வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Tuesday, November 8, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-35

தொடர்பாடல் கருவியில் தளபதி சொர்ணம் பேச்சினை தொடர்ந்துகொண்டிருக்க அலைவரிசைகளை வைத்து எதிரி இருக்கும் இலக்கை அடையாளம் கண்டு அந்த இலக்கின் மீது ஆட்லெறி தாக்குதலுக்கான உத்தரவை வழங்கிவிட்டு உன் தலைக்கு மேல் பார் செல்வரும் என்று அந்த சிங்கள சிப்பாயிடம் கூறியதுதான் தாமதம் அந்த தொடர்பு துண்டிக்கபட்டு விட்டது.அதன் பின்பு சிப்பாயின் குழப்பும் அழைப்புக்கள் வரவேயில்லை.இதே வேளை அவர்கள் இவர்களின் தொடர்ப்பாடல் முலம் இலக்கை கண்டு பிடித்தார்களோ,அதேபோல் இவர்களின் தொடர்பாடல்களை வைத்தும் எதிரி இவர்கள்
இருப்பிடத்தை அறிந்திருப்பான்,எனவே இவ்வாறன தொடர்பாடல்களின் பின்ன அந்த இடத்தை உடனடியாக மாற்றி கொள்ளுவார்கள்.எதிர்பார்த்தது போலவே சரியாக ஒரு மணி நேரத்தில் மன்னார் வான் பரப்புக்குள் நுழைந்த சிறிலங்கா வான்படை தாக்குதல் விமானங்கள் ,தளபதிகள் நின்றிருந்த இடத்தை இலக்கு வைத்து தாக்குதலை நடத்துகின்றது.

அனால் அந்த இடத்தில் இருந்த தளபதியும் போராளிகளும் இடம்மாறியிருந்ததால் பொருட்சேதங்கள் ஏற்ப்பட்டபோதும்,உயிர் சேதங்கள் தவிர்க்கபட்டது.இதேவேளை தளபதி விதுச கட்டளைகளை வழங்கிகொண்டிருந்த அவரது நிலைமீதும் தாக்குதல் நடத்த பட்டது.இவ்வாறன தாக்குதலுக்கு மத்தியிலும் ,சொர்ணம்,பானு,விதுச.மற்றும் தளபதிகள் தங்களது கட்டளைகளை வழங்கிக்கொண்டே இருந்தனர்.இந்நிலையில் பாதுக்காப்பான பதுங்குகுழி ஒன்றில் தளபதி சொர்ணம் கட்டளை பிறப்பித்துகொண்டு இருக்கையில்..அடுத்த கிபீர் விமானம் ஒன்று தாக்குதலை நடத்தியது.தளபதி சொர்ணம் அவர்களின் நிலைக்கு அருகில் இருந்த பாழடைந்த வீடு ஒன்றின் மீது விழுந்தது அந்த கட்டிடம் சிதறி போனது.இன்னுரு குண்டு தளபதி சொர்ணம் அவர்களின் முகாமுக்கு அருகில் வீழ்ந்த போதும் அது வெடிக்காததினால் சேதங்கள் இன்றி தப்பித்து கொண்டது ,அது பின்பு வெடிபொருள் பகுதியினரால் வெடி மருந்திற்காக எடுத்து செல்லபட்டது.இவ்வாறு தொடர்பாடல்களினால் பல தாக்குதல்கள் நடந்தேறுகின்றது.ஓட்டுகேட்டல் உடாக சில தாக்குதல்களை நடத்தியதற்கு உதாரணமாக இச சம்பவங்கள் அமைகின்றன.

சிறிலங்கா படையினரின் தொலைதொடர்பினை விடுதலைப்புலிகள் இலகுவில் ஓட்டுகேட்டு கொள்கிறார்கள் என்பதை உணர்ந்த சிறிலங்கா அரசு வெளிநாடு ஒன்றில் இருந்து ( பாகிஸ்தான்)நவீன ரக தொலைத்தொடர்பு கருவிகளை கொள்வனவு செய்து களமுனையில் படையினரின் செயற்பாட்டுக்காக பயன்பாட்டில் விட்டிருந்தது.இது ஒட்டுகேட்பது கடினமானதுதான்.ஆரம்பத்தில் இதனை உடறுத்து ஒட்டுகேட்பது என்பது முடியாததாகவே இருந்தது.எனினும் குறிப்பிட்ட காலத்துக்குள் விடுதலை புலிகள் இதனையும் வெற்றி கொண்டு அதன் தொழில்நுட்பத்தை கண்டறிந்து அதற்கேற்ப வகையில் ஓட்டுகேட்க்க துவங்கினார்கள்.அதனை எவ்வாறு கண்டறிந்தார்கள் என்றால்,பாகிஸ்தான் வழங்கியிருந்த தொலைத்தொடர்பு கருவியினை சிறிலங்கா படையினர் விடுதலைபுலிகளின் கட்டுபாட்டு பகுதிக்குள் இருந்து பயன்படுத்த தொடங்கினார்கள்.அதாவது சிறிலங்கா படையின் ஆழ உடுருவும் படையினர் விடுதலைபுலிகளின் நிர்வாக பகுதிகளுக்குள் வந்து தாக்குதலை நடத்தும் போது,இவ்வாறு ஓட்டுகேட்க்க முடியாத கருவிகளை பயன்படுத்த தொடங்கினார்கள் இந்த நிலையில் ஆழ உடுருவும் அணியின் தாக்குதல் ஒன்றினை வவுனியா புளியங்குளம் பகுதிக்கு அண்மையாக விடுதலைப்புலிகள் முறியடித்து இருந்தனர்.

இதன்போது ஆழ உடுருவும் படையினரின் சடலம் ஒன்று வெடிபொருட்கள் என்பனவற்றுடன் பாகிஸ்தான் வழங்கிய புதிய தொலைத்தொடர்பு கருவியும் புலிகள் வசம் வந்து சேர்ந்தது.அதனை பார்த்தபோது புலிகளுக்கு ஆச்சரியமாகி போனது,ஏனெனில் நவீன தொலைத்தொடர்பு கருவி என்று சிறிலங்காவிற்கு பாகிஸ்தான் வழங்கிய அந்த தொடர்பாடல் கருவிகளை சிறிலங்கா பாவனைக்கு கொண்டுவருவதற்கு முன்னரே விடுதலைப்புலிகள் தமது பாவனையில் வைத்திருந்தனர்.உடனடியாக அதன் தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டு ஒட்டுகேட்க முடியாது என்று கருதிய பாகிஸ்தான் தொடர்பாடல் கருவியில் உரையாடிய படையினரின் உரையாடல்களையும் போராளிகள் ஒட்டுகேட்க தொடங்கினார்கள்.இதேவேளை தென்னிலங்கையில் தாக்குதலுக்கான பொருட்கள்,நகர்வுகள், மன்னார் கடல்வழியாகவே நகர்த்த படுகின்றன.என ஏற்கனவே பார்த்திருந்தோம் கேணல் சாள்ஸ் அவர்களின் வீரச்சாவுக்கு பின் மங்களேஸ் மாஸ்டரிடம் சில பணிகள் கொடுக்கபடுகின்றன.இதனைவிட இவர் திருக்கேதீஸ்வரம் கட்டளைத்தளபதியகவும் செயற்பட்டு கொண்டிருந்தார்.இவரது முதன்மையான கட்டளை மையம் அடம்பன் மாகவித்தியலத்திற்கு அருகாமையில் காணப்பட்டது.கடற்புலி போராளிகளை வைத்தே திருக்கேதீஸ்வரம் பகுதி எதிர்த்தாக்குதல் நடைபெறுகிறது.இவருக்கு கீழ்தான் பொறுப்பாளர் காதர் அவர்களும் செயற்பட்டு கொண்டிருக்கிறார்.

இவ்வாறுதான் அன்று திருக்கேதீஸ்வரம் பகுதியில் விடுதலைபுலிகளின் காவலரண் ஒன்றை எதிரி கைப்பற்றி விட்டான்.இதில் போராளிகள் பலர் வீரச்சாவு அடைகின்றார்கள்.இக்காவலரண் மீட்பதுக்கான தாக்குதலை விடுதலைப்புலிகள் நடத்தி மீட்கிறார்கள்.இதன்போது விடுதலைபுலிகளின் காவலரணில் நின்ற சிறிலங்கா படையினர் சில நரிவேலைகளை செய்திருந்தார்கள்.காவலரண் முன் சிறிலங்கா படையினருக்கு வைத்த மிதிவெடிகளை சிறிலங்கா படையினர் எடுத்து அந்த காவலரணில் வாசல்கள் ,உள்வந்து இருக்கும் இடம் அதற்க்கு பின்புள்ள விடுதலைப்புலிகள் நடமாட்ட பாதை போன்ற இடங்களில் புதைக்கிறார்கள்.புலிகளின் நடமாட்ட பாதையில் சிறிலங்கா படையினர் புதைத்துவிட்டு போன மிதிவெடியில் மங்களேஸ் கால் வைக்கிறார்.மிதிவெடியில் கால்பட்டு கீழே விழும்போது,அருகில் புதைத்து வைக்கபட்டிருந்த இன்னொரு மிதிவெடியில் உடம்பு விழ அதுவும் வெடிக்க லெப்.கேணல் .மங்களேஸ் மாஸ்டர் அந்த இடத்துலயே வீரச்சாவை தழுவி கொள்ளுகிறார்.

இதேவேளை தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க மக்களும் இடம்பெயர துவங்குகிறார்கள்,இராணுவத்தினரின் முன்னகர்வு முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்க மக்கள் மேலும் மேலும் பின்னோக்கி நகர்ந்துகொண்டு இருந்தார்கள்,மன்னார் மாவட்டத்தில் அன்று விடுதலைபுலிகளின் கட்டுபாட்டு பகுதியில் பெருமளவான மக்கள்

வாழ்ந்தார்கள்.கட்டுக்கரை,அடம்பன்,பாலைக்குழி,திருக்கேதீஸ்வரன்,பரப்புக்கடந்தான்,கட்டை அடம்பன் ,பண்டிவிரிச்சான்,மடு வரையான மக்கள் சாதாரணமாக ( 10 ) கிலோமீற்றர் பின்னகர்ந்து விடத்தல் தீவு ,வெள்ளாம் குளம் .இதனை அண்டிய பகுதிகளில் உறவினர்களின் வீடுகளில் வாழ்கின்றார்கள். எதோ எறிகணைகள் வராமல் இருந்தால் போதும் என்பதே இவர்களினது எதிர்பார்ப்பு.எங்கட பொடியால் விட மாட்டார்கள் என்பது இவர்களின் நம்பிக்கை.இன்னும் கொஞ்ச நாளைக்கு பிறகு எங்கட உருக்கு போயிடுவோம் என்ற வசனமும் எண்ணமும்தான் முதல் தடவையாக இடம்பெயர்ந்த மன்னார் மக்களிடம் எண்ணமாக காணப்பட்டது.இடம்பெயர்ந்து இவ்வாறு அல்லல்படும் மக்களுக்கு குறிப்பிட்ட பிரதேச மக்கள் ( விளாங்குளம் ,விடத்தல்தீகளில் நிலையாக இருக்கும் மக்கள்)உதவிகளை செய்கிறார்கள்.அனால் அன்று அவர்களுக்கு புரியவில்லை நாளை இதுதான் எங்களுக்கும் நிலை என்பது (தொடரும்)

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை