வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Monday, October 31, 2011

எம்மைச்சுற்றி என்ன நடக்கிறது,நாம் என்ன செய்துகொண்டு இருக்கிறோம்

 

வரலாற்றுச்சக்கரத்தில் நம்பமுடியாத பல மாற்றங்களினை தமிழீழ தேசம் கண்டுகொண்டிருக்கிறது. தொழில்நுட்பம், இராணுவ பலம் என்பதில் உச்சத்திற்கே சென்ற இதுவரை உலகமே கண்டிராத மாபெரும் விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று மாபெரும் பின்னடைவைச்சந்தித்துள்ளது. இதிலிருந்து தமிழர்கள் மீழ்வதற்கு இன்னும்  பல ஆண்டுகள்கூட ஆகலாம். ஏனெனில் இன்று தமிழ்மக்கள்  ஒரு கற்பனையான ஒரு மாயையில் இருக்கிறார்கள் இது தவறு என்பதை அவர்களால் உணரமுடியவில்லை  ஆனால் அந்த இடைவெளியில் தமிழர்களிற்கு இன்னும் அதிக இழப்புக்கள் ஏற்படப்போகிறது. என்னதான் நாங்கள் தலையில் அடித்துக்கொண்டாலும்  முழுக்க முழுக்க வியாபார நோக்கத்தை மட்டுமே நோக்காகக்கொண்ட  பெரும்பாலான இணயத்தளங்கள் மற்றும் ஊடகங்களும் சரி இன்றய உண்மை நிலைமையை சொல்லப்போவதில்லை. இன்றய தமிழர்களின் தலைமைகள் என்று, நான்தான் நீதான் என்று முண்டியடிக்கும் கோமாளித்தலைமைகளும் சரி தமிழர்களிற்கு உண்மை நிலையை விளக்கப்போவதில்லை மாறாக மீண்டும் மீண்டும் மாயாஜால மாய வார்த்தைக்குள்ளேயே வைத்திருக்க விரும்புகின்றது. எனவே இப்போது நாம் கூறும் கருத்துக்களையோ அல்லது அவர்களின் நம்பிக்கைக்கு மாறான செய்திகளையோ அவர்கள் ஏற்கக்கூடிய மனநிலையில் இப்போது இல்லை. சரியான யதார்த்த நிலையை உணர்ந்து எம்மைச்சுற்றி என்ன நடக்கிறது நாம் என்ன செய்துகொண்டிருக்கின்றோம் என்பதை ஒருதடைவை நீங்கள் எல்லோரும் நின்று  நிதானித்துக்கொள்ள வேண்டிய நேரம் இதுதான் என்பதை சொல்லவே இதை எழுதுகின்றோன்.


இன்றய காலகட்டத்தில் பரபரப்பாக மாறிவரும் புரட்சிகளும் அதற்குப்பின்னால் உள்ள சூழ்சிகளும், புரட்சிகளிற்கு பின்னணியில் அமெரிக்கா தலைமையிலான வல்லரசு நாடுகளின் நலன்களுமே பிரதானமாக இருக்கிறது என்பதையும்; எல்லோரும் முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அமேரிக்கா தனது பேராசையான கொள்கையாலும் உலகத்தையே தனது காலடிக்கு கொண்டுவர துடிப்பதாலும் தனது கொள்கைகளுக்கும் பலத்துக்கும் பெரிதாக சவாலாக இருக்கும் நாடான சீனாவை அமெரிக்கா வீழ்த்த விரும்பியது. இதை நேரடியாக வீழ்த்த முடியாது எனவே தனது நீண்ட கால நோக்காக கொண்டு ஆசியாவை நோக்கி பல ஆண்டுகளிற்கு முன்பே காய்களை நகர்த்தத் தொடங்கியது.  ஆசியாவில் அமெரிக்காவிற்கு சாதகமான நாட்டை முதலில் தேடியது அது எல்லா வழிகளிலும் பொருத்தமான நாடாக தேர்ந்தெடுத்த நாடுதான் இலங்கை எனவே இலங்கையை வைத்து தனது செயற்பாடுளை விஸ்த்தரித்தது அமெரிக்கா. இதற்காகவே போரின்போது அதிகளவான உதவிகளை நேரடியாகவும். எதிர்காலத்தில் சிக்கலை தோற்றிவிக்கக்கூடிய விசயங்களை வேறு நாடுகள் ஊடாகவும் முழுமையாக இலங்கைக்கு தனது ஆதரவை வழங்கி இலங்கையை தனது நம்பிக்கைக்குரிய நாடாக மாற்றியது அமேரிக்கா.

 எனவே தனது நலனை அடைய பயன்படுத்திய ஒரு நாடுதான் இலங்கை. இதில் ஒன்றை கவனிக்கவேண்டும் அமேரிக்கா ஒரு போதும் இந்தியாவை எதிர்க்க தயாராக இல்லை காரணம் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற போக்கையே அமெரிக்காவும் விரும்பியது அதுமட்டுமல்ல இலங்கை விடயத்தில் அமேரிக்காவும் இந்தியாவும் எப்போதும் நண்பர்கள்; சீனா இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்பதற்காக என்ன விலைகொடுக்கவும் இரு நாடுகளும் தயாராகவே இருந்தது என்பதை ஒருதடைவை நினைவில்கொள்ளவேண்டும். மொத்தத்தில் அமெரிக்காவின் கொள்கைக்கும் இந்தியாவின் கொள்கைக்கும் பலியாகியதுதான் தமிழ்மக்கள்.  அமேரிக்காவிற்கு எதிராக செயற்படும் சில நாடுகள் இப்போதும் உள்ளது ஆனால் அவற்றை எல்லாம் பின்னல் கவனித்துக் கொள்ளலாம் இப்போது சீனாவின் வழர்ச்சியை தடுக்கவேண்டும் என்பதிலே அது இப்போதும் குறியாக இருக்கிறது.
விடுதலைப்புலிகளின் வீட்சிக்குப்பின்னர் அமெரிக்கா தனது நலனிற்காக ஒருசில நாடுகளின் தலைவர்களை மக்கள் புரட்சிமூலம் அகற்றியது இதன் தொடர்ச்சியாக இன்றும் லிபியாவில் அமேரிக்காவின் ஆதரவுடன் புரட்சி நடைபெற்று தான்விரும்பாத கேணல் கடாபியை அமேரிக்கா இன்று அகற்றியுள்ளது. சமகாலத்தில்தான் தென் சூடானும் சுதந்திரம் பெற்றது. இதன் பின்னணியிலும் அமெரிக்காதான் உள்ளது. உண்மையில் விடுதலைப்போராட்டங்களை அமேரிக்கா ஆதரிப்பதானால் தமிழீழத்தை விடுங்கள் பாலஸ்தீன விடுதலையை ஏன் விரும்பவில்லை, அமெரிக்க தேர்தல் வாக்குறுதியில் ஒபாமா கூறியிருந்தார் தான் ஆட்சிக்கு வந்தால் பாலஸ்தீனத்திற்கு விடுதலை பெற்றுத்தருவேன் என்று ஏன் அது நடக்கவில்லை. உண்மையில் அமெரிக்கா ஸ்ரேலை எதிர்த்துக்கொண்டு பாலஸ்தீனத்திற்கு எதையும் கொடுக்கப்போவதில்லை. ஸ்ரேலைவிட பாலஸ்தீனத்திடமிருந்து பெரிதாக எதுவும் கிடைக்கப்போவதும் இல்லை. எனவே அமேரிக்கா தனது நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது என்பதை எல்லோரும் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். தொடர்ந்து வெற்றிபெற்றுக்கொண்டுவந்த அமேரிக்கா தனது அடுத்தகட்ட நகர்விற்கு தயாராக இருந்தநேரத்தில்  அமேரிக்காவிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது அதுதான் தான் எதிர்பார்த்ததற்கு மாறாக  இலங்கை அமேரிக்காவை நெருங்கிவராது சீனாவின் பக்கம் இலங்கை சாயத்தொடங்கியது. இந்த அதிர்ச்சியால் ஏமாற்றமடைந்த அமேரிக்கா இலங்கைக்கு ஒரு பாடம் புகட்ட  விரும்புகின்றது. அதுதான் இலங்கை இறுதிப்போரினில் மீறியதாக கூறப்படும் போர்க்குற்றங்கள். போர் நடந்த காலங்களில் இலங்கைக்கு தேவையான அத்தனை இராணுவ வளங்களையும் வெளிப்படையாகவும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை மறைமுகமாகவும் இலங்கைக்கு வழங்கியது மட்டுமல்லாது யுத்தத்தை எப்படி நடத்துவது போன்ற ஆலோசனைகளை கொழும்புவரை வந்து வழங்கியது அமேரிக்கா. திரைமறைவில் யுத்ததின்போது இலங்கைக்கு தெரியாமலே இலங்கையின் இறுதிப்போரினை தனது செய்மதியின்ஊடாக அனைத்தையும் படம் பிடித்தது. இது பின்னாளில் தனக்கு உதவும் என அமேரிக்கா கருதியது.
அதுவே இன்று ஒரு முக்கிய விடயமாகிவிட்டது இன்று அமேரிக்காவின் வசமுள்ள போர்க்குற்ற செய்மதி பதிவுகள் இன்னும் இரகசியமாகவே வைத்துள்ளது . இதை விட இராணுவம் எடுத்த புகைப்பட ஆதாரங்களையும் திரட்டி இலங்கையை போர்க்குற்றவாளியாக இன்று அமேரிக்கா நிறுத்தியுள்ளது. இன்று அமேரிக்கா போர்க்குற்றம் பற்றி வாய்கிளிய பேசுகின்றது அமேரிக்கா செய்யாத போர்க்குற்றமா இப்போது நடந்துள்ளது. ஈராக்கில் அமேரிக்கா செய்த போர்க்குற்றங்களும் பாலியல் குற்றங்களும் மனிதகுலமே வெட்கித்தலை குனியவேண்டியவை. இன்னும் ஆப்கானிஸ்தானில் மறைக்கப்பட்ட குற்றங்கள் ஏராளம். ஆனால் இன்று மனிதஉரிமை போர்க்குற்றம்பற்றி அமேரிக்கா பேசுகிறது. பேசுவது எமக்கு நல்லதுதான் ஆனால் அது உண்மையான இதயசுத்தியுடன் இருக்குமானால் நாம் மகிழ்ச்சியடையலாம், ஆனால் அமேரிக்கா இப்போது எடுத்துள்ள போர்க்குற்றம் எனும் ஆயுதம் இலங்கையை தனது கொள்கைக்கு அடிபணியவைக்கவே அன்றி உண்மையான நீதிக்காகனதல்ல என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். அமேரிக்காவின் நிபர்ந்தனைகளை மகிந்தவை நேரில் அழைத்தே சொல்லியும் உள்ளது. இதற்காக அவசர அவசரமாக சிகிட்சைபெற என்றுகூறி அமேரிக்கா மகிந்தா சென்றது உங்களிற்கு ஞாபகத்திற்கு வருமென்று நினைக்கின்றேன். எனவே அமேரிக்காவின் நிபர்ந்தனைகளை ஏர்க்க சீனாவும் ரஸ்யாவும் கடுமையாக எதிர்ப்பதால் இப்போது இரண்டும் கெட்டான் நிலையில் உள்ள மகிந்த கூட்டம். நிலைமை தலைக்குமேல் போனால் அமேரிக்காவின் கால்களை பிடித்துக்கொண்டு உங்கள் நிபர்ந்தனைகளுக்கு நாம் தயார் என்று இலங்கை கூறும்நிலை ஏற்படலாம். இது நடந்தால் இன்றய போர்க்குற்ற அரசியல் அடுத்த கட்டத்திற்கு எப்படி நகரும். அமேரிக்காவை எதிர்த்து யாரும் இப்போது எந்த முடிவும் எடுக்கும் நிலையில் இல்லை. இன்றய உலக ஒழுங்கை அமேரிக்காதான் தீர்மானிக்கிறது. எனவே போர்க்குற்றகோசங்கள் எதிர்காலத்தில் ஒரு  மாற்றத்தை தரப்போவதில்லை. போர்க்குற்றத்தை மட்டுமெ நம்பியுள்ள தமிழர்களின் எதிர்காலம் எதுவுமே கிடைக்காது ஒரு சூனியமாக மாற வாய்ப்புள்ளது.

இது ஒரு பக்கமிருக்க. இந்த பரபரப்புக்கு மத்தியில் அமேரிக்காவிற்கு அடுத்த பாரிய மீழமுடியாத அடி காத்திருந்தது. அதுதான் அமேரிக்க போருளாதாரம். இதுவரை வெளியே தெரியாது மறைத்து வைத்திருந்த அமேரிக்காவின் பொருளாதார வீட்சியையும் இப்போது உலக நாடுகளின் மிகப்பெரிய கடனாளியாக அமெரிக்கா இருப்பதையும் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு இந்திய பிரயை வெளிக்கொண்டுவந்தார். அமெரிக்காவின் முகமூடி இப்போது கிழிந்து தொங்குகின்றது. அமெரிக்காவின் பொருளாதாரம் இது வரை இல்லாது மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 100 வங்கிகள் இழுத்து மூடப்பட்டன இதேபோக்கில் போனால் இன்னும் 10 வரிடத்தில் தன்னுடம் உள்ள இருப்புகள் தீர்ந்துபோகின்ற நிலைமைக்கு வரும். இன்று அமேரிக்காவில் உள்ள முக்கால்வாசிப் பங்குகளுக்கும் சொந்தக்காரன் சீனாதான். சீனாவின் முதலீடுகளே அமேரிக்காவில் அதிகம் இருப்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநாளிற்காகத்தான் சீனாவும் காத்துக்கொண்டு இருந்தது. இந்த நிலை தொடர்ந்தால் உலக வல்லரசு என்ற நிலையை சீனாவிடம் பறிகொடுக்க நேரிடும். இதுக்கெல்லாம் என்ன காரணம் என்றுபார்த்தால் தனது பலத்தைவிட அதிக ஆசைப்பட்ட அமேரிக்கா இன்று உலகில் அகலக்கால்பரப்பி போர்களங்களை திறந்ததே இன்று அமேரிக்க பொருளாதாரம் சரியக்காரணம். இதை லிபியாவில் கிழர்ச்சிக்குழுக்களுக்கு நேற்றோ(NATO) ஆதரவளிப்பதென்ற அறிக்கையை வெளியிட்டவுடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார் 'ஒவ்வொரு யுத்ததிற்கும் அமேரிக்கா மட்டும் செலவுசெய்ய முடியாது எதிர்காலத்தில் எல்லா நாடுகளும் செலவுத் தெகையை பகிர்ந்து கொள்ளவேண்டும்' என்று. அன்று யாருக்கும் பெரிதாக புரியவில்லை ஏதோ யதார்த்தமாக சொல்கின்றார்போலும் எல்லோரும் கருதினர். ஆனால் இன்றுதான் தெரிகிறது அமேரிக்கா இதுவரைகாலமும் உலக நாடுகள் பலவற்றிடம் பின்கதவால் சென்றுபிச்சை எடுத்துத்தான் இதுவரை யுத்தம் செய்தது என்று.

இன்று அமேரிக்கா எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சனையில்இருந்து மீழும்வரையும் அமேரிக்காவை  அழுத்தங்கொடுக்கும் சக்தியாக சீன வர வாய்ப்புள்ளது ஏனெனில் அமேரிக்காவின் அதிக முதலீடு செய்துள்ள சீனாவிற்காக சிலதை விட்டுக்கொடுக்க அமேரிக்கா எதிர்காலத்தில் முன்வரலாம். அதில் ஒரு நிபர்ந்தனை இலங்கையின் போர்க்குற்றமாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே இவ்வாறு ஒன்று நடந்தால் அமேரிக்கா தற்காலிகமாக போர்க்குற்றத்தை தூக்கிப்பிடிப்பதில்லை என்ற முடிவிற்கு வர வாய்ப்புள்ளது. இந்த இடத்தில் தமிழர்கள் ஒன்றை மிகவும் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். அதாவது அமேரிக்கா தனது பொருளாதாரத்தை பிரச்சனையில் இருந்து மீண்டால் போர்க்குற்றப்பிரச்சனையை தீவிரப்படுத்தும் இதனால் இலங்கை அமேரிக்காவிற்கு அடிபணிந்துபொகும் இதனால் போர்குற்றஅரசியல் தகர்ந்துபோகும். இல்லை அமேரிக்க பொருளாதார வீழ்ச்சிமோசமடைந்து சீனாவின் கை ஓங்கினாலும் போர்க்குற்றத்திற்கு சீனா ஆதரவளிக்காது எனவே இந்த இடத்திலும் போர்குற்ற அரசியல் தகர்ந்துபோகும். மொத்தத்தில் போர்க்குற்றம்தொடர்பாக எமக்கு சாதகமான நிலை எதிர்காலத்தில் வராது என்பது மட்டுமே உண்மை.

இன்றய உலகில் எங்கும் புரட்சிகள், அரசுக்கெதிரான கிழர்ச்சிகள் வெடித்துள்ள நிலையில். ஆசியாக்கண்டத்தில் ஒரு  நாடான இந்தியாவிலும் ஊழலிற்கெதிரான போராட்டம் நடைபெற்றுள்ளது இது  சற்று வித்தியாசமானது அதுதான் அகிம்சை. இந்தியா அகிம்சையால் சுதந்திரம் அடைந்தது என்று சொல்லிக்கொண்டாலும் அந்த அகிம்சையை இப்போது மதிக்கத்தயாராக இல்லை என்று கூறி தனது அதிகாரத்தைப்பயன்படுத்தி அகிம்சையை அடக்கநினைத்து ஊழலுக்கு எதிரான அகிம்சை வழியில் போராடிய அண்ணா ஹசாரை சிறையில் அடைத்தது.  இதுவே இந்திய அரசு செய்த மாபெரும் தவறாக அமைந்தது. அதுவரை பெரிதாக முழு இந்தியாவிற்கும் தெரியாத அண்ணா ஹசாரை இந்தியாவில் உள்ள எல்லா மக்களும் அப்போதுதான் சரியாக தெரிந்து கொண்டனர். இதன் பின்னரே அண்ணா ஹசாரிற்கு மக்களின் பேராதரவு வெளிப்பட்டது. தொடர்ந்து சிறையில் வைத்திருந்தால் நாட்டில் புரட்சி வெடிக்கும் என்று பயந்த இந்திய அரசு அவரை நிபர்ந்தனையின் பெயரில் விடுதலை செய்தது. அவர் விடுதலை ஆகியதும் ஊழலிற்கெதிரான சட்டமசோதாவை நிறைவேற்றும்வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத்தொடங்கியுள்ளார். இது இந்திய மக்கள் ஒவ்வொருவரையும் கவர்ந்திழுத்துள்ளது. மீண்டும் மகாத்மா காந்தி பிறந்தமாதிரி மக்கள் உணர்ந்தார்கள். அவர் அசியலிற்கு அப்பால் செயற்படுவதால் அரசியல் கட்சிகளையும்தாண்டி எல்லோரையும் இது கவர்ந்து இழுத்துள்ளது. இந்தநிலையில்; ஒன்றில் இந்திய அரசு இறங்கி வரவேண்டும். மாறாக அவரின் உண்ணாவிரதத்தை அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் அடக்கநினைத்தாலோ இல்லை அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துபோனாலோ இந்தியா ஒரு புரட்சியை சந்திக்க நேரிடும் என்றதை உணர்ந்துகொண்ட இந்திய அரசு கோரிக்கையை ஏற்பதாக கூறி மக்களின் எழிச்சியை அடக்கியுள்ளது. ஆனால் அவரது கோரிக்கையை அரசு ஒருபோதும் நிறைவேற்றாது. ஏனெனில்; கோரிக்கைக்கு உடன்பட்டால் இந்திய பிரதமர், சோனியாகாந்தி,மற்றும் தமிழகத்தை சேர்ந்த மிகப்பெரிய ஊழல் முதலைகள் வெளிவர முடியாத சிறையில் தமது வாழ்க்கையை கழிக்க நேரிடும். தாம் சிறைக்கு செல்ல எந்த அதிகாரத்தில் உள்ளவனும் விரும்பமாட்டான் மாறாக, பேச்சுவார்த்தைகள் என்று சொல்லி ஏதோ திசைதிருப்பி இந்திய சட்டங்களின் அடிப்படையில் நிறைவேற்றமுடியவில்லை என்று ஏதோ குளறுபடிசெய்து இப்படியே இழுத்தடித்து இறுதியில் கைவிடப்படும். இதன்பின் மறுபடியும் உண்ணாவிரதப்போராட்டம் தொடங்கினாலும் பெரிதாக எதுவும் மாறப்போவதில்லை
இது எல்லாம் ஒருபுறமிருக்க ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டில் பெரிதாக இதைப்பற்றி இப்போது அலட் டிக்கொள்ள பெரும்பாலும் யாரும் விருபம்பவில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளது. ஒன்று மத்தியஅரசு காலங்காலமாக தமிழ்நாட்டை மாற்றான்தாய் மனப்பாங்குடனே நடத்திவருவதும். அடுத்து அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட ராஜூவ்காந்தி வழக்கின் தூக்குத்தண்டனைத்தீர்மானம். அடுத்து தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் தமது குடும்த்தை தவிர எதிலுமே ஆர்வம் காட்டுவதில்லை தாமும் தமது வேலையும் வீடும் என்ற தானும் தன்பாடும் என்ற வட்டத்திற்குள்ளேயே வாழ விரும்புகிறார்கள் இவர்களிற்கெல்லாம் சிந்திக்க நேரமிருக்காது சிந்தித்தாலும் இதல்லாம் வீண்வம்பு என்கின்ற போக்கில் இருந்திருவார்கள். எனவே எதிர்காலத்தில் இந்த விடயத்தில் தமிழ்நாட்டில் எந்த தாக்கமும் பெரிதாக ஏற்படாது. ஆனால் ஒன்றுமட்டும் உண்மை இந்த ராஜூவ்காந்தி வழக்கினை இத்துடன் முழுமையாக மூடிக்கொள்ளவே மத்தியஅரசு விரும்புகிறது. என்னதான் காங்கிரஸ் தலைகீழாக நின்றாலும் அடுத்தமுறை காங்கிரஸ் படுதோல்வி யடையும் என்பதை உணர்ந்துகொண்ட மத்தியஅரசு ராஜூவ்காந்தி வழக்கின் மர்மங்களை அடுத்து ஆட்சிக்குவரும் ஆட்சியாளர்கள் கிழறக்கூடாது எனவே இந்த வழக்கை முடித்துவிடுவோம் என்ற எண்ணத்திலேயே இப்போது தீர்ப்பு வழங்க ஆர்வம் காட்டுகிறார்கள். அதுமட்டுமல்ல தற்போது மத்திய அரசு திக்குமுக்காடும் அண்ணா ஹசாரின் போராட்டத்தையும் திசைதிருப்பும் ஒரு கருவியாக இந்த தூக்குத்தண்டனை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது என்றும் கொள்ளலாம். ஏனெனில் இதுவரை பத்திரிகையின் முதற்பக்கத்தில் வெளிவந்த அண்ணா ஹசாரின் போராட்டச்செய்திகள் இப்போது ராஜீவ்வழக்குத் தீர்ப்பு செய்திதான் முதற்பக்கத்தில் இடம்பிடித்துள்ளது. ஆனாலும் தூக்குத்தண்டனை வழங்குவது உறுதியாகிவிட்டது. இந்தியா எப்போதும் தமிழர்களிற்கு எதிரிதான் என்பதை மீன்டும் சோனியாகாந்தி தனது கொடூரமான முகத்தின்மூலம் வெளிப்பட்டுள்ளது.  இலங்கையின் போரினை வரிந்துகட்டிக்கொண்டு நடத்திய சோனியா தலைவர் பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் எப்படியாவது கொண்றுவிடுங்கள் அதற்காக தான் எதையும் தர தயாராக உள்ளதாக கூறியுள்ளதன் மூலம் தனது சொந்த நலனிற்காக, தனது சொந்த பழிவாங்கலிற்காக, அதிகாரத்தை பிழையாக பயன்படுத்தியுள்ளார் இப்போதும் பயன்படுத்துகிறார். இதன் அடுத்த கட்ட பழிவாங்கலே இந்த தூக்குத்தண்டனை உண்மையிலேயே இவர்கள் கூறும் விசாரணை அறிக்கை ஒரு பேச்சிற்கு உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் ஒரு சோடி சிறிய பற்றி வாக்கி கொடுத்தவனிற்கு தூக்குத்தண்டனை என்றால்.

ஒரு இலட்சத்தி ஐம்பதாயிரம் மக்களை கொன்றும் இரண்டு இலட்சத்திற்கு அதிகமான மக்களை காயப்படுத்தியும் அங்கவீனர்கள் ஆக்கியும் மதிப்பிட முடியாத கோடிக்கணக்கான சொத்துக்களை அழித்த யுத்தத்திற்கு முண்டுகொடுத்து நின்ற சோனியாகாந்திக்கு என்ன தண்டனை?
இந்த தூக்குதண்டனை அறிவிப்பால் தமிழகம் கொதித்தெழுந்தது. தமிழக மக்களின் எழிச்சி யை அடக்கமுடியாது என்பதை உணர்ந்த தமிழ்நாட்டு அரசு முதலில் மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் தனக்கு இல்லையெனவும். ஜனாதிபதிதான் காப்பாற்றவேண்டும் எனவும் கூறினார் முதலமைச்சர் ஜெயலலிதா. இன்னிலையில் தமிழகமக்களின் எழிச்சி அழவுகடந்து சென்று ஒருபக்கம் தீக்குளிப்புகள் வன்முறைகள் என்று தொடர மறுபக்கம் சட்டரீதியாக நீதிமன்றத்தை அணுகிய சட்டத்தரணிகள் நீதிமன்றம்மூலம் தூக்குத்தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைத்தனர். நிலைமையை புரிந்துகொண்ட ஜெயலலிதா அரசு இது தனது செல்வாக்கை சரியவைக்கும் என எண்ணி சட்டசபையில் ஒருதீர்மானம் கொண்டுவந்தார். அதுதான் முன்பு தனக்கு அதிகாரமில்லை என்று கூறியதை மறுபடியும் கறணமடித்து சொன்னார். தமிழ்மக்களின் உணர்வை மதித்து மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக வழங்க ஜனாதிபதி பரிசீலிக்கவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார். இதைக்கூட அழுத்தமாக கூறவில்லை என்பதை பார்க்கவேண்டும். அ.தி.மு.க அரசைப்பொறுத்தளவில் எப்போதும் விடுதலைப்புலிகளை ஆதரித்ததில்லை தீவிர புலி எதிர்பாளரே ஜெயலலிதா  அவர் எப்படி விடுதலைப்புலிகள் தொடர்பான வழக்கை பாற்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுமட்டுமல்ல இன்று ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் யாரென்பது உங்களிற்கு தெரியுமோ தெரியவில்லை. விடுதலைப்புலிகளை கடுமையாக விமர்சிக்கும் ஒரு பிராமண கழுதைதான் ஜெயலலிதாவின் ஆலோசகர். அவர்தான் எழுத்தாளர் 'சோ' இவரை நீங்கள் ஜெயலலிதாவின் பதவிப்பிரமாணத்தின்போது ஜெயலலிதாவுடன் பார்திருப்பீர்கள். சோ வைப்பொறுத்தளவில் புலிகளை அவர் தீவிரமாக எதிர்ப்வர். இவர் எதிர்க்க பல காரணங்கள் உள்ளது அடிப்படையில் இந்தியாவில் வாழும் (ஈழவிடுதலை போராட்டத்தில் பல போராளிகள் இருந்தார்கள் இந்தியாவில் உள்ளவர்களிற்கு மட்டுமே பொருந்தும்) பிரமண பரம்பரைக்கு விடுதலைப்போராட்டங்களை கண்ணிலை காட்ட கூடாது குறிப்பாக ஆயுதப்போராட்டம் என்றால் பெரும் எதிர்பாளர்கள் இவர்கள்தான்.  எந்த வேலையையும் கஸ்ரப்பட்டு செய்யமாட்டர்கள் ஆனால் நோகாமல் நொங்குதின்றும் ஆட்கள் இவர்கள்தான். எப்படிசொல்கின்றேன் என்றால் பொதுவாக அரச உத்தியோகத்திற்கு போகின்ற அத்தனை இந்திய  பிராமணர்களும் நல்ல அதிகாராத்தில்தான் இருப்பார்கள் எந்தத்துறையை எடுத்துக்கொண்டாலும் அங்கே பிரமணன் இருந்தால் நல்ல பதவிலில்தான் இருப்பான். இந்தியாவில் இராணுவத்தில்கூட உயர்பதவிகளில் பலர் உள்ளனர். எனவே சோ ஒரு பிராமணன் என்பதால் தமிழர்களின் பிரச்சனையில் நிச்சயம் தமிழ்நாட்டு அரசு ஒரு குறிப்பிட்ட வட்டத்தை தாண்டாது. இவர்கள் அரசியலிற்காக மட்டுமே இன்று பேசுகிறது தவிர உண்மையாக அல்ல. குறிப்பாக ஆயுதப்போராட்டத்திற்கு எதிர்காலத்தில் தமிழ்நாட்டு அரசின் ஆதரவு ஒருபோதும் கிடைக்காது என்பதை இந்தஇடத்தில் சொல்லிவைக்க விரும்புகின்றேன். இந்த பிராமணக்கூட்டங்களில் மேலும் உதாரணத்திற்கு சிலர்; சுப்பிரமணியம் சுவாமி, மணிசங்கர் ஐயர்,  அதைவிட ஜெயலலிதா கூட ஒரு பிராமண வம்சாவழிதான்.

ஜெயலலிதாவிற்கு அடுத்த வாரிசுகள்என்று சொல்லுமளவிற்கு இல்லை தேலைவாயன பணம் இருக்கின்றது. இரண்டுமுறை ஆட்சியில் இருந்து சம்பாதித்த சொத்துக்கள் ஏராளம் உண்டு. ஜெயலலிதா இந்தமுறை ஆட்சிக்கு வரும்போது அவரது மனதில் மக்கள் மத்தியில் ஒரு நீங்காத தலைவியாக புகழின் உச்சத்திற்கு செல்லவேண்டும், அதேபோல் எதிர்காலத்தில் தி.மு.க என்ற ஒரு கட்சி இருக்கக்கூடாது என்று விரும்பினார்.  ஈழத்தமிழர் தொடர்பாக இரண்டுவிடயங்களை முதன்மைப்படுத்த விரும்பினார். ஒன்று புரச்சித்லைவர் அல்லது எம்.ஜீ.ஆர் என்று அழைக்கப்படும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜீ.இராமச்சந்திரனிற்கு மக்கள் மத்தியில் இருக்கும் அன்பும் மதிப்பும் ஈழத்தமிழர் அவர் மேல் வைத்திருக்குக்கும் மரியாதையும் அவரிற்கு கிடைப்பதை விட தனக்கு அதிகம் மக்கள்மத்தியில் கிடைக்கவேண்டும் என்பதும். இரண்டாவது முழுத்தமிழரிற்கும் ஒரு தேசியத்தலைவியாக அதாவது இதுவரை பிரபாகரன் மேல் மக்கள் வைத்திருந்த மரியாதைபோல் அவரின் இடைவெளியை தான் நிரப்பிக்கொள்ளவுமே விரும்பினார்.
இதை நன்கறிந்த அமேரிக்க புலனாய்வு நிறுவனமான CIA தனது வலையில் ஜெயலலிதாவை வீழ்தியது. இன்று ஜெயலிதா எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் அமேரிக்காதான் உள்ளது. இந்தியாவை அமேரிக்கா எதிர்க்க விரும்பாததற்கு காரணம் சீனாவின் வழர்ச்சியை தடுக்க இந்தியாவை அமேரிக்கா தற்காலிக நண்பனாக்கியது இது இந்தியாவிற்கும் தெரியும் ஆனாலும் தற்போது ஆட்சியிலுள்ள காங்கிறஸ் கட்சியை பொறுத்தளவு அமேரிக்கா என்னசொன்னாலும் தலையாயட்டும் நிலையில்தான் இந்தியா உள்ளது. ஏனெனில் அவர்களுக்கென்ற தனித்துவமான கொள்கைகள் இப்போது கிடையாது. ஆனால் காங்கிறஸ் கட்சி அடுத்தமுறை ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை அடுத்து ஆட்சிஏறும் பாரதீய ஜனதா கட்சி அமெரிக்காவை ஒருபோதும் நெருங்கிவராது. மாறாக ரஸ்யாவின் பக்கம்தான் சாயும் எனவே மத்திய அரசினால் எதுவும் தனக்கு பயன்வராது தான் எக்காலத்திலும் கையாள வசதியான ஒரு மானிலம் தமிழ்நாடுதான் என்பதை நன்கு புரிந்துகொண்ட அமேரிக்கா தமிழ்நாட்டில் ஜெயலலிதாவிற்கு சில வாக்குறுதிகளை வழங்கி தனது வலையில் வீழ்த்தியுள்ளது. சிறிலங்காவில் தனக்கு ஆதரவான சக்தியை நிறுவ விரும்பியது அமேரிக்கா சிறிலங்காவில் அமேரிக்காவின் நம்பிக்கைக்குரியவரே ரணில் விக்கிரமசிங்கே இவரை ஆட்சிக்கு கொண்டுவர அமேரிக்கா விரும்பியது ஆனால் இவரிற்கு மக்கள் ஆதரவு குறையவே இவரது கட்சிசார்பில் போட்டியிட அன்றய கதாநாயகனாக மக்களால் பார்க்கப்பட்ட முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவை முன்னிறுத்தியது அமேரிக்கா.ஆனால் இறுதியில் என்ன நடந்ததோ சரத்பொன்சேகா தோல்வியடைந்ததும். மீண்டும் ஜனாதிபதியான மகிந்தராஜபக்சே சரத்பொன்சேகாவை சிறயில் அடைத்தார். அது அமேரிக்காவிற்கு தோல்விஎன்றாலும் தமிழ்நாட்டை தனக்கு சாதகமாக திருப்ப விரும்பியது அதன்படி இன்று  அமேரிக்காவின்  ஆதரவான சக்தியை தமிழ்நாட்டில் நிறுவியுள்ளது. இதனை உறுதிப்படுத்த கடந்த காலங்களில்; நடந்து முடிந்துள்ள சில முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.  ஒன்று ஜெயலலிதா முதலமைச்சரானதும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித்தலைவர் ரணில்விக்கிரமசிங்கர் எதற்காக சம்மந்தமில்லாமல் ஜெயலலிதாவை சந்திக்கவேண்டும்.  உண்மையில் இந்த சந்திப்பு அமெரிக்காவின் ஊஐயு ன் நம்பிக்கைக்குரிய நண்பர்களின் சந்திப்பே ஆகும். அடுத்து தமிழ்நாடரசு இலங்கைக்கு எதிரான பொருளாதார தடைவிதிக்கவேண்டும் என்ற தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டபின்னர். இதே தீர்மானத்தை அமேரிக்காவும் கொண்டுவர முயற்சித்தது, அடுத்து கிலாரி கிளிங்டன் ஜெயலலிதாவை நேரில் வந்து சந்தித்து வாழ்த்துத்தெரிவித்தமை. இவர் வெறுமனவே ஜெயலலிதாவை மட்டும் சந்தித்திட்டு போனால் சந்தேகம் வரும் என்றெண்ணி டில்லிக்குப்போய் பின்னர் தமிழ்நாடு வந்து ஜெயலலிதாவை சந்தித்துசென்றார். இவை எல்லாம் திட்டமிட்ட ஒரு கால நிகழ்ச்சிநிரலில்தான் நடைபெறுகிறதே தவிர ஏதோ எதேர்ச்சையாக நடைபெறவில்லை.

 இன்று பலர் ஜெயலலிதாவின் செயற்பாடுகள் நம்பிக்கை தருவதாக சொல்கின்றார்கள். உண்மையில் அமேரிக்காவின் வலையில் ஜெயலலிதா விழுந்துவிட்டார் என்பது மட்டுமே உண்மை. அமேரிக்காவை பொறுத்தளவில் தற்போதய சூழலில் தமிழீழத்திற்கு அமேரிக்கா ஆதரவளிக்கக்கூடிய நிலையில் இல்லை. எனவே ஜெயலலிதாவும் இதே நிலைப்பாட்டில்தான் இருப்பார். ம.தி.மு.க பொதுச்செயலர் திரு.வைகோ அவர்கள் தெரிந்துதான் சொன்னாரா இல்லை தெரியாமல் சொன்னாரா தெரியவில்லை ஒருதடைவை கூறியிருந்தார். தமிழீழத்தை தமிழ்நாடு அரசு அங்கிகரித்தால் அல்லது தமிழர்களிற்கு தமிழீழம்தான் தீர்வு என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தால் உண்மையிலேயே ஜெயலலிதா புரட்சித்தலைவிதான் என்று. ஆனால் இதை அவர் கொண்டுவரப்போவதில்லை. அதற்கு அமேரிக்கா ஒருபோதும் சம்மதிக்காது.
இது ஒருபக்கம் இருக்க இந்திய மத்திய அரசில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்னர் தமிழர்கள் ஒரு பொரிய வெற்றிபெற வாய்ப்புள்ளது. அது என்னவெனில் புதிய மத்திய அரசுடன் அமேரிக்காவிற்கு ஒத்துப்போகாது இது தமிழர்களிற்கு நல்லது இந்தநேரத்தில் அமேரிக்காவுடனும் இந்தியாவுடனும் நாம் சரியாக இராயதந்திர ரீதியில் அணுகினால் இந்தநாடுகளின் ஈழம் தொடர்பான கொள்கைகளில் மாற்றம் கொண்டுவர முடியும். இந்நேரத்தில் இந்தியாவிடம் சில நிபர்ந்தனைகளுக்கு தமிழீழம் கட்டுப்படும் என்ற வாக்குறுதியை வழங்கி தமிழீழத்திற்கான அங்கிகாரத்தையும் அதை அடைய உதவியையும் புதிய மத்திய அரசிடம் கேட்கலாம். அது சரிவராதுபோனால் இனிமேல் இந்தியாவை நம்பி பிரியோசனமில்லை என்று அமேரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யலாம் அமேரிக்காவின் நிபர்ந்தனைகள் சிலதை ஏற்றுக்கொண்டு நாம் தமிழீழத்தை அடைய முயற்சிப்பது. அமேரிக்காவிற்கும் இந்த காலத்தில் ஆசியாவில் நம்பிக்கைக்குரிய நண்பர்கள் தேவை எனவே அமேரிகக்காவின் நட்புகிடைத்தால் அடுத்த நிமிடமே தமிழீழம்தான் ஏனெனில் அமேரிக்காவே எதிர்க்க இப்போது யாருமில்லை. எமக்கு  யார்குற்றினாலும் அரிசியானால் சரி என்கின்ற வகையில் நாம் செயற்பட்டால் வெற்றிபெறலாம். இதற்கு இந்தியாவில் உள்ள அரசியற்கட்சிகளே அல்லது நாடுகடந்த தமிழீழ அரசோ பிரியோசனப்படாது இதற்கு ஒன்றில் தமிழரிற்கான ஒரு பலமான இராணுவம் இருக்கவேண்டும் இல்லை தமிழரது பலமான புலனாய்வு அமைப்பு இருக்கவேண்டும்.  இப்போதுள்ள சூழலில் தமிழர் பலமான புலனாய்வு அமைப்பைத்தான் நிறுவமுடியும் இது சாத்தியமானால். சர்வதேச அரசியலில் பல ஆச்சரியத்தக்க மாற்றங்களை புலனாய்வு அமைப்பின் மூலம் நிகழ்த்தலாம்.

தமிழ்நாட்டில் முள்ளிவாய்க்காலிற்கு பின்னர் முன்பிருந்ததை விட பலமடங்கு தமிழீழ ஆதரவாளர்கள் அதிகரித்துள்ளனர் கட்சிகளால் பிளவுபட்டிருந்தாலும் உணர்வுரீதியில் பெரும்பாலானவர்கள் தமிழீழத்திற்கு ஆதரவாக குரலெழுப்பி வருகின்றனர். இது எமக்கு மிகப்பெரிய மிகவும் சாதகமான காலம். இப்போது தமிழ்நாட்டில் பல தமிழீழ ஆதரவு கட்சிகள் உள்ளன அவர்களின் செயற்பாடுகள் வெளியிலிருந்து பார்க்கும் பலரிற்கு பிழையாக தெரிகின்றது எல்லோரும் ஒரு விடயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டு;ம் அவர்கள் எங்கள் பிரதிநிதிகள் அல்ல நாங்கள் அவர்களை தெரிவுசெய்யவில்லை  அவர்களிற்கென்று கட்சிகள் உள்ளது. அவர்ளிற்கௌ;று கட்சிரீதியான கொள்கைகள் உள்ளது. அவர்களை தெரிவுசெய்த மக்களிற்கு திருப்திப்படுத்த ஒவ்வொரு தலைவர்களும் விரும்புவார்கள் எனவே அவர்கள் தங்களின் அரசியலிற்காக சில முடிவுகள் எடுக்கலாம் அதை நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள கூடாது அது அவர்களின் சொந்த முடிவு. அவர்களால் முடிந்தளவு ஆதரவு குரல் எழுப்புகின்றார்கள் அதுவும்  ஒரு அளவிற்குத்தான் எழுப்பமுடியும். ஏதோ அவர்களால் முடிந்ததை செய்கின்றார்கள் அத்துடன் நாம் திருப்திப்பட்டுக்கொண்டு எமக்கான ஒரு பாதையை நாம்தான் உருவாக்கிக்கொள்ளவேண்டும். ஏனெனில் அவர்களிற்கென்று ஒரு சுதந்திரமான நாடு உள்ளது, சுதந்திரமாக எங்குவேண்டுமானாலும் செல்லலாம் நில் என்று கேட்கயாரும் இல்லை அவர்களது உயிர்களிற்கு பாதுகாப்பு உள்ளது எந்த அடக்குமுறையும் இல்லை எனவே தமிழ்நாட்டு மக்கள் சுதந்திரமனிதர்களாக வாழ்கின்றார்கள் இவ்வளவு இருந்தும் எமக்காக குரல்கொடுக்கிறார்கள் போராடுகிறார்கள் தீக்குளிக்கிறார்கள். நாங்கள் நினைக்காததைகூட செய்ய முயற்சிக்கிறார்கள் எனவே இதைவிடவும் நாம் எதையும்; எதிர்பார்க்க கூடாது செய்தவரைக்கும் நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளோம். அடுத்து  அவர்களிற்கு ஈழப்பிரச்சனை இரண்டாந்தர பிரச்சனைதான் எமக்குத்தான் இது எமது நாளாந்த பிரச்சனை, முதலாவது பிரச்சனை என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ளுங்கள்.சில புலம்பெயர் தமிழர்களிற்கு கூட இது இரண்டாம்தர பிரச்சனைதான் என்று நினைக்கின்றார்கள். எனவே மற்றவர்களில் குறை கண்டுபிடிக்காது நீங்கள்தான் ஒவ்வொருவரும் முடிந்தளவு முயற்சி செய்யவேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இவையெல்லாம் எம்மைச்சுற்றி நடக்கும் அரசியல் புலனாய்வு நகர்வுகள் இது ஒருபக்கமிருக்க இப்போது  நாம்   என்ன செய்துகொண்டிருக்கிறோம் என பார்ப்போம்.
இன்றய காலகட்டத்தில் மக்களின் பேச்சு - தலைவர் இருக்கிறாரா? என்று தேடுபவர்கள் ஒருபக்கம். விடுதலைப்புலிகள் மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாரிகிவிட்டார்கள் மிக விரைவில் தலைவர் வெளிப்படுவர் என்று கூறுபவர்கள் இன்னுமொரு பக்கம் என இன்று தமிழர்கள்  கண்களை மூடிக்கொண்டு இருட்டறையில் ஒரு மூலையில் இருந்துகொண்டு நாம் இன்னும் பலமாக உள்ளோம், நாம் இன்னும் பலமாக உள்ளோம் என்று திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டு மாயையில் இருக்கின்றார்கள்.

முதலில் நீங்கள் இருக்கும் இருட்டறையை விட்டு வெளியே வாருங்கள் வீழ்ந்து கிடக்கும் நீங்கள்தான் தடுமாறித்தடுமாறி இடறுப்பட்டு எழுந்து நடக்கவேண்டும். மாறாக யாரும் உங்களை தூக்கிவிடுவார்கள் என்ற கற்பனையில்  இருக்காதீர்கள். இந்த உலகமே சுயநலமானது ஒருவரின் இறப்பை வைத்துக்கொண்டுகூட இன்று அரசியல் செய்யுமளவிற்கு மனிதாபிமான மற்ற மக்களாக மாறிவிட்டார்கள். பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் இன்னும் என்னஎல்லாம் சொல்லப்போகிறார்கள் என்று பார்க்கத்தானேபோகிறோம்.

அன்பான தமிழ்ஈழ மக்களே இறுதியுத்தத்தில் மாண்டவர்கள்போக மீண்டவர்கள் இப்போது இரண்டுவகையாக பிரிந்துள்ளனர். ஒன்று அரசின்ஆதரவுடன் இயங்கும் துரோகக்கும்பல்கள், அடுத்தது போராட்ட நம்பிக்கை இழந்தவர்கள் ஆகியவர்களே பெரும்பாலும் உள்நாட்டில் வாழ்கின்றார்கள். இதில் அரசின் ஆதரவுடன் இயங்கும் துரோகக்கும்பலுடன் ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் இருக்கின்றார்கள். இவர்கள் எவ்வாறு இன்று இப்படி மாற்றப்பட்டார்கள் என்று நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள். பதினெட்டு வயதினில் பாதிவழியில் கல்வியை தூக்கி எறிந்துவிட்டு தான் சார்ந்த இனத்தின் விடுதலைக்காக போராட கையில் தூக்கிய துப்பாக்கிப்பயணம் பத்து வரிடம் இருபது வரிடம் ஏன் இருபத்தைந்து வரிடமாககூட ஒவ்வொரு நாளும் வேதனைகளையும் வலிகளையும் தாங்கித்தான் ஒவ்வொரு போராளியும் போராடினார்கள். இறுதிவரைக்கும் சரணடையாது துரோகம்செய்யாது விசுவாசமாக போராடினார்கள். யுத்தம் ஒரு புள்ளியில் முடிந்தபோது பலர் தம்மைத்தாமே அழித்துக்கொண்டனர் பெரும்பாலானவர்கள் வேறு வழியும் இல்லாததால் அன்றய போரின் இறுதி அதுதான் வேறு வழிஇல்லை சர்வதேசம் எங்களை பார்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தின் முடிவில் சரணடைந்தார்கள். சரணடைந்தவர்களில் பெரும்பாலனவர்கள் கொல்லப்பட மிகுதிப்பேர் தடுப்புக்காவலிற்கு அனுப்பப்பட்டனர். நீண்ட சித்திரவதைகளின் பின்னர் விடுதலையாகி வீட்டுக்கு வந்தவர்களிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. தான் தனது எதிர்காலத்தைவிட்டு யாருக்காக போராடிநானோ அந்த மக்களே அவர்களை தூக்கி எறிந்தார்கள். வேலைக்குபோனால் ஒருவரும் வேலை கொடுக்க தயாராக இல்லை, ஏளனமான பார்வையும், வேண்டப்படாதவர்களாக, தீண்டத்தகாதவர்களாக, இயக்கத்திலா இருந்தனி என்ற அருவருப்பான பார்வையை பெரும்பாலானவர்கள் பார்க்கிறார்கள். எந்த மக்கள் கைஏந்தக்கூடாது பிச்சை எடுக்கக்கூடாது என்று போராடினானோ இன்று அந்த மக்களிடமே ஒரு நேர சோற்றிற்காக கையேந்தி நிற்கின்றான். தொடர்ந்து அவனாலும் அந்தவாழ்கையை வாழ முடியாது. ஒவ்வொருதரையும் விடுதலை செய்யும் போதும், மாதாந்தம் இராணுவ நிலையம், பொலிஸ்நிலையத்தில் கையொப்பம் இடும்பொழுதும் இராணுவ புலனாய்வாளர்கள் சந்திக்கின்றார்கள். அவர்களின் வார்த்தையில் அந்த இடத்தில் அவனிற்கு பொருத்தமாக இருக்கின்றது. அவனிற்கு அடுத்தநேர சோறு தேவை அவனும் இந்த சமூகத்தில் வாழவிரும்புவதால் சமூகத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட அவன் அந்த மக்களிற்கு பாடம்புகட்ட விரும்புகின்றான் இப்போது அவன் இராணுவ புலனாய்வாளனாக, இன்னும் இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துரோகக்கும்களுடன் அவனும் சேர்ந்துகொள்கின்றான். இன்று தமிழ் சமூகம் ஏன் அவர்களை திரும்பிப்பார்க்கவில்லை.

ஓட்டப்பந்தயத்திற்கு குதிரைதேவை, பந்தயத்தில் ஓடும்போது எல்லோரும் உற்சாகம்தந்ததீர்கள். பந்தயம் தோற்றுவிட்டதால் குதிரையே தேவையில்லை என்கிறீர்களே ஏன்? ஆனால் மீண்டும் சவாரி செய்யும் ஆசைமட்டுமம் இன்னும் போகவில்லை. 
அடுத்து போரட்டத்தில் நம்பிக்கை இழந்தவர்கள். இவர்கள் போரின் இறுதியின்பின்னர் நாட்டைவிட்டு தப்பிவெளியேறியவர்கள் மற்றும் சரணடைந்து பின்னர் விடுதலையாகி தமது உறவினர்களின் உதவியுடன் வெளிநாடுகளிற்கு தப்பிச்சென்றவர்கள் மற்றும் ஏதோ ஜீவனோபாயத்திற்கு உழைக்கக்கூடிய நிலையில் உள்நாட்டில் உள்ள முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் தீவிர ஆதரவாளர்கள் போன்றவர்களை குறிப்பிடலாம். இவர்களில் பெரும்பாலான போராட்டக்காலப்பகுதியில் பல்வேறு யுத்தங்களிலும் காயமடைந்த போராளிகளும் உள்ளடங்குவர் காயப்பட்ட போராளிளைப்பொறுத்தஅளவில் எதிர்காலத்தை தொலைத்தவர்களாக போரின் நிரந்தர அடையாளங்களாகவும் மிகவும் மோசமான உளவியல்தாக்கத்திற்கு உள்ளானவர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வளவு செய்தும் வெற்றிபெற முடியவில்லையென்றால் இனிமேலும் வெற்றிபெற முடியாது என்று நினைக்கிறார்கள். இவர்களைப்பொறுத்தளவில் மிகவும் ஏமாற்றமடைந்த மனநிலையில் இருப்பதுடன். தாம் தலைமையால் ஏமாற்றவும் பட்டுள்ளோம் என்றும் சிலர் கருதுகிறார்கள். இவர்களில் 99 சதவீதமானவர்கள் திருமணமாகிவாழ்கிறார்கள். இவர்கள் அடுத்தகட்ட போராட்டத்தை கனவில்கூட நினைக்கமுடியாத மனநிலையிலேயே உள்ளனர். வெளிநாட்டில் வாழ்ழும் முன்னாள் போராளிகள் கூட குறைந்தபட்சம் அந்தந்த நாடுகளில் நடக்கும் கண்டன பேரணியில்கூட கலந்துகொள்ளக்கூடிய மனநிலையில் இல்லை.  காரணம் இவர்கள் ஏமாற்றமடைந்த குற்றஉணர்வுடனும் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாமலும் வாழ்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏதோ சிரமப்பட்டு வெளிநாட்டிற்கு வந்தாலும். இவர்கள் கடன் தொல்லைகளுடன்தான் வாழ்கிறார்கள். தமது இளமைக்காலத்தை வீணாக்கிவிட்டோம் என்றுஉணர்கின்றார்கள். இன்று சர்வதேச புலிகள் எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதையும் இவர்கள் நேரிலேயேபார்க்கிறார்கள். தாமும் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற மனநிலையிலத்தான் வாழ்கின்றார்கள். நான் வெளிநாடுகளில் வாழும் முன்னாள் உறுப்பினர் நண்பர்களிடம் பேசும்போது அவர்களின் மனநிலையை அறிய அடுத்தகட்டபோராட்டம் தொடர்பாக ஏதாவது சொன்னால் ஒவ்வொருதரும் கோபப்பட்டு திட்டித்தீர்கும் மனநிலையில்த்தான் இன்று உள்ளார்கள். நீண்ட போராட்டச்சுமையை சுமந்த போராளிகள் மற்றும் தீவிர ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர் போன்றோரில் பெரும்பாலானவர்கள் இன்று போராட்டத்தில் நம்பிக்கை இழந்து வாழ்கின்றார்கள்.

 இவையெல்லாம் பெரும்பாலானவர்களின் கருத்தே ஒரு சிலர் வித்தியாசமாக சிந்திக்கலாம். ஆனால் பெரும்பான்மைதான் ஒரு முடிவை தீர்மானிக்கும். என்பதற்கிணங்கவே எழுதுகின்றேன்.

இவை இரண்டுதரப்பையும்விட இன்னும் ஒரு ஆபத்தான தரப்பு உள்ளது அதுதான் புலி என்கின்ற மாயைக்குள் இருந்துகொண்டு கோசம்போடும் புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர். இவர்கள் தெரிந்துதான் செய்கின்றார்களா இல்லைதெரியாமல் சொல்கின்றார்களா என்று புரியவில்லை. ஆனால் ஒன்றைமட்டும் கூறுகிறார்கள். பல ஆயிரம் போராளிகளுடனும் முக்கிய தளபதிகளுடன் தலைவர்  அடுத்த கட்;ட போரிற்கு தயாராகிவிட்டார் மிக விரைவில் தலைவர் வெளிப்படுவார் என்றும் கூறுகின்றார்கள். இவர்கள் வீரவசணங்களும் அறிக்கைகளும் என்று தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள் இவர்களையும் ஏமாற்றத்தெரிந்த கூட்டம் ஒன்றும் உள்ளது. அதுதான் சர்வதேச காகித புலிகள். இவர்கள்தான் இந்த ஏமாந்த மக்களிற்கு தாம் பணம் சுரண்டும் ஒரே நோக்கத்திற்காக இன்றும் ஏமாற்றி வருகின்றார்கள். இதைக்கேட்கும் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் முன்னால்போராளிகள்கூட இன்று கேலிசெய்யும் அளவிற்கு கற்பனை கதைகள் பயணிக்கின்றது. இந்த வீர வசணம் வாசிக்கும் கூட்டங்கள் தாம் எதையாவது செய்யும் மனநிலையில் உள்ளார்களா என்றால் நிச்சயம் இல்லை. இவர்களிடம் தொலைபேசியில் உரையாடினாலும் சரி இல்லை நேரில் பேசினாலும் சரி நாம் விடமாட்டம் விடமாட்டடோம் என்றே சொல்கிறார்கள். இவர்கள் எதைச்சொல்கின்றார்கள் என்பது எனக்கு புரியவில்லை. இவர்களிடம் பொதுவாக நான் ஒரு கேள்விகேட்க விரும்புகின்றேன்.

இதுவரைக்கும் சுயநலமாக இருந்துவிட்டீர்கள் போகட்டும் இனியாவது 'ஒரு பேச்சிற்கு மட்டும்தான் சொல்கின்றேன்' தலைவர் சாகவில்லை வந்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அதாவது இந்த கட்டுரையை வாசிக்கும்" நீ உன்னைத்தான்... நீ போராடத்தயாரா? ஆயுதம்தூக்கி யுத்தகளத்துக்கு போக நீ தயாரா?.... "இதை உங்கள் நண்பர்களிடமும் கேட்டுப்பாருங்கள். இதுதான் எனது கேள்வி. நிச்சயமாக நான் சொல்லுவேன் இப்போதல்ல எப்போதும் இந்த வீர வசண கூட்டங்கள் போராட தயாரக இல்லை என்பதே உண்மை. இவர்களிற்கு மீண்டும் இறந்தவர்கள் வரவேண்டும். மீண்டும் தலைவர் பிரபாகரன் வரவேண்டும். மீண்டும் புலி என்கிற குதிரையில் ஏறி சவாரிசெய்ய இவர்கள் காத்திருக்கிறார்கள்.

எனவே உள்நாட்டில்என்றாலும்சரி வெளிநாட்டில் என்றாலும்சரி இன்றய நிலையில் ஆயுதம் தூக்கி போராடும் மனநிலையில் யாரும் இல்லை என்பதை முதலில் ஒவ்வொரு தமிழனும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்
இதுவரை ஆராய்ந்ததன் நோக்கம் எம்மால் ஒன்றும் செய்யமுடியாது தருவதை வாங்கிக்கொண்டு ஒரு மூலையில் ஒடுங்கத்தான் முடியும் என்பதை சொல்வதற்காக அல்ல மாறாக எமது பலவீனங்களை எதிர்காலத்தில் சரிசெய்துகொண்டு மீண்டும் எமக்கான வழியை தீர்மானிக்கவேண்டும். எனவே இல்லாத ஒன்றிற்காகவும் நடக்க சாத்தியப்படாத ஒன்றிற்காகவும் முட்டாள்தனமாக நம்பியிருக்காது. இப்போது கீழே வீழ்ந்து கிடக்கும் நாம்தான் சிரமப்பட்டு மீண்டும் எழுந்துகொள்ளவேண்டும் எம்மை இனி யாரும் தூக்கிவிடப்போவதில்லை நாம்தான் முயற்சிசெய்து எழுந்துகொள்ளவேண்டும் என்பதை உணர்தவே சொல்லியுள்ளேன். இது தான் இன்றய தமிழர்களின் நிலைஎன்பதை கருத்திற்கொண்டு இப்போதுள்ள நிலைமையில் எது சாத்தியமோ அதை அடைவதே புத்திசாலித்தனமானது. எனவே சும்மாக எமது பலத்தைவிட அதீத கற்பனைகளில்மிதப்பது, வானத்தை பிழந்துகொண்டு ஒரு அதிசயம் நடந்து தமிழீழம் கிடைக்கும் என்று நம்புவதை விட்டு. இன்றய காலகட்டத்தில் பொருத்தமான ஒன்றை நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

என்ன செய்யலாம் இப்போது எதைச்செய்யக்கூடிய நிலை உள்ளது என்று பலர் நினைக்கலாம். இப்போது என்ன செய்யவேண்டும் என்பதற்து ஒரு நல்ல உதாரணம் ஸ்ரேல்.  இன்று உலக வல்லரசுகளுடன் போட்டிபோடுமளவிற்கு புலனாய்விலும் சரி தொழில்நுட்பத்திலும் சரி இன்று ஸ்ரேல் வழர்ந்துள்ளது.  இந்த மக்கள்  ஒரு காலத்தில் நாடற்ற அகதிகளாகவேவாழ்ந்தனர். அவர்கள் இறுதியில் ஒரு பலமான நாட்டை எவ்வாறு உருவாக்கினார்கள் என்ற ஸ்ரேலின் வரலாற்றை ஒருதடைவை தேடி படித்து அறிந்துகௌ;ளுங்கள். இந்த உலகத்தில் இன்று தமிழர் எவ்வாறு அகதிகளாக நாடற்று அலைந்துகொண்டிருக்கிறாரக்களே அவ்வாறே யூதர்களும் ஒரு காலத்தில் அலைந்து திரிந்தார்கள் நாடற்றவர்களாக இருந்த யூதர்களிடம் ஒற்றுமை இருந்தது அவர்கள் மனதில் ஒரு நாட்டை உருவாக்கவேண்டும்  என்ற உணர்விருந்தது ஆனால் அவர்கள் அதை அடைய ஒரு கட்டமைப்பை உருவாக்கினர் அதுதான் மொசாட் என்று அழைக்கப்படும் ஸ்ரேலிய புலனாய்வு நிறுவனம். இதன் செயற்திட்டத்திற்கு ஏற்ப ஒவ்வொரு யூதனும் சரியாக செயற்பட்டார்கள் இறுதியில் ஒரு பலமான ஒரு நாட்டினை உருவாக்கினார்கள். இன்று உலகத்தில் முதல்தர பலம்வாய்ந்த ஒரு புலனாய்வு நிறுவனமாக மொசாட் திகழ்கிறது. இன்றய நிலையில் தமிழர்களும் இதே வழியை பயன்படுத்திக்கொள்முடியும் ஏனெனில் இந்த உலகத்தின் பெரும்பாலான அனைத்து  நாடுகளிலும் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் தமக்குள் ஒரு கட்டமைப்பை பேணி ஒரு புலனாய்வு நிகழ்ச்சிநிரலிற்கு ஏற்ப செயற்பட்டால் இந்த உலகத்திற்கே சவால்விடும் மிகப்பெரிய புலனாய்வு அமைப்பு தமிழர்களுடையதாகத்தான் இருக்கும்.
எனவே இப்போதுள்ள சிக்கலான சூழலில்இருந்து தமிழ்மக்கள் வெளிவரவும், தமக்கான ஒரு விடுதலையை பெற்றுக்கொள்ளவும் இப்போதக்கு உள்ள ஒரே வழி தமக்கான ஒரு உருப்படியான ஒரு புலனாய்வுத்துறையை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்பதே. இது ஒன்றும் நான் புதிதாக கண்டுபிடித்த ஒன்று அல்ல. ஏர்க்கனவே தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை ஒன்று இருந்தது ஆனால் அது இன்று செயற்பாடற்ற முதுகெலும்பில்லாத ஒரு துறையாகிவிட்டது. சிறிலங்கா அரசு சும்மாக தனது அரசியலிற்காக அடிக்கடி புலிகளின் புலனாய்வுத்துறையின் செயற்பாடு இப்போதும் இருக்கிறது என்றுசொன்னாலும். இப்போது உண்மையில் அதன் செயற்பாடு இல்லை என்று சொல்லாம். எனவே நாம் எமக்கான ஒரு உருப்படியான புலனாய்வுத்துறையை முதலில் நிறுவிக்கொள்ளவேண்டும் இல்லை ஏர்க்கனவே இருந்ததை சீரமைக்கப்பட்ட புலனாய்வுத்துறையாக மாற்றவேண்டும். நாம் எதை செய்வதானாலும் அது புலனாய்வுரீதியில் அணுகினால்தான் எதிர்காலத்தில் வெற்றிபெறும். ஒரு  நாட்டிற்கு ஆணிவேராக திகழும் ஒரு அமைப்பு இந்த புலனாய்வுத்துறை தான். இவர்களின் திட்டமிடலில்தான் அடுத்தகட்ட போராட்டம் சாத்தியப்படும். எமது கடந்தகாலப்போராட்டத்தோல்விக்கு மிகப்பெரிய காரணம் எமது புலனாய்வுத்துறையின் பலவீனம்தான் என்பதை சொல்லவிரும்புகின்றேன். ஒரு புலனாய்வுத்துறையின் வேலை என்பது ஒருவரை சுடுவதோ அல்லது குண்டுவைப்பதோ அல்ல அதையும்விட இன்னும் பல விடயங்கள் உள்ளே இருக்கிறது. யுத்தமானாலும் சரி அரசியலானாலும் சரி பின்னணியில் இயக்கவேண்டிய சக்தி அன்நாட்டின் புலனாய்வுத்துறையே என்பதை முதலில் உணரவேண்டும். ஒவ்வொரு முடிவையும் புலனாய்வுத்துறை சரியென்று உறுதிப்படுத்திய பின்பே செயற்படுத்தவேண்டும். சர்வதேச அரசியலில் புலனாய்வுத்துறையிலன் திறமையால்தான் உலகத்தையே தமிழர்களின் போராட்டத்திற்கு நியாயத்தினையும் ஆதரவையும் திரட்டமுடியும். அதேபோல் போராடி சுதந்திரமடைந்த நாடுகளையும் எமக்கு சாதகமாக திருப்பும் திறமை புலனாய்வுத்துறையையே சாரும். எனவே நாம் எதிர்காலத்தில் எதைச்செய்வதானாலும் இப்போது பலமான ஒரு புலனாய்வுத்துறையை கட்டியமைக்கவேண்டும் என்பதே உண்மை.

குறிபாபாக ஏர்க்கனவே இருந்த புலனாய்வுத்துறையில் இருந்தவர்கள் இதை மீண்டும் இயக்க முன்வரவேண்டும். ஒவ்வொருதரும் சிற்றரசுகள்போல் நினைப்பதும் அவர்களிற்குகீழுள்ளவர்கள் குறுநில மன்னர்கள் போல் செயற்படுவதை நிறுத்தி எமக்கான ஒரு பலமான ஒரு புலனாய்வுத்துறையை முதலில் நிறுவிக்கொள்ள வேண்டும் என்பதை உணருங்கள். ஏர்க்கனவே இருந்த அமைப்பில் நம்பிக்கை இல்லை எனில் புதிதாக ஒன்றை நிறுவிக்கொள்ளுங்கள்.  ஏனெனில் புலனாய்வு அமைப்பின் நிணலிலேயே எதிர்காலத்தில் ஒரு இராணுவம் வழரவேண்டும். இல்லையேல் வெற்றிபெற முடியாது. எனவே உங்களின் கடந்தகால கசப்புணர்புகளை மறந்து இதுவரை எப்படியிருந்தீர்கள் என்னசெய்தீர்கள் என்பதையெல்லாம் மறந்து நாம் எமக்கான ஒரு சாத்தியப்படக்கூடிய வழியை எந்தவித சுயநல எண்ணமும் இல்லாமல் துரோக எண்ணங்களும் இல்லாமல் இந்த கட்டமைப்பை ஒவ்வொரு தமிழர்களும் பலப்படுத்திக்கொள்ளவேண்டும்.  இப்போது யாரும் உடலில் வெடிகுண்டை கட்டிக்கொள்ளதேவையில்லை கழுத்தில் சயனைற் குப்பியையும் கட்டிக்கொள்ளத்தேவையில்லை நீங்கள் நீங்களாகவே விடுதலைக்கான பாதையில் பயணிக்க தயாராகுங்கள்.
இந்த உலகத்திலேயே பிரிந்து சென்று ஒரு நாட்டை உருவாக்க அத்தனை தகுதிகளும் உள்ள ஒரு இனம் தமிழினம்தான். ஆனால் இன்னும் இது சாத்தியப்படாமல் இருக்க சுயநலவாத எண்ணங்களுடன் கூடிய பிற்போக்கு சிந்தனையாளர்களும், எதிலும் ஒத்துளையாமல் வெறும் பார்வையாளர்களாக இருந்துகொண்டு எல்லாவற்றையும் விமர்சனம்செய்துகொண்டு இருப்பவர்களும் காரணம்.

பொதுவாக முதலில் ஒவ்வொருவரும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த பழகிக்கொள்ளவேண்டும் ஏனெனில் உணர்வா உணர்ச்சியா என்ற போராட்ட்த்தில் பெரும்பாலும் எப்போதும் உணர்ச்சியே வெற்றிபெற்றுக்கொள்கின்றது. உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாதவரைக்கும் வாய்தான் வீரம்பேசும் உருப்படியாக எதுவுமே நடக்காது. எனவே தன்னலமில்லாது போராடவேண்டுமானால் முதலில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவேண்டும். 

இப்போது பெரும்பாலானவர்களிற்கு உணர்வு வருகிறது வீரம் வருகின்றது கொதித்தெழுகிறார்கள் போராடவிரும்புகின்றார்கள் ஆனால் அவர்கள் இப்போது 50 வயதை தாண்டிவிட்டார்கள். வாழ்ந்து முடிந்து ஓய்ந்தபிறகு தூக்கவேண்டியது ஊன்றுகோல்தான் துப்பாக்கி அல்ல. இளமைக்காலத்தில்  நாடிநரம்புகளில் முறுக்கேறியவீரத்துடன் கையில் தூக்கும் துப்பாக்கிதான் ஒரு விடுதலையை பெற்றுக்கொடுக்கும். இக்காலத்தில் செய்யவேண்டிய ஒன்றே விடுதலைப்போராட்டம். எனதருமை இளஞ்ஞர்களே உங்ளிற்கு நான் புதிதாக என்னசொல்ல எல்லாமே உங்களிற்கு தெரியும். இருந்தும் உங்களிற்கும் 50 வயதில்தான் ஞானம்  பிறக்கப்போகிறதா...? 

நாம் எமக்கான ஒரு பொதுவான கட்டமைப்புக்குள் நம்பிக்கையுடன் பயணிக்கத்தயாராகவேண்டும். ஏனெனில் எமக்கு இருக்கும் கால இடைவெளி மிகக்குறைவானது. யதார்த்த நிலைமையை உணர்ந்துகொண்டு நீங்கள் பயணிக்காது மீண்டும் மாயையில் மிதப்பீர்களானால். ஓர் நாள் நீங்கள் நிச்சயம் உண்மையை உணர்வீர்கள் நீங்கள் உண்மையை உணரும்போது இந்த உலகமே முள்ளிவாய்காலை மறந்து பல ஆண்டுகளாகியிருக்கும் அதன்பின் நீங்கள் என்ன செய்தாலும் அது பயங்கரவாதமாகவே உலகத்தால் பார்க்கப்படும். அதுமட்டுமல்ல இந்தத் தலைமுறை போராடாது போனால் முள்ளிவாய்கால்தான் தமிழர்களின் இறுதிப்போராட்ட இடமாக இருக்கும்.ஏனெனில் எமக்கு அடுத்ததலைமுறைக்கு இதுதான் வாழ்க்கை இப்படியே வாழ்ந்திடலாம் என்ற சிந்தனைதான் வரும்.
ஆகவே இப்போது வாழும் உங்களால் மட்டுமே ஒரு வரலாற்றை திறக்கமுடியும். இன்று தமிழர்களின் போராட்டத்தில் ஒரு நியாயம் இருப்பதை உலகம் ஏற்றுக்கொள்கின்றது. முள்ளிவாய்க்காலின் பின்னர் பெரும்பாலான உலக மக்கள் தமிழர்களின் போராட்டத்திற்கு அதிக ஆதரவு வழங்குகின்றார்கள். புலிகளை காலங்காலமாக விமர்சித்தவர்கள்கூட இன்று புலிகளின் அழிவால் வருத்தப்படுகிறார்கள். எல்லோருக்கும் காலம்கடந்துதான் ஞானம் பிறக்கிறது.

உள்நாட்டில் இதுவரை உருப்படியாக எதுவும்நடக்கவில்லை. சிங்களவர்கள் இப்போது தமிழனை வென்றுவிட்டோம் இருக்கும் மிகுதிதமிழனும் கோளைகள் தாம் என்னவேண்டுமானாலும் செய்யலாம் தட்டிக்கேட்கயாருமில்லை என்ற மமதையில் வெற்றியின் உச்சத்தில் நின்று தாண்டவமாடுகினறது. சர்வதேசரீதியல் பலமான நாடாக வழர்ந்துவரும் சீனாவின் செல்லப்பிள்ளையாக இருக்கும் சிறிலங்கா இப்போது இலங்கைத்தீவை தனித்ச்சிங்கள தீவாக மாற்றத் தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் கடந்தகால போராட்டங்களில் பங்குபற்றியவர்கள், ஆதரவாளர்கள் பழிவாங்கப்பட மறுபக்கம் வசதிபடைத்த உள்நாட்டில் வசிக்கும் தமிழர்கள் அரசிற்கு முண்டுகொடுத்து இன அழிப்பிற்கு துணை நிற்கிறார்கள். இதே போக்கில் போனால் இன்னும் இருபத்தைந்து வரி;டத்தில் தமிழன் என்று சொல்ல இலங்கையில் யாரும் இருக்கமாட்டார்கள்.  இந்த இரண்டு வரிடத்தில் சிங்களம் செய்த சாதனை, 21ம் நூற்றாண்டில் சிங்களஆளும் வர்கத்திற்கு தோன்றிய புதிய சிந்தனை, கிறீஸ்பூதம் என்ற சிங்களதேசத்தின் புதிய கண்டுபிடிப்புத்தான் நிகழ்திருக்கின்றது. என்னதான் தொழில்நுட்பம் வழர்ந்தாலும் சிங்களவர்களிற்கு இப்போதும் மாட்டுக்கு வால் வழருவதுபோல் சிங்களவர்களிற்கு மூளை கீழ்நோக்கித்தான வழர்கிறது. சர்வதேசமும் போர்முடிந்த இந்த இரண்டுவரிடத்தில் தமிழரிற்கு உருப்படியாக ஒரு தீர்வைகொண்டுவர விரும்பபில்லை. மாறாக புலிகளை யார் அழித்தது நீயா நானா என்று பெருமையடிக்கிறார்களே தவிர தமிழன் உரிமையிழந்ததை பற்றி யாரும் பேசவில்லை.

 எமது காயத்தை நாம்தான் தாங்கிக்கொள்ளவேண்டும். எமது வலிகளை நாம்தான் தாங்கிக்கொள்ளவேண்டும். அதேபோல் எமக்கான வழியையும் நாம்தான் தீர்மானிக்கவேண்டும். எனவே இந்த காலத்தை வீணடிக்காது எமது பலத்திற்கு எது இப்போது சாத்தியப்படுமோ அதைச்சொய்வதுதான் புத்திசாலித்தனமானது. முதலில் எமக்கான ஓர் புலனாய்வுத்துறையை உருவாக்க தன்னலமில்லாது அனைத்து இளஞ்ஞர்களும் முன்வாருங்கள்.

 மரணித்தவர்கள் எமக்கான ஒரு பாதையை திறந்துவிட்டே சென்றுள்ளார்கள் ஆனால் நாமோ இன்னும் குருட்டு நம்பிக்கையுடன் இருட்டறையில் வாழ்கின்றோம். முதலில் கண்களை திறவுங்கள்... கனவுகளை கலையுங்கள்... மெதுவாக நிமிருங்கள்... இப்போதும் கதவுகள் திறந்தே உள்ளது... வெளியேவாருங்கள்... வானத்தை அண்ணாந்து பாருங்கள்... இன்னும் அதே சூரியன் கிழக்குவானில் பிரகாசமாக தெரிகிறது... நம்பிக்கையுடன் நடவுங்கள் வெற்றி உங்களுக்குத்தான்.

இளம் புரட்சியாளர்களிற்காக.
த.நம்பி
t.nampi@gmail.com

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை