பிரபாகரன் கொல்லபட்டதாக தொடர்ந்து செய்தி பரப்பும் உடகங்கள் .எட்டாம் நாள் பால் உறவும் தயாராகி விட்டன .அனால் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுவதும் விரிவாயிருக்கும் முக்கியஸ்தர்கள் ."அண்ணன் மிகவும் பத்திரமாக இருக்கார் "அவருக்கு பாதுகாப்பாக முக்கிய தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள்.விரைவிலையே அண்ணனும் வீர உரையை உலகம் கேட்க்கும்.என உறுதியாக சொல்லுகிறார்கள்.மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் இருபதாயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் பிரபாகரனின் சமகால தளபதிகள் என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புக்களையும் ,ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு எம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள் அந்த பிரதிநிதிகள்.
"அடுத்து என்ன நடக்கும் என்று அவருக்கு தெரியும்"
முப்பது வருட போராட்ட காலத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிப்பதில் தலைவர் ரெம்பவே கெட்டிக்காரர்.கடைசி கட்ட நெருக்கடிகள் குறித்து .அவருக்கு பலமாதங்களுக்கு முன்பே தெரியும் .அதனால்தான் கடைசிவரை பதிலடி தாக்குதல்கள் நடத்தாமல் ஆயுதங்களை பதுக்குவதிலையே குறியாக இருந்தார்.இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கி படைகள் அதன் பின்பு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது!.அதேபோல் புலிகளின் விமான பாகங்களும் மிக பத்திரமான இடத்தில் பதுக்கி வைக்கபட்டு உள்ளன .கிளிநொச்சி பிடிபட்ட பொழுதே"புலிகளின் அனைத்து துறை தளபதிகளையும் கலந்து ஆலோசித்த தலைவர்."நம்முடைய பின்னடைவு உறுதியாகிவிட்டது .உலக நாடுகளின் பெரிய ஆயுத உதவிகளை நாம் சமாளிப்பது கடினம் .ஆனாலும் தர்க்கப்பு தாக்குதல்கள் முலமே மக்களை காப்போம்.அதற்கிடையில் எமது படைப்பிரிவுகள் முக்கிய ஆயுதங்களை பதுக்கவும்.காடுகளுக்குள் உடுருவ தயாராக வேண்டும்.கட்டளைக்காக காத்திருக்காமல் ஒவ்வொரு தளபதியும் தாக்குதல் திட்டங்களை தயாரிக்க வேண்டும்!என்று சொல்லியிருக்கிறார்.அதன்படி கிளிநொச்சி,மாத்தளன்,அம்பாறை, முல்லைத்தீவு, கஞ்சிகுடிச்சாறு உள்ளிட்ட பல பகுதிகளில் படைப்பிரிவுகள் உடுருவி இருக்கின்றன,இன்றைக்கு எப்போதும் இல்லாத பெரும் இழப்பை தலைவர் சந்தித்திருந்தாலும் .மீட்சிக்கான பல திட்டங்களை அவர் ஏற்கனவே செயல்படுத்தி வைத்திருக்கிறார்.
"கடைசிவரை களத்தில் நின்ற கரிகாலன்"
மக்களுக்கும் போராளிகளுக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாகக் கடைசிவரை களத்தில் நின்று போர் வியூகங்களை வகுத்து கொடுத்தார் தலைவர்.இந்திய உளவுத் தகவலை வைத்து,தலைவர் களத்தில் நிற்கும் விடயத்தை அறிந்து கொண்ட சிங்கள இராணுவம்.தலைவர் நின்ற ஏரியாவில் நச்சுக் குண்டு வீசியது,கடாபி ,தீபன்,விதுச,துறக்க உள்ளிட்ட முக்கியமான போராளிகள் பலர் அதில் கருகி போனார்கள்,அனால் முன்னுறு பேர்கொண்ட போராளிக்குழு, தலைவரை பத்திரமாக மீட்டெடுத்தது அதன்பின்னரும் தலைவர் களத்தில் இருந்து வெளியேற விரும்பவில்லை .பொட்டு அம்மான் ,சூசை ,ஆகிய தளபதிகளின் வற்புறுத்தலுக்கு பிறகு,அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசனிடம் பலவிதமான ஆலோசனைகளையும் வழங்கிவிட்டு,தலைவர் முல்லிவாய்களை விட்டு வெளியேறினார்,"களத்தில் சாள்ஸ்"
தனக்கு மாறாக மகன் சாள்ஸ் அன்ரனியை போராளிகளுடன் முல்லிவாய்களில் தங்கியிருக்க வைத்தார் .முல்லிவாய்களில் தங்கியிருந்த மக்கள் ,அப்போதுதான் முதன் முறையாக சாள்சை பார்த்திருக்கிறார்கள்.கடைசிநேர நெருக்கடிகள் மிகுதியனபோது,தளபதிகள் மக்களிடம்"நீங்கள் இராணுவ பகுதிக்குள் போய்விடுங்கள் ,இரசாயன குண்டு வீசி மொத்தமாக அழிக்க போகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.,"அனால் மண்ணோடு மண்ணாலும் நாங்கள் இராணுவ கட்டுபாட்டுக்குள் போகமாட்டோம் என்று உறுதியாக சொல்லியிருக்கிறார்கள்,புலிகளிடம் சயினேட் குப்பிகளை கேட்டு வற்ப்புறுத்தி இருக்கிறார்கள்,அந்த நீரத்தில் இராணுவத்தின் தாக்குதல் தீவிரமாக,அதனை எதிர்த்து நின்ற மூவாயிரத்துக்கும் அதிகாமான போராளிகள் பெரிய அளவில் காயபட்டார்கள்,இருனுறுக்கும் மேற்பட்ட போராளிகள் இறந்தும் போனார்கள்,"கடைசி நாளில்"
அடுத்தபடியாக மக்கள் மீது இராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.அதை தடுக்க முடியாமல் நடேசன் உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள் திண்டாடியிருக்கிரார்கள்.அதன் பிறகு சிங்கள அரசு நடத்திய துரோக நாடகம்தான் புலிகளின் தளகர்த்தர்களை வீழ்த்திவிட்டது.என்று நிறுத்தியவர்கள்,கனத்த இதயத்தோடு அந்த கடைசி நிமிடங்களை சொல்ல தொடங்கினார்கள் ,மக்களையும் காயம் பட்ட போராளிகளையும் காப்பற்ற சமாதானத்தை தவிர வேறு வழி இல்லாத நிலையில்,தமிழகத்தில் இருக்கும் முக்கியஸ்தர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் நடேசன் ,அவர்கள் மத்திய அமைச்சர் ஒருவர் முலமாக நடேசன் உள்ளிட்டோர் சரணடைய தயாராக இருக்கும் தகவலை "ஒன்றை வருடங்களுக்கு மேலாக புலிகள் பிடித்து வைத்திருக்கும் இராணுவ வீரர்களை முதலில் அனுப்ப சொல்லுங்கள் அதன் பிறகு நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடயட்டும்,"என்று ராஜபக்சே சொல்லியிருக்கிறார்,தங்கள் பிடியிலிருந்த எழு இராணுவத்தினரையும் விடுவித்த நடேசனும் புலித்தேவனும் ஜெனீவாவில் உள்ள செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் சிலரிடம் விடயத்தை சொல்லியிருக்கிறார்கள்,"சித்திரவதைக்கு உள்ளான நடேசன்"
அவர்களும் ராஜபக்சேவிடம் பேசி சரணடைய சம்மதம் வங்கி கொடுத்திருகிறார்,தமிழகத்து தலைவர்களும் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளும் கொடுத்த நம்பிக்கையில்,நடேசன் புலித்தேவன் உள்ளிட்ட (18 ) பேர்கள் சிங்கள இராணுவத்தின் முகாம் நோக்கி வெள்ளைக்கொடி பிடித்தபடி போயிருக்கிறார்கள்,அப்போது நடேசனை மட்டும் சிறைபிடித்த இராணுவத்தினர் மற்ற அனைவரையும் சுட்டுகொன்று விட்டார்கள் ,நடேசனை கடுமையான சித்திரவதை படுத்தி தலைவரின் இருப்பிடம் குறித்து துளைந்து எடுத்திருக்கிறார்கள்,அனால் அவரிடமிருந்து எந்த தகவலையும் பெற முடியவில்லை,அந்த ஆத்திரத்தில் அவரையும் சுட்டு கொன்ற இராணுவத்தனர்,காயம் பட்டுதவித்த மூவாயிரம் போராளிகளை சக மேனிக்கு சுட்டு கொன்றிருக்கிறார்கள்,இருபதினாயிரத்துக்கு அதிகமான மக்கள் மீது இரசாயன குண்டுகளை வீசி,மொத்தமாக பஸ்பமாக்கி இருக்கிறார்கள்,மக்கள் மத்தியில் தங்கியிருந்த சாள்ஸ் அன்ரனியும் அதில் தப்பித்து இருக்க வாய்ப்பில்லை,ஈழத்தையே முழுமையாக அழித்த இராணுவத்தினர் ,உலகத்தமிழர்களின் நம்பிக்கையை தகர்க்கும் விதமாக தலைவரை கொன்றுவிட்டதாக ஜோடிப்பு கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.தலைவரின் உடலை ஒத்த அந்த உடல் சூசைராஜ் என்னும் போராளியுடையது,அவருடைய உடம்பில் மஸ்க் பயன்படுத்தி தலைவரின் உருவத்தை ஜோடித்திருக்கிறது இராணுவம் ,அனால் தலைவர் பயன்படுத்தும் பிஸ்டல் பெல்ட் எப்படிபட்டது என்று அமைப்பிலிருக்கும் அனைவருக்குமே தெரியும்.அனால் சாதாரண ரக துப்பாக்கியை அவர் வைத்திருந்தார் என்று இராணுவம் காட்டுகின்றது .
"மாவீரர் தினத்தில் வருவார்"
இலங்கையின் ஜோடிப்பு நடக்கும் தேர்தலுக்கு வேண்டுமென்றால் சாதகமாக இருக்கும்.அனால் இந்த வருடம் இல்லை இரண்டு வருடங்கள் கழிந்தாலும் .காலம் எமக்கு கதவுகளை திறக்கும் நாள் மாவீரர் தினத்தில் நிச்சயமாக தலைவர் வருவார்.வீர உரையாற்றுவார் காடுகளிலும் மக்களோடு மக்களாகவும் கலந்திருக்கும் போராளிகள் தலைவருக்கு பக்கபலமாக மறுபடியும் படை திரட்டுவார்கள்.என்கிறார்கள் உறுதி குறையாமல்"
(நன்றி தென் செய்தி )
ithan unmai thanmaiyai ungalaal uruthi seiya mudiyuma ...... summa veerappukkaka seithikal veliyiduvathai thavirththu aakka poorvamaana seithikalai pirasuriyungal
ReplyDeleteஒரு நம்பிக்கைதான் சகோதர ....முடிவு என்பது நாங்கள் எடுப்பதல்ல நீங்கள் பின்னோக்கி பார்த்தால் உங்களுக்கே சில உண்மைகளை விளங்கும்
ReplyDelete@eelam dhevadhai idhu unmai ah??.... unmai aaga irundhaal mikka magilchi... unmai ilai endral miga mana varuthathuku aalaaguvom.. Venkat
ReplyDelete