வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Sunday, October 23, 2011

சமாதனம் என்னும் பொய்மானின் பின்னே போனது போதுமட சாமி

நெருப்புச்சுடர்  விளங்கி ஒளிபரவ ..
நிமிர்ந்திருந்த  பரம்பரையொன்று....
இன்று இருட்குகைக்குள் இடியுண்டு போனதா ?...
புலியாய் உறுமிய தலைமுறையொன்று ..
புதைமணலில்  விழுந்து .....
முக்குவரை முடுண்டு ....
முச்சு திணறுகிறதா இப்போது  ?...
ஆலவட்டகாரரின் பின்னே அள்ளுண்டு ..
கவரி வீசும் காற்றில் மெய்மறந்து ..

  அரையில் ஆடை வீழ்வதும் அறியாமல் ...
கரைகிறத அமிலக் குடுவையில்?
பஞ்ச கல்யாணி  ஏறி பறந்தவனே!
என்ச   ஏதுமின்றி ஏனடா  இடியுண்டாய் ?
நேற்றுவரை தொடர்ந்த சுவடுகள் தொலைத்து
எவரெவரோ  காற் தடங்களின்   பின்னே
எங்கு நடக்குறாய் இப்போது ?
பாதிவழி கடந்த பயணத் தெரு மறந்து
மீதிவழி நடக்க தெரியாமல் தடுமாருகிறாயே
என்ன நடந்தது உனக்கு ?
வெளிச்சம் தரும் வீதி துறந்து
இன்று இருளடர்ந்த  தெருவில் அல்லாவா  இருக்கின்றாய்?
காண்டீபம் வளைத்து நீ   நான்னேர்ரிய    ஒலிகேட்டு
அட்டதிக்கும் அதிர்ந்ததல்லவா ஒரு காலம் ..
உன் குதிரையின் குழம்பொலி சத்தத்துக்கே .
பகைவன் குடல் நடுங்கி கிடந்தானே .
நீ கவசம் தரித்த மிடுக்கறிந்தே
கண்டி வீதியேறிய பகைச்சேனை
காடு முழுவதும் திசைமாறி ஓடின .
கொஞ்சம் காலாற  அமைந்ததும்
உன் தோளேறி விளையாடுகின்றன சுண்டெலிகள் ..
கும்புடு பூச்சிகள் கூட வழிமறித்து ,,
உன்னை சுண்ணாம்பு கேட்க்கும் பழி எதற்கு .
போதும் உனக்கிந்த இழிவு
போதும் உன் பொறுமையின் அளவு .
காராம்பசுவில்  பால்கறக்கும் ,
கற்பகத்தெருவில் பூப்பறிக்கும்.
கனவில் கிடந்தது போதும் .
வந்தவனுக்கு எல்லாம் வெத்திலை மடித்து
கொடுத்தால்
இந்த இழிவுதான் எஞ்சும் ..
ஓணான்களுக்கு உயிர் உதற
உன் வலம்புரி சங்கு சிலம்பட்டும்..
கத்திருப்பிற்க்கும் ஒரு எல்லை விதித்து
கூத்தை தொடங்கு ..
தருப்படியபடி சபைக்கு வா
அவர்கள் விளங்கி கொள்ளட்டும் .
பேச்சுவார்த்தை  என்ற சொல்லிற்கு
எங்கள் அகராதியில் ஒன்றாகவும்
சிங்கள அகராதியில்  வேறொன்றாகவும்
அர்த்தம் எழுதியுள்ளது போலும்..
உயிரறுத்தநேர  வலிக்குரலும் ,
ஒழுகிய பச்சைரத்த கசிவும் ,
அவலமுறோடிய  வதையும்
இனியும் வேண்டாமென கூறியதை
அவர்கள் தப்பாக அர்த்தபடுத்தி விட்டனர்
உலக முன்னிலையில்  உட்கார்ந்து
ஒரு தீர்வை எட்டுவோம் என்ற அழைப்பை
கூட பிழையாக கணக்கிட்டனர் போலும் ....
ஒற்றை தெருவின்  ஜொலிப்பிலும்     , 
ஓடிவரும் சொகுசுவாகன சிலிர்ப்பிலும் ,
வெற்றிடம் நிரப்பும் வெறும் காற்றிலும் ,
வெள்ளைகாரனின் கைகுலுக்களிலும் ,
வசமிழப்போமென நம்பினார் போலும் ..
இந்த தவறான  கணக்கிடலால்தான்
உரிமை பற்றி மாடுமல்ல
சலுகை பற்றியும்  பேசமறுக்கின்றனர்..
பொய்மானின் பின்னே போனகதையாகி
மெய்யறிய  நீண்டு வினைகெட்டு போனோம் ...
கடந்த காலத்தை கணக்கிட்டு பார்த்தால்
பழிசுமந்து பெற்ற படிப்பினை தெரியும் .....
உடுப்புக்களை ஒவ்வொன்றாய் இழந்து
இடுப்பில் இருந்ததையும் எடுத்தெறிந்துவிட்டு
அம்மனமானதன்றி  ஆனதென்ன ?
உலகநாடுகளின் உற்பத்தி பொருட்களுக்கு
சந்தையனதன்றி எமக்கு  வந்ததென்ன ?
ஈழததமிழரேனும்  எழுப்பும் தொலைத்து
வாழப்பழகியதன்றி  வரலாறு எழுதலையே ....
 நயினாதீவிர்க்கான  யாத்திரையும்
நாகவிகாரைக்கான  எண்கோண மண்டபமும்,
மண் அகழ்வும்
மரங்கள் அழிப்பும்
ஹீரோகொண்டாவும்
கொமட்வைத்த  கழிப்பறையும் ,
கேளிக்கைக்கான  சின்னதிரைகளும்
மலையாள மாந்தீரியமும் ,
மனையியல் வகுப்புக்களும் ,
சுற்றிவளைத்து  சுறையாடுகின்றனவே  தவிர ,
சுகந்தம் வந்ததா எம் வாசம் ?
இதற்காகவா உயிரை விதைத்தோம் ?
இதற்காகவா இரத்தம் சொரிந்தோம்?
இதற்காகவா அலைவுர்றோம் ?
வெற்று பெட்டியில்  வெள்ளரிக்காய் இருப்பதாய் ,
அவர்கள் விலைபேசுகின்றனர்,..
நாங்கள் மீண்டுமொரு  சுற்று சுற்றி
வாய் நுரைதள்ள ஓடிக்களைத்து
தொடங்கிய இடத்துக்கே திரும்பியுள்ளோம் ..
நேற்று விடுதலைக்கான வேறுவழி தேடி
இழிவுற்றது  இன்றுடன் தொலையட்டும் ...
ஈழத்தமிழரின்  இன்றைய தலைமுறை
வாழ்வு சமைக்குமென்பதே வரலாறு
நாளைய தலைமுறையாவது ஆளட்டும் ...
நாங்கள் மிதிபூண்டல்ல  சுருண்டு போவதற்கு
நாங்கள் தம்பாலப்பூச்சியல்ல நசிந்து போவதற்கு ...
உலகம் நடுநிலைமை நாற்காலியை விட்டு
நீதியின் பக்கம்  நிரைகொள்ளட்டும்
ஒன்றில் எங்கள் பக்கம் வரட்டும்
இல்லையேல் அவர்கள் பக்கம் போகட்டும்.
மனிதவுரிமை  பேசும் எல்லோருமே
செத்தவனுக்கு சுண்ணமிடித்து
கொல்லுபவனுக்கு குடைபிடிப்பவர்கள்தான்.
தின்றவனின் ஏவரையும்
பட்டினிககாரனின்  கொட்டாவியும் ஒன்றல்ல
இரண்டும் வாயால் வருவதேனினும்
வகைமாதிரி வேறுபாடும் ..
அடக்குமுறையளர்களின்  சுடுகலனும்
விடுதலை வீரனின் சுடுகலனும் ஒன்றல்ல ..
இரண்டும் உயிர் கொல்லுமேனினும்
வகைமாதிரி வேறுபாடும் ....
வேலிக்குள்ளே விடுதலையை  நசித்தபடி
வெளியே   ஞாணஸ்தர்களாக  வேசமிடுகின்றவர்
எமக்காக தீர்ப்பை எழுதிவிட முடியாது ...
நாமே போராடுவோம்
'நாமே நாமக்கான தீர்ப்பை எழுதுவோம்
தலைமகன்  நிலைகுலையானெனும்
நம்பிக்கையில்
திசைகள் எமதாக்க புறப்படுவோம்
நடக்க நடக்க பாதை தெளியும்
தெளிய தெளிய திசைகள் வெளிக்கும்

(****வியாசன் ****)


**********************************************************************************
உங்கள் கருத்துக்களையும்  உங்கள் விமர்சனங்களையும்  தவறாமல் பதியுங்கள்  உறவுகளே  ..அத்தோடு  இங்கு  உள்ள >>>((((  இதை பின் தொடர்ந்து நீங்களும் எம்மோடு சங்கமித்து கொள்ளுங்கள் உறவுகளே . (Followers ))))<<< இதை  தொடர்ந்து எண்கள் குழுமத்துடன் சங்கமித்து  கொள்ளுங்கள் உறவுகளே  

**********************************************************************************

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை