கேள்வி :- உலகம் முழுவதும் புரட்சியையும் கம்யுனிச்தையும் ஏற்றுமதி செய்வதே உங்கள் இலட்சியம் என்று ஜனாதிபதி ரேகன் உறுதியாக பேசிவருகிறாரே??
பதில் :-புரட்சி என்பது ஏற்றுமதி செய்யத்தக்க ஒரு பண்டமென்று நான் கருதவில்லை அதே சமையத்தில் புரட்சிகர கியூபா பாலஸ்தீன் அமரிக்க புரட்சிகர போராளிகளுக்குதான் ஆக்கபுர்வமான ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறது என்பதையும் நான் மறைக்க விரும்பவில்லை ,சொமோச்லாவின் ஆட்சியின் கிழ நிக்கிரகுவாவை எடுத்துகொண்டால் அங்கு ஆயுதபோராட்டத்தை தவிர சகலவிதமான ஜனநாயக நடவடிக்கைகளும் பகிஸ்தரிப்புக்களும் ஈவிரக்கமற்ற பயங்கரவாதத்தின் முலம் அடக்கி ஒதுக்கபட்டது,சொமொச்லாவிர்க்கு எதிரான போராட்டத்தில் கியூபா மட்டும்தான் உதவி செய்தது என்பதில்லை.
மற்றைய அரசாங்கங்கள் கூட இப்போராட்டத்திற்கு தங்களது ஒத்துழைப்பினை வழங்கியிருந்த போதும் அவற்றை பற்றி எவரும் கதைப்பது இல்லை,அதே சமையத்தில் வசிண்டன் வழிகாட்டலில் பெயரிலும் துண்டுதலின் பெயரிலும் பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகள் கியூபாவை தனிமைபடுத்த மேற்கொண்ட முயற்சிகளையும் நான் மறைக்க முயலவில்லை,அவர்கள் அரசியல் ரீதியில் மட்டுமல்ல பொருளாதார ரீதியில் பல தடைகளை ஏற்படுத்தி கியூபாவை தனிமைபடுத்த முயற்ச்சித்தார்கள்,எண்களின் புரட்சியை தோற்கடிக்க நாசவேலைகள் ,ஆயுத உடுருவல் ,அரசியல் சதி ,போன்ற எதிர்புரட்சி நடவடிக்கைகளும் அவர்கள் உக்குவித்தார்கள்,எங்களை தக்கர்த்துகொள்ளும் புனித போராட்டத்தில் அவர்களுக்கு நல்ல பதிலடி கொடுத்தோம் ,இத்தகைய அரசாங்கங்களுக்கு எதிராக போரடிகொண்டிருந்த பிறருக்கு இக்காலங்களில் நாம் உதவிகளை செய்தோம் ,வீழ்ச்சியை நோக்கி நடை போடுவது நாங்கள் அல்ல அவர்கள்தான்,உண்மையுள் நாங்கள் புரட்சியை ஏற்றுமதி செய்யவும் முடியாது ,அமெரிக்க அதனை தடுத்து நிறுத்தவும் முடியாது ,அமெரிக்க மக்கள் எண்கள் மீது அச்சமுற வேண்டும் என்பதுக்காக றேகன் இந்த வாதத்தை மிகத்தந்திரமாக முன்வைக்கிறார் ,இது பழையகால- கம்யுனிஸ் -பூச்சாண்டி வந்துவிட்டது என்ற தந்திரமான பிரச்சாரமாகும் ,இத்தகைய வாதங்கள் பிற நாடுகள் மீது றேகன் மிகவும் வெளிப்படையான தலையீட்டை மேற்கொள்வதினை புரிகிறது ,ஒரு லட்சம் மக்களையே கொண்ட சின்னம் சிறு தீவான கிரண்டாவிர்க்கு எதிராக அனகிரீகமான தலையீட்டை இந்த அடிப்படையிலையே அமெரிக்க மேற்கொண்டது......
கேள்வி :-கிறாண்ட மீதான படையெடுப்பு அந்த பிராந்தியத்தில் கியூபாவிற்கு இருந்த கிர்த்திக்கும் அதன் நோக்கத்திற்கும் எதிராக விழுந்த பேரிடி என்று றேகன் நிர்வாகம் சொல்லி திரிகிறதே????
பதில் :- கிரான்ட மீதான படையெடுப்பு அமெரிக்காவுக்கு ஒரு பேரிடி என்பதுதான் எங்கள் கருத்து அது கோளைதனமனதும் முட்டால்தனமானதுமான நடவடிக்கை ,இப்படையெடுப்பு அமெரிக்காவிற்கு எந்த பெருமையும் தேடித்தரவில்லை மாறாக நிக்கரகுவாவஇலும் கியூபாவிலும் எல் சல்வரோடிலும் உள்ள புரட்சியாளரின் போராட்ட உணர்வை பன்மடங்கு வீறுபெற செய்துள்ளது ,,,
கேள்வி :-நீங்கள் சோவியத்யுநியனின் கைபொம்மை எனவும் அருவருடி எனவும் றேகன் நிர்வாகம் அடிகடி சொல்லி வருகிறதே உண்மையில் உங்களுக்கும் சோவியத் யுனியனுக்குமான தொடர்பு எத்தகையது????
பதில்:-
உண்மையுள் எங்கள் புரட்ச்சி தன்னியல்பானது சோவியத் யூனியன் இருப்பது எங்களை பொறுத்தவரை அதிஸ்டவசமானது ,எங்க சீனிக்கு சந்தை கிடைக்காமல் போயிருந்தால் எங்களுக்கு எரிபொருள் எண்ணெய் வினியோகம் இல்லாது போயிருந்தால் ஒரு படையெடுப்புக்கு எதிராக எங்களை பாதுகாத்து கொள்வதற்கு போதுமான ஆயுதங்கள் எங்களுக்கு கிடைக்காது இருந்தால் நாங்கள் இங்கு நிலைகொண்டிருப்பவே முடியாது ,றேகன் விடுகின்ற அறிக்கையை பற்றி எனக்கொரு கவலையும் இல்லை ,அவன் ஒரு சுத்த பொய்காரன் எங்கள் மீதான இந்த குற்றசாட்டு எப்போதும் உள்ளதுதான்,எங்களுக்கு நாங்கள் சோவியத்தின் கைபொம்மையாக இருக்கிறோம் என்ற உணர்வு எப்போதும் இல்லை ,கியூபாவில் சோவியத் அரசுக்கு உரிய சொத்து ஒன்றும் கிடையாது ,நாங்கள் பரஸ்பர தொடர்பும் செல்வாக்கும் கொண்டவர்களாகவே இருக்குன்றோம் .அவர்களிலிருந்து நாங்கள் எவளவு சுகந்திரமாக இருக்கிறோமோ ,அதுபோல அவர்களும் எங்களிலிருந்து சுகந்திரமாக இருக்கிறார்கள்,
கேள்வி :- கியூபாவிற்கும் அமெரிக்கவிற்கும் இடையில் சுமுகமான உறவுகள் எப்போதாவது ஏற்படும் என்று கருதுகிறீர்களா ,,,நீங்கள் தீவிர வாதியாக இருப்பதினால் உங்களோடு உடன்பாட்டுக்கு வருவது சிரமமாக இருக்கிறதென்று சில அவதானிகள் வலியுருத்துகிரார்களே??
பதில் :-தற்போது கியூபாவிற்கும் அமெரிக்கவிற்கும் இடையிலான உறவுகள் குளறுபடி நிறைந்ததாகவும் ஆபத்தானதாகவும் இருக்கின்றன ,என்றாலும் அவர்கள் எப்போதாவது ஒரு சுமுகமான நிலையை நோக்கி நகர்ந்தாக வேண்டுமென்ற ஒரு விதமான "சரித்திர" நம்பிக்கை எனக்கு உண்டு .அனால் காலம் காலமாக லத்தீன் அமெரிக்காவை தங்களுடைய கொல்லைப்புறமாக கருதிகொன்டாடும் ,தாங்கள் நினைத்தபடி ஆட்சியை உருவாக்கவும் ,அரசாங்கங்களை துக்கி எறியவும் கட்டளைகள் பிறப்பிக்கவும் ,லத்தீன் அமெரிக்க தலைவர்கள் மேற்கொள்ளவேண்டிய தீர்மானங்களை அமெரிக்க தலைவர்கள் தீர்மானித்துக்கொண்டுமிருந்த காலம் மலையேறி போய்விட்டது என்பதை அமெரிக்க ஆட்சியாளர்கள் உணரவேண்டிய காலம் வந்துவிட்டது,உலகில் கணிசமான பகுதியில் சொசல்யம் என்பது திட்டவிட்டமான யதார்த்த உண்மை என்பதினையும் யுத்தத்தின் மூலமோ பொருளாதார தடைகள் மூலமோ இராணுவ அச்சுறுத்தல் மூலமோ அதனை தடுத்து நிறுத்த முடியாது என்பதை அமெரிக்க இப்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும் ,வருகின்ற காலங்களில் குறிப்பாக ( கி பி ) ஆண்டின் பின்னர் சொசல்யத்தை அரசமைப்பாக தழுவிக்கொண்ட தனித்த ஒரு லத்தீன் அமெரிக்க நாடக கியூபா மட்டுமே திகழப்போவதில்லை ,கியூபாப் பாணி என்று தவறாக நாமமிடபட்டிருக்கும் எண்கள் பாதையை மற்றவர்களும் பின்பற்றவேண்டும் என்பதில்லை ,நாங்களும் அதனை சர்வதேச மயப்படுத்த விரும்பவில்லை ,பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பொருளாதரத்தை ஆக்கிரமிப்பதையே தடுப்பதையே நோக்கமாக கொண்ட சொசல்ய அமைப்பை சாராத அரசாங்கங்களும் தோன்ற கூடும் ,அமெரிக்க அதனை விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன இதனையெல்லாம் பல்லை கடித்துக்கொண்டு ஏற்றக வேண்டும்,இது ஒரு சரித்திர உண்மையாகும் ,கியூபாவின் தலைவராக நான் இருப்பதற்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை நான் பிறந்தே இருக்காவிட்டாலும் கூட இந்த நிகழ்ச்சிகள் சற்று முந்தியோ பிந்தியோ நடைபெற்றிருக்கும்,அமெரிக்க ஏகபத்திய அரசை நானும் என்னுடன் சேர்ந்த லத்தீன் அமெரிக்காவின் லட்சோப லட்சம் மக்களும் நிராகரிக்கிறோம் என்பது அமெரிக்காவில் நிலைகொண்டுள்ள முதலாளித்துவ அமைப்பிற்கு சின்ன அச்சுறுத்தல் மட்டுமேயாகும்,முதலாளித்துவ அமைப்பு அளித்தொலிய வேண்டுமென்று அதற்கமைவாக லத்தீன் அமெரிக்க நாடுகள் நேசக்கரம் நீட்டதக்க நியாமான நேசக்கரம் நீட்டதக்க நியாயமான மனிதாபிமானம் சார்ந்த ஒரு அமைப்பு உருவகவேண்டுமேன்று நான் கருதுகிறேன் ,அமெரிக்காவில் ஒரு சொசல்ய புரட்சியை "அது மிகவும் தொலைவில் உள்ளது என்று கருதியபோதும் அதனை உருவாக்க துண்டுவது என் நோக்கம் இல்லை ,அனால் உரிய காலம் வரும்போது அத்தகைய ஒரு புரட்ச்சி அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தினாலும் வெகுயனங்களாலும் தலைமை தாங்கி நடத்தப்படும் என்று நான் நம்புகிறேன்,
கேள்வி :- உங்கள் புரட்ச்சி வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது என்றும் உங்களின் தலைமை இறுதிகட்டத்தை அடைந்துவிட்டது என்றும் அறிக்கைகள் கூறுகின்றனவே ???
பதில்:-கியூபா புரட்சியை அளிக்க வலிமைகிக்க அமெரிக்க அரசாங்கம் சத்தியமான சகலவிதமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது,கியூபா மக்கள் தங்களை தமது புரட்சியுடன் ஆழமாக இனம்காணமல் போயிருந்தால் ,நாங்கள் அழிக்க பட்டிருப்போம் எண்கள் மக்கள்தான் நின்று தாக்குபிடித்தார்கள்,இது வெறும் குருட்டு வழிபாட்டு காரணமாக அல்ல மறுபுறம் நீங்கள் வீதிகளில் நடந்து சென்றவாறு கியூபா மக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளுவதை கேட்பீர்களானால் தாங்கள் தவறென்று கண்டதை அவர்கள் மிகவும் வெளிப்படையாக விமர்சிப்பதனை காண்பீர்கள்,இன்று நாங்கள் எவளவோ செய்தாக வேண்டும் என்பதினை உணர்கின்றோம் ,இன்றும் நாங்கள் முன்னேறிக்கொண்டு இருக்கின்றோம் .ஆரம்பத்தில் எங்களிடம் வெறும் சிந்தனைகளே இருந்தன ,இப்போது நாங்கள் ஆணுபவத்தையும் சேர்த்து பெற்று இருக்கின்றோம் ,கியூபா மக்கள் தற்போது தங்கள் மண்ணிற்கு தாங்களே சொந்தக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள்,கருப்பாக இருக்கிறோம் என்றோ பெண்களாக இருக்கிறார்கள் என்று இன்று யாரும் பேதம் பாராட்டுவதில்லை ,கியூபா மக்களின் சமுக அந்தஸ்து அவர்களின் வருமானத்தால் நிர்ணயிக்க படுவதில்லை ,அமெரிக்க விதித்திருந்த பொருளாதார தடைகளையும் மீறி ,எண்கள் பொருளாதாரம் கடந்த ( ) ஆண்டுகளாக வருடாந்தம் ( ) வீதமான வளர்ச்சியை கண்டிருக்கிறது ,இது தென் அமெரிக்க கண்டத்தின் ஆகக்கூடிய வளர்ச்சியாகும் ,தல உணவுபொருட்கள் நுகர்ச்சியினை பொறுத்தவரை லத்தீன் அமெரிக்காவில் நாங்கள் இரண்டாம் இடத்தை வகிக்கிறோம் ,சுகாதாரம் ,கல்வி ,விளையாட்டு ,கலாச்சாரம் ,ஆகிய துறைகளில் முன்றாம் உலக நாடுகளில் நாங்கள் முதலாம் இடம் வகிக்கிறோம்,பல கைத்தொழில் நாடுகளை விட முன்னிலையில் உள்ளோம் ,மொத்த சனத்தொகையோடு விகிதாசார ரீதியில் ஒப்பிட்டு பார்க்கும்போது கியூபாவை விட அமெரிக்காவில்தான் கல்வியறிவு அற்றவர்களும் ஓரளவு படித்தவர்களும் மிக அதிகமாக காணப்படுகிறார்கள் ,என்று நான் சொன்னால் நீங்கள் ஆச்சரிய படுவீர்கள்,
கேள்வி பிடலுக்கு பின்பு பிடல் நடத்திய புரட்ச்சி என்னவாகும் ??
பதில் :-இது என்னுடைய புரட்ச்சி என்றும் நானில்லாது போய்விட்டால் என்னுடனே போய்விடும் என்றும் வெளிநாடுகளில் உலாவுகின்ற வெளிப்படையான விசித்திரமான அபிப்பிராயம் இது ,பிடல் இங்கு இருந்தாலென்ன மறைந்தாலென்ன புரட்ச்சி என்பது தொடர்ந்து மேற்செல்லும் என்பதினை நான் உங்களுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றேன் ,ஏனெனில் இது கியூபா மக்களின் புரட்சியாகும் எங்களிடம் ஒற்றுமையான தலைமை காணப்படுகிறது ,நாங்கள் ஒன்று பட்டிருக்கிறோம், ஒரே குறிக்கோளை நோக்கி இயங்குவதில் அனுபவமும் பேரறிவும் படைத்த ஆயிரக்கணக்கான அங்கத்தவர்கள் இருக்கிறார்கள் ,இது பிடல்லின் புரட்சியல்ல இது மக்களின் புரட்ச்சி நான் எதிர்காலத்தை பற்றி கவலைப்படவில்லை ...
**********************************************************************************
உங்கள் கருத்துக்களையும் உங்கள் விமர்சனங்களையும் தவறாமல் பதியுங்கள் உறவுகளே ..அத்தோடு இங்கு உள்ள >>>(((( இதை பின் தொடர்ந்து நீங்களும் எம்மோடு சங்கமித்து கொள்ளுங்கள் உறவுகளே . (Followers ))))<<< இதை தொடர்ந்து எண்கள் குழுமத்துடன் சங்கமித்து கொள்ளுங்கள் உறவுகளே **********************************************************************************
No comments:
Post a Comment