வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, November 17, 2011

இராஜதந்திர முச்சந்தியில் தீ முட்டியவன்

இராஜதந்திர முச்சந்தியில் அவன் தீ மூட்டி எரிந்த
பொழுதில் பெரிதாக எதுவும் நடந்து விடவில்லை.
எரிந்து கருகிய அவன் உடல் கடந்தே உலக சமாதானம் தன நுனிநாக்கு
உச்சரிப்புக்களை சொல்லி சப்புகொட்டி நின்றது.
தாய் நிலம் மீதான தணியாத தாகமும் பக்கத்து மனிதன் மீதான பற்றுதலால்
,அவன் நெருப்பை மூட்டி அவிந்த பொழுதினில்.
நாகரீக பெருமான்கள் அவமான தீக் கோழிகளாய்
ஜெனீவ மன்றத்தில் முகம் புதைத்து நின்றனர் .
புதுமாத்தலான் கடந்து இனஅழிப்பு தொடர்கையில் எரிந்தபடி
முருகதாசன் உலகம் இதை நிறுத்தவேண்டும் என்றான் .
ஒரு கால் முறிந்த கதிரை மட்டுமே அவனின்
சுயதகனம் பார்த்து விக்கித்து நின்றது .

அவனின் எரிந்த உடல் கடந்தே எல்லோரும்
தம் தம் அலுவல்களுக்காய் பறந்தனர் -எல்லோருக்கும்
உலகநாகரீகம் மீட்பதிலும்
கரை ஒதுங்கும் மீன் இனம் காப்பதிலும் ,
அண்டாட்டிக்காவில் பனி கரைவதிலும் ,
ஈரான் அணு உலையை முடும் மும்பரத்திலையே நேரம் ஓடியதுமுருகதாசன் உடல் கருகி ஓரத்தில் கிடந்தான் .
எம்மவரை தவிர வேறு எவரையுமே அந்த
இளன்சனின் ஆகுதி உலுக்கியதாய்
தெரியவில்லை.இன்றும் கூட..!
நாமும் என்ன செய்தோம்- கூடினோம்
ஆர்பரித்தோம்.திரண்டோம்.ஒன்று கூடி
அவன் உடலை எரித்து இப்போ
ஒன்றும் நடவாவது போல நடக்கிறோம்.
என் தந்தை தாய் .உன் சகோதரர் .உற்றார் உறவினர் என
அனைவருக்குமாக எரிந்தவன் முருகதாசன் .
எதோ ஒரு அலுவலகத்தின் எஞ்சிய நாட்களை
வேலை செய்து குடும்பம் குட்டியென
வாழ்ந்துவிட்டு போயிருக்கலாம் அவனும் .
ஆயினும் உலகத்து ஊர் கூடிநின்று எம்
தாய் நிலம் எரித்து எம் தேசத்து பூக்களை
தணலாக்கி வெறியாட்டம் போட்ட
பொழுதினில் தன உடல் கொளுத்தி அதனுள்
உலகத்து மனசாட்சியை உலுக்க முயன்றவன். ஆனந்த புரத்திலிருந்தும் அடுத்த முனையில்
சாளையிளிருந்தும், இன்னுரு தரப்பில்
இரணைப்பாலையில் இருந்தும்
நந்திக் கடலிலிருந்தும் மெதுமெதுவாய்
ஒரு கூட்டு படுகொலைக்கு உலகம் தயாரான
பொழுதினில் அதனைத் தடுக்க கடிதம் எழுதி
வைத்துவிட்டு உடல்கருகிப்போன ஒருவனை
எந்த நாதியும் ஏன் என்று திரும்பி பாக்கவில்லை.
ஆனாலும் நாம் அப்படியே விட்டுவிட்டு
அடுத்த வேலைக்காக பறக்க முடியாது.
எங்களுக்காய் எரிந்தவனுக்கு என்னென்று
நன்றி நினைவுகுறுவோம்-அவனின் உடல் எரிந்த
சாம்பலை ஊதிவிட்டு அடுத்தவருடம் அவன்
நினைவு வரும்வரைக்கும் ஓய்ந்திருக்க போகிறோமா ?
அந்த இளைன்சனின் நினைவை எம்
நெஞ்சுனுள் பதிவோம்-எம் அடுத்த
தலைமுறைக்கு சொல்லிவைப்போம் .
முருகதாசன். உன்னை எழுதவும் பாடவும் எமக்கிருக்கும்
வார்த்தைகளில் எதுவுமேயில்லை .
உன்னை வணங்குகிறோம்-நீ
எரிந்த பொழுதினில் எம் நெஞ்சில்பட்ட
சுடுதளும்பு ஆறவிடாமல் வன்மம் வளர்ப்போம்.
காலம் எவளவு கடந்தாலும் அனலாடிய உன்
ஆன்மத்தை .அதனிலும் உயர்ந்த உன் ஈகத்தை
எம்முள் நிரந்தரமாய் படித்துவிட்ட காயத்தை
எதையுமே நாம் மறவோம்.
நீ நினைத்தை விடுதலையை
நாளை பொழுது மீட்டுவரும்
நம்பிக்கையோடு இரு
நன்றி -ச.ச.முத்து

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை