ஐக்கிய மலையாக தமிழர்கள் கட்சி ,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி ,உட்பட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றாக இணைந்து ,சுகந்திய ,சுயநிர்ணய ,இறையன்மையுள்ள தனித் தமிழீழத்திற்கு உரிய ஆணையை முழுமையான சுகந்திரமான ஜனநாயக வாக்கெடுப்பின் முலம் (1976 ) அனைத்து தமிழர்களிடமும் இருந்து பெற்றிருந்தனர் ,இது தமிழர் ஆணைகொடுத்த வட்டுகோட்டை தீர்மானமாகும் ,இதுவே வடக்கு கிழக்கு தமிழர்கள் இணைந்து கொடுத்த தீர்மானம் ஆகும்,இது ஒரு ஜனநாயக ஆணையாகும் ,இதுவே அனைத்து தமிழர்களுக்கும் சுகந்திரமாக வாக்களித்த கடைசி தடவையாகும் ,(1985 ) முன் வைக்கபட்ட திம்பு தீர்மானம் வட்டுகோட்டை தீர்மானத்தின் ஒரு இளகிய வடிவம் ,அங்கு சுகந்திரம் இறையாண்மை போன்றவை மறைக்கபட்டு ஒரு தமிழ் தேசியம் ,தாய் நிலம் சுயநிர்ணைய உரிமை என்பதோடு நின்றுவிட்டது ,இந்த திம்பு தீர்மானம் ஆனது அனைத்து விடுதலை அமைப்புக்களாலும் கூட்டாக எடுக்கபட்ட முடிவு ,இங்கு மக்கள் ஆணை வழங்கப்படவில்லை ,ஈழத்தமிழனின் விடுதலையுரிமையை தனித் தமிழீழத்தை மறுத்து வரும் இந்தியாவே இந்த தீர்வு திட்டத்தின் பின்னணியில் இயங்கியது,( 1987 ) ன் இந்திய சிறிலங்கா ஒப்பந்தமானதும் தமிழர் தாய்நிலம் என்றதோடு மட்டுமே நின்றது ,
அதுவும் தற்க்காலிக இணைப்பாகவே கைச்சத்திடபட்டு அண்மையில் கொழும்பினால் கிழித்தெறிய பட்டது ,விடுதலை புலிகளால் புறக்கணிக்க பட்டதும் ,மக்களால் தேர்ந்தேடுக்கபட்டாததுமான ஒரு மாகாண அரசையே இந்திய தன இராணுவ மேலாதிக்கத்தில் நிறுவியது ,அவர்களால் நிறுவபட்ட மாகாண அரசு கூட இறுதியில் ஒரு தனித் தமிழீழ அரசின் தேவையை உணர்ந்தது ,அனால் அது இந்திய இராணுவத்தோடு காணமல் போனது ,( 2002 ) இல் நோர்வையால் நிர்பந்திக்கபட்ட ஒப்பந்தமும் வட்டுகோட்டை தீர்மானமும் ஒரு நலிந்த வடிவமாகும் ,இது வேறு ஒரு விதத்தில் "உள்ளக சுயநிர்ணய உரிமை "என்ற போர்வைக்குள் உள்ளிறங்கியது ,நோர்வேயும் பின்பு இணைத்தலைமை நாடுகளாக அறியபட்ட சக்திகளும் இணைந்து இந்த நலிந்த கோட்பாட்டை ஒரு பரீச்சத்த பேச்சுவார்த்தை வடிவமாக விடுதலை புலிகளை ஏற்றுகொள்ள வைத்தனர்
அதுவும் தற்க்காலிக இணைப்பாகவே கைச்சத்திடபட்டு அண்மையில் கொழும்பினால் கிழித்தெறிய பட்டது ,விடுதலை புலிகளால் புறக்கணிக்க பட்டதும் ,மக்களால் தேர்ந்தேடுக்கபட்டாததுமான ஒரு மாகாண அரசையே இந்திய தன இராணுவ மேலாதிக்கத்தில் நிறுவியது ,அவர்களால் நிறுவபட்ட மாகாண அரசு கூட இறுதியில் ஒரு தனித் தமிழீழ அரசின் தேவையை உணர்ந்தது ,அனால் அது இந்திய இராணுவத்தோடு காணமல் போனது ,( 2002 ) இல் நோர்வையால் நிர்பந்திக்கபட்ட ஒப்பந்தமும் வட்டுகோட்டை தீர்மானமும் ஒரு நலிந்த வடிவமாகும் ,இது வேறு ஒரு விதத்தில் "உள்ளக சுயநிர்ணய உரிமை "என்ற போர்வைக்குள் உள்ளிறங்கியது ,நோர்வேயும் பின்பு இணைத்தலைமை நாடுகளாக அறியபட்ட சக்திகளும் இணைந்து இந்த நலிந்த கோட்பாட்டை ஒரு பரீச்சத்த பேச்சுவார்த்தை வடிவமாக விடுதலை புலிகளை ஏற்றுகொள்ள வைத்தனர்
(2004 ) இல் வடிவமைக்க பட்ட உள்ளக சுயநிர்ணய அதிகாரம் ( isga )என்னும் இணைத்தலைமை நாடுகளின் அமைதிப் பிரசன்னா காலத்தில் மட்டுமே செல்லுபடியாக கூடிய ஒரு தற்க்காலிக திட்டமாகவே இருந்தது ,( 6 ) வது திருத்த சட்டத்தின் முலம் கொடுக்கபட்ட மிகவும் மட்டுபடுத்தபட்ட ஒரு தேர்தலின் முலமே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு தேர்தல் தகுதியை மக்களிடம் இருந்து பெற்று கொண்டது ,மக்கள் அணியால் வழங்கபட்ட வட்டுகோட்டை தீர்மானத்தை நலிவடைய வைத்தது ,ஆக குறைந்த அடிப்படைத் உரிமைகளை கூட தமது பரீச்சாத்த முயற்ச்சியால் இணைத்தலைமை நாடுகளால் சிறிலங்கா அரசாங்கத்தை ஏற்றுகொள்ளவைக்க முடியவில்லை ,இதை ஏற்றுகொள்ள வைத்திருந்தாள் நிகழ்வுகளில் போக்கு வேறுவிதமாக பயணித்து ஒன்றுபட்ட சிறிலங்கவுக்குள் ஒரு தீர்வை எடுக்கும்படி வைத்திருக்க முடியும் ,
அனால் அவர்கள் வேறு பயங்கரமான பாதையை தேர்ந்தெடுத்து சிறிலங்கா அரசின் இராணுவத்தை பலப்படுத்தி தமிழரின் ஆயுத போராட்டத்தைத் தோற்கடித்து முழுத் தமிழ் தேசியத்தையும் முட்கம்பி சிறைக்குள் தள்ளியுள்ளார்கள் ,ஈழத் தமிழர்கள் தம்மை அரசியல் ரீதியாக புதிதாய் உருவெடுக்க நிர்பந்திக்க பட்டுள்ளார்கள் ,இந்த அரசியல் அமைப்பானது தன்னகத்தே ,பெரும் சக்த்திகள் முலம் இராணுவ பலத்தால் தோற்கடிக்க பட்ட திம்புவையோ ஒச்லோவையோ பின்பற்றாது ,மக்கள் ஆணை வழங்கிய சுகந்திர தனித் தமிழீழத் சுகந்திர தேசத்தை கொண்டிருக்க வேண்டும் ,உலகில் ஜனநாயகம் உயிரோடு இருக்குமானால் நாமும் ஜனநாயக பாதைக்கு திரும்புவதை யாரும் தடுக்க முடியாது ,நாம் அனைத்து தமிழ் மக்களின் சுகந்திர தாகமான தமிழீழத்தை மக்கள் ஆணை வழங்கிய ஜனநாயக முறையில் தெருவித்த அந்த தீர்மனத்திளிருந்து அந்த புள்ளியிலிருந்து எமது பணியை தொடர வேண்டும் ,
இராணுவ ரீதியில் எம் போராட்டத்தை நசுக்கிய சக்த்திகள் ,எமது ஜனநாயக அரசியல் போராட்டத்தை நசுக்கவும் அளிக்க முனைப்பு பெற்றுள்ளன,இவை தமிழர்களின் அரசியல் சக்தியை திசை திருப்ப முயல்கின்றன ,இந்தியாவும் மேற்கத்தைய சக்திகளும் இந்த நடவடிக்கையில் முனைப்புடன் செயல்படுகின்றன ,அதற்காக சட்டத்துக்கு புறம்பான கேவலமான காரியங்களை கூட செயல்படுத்த தயங்கவில்லை,தமிழர்களின் இராணுவ பின்னடைவை முன் கூட்டியே தீர்மானித்து இந்த சக்த்திகள் "தங்களது தயார் படுத்தல்கள் "நிறுவன ரீதியான கட்டமைப்புக்கள் "ஆட்சேர்ப்புக்கள் என்பனவற்றை எம்முள்ளேயே செய்துவிட்டன ,தமிழர் அரசியல் சக்திகளுக்குள்ளே ,வேறுபாடுகள், பலவீனங்கள் ,மேற்கத்தைய பிரித்தானிய காலனித்துவம் சார்ந்த ,அல்லது கொழும்பின் நலம் சார்ந்த ,அரசியல் தன்கியிருப்புக்கள் என்பனவற்றை சர்வதேசம் நன்றே பட்டரிந்துள்ளது ,இவற்றில் சிலர் இன்று சீனா ரஷ்சிய சர்ந்திருப்பிலும் ,உள்ளனர் ,எதிலும் மற்றவர்கள் சார்ந்திருக்கும் எம் பலவீனம் இவர்களில் நன்றே விளங்கப் பட்டுள்ளது ,
ஈழ தமிழரின் அரசியல் மிக அரிதாகவே செய்யபட்ட ஒற்றுமையான வட்டுகோட்டை தீர்மானத்தாலும் இளைன்சர்களின் அழுத்தத்தாலும் போராட்டத்தின் முலமே சாத்தியமானது.அன்றும் இதே அரசியல் சக்திகள் வேறு சக்திகளின் நலன் சார்ந்திருந்தது ,அவர்கள் விருப்பு வெறுப்புக்களை அறிவதிலையே காலம் கடத்தினர்,திறமையாக செயற்படும் சிறு சக்த்திகள் கருணா நிதிகள் இன்னும் எம்முள்ளும் உள்ளன ,சில சக்த்திகள் தமிழர் போராட்டம் முடிந்ததாக நம்பவைத்து ,போராட்ட வலுவை முற்றாக சிதைத்து இனி எம்மால் என்ன செய்ய முடியும் என்று ,பரிதப படுவது போல பாசாங்கு காட்டிப் தம்மை பிரபல படுத்ட முயல்கின்றனர்.அனால் தமிழர்கள் சட்டபுர்வமான ஜனநாயக அமைப்புக்களை கட்டியெழுப்பி நமக்கு என்ன வேண்டும் என்பதை உறுதியுடன் கூறி எமது இலக்கை தமிழரின் தழிழீழ தாகத்தை அடைய முடியும்,இதை இந்த சக்த்திகள் பார்க்க மறந்து விட்டன,இதற்க்கு சுகந்திரமாக உறுதியாக எமது அரசியல் தெளிவுகளிலும் ,எமது இறுதி இலக்கையும் எமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டும்,தமிழீழம் என்ற இறுதி இலக்கை எமக்குள்ளே உறுதியாகக வேண்டும்,அதன் பின்னரே அதை வெளியோருக்கு சொல்ல வேண்டும்
,எண்கள் விடுதலையை மற்றவர் கண்கள் உடாக பார்க்கும் வரை நாம் வெற்றியடைய போவதில்லை ,எங்கம மனங்களில் எண்ணங்களில் நாம் உறுதியெடுக்கும் எமது இறுதி இலக்கே உருவாக்க படும் ,அரசியல் அமைப்பிற்கும் பாரிய உறுதுணையாகவும் அடித்தளமாகவும் அமையும் ,முள்ளிவாய்க்கால் உண்மையில் தோல்வியல்ல ,கொழும்பும் அதன் துணை சக்த்திகளும் அதை நன்கே புரிந்துள்ளன,தமிழர்கள் தம் இதயம் சுமந்த விடுதலை கனவை அரசியல் ரீதியாக விட்டுகொடுக்கும் போதே முள்ளிவாய்க்கால் தோல்வியாகிறது,இதன் முலமே கொழும்பு வெற்றியடைய முடியும்,இது அத்தனை இலகுவானதல்ல ,இதனாலேயே இந்த சக்த்திகள் மக்களிடையே பரவி விடுவதற்கான தமது துதுவர்களை நியமிக்கின்றன,
இவர்கள் பிரச்சாரம் முலம் தமிழர்கள் தம் அபிலாசைகளை கைவிடும் படி அறிவுறுத்த படுகின்றனர் ,இதன் முலம் தமிழர்களின் மனோபலத்தை அரசியல் ரீதியிலும் கூட உடைத்தெறிய முயற்ச்சிக்கின்றனர்,அனால் தமிழர்களுக்காக அல்லது தம் சொந்த நலன்களுக்காக இந்த சக்த்திகள் ஒரு தீர்வை சிறிலங்காவில் ஏற்படுத்த முயல்வர் ,வெகு விரைவாக இதை செயல்படுத்துவார்கள்,எமது தெளிந்த அரசியல் கொள்கையோடு தமிழர்களின் அரசியல் பலம் இந்த நிலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் ,சென்ற காலத்தில் தமிழ் அரசியல்வாதிகள் மக்கள் ஆணையை திடமாக பின்பற்றாது அரசியல் சக்த்திகளுக்கு ஈடுகொடுக்க முடியாது ,அவர்கள் நலன்களுக்கு பலியாகி தோல்வியடைந்தமையே ஓர் ஆயுத போராட்டத்திற்கு வழிவகுத்தது ,மேலும் ஒரு ஆயுத ரீதியான போராட்டத்தை தவிர்க்க வேண்டுமாயின் இப்போது உருவாக்கும் தமிழரின் அரசியல் அமைப்பானது உண்மையுள்ள ,தமிழர் விடுதலையில் அசையாத உறுதியுள்ள அற்பணிப்புள்ள பிரதிநிதிகளால் பிரதி நிதித்துவபடுத்துதல் வேண்டும் ,இதில் தமிழர்கள் ஆகிய நாம் வரலாற்று படிப்பினைகளை மனதில் கொண்டு மிக அவதானமாக இந்த அமைப்பை நிறுவுதல் வேண்டும்,
இதே பயம் எம்மை அடக்க நினைக்கும் சக்த்திகளுக்கும் உண்டு ஏனெனில் இன்னுமோர் ஆயுத போராட்டத்தை எதிர்கொள்ளும் தையிரியம் அவர்களிடம் இல்லை ,இது ஈழத்தமிழரின் ஜனநாயக அரசியல் போராட்டத்தை மேற்கொள்ளும் ஒரு அமிலச சோதனை காலமாகும் ,புலம்பெயர் தமிழர்களது செயற்பாடுகள் நாடு கடந்த தமிழீழ அரசியல் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கபட்டு இருக்கும் எம் உறவுகளை விடுவிப்பதோடு நின்றுவிடமால் இது புலம்பெயர் தமிழர்களுக்கான மாற்றீட்டு அரசாங்கம் என்பதையும் மறக்கலாகாது ,இது புலம்பெயர் தமிழருக்கான உலகளாவிய ,ஒற்றுமை ,கலாச்சார அடையாளம் ,அபிவிருத்தி மற்றும் புலம்பெயர் தமிழரின் உலக அந்தஸ்த்து என்பவற்றை நிலைநிறுத்துவதாக அமையவேண்டும் ,
இது புலம்பெயர் தமிழரின் ஆணையை பெற்றுகொண்டு தமிழரின் இறையாண்மையையும் தமிழீழ சுகந்திர அரசையும் உருவாக்குவதற்கு தடைசெய்யும் நிறுவனங்களுடனோ அரசுகளுடனோ திடமாக அரசியல் ரீதியில் மோதுவதற்கு தயங்காது தன்னை தயார்படுத்துதல் வேண்டும் ,எவர் அபிப்பிராயங்களுக்கும் செவிசாய்க்காமல் மக்கள் அணையை செயற்படுத்த வேண்டும் ,சுயநிர்ணய " என்ற சொல் தற்கால உலகில் இனங்களுக்கு இடையே பிரயோகிக்க படும்போது பலவிதமான பாரிய விளக்கத்தை கொண்டுள்ளது ,ஐநா சட்ட அறிக்கையின் படி (1 ) (2 ) சுயநிர்ணய உரிமையானது மாநிலங்களுக்கு இடையிலான உறவுகளை பேண மாத்தரமே பயன்படுகிறது ,சட்டபடி இவை மாநிலங்களையே காத்து நிற்கின்றன."சுயநிர்ணயமானது"சுகந்திரமாய் செல்வதற்க்கே அல்லது செல்ல வாக்களிப்பதர்க்கே அமைவானதல்ல ,( geoffrey robertson penguin 2008 p 165)சுயநிர்ணயம் என்ற பெயரால் பிரிந்து செல்வதற்கு சர்வதேச சட்டங்கள் எந்த உரிமையையும் தரவில்லை ( rosalyn higgins-peopples and minorities in international law 1995-P 33) சுயநிர்ணயமானது மக்கள் அனைவருக்கும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமையை கொடுக்கிறதே தவிர இவை சிறுபான்மையினரை விட பெருன்பன்மையினருக்கு வலு சேர்ப்பதாக உள்ளது ,(robertson,ibid ) வெறும் சுயநிர்ணய உரிமையோடு மட்டும் நிற்கும் எந்த கோட்பாட்டையும் தீர்வுத்திட்டத்தையும் புலம்பெயர் தமிழர்கள் மிக அவதானமாக கவனித்து நிராகரிக்க வேண்டும் ,கொழும்பினதும் ,இந்தியாவினதும் கட்டுப்பாடுகளுக்குள் இயங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூட ஈழத்தமிழரின் சுகந்திரத்தையும் இறையாண்மையையும் எதற்கும் விட்டுகொடுக்கும் உரிமையற்றவர்கள்,எந்த பரிசோதனை தீர்வுகளுக்கும் இவர்கள் உடன்பட கூடாது ,என்பதே புலம்பெயர் தமிழர்களின் திடமான கருத்தாகும்,
உருவாகும் தமிழர் அரசியல் அமைப்புக்கள் தொலைநோக்கு உள்ளவையாக இருத்தல் வேண்டும் ,தற்போதைய புவிசார் அரசியல் இப்படியே இருந்திட போவதில்லை, இன்று தமிழர்களால் நிறுவ கடினமாக உள்ள தமிழீழ தேசிய தகமான சுகந்திரமும் இறையாண்மையும் கூட புவிசார் அரசியல் மாற்றத்தின் போது,சர்வதேச அரசுகளால் மீள் பார்வை செய்யப்படும் ,எதிர்கால உலகளாவிய அல்லது பிராந்திய ரீதியான இறையாண்மை பங்கீடுகள் தமிழர்கள் தமது தாயகத்தை ,தாயக சுகந்திரத்தை இறையாண்மையை மீண்டும் ஒரு பேரழிவுக்கு முகம் கொடுக்காது வென்று விடக்கூடிய சத்தியங்கள் உண்டு ,இன்னும் கவலைக்கிடமாக தமிழர்கள் இடையே சிலர் மாக்கசிய வாதிகளோடு குறிப்பாக முன்னைய பீகின் பிரிவினரோடு கூட்டாகின்றனர் ,இவர்கள் கூட்டு சேரும் பீகின் பிரிவினர் ஈழத் தமிழர்களுக்குரிய பிரிவினையையும் சுகந்திர தேசத்தையும் மறுதலித்தவர்கள் ,இந்தியை மார்க்சிட்டுக்களும் இதே அணியில் கொள்கை உடையவர்கள்,இன அடிப்படையில் தமிழரின் தேசிய விடுதலையும் அரசியல் அலகாக தமிழ் ஈழமும் இவர்களுக்கு இடையுறாக இருக்கும் பட்சத்தில் எப்படி சிறிலங்கா தேசியமும் சிறிலங்கா அரசும் எந்த வகையில் இவர்களுக்கு உவப்பானது தர்க்கரீதியில் பிழையாகவே உள்ளது ,அனால் இதற்க்கு மாறாக சில சிங்கள மாக்சிசவாதிகள் தமிழர் போராட்டத்தின் நியாயங்களை ஏற்ருகொன்டவர்களாக இருக்கின்றனர் ,மார்க்சிட்டுக்கள் ஈழத்தமிழர்களின் முன்னேற்றத்திற்கு கடந்த காலங்களில் பெரும் பங்காற்றி உள்ளனர் ,சமுக சமன்பாடுகளை வளர்த்ததன் முலம் தமது கடமையை ஆற்றியுள்ளனர் ,ஆனாலும் தமிழ் தேசிய விடுதலையை ஒரு தீண்டாத விடையமாக அவர்கள் பார்ப்பது தவறு ,அனால் தமிழ் தேசிய விடுதலையை ஆதரிப்பதன் முலம் அந்தத் தமிழ் தேசியத்தை ஒரு அலகாக கொண்டு தமது புதிய முன்னேற்றம் உள்ள புதிய முயற்ச்சிகளை செயற்படுத்த முடியும் ,இவையனைத்தையும் புலத்திலும் புலம்பெயர் நாடுகடந்த அரசிலும் செயற்படுத்த முடியும் ,,
நன்றி :-சோழ கரிகாலன்
**********************************************************************************
உங்கள் கருத்துக்களையும் உங்கள் விமர்சனங்களையும் தவறாமல் பதியுங்கள் உறவுகளே ..அத்தோடு இங்கு உள்ள >>>(((( இதை பின் தொடர்ந்து நீங்களும் எம்மோடு சங்கமித்து கொள்ளுங்கள் உறவுகளே . (Followers ))))<<< இதை தொடர்ந்து எண்கள் குழுமத்துடன் சங்கமித்து கொள்ளுங்கள் உறவுகளே**********************************************************************************
No comments:
Post a Comment