வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Sunday, November 6, 2011

ஈழம் விடுதலைக்கான இறுதி கணக்கீடுகள்

மனிதர்கள் இதுவரை படைத்துள்ள அகிம்சை தத்துவங்கள்,புரட்சிகர தத்துவங்கள் ,மனிதநேய கோட்பாடுகள் ,உரிமை சாசனங்கள் இவை எவையலுமே இதுவரை ஈழமக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.சிங்களத்தின் முன்னே காந்தியின் அகிம்சை தோற்றுள்ளது.மார்க்கசியத்தின் மக்கள் வன்முறை தோற்றுள்ளது.சர்வதேச நெறிமுறை சட்டங்கள் அமைதியாகி உள்ளன,இந்நிலைமைகள் இதவரை நாம் பின்பற்றிவந்த அனைத்து சமுக கோட்பாடுகளையும் மீள் பரிசீலனை செய்ய கோருகின்றது.அவற்றில் நம் தோல்விக்கு காரணமானவற்றை உடனடியாக கைவிட
வேண்டும்,தேவையான புதிய எதார்த்தமான கோட்ப்பாடுகளை நாம் தயக்கமின்றி ஏற்க வேண்டும்.இவற்றிலிருந்து ஈழவிடுதலை போராட்டத்தின் தீர்வுக்கான அணுகுமுறைகளை நாம் வகுத்தாக வேண்டும்.

~**(ஈழமும் காந்தியமும்)**~
*****************************************
மனித உறவுகளுக்கிடையே பிரச்சனைகளை தீர்த்து கொள்ளுவதற்கு காந்தியம் வைக்கும் வழிமுறை மனமாற்றம் என்பதாகும்,தீங்கு செய்யும் ஒன்றை மனம்திருந்துபடி செய்வதே இந்த மனமாற அணுகுமுறை ஆகும்.காந்தியித்தின் மன மற்ரதுவம் சில எல்லைகள் வரை வெற்றியளிக்கும் தான்.கணவன் மனைவி உறவுகள் ,சகோதர உறவுகள் ,நட்புகள், இதுபோன்ற நெருங்கிய உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒருவொருக்கொருவர் மனம் மாறுதல் முலம் காந்தியம் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.அனால் மனமாற்றத்துக்கு உட்படுத்த முடியாத சாத்தியப்பாடு,தனி நபரிடமோ,சமுக பிரிவிடமோ, உண்டு என்பதை காந்தியம் ஏற்றக வேண்டும்

,அவ்விடங்களில் காந்தியம் பிரச்சனைகளை தீர்க்கும் சக்தியற்றதாக ஆகிவிடுகிறது.
காந்திய கண்ணோட்டத்தின்படி முதல் ( 30 ) ஆண்டுகால ஈழ அரசியல் போராட்டம் ஓர் அகிம்சை போராட்டமே.அதாவது சிங்களர்களின் அடக்கு முறைகளுக்கு திருப்பி தாக்காத அவர்களது மன மாற்றத்தையே எதிர்பார்த்து.பெரிதும் நம்பி நடந்த அகிம்சை போராட்டமே உண்மையிலையே செல்வநாயகம் காந்தியை விடவும் மிதவாதியகவும் இருந்தார் என்றும் சொல்லலாம்.காந்தியாவது விடுதலை கேட்டார்,செல்வநாயகம் நீண்டகாலமாக வெறும் உரிமைகளைத்தான் கேட்டார்,காந்தி சட்டத்தை மீறத்தான் போய்கொண்டிருக்கிறேன் என்று தண்டியத்திரை நடத்தினார்."வெள்ளையனே வெளியேறு என்றார்"செல்வநாயகம் கோரிக்கைகளை ஒப்பந்தங்கள் என்று நடத்தினார்.இவளவு மிதமான அகிம்சை போராட்டங்கள்-ஈழவிடுதலையை அல்ல-உரிமைகளை தரும் மனமாற்றத்தை கூட சிங்களர்களிடம் ஏற்படுத்தவில்லை.இதற்க்கு காந்தியம் என்ன சொல்கிறது?

அதன்பின்பு வந்த ஆயுத போராட்டம் காந்தியத்துக்கு தவறானதாக இருக்கலாம்.இப்போது அங்கு ஆயுதபோராட்டம் இல்லை.ராஜபக்சேயும் சிங்களர்களையும் தம்மால் மணமற்ற முடியும் என்ற நம்பிக்கை கொண்டு காந்தியே அகிம்சைவழியில் சென்று அங்கு போராடினால் அவருக்கு உடல் சித்திரவதையும் மரணமும் உறுதி என்பதே இன்றைய ஈழ நிலை.
காந்திய மனமாற்ற வழிமுறை என்பது -உயர்ந்த நாகரிக -பண்பட்ட -மனிதநேயமிக்க மனித சமுதாயத்திற்கு எடுபட முடியும்-சிங்கள இனம் அத்தகைய ஒரு இனமல்ல .எனவே சிங்களத்தின் முன் காந்தியம் முழுமையாக தோல்வியுற்று

***(ஈழமும் மர்க்கசியமும்)***

தேசிய இனங்களுக்கான சுயநிர்ணைய உரிமை என்ற மார்கசிய கோட்பாடு-அவசியமற்ற பிரிவினைகளை தவிர்க்கவும் .அவசியமான பிரிவினைகளை ஏற்க்கவும் உள்ளடக்கிய கோட்ப்பாடு .இலங்கையில் சிங்கள மக்கள் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் நம்பிக்கை வைத்து (30 ) ஆண்டு காலம் பிரிவினை கோரிக்கை எழுதப்படவில்லை.இது அவசியமற்ற பிரிவினைகளை தவிர்க்க சொல்லும் மார்க்கசிய இயங்கியலுக்கு ஏற்பானதே .இதற்க்கு மேலும் சிங்கள -தமிழ் மக்களின் இணைப்பு சாத்தியமில்லை என்ற நிலையில் (1977 ) ல் தமிழ் மக்கள் பிரிவினைக்கு ஆதரவளித்தனர் .இது அவசியமான பிரிவினையை ஏற்கும் மார்க்கசிய இயங்கியலுக்கு ஏற்புடையது .ஈழ விடுதலைக்கான பெரும் அறவழி மக்கள் போராட்டங்கள் நடந்தன.

மக்கள் போராட்டங்கள் மீது நம்பிக்கை வைக்கும் தத்துவமான மர்க்கசியத்துக்கு இது ஏற்ப்பானதே .அரசியல் போராட்டங்கள் அதன் உச்ச கட்டத்தில் ஆயுத போராட்டமாவதை மார்க்சியம் ஏற்கிறது,அதுவும் ஈழத்தில் நடந்தேறி விட்டது.மர்க்கசியத்தின் தேசிய இனச்சிக்கல் குறித்து முழு இயங்கியல் அணுகுமுறையும் ஈழத்தில் படிப்படியாக நடைமுறைபடுத்த பட்டு முடிக்கபட்டு இறுதியில் சிங்கள இனத்தால் தோற்கடிக்கபட்டு நிற்கிறது .இதற்க்கு மேலும் ஈழத்தில் என்ன செய்ய வேண்டும் என்று மார்க்கசியம் சொல்கிறது .மார்கசியத்தின் சுயநிர்ணைய உரிமை குறித்து முக்கிய அணுகுமுறை ஒன்று ஈழத்திற்கு பொருத்தி பார்க்கப்படவேண்டி உள்ளது .அது ஈழமும் தேசிய சுயநிர்ணைய உரிமையும் என்ற தலைப்பில் இக்கட்டுரையின் பின்னர் வருகின்றது..

***(ஈழமும் முதலாளித்துவமும்)***

சுயநலமே மனிதனின் இயக்குவிசை என்கிறது முதலாளித்துவம்.இந்த சுயநலம் என்பது தனிமனித அளவினதாக இருக்கலாம்.ஒரு நாட்டின் ஆட்சியாளர்கள் அளவினதாக இருக்கலாம்.உலக மேலாதிக்க அளவினதாக இருக்கலாம்.இப்படித்தான் சுயநலமாய் மனிதர்கள் இயங்குகிறார்கள் என்று சொன்னால் அதை ஏற்கலாம்.அனால் இப்படித்தான் இருக்க முடியும் ,இருக்க வேண்டும் என்று சொன்னால் விலங்கின நிலைக்கும் மனித நிலைக்கும் வேறுபாடு அற்றதாகும் .இயக்குவிசை ( சுயநலம் ) என்ற எலும்புத்துண்டு இல்லாமல் தனிமனிதன் முதல் ஐ .நாவரை முதலாளித்துவத்தின் எந்த அரசியல் பொருளாதார அரங்கும் இயங்காது.

இவ்வாறு இல்லாமல் ,நீதி ,நேர்மை ,மனிதாபிமானம், என்பதெல்லாம் தனி மனித மனம் சார்ந்தவை.மனித தன்மைக்கு அப்பாற்பட்டு தெய்வீகதன்மையானவை.போர்ருதளுக்கு மட்டுமே உரியவை இத்தகையவர்கள் ஆட்சியாளர்களாக இருப்பது அரிதிலும் அரிது .ஏனெனில் இவர்கள் அனைவரும் இயக்குவிசை கோட்ப்பாட்டை கொண்டிருப்பவர்களே,இலங்கை என்ற சின்ன எலும்புத்துன்டிர்க்காக .இந்திய ,சீன ,மற்றும் பல நாடுகள் போட்டியிடுகின்றன.இந்திய சந்தை என்ற எலும்ப்புத்துண்டை மனதில் கொண்டு உலக நாடுகள் இலங்கையை செல்லமாக வைத்து கொள்கின்றன.சிங்களரை பாருங்கள் இலங்கை என்னும் எலும்புத்துண்டை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் மற்றி மற்றி காட்டி பதிலுக்கு அனைத்து சர்வதேச சட்ட நெறிகளையும் மீறி இன அழிப்பை பல வடிவங்களில் தொடர்ந்து பயமில்லாமல் தொடர்கிறார்கள்.எனவே முதலாளித்துவ உலக அமைப்பில் குறிப்பாக அதன் ஆட்ச்சி அரங்குகளில் இருந்து நீங்கள் எதையாவது பெற முடிந்தால் .இயக்குவிசை கோட்பாட்டின் படியே பெற முடியும்,

ஈழ போராட்டம் இயக்குவிசை கோட்பாட்டிற்கு மாறாக உலக ஆட்சி அரங்குகளில் நீதி ,தயவு ,நீர்மை ,நெறிமுறை ,இவற்றை எதிர்பார்த்து வருகிறது .பல்லாயிரம் மக்கள் கொல்லபட்ட அபாய நிமிடங்களில் கூட தங்களது இயக்குவிசை கோட்பாட்டை விட்டு இறங்கி வரவில்லை உலக நாடுகள் .எதோ ஒன்றை பெறுவது மட்டும் அல்ல இருப்பில் உள்ள எதையும் இழந்துவிட கூடாது என்பது இயக்குவிசை கோட்ப்பாடுதான்,உலக ஆட்சி அரங்குகளை இந்த இயக்குவிசை கோட்பாட்டின் அடிப்படையில் அணுகி ஈழவிடுதலையின் சாத்தியப்பாட்டை நாம் பார்க்க வேண்டும் ,மாறாக இந்திய நாட்டின் ஆதரவை நம்பி ,அமெரிக்க மேற்குலக ஆதரவை நம்பி ,ஈழ விடுதலை என்ற சிந்தனைக்கு நாம் முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.

**(ஈழமும் சிங்களமியமும்)**

இதுவரை நாம் பார்த்த காந்தியமும் , மர்கசியமும் ,முதலாளித்துவ நெறிமுறைகளும் தோற்று போனது இந்த சிங்களமியத்திடம்தான்,ஏனெனில் மேற்சொன்ன தத்துவங்கள் ,கோட்பாடுகள் அனைத்தும் நவீன சமுதாயத்திற்க்காக வகுக்கபட்டவை ,அனால் சிங்களமியம் நவீன சமுக கோட்பாடுகளை கொண்டதல்ல அது ,கி மு (10,000-20,000 )ஆண்டுகளுக்கு முந்தையது.ஓர் இனக்குழு பிறிதொரு இனக்குழுவை தாக்கி உயிர்களை அழித்து அல்லது அங்கிருந்து விரட்டி அதன் நலன்களை தாமே அனுபவித்துகொள்ளும் ஆதிகால இனக்குழு கோட்பாடே சிங்களமியம் ஆகும்.எனவே இதனை நவீன சமுக தத்துவங்களும் அவர்கள் ஏற்றுகொண்ட பொவுத்தமும் கூட சிங்களமியத்திடம் தொர்ருபோனத்தில் ஆச்சரியத்திற்கு ஒன்றுமில்லை.

 **(ஈழமும் ஆயுத போராட்டமும்)**

ஈழ விடுதலைக்கு ஆயுத போராட்டம் தொடர்ந்து அவசியமா?சாத்தியமா ?இல்லையா ?என்பது இன்றைய முக்கிய கேள்வி ,அவசியமா -இல்லையா என்ற கேள்வியை பொறுத்த வரை ஈழ விடுதலை போராட்டத்திற்கான பங்களிப்பில் இதுவரை அரசியல் போராட்டத்தின் பங்கை விட ஆயுத போராட்டத்தின் பங்கே அதிகமாக இருந்து வந்துள்ளது.இன்றைய நிலை ஆயுத போராட்டத்தின் பங்கை விட அரசியல் போராட்டத்தின் பங்கை கூடுதலாக்கி இருக்கிறது.ஏனெனில் ( 80 )லில் ஈழப்போர் தொடங்கிய போது உலகம் அதை எதிர்க்கவில்லை .இந்திய உள்நோக்கத்துடன்தான் என்றாலும் ஆதரித்தது .இப்போர் முடிவிற்கு வந்தபோது முழு உலகமும் அந்த ஆயுத போராட்டத்தை எதிர்த்து நின்றது .இந்திய மறைமுகமாக தலமையளித்தது.

சர்வதேச அரசியல் போராட்டங்களில் தேவை மிகுந்ததும்,ஆயுத போராட்டத்தின் தேவை குறைந்தும் வருவதான நிலையை,ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதலாமா என்றால் கருத முடியாதுதான்,ஏனெனில் சிங்கள அரசுக்கு அரசியல் போராட்டமெல்லாம் எருமை மாட்டில் மழை பெய்தமாதிரி,ஆயுத போராட்டம் ஒன்று நடந்தால்தான் இலேசாக என்றாலும் அசைந்து கொடுக்கும்,இல்லையென்றால் எல்லாம் முடிந்துவிட்டது என்று உலகையே நம்பவைத்து விடும்.மேலும் ஆயுத போராட்டம் இல்லாத நிலையில் ஈழ போராட்டம் உயிர்ப்பான சர்வதேச பிரச்சனைகளில் இருந்து நீங்கிவிடும் வாய்ப்பு உண்டு.எனவே இத்தகைய அவசியங்களுக்கான ஆயுதபோரட்டங்களுக்கு கடந்த காலங்களை போல் தமிழ் பகுதியை கைப்பற்ற வேண்டும் என்பதில்லை ,மாறாக சர்வதேச பிரச்சாரமே நோக்கமானது.
அடுத்ததாக ஆயுத போராட்டம் சத்தியமா??இல்லையா ? என்பதை பொறுத்தவரை தமிழீழ மக்களின் உணர்வுநிலை குறித்து எதார்த்த மதிப்பேடு இதற்க்கு முக்கியமானதாகும்.தளங்களை கைப்பற்றுவது அவசியமில்லை என்பதால் அதற்க்கு தேவையான பெரும்படையை கட்டுவதற்கான மக்களின் தயார் நிலை குறித்து கவலைப்பட தேவையில்லை.

சிறு ஆயுத குழுக்களை கட்டுபடுத்துவதற்க்கான இளையவரின் பங்களிப்பே அவசியமாக உள்ளது.இது இளைன்சர்கள் கோபமுட்டபடும் செயல்களை சார்ந்தது,இதுவரை சிங்கள அரசு இனக்கொடுமைகளால் இளைன்சர்களை யுத்தத்தின் தயார் நிலைக்கு தள்ளியது,இனியும் அதுவே அந்நிலைக்கு தள்ளும்.ஒரு வேளை ஆயுதபோராட்டத்தை கட்டமுடியவிட்டாலும் கூட அது ஈழத்தின் தோல்வியை நிர்ணயிக்க போவதில்லை.ஏனெனில் இம்முறை வெற்றி கருநிலையில் இருப்பது சர்வதேச ஈழ அரசியல் போராட்டங்களிலையே.ஆயுத போராட்டங்களால் அடையமுடியாமல் போகும் சர்வதேச வீச்சை அரசியல் போராட்டங்களால் ஈடுசெய்ய வேண்டிவரும்.
ஆயுதக்குளுக்கள் கட்ட சத்தியமிருப்பின் அது முற்றிலும் புதிய அமைப்பாகவே செயற்பட வேண்டும் .புலிகளின் கடந்தகால தனிநபர் அழிப்பு செயற்பாடுகளை தாம் பின்பற்ற போவதில்லை என்று அது பகிரங்கமாக அறிவிப்பு செய்தல் வேண்டும்.ஆயுத போராட்டத்திற்கான சமுக கரு இருக்கும்வரை அது விடுதலைவரை காப்பற்றி வைத்துகொள்ள வேண்டும்.இல்லையெனில் நாளை உலகத்தமிழர் போராட்டங்களினால் சர்வதேச தலையீடு ஏற்படுவதற்கு ஈழத்தில் சில ஆயுத கிளர்ச்சிகள் அவசியமாயின் அப்போது எதுவும் செய்ய முடியாமல் போய்விடும்.மேலும் தலையீடு அவசியமில்லை இலங்கையில் அமைதியே உள்ளது என்று சர்வதேச அரங்குகளில் மறுத்து பேச இலங்கைக்கு அது வசதியாகிவிடும்.

**(ஈழமும் தேசிய சுயநிர்ணய உரிமையும்)**

தனது சுயநிர்ணைய உரிமையை ஒரு தேசிய இனம் முன்று வழிகளில் நடைமுறை படுத்தலாம்.
1)பிரிவு அவசியமற்ற நிலையில் சம்மந்தபட்ட தேசிய இனம் அல்லது இனங்களுடன் சுயநிர்ணைய உரிமை அடிப்படையில் சேர்ந்து வாழ்வது.

2)பிரிவு அவசியமான நிலையில் பிரிந்து தனித்து அரசமைத்து வாழ்வது.

3)அவசியமான நிலைமைகளில் உலகின் எந்த முன்றாவது தேசிய இனத்துடனும் சுயநிர்ணைய உரிமை அடிப்படையில் எப்போது
வேண்டுமானாலும் இணைந்து கொள்ளுவது .அதிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பிரிந்து கொள்ளுவது.

இது லெனின் வகுத்த சுயநிர்ணைய உரிமை கோட்பாட்டின் சாரம் ,இம் முன்று வழிகளில் எதை தெரிவு செய்வது என்பது குழல் சார்ந்தது .முதல் வழியை பொறுத்தவரை சிங்களர்கள் ஈழத்தமிழரை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கவில்லை.என்பதால் சுயநிர்ணைய உரிமையுடன் அவர்களோடு சேர்ந்து வாழ்வது என்ற சிந்தனைக்கே அவர்கள் இடம் கொடுக்கவில்லை.எனவே இது சாத்தியப்படும் சுழல் இல்லை ( 2 ) வழியும் சாந்தியம் இல்லை என்று சிங்கள அரசு அறிவித்து கொண்டிருக்கிறது.ஈழத்தமிழரை உரிமைகளற்ற ஒரு சிங்கள வழியை நோக்கி அது விரட்டி அடித்துக்கொண்டு இருக்கிறது.புலம்பெயர்ந்த தமிழர் போராட்டங்களும் ,தமிழகத்தில் ஈழ ஆதரவு இயக்கங்களின் போராட்டங்களும் சிங்கள வழியை நோக்கிய விரைவுபடுத்தலை தடுப்பதற்கே போதிய பலமின்றி இருக்கின்றன.இன்னும் சொல்லப்போனால் வணங்காமன் பொருட்களை மக்களிடம் சேர்க்கும் போராட்டம் பலம் கூட இல்லை .இதற்க்கு ஆதரவாக சர்வதேச சுழல் இல்லை.எனவே இப்போது எம்மிடம் விடுதலை போராட்டத்திற்கான பலம் இல்லை என்பது உண்மை.இதை எப்படி பெறப்போகின்றோம் என்ற கேள்வியில் இந்த இரண்டாவது வழி நின்றுகொண்டிருக்கிறது.


( 3 ) வது வழியான எந்தவொரு தேசிய இனத்தோடும் சுயநிர்ணைய உரிமை அடிப்படையில் இணைவது என்ற வழிமுறை எதிர்கால உலகில் தேசிய இனங்களின் ஐயத்திற்கான சனநாயக வழிமுறையாகும்.ஈழ நிலைமைகளுக்கு இவ்வழிமுறை மிக அவசியமானதாகவே எதிர்காலத்தில் இருக்கும்.ஈழத்தின் சிறிய மக்கள் தொகை நீண்ட சிங்கள -தமிழ் எல்லை இன்னும் பல பத்தாண்டுகளுக்கு சனநாயகப்பட முடியாத கொடிய இனவாத அரசு சர்வதேச நிதியைககூட தடுக்கும் மேலாதிக்க அண்டை அரசு இவை போன்றவை.(3 ) வது வழியை தேர்வு செய்வதற்கான நிலைமைகளை கொண்டிருக்கின்றன.இதன்படி ஈழம் தனக்கு பிடித்தமான பிறிதொரு நாட்டுடன் சுயநிர்ணைய உரிமையின் அடிப்படையில் இணைந்து கொண்டு ஒரே நாடாகும்.இது சுயநிர்ணைய உரிமைக்கு பின் தீர்மானிக்கப்படும்.இவ்வழிமுறை இப்போது அறிவிப்பதானது,உலகின் முன்னணி நாடுகள் தமக்கு ஒரு நாடுகிடைக்கும் வாய்ப்பை கருத்தில்கொண்டு தமிழ் இன விடிவிப்பை ஆதரிக்க தொடங்கலாம்.இம்முனை ஈழவிடுதலைக்கான சர்வதேச அங்கீகாரத்தை தொடக்கி வைக்கலாம்.எனவே இது குறித்து தமிழீழ அரசியல் வல்லுனர்கள் ,சர்வதேச அரசியல் அமைப்பு சட்ட வல்லுனர்கள் ஒரு மேலான கலந்தாய்வை மேற்கொள்ள வேண்டும்


***(ஈழமும் இந்தியாவும்)***

ஆரம்பம் முதலே இந்திய அணுகுமுறை என்பது ஒரு பிராந்திய வல்லாண்மை அணுகுமுறை என்பதற்கு மேல் ஒன்றுமில்லை .தனது பிராந்திய நாடுகளின் அமையின்மையை அவர்களை பணிய வைக்க பயன்படுத்தி கொள்ளுவது அவளவுதான்.எனவே இலங்கையில் அமையின்மை எப்போதும் தொடர வேண்டும்,இன ஒடுக்குமுறை தொடர வேண்டும் என்பதை இலங்கை மீதான இந்திய தலையீட்டை அதிகபடுத்திகொண்டே செல்ல அவசியமானது .இதனால்தான் படையெடுத்து சென்று போட்டு வந்த ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தில் உள்ள வடக்கு-கிழக்கு இணைப்பை கூட ( 22 ) ஆண்டுகளாக இந்திய செய்யவில்லை.வன்னி மக்களை மீளமைப்பது குறித்து இந்திய பேசுவது அதன் உதடுகளோடு சம்பந்தபட்ட விடையம்தான்.அது வணன்காம் பொருட்களை கூட மக்களுக்கு சென்றடைய செய்ய வைக்கவில்லை .சிங்கள அரசின் கொடுமைகள் தொடர்ந்தால்தான் அதன் மீதான தலையீட்டிற்கு அது வசதியாக இருக்கும் என்பது இந்தியாவிற்கு தெரியும்.

இந்நிலையில் இந்திய ஆதரவுடன் ஈழம் என்பது அரசியலற்ற ,அணுகுமுறை நலனும்,இந்திய நலனும் ,சம்மந்தமான ஒரு புள்ளி இப்போதைக்கு தெரிகிறதா?அப்படி ஒரு புள்ளி வரலாம் வராமலும் போகலாம் ,இப்படியே பத்தாண்டுகள் போகலாம்.ஆருடத்தை நம்பி எந்த விடுதலையும் இருக்க முடியாது,எனவே இப்படியொரு புள்ளியை சாத்தியபடுத்திகொண்டு வருவதுதான் நமது வேலையாக இருக்கமுடியுமே தவிர,அதற்க்கான காத்திருப்பு அல்ல,அதே நேரம் இந்தியாவின் ஏற்பு இல்லாமல் ஈழத்தை அடைய முடியாது என்பதும் மறுக்க முடியாத உண்மை.இந்தியாவை பொறுத்தவரை ஈழ ஏற்பு என்பது (2 ) நிலைகளில் ஏற்படலாம்.

1) அதற்க்கான உள்நாட்டு வெளிநாட்டு நெருக்குதல்களில் இருந்து வரவேண்டும்,

2)வேறு அரங்குகளில் ஏற்படும் இழப்புக்களை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கிலிருந்து வரவேண்டும்.

இந்திய குறித்த விடையத்தில் மேற்சொன்னவற்றை எப்படி செய்வது என்பது குறித்தே நாம் சிந்திக்க வேண்டும்.இந்தியாவை எதிர்பார்த்து ஈழம் என்பது .இந்திய ஈழ இயக்கங்களை பயன்படுத்தி கொள்வதாக இருக்க முடியுமே தவிர ,இந்தியாவை பயன்படுத்தி கொள்ளுவதாக இருக்காது இது கடந்தகால அனுபவமும் கூட.


**(ஈழமும் தமிழகமும் )**

தமிழகத்தில் ( 80 )லில் பெரும் எழிச்சியாக இருந்த ஈழ ஆதரவு தற்போது தேக்க நிலையிலையே இருக்கிறது,ஈழ ஆதரவாளர்கள் மட்டுமே பேரணி பொதுக் கூட்டம் ,மாநாடு,கருத்தரங்கு,தீக்குளிப்புக்கள் நடத்தினர்.இச்செயல்படுகளுக்கும் தமிழக மக்களுக்கும் எதுவித இணைப்பும் ஏற்படவில்லை.தலைமுறை இடைவெளியால் தமிழக இளையவர்களிடம் ஏற்பட்டிருக்கும் ஈழம் பற்றிய அறியாமையை இது நீக்கிவிடவில்லை .தமிழக அரசியல் களத்தில் ஈழம் முதன்மை இடத்தை பெற்றிருந்த போதிலும் அது பெருன்பான்மை மக்களிடம் அது முதன்மை இடத்தில் இல்லை.இங்கு செய்திகளை சேர்ப்பதில் தொலைக்காட்ச்சி ஊடகமே பிரதானமாகிகொண்டு வருகிறது.அனால் தமிழகத்தில் எந்த தொலைகட்சியுமே படுகொலைகளையும் ,தீக்குளிப்புக்களையும் பிரதான படுத்தி செய்தி வெளியிடவில்லை.ஓரளவு செய்த மக்கள் தொலைகாட்சி அனைத்து மக்களையும் சென்றடையும் நிலையில் இல்லை.முத்துகுமார் மரணத்தையொட்டி அனைத்து கட்சிகளுக்கும் எதிராக எழுந்த மாணவர் எழுச்சியை முதல்வர் தன்மையில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து தந்திரமாக அனைத்து விட்டனர்.
இந்திய அசைந்து கொடுக்காமல் அல்லது அதை அசைத்து பார்க்காமல் ஈழவிடுதலை சாத்தியமில்லை ,அதை உள்ளிருந்து அசைத்துபர்க்கும் ஆற்றல் தமிழகத்திற்கு மட்டுமே உண்டு,கடந்த நாட்களில் இருந்த அருமையான வாய்ப்புக்களை எல்லாம்,பதவி சுகத்திற்க்காக தேர்தலுக்காக அரசியல்வாதிகள் பாழ்படுத்தினார்கள்.இவர்களுக்கு வெளியே உள்ள ஈழ ஆதரவு ஆற்றல்கள் தமிழகத்தின் ஒரு சதவீத மக்களையே திரட்டினாலே போதும்.அதன் தொடர்சங்கிலி விளைவால் இந்திய அசைக்கப்பட முடியும்.அதற்க்கு இவ் ஆற்றல்கள் முழுமையாக ஒன்றிணைவதும் மக்களை நோக்கிய வேலைத்திட்டங்களை அமைப்பதும் இல்லாமல் சாத்தியமில்லை,



**(ஈழமும் நாடு கடந்த தமிழீழ அரசும்)**

நாடுகடந்த தமிழீழ அரசு என்பது ஒரு அமைப்பு வடிவம் ,இதன் குரலை ஈழ மக்களின் ஒருமித்த குரலாக உலகம் ஏற்க முடியும்.எனினும் ஈழமக்களின் ஒருமித்த குரலாக இன்ட அரசு என்ன செய்ய போகிறது?என்பதைபொருத்தே இது எத்தகைய அரசாக இருக்கும் என்பதை தீர்மானிக்க முடியும்.நாடுகடந்த தமிழீழ அரசு என்ற வடிவத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட விடுதலைக்கான அரசியல் பாதை என்ற உள்ளடக்கத்திற்கு நாம் கொடுக்க வேண்டும்,இந்த உள்ளடக்கம் இல்லை எனில் இது ஈழவிடுதலைக்கான அரசாக இல்லாமல் விண்ணப்பத்திற்கான அரசாக நீத்து போய்விடும்,இதற்க்கான அபாயம் உண்டு என்பதை ஏற்க்க நாம் தயங்க கூடாது.
விடுதலை போராட்ட தலைமை என்பது இயக்கத்தின் தலைமையாகவே எப்போதும் இருக்க வேண்டும்.இவ்வரசு இயக்க தலைமைக்கு கட்டுபட்டே இயங்க வேண்டும்,இயக்கத்தின் கீழ் பன்னாட்டு அரசு உறவுகளுக்கான உலக மக்களிடையேயான உறவுக்காக ஒரு பிரிவாகவே இது செயல்பட வேண்டும்.இதன் செயல்பாடுகளுக்கு அரசியல் ஆயுத போராட்டங்களுக்கான தேவையை இடையுறாக கருத கூடாது.இத்தகைய அரசு இல்லாமல் கூட விடுதலையை அடைய முடியும்,இவ்வரசு விடுதலைபுலிகளின் இடத்திற்கான தொடர்ச்சியாய் இருக்க முடியாது,இருக்கவும் கூடாது.இது பன்னாட்டு அரசுகளின் பணியவைப்புக்கு தொடர்ந்து உட்படுத்தப்படும் வாய்ப்புக்களை கொண்டது .இதன் சட்ட வரம்புக்குள் உட்பட்ட செயல்பாடுகளுக்கும் அரசியல் போராட்டங்களின் வளர்ச்சிக்கும் இடையிலான உறவு முரண்பட்டு போகும் வாய்ப்பு உண்டு.இயக்கமும் தலைமையும் பலவீனபட்டு இருக்கும் நிலையில் அரசியல் பாதை ஒன்றை உறுதிபடுத்தாத நிலையில்,தனி ஈழத்திற்கான உலக ஆதரவு இல்லாத நிலையில்,இவ்வரசு வடிவத்தை முதன்மை படுத்துவதன் முலம் பெரும் வெற்றிகரமான நகர்வுகளை ஏற்படுத்த முடியாது.
நாடுகடந்த தமிழீழ அரசு என்ற வடிவத்தை பயன்படுத்திக்கொள்ள அதன் முளுப்பரிமானங்களையும் நாம் கணக்கில் கொண்டாக வேண்டும்.


**(தீர்வுக்கான அணுகுமுறைகள்)**

இதுவரை பார்த்த தலைப்புக்களின் தொகுப்பாக தீர்வுக்கான அணுகுமுறைகளை நாம் வரையறுக்கலாம்.
1)ஆயுத போராட்ட பின்னடைவின் இன்னொரு எதிர் நிலையாக உலக அரசுகளின் மனமாற்றத்தை எதிர்பார்க்கும் காந்திய அணுகுமுறை வெற்றியளிக்காது.

2)ஈழவிடுதலையை இந்திய உள்ளிட்ட உலக அரசுகள் ஏற்கும் சுழலை எதிர்பார்ப்பது என்பது அந்த சூழலுக்கான சாத்தியன்மையும் உண்டு என்ற யதார்த்தத்தை பார்க்க மறுப்பதாகும்,எனவே அத்தகைய ஒரு சுழலை உருவாக்குவதற்க்கான திட்டமிடலே விடுதலைக்கான அணுகுமுறையாக இருக்க முடியும்.

3)தேசிய சுயநிர்ணைய உரிமையின் (3 ) வது வழிமுறையான பிரச்சனைக்குரிய தேசிய இனம் அல்லாத பிற தேசிய இனத்துடன் சேர்வது குறித்த அணுகுமுறை ஈழ நிலைமைகளுக்கு பொருந்துவது குறித்து விரிவான ஆய்வை உடன் மேற்கொள்ள வேண்டும்.

4)முதலாளித்துவ இயக்குவிசை கோட்பாட்டிற்கு இணைவாக (3 ) வது வழிமுறையை ஒரு கருவியாக பயன்படுத்த இயலும் வாய்ப்பை கண்டறிய வேண்டும்.

5)நாடுகடந்த தமிழீழ அரசு என்பது தீர்வல்ல .தீர்வுக்கான பாதையும் அல்ல ,அது விடுதலை இயக்க தலைமையின் கீழ் செயல்படவேண்டிய ஓர் அமைப்பு,இதன் பங்கு பாத்திரம் குறித்து மிகைப்படுத்தலும் எதிர்பார்ப்பும் கூடாது,இதன் மூலமான இராஜதந்திர நகர்வுகள் என்பதெல்லாம் உலகம் முழுவதுமான தமிழர்களின் அரசியல் போராட்டம் சார்ந்த விடையம் தான்,எனவே நாடுகடந்த தமிழீழ அரசின் முக்கியத்துவம் என்பது -அமைப்பு-தலைமை - -அரசியல் பாதை -அரசியல் போராட்ட வீச்சு இவற்றுக்கு எல்லாம் அடுத்த படியானதகவே இருக்க முடியும்.

6) ஈழத்தில் ஆயுத போராட்டம் பழைய பொருளில் தொடர முடியாது,சர்வதேச அரசியல் போராட்டங்களுக்கு துணை செய்யும் பொருளிலையே அது தொடர முடியும்,ஆயுத போராட்டத்திற்கான சமுக கருவை காப்பற்றி முடிந்தவரை எப்போது அவசிய படுகிறதோ அப்போது பயன்படுத்திகொள்ளும் அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்.


**(ஒரு விடுதலைப் பாதை)**

இத்தகைய அணுகுமுறைகளில் இருந்து ஒரு பாதையை வரையலாம்,ஒரு பாதையை வரைய நாம் இருக்கும் இடத்திலிருந்து இலக்கை நோக்கியும் செல்லாம்,நமது இலக்கிலிருந்து இருக்குமிடம் நோக்கி பின்னோக்கியும் வரலாம்,இந்த இரண்டில் ( 2 ) வது அணுகுமுறையே எளிதானதும் விரைவானதும் தெளிவானதுமான அணுகுமுறை, எப்படியெனில் குழந்தைகள் புத்தகங்களில் ஒரு விளையாட்டு இருக்கும்.ஒரு பக்கம் ஆடு இன்னுருபக்கம் புல்லுகட்டு,ஆடு புல்லுக்கட்டை அடையும் வழியை கண்டுபிடி பார்ப்போம் என போட்டிருப்பார்கள்,ஆடு புல்லுகட்டை அடைய அநேக வழிகளை வைத்து ஒன்றைத்தவிர மற்றவைஎல்லாம் அடைத்துப்போட்டிருப்பார்கள்,இவ்வழியை எளிதாகவும் விரைவாகவும் கண்டறிவதற்கான முறை ஆட்டிலிருந்து புல்லை நோக்கி செல்லுவதை விட புல்லிலிருந்து ஆட்டை நோக்கி வருவதே,இதில் தேவையற்ற தவறான பாதை தெரிவுகள் தவிர்க்க பட்டுவிடும்.இதேபோல் ஈழவிடுதலைக்கான பாதையை இலக்கிலிருந்து நமது நிலையை நோக்கி வரைவதே எளிதானதும் தெளிவானதுமாக இருக்கும் ,இலக்கை ( ஈழத்தை) அடையும் உச்சகட்ட நிகழ்வு சிங்களத்தை வீழ்த்தியோ அதன் விட்டுகொடுப்பிலையோ ஏற்படுவது அல்ல.சர்வதேச தலையீட்டின் முலமே அந்த உச்சகட்ட நிகழ்வு ஏற்பட முடியும்,சரி அந்த சர்வதேச தலையீடு எப்படி இருக்க முடியும்?நேரடியாக ஈழத்தை அங்கீகரிப்பதாக இருக்கலாம்.அல்லது இன்றைய உலக போக்கிற்கான ஐ,நா சரத்துகளின் படியான போது வாக்கெடுப்பை நடத்துவதாகவும் இருக்கலாம்,


இவை இரண்டுமே கோரிக்கை வைத்து போராடி உலகை ஏற்க வைக்காமல் நடைபெறாது.இவ்விரண்டில் ஈழத்தை அங்கீகரிக்க கோரி வெற்றியடைவதை விட போது வாக்கெடுப்பு நடத்தகோரி வெற்றியடைவது ஒப்பீட்டளவில் எளிதானது.

மேலும் நாம் ஈழத்தை உலகம் அங்கீகரிக்க கோரி போராடி வருகிறோம் தென் அப்பிரிக்கவை தவிர்த்து ஒரு உலக நாட்டினால் கூட கொள்கையளவில் கூட ஈழத்தை ஏற்க்க வைக்க முடியவில்லை.ஏற்பதில் நாடுகளுக்கிடையையும் பல்வேறு இரயதந்திர சிரமங்கள் உள்ளது.இத்தகைய சிரமங்கள் போது வாக்கெடுப்பை ஏற்பதில் மிக குறைவு

அக இலக்கை அடைய பொது வாக்கு எடுப்பிற்க்கான சர்வதேச தலையீட்டை கோருவதே சத்தியமான தேர்வாக உள்ளது,உலக தமிழர்களும் உலக சனநாயக ஆற்றல்களும் ஒரே குரலில் உரத்து கேராமல் சர்வதேசம் இதை ஏற்க்க முன்வராது,எனவே இதற்க்கு பொது வாக்கெடுப்பிற்கான உலகளாவிய கோரிக்கை இயக்கம் ஒன்று அவசியமாகிறது.இவ்வுலகலாவிய இயக்கத்திற்கு ,உலகத்தமிழர் அமைப்புக்கள் ,சனநாயக அமைப்புக்கள் ,இவற்றை அங்கத்தினராக ஒருங்கிணைக்கும் ஒரு அரசியல் முன்னணி அவசியமாகிறது,இதற்க்கு விடுதலைபுலிகளின் உறுதியான இராணுவத்தலைமை போன்ற அரசியல் தலைமை அவசியமானது,இத்தகைய தலைமை உருவாக இப்பணிகளுக்கான உறுதியான முன்னெடுப்பு அவசியமாகிறது.இதுவே இலக்கிலிருந்து நமது நிலையை நோக்கி பின்னோக்கி வரையும் பாதை ,


அடுத்து இந்தியாவை பொறுத்தவரை பொதுவாக்கேடுப்பை எதிர்க்குமேயனால் உலகிலும் தமிழக மக்களிடத்திலும் அது சனநாயக எதிரியாக அம்பலப்பட்டு போகும்,இந்தியாவின் இவ்வெதிர்ப்பை உலக அரங்கில் அதன் வீட்டோ பவர் முயற்ச்சியை பாதிக்குபடி செய்துவிட்டால் ,அது பொது வாக்கெடுப்பை எதிர்ப்பை கைவிடும் படி செய்ய முடியும்,ஏனெனில் இந்தியாவிற்கு வீட்டோ பவர் கனவை விட ,பொது வாக்கெடுப்பை மறுப்பது விட்டுக்கொடுக்க முடியாத நலன் அல்ல .மேலும் தேசிய சுயநிர்ணைய (3 ) வது வழிமுறையை அறிவித்தல் செய்து முன்னணி நாடு ஒன்று அல்லது சிலவற்றின் முலமே சர்வதேச ஆதரவை பெறமுடியுமானால்,

அதை பொது வாக்கெடுப்பிற்கான ஆதரவாக பெருக்குவோமேயானால்,விடுதலை மிக விடுதலை இருக்கும்,(இறுதியாக ) இக்கட்டுரையில் சொல்லபடாத ஓர் முக்கிய கோட்பாடு ஒன்று உள்ளது, அதையும் சொல்லி விடுவதே இக்கட்டுரையின் பொருளை முழுமைப்படுத்துவதாக அமையும் ,வலியது வெல்லும் என்பதே அப்பொருளின் கோட்பாடு,வலியது வெல்லும் என்பதன் கோட்பாடு மனிதர்களுக்கு இடையேயான உறவுகளில் இருக்க கூடாது ,இது மனிதரல்லாத உயிர்களுக்கிடையேயும் சட்ட பொருட்களுக்கு இடையேயும் இருந்து வருவது ,விலங்குகளில் வலியதோ அதுவே வெல்லும் ,சடப்பொருட்களில் ஏது வலியதோ அதுவே ஆதிக்கம் செய்யும்,சூரிய மண்டலத்துக்குள் சூரியனே ஆதிக்க சக்தி, ஒருபுறம் மனிதநேயம்,மனித உரிமை ,மனித சமத்துவம் இவையெல்லாம் பேசப்பட்டாலும் நடைமுறையில் வலியது வெல்லும் என்பதே மனித உறவுகளிலும் வியாபித்து நிற்கிறது.இலங்கையில் சிங்களவர்கள் வலியது வெல்லும் என்ற கோட்பாட்டையே ஆரம்பம் முதல் கையிலெடுத்துள்ளனர்,தமிழர்கள் மனித உரிமை கோட்பாடுகளையே ஆரம்பம் முதல் கையிலெடுத்து போராடுகின்றனர்,இருவருமே மனித உரிமை கோட்பாடுகளை கையிலெடுத்து இருந்தால்,பரஸ்பர புரிதலிலையே எதோ ஒரு தீர்வு எட்டபட்டு அது அரை நுற்றாண்டு கடந்திருக்கும்,இருவருமே வலியது வெல்லும் கோட்பாட்டை கையில் எடுத்திருந்தால்,சிங்கள பகுதியிலும் ( 2 ) லட்சம் பிணம் விழுந்து ஈழத்திற்கான சர்வதேச தலையீடு நடந்திருக்கலாம்,


அந்த ( 2 ) லட்ச சிங்கள உயிர்களையும் காப்பற்றி இருப்பது தமிழர்களின் மனிதநேய உரிமை கோட்பாடுதான்,சிங்களத்தை விட சிறிய ஈழம் பதிலுக்கு சிங்கள பகுதியிலும் தமக்கு ஏற்பட்டதை போன்ற இழப்பை ஏற்படுத்த முடியுமா எனில்," முடியுமே "ஒரு தேசிய இனத்தை அழிக்க அதைவிட பெரிய தேசிய இனமாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை,


மனிதநேயமிக்க கோட்ப்பாடுகளை துறந்துவிட்டால் ஹிரோசிமா,நாகசாகியில்,சுமார் (2 ) லட்சம் மக்கள் கூட்டத்தை சொற்ப நிமிடங்களில் கொன்றொழிக்க அமெரிக்காவிற்கு தேவைபட்டது( 5-4 ) நபர்களும் (2 ) விமானன்க்களும்தான்,எனவே இதுவரை சிங்கள பேரழிவு ஒன்று இல்லாதிருப்பது சிங்களத்தின் வலிமையால் இல்லை,தமிழர்கள் கடைப்பிடிக்கும் மனிதநேயமிக்க கோட்பாடுகளால் தான்,என்பதை சிங்கள மக்கள் உணர வேண்டும் ,தமிழ் இனம் ( 2000 ) ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகம் பார்த்துவிட்ட இனம்,எனவே மிருகங்களின் கோட்பாட்டை அவர்கள் தமது கோட்பாடாக ஏற்க்க மாட்டார்கள்,இறுதிவரை மனித உரிமை கோட்பாடுகளால் தான்- சிங்களத்தை வீழ்த்துவது அல்ல -அதிலிருந்து விடுதலைபெற விரும்புகிறார்கள்..

நன்றி (பிரபாகரன்)
(கருத்துக்கள் விவாதங்களுக்கு piraba.k865@gmail.com)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வரும் மாவீரர் தினத்தன்று ..எமக்குள் இருக்கும் விரோதங்களை மறந்து எமது சுகந்திர வாழ்விற்காகவும்  எமது மண்ணின் விடிவிற்காகவும் களமாடி மடிந்த மாவீரர்களை  மக்களையும்  ..உண்மை உணர்வோடு புசித்து எமது ஒற்றுமையை உலகிற்கு வெளிப்படுத்தல் வேண்டும் ..நாம் ஒற்றுமையுள்ள இனால் எமது போராட்டம் பின்னோக்கி சென்றாலும்  எமது மனங்களில் இருக்கும் தாகம் பின்னோக்கி செல்லவில்லை என்பதை இந்த உலகிற்கு பறை  சாற்றுங்கள் .ஆயிரம் இடந்தில்  மாவீரர்  நினைவு  கொள்ளலாம் ..அவர்களுக்கு நாம் உணர்வோடு கொடுக்கும் மரியாதையை ஒன்றே முக்கியமானது ...ஒவ்வொருவரும் தங்கள் கடமைகளை செய்ய தயாராகுங்கள் ...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை