****இதில் இருக்கும் படங்கள் அனைத்தும் நவாலி படுகொலை படங்கள்**** உறவுகள் எல்லோருக்கும் வணக்கமுங்க ..என் பெயர் சொன்னாலும் உங்களுக்கு என்னை தெரியாது நான் உங்களுக்கு அறிமுகம் ஆனா அளவுக்கு எதையும் சாதித்தது இல்லை ..ஆனா எமது மண்ணுல நடந்த போராட்டமும் சரி இன அழிப்பும் சரி எல்லாமே எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பார்த்துகொண்டு தான் இருக்கேன் அனுபவித்தும் இருக்கேன்..எவ்வளவோ இடப்பெயர்வுங்க ஆனாலும் சளைக்கவில்லை இதை
நான் என் தமிழக தாய் உறவுகளுக்கு சொல்லிக்கொள்ள விரும்புறேனுங்க ..எனக்கு பத்து வயசு இருக்கு யாழ்ப்பாணத்துல முதலாவது இடப்பெயர்வாய் தீவு பகுதியாம் காரைதீவுல இருந்து (1990 ) ஆண்டு இடம்பெயர்ந்து பொன்னாலை சுழிபுரம் சங்கானை என்று பல இடங்களில் இருந்து இருந்து இடம்பெயர்ந்துகொண்டு வந்தும் அப்போதான் சிங்கள இராணுவம் வடமராட்சி கைப்பற்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தான் ...இங்கிருந்தும் இடம்பெயர்ந்து நவாலி பகுதியை சென்றடைந்தோம் அப்போ என் குடும்பத்துல ஏழு உறுப்பினர்கள் ...
நவாலி பகுதியில சில ஆண்டுகள் நின்மதியாக இருந்தோம் ( 1995 ) ஆண்டு சமாதனம் பேசிவந்த சமாதன புறாவாம் சந்திரிக்கா அம்மையார் அவரது மாமனார் அனுரத்த இரண்டு பெரும சேர்ந்து எங்க நின்மதியான வாழ்கையில மண்ணை அள்ளி போட்டங்கள் அதுதான் (1995 ) ஆண்டு யாழ் குடாவை பிடித்தே தீருவேன் என்று இறுமாப்போடு ஆரம்பித்த முன்னேறி பாய்தல் நடவடிக்கை அப்போ அந்த நடவடிக்கையை எதிர்த்து எமது புலிப்படை அகோசத்துடன் போராடி அந்த நடவடிக்கையை முறியடித்தான்கள்...(இப்போ எனக்கு பதினைந்து வயசுங்க )அதன்பின்பு யாழ் குடாவை முற்றுமுழுதாக கைப்பற்ற சந்திரிக்கா திட்டம் போட்டார் ஆனா அவருடைய திட்டம் வெறும் யாழ் குட மண்ணை மட்டுமே கைப்பெற்ற முடிந்தது ...கொஞ்சம் கொஞ்சமாக மாதகல் சுழிபுரம் இப்படியா நிலங்களை விழுங்கியபடி எதிரி முன்னேறி வந்தான் ..அப்போது நாங்கள் நாவலி மண்ணுல இருக்கோம் ..அப்போதணுங்கள் ஒரு அசம்பாவிதம் அந்த மண்ணுல நடைபெறுது..இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவும் குடிநீரும் வழங்கிக்கொண்டு இருந்த நாவாலி மக்கள் மீது..( 1995 ) ஆண்டு (9 ) மாதம் ( மாதம் சரியாக நினைவில் இல்லை (5.45 ) மணி இருக்குமுங்க சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான புக்கார விமானங்கள் இரண்டு வந்து அவங்கள் கோழைத்தனத்தை காட்டிவிட்டு போனாங்கள் ..ஒரே புகை மண்டலம் என்ன நடந்தது என்று தெரியல்லை ஒரு இருபது நிமிடங்கள் இருக்கும் அந்த புகை மண்டலம் அடங்கவே இல்லை ...
எல்லோருமே அவரவர் வீட்டுல முடன்கிட்டோம் என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியல்லை சற்று அமைதியானதும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர அந்த கொடூர செய்தி எங்கும் பரவியது ..அதுதான் சென் பீர்றேர்ஸ் மீதான குண்டு தாக்குதல் (250 ) மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்கிய மக்கள் இடம்பெயர்ந்த மக்கள் என்று பலநுறு மக்கள் பலியானார்கள் ..அந்த கொடூர நிகழ்வை என் கண்ணால பார்த்தேன் வீதியின் ஒரு பக்கம் முருகன் கோவில் இன்னுரு பக்கம் தேவாலையம் அந்த இடமே சுடுகாடாய் இருந்தது ..காலிழந்தும் கையிழந்தும் தலை இல்லாமலும் அன்று கிடந்த உடல்களை என் கண்ணால் பார்க்க நேர்ந்தது ...அந்த கொடூர நினைவுகளை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது ..சுடுகாடாய் ஆனது நாவலி நகரம் நான் முன்பே சொல்லியிருந்தேன் எனது குடும்பத்துல ஏழு அங்கத்தவர்கள் என்று இப்போது எண்கள் அங்கத்தவர் எண்ணிக்கை ஆறாக குறைந்தது ..என்னை துக்கி வளர்த்த எமக்கு உணவளித்த உயிர்கொடுத்த தந்தை அந்த தாக்குதலில் உயிரிழந்த சோகம் எம்மை மீளும் வருத்தியது ஏனெனின் நான் முத்தவள் மற்றவர்கள் எல்லாம் சிறிய சிறிய வயது ...குடும்ப தலைவனை இழந்தால் அந்த குடும்பத்தின் நிலை நீங்கள் அறிவீர்கள் ..நாமும் அதை அனுபவித்தோம் ...அந்த தாக்குதலில் எனது தந்தையின் உடல் எடுக்கப்படவில்லை எனது தந்தை மட்டுமல்ல என்னை போல பல பிள்ளைகளின் தந்தைகள் உடல்கள் எடுக்கமுடியவில்லை ..கரணம் எடுக்கும் நிலையில் எதுவும் இல்லை எப்படி அடையாளம் காண்பது ...
எல்லா இடமும் மரண வீடாய் ஆண்டு நவாலி ..எல்லோருமே சோகத்தில் ஆழ்த்தியது அந்த தாக்குதல் ...(ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் மீள்வதில்லை ) என்னும் வாசகத்தை மனதில் ஏந்தி மனதை திடபடுத்தி வாழ்கையை ஆரம்பித்தோம் ...இது நடந்து ஒரு முன்று மாதங்களின் பின்னர் ..வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல ..எந்த விமானமேறி வந்து எமது உறவுகளை கொன்றளித்தானோ அந்த ( புக்கார ) என்னும் இரண்டு வல்லுருகளும் எமது புலிப்படையால் மாதகல் பகுதியில் சுட்டு வீழ்த்தபட்டு எமது உறவுகளை அளித்த அதே இடத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கபட்டது ...இத்தோடு முடிந்துவிட்டது எமது இடப்பெயர்வு என்றிருக்க எமது விடுதலை இயக்கம் ஒரு அறிவித்தலை யாழ்பாணம் முழுவதும் செயற்படுத்தியது ..அதாவது சிங்கள அரசு யாழ்பாணத்தை ஆக்கிரமித்து தனது வெற்றி செய்தியை உலகுக்கு அறிவிக்க தயாரானது ..அதனால் யாழ் குட மக்கள் அனைவரையும் வன்னி நோக்கி பயணிக்கும் படி அறிவுறுத்த பட்டது ..அனால் பல லட்சம் மக்களை கொண்ட யாழ் குட .பல லட்சம் மக்கள் இந்த செய்தியை அலட்சியம் செய்து வெளியேற மறுத்துவிட்டன ...அனால் விடுதலை இயக்கம் மக்கள் இராணுவத்தில் பிடிக்கும் மக்கள் சென்றால் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களும் பாலியல் வல்லுரவுகளையும் கணக்கிலெடுத்து ..எப்படியாவது மக்களை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று திடம் கொண்டார்கள் ..மக்கள் அந்த மண்ணில் எப்போதுமே இடப்பெயர்வை அனுபவிக்காத மக்கள் எப்படி இடம்பெயர்வார்கள் ..இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வெளியேறினர் அனால் பெரும்பாலான மக்கள் வெளியேறவில்லை..
எமது மக்கள் இயக்கம் யாரும் வசிக்காத வேறு வளவுக்குள் கைக்குண்டு அடித்தும் வெற்று குண்டுகளை வெடிக்க வைத்தும் ..மக்களை வெளியேற்ற முயற்ச்சி செய்தார்கள் ...அனால் நாட்கள் குறுகியபடி இருந்தன இராணுவமும் முன்னேறியபடி வந்தான் பலாலியில் இருந்தும் முன்னேறிய இராணுவமும் அடிக்கும் செல்கள் அவரவர் வீடுகளுக்கு மேல் விழ அப்போதுதான் புரிந்துகொண்ட மக்கள் முற்றுமுழுதாக வெளியேற ஆரம்பித்தார்கள் ..அவர்களில் நாங்களும் ஒன்று ...யாழ் குடாவை பொருத்தமட்டில் எந்த இடத்திலிருந்து வந்தாலும் கடைசியில் செம்மணி உடகத்தான் மக்கள் வெளியேறவேண்டும் அது ஒரு ஒடுங்கிய பாதை அந்த பாதையால் தான் எட்டுலட்சம் மக்களும் வெளியேற வேண்டும் ..பல இடங்களில் இருந்து வந்த மக்கள் செம்மணி பாதையில் முட்டிகொண்டனர் வாகனங்கள் கார்கள் இரக்ரர்கள் சைக்கிள்கள் மோட்டார் சைக்கிள்கள் இப்படி பல ..அத்தோடு கால் நடைகள் எல்லாம் ஒன்றிணைந்து வெளியேற அந்த செம்மணி பாதை இறுக்கமடைந்தது ...நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள் நாங்கள் அந்த செம்பணி பாதையை கடக்க நான்கு நாட்கள் ஆனது ஒவ்வொரு மணிகளும் ஒவ்வொரு முளங்கலாகத்தான் நகர்ந்தோம் ...இந்த அவலத்தை கண்ட எமது இயக்கம் ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது அதாவது முதலில் மக்கள் வெளியேறவேண்டும் அதன் பின்புதான் வாகனங்கள் ..அந்த பாதையில் தரித்து நின்ற வாகனங்கள் எல்லாம் அந்த ரோட்டை விட்டு வயல் வெளிகளுக்குள் இறக்கிவிடபட்டு மக்களுக்கு பாதை சீர் செய்து கொடுக்க பட்டது .
மக்கள் செம்மணி கடந்து கைதடி கச்சாய் தனங்கிளப்பு கிளாலி என இடம்பெயர்ந்தார்கள் ...பல மக்கள் வன்னி நோக்கி நகர்ந்தார்கள் ..இப்படியாக இராணுவம் சாவகச்சேரி மட்டும் காலடி வைத்தது ..அந்த இராணுவ நடவடிக்கை தொடர்ந்தது ..இதனால் மக்கள் வன்னி நோக்கி முற்றுமுழுதாக வெளியேற வேண்டிய நிலைமை ..இதில் ஒன்றை நாம் பெருமைபட்டு சொல்லுதல் வென்றும் ..கிளாலி பாதை என்பது பல மக்கள் அறிந்தவர்களும் பல மக்கள் அறியாதவர்களும் இருப்பீர்கள் ..யாழ் குடாவை விட்டு அன்று மக்கள் வெளியேற இருந்த ஒரே ஒரு பாதை கிளாலி ..இன்னும் சொல்ல போனால் வன்னியையும் யாழ் குடாவையும் இணைக்கும் மக்கள் பயணிக்கும் ஒரே பாதை கடல்வழி ..இது சுகமான பிரயாணம் இல்லை ..இந்த வழியால் பயணம் செய்த மக்கள் பல்லாயிரம் பேர்கள் சிங்கள் இராணுவத்தால் படுகொலை செய்ய பட்டார்கள் ..இந்த கடல்வழி பாதை அனையிறவுக்கும் புநகரிக்கும் இடைபட்ட கடல் பிரதேசம் இந்த இடண்டு பகுதிகளும் அன்று சிங்கள இராணுவத்தின் கைகளில் இருந்த காலம் ..இந்த இரண்டு இடத்துக்கும் இடையிலான கடல் பிரதேசத்தை உடறுத்து தான் நாம் கடல் வழி பிரயாணம் செய்ய வேண்டும் ....இந்த இரண்டு இராணுவ முகாம்களில் இருந்து வந்து மக்களை வெட்டி படுகொலை செய்தான் சிங்கள இராணுவம் ..இதன் போதுதான் எமது இயக்கத்திடம் அன்று கடற்புலிகள் இருக்கவில்லை ..தங்களிடம் இருக்கும் வளங்களை வைத்து மக்களுக்கு பாதுக்காப்பு வழங்குவார்கள் ...அப்போது மக்கள் நின்மதியான பயணம் செய்தார்கள் ...
இந்த கிளாலி கடல் முலமாக பயணிக்க வேண்டுமானால் ..அதற்க்கான கட்டணம் (250 ) ரூபாய் ஒருவருக்கு இந்த படகு சேவை எமது இயக்கத்தால் அன்று நடத்த பட்டது ..அனால் மக்களுன் இடர்களையும் கஷ்டங்களையும் கருத்தில் கொண்டு யாழ் குட மக்கள் வெளியேற அவர்களை எந்தவிட கட்டணமும் இல்லாமல் வன்னி மண்ணில் கொண்டு போய் விடார்கள் ..இதில் நாம் கவனிக்க வேண்டியது ..அன்று யாழ் குடாவில் இருந்த மக்கள் எட்டுலட்சம் பேர்கள் ..இவளவு பேர்களையும் வன்னியில் இறக்குவது என்பது சாதாரண விடையம் இல்லை ..முன்பு இரவில் மட்டுமே படகு சேவை நடைபெற்றது ..பின்பு இரவு பகல் என பாதுக்காப்பு அதிகரிக்க பட்டு ..மக்கள் வன்னியில் இறக்கபட்டார்கள் ...வன்னியில் இறங்கிய மக்களை அப்படியே கைவிடவில்லை விடுதலை இயக்கம் .அவர்கள் என்று போக விரும்புகிறார்களோ அங்கு கொண்டு போய் இறக்குவதுக்கான வாகன (லாரி )ஒழுங்குகளும் இலவசமாக செய்யபட்டது ..நாம் அன்று யாழ் குடாவில் இருந்து வெளியேறுவதில்லை என்று முடிவோடு கச்சாய் பகுதியில் இருந்தோம்..எண்கள் குடும்பத்தின் அங்கத்தவர்கள் ( 5 ) குறைவடைந்தது இராணுவத்தின் செல் வீச்சில் சிக்கி எனது தம்பியும் இறந்துவிட இருக்கும் பிள்ளைகளை என்றாலும் காக்கவேண்டும் என்று எனது அம்மா வன்னி செல்ல முடிவெடுத்தார் ..எமக்கு காலம் கடந்துவிட்டது இயக்கம் தமது கடைசி உறுப்பினர்களோடு வெளியேற தயாராகிய நிலையில் கடைசியாக சில மக்கள் வெளியேற முடிவெடுக்க அவர்கள் தங்கள் படகுகள் ( தோணி ) முலம் செல்ல தயாராக இயக்கம் தங்கள் படகுகளில் எமது சொன்ச படகுகளையும் இணைத்து புறப்பட தயாரான வேளை...
சிறிலங்கா அரசால் முதன் முதலாக கொள்வனவு செய்யபட்ட பயிற்ரர் என்று அழைக்கபட்ட உலங்கு வானுர்தி இரண்டு வந்து கெற்பலி பொருட்களை இறக்கி ஏத்தும் படகு சேவை மீது தாக்குதலை நடத்த நாம் செய்வதீனமாக உயிர்பிழைத்து வன்னி நோக்கி பயணமானோம் கடுமையான பயணம் ...ஒவ்வொரு நொடியும் உயிர் எங்களின் கைகளில் இல்லை ஏனெனில் கடல் வான் தரை என்ன எதிரியின் எறிகணைகளால் அதிர்ந்தது .நாம் ஆனையிறவை அண்மித்த வேளை ஆறு மணியிருக்கும் தீடிரென்று எமது படகுகள் நிறுத்தபட்டன..என்ன நடக்குது என்பதை எம்மால் அறிய முடியவில்லை ..எமக்கு முன்னாள் சென்ற படகிலிருந்து அறிவிக்க பட்டது கடற்படை படகுகள் வருகின்றனவாம் சண்டை நடக்குது அது முடியாமல் நாம் செல்ல முடியாது என்று ஏனெனில் நாம் செல்லும் பாதை இராணுவத்தின் முற்றுகையில் ..சண்டை உக்கிரமாக நடைபெற்றது நாம் காதை முடியபடி அழுதபடி உள்ளேயே படுத்து விட்டோம் ..நாம் விடிய முன்பு இந்த கடல் எல்லையை கடந்து வன்னி பூநகரி பகுதியை அடைய வேண்டும் ..இல்லையேல் நாம் உயிருடன் செல்ல முடியாது ..விமானங்களின் குண்டு வீச்சுக்கு இலக்காக நேரிடும் ..விடிய முன்று மணியிருக்கும் எம்மை செல்லும்படி எமது படகு செலுத்துபவருக்கு அறிவிக்க பட்டது ..சண்டைகளின் நடுவே நாம் வன்னி மண்ணை அடைந்தோம் ...என்று நிறுத்தி வைக்கபட்ட முழங்காவிலுக்கு செல்லும் ( லாரி) ஒன்றில் ஏறி பயணமானோம்..வன்னி மண்ணில் கால் வைக்கும் வரை எமது உயிர்கள் எம்மிடம் இல்லை ..இப்போது நாம் முழங்காவில் மண்ணை வந்தடைந்தோம் அங்கு முழங்காவில் பாடசாலை ஒன்றில் நாம் இறக்க பட்டோம் எமக்கான உணவு அன்று தயாரித்து வாழங்க பட்டது ..பின்பு எமக்கான காணி வீடு கட்டுவதுக்கு தேவையான ( மரம் தடி ஓலை ) என்பன எமது விடுதலை இயக்கத்தால் வழங்கபட்டது ...அங்கு நாம் நின்மதியான வாழ்க்கை வாழ்ந்தோம் ..செல் இல்லை விமான குண்டு வீச்சு இல்லை ..நின்மதியான வாழ்க்கை ..எம்மை பசி பட்டினி என்பன வாட்டியதே ஒழிய நாம் சந்தோசமாக அந்த மண்ணில் வாழ்ந்தோம் .எமக்கு நினைத்த நேரம் இரவு பகல் என்று பாராது நினைத்த இடத்துக்கு சென்று வந்தோம் ..காரணம் எமது தேசியத்தலைவரின் ஆட்சியில் இருந்த மண். கொள்ளை இல்லை பயம் இல்லை நீதி நிலைநாட்டிய மண் ... பொன்னாலை, சுழிபுரம், சங்கானை, மாதகல், நவாலி,கொழும்புத்துறை ,கச்சாய் , இத்தோடு எழு முறை இடம்பெயர்ந்து விட்டோம் ...பல ஆண்டுகள் எந்தவிட எதிரியின் தாக்குதலுமின்றி சந்தோசமாக இருந்த மண் நாம் இருந்த மண் ..
தற்போது எமது இயக்கமும் எமது வாழ்க்கையும் பலபடுத்தி கொண்டு நாம் ..எவ்வளவு பொருளாதார முற்றுகைக்குள் இருந்தும் ..எந்த வித கவலையும் இன்றி எமது தலைவர் வளர்த்த பொருன்மியங்களில் திளைத்து வாழ்ந்துவந்தோம் ..இப்படியே சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தோம் இதற்குள் நாம் பல வெற்றிகள் பல தோல்விகளை கண்டிருந்தோம் ..இருந்தும் நாம் இமையாமாய் வளர்ந்திருந்தோம் ...இப்படியே சந்திரிக்கா ஆட்சிகாலம் முடிய...மஹிந்த ஆட்சி வந்தது ..நம்பிக்கை சிறுதுளி ..நம்பிக்கை இன்மை பல துளியாய் எம் வாழ்வு ..எம்மிடம் இருந்த சிறுதுளி நம்பிக்கையும் போக (1999 ) ஆண்டு போர்நிறுத்தம் முடித்துகொண்ட சிங்களம் மன்னாரில் தனது இன அழிப்பை தொடங்கியது ...எதிரி பள்ளமடுவை அன்பித்த போது நாம் ..எட்டாவது இடப்பெயர்வாக ஜெயபுரம் நோக்கி நகர்ந்தோம் ..இப்படியே எமது இடப்பெயர்வு தொடர்ந்தது ..இதற்க்கு மேல் என்னால் கணக்கெடுக்க முடியவில்லை .
மல்லாவி கிளிநொச்சி இப்படியாக நாங்களும் நடந்தோம் ..இதற்க்கு மேல் உங்களுக்கு சொல்லவேண்டியது இல்லை ..கடைசியில் முள்ளிவாய்க்கால் என்னும் குறுகிய நிலப்பரப்புக்குள் எமது இடப்பெயர்வு நிறைவடைந்தது ..இப்போது எமது குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை முன்று இரண்டு பேர்களை முள்ளிவாய்க்காலில் பறிகொடுக்க நான் அம்மா தம்பி ..அனாதைகளாக வவுனியா முகாமிற்கு வந்தோம் ...இப்போவும் ஆனதைகாய் தான் இருக்கோம் யாருமற்று ....நான் பத்து வயசுல ஆரம்பித்த இடப்பெயர்வு இன்று எனக்கு (32 ) வயசு இப்போதான் இடப்பெயர்வு முடிந்து விட்டது என்று நான் நினைக்கவில்லை
நான் இந்த (32 ) வயசுக்குள்ள என் அனுபவத்துல படாத நான் சொல்லுறேனுங்க ..உண்மைய சொன்ன அன்று யாழ் மக்கள் பணத்தால் வசதியால் உயர்ந்தவர்கள் நாங்கள் அப்போ விடுதலை என்னும் கருத்தை நெஞ்சில் எந்த தவறி விட்டோம் ...நாம் எந்த இடப்பெயர்வையும் அனுபவிக்காமல் இழப்புகளை அனுபவிக்காமல் இருந்ததால் விடுதலை உணர்வு அற்று இருந்தோம் ..ஆனா என்று வன்னி மண்ணில் காலடி எடுத்து வைத்தோமோ அன்றிலிருந்து விடுதலை பாதையில் பயணிக்க ஆரம்பித்தோம் ..மேலும் சென் பீர்றேர்ஸ் தேவலைய குண்டு வீச்சு அந்த மக்களை அதிகமா பாதித்தது ...அன்று யாழ் மக்கள் ஒன்றிணைந்து போராடியிருந்தால் யாழ் மண்ணை நாம் இழக்க வேண்டிய தேவை இல்லை ...கடைசி வன்னி வீட்டுக்கு ஒருவர் போராட வேணும் என்று தலைவர் சொன்னபோது எத்தனை பேர்கள் போனார்கள் என்று கேட்டால் சிலர்த்தான் ...
எமக்காக நாங்கள் போராடவில்லை என்றால் வேறு யாரத்தான் போராடுவது ..அன்று நாங்கள் சிட்ட தவறுகளின் வழியை இன்று நாம் அனுபவிக்கிறோம் ..இன்னும் நிறைய சொல்லலாம் ..இனி சொல்லி என்ன ஆகப்போகுது ...ஆனா ஒன்னுமட்டும் சொல்லுறேன் என்னையும் சேர்த்து ..ஒன்றுபட்டு போரடமால் நாம் இருந்தால் அழிவு ஒன்றுதான் மிஞ்சும் ...எங்களை உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து அளித்து விட்டாங்கள் ..நாங்கள் விட்ட தவறு புலம்பெயர்ந்து புலம்பெயர்ந்து ஓடினோமே தவிர சிந்திக்க தவறிட்டோம் விளைவு அழிவு ..எங்களை பார்த்து என் தாய் உறவுகள் என் தமிழக தாய் உறவுகள் சிந்தியுங்கள் நீங்களும் இடம்பெயர வேண்டுமா? எம்மைப்போல் நீங்களும் அனுபவிக்க வேண்டுமா? வேண்டாம் அது வலி கொடுமை ..எந்த இனமுமே அனுபவிக்க குடாது இப்படியான கோரத்தை நீங்களாவது சிந்தியுங்கள் ...செயல்படுங்கள் எம்மை உதாரணமாக கொள்ளுங்கள் எம்மை பாருங்கள் ...இது நாளை உங்களுக்கு வரவேண்டாம் என்பதே எனது வேண்டுகோள் ..ஒன்றுபட்டு போராடுங்கள் ..
இதில் நடைபெற்ற சம்பவங்கள் திகதி ஆண்டு தவறி இருக்கலாம் கரணம் நினைவில்லை சிலது மன்னிக்கவும்
அன்புடன் நிலா
No comments:
Post a Comment