தார்.படிப்பு மட்டுமலாமல் விளையாட்டிலும் சிறந்த வீரன் கேணல் சங்கர் .


 துடுப்பாட்டம் கால்பந்தாட்டம் என மாபெரும் விளையாட்டு வீரனாகவும் திகழ்ந்தார்.தாயகத்தில் மட்டுமில்லாமல் தமிழகத்தின் சென்னை மாநகரத்திலுள்ள இன்ஜிநியரிங் கல்விகலா சாலையில் தனது மேற்படிப்பை தொடர்ந்தார். அங்கே கல்வியை கற்று பட்டங்களையும் பெற்றவர் .கனடாவின் மொன்றியல் நகரத்துக்கு இடம்பெயர்ந்து அங்கே வானுர்தி ஓட்டுனர் மற்றும் வானுர்தி தொடர்பான தொழில்நுட்ப கல்வியினை மேற்கொண்டவர் .எயர் கனடாவில் சிறிது காலம் பணிபுரிந்துவிட்டு தாயகம் திரும்பினார்.இது மட்டுமல்லாமல் இவருடைய இடைக்கால பருவத்தில் அதாவது விடுதலை புலிகள் இயக்கத்தோடு தன்னை முழுமையாக இணைத்து கொள்ளுவதற்கு முன்னதாக வெளிநாடுகளின் கடற்பரப்பில் பல்வேறு நாடுகளில் கப்பல்களில் பணிபுரிந்தார்.அனைத்து துறைகளிலும் அனுபவசாலியான இவர் தமிழீழ விடுதலை போருக்கு கிடைத்த ஒரு பெரு விருட்சம் தமிழீழ விடுதலை போருக்கு கிடைந்த பெரும் பேறு.ஈடுசெய்ய முடியாத இவருடைய இழப்பு தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் கூட பேரிழப்பாக பதியப்பட்டது.


 (1981 ) ஆண்டின் தொடக்க நாட்களில் தனது சகோதரன் மூலமாக தமிழீழ விடுதலை போராட்ட பாதையில் தமிழீழ தேசிய தலைவர் வே பிரபாகரன் அவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி கொண்ட சங்கர் அவர்கள் (1983 ) ஆண்டில் தன்னை முழுமையாக போராட்டத்தில் இணைத்து கொண்டார்.அன்றிலிருந்து தனது இறுதி மூச்சுவரை தமிழீழ விடுதலை போராட்ட பாதையில் விடுதலைப் புலிகளின் அனைத்து நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக அர்பணித்து செயற்பட்டார்.தமிழீழ தேசியத் தலைவர் அவர்களது எண்ணப்படி விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய புதிய பரிமாணங்களுக்கும் கட்டுமானங்களுக்கும் செயல்வடிவம் கொடுத்து விடுதலை போராட்ட போரியல் வரலாற்றில் புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்தியவர் கேணல் சங்கர்.ஈழ போரில் கடற்பரப்பின் முதன்மைத்துவம் கருதி தலைவரின் சிந்தனைப்படி கடற்புற என்னும் பெயரில் கடற்புலி அமைப்பை உருவாக்கியது மட்டுமின்றி முதன் முதலில் சிறிலங்கா கடற்படையின் பெருமளவான போர் கட்டளை கப்பல் ஒன்றின் மீதான கடற்கரும்புலி தாக்குதல் ஒன்றுக்காக கடற்புலிகளான காந்தருபன் கொலின்ஸ் வினோத் ஆகியோரை பயிற்றுவித்து நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதல் ஒன்றை செய்து முடித்தவர் கேணல் சங்கர்.


 இதே போன்று விடுதலை புலிகளின் மகளீர் அமைப்பு உருவாக்கத்திற்கும் உதவி புரிந்தவர் அனைத்து போராளிகளுக்கும் போரியல் நுணுக்கங்களை ஆயுத வெடிபொருள் பாவனை நுட்பங்களையும் காடுகளில் ஒவ்வொரு அங்குலங்களில் அணுவணுவாக கற்பித்து மரம் செடி கொடி விலங்குகள் என்பன பற்றிய தகவல்களை தெளிவுபடுத்து பயிற்றுவித்த நல்லாசிரியர் கேணல் சங்கர்.இறுதியாக தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற ஓயாத அலைகள் நடவடிக்கையில் தலைவரோடு அருகில் நின்று ராணுவ அசைவுகளுக்கு ஏற்ப போராளிகளின் ஏற்பாடுகளை ஒழுங்குபடுத்தி போராட்டத்தை வெற்றிபாதையில் கொண்டுசெல்ல உதவியவர் கேணல் சங்கர் அவர்கள் .ராணுவ நடவடிக்கைகளில் மட்டுமன்றி அரசியல் பேச்சுகளிலும் பங்கு பற்றி ஈழ தமிழ் மக்களின் நாயமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர்.இறுதியாக நோர்வே சமாதன துதுக்குளுவினருடனான சமாதான பேச்சுகளின் போதும் தலைவரோடு கூடவே இருந்து சமாதான பேச்சுக்களில் ஈடுபட்டவர்.கேணல் சங்கர் அவர்கள்


 அமைதியாக இருந்தவாறு தனது ஆளுமையினால் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் தன்னை அர்பணித்து செயற்பட்டவர் கேணல் சங்கர் அவர்கள் .இவர் மட்டுமன்றி இவரது குடும்பமும் தன்னை முழுமையாக விடுதலை போராட்டத்திர்ற்கு அர்பணித்து நிற்கின்றது.(1986 ) ஆண்டில் நாவற்குழி இராணுவ முகாம் மீதான தாக்குதல் முயற்ச்சியில் இவரது சகோதரான வசீகரன் என்ற இயற்பெயரை கொண்ட போராளி சித்தாத்தன் லெப்டினன் கேணல் பொன்னம்மான் அவர்களோடு குண்டு நிரப்பிசென்ற தண்ணீர்த்தாங்கி வெடித்ததில் வீரச்சாவை சாவை தழுவி கொண்டார். இதே சித்தாத்தனே சங்கர் அவர்களை தமிழீழ தேசிய தலைவர் அவர்களோடு தொடர்பு படுத்தியவர்.கேணல் சங்கர் அவர்களின் இன்னுமொரு சகோதரன் மனோகரன் என்ற இயற்பெயரை கொண்ட கப்டன் கரன் இந்திய சிறிலங்கா கூட்டுசதியால் லெப்டினன் கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளில் ஒருவராக சயிநேட் அருந்தி வீரச்சாவை அனைத்து கொண்டவர் கப்டன் கரன் அவர்கள்.தமிழீழ விடுதலை போருக்காக குடும்பத்தில் இந்த இருவரின் இழப்பு மட்டுமல்லாமல் ( 2000 ) ஆண்டில் ஓயாத அலைகள் நடவடிக்கையின் போது சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சில் காப்பகத்தில் தங்கியிருந்த இவரது இன்னுரு சகோதரனாக சிறிதரனும் படுகொலை செய்யபட்டார்.


இதனை தொடர்ந்து இவரது இன்னுரு சகோதரர் வேவுப்புலியாக செயற்பட்ட சுதன் என்று அழைக்கப்படும் உதயகுமார் கொழும்பில் வைத்து தமிழின துரோகிகளினால் படுகொலை செய்யபட்டார். இவ்வாறு கேணல் சங்கர் அவர்களது குடும்பம் தமிழீழ விடுதலைக்காய் குருதி சிந்து தன்னை முழுமையாக அர்பணித்து நின்றது இவர்களை தொடர்ந்து (2001 ) ஆண்டு செப்டம்பர் திங்கள் இருபத்து ஆறாம் நாள் குடும்பத்தில் ஐந்தாவது மாவீரனாக கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவை தழுவி கொண்டார்.. தேச விடுதலைகாய் தன்னால் மட்டுமன்றி தன குடும்பத்தாலான முழுவதையும் தந்துநிற்கும் இம் வீர மறவன்மீது சிங்கள உடுருவல் படை மறைந்திருந்து தாக்குதல் நடத்தி மண்ணில் சாய்த்தது .தமிழீழ மக்களினதும் போராளிகளினதும் நெஞ்சங்களில் என்றும் நீறு பூத்த நெருப்பாக கனந்துகொண்டு இருக்கின்றது அந்த நெருப்பு . தான் மட்டுமலாமல் தன குடும்பம் முழுவதையும் விடுதலைக்காக அர்பணித்தவர் கேணல் சங்கர் . அந்த குடும்ப உறுப்பினரின் இவரது மனைவியும் உள்ளடங்குகின்றார்.இவரது சகோதரரான கப்டன் கரன் அவர்களை திருமணம் செய்துகொண்ட குகா என்று அகைக்கபடும் குகநேஸ்வரி அவர்கள் (1987 ) ஆண்டு கப்டன் கரன் அவர்கள் வீரச்சாவை தழுவிக்கொள்ள இரண்டு குழந்தைகளை கைலேந்தியபடி ஆதரவற்று நின்றார் ,கணவனை இழந்து இரண்டு குழந்தைகளோடு தனியாக வாழ்ந்த அவரை தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க (1992 ) ஆண்டில் திருமணம் செய்துகொண்டார் .கேணல் சங்கள் அவர்களின் மனைவியாக குகா அவர்கள் விடுதலை போராட்டத்திற்கு தன்னாலான அளப்பெரிய பங்களிப்பை செய்துவந்தார்.


இவரது தியாகமும் தமிழீழ விடுதலை போருக்காக இவர் ஆற்றிய பங்கும் என்றோ ஒரு நாள் வெளிச்சத்துக்கு வருகின்ற வேளையில் தமிழீழ வரலாற்றின் உச்சத்தில் ஐவரும் இருப்பார்.கேணல் சங்கர் அவர்களின் மனைவி குகா அவர்கள் மே திங்கள் ( 2009 ) ஆண்டு தமிழீழ விடுதலை போராட்டம் முற்றுமுழுதாக அழிக்கபட்டு விட்டது என்று சிறிலங்கா அரசு கூறுவதுக்கு சில நாட்களுக்கு முன்னர் காயபட்ட போராளிகளையும் மக்களையும் காப்பற்ருவதுக்காக உலக நாடுகளின் நடுநிலையோடு சரணடைய வந்த தமிழீழ அரசியல் துறை பொறுப்பார் பா நடேசன் சமாதன செயலக பொறுப்பாளர் புலித்தேவன் கிழக்கு மாகான தளபதி ரமேஷ் ஆகியோரோடு சிறிலங்கா ராணுவத்திடம் சரணடைந்த வேளை ஐவரும் கொடூரமாக சுட்டும் படுகொலை செய்யபட்டார்.ஆக மொத்தத்தில் கேணல் சங்கர் அவர்களின் குடும்பத்தில் சகோதரர்கள் ஐந்து பேர் மட்டுமில்லாமல் கேணல் சங்கர் அவர்களின் மனைவியான குகா அவர்களுமாக ஆறு பேர் விடுதலை போராட்டத்திற்காக தம்மையே அர்பணித்து உள்ளனர்.

தமிழீழ விடுதலைக்காகவும் தமிழ் மக்களின் விடிவிற்காகவும் குடும்பத்தையே இழந்து நிற்கும் கேணல் சங்கர் அவர்களின் முத்த சகோதரன் ஜீவானந்தம் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகின்றார் .தமிழீழ விடுதலைக்காய் தமிழினம் கொடுத்த தொகை அதிகம் ...


""" மாமலை அன்று மண்ணிலே இன்று சாய்ந்ததை தாங்குமோ நெஞ்சு ..தாய் மனம் ஒன்று சங்கர் என்று இங்கு வாழ்ந்ததை மறக்குமோ நெஞ்சு ****

நன்றி
 தமிழ்நதி கார்த்திகா
கனடிய தமிழ் வானொலி 

திவுகளை  படிக்கும் உறவுகளே உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை தவறாமல் பதிவுசெய்யுங்கள்  நன்றி

3 comments:

  1. தாயாக வணக்கம்
    செய்வன திருந்த செய்வது எம் இனத்தின் சிறப்பு
    உங்கள் உழைப்புக்கு நன்றி
    செந்தணலில் விதையாகி போன எம்மவரின் நாமத்தை ஒருபோதும் தவறாக எழுதாதிர்கள்

    கேணல் சங்கர் அண்ணாவின் நாமம் பிழையாக பதிவு செய்ய பட்டுள்ளது

    tiron
    mannar
    tamil ellam
    +94777193430
    தலைவனின் பதைஜில் வெல்வது உறுதி

    ReplyDelete
  2. மன்னிக்கவும் சகோதர உங்கள் கருத்துக்கு நன்றி ..இதில் தவறுகள் இருப்பின் நீங்கள் எம்முடன் பகிர்ந்து கொள்ளலாம் ..இதற்க்கு உங்கள் தொலைபேசி என்னை கொடுத்தீர்கள் ? அதை விட உங்கள் அனுபவங்களை எமக்கு அனுப்பி இருக்கலாம் ? சங்கர் அண்ணா பற்றி சில உண்மைகள் விடுபட்டு இருக்கலாம் ...அனால் இதில் இருப்பவை எல்லா உண்மையே ..நீங்கள் தவறுகளை சுட்டி காட்டுங்கள்

    ReplyDelete
  3. இல்லை. சமாதானமாகக் கொடி பிடித்துக் கொண்டு போனவர்களில் அவர் இருக்கவில்லை. கடைசிவரை பெறாத மகனுடனேயே இருந்து மாண்டார்.

    ReplyDelete

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை