வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Friday, October 28, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-32

மன்னாரை முழுமையாக ஆக்கிரமிப்பதை இலக்காக கொண்டிருந்த சிறிலங்கா படையினரின் முயற்ச்சியை தடுத்து நிறுத்தும் வகையில் விடுதலைப்புலிகள் மன்னாரில் பல வீரம் செறிந்த தாக்குதலை இராணுவத்தினர் மீது நடத்தி தக்க பதிலடி கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்,இதில் படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டு இருந்தன ,குறிப்பாக மன்னார் பாலமோட்டையில் படைடினர் முன்னேறுவதற்கு தொடர்ச்சியாக எடுத்த பல நடவடிக்கைகள் போராளிகளால் பலத்த இழப்புக்கள் ஏற்படுத்த பட்டு முறியடிக்க பட்டன ,இதன்போது பல வெற்றிகரமாக தாக்குதல்கள் விடுதலைபுலிகளால் நடத்த பட்டன ,இதனால் ,கடும் இழப்புக்களை சிறிலங்கா படையினர் இக்களமுனையில் சந்தித்து கொண்டிருந்தனர்,எனினும் இழப்புக்களையும் பொருட்படுத்தாது அவர்கள் மேலதிக படையினரை குவித்து அங்குலம் அங்குலமாகத்தான் நகர்ந்து நிலா ஆக்கிரமிப்பை செய்துகொண்டு இருந்தார்கள் ,அடம்பன் பகுதியை தனது நேரடி கட்டுபாட்டின் கீழ் கேணல் பானு
வழிநத்திய போதும்,மன்னார் மாவட்ட கட்டளை தளபதியாகவும் அவரே இருந்தார் ,அத்துடன் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படைப்பிரிவு ஒன்றும் தளபதி கோபித் தலைமையில் தாக்குதலில் ஈடுபாடிருந்தது ,அனைத்து களமுனைகளிலும் படையினர் இழப்புக்களை அதிகமாக சந்தித்தனர் ,கொல்லப்படும் படையினரை மறைப்பதற்காக படையினரின் உடலங்களை சண்டைநடக்கும் பகுதிகளிலையே படைத்தலைமை இரகசியமாக புதைப்பதாகவும் அப்போது செய்திகள் வெளியாகி இருந்தன,படைத்தரப்பில் இழப்புக்கள் அதிகரித்து சென்றதால் திட்டங்களை மாற்றியமைத்து மன்னார் மாவட்டத்தில் எல்லா பகுதிகளிலும் இருந்து படையினர் முன்நகர்வினை மேற்கொண்டு விடுதலை புலிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முனைந்தார்கள் ,

ஆள்வலுவில் பல்கிப் பெருகி பெரும் பூதமகியிருந்த சிறிலங்கா அரசுடன் ..ஆள்வலுவில் குறைந்த விடுதலைப்புலிகள் மோதுவது என்பது ,மலையும் மாடுவும் மோதுவதற்கு சமமானது,ஆனாலும் இலட்சியத்தில் உறுதியாக இருந்த போராளிகள் வந்த பெரும் மழையோடும் மோதினார்கள் ,மடு பிரதேச கட்டளை தளபதியாக கேணல் ஜெயம் இருந்தார் ,மதுவை கைப்பற்றி சர்வதேச ரீதியில் பிரச்சாரங்களை முன்னெடுக்க திட்டமிட்டு இருந்தது சிறிலங்கா அரசு .,இந்த நிலையில் மடுப்பகுதியை விட்டுவிட கூடாது என்பதுக்காக விடுதலைபுலிகளால் பல உயிர்கள் விலையாக கொடுக்க பட்டன ,இதனால் மடுப்பகுதியை வல்வளைக்க நீண்ட காலம் தேவைப்பட்டது,காரணம் விடுதலை புலிகளின் எதிர் தாக்குதலாலும் ,பொறிவெடிகள் மிதிவெடிகளால் ஏற்பட்ட இழப்புக்களாலும் ,படையினர் அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கு முடியாத நிலையை ஏற்படுத்தியது ,எனினும் இழப்புக்களை சற்றும் பொருட்படுத்தாது நகர்ந்த படையினர் ,மடுப்பகுதியை அண்மித்து விட்டனர்,இந்த நிலையில் மடு மாத செருபத்துடன் ( 15 ) வரையான மதகுருமார்கள் கோவிலில் இறுதிவரை இருப்பதற்கு முடிவு செய்து அங்கிருந்தார்கள் ,அனால் மடு மாத கோவில் மீது சிறிலங்கா படையினர் எறிகணை தாக்குதலை அகோரமாக நடத்தினார்கள் ,நிலைமை மோசம் அடைந்த போது,மடு மாத கோவிலில் இருந்த குருமார்கள் மடு மாதாவின் செருபத்துடன் விடுதலை புலிகளின் கட்டுபாட்டு பகுதியை நோக்கி வெளியேறினார்கள்,

இதன் பின்னன் மடு பகுதியை கைப்பற்றிய படையினர் மடு மாத செருபம் இல்லாமையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் ,மதுவை கைப்பற்றி படையினர் ,அங்கிருந்து பெரியமடு நோக்கி பாரிய வழிந்த தாக்குதல்களை மேற்கொள்ளுகிறார்கள்,பெரியமடு பகுதியில் ,தளபதி பல்லவன் ,தளபதி லெப் கேணல் வாணன் தலைமைகளில் சாள்ஸ் அன்ரனி படையணியும் ,லெப் கேணல் செந்தமிழ் தலைமையில் மாலதி படையணியும் ஏற்கனவே களத்தடுப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள் ,தாக்குதல் தொடுத்து முன்நகர வெளிக்கிடும்போது காவலரணில் இருந்து எதிரியின் தாக்குதிறன் அதிகரிக்கும் ,எறிகணைகளை மலையாக பொழிவான்,இவை முன்னைய காலங்களில் நடைபெற்ற சண்டைகளை போல் அல்லாமல் மிக மோசமாக இருக்கும் ,உதாரணமாக முன்னால் ( 20 ) எறிகணைகளை பாவித்த இடத்திற்கு படையினர் தற்போது நுறு எறிகணைகளை பாவிக்கும் அளவிற்கு பெருந்தொகையான ஆயுதங்களை எதிரி வாங்கி குவித்து வைத்திருந்தான் ,இதனால் எதிரியின் சரமாரியான சுட்டு வலுக்குள் ஈடுகொடுத்து முன்நகர முடியாத அளவில் போராளிகள் காயப்பட்டால் அல்லது வீராச்சாவு அடைந்தால் உடனடியாக பின்வாங்குவார்கள்,கரணம் எதிர்க்ள்ள முடியாத அளவிற்கு எதிரியின் சூட்டுவலு இருந்தது ,


இவ்வாறுதான் கவலரங்கள் ஒவ்வொன்றாக விடுபட்டு பின்பு ஒரு பகுதியாக விடுபடுகின்ற போது இறுதியில் ஒரு பிரதேசம் இழக்கப்படும் நிலைமை காணப்பட்டது,( 15-03-2008 ) அன்று விடுதலை புலிகளின் மன்னார் பகுதி மீது படையினர் கடுமையான விமான தாக்குதல்களை நடத்தினார்கள் ,விடுதலை புலிகளின் கட்டளை தளபதிகளின் இருப்பிடங்கள் மீதே இந்த தாக்குதல் நடத்த பட்டதாகவும் மானார் தளபதிகள் இருப்பிடங்கள் தாக்கி அளிக்கபட்டு விட்டதென்றும் சிறிலங்கா அரசு உடகங்களில் பின்னர் இதுகுறித்து செய்திகள் வெளியிட பட்டிருந்தன,இதே வேலை மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரை,பாலைக்குழி ,இத்திதுண்டல் ,பகுதிகளில் முன்நகர்வினை மேற்கொண்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலை புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்துகிறார்கள் ,இதற்கிடையே தளபதி பானு தலைமைப்பீடத்தை சந்திக்க சென்றிருந்த நிலையில் அந்த இடத்திற்கு பொறுப்பாக தளபதி சொர்ணம் வந்திருந்தார்,அவர் மன்னார் பகுதிக்குள் நிற்பதை அறிந்திருந்த எதிரி அவர் நின்ற காலபகுதிகள் ஒவ்வொரு நாளும் வழிந்த தாக்குதல்களை மேற்கொண்டு இருந்தான் ,முன்னேறும் படையினருக்கு அழிவை ஏற்படுத் தளபதி சொர்ணம் ,சண்டியன் எனப்படும் விடுதலை புலிகளின் எறிகனையை எதிரி மீது சரமாரியாக ஏவி பெரும் இழப்புக்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தினார்,பாலக்குழி ,இத்திக்கண்டல் ,பகுதிகள் அன்று மாலதி படையணிக்கு வழங்கபட்டு இருந்தது ,இதற்காக தளபதி விதுச அடம்பன் பகுதியில் தனது இருப்பிடத்தை அமைத்து களமுனை போராளிகளுக்கு கட்டளையை வழங்கிக்கொண்டு இருந்தார்

மறுபக்கத்தில் திருக்கேதீஸ்வரம் பகுதி தளபதி மங்களேஸ் மற்றும் தளபதி காதர் ஆகியோர் கட்டளையின் கீழ் கடற்புலிகளின் அணி தாக்குதலில் ஈடுபடுகிறது ,கட்டுக்கரை ,பாலைக்குழி வரையான பகுதி புநகரி கட்டளை பணியாக போராளிகள் தாக்குதல் நடத்துகின்றார்கள்,இவர்களுக்கு தளபதி கீதன் தளபதி லஷ்மன் ஆகியோர் கட்டளை தளபதியாக செயற்படுகிறார்கள்.இதற்கிடையில் மன்னார் தாக்குதல்களில் சிறிலங்கா படையின் விமானங்களும் தாக்குதல் நடத்தும்,இதற்க்கு எதிராக போராளிகளால் சாரை என்றளைக்கபடும் ( 120 ) மி,மீ ,கடல்தக்குதளுக்கு பயன்படுத்தப்படும் தொலைதுர கனரக ஆயுதத்துடன் ராத வான் எதிர்ப்பு படையணி தாக்குதல் நடத்தும் ,இந்த ஆயுதத்தால் விமானத்தையும் தாக்குவார்கள் அதே வேளை தரை வழியாக முன்னேறும் எதிரி மீதும் தாக்குதல் நடத்துவார்கள்,இவ்வாறுதான் அன்று எதிரி பாதிய எறிகணை தாக்குதல்களுடன் பாலைக்குழி இத்திக்கண்டல் பகுதிகள் உடாக முன்நகர்வினை மேற்கொள்ளுகிறான்,அன்று களமுனை போராளிகளின் அனைத்து தொலைத்தொடர்பு கருவிகளும் ஐந்து ஐந்து தளபதி சொர்ணம் கட்டை ஓங்கி ஒளித்துக்கொண்டு இருந்தது ,மாலதி படையணி நிற்கும் பகுதி உடாகத்தான் எதிரி முன்நகர்வினை மேற்கொள்ளுகிறான்,பெண் போராளிகளுக்கான கட்டளையை தளபதி சொர்ணம் அவர்களின் கட்டளையின் கீழ் தளபதி விதுச கட்டளை பிறப்பித்துகொண்டு இருக்கையில் இவர்களது கட்டளைகள் அனைத்து தொலைத்தொடர்பு கருவிகளிலும் இடைவிடாது ஒலித்துக்கொண்டு இருக்கும் ,

சிறிலங்கா படையினரோ சரி விடுதலை புலிகளோ சரி சண்டையிடும் பகுதிகளில் உள்ள இரு படைகளும் தமது எதிரி படைகளின் தொலைத்தொடர்பு உரையாடல்களை தொழில்நுட்ப சாதனங்கள் கொண்டு ஒட்டு கேட்பது வழமை ,அந்த வகையில் தான் சிறிலங்கா படையினர் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு கருவிகளின் அலைவரிசைகளை விடுதலைப்புலிகள் இலகுவாக ஒட்டு கேட்டுவிடுவார்கள்,இது விடுதலை புலிகளிடம் தொடக்க காலம் தொட்டு இருந்து வந்ததுண்டு ,இதன் அடிப்படையில் மொநிர்றரின் பகுதி என்று ஒரு பெரும் பிரிவே விடுதலை புலிகளால் உருவாக்கபட்டு திறம்பட செயற்பட்டு கொண்டிருந்தது,இவர்களின் தொழில்நுட்பத்தில் சிறிலங்கா படையினரால் பயன்படுத்தப்படும் தொலைபேசிகளை கூட ஓட்டுகேட்டு தகவல் அறிந்துவிடுவார்கள் ,இது களமுனைகளில் விடுதலை புலிகளின் வெற்றிக்கு பல தடவைகள் பக்க துணையாக இருந்துள்ளது( தொடரும் )


**********************************************************************************
உங்கள் கருத்துக்களையும் உங்கள் விமர்சனங்களையும் தவறாமல் பதியுங்கள் உறவுகளே ..அத்தோடு இங்கு உள்ள >>>(((( இதை பின் தொடர்ந்து நீங்களும் எம்மோடு சங்கமித்து கொள்ளுங்கள் உறவுகளே . (Followers ))))<<< இதை தொடர்ந்து எண்கள் குழுமத்துடன் சங்கமித்து கொள்ளுங்கள் உறவுகளே

**********************************************************************************

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை