***காட்டி கொடுப்பவன் எங்கே ,அந்த கயவனை கொண்டுவா இங்கே ,கொண்டுவா துனோடு கட்டு .அந்த கொடியவனை துண்டு துண்டாய் வெட்டு****
இலங்கைக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றிய ராபர் ஓ பிளேக் என்பவர், 2007 மே 18ஆம் தேதி தூதர கத் தகவலாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தகவலை 'விக்கிலீக்ஸ்' கடந்த வாரம் வெளியிட்டது. இதில் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா, புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணா ஆகியோரைப்பற்றிய அதிர்ச்சி யான தகவல்கள் இடம்பெற்றுள்ளன!
விட்டேனா பார்! - எனக் கிளம்பி உள்ள விக்கிலீக்ஸ் இணையதளம், இலங்கையில் நடந்த ஈனத்தனமான செய்கைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
ஆயுதக் குழுக்களான ஈ.பி.டி.பி., கருணா குழு ஆகியவற்றுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையே நெருக்கம் இருந்ததையும், இவர்களுக்கு சந்திரிகா காலத்தில் இருந்து தொடர்ந்து நிதி உதவி அளிக்கப்பட்டதையும், விக்கி லீக்ஸ் ஆதாரங்களுடன் வெளி யிட்டுள்ளது.
''புலிகள் என்று சந்தேகப்படுப வர்களைக் கடத்திச் சென்று கொலை செய்தார். சிறுவர்களைத் தனது ஆயுதக் குழுவில் கட்டாயப்படுத்தி கருணா சேர்த்தார். வியாபாரிகளிடம் பணத்தை வசூலித்துக்கொள்ள இந்த இரு ஆயுதக் குழுக்களுக்கும் கோத்தபாய இராசபக்சே அங்கீகாரம் அளித்தார்!'' என்று சொல்கிறது விக்கிலீக்ஸ்.
உச்சகட்டமாக, ‘போரினால் இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டு இருந்த அப்பாவித் தமிழ்ப் பெண்களை, சிங்கள இராணுவத்தினரின் தேவைக்காகப் பலவந்தப்படுத்தி கருணா அனுப்பி வைத்தார்!’- என்று அமெரிக்க தூதர் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
2005 கிறிஸ்துமஸ் தினத்தில், மட்டக்களப்பு தமிழ் எம்.பியான ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட திலும், 2006 நவம்பர் 10ஆம் தேதி இன்னொரு எம்.பி.யான நடராஜா ரவி ராஜ் கொல்லப்பட்டதிலும் கருணா ஆட் களின் பங்கு இருப்பதாகத் தன்னிடம் சிலர் கூறியதாக அமெரிக்க தூதர் குறிப்பிட்டு உள்ளதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி உள்ளது.
டக்ளஸைப் பற்றியும் விலாவாரி யாக விவரிக்கும் ஓ ப்ளேக், கருணா வைப் பற்றிய முக்கிய தகவலைச் சொன் னதுதான் இந்த தகவலில் உச்சக்கட்ட மாகும்! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 2004-ல் பிரிந்த கருணா, 4,000 பேருடன் வெளியில் வந்தார். இதனால், புலிகளுக்குப் பின் னடைவு ஏற்பட்ட நிலையில், கருணா வைப் பாதுகாப்பாக இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு அனுப்பிவைத்தார் அப் போதைய இலங்கை அதிபர் சந்திரிகா.
பிறகு, தமிழ்நாட்டில் இருந்து 2006 ஜூலையில்தான் கருணா இலங் கைக்குத் திரும்பினார். இலங்கையில் இல்லாத காலகட்டத்திலும், கருணா வெளிநாட்டில் இருந்தபடியே தன் ஆயுதக் குழுவை இயக்கிக்கொண்டு இருந்தார் -’என்று அமெரிக்கத் தூதரே சொல்லி இருக்கிறார்.
இதுபற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பிரச்சினையைக் கிளப்பினார்கள். ஆனால், அந்த விவ காரம் பெரிதாக எழுந்துவிடாமல் அமுக் கப்பட்டது. இப்போது அமெரிக்க தூதர் ஒருவரே அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
கருணா, தமிழகத்துக்கு வந்ததாகக் குறிப்பிடப்படும் 2004-ம் ஆண்டில் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடந்துகொண்டு இருந்தது. அப்போது, இங்கு பரந்தன் ராஜன் என்பவரின் தலை மையிலான ஈழ தேசிய ஜனநாயக விடு தலை முன்னணி’எனப்படும் ஈ.என்.டி. எல்.எஃப்.-ம், கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனப்படும் டி.எம். வி.பி.யும் இணைந்து தமீழீழ ஐக்கிய விடுதலை முன்னணி எனும் கூட்டு முன்னணியை உருவாக்கினார்கள்.
இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு, அமைதித் தீர்வுக்கான முயற்சிகள் நடந்துகொண்டு இருந்தபோது, தமிழகத்தில் இந்த சேர்க்கை மிகத் தீவிரமாகச் செயல்பட்டது. தமிழகத்தில் நிலவிய புலி ஆதரவை உடைக்கும்படியாக நேரடியாகவும், மறைமுகமாகவும் பல காரியங்கள் நடத்தப்பட்டன.
இங்கு நடக்கும் ஈழத் தமிழர் தொடர்பான நிகழ்ச்சிகளில், இந்தக் குழுவினர் கலந்துகொண்டு கருணா வெளியேறியது நியாயமே’ என்று விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும், வெளியீடுகளையும் விநியோகம் செய்வதில் தீவிரம் காட்டினர். சென்னை அண்ணாசாலை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கருணாவைப் பற்றிய பிரசுரத்தை இக்குழுவினர் விநியோகிக்க முயன்றபோது, பெரியார் தி.க. அமைப்பினர் அதை எதிர்த்ததால், பிரச்சினை ஏற்பட்டது.
கடைசியில் கருணா ஆதரவாளர்கள் அங்கு இருந்து விரட்டப்பட்டனர். ம.தி.மு.க. ஊர்வலம் ஒன்றிலும் இதே போலப் பிரசாரம் நடத்த முயன்றபோது கருணா ஆதரவாளர்களுக்கும், ம.தி.மு.க. வினருக்கும் மோதல் ஏற்பட்டது. மாவீரர் நாளில் தலைவர் பிரபாகரன் நிகழ்த்தும் உரையைப்போலவே, கருணாவும் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் உரையாற்றுவதைப் போன்ற ஒரு வீடியோ தயாரிக்கப்பட்டது.
தமிழகத்தில் 150 வீடியோ கேசட்டுகள் தயாரிக்கப்பட்டு, 30 ஆயிரம் படிகள் எடுக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள அகதி முகாம்களில் இவற்றை விநியோகிக்கவும் செய்தனர். பிரபாகரனை இட்லராகச் சித்தரித்து சுவரொட்டிகள் அடிக்கப்பட்டு, அகதி முகாம் உள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டன.
கருணா ஆதரவாளர்களின் இந்தச் செயல்பாடுகளை அறிந்த தமிழீழ ஆதரவாளர்கள் கோபமும் ஆவேசமும் ஆத்திரமும் அடைந்தனர். கருணா ஆதரவாளர்களுக்கும் அவர்களுக்கும் பல இடங்களில் மோதலும் ஏற்பட்டது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் ஆபத்து உண்டானது! என இலங்கை ஆய்வாளர் ஒருவரே அப்போது எழுதினார்.
கருணா குழுவின் இந்த எதிர்ச் செயல்பாடுகளால் புலிகளின் தலைமை கடும் கோபமடைந்தது. எதிரிகளின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியது.
இதற்கிடையில், தமிழகத்தில் இருந்து இயங்கிய கருணா, பரந்தன் ராஜன் குழுவினர் இங்கு இருந்தபடியே இலங்கையிலும் நடவடிக்கையை விரிவு படுத்தினார்கள். இதற்காக, தமிழகத்தில் 18 ஆண்டுகள் தங்கி இருந்த பரந்தன் ராஜன் குழுவின் முக்கிய ஆளான ரங்கப்பா என்பவர் இலங்கைக்குச் சென் றார். அங்கு போய் சிறிது காலத்திலேயே கொழும்பு புறநகர்ப் பகுதியில் அவர் கொல்லப்பட்டார்.
ராஜன் குழுவின் முக்கிய மூளை யாக செயல்பட்ட மனோ மாஸ்டர் என்ப வரும் தமிழ்நாட்டில் இருந்து யாழ்ப் பாணத்துக்குச் சென்றார். திடீரென அவரும் கடத்தப்பட்டார். கருணாதான் அவரைக் கடத்தியதாக மனோவின் தாயார் யாழ்ப்பாணம் மனித உரிமை கவுன்சிலில் முறையிட்டார். அவர் விஷயத்தில் இன்று வரை சரியான தகவலே இல்லை.
இலங்கையில் இப்படி கருணா ஆதரவாளர்களுக்கு எதிரான நடவடிக் கைகள்’ தொடர்ந்த நிலையில், தமிழகத் தில் 2004 டிசம்பர் 5-ம் தேதி பரந்தன் ராஜன் உள்பட அவரது குழுவினர் ஒன்பது பேர் திடீரெனக் கைது செய்யப் பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சகல வசதிகளும் செய்து தரப்பட்டன.
குடும்பத்தினருடன் பல மணி நேரம் உரையாட அனுமதிக்கப்பட்டது. வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவை அவர்கள் சாப்பிட்டனர். டெல்லி தரப்பில் இருந்து அவர்களுக்கு நல்ல கவனிப்பு கிடைத்தது. பதிலுக்கு அவர்கள், விடுதலைப் புலிகளை எதிர்த் துப் போராட 3,500 போராளிகள் தயார், என ஆதரவு கேட்டனர் என்று இலங்கை பத்திரிகைகளில் வெளிப் படையாகவே எழுதினார்கள்.
சிறப்பு முகாம்களில் அடைக்கப் பட்டு இருந்தவர்கள், மீண்டும் இந்தி யாவுக்குள் வர மாட்டோம் என்ற உத்தர வாதத்தின் பேரில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போன மச்சான் திரும்பிவந்த கதையாக, சில மாதங்களில் கருணாவின் ஆதரவாளர்கள் இந்தியா வுக்குத் திரும்பி வந்தனர். ஈழத்தில் படுகொலைகள் அதிகரிக்க அதிகரிக்க, தமிழகத்தில் புலிகளுக்கான ஆதரவு அதிகரித்துக்கொண்டேபோனது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து இயங்க முடியாமல் கருணா ஆதரவாளர்கள் தவித்தனர். அந்த நேரத்தில், பரந்தன் ராஜன் பெங்களூரு வில் இந்திரா சர்வதேச அகடமி’என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அநாதைக் குழந்தைகள் காப்பகத்தை உள்ளடக்கிய இந்த நிறுவனத்துக்கு, டெல்லியில் இருந்து ஆசியும், ஆதர வும், உதவிகளும் பெருமளவில் வழங்கப் பட்டன என்பதை அந்தக் குழுவினரே பகிரங்கமாகச் சொல்கிறார்கள்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இங்கு கருணா ஆதரவாளர்கள் வெளிப் படையாகவே இயங்கினார்கள்’என்று சொல்லும் இலங்கை ஆய்வாளர் ஒருவர், சமாதான ஒப்பந்தத்தை புலிகள் மீறி யதாக நோர்வே அமைதிக் குழுவுக்கு கோடம்பாக்கம் முகவரியில் இருந்து மனோ மாஸ்டர் புகார் அனுப்பியதாகக் குறிப்பிடுகிறார்.
சென்னையைப் பொறுத்தவரை கே.கே.நகர், கோடம்பாக்கம் பகுதிகளி லும், அகதி முகாம்களில் சேலத்தை மையமாகவைத்தும் கருணா ஆதர வாளர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள்.
இதைத் தவிர, கருணா குழுவுக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு நீலகிரி மாவட்டத்தில் ரூ.90 கோடி மதிப்புள்ள ஒரு தோட்டமும் இருக்கிறது.
தேடப்படும் பட்டியலில் இடம் பெற்றுள்ள அந்தக் குழுவைச் சேர்ந்த வர்கள் சிறிது காலம் தலைமறைவாக இருக்க வேண்டுமானால், நீலகிரி தோட் டம்தான் அவர்களின் முக்கிய மறை விடம். ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில், ‘எதிரிகளின் கண்ணி லும் படாமல் அந்த தோட்டத்தில் பல ஆண்டுகள் பாதுகாப்பாகத் தங்குவதற் கான ‘ஏற்பாடுகள்’ பலமாக வழங்கப் பட்டு இருந்தன. இதில்தான் கருணா தங்கி இருந்திருக்க வேண் டும்’என்கிறார்கள் உளவுப் பிரிவு அதிகாரிகள்.
காட்டிக் கொடுத்த கருணா இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தங்கியது தமிழ்நாட்டிலா? - என்ற அதிர்ச்சியில் இருந்து மீளாத தமிழ் உணர்வாளர்களுக்கு, இன்னும் என்னென்ன அதிர்ச்சிகளைத் தரக் காத்திருக்கிறதோ விக்கிலீக்ஸ்!
நன்றி தென் செய்தி

No comments:
Post a Comment